சனி, 7 செப்டம்பர், 2019

கனவுகளுக்கு வரம்பு கிடையாது...


1)  "...............முடிவில் மூவர் தேர்வு செய்யப்பட்டனர்.  அதில் மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த தான்யா தஸ்னிம் 15, என்ற பத்தாம் வகுப்பு மாணவியும் ஒருவர். இவரது தந்தை ஜாபர் உசேன் டீக்கடை வைத்துள்ளார்.  தாயார் சிக்கந்தர் ஆசிரியை........"  




2)  தனக்கு உடல்நிலை முடியாத சூழலிலும் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களவேலைகளைச் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஷ்யாம்.  (நன்றி ஏகாந்தன் ஸார்)




3)  "என்னைப் பொறுத்தவரை எனக்கு நான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம்தான் கோயில் இங்கு படிக்கும் பிள்ளைகள்தான் தெய்வம்.நல்லது கெட்டதை கடைசி வரை படித்து அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் குழந்தைகள் மனதை சரி செய்துவிட்டால் போதும் வருங்கால சமூகத்தையே சரி செய்வதற்கு சமமானதாகும் அது..."   இங்கு படிக்கும் பிள்ளைகளை தனது பி்ள்ளையாக நினைக்கும் பள்ளி தலைமையாசிரியை கோமளீஸ்வரி.




4)  "நல்ல மதிப்பெண் எடுத்த, திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவி, 'நீட்' தேர்வுக்காக, 'கோச்சிங் சென்டர்' கேட்டார். சென்னைக்கு அழைத்து வந்து, எட்டு மாதம் தங்கிப் படிக்க வைத்தோம்.


தற்போது, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரியில் படிக்க்கிறார். கனவுகளுக்கு வரம்பு கிடையாது. பணம் இல்லை என்பதற்காக, படிக்க முடியாமல் யாரும் இருக்கக் கூடாது...."

சென்னையில், ஏழைப் பிள்ளைகள் படிக்க உதவி செய்து வரும், சமூக சேவகி, மேரி அமுதா.



5)  மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவில், முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.



6)  சாலையில் கேட்பாரற்று கிடந்தது   இதைப் பார்த்த, பள்ளியின், 4ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவியரான, மதுஸ்ரீ, கனிஷ்கா ஆகியோர், பணத்தை எடுத்து, உடனடியாக, அருகில் இருந்த, ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். அவர், பள்ளிக்கு வந்ததும், தலைமை ஆசிரியர், மெட்டில்டா ஜெயராணியிடம் ஒப்படைத்தார்.



7)  

40 கருத்துகள்:

  1. கோமளீஸ்வரி ஆசிரியர் உள்பட அனைவரையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்,,,   வாங்க..

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம், துரை செல்வராஜு, தேவகோட்டைஜி அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      வீட்டில் வர்ணம் அடிக்கும் வேலை நடக்கிறது.
      தொடர்ந்து கணினியில் இருக்க முடியவில்லை.
      சனிக்கிழமையின் நல்லவர்களைப் படித்த் விட்டு வருகிறேன்.

      நீக்கு
  3. தான்யா தஸ்லிம் கூறுவது முற்றிலும் உண்மை...

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியை கோமளீஸ்வரி பாராட்டுக்குரியவர்... வாழ்க அவரது தொண்டுள்ளம்..

    பதிலளிநீக்கு
  5. மதுஸ்ரீ, கனிஷ்கா போன்றோரால் நாடு திருந்த வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. குழந்தைகள் கனிஷ்கா,மது ஸ்ரீயின் கள்ளம் இல்லாத
    முகத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது
    எத்தனை நல்ல குழந்தைகள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அன்ன தானம் செய்த முஸ்லீம் அன்பர்களுக்கு
    அவர்களது நற்குணத்திற்கு மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. ஏழை மாணவமணிகளை ஆதரித்து வழிகாட்டும் மேரி அமுதாவுக்கும் நம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. "என்னைப் பொறுத்தவரை எனக்கு நான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம்தான் கோயில் இங்கு படிக்கும் பிள்ளைகள்தான் தெய்வம்///
    இது போன்ற உயர்ந்த ஆசிரியத் தெய்வத்தை எங்கு பார்க்க முடியும்.
    அருமை ஆசிரியை கோமளீஸ்வரிக்கும் நம் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  11. விநாயக சதுர்த்தி விழா என்ற பேரில் சமய வழிமுறைகளுக்கு எதிரான செயல்களைக் கைவிட வேண்டும்...

    விசர்ஜனம் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் செய்வது கொடுமை...

    இதைப் பற்றி சகோதரி அனுபிரேம் அவர்கள் கூட தனது தளத்தில் எழுதியிருக்கின்றார்..

    மதுரை தஞ்சாவூர் முதலான இடங்களில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் விடலைகளின் ஆட்டம் கண்டிக்கத்தக்கது...

    விநாயகரின் மாண்பைப் கெடுக்காமல் இருப்பதே இந்த அமைப்புகளுக்கு சிறப்பு..

    விநாயகரைப் போல தந்தை தாய்க்கு மதிப்பளிக்கின்ற,
    ஊருக்கு உழைக்கின்ற நல்லவர்களை இந்நாளில் சிறப்பிக்கலாம்...

