திங்கள், 30 செப்டம்பர், 2019

"திங்க"க்கிழமை - சுவையான மசால் வடை – நெல்லைத் தமிழன் ரெஸிப்பி



இன்றைக்கு கணிணியில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, எ.பி.ல எழுத, மசால் வடை செய்வோமே என்று தோன்றியது.  மனைவிகிட்ட ஓகேவா என்று கேட்டேன்.  அவள் அனுமதி கிடைத்ததும், என் வழக்கமான அளவு டம்ளரை எடுத்தேன்.  அதுக்கு அவள், சின்னக் கிண்ணத்துல எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளச் சொன்னாள்.  அவள் சொன்னதும் சரிதான். எனக்கு ஆசை இருக்கும் அளவு சாப்பிடப் பிடிப்பதில்லை. ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை மசால் வடை கடைல வாங்குவேன். அதில் ரெண்டு சாப்பிட்டாலே எனக்குப் போதும்னு தோன்றிவிடும்.  அதுனால கொஞ்சமாவே செய்வோம்னு அவ சொன்ன அளவு கப்பையே எடுத்துக்கொண்டேன். 

மசால் வடைக்குத் தேவையானவை

கடலைப் பருப்பு 1 கப்
உளுத்தம் பருப்பு ¾ கப்
துவரம் பருப்பு ½ கப்
சிவப்பு மிளகாய் 4 (நான் காஷ்மீரி மிளகாய் 6 உபயோகித்தேன்).
தேவையான அளவு உப்பு
1 வெங்காயம், 1 பச்சை மிளகாய்
பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

முதலில் பருப்பு வகைகளை அளந்து ஒரு பாத்திரத்தில் கொட்டி, அது மூழ்கும் வரை தண்ணீர் விடவும். சுமார் 1 ½ மணி முதல் 2 மணி நேரம் வரை அது ஊறட்டும் (தண்ணீர் தேவையான அளவு இருக்கணும். பருப்பு ஊறி மேலாக வந்துவிட்டால் காய ஆரம்பிக்கும்).




ஊறினதும், தண்ணீரை வடிகட்டிவிடவும்.

ஊறின பருப்பில் பாதி அளவு எடுத்து, அத்துடன் சிவப்பு மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.



பிறகு அதனை, மீதி பருப்புடன் கலந்து, வடை தட்டுமளவு கலந்துகொள்ளவும்.




இப்போது பச்சை மிளகாயை சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் அதேபோல் சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். இந்த இரண்டையும் மாவுடன் கலந்துகொள்ளுங்கள். இப்போ மாவு வடை தட்டும் பதத்தில் இருக்கும். இப்போ உப்பு சரியா இருக்கான்னு சரிபார்த்துக்கோங்க.



சிலர் சோம்பு சேர்ப்பாங்க, கருவேப்பிலை, கொத்தமல்லிலாம் போடுவாங்க. நாங்கள் எதுவும் போடுவதில்லை.



கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அதில் மாவை வடைபோல் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.



வடை நன்கு மொறுமொறுப்பாக வரணும் என்றால் பொதுவா, ஒரு முறை அரைப்பதமாக பொரித்துவிட்டு, எண்ணெய் வடிந்த பிறகு இன்னொரு முறை பொரிக்கணும். அப்போ நன்கு முறு முறுவென வரும். நான் ஒரு தடவைதான் பொரித்தெடுத்தேன்.



பெரிய வெங்காயத்துக்குப் பதிலாக சிறிய வெங்காயம் உபயோகித்தால் ரொம்ப வாசனையாக இருக்கும்  (இருந்துட்டாலும் எனக்கு என்ன தெரியவா போகிறது?).  நான் மசால் வடையை சிறியதாகத் தட்டினேன். ரொம்ப நல்லாவே வந்திருந்தது.

நான் உபயோகப்படுத்திய கிண்ணம், அஞ்சரைப் பெட்டியில் வைக்கும் கிண்ணம். அதற்கு, 25 சிறிய மசால்வடைகள் வந்தன. அதுவே ரொம்ப ஜாஸ்தியாகத் தெரிந்தது.

நான் 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஊரில் (தாளவாடி), ஒரு சாதாரணவர், அப்பாவி, மாலை 6 மணிக்கு இந்த மாதிரி (இதைவிடச் சிறிய) மசால்வடை தயார் செய்வார். ஒன்று 5 பைசா.  நாங்கள்லாம் விளையாடிவிட்டு அங்கு போனால், 4-5 வாங்கிச் சாப்பிடுவோம்.  அந்த எளியவரையும் ஏமாற்றும் சிலரை அப்போது பார்த்திருக்கிறேன் (பேட்மிண்டன் விளையாடிவிட்டு வரும் அந்தப் பெரியவர்கள், கூட 4 எடுத்துக்கொண்டு பைசா குறையக் கொடுப்பார்கள். மசால்வடை செய்பவர், எங்க அப்பா ஹெட்மாஸ்டரா இருந்த ஸ்கூல்ல வேலை பார்த்த உதவியாளரின் தம்பி.)



உண்மையைச் சொன்னா, அந்த மசால்வடை மாதிரி நான் செய்தது அவ்வளவு ருசியாக இல்லை.  அதுனால செய்துபார்க்காம இருந்துடாதீங்க. உங்க கைப்பக்குவம் என்னுடையதைவிட ரொம்ப நல்லா இருக்கும் இல்லையா?


அன்புடன்

நெல்லைத்தமிழன்

145 கருத்துகள்:

  1. ஆஜர்!

    இனிய காலை வணக்கம். அம்பேரிக்கா காரர்களுக்கு இனிய மாலை வணக்கம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாஸ், அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், தங்கைஸ் நட்பூஸ் அனவருக்கும் என் நன்றிகள். அன்பான விசாரித்தலுக்கு.

      தேம்ஸ்காரர்களுக்கு இனிய காலை வணக்கம்...

      கீதா

      நீக்கு
    2. தி/கீதாவுக்கு நல்வரவும் வாழ்த்துகளும், ஆரோக்கியமான உடல் நிலைக்குப் பிரார்த்தனைகளும்

      நீக்கு
    3. வாங்க..வாங்க கீதா ரங்கன்... உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்க ஆச்சர்யம்..சந்தோஷம்... ஆனா கொஞ்சம் குறைவாக எழுதினாலும் ஓகேதான்..முதல்ல கைகளைப் பார்த்துக்கோங்க. இதோ.. தீபாவளி பக்கத்துல வந்துடுச்சு. ஒருவேளை உங்க 'தம்ம்ம்ம்ம்ம்பி' உங்களைப் பார்க்க வந்தால், ரொம்ப இல்லைனாலும், ஒரு 5-6 வித வித இனிப்புகளோடு வரவேற்க வேண்டாமா? தீபாவளி மருந்து முதல்கொண்டு, கிளறுவதற்கு கை ஸ்டிராங்காக இருக்க வேண்டாமா?

      சரி... இனிப்புகளை உங்கள்டேர்ந்து வாங்கிக்கொள்ள பிளாஸ்டிக் டப்பாக்கள் கொண்டுவரவா இல்லை ப்ளாஸ்டிக்கை தடை செய்ததால், எவர்சில்வர் டப்பாக்களோடுதான் வரணுமா?

      நீக்கு
    4. மிக்க நன்றி கீதாக்கா அண்ட் நெல்லை..

      கீதா

      நீக்கு
    5. எவர்சில்வர் டப்பாவே கொண்டு வாங்க நெல்லை...!!!!!!! கரீக்ட் கை கிளற நன்றாக இருக்கணும் நெல்லை. நான் செய்யும் தீபாவளி மருந்தை எப்படி உங்களுக்குத் தருவது என்று ஓசனை ஓடுது...நீங்க பங்களூர் வருவீங்கதானே...அப்போ தருகிறேன்..நானே வந்து தருகிறேன்....ஸ்வீட்டோடுதான்...ஹா ஹா

      கீதா

      கீதா

      நீக்கு
  2. நெல்லை மசால் வடை சூப்பரா இருக்கு!!

    எனக்கு மிகவும் பிடித்த வடை. எங்கு சென்றாலும் மசால் வடை நல்ல கடைகளில் இருந்தால் கண்டிப்பாக என் சாய்ஸ் அதுவாகத்தான் இருக்கும்.

    வீட்டிலும் உ வ தினங்கள் தவிர செய்வதென்றால் இதுதான்.

    சின்ன வெங்காயம் தான் இதற்கு மிகவும் பொருத்தம் பெ வெ போட்டாலும் கூட..என்று சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிருக்கீங்க..

    //
    பெரிய வெங்காயத்துக்குப் பதிலாக சிறிய வெங்காயம் உபயோகித்தால் ரொம்ப வாசனையாக இருக்கும் // அதே அதே...நான் இது இல்லாமல் செய்வதில்லை

    திருவனந்தபுரத்தில் இடசேரிக் கோட்டைத் தெருவில் ஒரு வீட்டில் மசால் வடை விற்பனைக்குச் செய்வாங்க....செம டேஸ்ட்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாமா, ஸ்ரீராம், நெல்லைத்தமிழன் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
      கொலுவீடுகளுக்குப் போய்விட்டு வர தமதமாகிவிட்டது.
      மசால் வடை. கையே மணக்குமே அதுவும் சி வெ போட்டுப் பண்ணினால் தனி
      மணம் தான்
      ரொம்ப ரொம்ப அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் முரளிமா. பாந்தம்னு ஒரு வார்த்தை. அது இந்தப் பதிவுக்குப் பொருந்தும்.

      மொறு மொறுன்னு என்ன அழகா இருக்கு பார்க்க.
      மசால் வடைன்னா இதுதான்.
      நளபாகம். !!!!!!!
      இன்னோரு வரவேற்பு கீதா ரங்கனுக்கு..வருக வருக. இனிமேல் படு ஜோராகக் களை கட்டும்.

      ஏஞ்சல், அதிரா எல்லோரும் வர இன்னும் களைகட்டும்.
      அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.
      பானுமா சீக்கிரம் வாங்கோ.

      மசால் வடைன்னு கதை எழுதலாம். அவ்வளவு மசால்வடை வண்டிகளோடு எனக்கும் தம்பிகளுக்கும் அத்தனை உறவு.

      நீக்கு
    2. @கீதா ரங்கன்... உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்... இந்த மசால்வடைலாம் நாமளே செஞ்சு சாப்பிடும்போது அதன் ருசி குறைவு. யாராவது சுடச் சுட பண்ணிக்கொடுத்தால்... அதன் ருசியே தனி...

      இந்த தடவை யாத்திரையில் மசால்வடை (வெங்காயம்லாம் கிடையாது) செய்துதந்தார்கள். குட்டி குட்டியா அழகா அருமையா தட்டியிருந்தாங்க. அந்த தெக்கினிக்குலாம் எப்போ வருமோ. மொத்தமா 100 வடை பண்ணியிருப்பாங்க. எல்லாமே கம்ப்யூட்டர் டிசைன் மாதிரி ஒரே அளவு, நிறம்..

