வியாழன், 5 செப்டம்பர், 2019

சுற்றிச் சுற்றி வந்த யானை....




ஹோட்டல் ஆர்த்தினு போர்ட் பார்த்து வண்டியை நிறுத்தி இறங்கினோம்.  இடம் குடவாசல் சாலை.  நம்ம ட்ரைவர் தம்பி வண்டியை நிறுத்தி விட்டு வருவதாகச் சொல்லி வண்டியைக் கிளப்பிக்கிட்டு  ஓரம் தேடிபோனார்.  

குடந்தை சிட்டி வழியா [போயிருந்தா நிறைய பெரிய ஹோட்டல்லாம்  இருந்திருக்கும்.  நாங்கள் [போனது வேறு வழி!  எங்க வழி தனி வழி!

ஹோட்டல் ஆர்த்திக்குள் நுழைந்த பாஸ் அதே வேகத்தில வெளியே வந்துட்டார்.  எங்கள் ஏழு பேரைக் கண்டதும் சுறுசுறுன்னு எழுந்து வந்த த ஹோட்டல்காரர்கள் முழிக்கறாங்க....  என்னடா...   குடவாசலுக்குவந்த சோதனைன்னு!  ஏன்னு  நான் உள்ளே போயி பார்க்கறேன்...   பூரி, தோசை, இட்லி எல்லாமே இருக்கு...  அதாவது ஏற்கெனவே செஞ்சு வச்சுபெரிய தாம்பாளத்துல தயார் நிலையில் திறந்து வச்சுருக்காங்க!

வெளிய வந்தோமா...  ஆர்த்தியை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்திருப்போம்.  டொய்ங்.. ன்னு ஒரு சத்தம்.  ஹோட்டல் ஆர்த்திக்கு எவ்வளவு மார்க் போடுவேன்னுட்டு  அஞ்சு நட்சத்திரங்களுடன் காத்திருந்தது கூகுள்!  பார்றா...   எப்போ லொகேஷன் ஆன்ல இருக்கு, எப்போ ஆஃப்ல இருக்குன்னே தெரிய மாட்டேங்குது!

அப்புறம் நம்ம ட்ரைவர் தம்பி போயி வண்டியை எடுத்துக்கிட்டு வந்ததும் அவரையும் சேர்த்துக்கிட்டு சமயபுரத்தாள் ங்கிற கடைக்குள்ற போனோம்.  பூரியும் ரவாதோசையும் சாப்பிட்டோம்..   அங்க எல்லாமே நல்லா இருந்துச்சு. .

அர்ச்சகர் எங்களை வரும் வழியிலேயே இளநீர் வாங்கி வரச்சொன்னார்.  அதுமட்டும் கிடைக்கவில்லையாம்.  நாங்களும் பார்த்துக்கிட்டே போனோம், கிடைக்கவில்லை.   மழை இல்லையா...   யாரும் இளநீர் சாப்பிடற மூட்ல இல்ல போல!  அதைச் அவர்கிட்ட சொன்னதும் அவர் கிளம்பி ஊருக்குள் போயி வாங்கி வந்துட்டார்.  அந்த ஏரியாக்கள்ள தென்னைக்கா பஞ்சம்!  ஆனால் அதனால பூஜையெல்லாம் ஆரம்பிக்கவே ரொம்ப லேட் ஆகிவிட்டது.

ஊருக்கு வெளியே இருக்கும் சிறு கோவில்.  அந்தக் காலத்தில எனக்கும் இங்குதான் மொட்டை போட்டிருப்பாங்க..   என் அப்பா நடந்த இடம்.  பள்ளி சென்ற பாதை.   நான் என் மகன்களுக்கு இங்கதான் முதல் முடி இறக்கினேன்.  என் மகன்களிடம் அவர்கள் காலத்திலும் இதெல்லாம் தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.  

எங்க கல்யாணம் முடிஞ்சு நாங்கள் எங்க குலதெய்வம் கோவில் போனப்போ சுற்றுச்சுவர்லாம் கிடையாது. மேடை கிடையாது. இப்போ எவ்வளவோ தேவலாம்.  97 ஆம் வருஷத்துக்குப்புறம் போன வருஷம்தான் மறுபடி போக முடிஞ்சுது.  இனிமேல வருஷத்துக்கு ஒருவாட்டி கட்டாயம் வந்துடறதுங்கற தீர்மானத்தை இந்த வருஷம் நிறைவேற்றினோம்.  அடுத்தடுத்த வருஷங்களிலும் தடங்கலில்லாமல் தொடர அந்த சாத்தியப்பா அருளவேண்டும். 

