சனி, 14 செப்டம்பர், 2019

டியூஷன் கட்டணம் 1 ரூபாய்


1)  திருச்சியில், மாதம், 1 ரூபாய் கட்டணம் பெற்று, பள்ளி மாணவர்களுக்கு, டியூஷன் நடத்தி வரும், பெண் அலுவலர்.
2)  சென்ற வாரம் விநாயகர் சதுர்த்தி விழாவில் அன்னதானம் செய்த முஸ்லீம் பெருமக்கள் பற்றி...    இந்த வாரம் மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள் பற்றி...  39 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ,ஸ்ரீராம் மற்றும் வரப்போகிறவர்கள்
  அனைவருக்கும். இந்த நாள் இனியதாகட்டும்.

  பதிலளிநீக்கு
 2. கல்வியின் பெருமையை உணர்ந்து, மனம் கனிந்து கல்வி
  கற்றுக்கொடுக்கும் ஆசிரியை கோமதிக்கு இனிய ,மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  நெடுங்காலமாகக் கற்றுவரும் மாணவ மணிகளைப் பார்க்கும் பொது மக்கள்
  தாராளமாக உதவலாம். செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  இஸ்லாமிய பண்டிகையின் போது ,இந்துக்கள் ,பூக்குழியில் இறங்குவது
  மிக மகிழ்ச்சியான செய்தி. இது போல நேர்மறை செய்திகளைப் படிக்கும் போது
  நம் நாட்டுக்கும் உய்வு காலம் உண்டு என்றே தோன்றுகிறது.
  மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 3. சேவை மனபான்மையுடன் பாடம் நடத்தும் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அவர்கள் ஆசை போல் பாடம் நடத்த இடம் கிடைக்க வாழ்த்துக்கள்.

  மத ஒற்றுமை வாழ்க! காலம் காலமாய் ஒற்றுமையாக வாழும் மக்கள்.

  இரண்டு செய்திகளும் நல்ல செய்திகள். உங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்

  நல்ல செய்திகள்.
  கல்வியின் அருமை புரிந்து ஊதியத்தைப் பற்றி கவலைப்படாது தன் உழைப்பை மட்டுமே செலவு செய்து பதினாறு வருடங்களாக பணி செய்து வரும் ஆசிரியை கோமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். அவர் மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன்.

  மதநல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் மொகரம் அன்று பூக்குழி இறங்கி வழிபாடு செய்த இந்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். ஒற்றுமையே என்றும் உயர்வு என்ற வரிகள் மகிழ்வை தருகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   காலை வணக்கம்.

   உங்கள் இனிய பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 5. மொகரம் பண்டிகைக்கு தீக்குளித்து மத நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

  அதற்கு அன்றைக்கு செய்யப்படும் செலவு பணத்தை வைத்து ஏழை முஸ்லீம் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அது சாதனையே...

  ஆனால் ?

  சகோ கோமதி அவர்கள் செய்து வரும் தொண்டு கடந்த 16 ஆண்டுகளாக அவரிடம் பயின்று வந்த மாணாக்கர்களுக்கு நல்ல சிந்தனைகளை உண்டாக்கி தாக்கத்தை கொடுக்கும்.

  நான் மதவாதன் அல்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி...

   முதலில் நாங்கள் உங்களுக்கு எதிரி அல்ல என்று ஒருவருக்கொருவர் உணர்த்துவது முக்கியம், முதல்படி.   அப்புறம் மிச்சம்!

   நானும் மதவாதன் அல்ல!

   நீக்கு
  2. தஞ்சாவூரிலும் இந்த மொகரத்தின் போது தீமிதி, சங்கிலியால் அடித்துக் கொள்வது போன்றவை பற்பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன.. நான் எழு வயதிலிருந்து பார்த்திருக்கிறேன்..

   ஒற்றைக் கை அடையாளத்தை மட்டும் கொண்டிருக்கும் அரச இலை மாதிரியான ஒரு வடிவமைப்பைச் சுமந்து கொண்டு நள்ளிரவில் வருவார்கள்.. இந்த அமைப்பைத் தோளில் சுமந்து வருவதற்கு விரதம் இருப்பார்கள்... விரதம் இருப்பவர் சுமந்து வரும் அரச இலை மாதிரியான அமைப்பை பாஞ்சா என்பார்கள்...

   பாமர மக்கள் இதனை ஒத்தக்கை அல்லா என்பார்கள்... தவிரவும் தஞ்சாவூருக்குள் இந்த விசேசத்துக்கு அல்லா பண்டிகை என்றே பெயர்... புலியாட்டம் கரடிக் கூத்து அக்கினிச் சக்கரம் போன்ற ஆட்டங்கள் ஏக களேபரமாக இருக்கும்...

   இந்தப் பாஞ்சாவுக்கு எலுமிச்சை மாலை மற்றும் மலர் மாலைகளை அணிவித்து நம்மவர்கள் மரியாதை செய்வர்... பாஞ்சா எடுத்து வருபவரை தம் வீட்டு வாசலில் வைத்து கால்களில் தண்ணீர் ஊற்றி மரியாதை செய்வர்...