      நீக்கு
    3. @கீதா ரங்கன் - திருவனந்தபுரத்துக்கு சில வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது, கோவிலைச் சுற்றியுள்ள தெருவில் சேவை கிடைக்கும், வாங்கிவருகிறேன் என்று என் பெரியமா பெண் சொன்னார். ஆனால் மாலை 6 1/2 மணிக்கு கிடைக்கவில்லை (காலியாயிடுத்தாம்).

      கோவில் அருகில் எங்கெங்கு என்ன என்னா சாப்பிடறவைகள் கிடைக்கும்னு எனக்குச் சொல்லுங்க. ஒருவேளை டிசம்பரில் சென்றால், வாய்ப்பு இருந்தால் வாக்கலாம் இல்லையா?

      நீக்கு
    4. வல்லிம்மா... வாங்க..வாங்க...

      சும்மா 'நளபாகம்...மொறு மொறுன்னு' என்றெல்லாம் என்னை ரொம்பச் சொல்லிடாதீங்க. அப்புறம் உண்மை தெரியவரும்போது... அட.. இவ்வளவுதான் இவர் திறமையா என்று தோணிடும்... ஹா ஹா.

      நீங்க உறவு முறைகளோடு நல்லா சம்பவங்களைச் சொல்றீங்க. அதையே ஒரு நாவல் அளவுக்கு நீங்க விவரமா எழுதியிருக்கலாம் (மாலா திருமணக்கதை).

      மசால்வடை பற்றி எழுதுங்களேன்..

      நீக்கு
    5. அன்பு முரளிமா,
      பார்க்கவே நன்றாக இருக்கு.
      உண்மையைத்தான் சொன்னேன்.
      இவ்வளவு ஆர்வம் எடுத்து சமையல் கட்டில் புகுபவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
      இன்னும் நிறைய செய்து பாருங்கள்.

      மசால்வடை கதைதானே. அடுத்த ப்ராஜெக்ட் அதுதான்:)

      நீக்கு
    6. உங்கள்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நினைத்திருந்தேன் (ரொம்ப வருஷமா..உண்மையிலேயே). உங்க மைலாப்பூர் வீட்டு மாமரம் என்ன வகை? பங்கனப்பள்ளியா, நீலனா இல்ல வேறு ஏதேனுமா?

      நீக்கு
    7. எனக்கு சிலவற்றில் அப்சஷன் உண்டு. மாங்காய், நுங்கு, பலாப்பழம் போன்றவற்றை எங்க பார்த்தாலும், எப்போ பார்த்தாலும் வாங்கிடுவேன். அதிலும் மாங்காய். எதுக்கு இவ்வளவு, வேஸ்ட் ஆகுது என்று சொன்னாலும், அப்போ அப்போ மாங்காய் வாங்கி ஊறுகாய் போடுவேன். எனக்கு மாமரம் பார்த்தாலும், என்ன காய் வருதுன்னுலாம் கவனிப்பேன். இங்க நான் இருக்கற ஏரியாவுல ஏகப்பட்ட மாமரம், வீட்டுக்கு வீடு இருக்கு... ஒருத்தரும் அவற்றை உபயோகப்படுத்தற மாதிரியே தெரியலை (பிறருக்குக் கொடுக்கிற மாதிரியும் தெரியலை ஹா ஹா.. அனேகமா எல்லாம் வேஸ்டா போகும்)

      நீக்கு
    8. வெளியிலே விற்கும் சேவை வகைகள் எல்லாமே திடீர் சேவை ரகங்களாக இருக்கும். எங்க வீட்டிலே பாதிரி வகை, நீலம்,மற்றும் இன்னொரு வகை இருந்தது. ஒரு மரம் முழுக்க மஞ்சநாறியாக இருந்தது. இப்போ எல்லாம் நினைவுகளிலே.

      நீக்கு
    9. என்ன இப்படி பொதுவாச் சொல்லிட்டீங்க கீசா மேடம்? சென்னைல ஒரு பிராண்ட் சேவை (இப்போ ரொம்ப விலை அதிகமாயிடுச்சு. 40-45 ரூபாய்... ஒரு காலத்துல 21 ரூபாயா இருந்தது)-அந்தக் கடைகள்ல பூரணக் கொழுக்கட்டை, மி.பொடி தடவின இட்லி எல்லாம் கிடைக்கும் நம்ம வீட்டு சேவை போலவே இருக்கும். திருவனந்தபுரத்திலும் அப்படித்தான். இந்தச் சேவையே பாலக்காட்டு ஐயர்கள் செய்வது போல இருக்கும்.

      எங்க அப்பா வீட்டுல பங்கனப்பள்ளி, மல்கோவா, மஞ்சநாத்தி, நீலன் 2 மரம், ருமானி, கிளிமூக்கு மாங்காய் மரம் என்று 7 மரங்கள் இருந்தன. கிளிமூக்கு மாங்காய் மரம் தவிர மற்றவற்றில் நிறைய, ரொம்ப அதிகமாக் காய்க்கும். கிளிமூக்கு மாமரம், 3-4 காய்கள்தான் காய்த்தது. ஆனா பாருங்க.. என் தம்பி, ருமானி தவிர மற்ற எல்லா மரங்களையும் வெட்டிட்டு அங்கு வீடு கட்டிட்டான்.

      நீக்கு
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராமை இன்னும் காணோம்.

    நானே ஒரு மாதம் கழித்து வந்தா...யாரையும் காணும்....துரை அண்ணா எப்பவும் 6 மணிக்கு வந்திடுவாரே...

    மசால் வடை போட்டவரையும் காணும்..வடை போணியாகுமான்னு நினைச்சு..ஒளிஞ்சுகிட்டார் போல ஹா ஹா ஹா..போணியாகிடும் நெல்லை. நல்லாவே இருக்கு..

    அப்புறம் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே....    வாங்க வாங்க...  வாங்க....   வாங்க கீதா ரெங்கன்....

      கைவலி, தோள்வலி தேவலாமா?   இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    2. தேவ.............லாம் ஸ்ரீராம்.....

      ஒரு கை/ரெண்டு கை பார்த்துருவோம்னு ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. கீதாரெங்கன், பூரண நலம் பெற்று இருப்பீர்கள் , உங்கள் உற்சாக பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
    4. //நானே ஒரு மாதம் கழித்து வந்தா..// - காலைல உங்க முதல் பின்னூட்டத்தைப் பார்த்தேன்... அட... சந்தோஷ அதிர்ச்சில வேற யாரும் பின்னூட்டம் போட மாட்டாங்களேன்னு நினைச்சேன் ஹா ஹா. இன்னும் முழுவதும் சரியாகட்டும் கீதா ரங்கன்(க்கா). அப்புறம்.. நீங்களும் கதையோ இல்லை தி.பதிவோ எ.பில போட மாட்டீங்களா... அப்போ பார்த்துக்குவோம்...

      நீக்கு
  4. இந்திய நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம். அம்பேரிக்க நண்பர்களுக்கு நல்லிரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நல்வரவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா...

      நல்வரவும், வணக்கமும், நன்றியும்.

      நீக்கு
    2. வாங்க கீசா மேடம்...... 'இந்திய நண்பர்கள்/அமெரிக்க நண்பர்கள்' - இது ஓவர் அலட்டல் இல்லையோ? இந்த லண்டன், ஸ்காட்டிஷ், பாரீஸ்...இவங்கள்லாம் நண்பர்கள் இல்லையா? அவங்களையும் மனசுல வச்சுக்கோங்க. நியூசிலாந்து காரங்கதான் பெரும்பாலும் மத்த இடுகைகளுக்கு வருவதில்லை. அதுனால அவங்களை விட்டுட்டீங்கன்னா தவறில்லை. ஹா ஹா

      நீக்கு
  5. நான் பொதுவாகவே கடலைப்பருப்பு குறைவாகப் பயன்படுத்துவேன். வடை, அடை போன்றவற்றிற்குத் துவரம்பருப்புத் தான் ஒரு கிண்ணம் போடுவேன். துவரம்பருப்பு ஒரு கிண்ணம் எனில் கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி போட்டுக் கொள்வேன். துவரம்பருப்பு அதிகம் சேர்த்தால் நிறம் வருவதோடு மொறுமொறுப்பும் அதிகம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருப்பு வடை செய்யும் போது அதில் spinach கீரையை பொடிப்பொடியாக நறுக்கி போடுவதுண்டு அது போல அடை தோசை செய்யும் போது அதிலும் போடுவதுண்டு.. மிக மிக அருமையாக இருக்கும் செய்து பாருங்கள் உடலுக்கும் நல்லது Spinach is a superfood. It is loaded with tons of nutrients in a low-calorie package. Dark, leafy greens like spinach are important for skin, hair, and bone health. They also provide protein, iron, vitamins, and minerals

      நீக்கு
    2. வாங்க கீசா மேடம்... உங்க அளவுல, நீங்க சொன்ன மாதிரி விரைவில் செய்துபார்க்கிறேன் (இன்னைக்கே செய்யலாம்னு நினைத்தேன்... இங்க வெயில் கொளுத்துது. பெண் சாப்பிடுவான்னு தோன்றினால் பண்ணிடவேண்டியதுதான்).

      எனக்கு மசால்வடைல மொறுமொறுப்பு அதிகமா இருக்கணும். கடைகள்ல (பெரும்பாலும்) ரொம்ப சரியா பண்ணிடறாங்க. துவரம்பருப்பை அதிகமாகச் சேர்த்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. வாங்க... மதுரைத் தமிழன். இங்க பசலைக் கீரை கிடைக்கும். அதைப் போட்டால் கீரை வடை போல ஆகிடாதா? ஞாபகம் வச்சுக்கறேன். மற்றபடி பசலைக்கீரை மட்டுமல்ல மத்த கீரைகளும் உடலுக்கு அவ்வளவு நல்லது.

      நீக்கு
    4. வடை, அடை எல்லாவற்றிற்கும் நாங்க வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் கீரை போன்ற எல்லாவற்றையும் போடுவோம் மதுரைத் தமிழரே. கீரை வடை சமையல் குறிப்பும் போட்டிருக்கேன். ஆனால் அது உளுந்து வடையில் செய்தது.

      நீக்கு
    5. @கீசா மேடம் - முள்ளங்கிக்கீரையா? அதை உபயோகப்படுத்தலாமா? நான் புத்தம் புது முள்ளங்கிகள் (பீட்ரூட், நூல்கோல்) வரும்போது, இலையை கட் பண்ணி வெறும்ன முள்ளங்கி மட்டும் தரச் சொல்லுவேன். அந்தக் கீரையை என்ன பண்ணுவீங்க?

