ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

போகுமிடம் வெகு தூரமில்லை...வேர்ப்பாலம் என்பதா  ரூட் பிரிட்ஜ்  என்பதா என்ற சர்ச்சைகள் ஒரு புறமிருக்க கொஞ்சம் கழுத்தை இடது புறம் சாய்த்துப் பார்த்தால் எங்கள் கவலை விளங்கும்.  ஆம்.  இத்தனை ஒழுங்கற்ற படிகள் ஏறி எப்படி மேலே போய் சேரப்  போகிறோம்  என்பதுதான் அது.

நாம் சென்று பார்த்த இந்தப் பாலம் மாதிரி நிறைய இருக்கிறது என்கிறார்கள்

மரங்களுக்கு நடுவே ஒரு பாதை .  அதன் வழி வந்து இந்தப் பாலம் வழி நடந்து வந்து அந்தப் படிகளிலும் ஏறி விட்டால் சாலை வழியே கடக்கும் 48 km  6 ஆகக் குறையுமாம்

தெளிந்த ஓடை

நீர் நிலைகள் என்றால் தட்டானும் தானே வரும்?

மூங்கில்களைப் பரப்பி மீன் பிடிக்க முயற்சி


அடர்காடு...   ஆங்கோர் புலி எட்டிப்பார்க்குமோ?

பூக்களிருந்தால் பூச்சிகளும்

மரங்களடர்ந்த காடுகளால் மனதுக்கு நிம்மதி

ஒரு புறம் பார்த்தால்  யாரோ துணி காயப்போடுவது போல

மறு புறம் கை  வீசி நடப்பது போல

கொஞ்சம் பாதுகாப்பும்

அழகான இடத்தில் ஒழுங்கற்ற பாதை!


தைரியமா வாங்க...    புலி புளியமரத்து அடில ரெஸ்ட் எடுக்கப் போயிடுச்சாம்...!


வேகமா தாண்டிடலாம்...

இங்கே இப்போ மணி ஒர்க்ஷாப் நடத்தலாமா?


எல்லோரும் இங்கே பார்க்க, ஒருதர்மட்டும் காட்டுப்பக்கம் பார்த்து கைகூப்பறாரே...

"அச்சச்சோ.... அவரைக் காணோம்...."
"இந்தப் பக்கம் பாருங்க ஆண்ட்டி..."


நேராக நிற்கும் வேர்கள்...


அந்த போர்ட்ல என்னவோ எழுதியிருக்கு....


நீளும் பாதைகள்...


இந்த மரக்கிளைல ஏறி அந்தப் பக்கம் குதிச்சா அது கூட சுருக்கு வழிதானுங்கோ....

வேர் இருந்த அளவு நீர் இல்லையே....!


காயிருக்கும்...கனியிருக்கும்...பெயர் தெரியாது...வனத்தால் மறைக்க முடியாத வானம் 

படிக்கட்டுகளுடன் வழக்கமான கைவினைப்பொருள் கடைகள்

மற்றவர்கள் ஏறி வந்து சேரும் வரை உட்கார இருக்கைகள்

கைப்பிடி சுவர்கள் ..  விளையாடும் பாலகர்கள்

கோலெடுத்து எந்த குரங்குக்கு காத்திருக்கிறார்?

இப்போ இடது கை  பவுலர்

ஒற்றை ஸ்டம்ப்

எதிர்கால ஹாக்கி சாம்பியன்

எங்கள் வழி

தனி வழி

பாட்டில் பேட் அலுத்து விட்டது

வீரம் உறங்குகிறது

தாயின் பாதுகாப்பில்

கால்வாயில் கூட பூக்கள்
 

ஆமாம்....   எங்கே போகிறோம்?

56 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  வரும் சகோதர சகோதரியர் அனைவருக்கும் காலை வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்நாள் இனிய நன்நாளாக மலர்ந்து, மணம் வீசி மகிழ்ந்திருக்கவும் இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வாங்க கமலா அக்கா...

  காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜீவி ஸார்.   காலை வணக்கம்.  வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 4. ச்ச்ச்ச்ச்ச்ஸ்ஸ் அப்பாடா எவ்வளவு படங்கள்.
  அத்தனையும் பிரமாதம் டார்சான் போகிற பாதை போல இருக்கே.

  எத்தனை விதவித மான மரங்கள், வேர்கள். கடினமான பாதைகள்.

  காட்டுக்காட்சிகள் டார்ஜான் பாதைபோல இருக்கு. பொறுமையாக நடந்திருக்கிறார்கள்.