   தினமலருக்கு இதெல்லாம் இன்னும் தெரியாது என்று நினைக்கிறேன்..

   அந்த விசேசம் இப்போதும் நடக்கும்.. இப்போது எப்படியோ தெரியவில்லை..

   ஆனாலும் தீமிதி, சங்கிலி அடி பாஞ்சா இவற்றை ஒரு பிரிவு முஸ்லீம்கள் ஒத்துக் கொள்வதேயில்லை... அரபு நாடுகள் எதிலும் இந்த தீமிதி , சங்கிலி அடி எதுவும் கிடையாது..

   நம்மைப் போல அவர்கள் சிலவற்றைச் செய்வதால் -
   நாம் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்...

   பிள்ளையார் எடுப்பு நிகழ்வின் போது அன்னதானம் செய்த முஸ்லீம் அமைப்பினர்
   பிள்ளையாருக்கு நிவேதனம் செய்யப்பட்ட கொழுக்கட்டை, மோதகம், பூரணம் இவற்றை உண்டார்களா...

   தெரியாது!...

   நீக்கு
  3. அவர்கள் ஏன் கொழுக்கட்டை சாப்பிடவேண்டும்?

   அடுத்தவர்கள் நம்பிக்கையில் தலையிடாமல், அவர்கள் வழக்கங்களை எகத்தாளம் பண்ணாமல், அவர்கள் நம்பிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தால் துணை நின்று உதவுகிறார்களே...    அது போதும்.   கலவரம் நடக்கும் இடங்களில் இது மாதிரி செயல்கள் நல்லெண்ணம்தான்.

   நீக்கு
 6. ஆசிரியையின் சேவை சிறந்தது தொடரட்டும் பணி.
  மத ஒற்றுமை வாழட்டும்.

  பதிலளிநீக்கு
 7. தன்னலம் கருதாத ஆசிரியை கோமதி அவர்கள் நலம் பல பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்...

  பதிலளிநீக்கு
 8. ட்யுஷன் டீச்சரை ஏற்கனவே சன் டிவியில் காட்டிஇருக்கிறார்கள் இத்தகைய நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் நாட்டில் அவ்வப்போதாவது மழை பெய்கிறது.

  பதிலளிநீக்கு

 9. நேற்றைய தினமலர் இணைய தளத்தில் கத்தோலிக்க பாதிரியார்கள் நெற்றி நிறைய குங்குமம் காவி உடையுடன் ருத்ராட்ச மாலையில் சிலுவையைக் கோர்த்துப் போட்டுக் கொண்டு அவர்களது பிரார்த்தனையைச் செய்யும் படங்கள் வெளிவந்திருக்கின்றன...

  அதையும் நீங்கள் வழங்கியிருக்கலாம்...

  அதன் இணைப்பு கீழே...
  www.dinamalar.com/news_detail.asp?id=2366355

  அந்தச் செய்தியின் கருத்துரையில் திரு. ஆரூர் ரங்.. என்பவர் சொல்லியிருப்பவற்றை விருப்பம் இருந்தால் படித்துப் பாருங்கள்...

  சில மாதங்களுக்கு முன் இந்துக் கோயில்கள் சாத்தான்களின் இருப்பிடம் என்று ஒரு கிறித்தவ பரப்புரையாளர் பேசியது ஊடகங்களில் வெளியாகி இருந்தது..

  இப்போது பாதிரியார்களே குங்குமப் பொட்டு , ருத்திராட்சத்துடன் காவி உடையில்!..

  ஜீசஸின் புத்திரர்கள் ஏனிப்படி சனாதனத்தின் அடையாளங்களைத் தேடிவருகின்றனர் என்று நான் கேட்டால் -

  மதவாதி ஆகி விடுவேன்...

  ஜீசஸ் வீணை வாசிப்பது போல படங்களை எல்லாம் ஏற்கனவே வெளியிட்டு விட்டார்கள்...

  இன்னும் என்னென்னவெல்லாம் செய்து காட்டப்போகின்றார்களோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லியிருக்கும் காவி உடை பாதிரியார்கள் செய்தி நானும் பார்த்தேன்.  அதை எப்படி இங்கு தருவேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்?  அது மட்டுமல்லாமல் மாதா கையில் விநாயகர் குழந்தை வடிவிலும்,  சர்ச்சினுள் மயில்களும்,  சர்ச்சில் விளக்கு பூஜையும்,  ஆடி அமாவாசைக்கு சர்ச்சில் முன்னோர்களுக்கான (பித்ரு) விசேஷ பூஜை, கல்லறைகளில் பிரார்த்தனையும் நடைபெறும் போஸ்டர்களும் கூடப் பார்த்தேன்.

   அது வேறு.  