      நீக்கு
    6. ஹையோ, முள்ளங்கிக்கீரை ரொம்பவே உடம்புக்கு நல்லதாச்சே! அதிரடி கிட்டேச் சொன்னால் சுண்டல் பண்ணிக் கொடுத்திருப்பாங்க! அதைத் தவிர்த்துப் பருப்பு உசிலிக்கு அரைத்துக் கொண்டு அதிலே கீரையை நறுக்கிச் சேர்த்து வேட்டில் வேக வைத்து(இட்லித்தட்டில்) உதிர்த்துக் கீரை உசிலியாகப் பண்ணலாம். பாசிப்பருப்பு வேக வைத்துக்கொண்டு கீரையை நறுக்கிச் சேர்த்து வேக வைத்துக்கொண்டு பச்சைமிளகாய்/சிவப்பு மிளகாய் ஏதேனும் ஒன்றோடு தேங்காய், ஜீரகம் வைத்து அரைத்து விட்டுக் கூட்டுப்பண்ணலாம். சாம்பார்ப்பொடி போட்டு புளிவிட்டு புளி விட்ட கீரையாகப் பண்ணலாம். இந்த பஜியா, அடை போன்றவற்றிலும் நறுக்கிச் சேர்க்கலாம்.

      நீக்கு
    7. இப்படி ஒரு மற்றர் போகுதோ இங்கின:)).. அப்படிச் சொல்லுங்கோ கீசாக்கா.. என்னிடம் எந்த இலையும் தப்பவே முடியாது:).. முள்ளங்கி, கரட், பீற்றூட், மேத்தி, கடுகு இலை.. அனைத்தையும் சுண்டி விட்டிடுவேன்ன் ஹா ஹா ஹா.. வீட்டில் சுண்டல் செய்தால் மட்டும் எல்லோருக்கும் பிடிக்கும்.. இலை வகையில் கறி சமைச்சால் பின்பு நான் தான் முக்கி முக்கி முடிக்க வேணும்:)

      நீக்கு
    8. நெல்லை கீதாக்கா சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன். நானும் அந்தக் கீரைகளை அதான் பீற்றூட் கீரை, முள்ளங்கி கீரை (இதோ இங்கு பங்களூரில் பீற்றூட், முள்ளங்கி, கேரட் கொண்டையிலிருந்து கட் செய்து தனியா வைச்சுருக்காங்க...அதை விற்காமல் கேட்பவர்களுக்கு ஃப்ரீயாகவே கொடுக்கறாங்க) நான் பார்த்ஹ்துவிட்டால் வாங்கி வந்து செய்துவிடுவேன்ம். அக்கா சொன்னது போல உசிலி, சுண்டல் கூட்டு என்று மற்ற கீரையில் செய்வது போலும் எல்லாமே குழம்பாகவும்...வெந்தயக் கீரையும் தான் அடையில் வடையில் என்று சேர்த்தும் செமையா இருக்கும்

      கீதா

      நீக்கு
    9. ஓ... நான் இதுவரை இந்தக் கீரைகளை (அதாவது முள்ளங்கி/பீட்ரூட்/நூல்கோல் இலைகளை) உபயோகித்ததே இல்லை. ஆனா அதிரா தளத்துல பூசணிக் கொடி இலையையும் சுண்டல் பண்ணினதைப் பார்த்திருக்கேன். அவங்க சாப்பிட்டுவிட்டு இன்னும் தெம்பா இருக்கறதுனால, இந்த இலைகளையெல்லாம் உபயோகிப்பது நல்லதுன்னு தெரியுது. நினைவில் வைத்துக்கறேன்.

      நீக்கு
  6. பருப்பெல்லாம் எடுத்து வைக்காமல் உப்புக்காரம் குறைவாகப் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டு ஒரு கரண்டி பாசிப்பருப்பை நன்கு களைந்து அதில் சேர்ப்பேன். பின்னர் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுச் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை தட்டுவேன். இன்னும் கொஞ்சம்பெரிதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வரை பருப்பு வடை என்றால் கடலை பருப்பை மட்டும் வைத்து செய்வேன்.. ஆனால் துவரம் பருப்பு உளுந்து சேர்த்து செய்தது இல்லை... இங்கே நீங்கள் மற்றும் நெல்லைதமிழன் சொன்ன குறிப்பை பாட்க்கும் போது நன்றாக வரும் போல தெரிகிறது... உங்கள் முறைப்படி சுட்டு பார்க்கிறேன்... நன்றாக வந்தால் பாராட்டுக்கள் இல்லையென்றால் என்ன செய்ய மனைவிக்கு தெரியாமல் குப்பை கூடையில் போட்டு விடனும்

      நீக்கு
    2. மதுரைத் தமிழன்.... கொஞ்ச நேரம் கழித்துதான் நான் வந்து மறுமொழி கொடுக்கணும்னு நினைத்தேன். வருகைக்கு நன்றி....

      உங்க காராஜை குப்பைக் கூடை என்று எழுதியிருப்பது எனக்குப் பிடிக்கலை. அதுபோல கப் என்பதை மக் Mug எனப் படித்து இருவருக்கான அளவை இருபது பேருக்கு தயார் செஞ்சுடாதீங்க. வடை பொரித்து முடித்தால் இருபது நாட்களுக்கு புது இடுகை போடமுடியாமல் கைவலி வந்துவிடும். அப்புறம் மோடி, ஸ்டாலின், தமிழிசை இவங்களை கலாய்க்க முடியாமல் போய்விடும்.

      நீக்கு
    3. @கீதா சாம்பசிவம் மேடம் - வடை கொஞ்சம் சின்னதா தட்டினாலும் அழகா இருக்கும். நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் அதிகமாகவே (நீங்க சொன்னதைவிட) பச்சை மிளகாயை கட் பண்ணிப் போட்டால் நல்லா காரமா நன்றாக இருக்கும். செய்துபார்க்கிறேன்.

      நீக்கு
    4. வடை சின்னதாத் தட்டணும் என்பதற்காக இப்படியா கோலிக்குண்டு அளவில் தட்டுவது? இது ஒரு வாய்க்குக் கூட வராது. அதிலே 20 வடைகள் தட்டினதாகப் பெருமை வேறே! :)))))

      நீக்கு
    5. என்னாது... கோலிக்குண்டு சைஸா? படம் வேற போட்டிருக்கேன். எல்லாம் உள்ளங்கையைவிட கொஞ்சம் சிறிய சைஸ். ஆனா சமீபத்தைய யாத்திரைல, ஒரு இஞ்ச் விட்டத்திற்கு ஆமவடை போட்டிருந்தாங்க. மிக அருமையா ஸ்கேல்ல அளவெடுத்து தட்டின மாதிரி இருந்தது.

      உங்க கமெண்ட் படிச்ச உடனே சர்வர் சுந்தரம் படத்துல நாகேஷ் சொல்லும் ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.

      சாப்பிட வந்தவர்: ஏம்பா.. வடை ஏன் இவ்வளவு சின்னதா இருக்கு?
      சர்வர் நாகேஷ்: வடை முன்ன போட்ட அதே சைஸுதான். ரூமை பெரிசாக்கியிருக்கோம். அதுனால வடை சின்னதாத் தெரியுது.

      நீக்கு
    6. உளுந்து சேர்த்தால் பைன்டிங் சரியாக வரும் என்பது என் கருத்து. பொதுவாகக் கொஞ்சம் போல் உளுந்து அடை, ஆமவடை, மசால்வடை எல்லாவற்றிற்கும் சேர்க்கலாம். ரவா தோசை, மைதா தோசை, கோதுமை/கேழ்வரகு தோசை வகைகள் சிறுதானியத் தோசைகள் எல்லாவற்றிற்குமே உளுந்து அரைச்சுப் போட்டு வார்த்தால் நன்கு மெலிதாக வார்க்க வரும்.

      நீக்கு
    7. குறித்துக்கொண்டேன் கீசா மேடம்... நன்றி

      நீக்கு
  7. இது வெறும் கடலைப்பருப்பாகத் தான் தெரியுது! அதோடு நல்ல காரமாகவும் இருக்கும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படத்துலதான் ஒவ்வொரு பருப்பையும் ஒரே தட்டுல வச்சு படம் போட்டிருக்கேனே... அப்படியும் சந்தேகமா?

      வடை காரமா இருந்தால் நல்லாத்தான் இருக்கும். ஆனா மொறுமொறுப்பா இருக்கணும். பார்க்கலாம்..அடுத்த முறை இன்னும் நல்லா வருதான்னு.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  9. அருமையான முறு முறு வடை.
    காரம் மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும் எங்களுக்கு.

    நெல்லையின் தாளவாடி நினைவுகள் எனக்கும் சில நினைவுகளை கொண்டு வந்தது.

    சிறு வயதில் சிவகாசியில் இருந்தோம், அப்போது பள்ளி அருகில் இது போல் குட்டி குட்டி வடை 10 பைசா விற்கு மூன்று வடை தருவார். மதியம் சூடாக போடுவார், பள்ளி ஆசிரியர் , மாணவிகள் எல்லோரும் வாங்கி சாப்பிடுவோம். தயிர் சாதம் கொண்டு போனால், கட்டு சாதங்கள் கொண்டு போனால் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.அது நினைவுக்கு வந்து விட்டது.

    அது போல் மாயவரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒருவர் குட்டி வடை போடுவார். மாயவரம் ரயில் நிலையத்தில் குட்டி வடை ஐந்து கவரில் போட்டு 20 ரூபாய் என்று நினைக்கிறேன், தவலை வடையும், இந்த குட்டி மசால் வடையும் மிகவும் பிரசித்தம்.

    செய்முறை படங்கள் எல்லாம் மிக அருமை.

    //வடை நன்கு மொறுமொறுப்பாக வரணும் என்றால் பொதுவா, ஒரு முறை அரைப்பதமாக பொரித்துவிட்டு, எண்ணெய் வடிந்த பிறகு இன்னொரு முறை பொரிக்கணும்//

    குறைந்த சூட்டில் வேக வைத்தால் உள் புறம் நன்றாக வெந்து முறு முறு என்று வரும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தயிர் சாதம் கொண்டுபோனால்// - படிக்கவே எனக்கு நாக்கில் ருசி வந்துவிட்டது. இன்றைக்கு ஏதாவது (மசால்வடையோ குனுக்கோ) பொரிக்கப்போகிறேன். இப்போதான் அரிசி ஊறவைத்தேன். சில மணி நேரத்தில் தயிர் சாதம்... குனுக்கு.

      பொதுவா சாதாரண கையேந்திபவன்..இல்லைனா ரோடில் விற்கும் ஆயாக்கள் கடைல பஜ்ஜி, வடை ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு அப்போது தோணுவது, நம்ம வீட்டில் அட்டஹாசமான எண்ணெய், சுத்தமான பொருட்களை ரெடி பண்ணிவச்சு, இவங்களைக் கூப்பிட்டு வடை பண்ணச் சொல்லலாமான்னு... ஏன்னா..அவங்க கடைல எண்ணெய் சுத்தமா இருக்காது.