பால சாஸ்தாவுக்கு தொடங்க இருக்கும் சந்தனக்காப்பு அலங்காரத்துக்காக ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள் இருவரும்!  நாங்கன்னா நானும் பைரவரும்!


பூசாரியும் வந்து விட, மதுரை வீரன், பொம்மி, சப்த கன்னிகளுக்கான அலங்காரத்தை அவர் மேற்கொண்டார்.  அர்ச்சகர் நீர், பால், தயிர், மோர், இளநீர், நார்த்தைச்சாறு, விபூதி, பஞ்சாமிர்தமென்று வரிசையாக அபிஷேகங்கள் முடித்து சந்தனக்காப்பில் இறங்கினார்.  சுத்தமாக இரண்டு மணிநேரம் பிடித்தது.

நடுவில் அந்தச் சிறிய கோவிலைச் சுற்றினால்...

இதோ... மேலே நடுவில் சற்றே பெரிதாய்த் தெரியும் இந்த மஞ்சள் மலருக்குப் பின்னே ஒரு சிட்டுக்குருவி இருக்கிறது தெரியுமா?
அங்கிருக்கும் இந்தப் பூக்களில் பறந்து பறந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தன சில சிட்டுக்குருவிகள். கிர்ச் கிர்ச்கிர்ச் என்று அதன் சத்தத்தையும் சிறகடிக்கும் சத்தத்தையும் வைத்துதான் என் கவனம் அங்கு திரும்பி இருந்தது.
எவ்வளவோ முயன்றும் சட்சட்டென இடம் மாறும் அந்த சிட்டுகளை படம் பிடிக்க முடியவில்லை. மெ...து...வா...ய்... நெ....ரு....ங்....கி.. நை...ஸா...ய் படம் பிடித்த இந்தப் புகைப்படத்திலும் சட்டென பூவின் பின்னே மறைந்தது அந்த சிட்டுக்குருவி.
விடுங்கள்... பூவை ரசிப்போம். சிட்டுக்குருவியை நேசிப்போம்.





நீ எடுக்கும் புகைப்படத்துக்கு நான் மயங்க மாட்டேன்..
என் தெய்வத்தின் மேலிருந்து கண்ணை எடுக்க மாட்டேன்...



தூரப்பார்வையில் கோவில் 


கிணறு என்றும் ஒன்று உண்டு.  தண்ணீர்தான் இல்லை.  உள்ளே ஒரு ஒற்றைச் செருப்புக்கிடந்துச்சு!


அசலும் நகலும்...


அடுத்த கும்பாபிஷேக நாள் நெருங்குகிறது.  அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தார்கள்.


அபிஷேகம் முடிந்து இப்படியிருந்த சாஸ்தா 


சந்தனக்காப்பு அலங்காரத்துக்குப்பின் அர்ச்சகரின் கைவண்ணத்தில் இப்படி காட்சி தந்து அருளினார்.

வாசலில் குதிரை அருகே இரு வீரர்கள்..புத்தாடை அணிந்து..



வீரனும் பொம்மியும் 


சப்தகன்னியர் 

பொங்கலும், புளியோதரையும் (ஆமாம், புளியோதரைதான்!  சுமாரான சுவை!) சாப்பிட்டுட்டு, அங்கிருந்து கிளம்பி அறையை அடைந்தபொழுது மணி நான்கரை ஆகிவிட, மறுபடி ஒரு சிறு ஒய்வு.

================================================================================================================

உரத்த சிந்தனை என்று கொள்ளலாமா?  பின்னே கஷ்டங்கள் மட்டுமே உணரப்பட்டால் வேறு எப்படிதான் நினைக்க? 


இதற்கு வந்த பதில்கள்...   




==============================================================================================================

சுற்றிச் சுற்றி வந்த யானை...