   நாம் கடவுளர்களை ஒரு வடிவம் கொடுத்துப் பார்க்கிறோம்.  உருவமில்லாதவர் இறைவன் என்று சொல்லும் மதங்களும் ஒருஉருவம் கொடுத்தே வணங்குகின்றன.வெற்றிடத்தை சக்தி வாய்ந்ததாக நினைக்க மனிதனால் முடியவில்லை.  அவனுக்கு அவன் கட்டுப்பாடுகளுக்கு ஒரு பயம் தேவைப்படுகிறது.  நமக்குத் பிடித்த உருவங்களில் கவலை வணங்குகிறோம்.  இதில் நாம் வணங்கும் உருவம்தான் சரி என்றும் சண்டையிடுகிறோம்.  

   நீக்கு
  2. ஓ.. இது மத நல்லிணக்கத்துக்குள் வராதா?...

   >>> நாம் வணங்கும் உருவம்தான் சரி என்றும் சண்டையிடுகிறோம்...<<<

   நாம் என்றைக்கும் சண்டையிட்டதில்லை.. நமக்குள் சண்டை இருப்பதுமில்லை...

   நீக்கு
 10. ட்யூஷன் டீச்சர் பாராட்டுக்குரியவர்...

  பூமிதி - என்ன சொல்ல? மதநல்லிணக்கம் நல்லது. தேவையானதும் கூட. ஆனால் இப்படி தன்னைத் தானே வருத்திக் கொள்வது எந்த மதத்திலும் தேவையற்றது தான் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 11. மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள் - இதில் என்ன இருக்கிறது? இதற்குப் பதில், ஏழை இஸ்லாமிய குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டுகள் வாங்கிக்கொடுத்தாலும் அதில் அர்த்தம் இருக்கிறது.

  1 ரூபாயில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் - நல்ல விஷயம்

  பதிலளிநீக்கு
 12. இரு செய்திகளையும் நாளிதழ்களில் படித்தேன். இக்காலத்தில் இப்படி ஒரு டீச்சர்.

  பதிலளிநீக்கு
 13. குருவிற்கு நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

  ஒற்றுமைக்கு வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 14. முஹர்ரம் பண்டிகை அல்லது ஆஷுரா என்பது நபிகள் பெருமானார் அவர்களின் பெயரன் ஹுசைன் அலி கர்பலா யுத்தத்தில் மடிந்ததை அனுஷ்டிக்கும் ஒரு துக்க நாள் ஆகும். இது முஸ்லிம்களில் ஷியா பிரிவினர் அனுஷ்டிப்பதாகும். ஷியா பிரிவினர் அதிகம் உள்ள நாடுகள் ஈரான் ஈராக். மற்ற அரபு நாடுகளிலும் இந்தியாவிலும் சுன்னி பிரிவினர் தான் அதிகம். 
  தன்னைத்த்தானே துன்புறுத்திக்கொள்வதும் ஒரு வழிபாடே ஆகும். உதாரணமாக தமிழ்நாட்டில் காத்தவராயன் மற்றும் கருப்பண்ணசாமி போன்ற நாட்டார் தெய்வங்களுக்கு சாட்டை அடி, கத்தி கொண்டு காயப்படுத்துதல் போன்ற நேர்ச்சை உண்டு. கேரளத்தில் வெளிச்சப்பாடு  என்பவர் பகவதியின் வாளால் தலையில் காயப்படுத்திக்கொள்வதும் உண்டு. 
  கில்லர்ஜீ அவர்கள் தீமிதியை தீக்குளி ஆகிவிட்டார் 
   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முஹர்ரம் பண்டிகை தீவிரமாக பஹ்ரைனில் கொண்டாடப்படும். கத்தியால் தங்களைத் தாங்களே தாக்கிக்கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட ஊர்வலம் செல்வார்கள். வழியில் காயத்தின்மேல் தண்ணீர் தெளிக்க, தண்ணீர் குடிக்க பந்தல்கள்லாம் இருக்கும்.

   கோவையில் சவுடேஸ்வரி அம்மனுக்காக கத்தி போடும் விழா உண்டு.

   நீக்கு
 15. வட நாட்டு டூர் போய் விட்டு வந்து விட்டீர்களா? நெல்லைத்தமிழன்?
  https://mathysblog.blogspot.com/2019/09/blog-post.html
  நீங்கள் கேட்டுக் கொண்ட படி ஒரு செய்யுள் அதன் பொழிப்புரை.
  பகிர்ந்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 16. நம்நாட்டில் பெரும்பாலான கிருஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம்மாறி வந்தவரே அவர்களிடம்நம்மில் இருக்கும்பழக்க வழக்கங்கள் சீக்கிரம்மாறுமா

  பதிலளிநீக்கு
 17. இரண்டுமே புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. ஏழைக்கு எழுத்தறிவித்தவர் இறைவனாவார்
  ஒரு ரூபாய் கட்டணம் பெற்று, பள்ளி மாணவர்களுக்கு, டியூஷன் நடத்தி வரும், பெண் அலுவலரும் அப்படியே!

  பதிலளிநீக்கு
 19. படிக்க மறக்காதீர்கள்
  நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
  http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!