புதன், 11 செப்டம்பர், 2019

புதன் 190911:: அதி பொறுமைசாலி யார் ?


சென்ற வாரப் பதிவில், அதிகம் கும்மியடித்த அதிரா, ஏஞ்சல் இருவருக்கும் எங்கள் நன்றி! 

இனி இந்த வார பதில்கள்.



ஏஞ்சல் :

1. (இது மேலே flex பற்றி பார்த்ததும் உதித்த கேள்வி)

இந்த வகை flex போர்டுகள் என்ன மெட்டிரியலில் ஆனவை ?மாநாடு அல்லது விழா முடிஞ்சதும் என்ன ஆகின்றன ? எங்கே கொண்டு வீசப்படுகின்றன ?


# ஃப்ளெக்ஸ் பிளாஸ்டிக் போர்டுகள் நீர்நிலைகளில் வீசப்பட்டு சூழலை நாசம் செய்கின்றனவோ ?

& பிளாஸ்டிக் தடை ஃப்ளக்ஸ் போர்டுகளுக்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வு இன்னும் அதிகம் தேவை. 
2, நீங்க மரமா மாறுவதாக இருந்தா என்ன மரமாக மாற விரும்புகிறீர்கள் ? ஏன் ? 


# சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம் என்றார்களே அந்த மரம்தான் - நடமாட்டம் பலகாரம் எல்லா வசதியும் இருக்குமே.

& வேப்ப மரம். அப்போதான் கல்லடியிலிருந்து தப்பிக்க முடியும்! பயனுள்ள மரம் என்றும் போற்றப்படுவேன்! 
3. வறுமையின் நிறம் சிவப்பு என்று ஏன் சொல்கிறார்கள் ? அப்போ செழுமையின்/செல்வத்தின் நிறம் பச்சையா ?



# ஆமாம். 

& (முறையற்ற வகையில் சேர்க்கப்பட்ட ) செல்வத்தின் நிறம் கறுப்பு(ப் பணம்) 


4, பெண்கள் கிட்டி ( kitty ) பார்ட்டி போன்ற கெட் டு கெதர்களுக்கு செல்வதுபோல் ஆண்களுக்கும் தனியா இப்படி கிட்டா பார்ட்டி அல்லது கிட்டு பார்ட்டி என்று எதாவது இருக்கா ? 


# தண்ணி பார்ட்டி கேள்விப் பட்டதில்லையா ? அடிக்கடி கிட்டா(த) பார்ட்டி !!

& பட்டு மாமி போகும் பார்ட்டிகளுக்கு, கிட்டு மாமா போனால்தான் சரி! 
5, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போட்டிகளில் வெற்றி யாரால் நிர்ணயிக்கப்படுகிறது ?நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ?அல்லது பொதுமக்கள் ?



# எல்லா நிகழ்ச்சி களிலும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவது மட்டுமில்லை பலவற்றிலும் பரிசுகள் கொடுப்பதுபோல் நடிக்கிறார்கள் எனவும் பேசப்படுகிறது. 

& எல்லாம் மாட்ச் பிக்சிங் தான். 


6,நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒரு அதி பொறுமைசாலி யார் ? ஒரு ஆண் ஒரு பெண் இருவரை குறிப்பிடலாம். 



# பலவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நானும் என்னைப் பொறுத்துக்கொள்ளும் வாழ்க்கைத்துணையும்.

& இதோ: 




7,உலகத்தில் எல்லாமே நேர்மறை ஆக இருந்தால் எப்படி இருக்கும்?


# மிகவும் அசுவாரசியமாக இருக்கலாம்.

& ஸ்ரீராம் சனிக்கிழமை பாசிடிவ் செய்திகள் என்று தேடி எடுத்துப் போடவேண்டியது இருக்காது. எல்லாமே நேர்மறை என்று இருப்பதால், சனிக்கிழமைக்கு அவர் வேற டாபிக் தேடவேண்டியதிருக்கும்! 
8, முதன் முதலா பாலர் பள்ளி /நர்சரி வகுப்புக்கு போனது நினைவிருக்கா ? நீங்கள் படித்த நர்சரி ஸ்கூல் பெயர் என்ன ? 


# அறந்தாங்கி என்ற சிற்றூரில் மட்டுமல்ல, எங்குமே 1943 சமயம் நர்சரி எல்லாம் கிடையாது. ஆரம்பப்பள்ளி ஒரு சிறு கட்டடத்தில். ஒரே ஆசிரியை. கட்டடத்தின் ஒரு பகுதியில் ஆசிரியை வசிப்பார். தூளியில் குழந்தை அடுப்பில் சோற்றுப்பானை. அவ்வப்போது ஆசிரியை உள்ளே போய் சமையல் வேலை பார்த்து வருவார். திடீரென மாணவர் ஒவ்வொருவர் முன்பும் ஆளுக்கொரு (சின்ன) வெங்காயம் போட்டுச் செல்வார். (அப்போது பெரிய வெங்காயம் பழக்கத்துக்கு வரவில்லை). ஏககாலத்தில் உரிக்கப் பட்டு எடுத்துச் செல்லப் படும். தூளிக்குழந்தை சிணுங்கினால் பெரிய சைஸ் மாணவன் (அல்லது வி) பாய்ந்து சென்று தொட்டிலை ஆட்ட வேண்டும். வகுப்பில் மசாலா சாம்பார் ரசம் மணம் கமழும்.