================================================================================================================

நேற்று புதன் கேள்வி பதில்களில் இம்போசிஷன் பற்றி கேள்வியும், பதிலும் இடம்பெற்றது இல்லையா?  அதற்காக ஒரு பழைய மதன் ஜோக் - இம்போசிஷன் பற்றி!



========================================================================================================


புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிச்சி முகாம் பற்றிய விவரங்கள் அறிய இங்கு செல்லுங்கள்.  புதிதாக வலைப்பதிவு தொடங்குவது முதல் கணினி பயன்படுத்தும் முறை  பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள் புதுவை வலைப்பதிவர் குழுமம்.  

எளிய கட்டணம் உண்டு.



============================================================================================

146 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என்ன ஆச்சர்யம்! தூங்கவில்லையா?

      நீக்கு
    2. நைட் நல்ல நித்திரை ஸ்ரீராம்.. திடிரென ஒரு ஜத்தம்:)) அதிராஆஆஆஆஆ அப்பூடின்னும் கேட்டுச்சா. அஞ்சுவின் குரல்போலவே என்னை மிரட்டிச்சா:)).. டமால்ல்ல்ல் என முழிச்சேனா... இந்தக் குளிரிலும் வேர்த்துச்சா.. உடனே ஒற்றைக் கண்ணைத்திறந்து நேரம் பார்த்தேனா... ஆஆஆஆஆஆ எங்கள் புளொக் போஸ்ட்டிங் ரைம். காலை 6 மணி... உடனே.. ஃபோனை எட்டி எடுத்து ஓபின் பண்ணி ஓடி வந்தேனா... வழியில கமலாக்கா எதையோ குனிஞ்சு தேடுவது தெரிஞ்சுது:))...

      ஆஆ எங்கள் புளொக்குக்கு போக சிலுப்பரைத்தேடுறா எனப் புரிஞ்சு போட்டு:)) அவ போட்டு நடந்து வருவதற்கும் ஒரே ஓட்டமாக ஓடி வந்தேன், ஆனா புளொக் படிக்க முடியவில்லை, கண்ணை திறக்க முடியாத ரயேட்ட் அதனால சைன் பண்ணிட்டு டப்பு டிப்பென நல்ல பிள்ளையாக:)) நித்திரையாகிட்டேன்ன் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. அவசரத்தில.. 2ஸ்ட்டு என 2ம் நெம்பரை அமத்திட்டேன் ஹா ஹா ஹா...

      நீக்கு
    4. நான் காலை எழுந்ததும் எ. பியில் யாருமில்லையே என கதவை ஒரு கையால் அவசரமாக திறந்து கொண்டே (செருப்பைக்கூட தேடி போட்டுக் கொள்ள நேரமில்லாமல் வெறும் காலுடன் ஓட்டமாக ஓடி வந்து) மற்றொரு கையால் கைப்பேசியில் தட்டச்சு செய்த வண்ணம் வந்தால், இங்கே சகோதரி அதிரா 2ம் இடம் என ஒரே சந்தோஷ கொண்டாட்டம் அப்போ 1ம்இடம்யாரு என தேடிப்பார்த்து கண் அயர்வடைந்தேன். மறுபடியும் பூஸார் கொக்கு சாட்சியாக சகோதரி அதிராவே 2ம் இடம் என்றதை பார்த்ததும் முதலிடம் என்ற ஒன்றே கிடையாது போலும் என்ற கணக்கு குழப்பத்தில் "நானும் இதெல்லாம் எனக்கும் ஒரு கனவுதான் போலிருக்கிறது" என்று மறுபடியும் படுத்து ஒரு தூக்கம். . ஹா.ஹா ஹா. அவசரத்தில் 1ஐ 2ஆக்கியதும் உங்களின் நித்திரை கலக்கம் என இப்போதுதான் புரிகிறது.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா இப்பூடியே இதை ஒரு தொடர் கதையாக்கி அனுப்பலாம் போல இருக்கே:)

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய நாளாக மலரட்டும் ..

    நாளை வருகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி

      ஆகா.. நான் வக்கனையாய் வார்த்தைகளை கோர்த்து அடித்து அனுப்புவதற்குள் தங்கள் வருகை. வருக.. வருக..

      நீக்கு
    2. கமலாக்கா மீ 1500 மீட்டரில 2 வதாக வந்தேனாக்கும்:)) மேலே கொமெண்ட் படியுங்கோ ஹா ஹா ஹா:))).