  ஸ்படிகம் மாதிரி தண்ணீர். மிக மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...    இனிய காலை வணக்கம்.  டார்ஜான் போகும் பாதையா?  ஹா...   ஹா...    ஹா...

   ஆமாம்...  இன்று படங்கள் கொஞ்சம் கூடவே தந்திருக்கிறார் கேஜி!

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
  இனிய காட்சிகளைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி.
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 6. குழந்தைகள் படங்கள் ரொம்ப இயற்கையாக அழகாக
  இருக்கு மா.

  பதிலளிநீக்கு
 7. வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

  அந்த மரத்தின் இலைகளும் பழங்களும் பார்த்தால் வில்வமோ என சந்தேகம் வருது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதாக்கா...    நல்வரவும், வணக்கமும், நன்றியும்.

   நீக்கு
 8. இன்னமும் அசாம் தானா? அல்லது வேறே வடகிழக்கு மாநிலமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமுடன் நலமா கீதா?
   பயண அலுப்பு சரியாகி விட்டதா?
   பேத்தி விளையாட ஆரம்பித்து விட்டாளா?

   நீக்கு
  2. அதே இடம்தான்.   அங்கிருந்து 'எங்கோ' செல்லப்போவதாக போன வாரம் சொல்லி இருந்தார்...

   நீக்கு
  3. நன்றாக இருக்கிறேன் கோமதி! ஆனால் அதற்கு முரணாகப் பேச முடியலை! இருமல் அதிகமா இருக்கு! சென்னை விமான நிலையம் செல்லும் வழியில் உளுந்தூர்ப்பேட்டை தாண்டி அடையார் ஆனந்தபவன் வாசலில் விழுந்ததால் ஏற்பட்ட முழங்கால் வீக்கம், வலி இப்போத் தான் குறைய ஆரம்பித்திருக்கிறது. குழந்தை அவளாக எங்கள் அறைக்கு வந்து விளையாடுவாள். நாமாகத் தொட்டாலோ விளையாடினாலோ கோபம் வரும்! :) ராத்திரி தினம் எங்கள் அறையில் கொட்டம் அடிச்சுட்டுத் தான் தூக்கம்!

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  படங்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. அதற்கு பொருத்தமான வாசகங்களுடன் அத்தனைப் படங்களும், மிக அழகைப் பெற்று திகழ்கிறது.

  வேர் பாலம், மரங்களின் இடையே ஒத்தையடிப் பாதை, ஏறுவதற்கு சிரமமான படிகள் என அத்தனையும் கடந்து சென்று விட்டால், சாலை வழியே கடக்கும் 48 km ஐ 6 ஆகக் குறைக்கலாம் என்பது ஆச்சரியமான விஷயம். ஆனால் இவ்வளவு கஸ்டமான பாதைகளையும்" பரமபத விளையாட்டு" போல் கடக்க வேண்டுமே! நிச்சயமாக அவனருள்தான் வேண்டும்.

  அப்படிச் செல்லும் போது இயற்கை வனப்புகள் கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தான் உள்ளது. படங்கள் அத்தனையும் இன்று அவ்வளவு அருமையாக உள்ளது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா..

   படங்களை பார்த்து ரசித்து கருத்து சொன்னமைக்கு எங்கள் நன்றிகள்!

   நீக்கு
 10. அழகான படங்கள்...

  >>> படங்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. அதற்கு பொருத்தமான வாசகங்களுடன் அத்தனைப் படங்களும், மிக அழகைப் பெற்று திகழ்கிறது. ..<<<

  உண்மை.. உண்மை..

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 12. முதல் படத்தைப் பார்த்ததும் வழகம் போல குழம்பி விட்டது மூளை(!)..

  பதிலளிநீக்கு
 13. படங்கள் எல்லாம் அழகு. வேர் பாலம் அருமை.
  குழந்தைகள் விளையாட்டு படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  ஒவ்வொரு படங்களுக்கும் நீங்கள் கொடுத்து இருக்கும் வாசகங்கள் அருமை.

  இயற்கை எவ்வளவு அற்புதங்கள் செய்கிறது !

  பதிலளிநீக்கு
 14. படங்கள் எல்லாமே அழகாகவே பயமுறுத்துகின்றன ஜி

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  /அடர்காடு... ஆங்கோர் புலி எட்டிப்பார்க்குமோ? / ஹா.ஹா.ஹா. படத்துக்கு வசனம் பொருத்தம்.