      இப்போவும் மாயவரம் ரயில் நிலையத்தில் வடை விக்கறாங்களா? (பாக்கெட் 20 ரூபாய்க்கு)? அந்தப் பக்கம் போனால் வாங்க மறக்கமாட்டேன். ஆனா பாருங்க..எனக்கு மசால் வடைல சோம்பு அல்லது பூண்டு போட்டால் பிடிக்காது.

      நன்றி கோமதி அரசு மேடம்..

      நீக்கு
    2. /ஏன்னா..அவங்க கடைல எண்ணெய் சுத்தமா இருக்காது.//எல்லோரையும் அப்படி சொல்லி விட முடியாது நெ.த. எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரை திருச்சி தெப்பக்குளம் அருகே க்ளைவ்ஸ் ஹாஸ்டெல் எதிரே தினசரி ஒருவர் பஜ்ஜி, பக்கோடா கடை போடுவார். மாலை நான்கு மணிக்கு இரண்டு பெரிய டின்களில் கடலை மாவு, அரிசி மாவு, எண்ணெய் பாக்கெட்டுகளோடு  வந்து வியாபாரத்தை ஆரம்பிப்பார். ஐந்தரை மணிக்கு கடையை கட்டி விடுவார். 
      இப்போது கூட ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அதை குரு  என்பவர் நடத்துகிறார். அதனால் நாங்கள் குரு கடை என்போம். அந்த குருவின் தகப்பனார் காலத்திலிருந்தே எங்களுக்கு அவர்களைத் தெரியும். அந்த மாமா சுட்ட எண்ணெய் உபயோகிக்க மாட்டார். உங்களுக்கு வேண்டுமானால் அந்த கடையின் பெயர் விசாரித்து சொல்கிறேன். அங்கு பூரி,உருளைக்கிழங்கு மிக நன்றாக இருக்கும். ஸ்ரீரங்கம் செல்லும் பொழுது சாப்பிட்டு விட்டு வாருங்கள். 

      நீக்கு
    3. நாச்சிமுத்து துணிக்கடைக்கு எதிரே இருக்கும் வெங்கடேசா பவனைச் சொல்றீங்களோனு நினைக்கிறேன். எல்லாமே ஸ்ரீரங்கத்தில் பெருங்காயம் வைச்ச டப்பா தான். திருவானைக்கா நெய்தோசைக்குப் பெயர் போன பார்த்தசாரதி ஓட்டல் உள்பட! எங்கேயும் நன்றாக இல்லை. வீட்டில் செய்து சாப்பிடுவது தான் நன்றாக இருக்கும். :))))))

      நீக்கு
    4. //உங்களுக்கு வேண்டுமானால் அந்த கடையின் பெயர் விசாரித்து சொல்கிறேன். அங்கு பூரி,உருளைக்கிழங்கு// - எதுக்கு 'வேண்டுமானால்' என்று ராகம் போடறீங்க. உணவு விஷயத்தில் சந்தேகப்பட்டு கேள்வியே கேட்டுடாதீங்க. இந்த மாதிரி சிறப்பாக இருக்கும் உணவு விஷயத்தை எனக்குச் சொல்லிடுங்க. அங்க போகும்போது நிச்சயம் நேரம் வாய்த்தால் சாப்பிட்டுப்பார்ப்பேன்.

      நீக்கு
    5. கீசா மேடம்... 'பார்த்தசாரதி ஹோட்டல் உட்பட' - இதுக்குக் காரணம் ரொம்பவும் ஹைப் பண்ணிச் சொல்லுவதும், பழைய காலத்தில் அருகி இருந்த இத்தகைய கடைகள், இந்தக் காலத்தில் எல்லா முடுக்குகளிலும் இருக்கும் கடைகளோடு போட்டி போடுவதும்தான். நாங்கள் பார்த்தசாரதி ஹோட்டலில் சாப்பிட்டோம். சுத்தம் மட்டும் இல்லையே தவிர, உணவு மோசமில்லை. இந்த மாதிரி எளிய கடைகளை ஆதரிக்கணும் என்பது என் எண்ணம்.

      நீக்கு
    6. இல்லை கீதா அக்கா, நாச்சிமுத்து வரை போக வேண்டாம். நான் சொல்லும் ஹோட்டல் தெற்கு வாசல் பெரிய கோபுரம்(அந்தக் கால மொட்டை கோபுரம் அல்லது ராயர் கோபுரம்) நுழைந்த உடனேயே வலது பக்கம் வந்து விடும். 

      நீக்கு
    7. வலப்பக்கம் மணீஸ் கஃபே என்னும் பெயரில் ஓர் ஓட்டல் இருக்கு. போனதே இல்லை. ஸ்ரீரங்கத்தில் இதைத் தவிர்த்து இன்னொரு மணீஸ் கஃபே இதே கோபுர வாசலில் இருந்து உள்ளே போகும் வழியில் மெஸ் மாதிரி ஒன்றும் உள்ளது. அங்கேயும் சிறுதானியத் தோசை, கோதுமைத் தோசை எல்லாம் போடுவார்கள். ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் ஓர் மணீஸ் கஃபே உள்ளது. அங்கே காலை ஐந்தரை மணியிலிருந்து இட்லி, பொங்கல், வடை பார்சல் கிடைக்கும். பல்லவனில் போகிறவர்கள் அங்கே போய் வாங்கிக்கொண்டு தான் ஸ்டேஷனுக்குள் நுழைவார்கள். ஒரு முறை வாங்கினோம். இஃகி,இஃகி,இஃகி! என்று இருந்தது. அப்புறமா ரிஸ்கே எடுப்பதில்லை. எங்க ஆஸ்தான ஜி.கே.சி. இல்லைனா என் கைப்பக்குவம் தான் சிறப்புங்கற முடிவுக்கு வந்துட்டோம்.

      நீக்கு
    8. சரி..சரி... மணீஸ் மற்றும் கேடரிங் சர்வீஸ் இரண்டையும் டிரை பண்ணிப் பார்த்துடறேன், வாய்ப்பு இருந்தால்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்த நாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    சகோதரி கீதா ரெங்கன் எப்படி இருக்கிறீர்கள். நலமா? கைவலி பரிபூரணமாக குணமாகி விட்டதா? தாங்கள் நலமுடன் திரும்பி வர பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தேன். தங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தொடரட்டும் நங்களின் அருமையான கருத்துக்களை கொண்ட வரவுகள்.

    சகோதரர் நெல்லை தமிழர் அவர்களின் அறுசுவையில் தயாரித்த மசால் வடை அற்புதமாக உள்ளது. அளவுகளும் படங்களும், செய்முறைகளும் நன்றாக உள்ளன.

    நான் முதலில் கொஞ்ச பருப்புகளுடன் மி. வத்தல், கறிவேப்பிலை, உப்பு, ஒன்றிரண்டு ப. மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைத்து விட்டு, அதன் பின் முக்கால் வாசி பருப்புகளையும் சேர்த்து கரகரப்பாகவே அரைத்து விடுவேன்.கடைசியில் கொஞ்சம் பருப்பைதான் அப்படியே சேர்த்து வடை தட்டுவேன். இந்த முறையும் நன்றாக உள்ளது. பொரித்தப் பின் பல்லில் அரைபடும் பருப்புகள் நன்றாகத்தான் இருக்கும். (என்ன...! பால்ய வயதுகளில்.! இப்போது அரைக்க பல்லுக்கு கொஞ்சம் பலந்தான் வேண்டும்.ஹா ஹா ஹா ) சுவையான மசால் வடை பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி...

      தே...வ...லா....ம் தான். அக்கா.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... ஆறுசுவைக்கு சில சுவைகள் குறைகிறதே.. ஹா ஹா.

      நானும் ஓரிரு தடவை, பருப்பை ஊறவைக்காமல் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி, பாதி பருப்பை மட்டும் வடை செய்வதற்கு 1/2 மணி முன்னதாக ஊறவைத்து அரைத்து, மற்றதை வெறும்ன ஊறவைத்துச் சேர்த்தும் வடை செய்திருக்கிறேன். நன்றாகத்தான் இருந்தது.

      நீக்கு
  11. சென்ற வாரம் எங்க வீட்டம்மா முருகலான மசால்வடை தான் செஞ்சாங்க கூடவே சுடச்சுட ஸ்ட்ராங்கான காப்பி. மழை பெய்யறப்போ இந்த காம்பினேஷன் சூப்பர் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டிபிஆர் ஜோசப் சார்.... மழை பெய்துகொண்டிருக்கும்போது, பால்கனில உட்கார்ந்துக்கிட்டு, நாம கேட்காமலேயே வீட்டம்மா மசால்வடை இல்லைனா பஜ்ஜி, குனுக்கு, மிளகாய் பஜ்ஜி இதெல்லாம் வேண்டிய அளவு கொடுத்து காரத்துல நாக்கு சுர்ர்ர்னு இருக்கும்போது டீ (காபியை விட அதுதானே நல்லாருக்கும். டீ பால் விட்டது) கொடுத்தாங்கன்னா... .. எழுதும்போதே ஜிவ்வுனு இருக்கு.

      ஆசையிருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.. கதையா ஆகிப்போச்சு. இங்க மழை பெய்ய ஆரம்பிக்கும்போது அப்போதான் சாப்பிட்டு முடித்திருப்போம்..இல்லைனா 6 மணிக்கு மேல மழை பெய்யும். எங்க இதெல்லாம் சாப்பிட.

      நீக்கு
  12. நெல்லை நான் செய்வது இப்படி...

    து ப அதிகமாகவும் க ப அதைவிடக் கம்மியாகவும் (பாதியளவு எனலாம்) உ ப கொஞ்சமே கொஞ்சம் அல்லது இல்லாமலேயே....து ப வை மட்டும் கொஞ்சம் ஊறியதை எடுத்து வைத்துவிட்டு மற்றதை தண்ணீர் சேர்க்காமலேயே அரைத்து (நன்றாக ஊறியிருக்க வேண்டும்...) இஞ்சி, ப மி (ப மி மட்டும் பாதி அரைத்து, சிலதை பொடியாக நறுக்கிப் போட்டு, க வே, கொ ம பொடியாக நறுக்கிச் சேர்த்து, சி வெ கண்டிப்பாக பொடியாக நறுக்கிச் சேர்த்து அதோடு தனியாக எடுத்து வைத்திருக்கும் பருப்பையும் சேர்த்து செய்வது...காரம் அதிகம் இல்லாமல். சி மி பெரும்பாலும் சேர்க்காமல் சேர்த்தாலும் ஒன்றே ஒன்று....