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கம். இந்த நாள் அனைத்து நலன்களை பெற்று இனிய நாளாக அமைந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    வியாழன் பதிவு (கதம்பம்) நன்றாக உள்ளது. குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    நம் தலைமுறையாக செய்து வரும் பழக்க வழக்கங்களை மகன்களிடம் வலியுறுத்திச் சொன்னது நன்று.

    திறந்து வைத்திருக்கும் உணவுகளை எப்படி சாப்பிடுவது? ஆனாலும் நம் மக்களில் நிறைய பேர் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இப்படி கவலைப்படாத பாங்கு ஹோட்டல் நடத்துபவர்களுக்கு அனுகூலம். என்ன செய்வது? வியாதிகளின் இறக்குமதிக்கு முதல் படி..

    கவிதை நன்றாக உள்ளது. கஸ்ட காலத்திலும் அதை கண்டு கொள்ளாமல், ஒரு கவிதையை உருவாக்கி விடுவது கற்பனைகள் நிறைந்த ஒரு கவிஞரின் இயல்புதானே! அருமை.. ரசித்தேன்.

    மதன் ஜோக் நன்றாக உள்ளது. அப்போதே கம்யூட்டர் காலம் வந்து விட்டதா?
    இன்னமும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..
      வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      ஒவ்வொன்றாகப் படித்து, அதைச் சொல்லி, பாராட்டி ரசித்திருப்பதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. அன்பு ஸ்ரீராம், அதிரா, துரை,கீதா இன்னும் வரப்போகிறவர்களுக்கு இனிய காலை வணக்கம்.

    கும்பகோணத்தை விட்டு வெளியே வந்தாச்சா..
    பைரவரும், அவரது எஜமானர் சாஸ்தாவும் மிக அருமை. உங்கள் தொந்தரவெல்லாம் நீக்கி விடுவார்.
    மதுரை வீரன் பொம்மி பழைய நினைவுகளைக் கொண்டுவந்தன. எத்தனை
    கம்பீரப் பார்வை.
    நம் பரம்பரைத் தெய்வங்களை வழிபடுவது
    எவ்வளவு நிம்மதியைக் கொடுக்கிறது ஸ்ரீராம்.

    தொந்தரவுக் கவிதை எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.
    ஒரு இரவில் என்னை ஆயிரம் தடவை ஜபிக்க வைத்தார் சாயி நாதர்..

    பையன் சொல்றது நியாயம் தான்.
    செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல வாய்ப்பாடும் எங்களை மாதிரி மனனம் செய்யணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      அந்த ஏரியாதான். ஆனால் கும்பகோணம் தாண்டியாச்சு!

      சாயிநாதரை ஜெபிக்க வைத்த இரவு நினைவிருக்கிறது எனக்கும்!

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வல்லிம்மா. எங்களுக்கு இப்போ காலை உங்களுக்கு மிட்நைட்டாகியிருக்கும்.. ஸ்ரீராமுக்கு லஞ்ச் முடிஞ்சு நித்திரை தூங்கிறார்ர்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  5. சுற்றி வந்த யானைக் கதை சூப்பர். அரைத்த மாவு 5 தடவை அரைபட்டிருக்கிறது.
    இன்னும் பட்டாலும் படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலேயே பின்னூட்டத்தில் இன்னும் இரண்டு படங்கள் சொல்லி இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  7. பூவை ரசிப்போம். சிட்டுக்குருவியை நேசிப்போம்.//

    தேன் சிட்டு ஒரு நிமிடம் ஒரு இடத்தில் நிற்காது பறந்து கொண்டே பூக்களில் தேன் எடுக்கும்.