    ஆசிரியை கோமளீஸ்வரி, மதுஸ்ரீ, கனிஷ்கா போன்றோர்களைக் கவனத்தில் கொண்டு சிறப்பிக்கலாம்..

    விநாயகப்பெருமான் மிகவும் மகிழ்ச்சியடைவார்...

    பதிலளிநீக்கு
  12. அக்., 1ல் துவங்கும் இப்பயணம் 10 நாள் கொண்டது. முதல் 3 நாட்கள் 'நாசா' விண்வெளி மையத்தில் இருப்பேன். அப்போது அங்குள்ள நடைமுறைகளை விளக்குவர். விண்வெளி தொடர்பான உபகரணங்களை நேரில் பார்வையிட முடியும். வான்இயற்பியல் படித்து விண்வெளியில் பறப்பதே என் கனவு.அது நனவாக இப்பயணம் உதவி புரியும். இளம் வயதிலேயே என் தேடலை விரிவுபடுத்தினேன். மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ளிவிட்டு படிப்பிலும், உலக அறிவை பெறுவதிலும் கவனம் செலுத்தினால் எட்டா உயரத்தையும் எட்டிப்பிடிக்கலாம், என்றார்.///////////
    மிகப் பெருமையாக இருக்கிறது.

    இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்கும் நம் நாட்டை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.
    இந்தக் குழந்தையின் கனவு நனவாகட்டும்.

    பதிலளிநீக்கு
  13. //மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த தான்யா தஸ்னிம் 15, என்ற பத்தாம் வகுப்பு மாணவியும் ஒருவர். இவரது தந்தை ஜாபர் உசேன் டீக்கடை வைத்துள்ளார்.//

    அழகர் கோவில் போகும் வழியில் இந்த ஊர் வரும் இனி அந்த ஊரை கடக்கும் போது தான்யா தஸ்னிம் நினைவுக்கு வருவார், நேரில் பார்க்க முடிந்தால் வாழ்த்து சொல்லவேண்டும்.

    //தனக்கு உடல்நிலை முடியாத சூழலிலும் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களவேலைகளைச் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஷ்யாம்//
    நல்ல உடல்நிலையில் இருப்பவர்களே உதவி செய்யாமல் இருக்கும் போது 14 அறுவை சிகிட்சை, செயற்கை சிறு நீரகம், செயற்கை மூட்டு என்று வைத்துக் கொண்டு தொண்டு செய்யும் ஷ்யாம் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. //இயற்கையை வாசி, இயற்கையையே சுவாசி என்று சொன்ன நம்மாழ்வாரை அன்றாடம் வணங்கி வாழ்க்கையை துவங்குபவள் நான் ஆகவே தான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை குழந்தைகளுக்கு வலியுறுத்துகிறேன்.//

    தலைமை ஆசிரியர் கோமளீஸ்வரி பணிகள் சிறப்பாக ந்டைபெற வாழ்த்துக்கள். அவர் பள்ளியில் எடுத்து உள்ள அத்தனை பணிகளும் சிறப்பு.


    //மாலை நேரங்களில், ஏழை, எளிய குழந்தைகளுக்கு, டியூஷன், தொழிற்பயிற்சிகள் போன்ற பல உதவிகளையும் செய்து வருகிறோம்.//

    கருணையில் மேரி மாதா தான் மேரி அமுதா.

    வாழ்த்துக்கள் அமுதா!


    // மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவில், முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.//

    மகிழ்ச்சி. மாயவரத்தில் எங்கள் தெருவில் இருக்கும் முஸ்லிம் அன்பர் ஆட்டுத்தோல் விற்பவர் அவர் தெருவில் இருக்கும் காமாட்சி அம்மனுக்கு விளக்கு போட்டு விட்டுதான் தன் தொழிலுக்கு செல்வார், அந்த கோயில் விழாக்களுக்கு நன்கொடை கொடுப்பார்,
    எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். அவர்களை பாராட்ட வேண்டும்.


    //கண்டெடுத்த பணம், போலீசில் ஒப்படைக்கப்பட்டு, உரியவரிடம் கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. //

    உரியவரிடம் சென்று சேர வாழ்த்துக்கள். கண்டெடுத்த குழந்தைகள் மதுஸ்ரீ, கனிஷ்காவிற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இன்றைய நல்ல செய்திகள் அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
  15. சனிக்கிழமை ஸ்பெஷல் அயிட்டம் பரிமாற எ.பி. வாசகர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டாம். அதற்கு முயற்சிகள் அருகி வருகிறது என்றால் வேறேதானும் புதுப் பகுதியை ஆரம்பியுங்கள் என்று எ
    பி.யின் வாடசகனாய் விண்ணப்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இன்றைக்கு பகிர்ந்து இருக்கும் அனைத்து செய்திகளும் சிறப்பானவை. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  18. போற்றத்தக்கவர்களைப் பாராட்டி, பகிர்ந்துகொள்ளும் இப்பதிவில் அரிய பலவற்றை வழக்கம்போல அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  19. சாதனையாளர்களை வெளிச்சம் போட்டு காட்டும் உங்களுடைய தொடர் முயற்சிகளை பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  20. தலைமையாசிரியை கோமளீஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள் பல...

    ஐந்தாம் செய்தி எங்கள் ஊரில் சர்வ-சாதாரணம்...!

    பதிலளிநீக்கு
  21. மத நல்லிணக்கம் வளர்ந்தால் நல்லதே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!