    சில சமயம், சோம்பு கொஞ்சம் கடைசியில் அரைக்காமல் சேர்த்து, அதே போன்று கொஞ்சம் ஊற வைத்த பாசிப்பருப்பும் சேர்த்து....(அடைக்கும் கூட நான் சில சமயங்களில் பா ப இப்படிக் கடைசியில் சேர்ப்பதுண்டு. ஆனால் அரைக்காமல்...) இந்த இரண்டும் + சி வெ வீட்டிலுள்ள ஆட்களைப் பொருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதியதைப் படிக்கும்போதே நாமே செய்து சாப்பிட்டதுபோன்ற திருப்தி வந்துவிட்டது கீதா ரங்கன்.

      ஆனா இந்த சோம்புதான் எனக்குப் பிடிக்காது (குருமாவைத் தவிர).

      அது சரி.. வாசகர்களைப் பொறுத்துத்தானே கதை எழுத முடியும். வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடித்த மாதிரித்தானே செய்ய முடியும்.

      நீக்கு
  13. சின்ன வெங்காயம் சேர்த்தால் வாசமாக இருக்கும் என்றீர்கள். வாசம் வரவில்லையே...

    படம் அழகாகத்தான் இருக்கு ஆனால் ருசி அறியவில்லை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.

      மனசுல பாசம் இருக்கும்போது மசால்வடை வாசம் தெரிஞ்சிருக்கணுமே... என்ன படக்குன்னு வாசம் வரலைன்னு சொல்லிட்டீங்க.

      சரி...நீங்க கோவில் கோவிலா சுத்தி கோபுரங்கள் படங்கள் எடுத்துப் போடறீங்க. கோவில் உலா முடிஞ்சதும் வெங்காயம் போட்ட மசால் வடை உங்களுக்கு செஞ்சு தந்துடலாம்.

      நீக்கு
  14. மசால் வடை சுவைத்தது.

    இதையே சிறிய பகோடாக்களாக போட்டு பொரித்து எடுத்து பச்சை வெங்காயம் பொரித்த காய்ந்த மிளகாய் சிறிது மாங்காய் பொரித்த பிரட் கலந்து போட்டு சாப்பிட இன்னொரு சுவவையாக இருக்கும் இதை இங்கு சின்னவடை என்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி.

      நீங்க சொல்றது, பகோடா மேல, வெங்காயம் போன்றவற்றைத் தூவிச் சாப்பிடுவது... நிச்சயம் நல்லாத்தான் இருக்கும். ஆனா கொஞ்சம் சவசவன்னு ஆயிடாதோ?

      நீக்கு
    2. மாதேவி சொல்றாப்போல் தான் வட மாநிலங்களில் பாலக், வெந்தயக்கீரை போட்ட பகோடாக்கள் (கிட்டத்தட்ட தூள் பஜ்ஜி) செய்துவிட்டு அதன் மேல் காரட், பச்சை வெங்காயம், மாங்காய்க் காலத்தில் மாங்காய், கொத்துமல்லி தூவிவிட்டுச் சாட் மசாலாவும் தூவிக் கொடுப்பார்கள். அமிர்தம்! இதை பஜியா என்றோ பகோடி என்றோ சொல்லுவார்கள். நானும் சில சமயங்களில் பஜியா போட்டால் அப்படிச் செய்வது உண்டு. கொண்டைக்கடலை, பட்டாணி, கடலைப்பருப்புச் சுண்டல் செய்தாலும் இவற்றை எல்லாம் போட்டுவிட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து ஒரு கலக்குக் கலக்கிவிட்டுச் சாப்பிட்டால் சுவை அள்ளும். மொச்சைச் சுண்டலில் சரியா வரலை. வெள்ளை/சிவப்புக்காராமணியில் பண்ணலாம்.

      நீக்கு
    3. அப்படியா கீசா மேடம்... அப்போ வட மாநிலங்கள் போகும்போது முயற்சி செஞ்சு பார்த்துடவேண்டியதுதான் (நல்ல எண்ணெயா உபயோகப்படுத்தும் கடையைத்தான் தேடணும்). பேல் பூரியின் விதவிதமான வடிவங்கள் போலிருக்கு. அதாவது பொரிக்குச் செய்வதை, பகோடாவுக்கும் செய்துடறாங்க போலிருக்கு.

      நீக்கு
    4. வீட்டிலேயே சுண்டல் பண்ணினால் அதிலே இப்படிப் பச்சைமிளகாய், வெங்காயம், கொத்துமல்லி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு எலுமிச்சம்பழம் பிழிந்து சாட் மசாலா இல்லைனால் கறுப்பு உப்புப் பொடி கால் டீஸ்பூன் போட்டுக் கலந்து சாப்பிட்டுப்பாருங்க! சாதாரணமாக நவராத்திரிக்குப் பண்ணும் சுண்டல்களிலேயே இப்படிச் செய்து சாப்பிட்டுக்கலாம். எனக்கு ப்ரெடில் கூடத் தக்காளிச் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னி தடவிட்டு வெண்ணெய் இன்னொரு பக்கம் தடவி நடுவில் பச்சையாக தக்காளி, வெங்காயம், குடைமிளகாய், வெள்ளரிக்காய் வட்டமாக நறுக்கி வைத்துச் சாப்பிடப் பிடிக்கும்.

      நீக்கு
  15. ஆஆஆஆ நான் நேற்று முதல்நாளுக்குப் பருப்புவடை சுட்டு துர்க்கை அம்மனுக்கு வச்சது, எப்படி நெ தமிழனுக்கு மணத்தது?:)...
    வடையைப் பார்க்க மொறுமொறென்று இருக்கு ஆனா சாப்பிடும்போது மொறுமொறுப்பு இருக்குமோ தெரியாதே....:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நவராத்திரி கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சுட்டீங்களா? அதைச் சாக்காக வைத்து இடுகைகள் எழுதுவீங்கன்னு நினைக்கறேன்.

      இந்த வடை எப்பவோ செய்து, எப்பவோ ஸ்ரீராமுக்கு அனுப்பினேன். பாருங்க..துரை செல்வராஜு சார் எழுதிய அட்டஹாசமான கதையை (அப்படீன்னு ஸ்ரீராம் சில நாட்கள் முன் எழுதியிருந்தார்), உடனே பிரசுரிக்கமுடியாதது வருத்தம்னு எழுதியிருக்கார். அப்படீன்னா எத்தனையோ வரிசை கட்டி நிக்குது போல.

      ஆமாம்.. இங்க உங்க தி.பதிவு வந்து ரொம்ப யுகங்கள் ஆச்சுதே.. எப்போ வரும்?

      நீக்கு
    2. ///ஆமாம்.. இங்க உங்க தி.பதிவு வந்து ரொம்ப யுகங்கள் ஆச்சுதே.. எப்போ வரும்?///
      அந்த ஜொந்தக் கதை ஜோகக் கதையை ஏன் கேய்க்கிறீங்க நெ தமிழன்:).....
      நீஈஈஈஈண்ட காலமாச்சே ஒன்று அனுப்புவமே என நினைச்சு ஒன்று அனுப்பினேன்:)... கொஞ்சக்காலம் முன்பு:)
      அதுக்கு ஶ்ரீராம் டேட் போட்டு வெளிவரும் எனப் பதில் போட்டார்:)... நான் தான் கொஞ்சம் மேலோட்டமாக சிலதை படிச்சு, என் மனதில ஒரு கருத்தை எடுத்திடுவேனெல்லோ:)... அப்பூடி டேட்டை மட்டும் பார்த்தேன் மாதம் கவனிக்காமல் நானாவே அது செப்டெம்பர் என முடிவெடுத்திட்டேன்:)....
      பார்க்கிறேன் பார்க்கிறேன் இன்னும் வெளிவரக் காணம்:) மெயில் கிளீனிங்கின்போது மெயிலையும் அழிச்சிட்டேன்:).. வலைபோட்டுத் தேடியும் கிடைக்கவில்லை மெயில்:)... இனி எப்போ வருமோ அப்போ வரட்டும் என விட்டிட்டேன்:)... இந்த அழகில் குறிப்பு எழுதி அனுப்ப எனக்கு எப்பூடி மனசு வரும் ஜொள்ளுங்கோ:)... ஹா ஹா ஹா:)... எனக்கு எதுவாயினும் சுடச்சுட வெளிவருவதிலதான் சந்தோசம் ஆனா இங்கு ஶ்ரீராமும் ஒண்ணும் பண்ண முடியாதே:)...

      நீக்கு
    3. வர்ற வாரம் வருதோ என்னவோ... ஆனா, சில சமயங்கள்ல தேதிக்கு ஷெட்யூல் செய்தும் மாற்றவேண்டியிருக்கலாம். நான்லாம் தேதிலாம் பார்க்கிறதே இல்லை. சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இல்லாமலிருந்தால் ஸ்ரீராமுக்குச் சொல்லிடுவேன். அந்தச் சமயத்தில் என் இடுகை வந்தால் பதில் சொல்வது கடினம் என்பதால்.

      //சுடச் சுட வெளிவருவதில்தான்// - அப்படீன்னா உங்க இடுகை ரொம்ப சூடா இருக்கும்போலிருக்கே... என்ன உணவாயிருக்கும்?

      நீக்கு
    4. //ஆஹா... நவராத்திரி கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சுட்டீங்களா? அதைச் சாக்காக வைத்து இடுகைகள் எழுதுவீங்கன்னு நினைக்கறேன்.//

      மாவிளக்குப் போடோணும்:)) நவராத்திரிக்கா.. இல்ல கந்த சஷ்டிக்கா என ஒரே திங்கிங்:))..

      ////சுடச் சுட வெளிவருவதில்தான்// - அப்படீன்னா///
      ஹையோ இது வேற சுடச்சுட:))

      https://media1.tenor.com/images/78a8cf1c1fb52d72916bfcdb5d226e1e/tenor.gif?itemid=5266895

      நீக்கு
    5. //மாவிளக்குப் போடோணும்:)) // - போடுங்க அதிரா.. கந்த சஷ்டியா இல்லை நவராத்திரியா என்று தீர்மானிக்கும் முன்பு, எப்போ 'தீயணைப்புத் துறை' ஆட்கள் ஃப்ரீயா இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க. ஒரேயடியா சொக்கப்பனை போல விளக்கு போட்டுட்டீங்கன்னா, உங்களுக்கு அவங்க உதவ வேண்டாமா?

      நீக்கு
  16. மாசல வடை எனில் கடலைப்பருப்பு வடைதான் என நினைச்சுக்கொண்டிருந்தேன்... இது புதுசா இருக்கே..