& முதலில் சேர்ந்தது ஒன்றாம் வகுப்பு. தேசிய ஆரம்ப பாடசாலை, நாகப்பட்டினம். 
9, ஆண்களிடம் சம்பாத்தியதையும் பெண்களிடம் வயதையும் கேட்கக்கூடாது என்கிறார்களே அது உண்மையா ? ஏன் ? ஒரு விண்ணப்பபடிவம் நிரப்பும்போது அதில் கட்டாயம் இந்த கேள்விகள் வருமே அப்போ என்ன செய்வாங்க :) ???



# இளமையை வனப்பை விரும்பும் பெண்கள் அழகுதான் நம் கையில் இல்லை "இளமை"யாவது மானேஜ் பண்ணலாமே என்று எண்ணலாம்.

ஆண்கள் ரம்மி, ரம் இதர பல செலவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியாகவேண்டும். அசல் கணக்கு ரகசியம் காத்தாகவேண்டும். கம்மி சம்பளமாக வெளியே சொன்னால் மதிப்பு கம்மி. 

"எருதின் நோக்காணா காக்கை போலுமே
அரிதின் பேணப் படும்"
விண்ணப்பங்களில் உண்மை விளம்பவேண்டி வந்தால் ரெகவரியில் சரி செய்யலாம்.

& கேட்டால் உண்மையான பதில் கிடைக்காது என்பதால்தான். 

அதிரா: 

உங்களுக்கு உங்கட... அம்மம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மப்பா சின்ன வயதில் கதைகள், பாட்டுக்கள் சொல்லித் தந்ததுண்டோ? அவற்றில் இன்ற்வரை மனதில் நிற்கும் குட்டிக்கதை? அல்லது பாடல்?



 & என் அப்பா, இரண்டாவது அக்கா இருவருமே எனக்குக் கதைகள் சொன்னது உண்டு. 

என் அப்பா சொன்ன பல கதைகள் இன்றும் ஞாபகத்தில் உள்ளன. பெரும்பாலும் தெனாலி ராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், நாரதர் + கிருஷ்ணர் கதைகள் என்று சொல்லியிருக்கிறார். வேடிக்கைக் கதைகள், புதிர்கள், எண் விளையாட்டுகள் நிறைய அவரிடம் கேட்டவை. 

அப்பா, 'ஜெ மு சாமி' என்னும் ஜவுளிக் கடையில் ஆடிட்டர் ஆகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்த நாட்களில். அந்தக் கடைக்கு நாகை, உறையூர், மதுரை என்று பல ஊர்களிலும் கிளைகள் உண்டு. அப்பா ஆடிட்டுக்காக எல்லா ஊர்களுக்கும் அடிக்கடி டூர் செல்வார். அந்தந்த ஊர்களில் அவர் சினிமா பார்ப்பதும் உண்டு. அப்படி அவர் ஒருமுறை பார்த்து வந்த படம், 'களத்தூர் கண்ணம்மா". 

அந்தப் படத்தில் வருகின்ற  ஒரு சிறுவனைப் பற்றிய அந்தப் படக் கதையை, எனக்குப் புரிகின்ற வார்த்தைகளில் கதையாகக் கூறிவிட்டு, அவர் சொன்ன ஒரு விஷயம் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. 

" இந்தப் படத்தில், பார்ப்பதற்கு உன்னைப் போலவே இருக்கும் ஒரு சின்னப்பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான்." 

====================================
மீண்டும் சந்திப்போம்.

--------------------------------------------------------------

99 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அதி பொறுமைசாலி படம் மிகவும் அழகாக இருக்கிறது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா...   வாங்க..  வாங்க...

      இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. >>> நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒரு அதி பொறுமைசாலி யார் ? ஒரு ஆண் ஒரு பெண் இருவரை குறிப்பிடலாம்.

    # பலவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நானும் என்னைப் பொறுத்துக்கொள்ளும் வாழ்க்கைத் துணையும்...<<<

    அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஆசிரியர்களூக்கூம்,
      அன்பு கமலாமா, துரை செல்வராஜு எல்லோருக்கும் இனிய நற்காலை வாழ்த்துகள்.