    பதிலளிநீக்கு
  8. //குடவாசலுக்குவந்த சோதனைன்னு! ஏன்னு நான் உள்ளே போயி பார்க்கறேன்... பூரி, தோசை, இட்லி எல்லாமே இருக்கு... அதாவது ஏற்கெனவே செஞ்சு வச்சுபெரிய தாம்பாளத்துல தயார் நிலையில் திறந்து வச்சுருக்காங்க!//

    குடவாசல் ஆர்த்திக்கு வந்த சோதனை. இதை படித்தால் இனி சூடாக செய்து பரிமாறி ஓட்டல் பெயரை காப்பறறலாம். ரசித்து சாப்பிட்டு பாராட்டும் அன்பர்களை இழந்து விட்டார்கள். அந்தக் காலத்தில் சில கடைகளில் பூரியை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து இருப்பார்கள்.
    தோசையை செஞ்சு தாம்பாளத்தில் வைத்து என்றால் என்ன சொல்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா.. பூரியை கண்ணாடிப்பெட்டிக்குள் நானும் பார்த்திருக்கிறேன். அதுபோல கூட இல்லை இங்கு! ஆனாலும் பூரியோ, தோசையோ அவ்வப்போது செய்து சூடாகச் செய்து சாப்பிட்டால்தான் நன்றாய் இருக்கும் இல்லையா!

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    குலதெய்வம் கோவில் சென்று வருவது மகிழ்ச்சியான விஷயம்.

    கவிதை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட்.

      வாங்க.. வாங்க.

      தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  10. படங்கள் எல்லாம் விளக்கங்களோடு அழகு.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    /மெ...து...வா...ய்... நெ....ரு....ங்....கி.. நை...ஸா...ய் படம் பிடித்த இந்தப் புகைப்படத்திலும் சட்டென பூவின் பின்னே மறைந்தது அந்த சிட்டுக்குருவி.
    விடுங்கள்... பூவை ரசிப்போம். சிட்டுக்குருவியை நேசிப்போம்./

    ஹா. ஹா. ஹா. அது நம்மை படமெடுக்க விடக்கூடாதென்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டிருக்கிறதோ.. ?அதனால் மிக அழகான பூக்களை ரசிக்க முடிந்தது. சிட்டுக்குருவியை நேசிப்பது தெரிந்து அதுவும் அடுத்த முறை படமெடுக்க ஒத்துழைக்கட்டும்.

    பனம்பழம் பார்த்து நாளாயிற்று. அம்மா வீட்டில் அப்போது பத்துக்கும் மேலாக பனை மரங்கள் இருந்தது. பலத்த காற்றில் ஆடும் போது சலசலக்கும் ஓலைகளின் சத்தம் இப்போது மனதுக்குள் வந்து போனது.

    பைரவர் படம், அசலும் நகலுமாக இருக்கும் படங்கள்,பால சாஸ்தாவின் இரு அழகான படங்கள், குதிரையுடன் புது வேட்டி அணிந்தபடி இருக்கும் வீரர்கள், பொம்மி, வீரர் ஆகிய படங்கள் மற்றும் அத்தனைப் படங்களும் மிகவும் அழகாக இருக்கிறது. கிணற்றுக்குள் தண்ணீர் இல்லையா? இப்போது மழை பெய்கிறதே .. கொஞ்சமாவது தண்ணீர் ஊறி இருக்குமே!

    யானையை மையமாக வைத்து வந்த சினிமா படங்கள் மாறி மாறி வந்த விதங்கள் நல்ல தகவல். கவிதை அருமை. கவிதைக்கு வந்த கருத்துரைகளும் படிக்க அருமையாக இருந்தது. கதம்பம் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      மீள் வருகைக்கு நன்றி.

      தேன்சிட்டு பற்றி சொல்லியிருபப்தற்கும் செல்லங்கள் பற்றிச் சொல்லி ரசித்திருப்பதற்கும் நன்றி.

      நீக்கு
  12. https://www.irctctourism.com/pacakage_description?packa

    யாருக்கேனும் பயன்பட்டால் சரி.

    பதிலளிநீக்கு
  13. //ஏரியாக்கள்ள //

    ஏரியாக்கள்லே (வேறொரு அர்த்தம் கொடுக்காமலிருக்க)

    பதிலளிநீக்கு
  14. //வருஷத்துக்கு ஒருவாட்டி.. //

    இது ஸ்ரீராம் எழுத்து நடை இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்தான் ஸார்.. சும்மா... வேற மாதிரி முயற்சித்தது!

      நீக்கு
    2. 'வாட்டி'யை விட 'தபா' டிரைப் பண்ணிப் பாருங்கள். :))

      நீக்கு
    3. அடுத்த தபா செஞ்சுடலாம் ஸார்!