    ஆனா கடலைப்பருப்போடு உளுந்து சேர்ந்தால் மொறு மொறுப்பு குறைஞ்சிடுமே....
    ஆனாலும் நெல்லைத் தமிழன் பருப்புவடை மொறு மொறுப்பா செய்வதில் அதிராவை ஆரும் மிஞ்ச முடியாதாக்கும்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொறுமொறுப்பா செய்வதில் உங்களை மிஞ்ச முடியாது என்பது உண்மைதான் அதிரா. பெண்கள் ஜீன் (இது ஜீன்ஸ் இல்லை) லயே சமையல் திறமை இருக்குன்னு நினைக்கறேன். (அவங்க அவங்க வீட்டுக்குச் செய்வதில்... ஆனா நிறையபேருக்கு செய்யணும்னா... அதுக்கு ஆண்களுக்குள்ள திறமை வேணும். அது பெண்கள்ட கிடையாது. அதுனாலதான் நளபாகம்னு ஆண்களை பெருமைப்படுத்தறாங்க ஹா ஹா... கீசா மேடம் காதுல புகையுது..கோபத்துல)

      நீக்கு
    2. உண்மையில் நெல்லைத்தமிழன், பருப்பு வடை, வெறும் கடலைப்பருப்பை 2-3 மணித்தியாலங்கள் அல்லது அதுக்கு மேல் ஊறப்போட்டு, பின்பு அதில் ஒரு கைப்பிடி அளாவு பருப்பை எடுத்து வைத்துப்போட்டு, மிகுதியை உரலில் போட்டு இடிப்பது போல இடித்து எடுத்தால் சூப்பராக வருமாம், நான் இங்கு என் உரலில் சிலசமயம் இடிப்பதுண்டு.. எப்பவும் நீங்கள் அரைத்ததுபோல அரைக்கக்கூடாது, இருவல் நருவலாக என்ப்பினமே அப்படித்தான் அரைக்க வேணும்.. அதாவது கையிற்கு உருண்டை பிடிக்கும் அளவுக்கு .. இல்லை எனில் ஒரு கைப்பிடியை நன்கு பசையாக அரைச்சுப் போட்டு மிகுதியை அப்படியே இருவல் நருவல்:)).. அப்போதான் மொறுமொறுப்பாக இருக்கும் வடை...

      நீக்கு
    3. அதிரா அந்தக் கடலைப் பருப்புடன் பட்டாணிப் பருப்பும் சேர்த்துக் கொண்டால் தண்ணீர் இல்லாமல் அரைத்தால் கர கரவென்று...செமையா வரும் அதிரா...நன்றாக ஊறியிருந்தால் போதும் தண்ணீய்ர் சேர்த்து அரைக்கக் கூடாதுதான்...

      கீதா

      நீக்கு
    4. கரெக்டுதான் அதிரா நீங்கள் சொல்லியிருப்பது. ஒரு தடவை, பருப்புவகைகளை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, பிறகு ஊறப்போட்டேன். ஊறின அரிசியை நன்கு அரைத்துவிட்டு, அதோட ஊறின பருப்புகளை அப்படியே மிக்ஸ் செய்துகொண்டேன். அதுவும் நல்லாவே வந்தது.

      நீக்கு
  17. ///மனைவிகிட்ட ஓகேவா என்று கேட்டேன். அவள் அனுமதி கிடைத்ததும்///
    ஹா ஹா ஹா இது இது... இதுதான் எங்கள் வீட்டு நடைமுறையும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா.. இன்னும் வெள்ளைமாளிகையை விட்டு வரலியா?

      நீங்க, உங்க மனசுல, இந்த 'நெல்லைத் தமிழன்' எப்படி இவ்வளவு நல்லவராக, மனைவியின் அனுமதியைக் கேட்டுத்தான் எல்லாம் செய்பவராக இருக்கிறார்னு நினைப்பீங்க..அப்படி நினைச்சுடாதீங்க.. இந்த அனுமதிங்கறது, அவ ஓகே சொன்னதும், 'எனக்கு பச்சை மிளகாயும், வெங்காயமும் எடுத்துத் தரயா'.... 'இதோ வச்சுட்டேன்'. 'அந்தக் கத்தி எங்க வச்ச?'.. 'அதுதான் அவன்-Oven பக்கத்துல இருக்கே'.. 'சரி அதை எடுத்துத் தா. அப்படியே அந்த கட்டிங் பேடையும் எடுத்துத்தா.. அது சரி.. இந்த எண்ணெய் எங்க?'..."அதான் அந்த கார்னர்ல எப்போதும் வைக்கும் இடத்தில்தானே இருக்கு'... 'அடடா.. கருவேப்பிலை எடுக்க விட்டுவிட்டேன். கொஞ்சம் எடுத்துத் தரயா'.. என்று சில நாட்கள் அவளையும் சமையல் செய்யும்போது கூப்பிடுவேன்.. அதுக்கு அவள், 'பேசாம நானே பண்ணிடலாம்..இன்னும் ஈஸியா இருக்கும்' என்று அலுத்துக்குவா.

      நீக்கு
    2. ///நீங்க, உங்க மனசுல, இந்த 'நெல்லைத் தமிழன்' எப்படி இவ்வளவு நல்லவராக, மனைவியின் அனுமதியைக் கேட்டுத்தான் எல்லாம் செய்பவராக இருக்கிறார்னு நினைப்பீங்க..அப்படி நினைச்சுடாதீங்க///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் • கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    3. /கர்ர்ர்ர்ர்// - அதானே பார்த்தேன்... அடுத்தவங்களைப் பற்றி, அதுவும் நெல்லைத் தமிழனைப் பற்றி நல்லதா நீங்க நினைச்சுட்டாலும்......... (ஏய்... இப்ப கோபத்தைக் காண்பிக்க வேண்டாம். கொஞ்சம் வெயிட் ப்ளீஸ். அடுத்த வாரம் இல்லை அதற்கடுத்த வாரம் திங்கக்கிழமை வாய்ப்பு வருது. - எனக்குச் சொல்லிக்கிட்டேன்.. ஹா ஹா)

      நீக்கு
  18. பருப்பு வடைக்கு எவ்வளவு மிளகாய் சேர்த்தாலும் உறைக்காது... இதில நீங்க காஶ்மீர் போட்டால் உறைப்பே இருக்காதே...

    நான் நேற்று வெறும் செத்தல் 6,7 சேர்த்தும் உறைக்கவில்லை.. இனிச்சுதே:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றது சரிதான் அதிரா.. 7 Degree C இருக்கிற உங்க ஊர்ல, நீங்க 10-15 சேர்த்தாலும் உறைக்குமான்னு சந்தேகம்தான். பச்சை மிளகாய் கட் பண்ணிப் போடவேண்டியதுதானே...

      நான் நிறத்துக்காக காஷ்மீர் மிளகாய் போட்டேன்... வற்றல் மிளகாய்தான் இதுக்கு சரியா வரும்.

      நீக்கு
    2. உளுந்து வடை எனில் கொஞ்சம் உப்பு கொஞ்சம் மிளகாய் போதும் ஆனா பருப்பு வடைக்கு கொஞ்சம் கூட உப்பும் கூடிய மிளகாயும் வேணும்... பபபபச்சை மொழகாய்:)... முடிஞ்ஞ்சு போச்சூஊஉ:)... திர்க்கை அம்மாளுக்கு உறைச்சாலும் என வாங்கவில்லை நான்:)

      நீக்கு
    3. /கூட உப்பும் கூடிய மிளகாயும் வேணும்...// - ஆமாம். இன்று நான் செய்தபோதுகூட அவதானித்தேன். கொஞ்சம் அதிகமாகவே உப்பு தேவையா இருக்கு என்பதை.

      நீக்கு
  19. ஆஆஆ வெங்காயம் சேர்த்திருக்கிறீங்களே:)... எப்படி அனுமதி கிடைச்சது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்ன என்ன... நான் காய்கறி வாங்கப்போகும்போது, வெங்காயம் (சிறியது பெரியது) வாங்கி வந்துவிடுவேனே.. அதை பின்ன எப்படிச் செலவழிப்பது?

      காய்கறி பெரும்பாலும் நாந்தான் வாங்குவேன். (கல்யாணம் ஆனதுலேர்ந்து). இப்போதான் பெரும்பாலும் மெனு சொல்வதில்லை. அங்கல்லாம் நான் சொல்ற மெனுதான் (அதாவது வார இறுதியில் காய் வாங்கும்போதே, இந்தக் காய் இதுக்காக வாங்கறேன் என்றெல்லாம் சொல்லிடுவேன்). அவ்வளவு ஜனநாயகம் எங்க வீட்டுல நான் கடைபிடித்தேன். அப்புறம் பசங்க வளர ஆரம்பிச்சதும், அவங்களுக்குன்னு சிலது பண்ணுவா (பாவ் பாஜி, வித வித சைட் டிஷ் என்றெல்லாம்). நான் அது பக்கத்துல போகமாட்டேன்...

      இப்போதான் சில வருஷமா நான் மாறிட்டேன் (என்று நான் நினைத்துக்கொள்கிறேன் ஹா ஹா)

      நீக்கு
    2. பாருங்கோ என்னை ஆரம்பம் அஞ்சு மிரட்டிப்போட்டா:)... வெங்காயம் சேர்க்கும் குறிப்பு போட்டீங்கன்னா நெல்லைத்தமிழன் விரும்ப மாட்டார் எண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நில்லுங்கோ அஞ்சுவைத் தேடிப்போறேன் இப்போ:)

      நீக்கு
    3. //நெல்லைத்தமிழன் விரும்ப மாட்டார் எண்டு// - அதுக்காக சர்க்கரைப்புக்கை என்று ஒரு இடுகை அனுப்பி, அதுக்குத் தொட்டுக்க சின்னவெங்காயப் பச்சிடி என்றெல்லாம் எழுதி அனுப்பிடாதீங்க. இல்லை.. மோர்க்குழம்பு என்று சொல்லி அதில் வெங்காயத்தைப் போட்டுடாதீங்க.. ஹா ஹா

      நீக்கு
  20. ///உண்மையைச் சொன்னா, அந்த மசால்வடை மாதிரி நான் செய்தது அவ்வளவு ருசியாக இல்லை. ///
    ஹா ஹா ஹா பருப்பு இப்படி சேர்த்ததால இருக்குமாக்கும்:)...

    இதுவரை வடைக்கு நாங்க துவரம்பருப்பு சேர்த்ததில்லை ஆனா நான் கெளபியில், கிடைக்கும் சில பருப்புக்களில் தனியாக போட்டு வடை சுடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வடைகள்லாம் பசங்க இல்லை கணவர் சாப்பிடுவாங்களா? இல்லை நீங்கதான் ஒண்ணொண்ணாச் சாப்பிட்டுத் தீர்க்கணுமா? அதைப் பற்றி நீங்க எழுதினமாதிரி தெரியலையே

      நீக்கு
    2. அது தெரியாமலே இருக்கட்டும்:) ஹா ஹா ஹா

      நீக்கு
  21. ///
    நான் உபயோகப்படுத்திய கிண்ணம், அஞ்சரைப் பெட்டியில் வைக்கும் கிண்ணம்///
    என்னிடம் ரெண்டு சைஸ்ல இருக்கே அஞ்சறைப்பெட்டிகள்:) இப்போ என்ன பண்ணுவேன்:)...
    அது அஞ்சறை இப்போ ஏழறைப் பெட்டியாகி எல்லோ கிடைக்குது...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழறைப் பெட்டின்னாலும் பேர் என்னவோ அஞ்சரைப் பெட்டிதான். காலம் போகும் வேகத்தைப் பார்த்தால் பத்தரைப் பெட்டி வைத்தாலும் உபயோகிக்கும் மசாலாக்களை வைக்க முடியாதுன்னு தோணுது.