      கேள்விகள் சுவாரஸ்யம். பதில்கள் பொறுமை.
      இண்டரஸ்டிங்க். அடுத்தவாரம் இன்னும் சுவாரஸ்யம் கூடும். கீதாமாவும் கலந்து கொள்வார்கள்.
      பஸ் ஒட்டுனரைவிடப் பொறுமைசாலி கண்டு பிடிப்பது சிரமமே.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வல்லிம்மா. வாங்க..  வாங்க...  கீதா அக்கா வந்து விட்டார்கள் என்பது எனக்கும் சந்தோஷம்.  இன்னொரு கீதாவும், பானு அக்காவும் வரும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன்!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    சகோதரி அதிராவின் கேள்விக்கு தங்கள் பதில் நன்றாக உள்ளது. அந்த காலத்தில் பெரியவர்கள் எந்த கதை (வீரம், நகைச்சுவை, அறிவை புலப்படுத்தும் கதைகள், ராஜா காலத்து கதைகள்) சொல்லும் போதும் சுவாரஸ்யமாக கேட்க பிடிக்கும். ஆனால் இப்போது கதை சொல்லவோ, கேட்கவோ பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி அந்த மாதிரி நேரங்கள் இருப்பதாக தெரியவில்லை.

    தங்கள் அப்பா சொன்ன மாதிரி அந்த சின்னப்பையன் நடிப்பில் பிரமாதமாக தேறி முன்னுக்கு வந்து விட்டார். பிரமாதம் என்ற கணிப்பு சரிதான். பசுமை நினைவுகள் சுவாரஸ்யம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹூம் நான் மட்டும் அந்தக் காலத்தில் நடிக்கப் போயிருந்தால் ........

      நீக்கு
  4. பேருந்து ஓட்டுனர் மிகவும் பொறுமைசாலிதான்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சகோதரி ஏஞ்சலின் கேள்விகளுக்கும் தங்களின் பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    அதி பொறுமைசாலி கேள்விக்கு,

    /பலவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நானும் என்னைப் பொறுத்துக்கொள்ளும் வாழ்க்கைத்துணையும்/

    என்ற பதில் அருமை. பொதுவாக பொறுமை என்பது இந்த உலகியல் வாழ்வில் அனைவருக்கும் அங்கிருந்துதானே ஆரம்பமாகிறது. ஹா.ஹா ஹா.

    பெண்களிடம் வயதும், ஆண்களின் வருமானமும் ஏன் கேட்க கூடாது என்ற கேள்விக்கு, தங்கள் நகைச்சுவையான பதில்களையும் ரசித்தேன்.

    பாலர் பள்ளி அனுபவங்கள் நன்றாக சுவையாக இருந்தன.

    /மாணவர் ஒவ்வொருவர் முன்பும் ஆளுக்கொரு (சின்ன) வெங்காயம் போட்டுச் செல்வார். (அப்போது பெரிய வெங்காயம் பழக்கத்துக்கு வரவில்லை). ஏககாலத்தில் உரிக்கப் பட்டு எடுத்துச் செல்லப் படும். தூளிக்குழந்தை சிணுங்கினால் பெரிய சைஸ் மாணவன் (அல்லது வி) பாய்ந்து சென்று தொட்டிலை ஆட்ட வேண்டும்.
    வகுப்பில் மசாலா சாம்பார் ரசம் மணம் கமழும்/ ஹா.ஹா.ஹா. விழுந்து விழுந்து அடிபடாமல் சிரித்து ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  7. விடை தேடிய கேள்வி:
    நாட்டில் மோட்டார் வாகன உற்பத்தி சுணக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  8. மேலே உள்ளது கேஜிஜிக்கான கேள்வி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் எங்கே சொல்லவேண்டும்? இந்தப் பதிவிலா அல்லது அடுத்த வாரமா?

      நீக்கு
    2. உங்களுக்கு செளகரியப் பட்ட பொழுது செளகரியப்பட்ட இடத்தில்,ஜி. ஆறிய கஞ்சி ஆவதற்குள். நீங்கள் சொன்னால் தான் சரியாக இருக்கும் என்பதினால் நீங்கள்..

      நீக்கு
    3. உற்பத்தி சுணக்கம்னு சொல்ல முடியலை. வாகனங்கள் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வருமானவரி கட்டுபவர்கள் என்னும் கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என்பது பொதுவான அறிவிப்பு. அதோடு கார் வாங்கும்போதும் முழுத்தொகையும் கணக்கில் காட்டப்பட்டு வரவில் அந்தக் காரை விற்பவர்கள் வைக்க வேண்டும். முன்னெல்லாம் இப்படி இல்லை. அங்கே இங்கே கொஞ்சம் மறைமுகமாகப் பணம் கொடுக்கப்படும், வாங்கப்படும். இப்போது வண்டியின் உண்மையான விலையை எந்த விலைக்கு நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டியே ஆகவேண்டும். அந்த விலைக்கே விற்க வேண்டும். அதை இரு தரப்பாரும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டி இருக்கும். ஆகவே இதில் எந்தத் தரப்பும் மறைமுகமாகப் பணம் வாங்கவோ, கொடுக்கவோ முடியாது. உள்ளதை உள்ளபடி சொல்லி ஆக வேண்டும். அதனால் தான் மோட்டார் கார் உற்பத்தியில் சுணக்கம் என்பது போல் தோற்றம் தருகிறது. இந்த நடைமுறை பழக்கம் ஆன பின்னர் சரியாகும். இப்போது ரியல் எஸ்டேட் அப்படித் தான் சுணக்கம் ஆகி இப்போது மீண்டும் மெல்ல மெல்லத் தலை தூக்கி வருகிறது. அது போல்! இது பொதுவாக இப்போதைய மந்தமான பொருளாதாரச் சூழ்நிலைக்கும் ஒரு காரணம். இதை மக்கள் மனம் மாற்றித் தான் சரி செய்தாக வேண்டும்.