      நீக்கு
  15. //உள்ளே ஒரு ஒற்றைச் செருப்புக்கிடந்துச்சு!.. //

    அடுத்த சிறுகதைக்கு ஒரு இலவச க்ளூ! யார் வேணா உபயோகப்படுத்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதையா? பரக் பரக் என தாடியைச் சொறிந்து யோசிக்கிறேன்!!!

      நீக்கு
    2. //பரக் பரக் என தாடியைச் சொறிந்து யோசிக்கிறேன்!!!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நொவெம்பர் மாதம் தாடி மாதம்:))

      நீக்கு
    3. அல்லது தாடி இருக்கும் ஏரியாவை என்று சொல்லலாம்! மோவாயைச் சொரிகிறேன்! எங்கே போக கதைக்கு!

      நீக்கு
  16. ஒரிஜனல் கதை யாரோடது என்ற தோண்டித் துருவி ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம் என்று தான் கதை இலாகா என்று டைட்டில் கார்டில் போட்டு விடுவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே? எங்கிருந்து எடுத்தது, எப்படி எடுத்தது என்றெல்லாம் குழம்ப வேண்டாம். சமீபத்தில் வெளிவந்த சாஹோ படம் பற்றி அந்தக் கதையின் ஒரிஜினல் பிரெஞ்சு உரிமையாளர் தெலுங்கு தயாரிப்பாளரைத் திட்டி இருக்கிறார்!

      நீக்கு
  17. மதன் ஜோக்குலே பதிமூணாம் வாய்ப்பாடு; சரி..

    டக்குனு சொல்லணும்.. மொத்தம் எத்தனை வாய்ப்பாடு?..

    பதிலளிநீக்கு
  18. /  பூரி, தோசை, இட்லி எல்லாமே இருக்கு...  அதாவது ஏற்கெனவே செஞ்சு வச்சுபெரிய தாம்பாளத்துல தயார் நிலையில் திறந்து வச்சுருக்காங்க!//
    அவ்வ் எல்லாருக்கும்  அப்போ திரும்பவும் பொரித்தோ சூடு பண்ணியே அதையே தராங்களா ???  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சூடாக கூட தராங்களா என்பதும் சந்தேகமே!

      வாங்க ஏஞ்சல்!​

      நீக்கு
  19. ///இடம் குடவாசல் சாலை///

    ஆஆஆஆஆஆஆஅ அதிரா நித்திரையால எழும்பிட்டேன்.. அஞ்சு இன்னும் எழும்பேல்லையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வெரி பாட்ட்ட்ட்ட்ட்ட்:).

    இந்த பெயரைப் பார்த்ததும் எனக்கு டக்கென நினைவுக்கு வந்த பாடல் வரிகள்..
    குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா..... என்பதே.. எங்கட பிரசாந்தின் அப்பா நடிச்ச படமெல்லோ.. நான் பார்த்தேன் அதிலிருந்து அவரை ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்ச்ச்ச்ச்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கரகாட்டக்காரன் படப்பாடல் 

      நீக்கு
    2. aஆஆஆஆஆஆஆஅ புளொக் எதுக்கு இவ்ளோ ஆட்டம் ஆடுது என நினைச்சு.. பக்கத்தில எட்டிக் கட்டில் காலைப் பிடிச்சுக் கொண்டே ரைப் பண்ணினேன்.. அது அஞ்சுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஓ அப்பூடியா சங்கதி.. அப்போ எனக்கு அந்தக் குடகு மலையில இருந்து ஒரு பாட்டு .. தியாகராஜன் மாமா நடிச்ச படம்.. அது இப்போ வேணும்ம்ம்ம்ம்:).

      நீக்கு
    3. //எங்கட பிரசாந்தின் அப்பா நடிச்ச படமெல்லோ..//

      திருத்தம் வேண்டியே எழுதப்பட்டதோ! தியாகராஜன் கொசுக்கப் போறார். ராமராஜன் திகைக்கப் போறார்!