      நீக்கு
  22. கீதா வாங்கோ வாங்கோ... கைக்கு அதிகம் வேலை குடுக்காமல் அளவா ரைப் பண்ணுங்கோ...

    நானும் சில நாட்கள் எங்கும் போகவில்லை... இன்று எப்படியும் புளொக் பக்கம் போகோணும் என போஸ் பண்ணிக் களம் இறக்கியிருக்கிறேன்.... என்னைத்தேன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தோன்றியது..திங்கள் கிழமைனா நீங்க பிஸியாச்சே.. வருவது சந்தேகம்தான்னு நினைத்தேன். அதிகாலையிலேயே வந்துட்டீங்க. நன்றி.

      கீதா ரங்கனிடம் இனிமே இரண்டு இரண்டு லைனா பின்னூட்டம் போடச் சொல்லப்போறேன், முழுவதும் சரியாகும்வரை.

      நீக்கு
    2. நானும் திங்கள் டு திங்கள் பிஸிதான் :)

      நீக்கு
    3. அது நெல்லைத்தமிழன் :) வடை வாசனைக்கு எலி வந்திருக்கும் அந்த எலியை பிடிக்க பூனை வந்திருக்கும் :))))

      நீக்கு
    4. வாங்க ஏஞ்சலின். திங்கள் டு திங்கள் பிஸியா? நான் நினைச்சேன் வார நாட்கள் முழுதுமே பிஸியா இருப்பீங்கன்னு. ஹா ஹா.

      நீக்கு
    5. நான் நினைச்சேன் கிழமை முழுக்க அஞ்சு பிDஇ என ஹா ஹா ஹா

      நீக்கு
    6. //நெல்லைத்தமிழன்30 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:39
      எனக்கும் தோன்றியது..திங்கள் கிழமைனா நீங்க பிஸியாச்சே.. வருவது சந்தேகம்தான்னு நினைத்தேன். அதிகாலையிலேயே வந்துட்டீங்க. நன்றி.//

      நான் என்ன உங்களை மாதிரி வடநாட்டுப் பயணம் போனதும் தென்னாட்டு புளொக்கேர்ஸ் ஐ மறப்பதற்கு:)) நாம ஆரு.. அடாது மழை பெய்தாலும் விடாது அனைத்துப் போஸ்ட்டுகளுக்கும்:)) கொமெண்ட் போடும் பேர்வழியாக்கும்:)).. ஹையோ அதாரது தொம் தொம் எனக் கலைப்பது:)).. நெல்லைத்தமிழன் படிச்சதும் கிழிச்சு கங்கையில் போட்டிடுங்கோ.. கங்கை ஏற்கனவே புனிதம்.. இப்போ என் கை எழுத்துப் பட்டு இன்னும் புனிதமாகட்டும்:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

      நீக்கு
    7. ஆமாம் அதிரா, நெல்லை, ஏஞ்சல் கைக்கு அளவா தான் ரைப்பிங்க் வேலை!! அதான் நேற்று கும்மி அடிக்க வரலை...கேப் விட்டு விட்டுத்தான் கமென்ட்...நேற்று அப்படியும் இப்படியுமாக ஒரு 4 ப்ளாக் போய் வந்தேன்...

      மிக்க மிக்க நன்றி...எல்லோருக்க்கும். இங்கு நெல்லையின் கருத்து மற்றும் ஒரு டிப்ஸ் கொடுக்க வந்தால் கமென்ட் பார்த்து கை துறு துறு அதான் ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  23. மசாலா சேர்க்காமல் (சோம்பு போன்றவை) எல்லா பருப்புகளையும் சேர்த்து வடை தட்டிவிட்டு அதற்கு மசால் வடை என்று பெயர்  வைத்து விட்டீர்கள், 
    இந்த வடையை நாங்கள் தவளை வடை என்று தான் சொல்வோம். அதற்காக வடையில் தவளை இல்லாமல் தவளை வடை என்று எப்படி பெயர் வரும் என்று கேட்கக்கூடாது. 
    இந்த மசால் வடைக்கு எலி வந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜேகே சார்... இது பருப்பு வடைதான். சோம்பு போன்றவை சேர்க்காமலேயே முன்காலத்தில் இதனை மசால்வடை என்று சொல்லி, அப்படியே வந்துடுத்து.

      நீங்க சொல்வது தேங்காய்லாம் போட்ட தவலை வடை இல்லையோ? (தவலடை). டிஸ்கவரி சேனல் பார்த்துக்கிட்டே தட்டச்சுவதால் 'தவளை' என்று எழுதலாமோ?

      நான் செய்த மசால்வடைக்கு நான் தான் எலி..ஹா ஹா. இன்றைக்கு சின்ன வெங்காயம், நிறைய பச்சை மிளகாய் போட்டுச் செய்த குனுக்குவிற்கும் நான் தான் எலி.

      நீக்கு
    2. தவளை வடையும் இல்லை, ஆமை வடையும் இல்லை ஜேகே அண்ணா. அது தவலை வடை/அடை அல்லது நெல்லை சொல்வது போல் தவலடை! அதிலே வெங்காயம் எல்லாம் போட மாட்டாங்க. அதோடு அரிசியும் பருப்புக்களோடு சேர்த்து ஊறணும். உளுந்தைத் தனியா ஊற வைச்சுக் கொடகொடனு அரைச்சுச் சேர்க்கணும். இன்னொண்ணு தோசைக்கல்லில் அல்லது உருளியில் தட்டும் தவலை அடை. அதுக்கு அரிசி பருப்புக்களை உப்புமாவுக்கு உடைக்கிறாப்போல் உடைச்சுக் கிளறிச் செய்யணும். இதில் எல்லாம் தேங்காய் தான் தூக்கலாக இருக்கணும்.

      நீக்கு
    3. https://cookingforyoungsters.blogspot.com/2018/08/thavalai-vadai.html

      https://cookingforyoungsters.blogspot.com/2018/02/keerai-vadai-spinach-or-greens.html

      நீக்கு
    4. நானும் ஜேகே சாருக்கு, கீசா மேடம் இதைப்பற்றி இடுகை போட்டிருக்காங்கன்னு சொல்ல நினைத்தேன். விட்டுப்போய்விட்டது. சாப்பிடவாங்கலயும் எழுதியிருக்கீங்க. (நானும் எபில தவலடை எழுதியிருக்கேன் இஃகி இஃகி)

      நீக்கு
  24. ஆஆவ் !!! மசால் வடையில் துவரம்பருப்பும் உளுந்து பருப்பும் சேர்த்து செய்வது  இப்போதான் கேள்விப்படறேன் .இதை வேற மாதிரி ஹெல்த்தி ஆப்ஷனில் செய்ய ஐடியா வந்திருச்சு எனக்கு :)
    எங்க வீட்டுக்கு அரிசி அளக்கும் கப்பில் half போதுமானது :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்... இந்த வடைல, நீங்க எதை வேணும்னாலும் சேர்த்துக்கலாம். பயறு, வரகரிசி, கார்ன் ஃப்ளவர் அல்லது சோளம் என்று... எதைப்போட்டுப் பொரிச்சாலும் நல்லாத்தான் இருக்கும். பாதி அளவு போதுமானது.

      நீக்கு
    2. //எதைப்போட்டுப் பொரிச்சாலும் நல்லாத்தான் இருக்கும்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நல்லாயிருக்கும் ஆனா அதுக்குப் பேர் வடை இல்லை.. நானும் நேற்று ஒரு டிஸ்கி செய்தேனே:)).. அதாவது வடை சுட்டி முடிக்கும்போது, மீதி 2 வடை அளவு மாவில் கொஞ்சம் தண்ணித்தன்மையாக இருந்துது.. அப்போ என்னிடம் தோசை மா இருந்தது.. ரவை ஓசை:)) அதில் 3 கரண்டி போட்டு மிக்ஸ் பண்ணி அடிச்சு விட்டேன் அது இன்னும் யூப்பர் ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. ஆமாம் அதிரா. கொஞ்சம் லோ பட்ஜெட் அடை மாதிரி நீங்க செய்தது இருந்திருக்கும். நான் எப்போவும் மாவு தோசை செய்யும்போது (கோதுமை, மைதா போன்று) அதனுடன் தோசை மாவு ஒரு கரண்டி சேர்த்துக்குவேன். கொஞ்சம் க்ரிஸ்ப்பாவும் சிவந்தும் வர, ரவையும் சேர்த்துக்குவேன்.

      நீக்கு
  25. ஆஆவ்வ் கீதா !! இப்போ உடல் நலமா ..டேக் கேர் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் எஸ் அண்ட் நன்றி....சத்தமா சொல்லிட்டீங்களே...அப்புறம் பூஸார் உஷார் ஆகிடுவாரே!!!!!!!! அவர் வாலைப் பிடிக்க கை வேணுமே!! ஹா ஹா ஹ

      கீதா

      நீக்கு
  26. //நெல்லை நான் செய்வது இப்படி... //

    இப்படி மாங்கு மாங்குனு செல்லில் தட்டச்சினால் கை ஏன் தூக்க முடியாமல் போகாதாம்? ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைல்ல, அல்லது ஐபேட்ல தட்டச்சுவது எனக்கு ரொம்ப கடினம். நான் அதிகமாக மொபைலை இதற்கு உபயோகிப்பதில்லை. மொபைல் அதிகமா உபயோகித்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாகும்.

      இன்னைக்கு டிரையல் பார்ப்பதற்காக கீதா ரங்கன் இப்படி தட்டச்சியிருப்பார். முழுவதும் சரியான பிறகுதான் முன்போன்ற வேகத்தில் பின்னூட்டங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  27. படத்தில் பார்த்தால் நமக்குத் தெரிந்த பச்சை மிளகாய்!..
    அதுக்குப் போய் என்ன காஷ்மீரி மிளகாய்ன்னு பெத்த பேராம்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... ஒரு படத்துல அழகா கூட்டு நடனம் ஆடிக்கிட்டிருக்கே சிவப்பா. அவைகளுக்குத்தான் காஷ்மீரி மிளகாய்னு பேரு. அதாவது அவைகளைக் கண்டால், எல்லோருக்கும் பயம், மரியாதை... ஆனா காரமில்லை, சாரமில்லை..அழகு மட்டும்தான். ஏதோ பாலிடிக்ஸ் பேசறேன்னு நினைச்சுடாதீங்க. நான் காஷ்மீரி மிளகாயைச் சொன்னேன்.