      நீக்கு
    4. என்றாலும் தமிழர்கள் பழக இன்னும் அதிக வருடங்கள் பிடிக்கலாம்.

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வழமை போல் கேள்வி-பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  10. கேள்விகளும் பதில்களும் மிக நன்றாக இருக்கிறது.
    அதி பொறுமைசாலி கேள்விக்கு பதிலும், படமும் சூப்பர்.

    //ஸ்ரீராம் சனிக்கிழமை பாசிடிவ் செய்திகள் என்று தேடி எடுத்துப் போடவேண்டியது இருக்காது. எல்லாமே நேர்மறை என்று இருப்பதால், சனிக்கிழமைக்கு அவர் வேற டாபிக் தேடவேண்டியதிருக்கும்!//

    வாழ்க்கை சுவாரசியமாக இருக்க நேர்மறையோடு, எதிர்மறையும் வேண்டும் என்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வேளை எல்லாமே நேர்மறை என்றால் அவற்றுள் எது அதிக நேர், நிறை நேர் என்று தேடிப்போடவேண்டியது இருக்கலாம்!

      நீக்கு
  11. ஓர் ஆசிரியர் பள்ளி மிகவும் சிரமம் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவது, அவர் சமையலும் செய்வாரா?
    பிள்ளைகளை வெங்காயம் உரிக்க சொன்னது, தொட்டில் ஆட்டுவது எல்லாம் கண்முன் காட்சியாக விரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நானும் அதை கற்பனை செய்து பார்த்தேன். பிழைக்கத் தெரிந்த ஆசிரியர்; உரிக்கத் தெரிந்த மாணவர்கள்!

      நீக்கு
    2. பசங்களுடைய உதவி கிடைக்கிறது என்கிற தைரியத்தில் விதவிதமாக சமையல்பண்ணி சந்தோஷப்பட்டிருப்பார்.. நல்லாசிரியர்!

      நீக்கு
    3. ஹா ஹா ஆமாம்! அந்தக் காலத்திலேயே பிராக்டிகல் கிளாஸ் எடுத்திருக்கிறார்!

      நீக்கு
    4. இங்கே சொல்லி இருப்பது அந்தக்காலம். ஆனால் எண்பதுகளில் எங்கள் பெண்ணிற்குக் கணக்கிற்கு ட்யூஷன் வைத்திருந்த போது அந்தப் பெண் ஆசிரியர் இப்படித் தான் வேலை வாங்கினார். எங்க பெண்ணிற்கு அப்போது ஏழு, எட்டு வயதுக்குள் தான் இருக்கும். அதன் பின்னர் உண்மை தெரிந்து மாற்றினோம்.

      நீக்கு
  12. அதிராவின் கேள்விக்கு சொன்ன பதில் அருமை.

    //" இந்தப் படத்தில், பார்ப்பதற்கு உன்னைப் போலவே இருக்கும் ஒரு சின்னப்பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான்." //

    திரை துறையினருக்கு தெரியாமல் போய் விட்ட்தே!

    பதிலளிநீக்கு
  13. பதிவின் தலைப்பிற்கு கீழேயே பதில்...!

    நிம்மியை... சே... கும்மியை "ரசித்தவர்கள்"... ஹா... ஹா...

    உங்க குசும்பிற்கு அளவே இல்லையா கௌதமன் சார்...?

    பதிலளிநீக்கு
  14. இன்று கொஞ்சம் வெளி வேலை அதிகமாகிட்டுது... கொஞ்சம் லேட்டாக வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க. வெள்ளை மாளிகை இப்போ சரித்திரக்கதை ஆகிவிட்டதா! ஆனாலும் உங்களுக்கு, ரொம்பப் 'பேரா'சைதான்!

      நீக்கு
    2. எங்கள் ஆதாரப் பள்ளியின் பெரிய டீச்சர், கோழி எல்லாம் உரிக்கச் சொல்வார். அவரைச் சேர்ந்த மாணவிகள் செய்வார்கள். நாங்கள் நின்று பார்ப்போம். 1957 இல் திருமங்கலத்தில்
      இது ஒரு
      disection class க்கு சமம். ஆதார நிலயம் என்பதால் டாய்லெட் கழுவும் வழக்கம் இருந்தது.
      அசுத்தம் ஒன்றும் இருக்காது.
      வெறும் சிமெண்ட் மேடையைக் கழுவ வேண்டும்.

      அது போலப் பள்ளிகள் இப்போது இருக்கிறதா தெரியவில்லை.

      நீக்கு
    3. ஓ..அதிராவா! சரித்திரப் புழுங்கரிசி என்று படித்துவிட்டேன், அவசரத்தில்!