  பார்த்தாலும் பார்த்து விட்டு நம்மை, இயற்கையை ரசிக்க கஸ்டப்பட்டு பார்வையாளராக வந்திருக்கும் இவர்கள் மேல் ஏன் பதுங்கிப் பாய வேண்டும் என நினைத்து சற்று இலை மறைவில் ஒதுங்கிப் போயிருக்கும். அவ்வளவு அடர்த்தியான மரங்கள்.

  தெளிவான ஓடைநீர் படங்கள், மர வேர் படங்கள், மரங்களிடையே பாதைகள் செல்லும் படங்கள் என அத்தனையும் அருமை.

  மரங்களால் மறைக்க சம்மதிக்காத வானம் மிகவும் அழகாக உள்ளது.

  /காயிருக்கும்... காயிருக்கும்.../

  கனி மரத்திலேயே தங்கியிருப்பதால், அந்தக்காய் வில்வகாயோ என நினைக்கிறேன்.

  குழந்தைகளின் விளையாடல்கள் நன்றாக உள்ளது. சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளை கண்டு விட்டால் நமக்கும் உற்சாகம் தொத்திக் கொள்கிறது.

  அந்த உற்சாகத்தில் "ஆமாம் எங்கே போகிறோம்" என்பது கூட தெரியாமல் பாதை நீளுகிறது. ஆனால், இன்றைய பதிவின் தலைப்பு பாடலின்படி "வாராய்.. நீ வாராய்.." என்று நீங்கள் அடுத்த வாரமும் அழைத்துச் செல்லுமிடங்களை பார்வையிட நாங்களும் கண்டிப்பாக உடன் வருவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களையும், படங்களோடு வரிகளையும் ரசித்து, அவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டி இருப்பதற்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ஆஹா.... மேகாலயாவின் புகழ்பெற்ற Root Bridges!!!! போகும் வழியில் எடுத்த படங்கள் நன்று.

  படங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 17. படங்கள் பல கதைகள் சொல்கின்றன. அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. .....ஆனால் என்ன கதை என்பதுதான் புரியவில்லை! புரிஞ்சவங்க புரியாத எனக்கும் கொஞ்சம் சொல்லக் கூடாதா? :-)))

   நீக்கு
  2. அது அவரவர் கற்பனையைப் பொறுத்தது கிருஷ் ஸார்

   நீக்கு
 18. படங்கள் அருமை. மர வேர் பாலம் - வெங்கட் தளத்தில் பார்த்திருக்கிறேனோ?

  பதிலளிநீக்கு
 19. மிகவும் அழகு. முன்பு தொலைகாட்சியிலும் பார்த்து ரசித்திருக்கிறேன். நேரடி காட்சியில் சொல்லவா வேண்டும் இயற்கை நமக்குதந்திருக்கும் கொடை.

  உங்கள் வர்ணனையும் காட்சிப் படுத்தலும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 20. வேர்ப்பாலம் புதிய செய்தி. தூரம் வெகுவாகக் குறையும் சரி.
  ஆங்கோர் ஏணி போட்டு வைத்திருக்க மாட்டோர்களோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா.... ஹா... வேர்களையே ஏணி போல பின்னி விட வேண்டியதுதான் ஜீவி ஸார்!

   நீக்கு
 21. படங்கள் எல்லாமே அழகு அதுவும் குட்டீஸ் படங்கள் செம வேர்ப்பாலம் பார்க்கும்போது கல்லும்முள்ளும் காலுக்கு மெத்தை என்பதே நினைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
 22. இயற்கை அழகைக் கண்டு
  உள்ளம் மகிழ்கிறேன்

  பதிலளிநீக்கு
 23. அனைத்தும் அருமையான காட்சிகள். மூங்கில்களைத் தடுப்பாக வைத்து மீன் பிடிக்க முயன்றிடும் சாமர்த்தியம் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 24. நான் பழைய பதிவுகளுக்குக் கொடுத்த கருத்துகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா கமெண்ட்ஸும் வெளியிட்டாச்சுக்கா... எதுவும் பாக்கி இல்லை.

   நீக்கு
  2. ம்ஹூம், புதன்கிழமைக்குக் கொடுத்திருந்த கருத்துக்கள் எல்லாம் வரலைனு நினைக்கிறேன். போனவாரப் பதிவுகளின் கருத்துகள்! எதுக்கும் அப்புறமா எல்லாவற்றையும் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்துடறேன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!