      நீக்கு
  28. மூணே வித பருப்புகள்; வெங்காயம்; உப்பு; மிளகாய்; எண்ணை --
    இவ்வளவு தான்!

    இதுக்குப் போய் எம்மாம் பெரிய படம்லாம் தினுசு தினுசா போட்டு ஷோ காட்டுறங்கய்யா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரண,ஆண், பெண் இருவரும் இணைந்து திருமணம், சந்ததி உண்டாக்குவது என்ற, எல்லா உயிரினங்களிடமும் உள்ள விஷயத்துக்கு பத்திரிகைகள், நாவலாசிரியர்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், கவிஞர்கள் 80% நேரம், column ஒதுக்கும்போது, மூன்று முக்கியத் தேவையானவற்றில் முதலாவதாக உள்ள 'உணவு'க்கு ஷோ காட்டுவது தப்பா ஜீவி சார்?

      நீக்கு
  29. கொஞ்சம் எண்ணைலே காஞ்சு போச்சுனா, அவ்வளவு தான்; அந்த கசப்பு எங்கேயிருந்து தான் வருமோ தெரியாது!

    காந்திப் போகாமா ரொம்பவும் கரகரப்பு இல்லாம லேசா வெந்தும் வேகாமா பிண்டா பசக்ன்னு பிளந்து வாய்க்கு ருசியா வெதுவெதுப்பா,
    மசால் வடைலே இதெல்லாம் சாத்தியமில்லையா, வேண்டாம்.. ஆளை விடுங்கோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க எந்த வடையைச் சொல்றீங்கன்னே தெரியலையே.. மெதுவடையா இல்லை மைசூர் போண்டாவா?

      மசால் வடைனாலே சுரீர்னு, கரகரப்பாத்தானே இருக்கும். அதுல ஒரே ஒரு பிரச்சனைதான். கரகரன்னு நாம சாப்பிட்டுக்கிட்டிருக்கும்போது வீட்ல யாரும் நம்மகிட்ட ஏதேனும் சொன்னால் காதில் விழாது. அப்புறம் அவங்க வாயில் நாம விழும்படி ஆகிவிடும். மத்தபடி மசால்வடைக்குத்தான் எனது வாக்கு.

      நீக்கு
  30. ஒருதிருமணத்துக்கு ஆலப்பி சென்றிருந்தபோதுரயில் வண்டியில் விற்று வந்த மசால் வடை மாதிரி சாப்பிட்டது இல்லை பெங்களூரில்வீரப்பிள்ளை தெருவில் கோமுட்டி செட்டிகள்செய்து விற்கும் மசால் வடைகளும்பிரசித்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி.எம்.பி சார்... இரயில் வண்டில எப்படி அந்த தரமும் வாசனையும் வரும்? ஒருவேளை அப்போ உங்களுக்கு பசி இருந்திருக்குமோ?

      பெங்களூரில் வீரப்பிள்ளைத் தெரு எங்க என்று உங்கள்ட கேட்டுக்கறேன். அங்கு வரும்போது, பக்கத்திலிருந்தால் போய் வாங்கி சாப்பிட்டுப் பார்க்கலாம் இல்லையா?

      நீக்கு
    2. அந்த ரயில் பயணத்தில் சாப்பிட்டது/கேரளா போகும் வண்ட்களில் பருப்பு வடா என்று விறாபார்கள் நீங்கள் பெங்களூரு வருவதெப்போ வடை வாங்கி சாப்பிடுவதெப்போ

      நீக்கு
    3. ஜி.எம்.பி. சார்... நான் பெங்களூர்க்காரன்'தானே.... வந்துக்கிட்டே இருக்கேன்.

      நீக்கு
  31. மசால் வடை பிரமாதம்! இரண்டு பேருக்கு இருபது வடைகள் கொஞ்சம் அதிகம்தான். வடையை சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும். என்னைப்போன்ற வடை விரும்பிகள் வேண்டுமானால் ஆறிய வடையை சாப்பிடுவார்கள். தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ், எனக்கு சில்லி சாஸ் பின்னர் சூடாக காபி அல்லது டீ, ஆஹா! 
    நான் உளுந்து சேர்க்க மாட்டேன். மற்ற பருப்புகளை கரகரப்பாக அரைத்து விட்டு ஒரு கைப்பிடி ஊறிய கடலைப்  பருப்பு அல்லது பொட்டுக் கடலை சேர்த்து தட்டுவேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்...

      //இருபது அதிகம்தான்// - என் மனைவி எனக்குச் சொல்லுவா. சும்மா ஆளுக்கு ரெண்டு பண்ணினாலே போதும். நிறைய பண்ணினால், பண்ணினதுக்காக தேவையில்லாமல் காலி பண்ணணும் என்பாள்.

      ஆறின வடை - எனக்கு எப்போதுமே நெஞ்சுக்கரிக்கும். வடைக்கு தக்காளி சாஸா? இது அநியாயமா இருக்கே (சில நாட்கள் முன் என் பெண் உள்ள பனீர்லாம் போட்டு உருண்டையா கட்லெட் மாதிரி, ஆனா அப்படி இல்லை, பண்ணியிருந்தா. அதுக்கு கெச்சப் அவ்வளவு நல்லா இருந்துச்சு.ஆனா ஸ்டெப்ஸ் போட்டோக்கள் எடுக்கலை. அதுனால தி.பதிவுக்கு அனுப்பலை)

      கருத்துக்கு மிக்க நன்றி.... விரைவில் இணைய கலாய்க்கும் கும்பலோட நீங்களும் ஐக்கியமாகிடணும். அது உங்கள் கவனத்தைத் திசைதிருப்பும்.

      நீக்கு
  32. வடை என்பது வட்டமாக இருக்கவேண்டும் என்பது ஞாபகத்தில் இல்லையா! சரி போகட்டும். சைஸ்? குனுக்கு மாதிரியல்லவா காட்சி தருகிறது!
    மற்றபடி மசால்வடைக்குத்தான் நம்ப வாக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆண்டவா... ஏகாந்தன் சார்... சும்மா ஓரங்கள்ல புதுவித டிசைன்னு நினைக்கக்கூடாதோ? வட்டமாத்தான் இருக்கணும்னு சாஸ்திரமா?

      பாருங்க..இதான் சாக்குன்னு கீதா சாம்பசிவம் மேடமும் உங்களோட இந்த விஷயத்துல சேர்ந்துக்கறாங்க.

      நீக்கு
    2. //வடை என்பது வட்டமாக இருக்கவேண்டும் என்பது ஞாபகத்தில் இல்லையா!// எனக்கும் இது தோன்றியது. இருந்தாலும் இவ்வளவு ஆர்வமாக சமையலில் ஈடுபடும் ஒரு ஆண் மகனை டிஸ்கரேஜ் பண்ண வேண்டாம் என்று விட்டு விட்டேன்.   

      நீக்கு
    3. ஆம். ஆர்வமாக சமையற்கட்டுக்குள்ளேயே சுற்றிவருபவர்போல்தான் தோன்றுகிறது!

      நீக்கு
    4. ஹையோ ஏ அண்ணன்.. எப்பவும் ரிமூட்டுடன் ரிவிக்கு முன்னால இருப்பதனால உங்களுக்கு இது தெரிய ஞாயமில்லை:)) காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ சொல்கிறேன்:)).. அதூஊஊஊஊஊஉ அண்ணி எப்பவும் சமையல்கட்டிலதான் இருப்பாவாம்ம் ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்ஸூஊஊஊஉ:))

      நீக்கு
    5. //வடை என்பது வட்டமாக இருக்கவேண்டும்// - நேற்றிலிருந்து இதுபோல எங்கயோ கேட்டிருக்கேனே என்று யோசித்தேன். கவுண்டமணி செந்தில் நடித்த அர்ஜுன் படத்துல (ஷங்கர்), செந்தில் சொல்லும் 'அப்பம் என்ன வட்டமாத்தான் இருக்கணும்னு சட்டமா... இது கம்ப்யூட்டர் டிசைன்' என்று சொல்வது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    6. //சமையற்கட்டுக்குள்ளேயே சுற்றிவருபவர்போல்தான்// - ஏகாந்தன் சார்... தொலைக்காட்சி நான் பெரும்பாலும் பார்ப்பதில்லை. இரண்டு மூன்று நாளைக்கு ஒரு தடவையாவது ஏதேனும் பண்ண நினைப்பேன். ஒன்றும் இல்லைனாலும் காய்கறியாவது கட் பண்ணித் தருவேன். ஹா ஹா.

      நீக்கு
  33. நெல்லை நேற்று ஒரு முக்கியமான கருத்து/டிப்ஸ் இங்க சொல்ல விட்டுப் போச்சு. அப்புறம் வர முடியவும் இல்லை.

    இந்த வடைக்கு எங்க ஊர்ப் பக்கத்துல நாகர்கோவில், கேரளத்துல, திருனெல்வேலியிலும் எல்லாம் வடைப்பருப்பு/பட்டாணிப்பருப்பு கிடைக்கும். அதைyum யூஸ் செய்வது எங்கள் வீட்டில். ரொம்ப கிரிஸ்பாக டேஸ்டியா இருக்கும். அடைக்கும் கூடச் சேர்ப்பதுண்டு. சென்னைக்கு வந்த புதிதில் இது கிடைத்ததில்லை. அப்புறம் தென்னகத்தவர்கள் போட்டிருந்த கடைகளில் கிடைத்தது. அதன் பின் அதையும் வாங்கிடுவேன்.

    இப்ப இங்கு பங்களூரில் அது நான் பார்த்த கடைகளில் இல்லை..முடிந்தால் அடுத்த முறை அதையும் யூஸ் செய்து செய்ஞ்சு பாருங்க..அதுவும் நல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா கீதா ரங்கன்? அடுத்த தடவை செய்யும்போது (அது எப்போன்னு எனக்கே தெரியாது. நேற்று குனுக்கு செய்தேன்..ரொம்ப நல்லா வந்தது. சின்ன வெங்காயம் சேர்த்துப் போடும் அளவு பணக்காரனாயிட்டேன்) வடைப்பருப்பு வாங்கி சேர்த்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  34. மசால் வடைக்கு துவரம்பருப்பு சேர்ப்பாங்களா?! புதுசா இருக்கே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி... உங்க கேள்வியைப் படிச்சதும் எனக்கும் குழப்பம் வந்துடுச்சு

      நீக்கு
  35. சுவையான குறிப்பு தான். எப்போதாவது செய்து பார்க்க வேண்டும். நான் செய்தால் சொன்ன அளவில் பாதி அளவு போட்டுச் செய்ய வேண்டும்! அதுவே அதிகமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஒரு ஆளுக்கு இத்தனை வடை செய்து என்ன செய்ய! ஹாஹா....

    தொடரட்டும் சுவையான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!