      நீக்கு
    4. ஹாஹா ஹையோ ஹஆஹையோ :) இது இந்த கமெண்ட்தானா என் கண்ணில வந்தவுடனே படணும் :)

      நீக்கு
    5. சரித்திரபுழுங்கல் அரிசியே :) வாழ்க 

      நீக்கு
    6. //ஏகாந்தன் !11 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:25
      ஓ..அதிராவா! சரித்திரப் புழுங்கரிசி என்று படித்துவிட்டேன், அவசரத்தில்!///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நில்லுங்கோ விரைவில வெள்ளை மாளிகையாக வருவேன்:))..

      நீக்கு
    7. //Angel11 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:40
      ஹாஹா ஹையோ ஹஆஹையோ :) இது இந்த கமெண்ட்தானா என் கண்ணில வந்தவுடனே படணும் :)//

      https://i.pinimg.com/originals/d7/6f/7d/d76f7d128d7a6ff44d24f21b16ff017f.jpg

      நீக்கு
  15. பொறுமை தேவைப்படுமிடங்கள் சில கேள்விகளைப் படிக்கும்போது இன் லைட்டெர் வெய்ன்

    பதிலளிநீக்கு
  16. ஆஆஆஆஆஆஆ மீ லாண்ட்டிங்ங்ங்ங்:).. இப்போ எதுக்கு எல்லோரும் ஓடுறீங்க?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சரி சரி இன்று இங்கு வரமுடியாமல் ஏதோ ஒரு ஜக்தி சே..சே சக்தி தடுத்து விட்டது..அதனால ச்ச்சோ லேட்ட்டூஊஊஊ:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரித்திரபுழுங்கல் அரிசியே :) வாழ்க வருக வருக 

      நீக்கு
    2. //சரித்திரபுழுங்கல் அரிசியே ://

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எய்தவர் இருக்க அம்பை நோகலாமோ:)) இருங்கோ முதல்ல ஓடிப்போய் ஏ அண்ணன் கையில இருக்கும் ரிமூட்டைப் பிடுங்கப்போறேன்:)).. கிரிக்கெட் பார்க்கிறதையும் விட்டுப்போட்டுப் பெயரில ஆராட்ச்சி பண்ணியிருக்கிறார் பாருங்கோ ஹா ஹா ஹா:)).

      நீக்கு
    3. B தம்பியின்  அண்ணன் .ALPHABETS குடும்பத்தின் முதல் தலைமகன் ஹாங் ஹாங் 

      நீக்கு
    4. //B தம்பியின் அண்ணன் .ALPHABETS குடும்பத்தின் முதல் தலைமகன் ஹாங் ஹாங் //
      ஹையோ இண்டைக்கு கெள அண்ணனின் நித்திரை போச்சேஏஏஏ:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    5. நேற்றெல்லாம் எனக்கு மைக்ரெய்ன் தூங்கலையா :) அதான் நாலு பேருக்கு நாம் பெற்ற இன்பத்தை பங்கிட்டுத்தாறேனாக்கும் 

      நீக்கு
  17. // பலவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நானும் என்னைப் பொறுத்துக்கொள்ளும் வாழ்க்கைத்துணையும்.//
    மிகவும் ரசித்த பதில் . 

    பதிலளிநீக்கு
  18. //சென்ற வாரப் பதிவில், அதிகம் கும்மியடித்த அதிரா, ஏஞ்சல் இருவருக்கும் எங்கள் நன்றி! //

    ஆஆஆஆஆஆ ஜிம்மியை.. சே..ச்சே டங்கு ஸ்லிப்பாகுதே:)) கும்மியை ரசித்திருந்தால் நன்றி நன்றி..

    சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவரை மகிழ்விச்சு அதில் காணும் இன்பம் தானே... ஆனா பாருங்கோ கெள அண்ணன் கண்ணு பட்டுப் போச்சூ:)) இன்று லேட்டாயிடுத்து.. அதிலும் நேற்று தொடக்கம் பயங்கர தலையிடி.. விட்டேனா பார் என இன்று ஜிம் போய் வந்தேன் நோர்மலாகிட்டுது ஹா ஹா ஹா அதிராவோ கொக்கோ?:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நோர்மலாகிட்டுது ஹா ஹா ஹா அதிராவோ கொக்கோ?:))../// ஓ ஓ ஓ !

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஅ இடையில கிடைச்ச பிளேன் ஹப் இல் கெள அண்ணன் வந்திட்டு ஓடியிருக்கிறாரே:))

      நீக்கு
  19. //இந்த வகை flex போர்டுகள் என்ன மெட்டிரியலில் ஆனவை ?மாநாடு அல்லது விழா முடிஞ்சதும் என்ன ஆகின்றன ? எங்கே கொண்டு வீசப்படுகின்றன ?//

    ஆஆஆஆஆஆஅ ஏதோ பிளஸ் 2 வகுப்பில இருக்கும் ஃபீலிங்கா வருதெ நேக்கு:)) ஹா ஹா ஹா..

    //# எல்லா நிகழ்ச்சி களிலும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவது மட்டுமில்லை பலவற்றிலும் பரிசுகள் கொடுப்பதுபோல் நடிக்கிறார்கள் எனவும் பேசப்படுகிறது. //

    ஹா ஹா ஹா இதேதான்.. இடையில சிரிக்கச் சொல்லி அழச்சொல்லியும் சொல்லிக்குடுக்கினமாமே ஹையோ ஹையோ.. அதைப் பார்த்து நாமும் அழுகிறோம் என்பது வேறு விஷயம்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ சரித்(அ )திரா  :)) இதுக்குதான் ரொம்ப பிக் பாஸ் பாக்கதீங்கன்னு சொன்னேன் :) 

      நீக்கு
    2. ஹையோ மீக்கு அவசரத்தில தரித்திரா எனப் பட்டுதே கண்ணில ஹையோ ஹையோ.. எப்ப பார்த்தாலும் எல்லோரும் ஏதோ கிணற்றுக் கட்டில குழந்தையை விட்டிட்டு வந்த ஃபீலிங்ஸ்லயே கொமெண்ட் போடுவதால ஒரே புரொப்ப்ப்ப்ளமா இருக்குது பாருங்கோ:)) ஹா ஹா ஹா..

      பிக்பொஸ் பார்த்து எல்லோரும் திருந்துங்கோ:)))) அதிரா திருந்திட்டேனாக்கும்:))

      நீக்கு
    3. நான் பிக்போஸ் பார்க்காமலே இருப்பதால் - திருந்தவேண்டிய அவசியமே இல்லை!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இதுவும் நல்லாத்தான் இருக்கு:)). எல்லோரும் வீடு கட்டி யோசிக்கினமே:))

      நீக்கு
    5. ரூம் போட்டு யோசிப்பது என்று கேள்விப்பட்டுள்ளேன். வீடு கட்டி யோசிப்பது ரொம்ப பெரிய அளவில் யோசிப்பது போலிருக்கு!

      நீக்கு
  20. //// பலவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நானும் என்னைப் பொறுத்துக்கொள்ளும் வாழ்க்கைத்துணையும்.//

    ஹா ஹா ஹா பதிலுக்கும் படத்துக்கும் ஜம்பந்தம்:)) சே சே சம்பந்தம் இருக்கோ இல்லையோ?:)) எனக்கு டவுட்டா வருதே:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமை, பொறுமை!
      அருமையான எருமைகள்
      தெருவைக் கடக்கையில்
      அவசர ஆட்களுக்குத்
      தேவை அது!

      நீக்கு
    2. ஆஆஆஆஆ அப்படிச் சொல்லியிருக்கிறீங்களோ? ஹா ஹா ஹா நான் உண்மையில் எருமை மீது மழை பெய்தாலும் அது எந்த ரியக்‌ஷனும் காட்ட்டாதெல்லோ.. அந்த ரேஞ்சுக்கு எருமை அங்கிளை:)) உள்ளே இழுத்து ஓசிச்சிட்டேன் ஹா ஹா ஹா:)))

      நீக்கு
    3. எருமை அங்கிளா :)) ஹாஹா இதை வச்சே உங்களை கொஞ்ச காலம் ஓட்டலாம் :)

      நீக்கு
    4. டிரம்ப் அங்கிள், எருமை அங்கிள், இன்னும் எவ்வளவு அங்கிள்களோ!

      நீக்கு
  21. கிட்டி பார்ட்டி மாதிரி இங்கே பஞ்சாபியர் சாறி பார்ட்டி வைக்கிறாங்க இந்தியா சென்று அங்கு புடவை காக்ராஸ் வாங்கி இங்கே கொண்டு வந்து பார்ட்டி கெட்டுகெதர் வச்சி எல்லாத்தையும் காமிப்பாங்களாம் .நான் போனதில்லை :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஅ அஞ்சுவும் வந்தாச்சா?.. அவ்வ்வ்வ்வ்வ் இப்போ 2 நாளா அஞ்சு வந்தால் புளொக் ஆடுவதில்லை:)) ஒருவேளை ஓவர் வெயிட்டாகிட்டுதோ?:)) ஹா ஹா ஹா..

      புதுசு புதுசா யோசிச்சு இப்போ என்னவெல்லாமோ பார்ட்டி வைக்கிறாங்க, யூஸ் குடுப்பதைப்போல வைன் சேவ் பண்ணுறாங்க.. இதை எல்லாம் காக்கா போயிடுவதே மேல்.. நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)))

      நீக்கு
  22. //9, ஆண்களிடம் சம்பாத்தியதையும் பெண்களிடம் வயதையும் கேட்கக்கூடாது என்கிறார்களே அது உண்மையா ? ஏன் ? //

    அல்லோ மிஸ்டர் அஞ்சூஊ நீங்க இந்த புளொக்கில இருந்துகொண்டு இப்பூடிப் பேசலாமோ?:)).. ஆண்களிடம் கேட்டாலும் ஜொள்ள மாட்டினமாக்கும்:)).. நானாவது சொல்லித் திரிகிறேன்:)) ஹா ஹா ஹா..

    உதாரணம்: நெ.தமிழன் அண்ட் ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. ///Angel11 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:56
      இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.///

      நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன்..
      ஸ்ரீராம்.. இங்கு டிலீட் பண்ணும் வசதியைக் கைட் பண்ணுங்கோ:)) ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டா போல:) சே..சே என் கண்ணில அகப்படவில்லையே:))

      நீக்கு
    3. அது உங்களை திட்டிட்டு நீக்கிட்டேன் :))))))))))))))))))))))))))))))))))))))))))

      நீக்கு
    4. இந்தக் கருத்து நீக்கப்படவில்லை.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா... கெள அண்ணன் பதில் பார்த்ததால என்னைத்திட்டிய கோபம் போயிந்தி:)).. இல்லை எனில் இப்போ பொயிங்கியிருப்பேன் தெரியுமோ?:)) ம்ஹூம்ம்:))) எனக்குத் தன்மானம் தான் முக்கியமாக்கும்:)) என்னை ஆரும் திட்டிட முடியுமோ?:)).. ஹா ஹா ஹா ஹையோ நான் கட்டிலுக்குக் கீழ ஓடிடுறேன்ன்:))

      நீக்கு
    6. இப்போ என்ன :) உங்களை யாராவது திட்டனும் அவ்ளோதானே :) இருங்க ஏற்பாடு செய்றேன் 

      நீக்கு
    7. ஹா ஹா ஹா ஹையோ இது என்ன புது வம்பாக் கிடக்கூ.. நான் சொல்றனான் என்னை ஆரும் திட்டுவதாயின் சிரிச்சுக்கொண்டே திட்டுங்கோ என:)).. கெள அண்ணன் சிரிக்கிறாரா இல்ல திட்டுறாரோ ஒண்ணுமேஎ பிரியுதில்லையே:)) ஹா ஹா ஹா..

      https://www.youtube.com/watch?v=XVO9CS8D4hQ

      நீக்கு
  23. நான் முதலில் சேர்ந்தது தர்மபுரியில் செயின்ட் மேரிஸ் பிரைமரி ஸ்கூல் .என் பக்கத்துக்கு இருக்கை  மாணவிகள் சரளா அண்ட் மஞ்சு முன்னிருக்கை மாணவன் பரணீ .ஆசிரியர் மல்லிகா ,உமா .கையில் கொண்டு போவது பைனாப்பிள் ஷேப் வாட்டர் பாட்டில் இப்படி நிறைய இருக்கு நினைவில் ஆனா அந்த சாம்பார் மணம் சுவாசிக்க கொடுத்து வைக்கலியே :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஅ என்னுடனும் 5ம் வகுப்புவரை பரணிதரன் எனும் மாணவன் படிச்சார்ர்.. சுருட்டைத்தலை நல்ல அழகாக இருப்பார். மிக அருமையான பிள்ளை.. நாங்க நல்ல நண்பர்கள்.. பின்பு ஒரு தடவை என் 20 ஆவது வயசில சந்திச்சேன்ன் நீண்ட காலட்த்ஹின் பின்பு, ஆனா அதேபோல அதே அன்பு பாசமாக பேசினோம்..

      நீக்கு
    2. https://media1.tenor.com/images/d750245e5cc5eec7be90bcb4760c1acd/tenor.gif?itemid=11594436

      நீக்கு
  24. கெள அண்ணன்.. அப்பா அக்காவிடம் கதை கேட்டு வளர்த்திருக்கிறீங்க..

    //" இந்தப் படத்தில், பார்ப்பதற்கு உன்னைப் போலவே இருக்கும் ஒரு சின்னப்பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான்." //

    ஆஆஆஆஆஆஆ இதை பொஸிடிவாகவும் எடுக்கலாம் நெகடிவ்வாகவும் எடுக்கலாம் ஹா ஹா ஹா..
    இந்த வசனம் கேட்ட உடனேயே நீங்க சினிமாவுக்குப் போகப்போகிறேன் என வெளிக்கிட்டிருக்கோணும் கெள அண்ணன்.. இப்போ உங்களையும் போஸ்டர்களில் பார்த்திருப்போம்ம்.. வழமைபோல கில்லர்ஜி திட்டிக்கொண்டிருந்திருப்பார் ஹா ஹா ஹா:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமால்ல :) இருங்க  கௌதமன் சாரை அந்த சனிக்கிழமை விஜய் டிவியில்  பார்க்கிறதே மிஸ் பண்ணிட்டோம் 

      நீக்கு
    2. ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவன் ஆக இல்லாமல் போயிருந்தாலும் குரோம்பேட்டை குண்டன் ஆக இருந்திருப்பேன்!

      நீக்கு
    3. விஜய் ரிவி மட்டுமில்ல அஞ்சு.. இப்போ பிக்பொஸ் இலும் பார்த்திருப்போமே ஹா ஹா ஹா மிஸ்ஸாகிட்டுதே:))

      நீக்கு
  25. சரி கேள்விகளை ரெடி பண்ணிட்டு வர்றேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆ பொயிண்டுக்கு வந்தாச்சூ.. எனக்கு விடிய நித்திரையால எழும்பும்போதெ ஒரு கிளவி உதிச்சுது சே..சேஎ ஆரம்பமே டங்கு ஸ்லிப்பாகுதே.. ஒரு கேள்வி உதிச்சது எழுதி வச்சிட்டேன்.. ஆனா பாருங்கோ.. ஒரு விசயத்தை மறந்திடுவோம் என எழுதி வ்அச்சால்ல்.. எத்தனை வருடமானாலும் எழுதியதைப் பார்க்காமலே மறக்க மாட்டோம்ம்.. ஆனா எழுதவில்லை எனில் மறந்திடுறேன்ன் இது என்ன டிசைனோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சு கூடையை இறக்குங்கோ.. மீ ஒரு கேள்வி மட்டும் இப்போ கேட்டிட்டுப் புறப்படுறேன் பின்பு வாறேன்.

      நீக்கு
    2. // ஒரு விசயத்தை மறந்திடுவோம் என எழுதி வ்அச்சால்ல்.. எத்தனை வருடமானாலும் எழுதியதைப் பார்க்காமலே மறக்க மாட்டோம்ம்.. // உண்மைதான். நான் பலவிஷயங்களை யோசனை செய்து, நிச்சயம் மறக்காது என்று நினைத்த விஷயங்கள் பின்னர் மறந்து போகும். ஆனால் எங்காவது எழுதிவைத்தால், அதைப் பார்க்காமலேயே நினைவு இருக்கும்!

      நீக்கு
  26. கொஸ்ஸன் நெம்பர் வன்:- காலையில படுக்கையை விட்டு எழும்போது என்ன நினைப்பீங்க?.. அதாவது கண் முழிச்சவுடன் அல்ல.. படுக்கையை விட்டு எழும்பும்போது:)).. ஏனெனில் நான் டெய்ய்ய்ய்லி ஒரு விசயம் நினைப்பேன்ன் :)) அதை அடுத்த புதன் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. 1, மண் இட்லி ,கூட்டாஞ்சோறு ,அஞ்சாங்கல் ,பாண்டி கண்ணாமூச்சி  ...இவற்றை இன்னமும் நம் நாட்டு பிள்ளைகள் விளையாடுகிறார்களா ?
    2, ஒருவர் புனிதராக மாறுவது எப்படி ? 
    3, மனதுக்கு வலியூட்டும் தலையங்க செய்திகள் தீய விஷயங்களை முதல் பக்கத்தில் பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் வெளியிடுவது அவசியமா ?
    4, உங்கள் மனங்கவர்ந்த ஓவியர் ,ஓவியம் எது ?
    5, உங்கள் மகன் /மகள் குழந்தையாய் இருந்தபோது சுவற்றில் படம் அ ஆ இ ஈ என்று வரைந்து சுவற்றை அழகுபடுத்தி :))) வைத்த தருணத்தை இப்பவும் நினைவு கூர்வதுண்டா ? 
    6, இரவு உறங்கப்போகுமுன் என்ன செய்வீங்க ?
    7, தீயவை அதாவது தீய  எண்ணம் சொல் செயல் எல்லாம் நம்மில் நம்முள் இருந்து வெளிவருது அப்படியென்றால் அவை நமக்குள் ஸ்லீப்பர் செல்ஸ் போலெ இருக்கா ??
    8, எதையும் செய்யாம சாதிக்காம ஒரு மனிதனால் சந்தோஷமா இருக்க முடியுமா ?
    9, விருப்பமற்ற ஒன்றை செய்ய வேண்டிய சூழல் வந்ததுண்டா ? அப்போ உங்க மனநிலை எப்படி இருந்தது ?
    10, நீங்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் ?

    பதிலளிநீக்கு
  28. 2. உங்கள் வாழ்க்கை அனுபவத்தை வச்சு, எனக்கும் அஞ்சுவுக்கும் சொல்ல விரும்பும் அல்லது சொல்ல நினைக்கும் ஒரு அறிவுரை/புத்திமதி?

    3. உண்மையை மட்டும்தான் சொல்லோணும், உங்களுக்கு திருமணமாகும்போது, கூட்டுக் குடும்பத்தில் இருக்க விருப்பமாக இருந்ததோ? இல்லை தனிக்குடும்பம் போகும் விருப்பம் இருந்ததோ?.

    4.மனிதர்கள் கூட்டுக்குடும்பமாக வாழோணும் என வலியுறுத்துவோரே, பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகளை தம் பிள்ளைகளின் ஆசைக்கு இணங்கி, பிரித்து எடுத்துக் குடுக்கின்றனர்.. இது எந்த வகையில் நியாயம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //////பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகளை தம்/////
      பூனைக்கு எம்புட்டு ஞானம் :)   இருந்தாலும் சொந்தக்காரங்களை விட்டுக்கொடுக்க மாட்டேங்கறீங்க  உங்க கேள்வி பார்த்து அப்டியே ஷாக் ஆகிட்டேன் 

      நீக்கு
  29. எல்லாக் கேள்விகளுக்கும் அடுத்த புதன் பதிவில் பதில் கொடுப்போம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!