      நீக்கு
  20. / எப்போ லொகேஷன் ஆன்ல இருக்கு, எப்போ ஆஃப்ல இருக்குன்னே தெரிய மாட்டேங்குது!//நானா பல நேரம் ஆஃப் செஞ்சிருக்கேன் எந்த ஷாப்பிங் மால் போனாலும் /நன்றி எங்களை வந்து விசிட் செய்ததற்குன்னு காட்டும் //மதனுக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்குன்னு நினைக்கிறன் :) என்னானு கண்டுபுடிங்க 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதனுக்கும் எனக்கும் ஒற்றுமையா? தாடியா?!!

      நீக்கு
    2. @மியாவ் நோட் திஸ் பாயிண்ட் :) ஸ்ரீராமுக்கு தாடி இருக்காம் ஹாஹா 
      இல்லை ஸ்ரீராம் ஒரு முறை மதன் சொன்னார் தனக்கு ரவா வெங்காய தோசை மிகவும் பிடிக்கும்னு நீங்களும் அடிக்கடி ரவா தோசையை சிநேகிப்பதை அவதானித்தேன் 

      நீக்கு
    3. இடையில எடுத்திட்டேன் என்றார் அஞ்சு... ஆனா மீண்டும் வளார்க்கிறார் போலும்:)) பேன் இல்லாமல் இருந்தால் சரிதான் ஹையோ ஹையோ ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. ஓ... ஆனியன் ரவா அவருக்கும் பிடிக்குமோ! நான் முன்னரே தோசை புராணம் எழுதிய காலத்திலேயே கூடச்சொல்லி இருக்கிறேனே!

      நீக்கு
  21. //நாங்கள் [போனது வேறு வழி! எங்க வழி தனி வழி!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  22. / என் மகன்களிடம் அவர்கள் காலத்திலும் இதெல்லாம் தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.  //
    எங்கப்பா எனக்கும் சொன்னார் நானும் மகளுக்கு சொல்லி வச்சிருக்கேன் சிலதை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பிள்ளைகளை சுகந்திரமா நிம்மதியா வாழ விடுங்கோ.. ச்ச்ச்சும்மாஅ.. அப்பா சொன்னார்.. அம்மா சொன்னார் நீயும் அதைச் செய்யோணும் என மிரட்டிக்கொண்டே இருந்தால்.. அப்படிச் செய்யாமல் போனால் பாவம் குழந்தைகளுக்கு மனதில எப்பவும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஹையோ அதாரது கலைக்கிறதூஊஊஊஊஊஊ:))

      நீக்கு
    2. ஆம்... பின்னாட்களில் அவர்களுக்கு கொஞ்சம் விவரமாவது தெரியவேண்டும்.

      நீக்கு
    3. ஸ்ஸ்ஸ்ஸ் :) ஹையோ ஹையோ பழைய ரசீதுகளை பத்திரமா வைக்கணும் அப்புறம் கண்டபோது இடத்தில கையெழுத்து படிக்காம போடக்கூடாது இதை தான் எங்கப்பா சொன்னார்  அதை  நானும் மகளுக்கு சொல்லிவச்சிருக்கேன் 

      நீக்கு
    4. கதைபோல சொல்லலாம் நானும் நிறைய சொல்லுவேன்.. ஆனா நீங்களும் செய்யோணும் என மிரட்டக்கூடாது, எதிர்பர்ப்பதும் தப்பு.. பின்னர் அவர்கள் தொடராவிட்டால் நமக்கு ஏமாற்றமாகிவிடுமெல்லோ...

      நீக்கு
  23. ///பூரி, தோசை, இட்லி எல்லாமே இருக்கு... அதாவது ஏற்கெனவே செஞ்சு வச்சுபெரிய தாம்பாளத்துல தயார் நிலையில் திறந்து வச்சுருக்காங்க!//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அங்கு உங்களுக்கு சொய்ஸ் இருப்பதால இப்படி எல்லாம் பண்றீங்க:)).. இங்கு இவை எங்கும் கிடைக்காது என்பதனால, எங்களுக்கு ஃபிரிஜ்ஜில் இருந்து எடுத்து ஹீட் பண்ணிக் குடுத்தாலும் சந்தோசம் தான் என நினைப்போம்:)).

    குழந்தையில் நடமாடிய ஊர் போனால் கவலையோடு சேர்ந்த மகிழ்ச்சி வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... கேட்கும்போது ஊற்றிக் கொடுத்தால் தோசை நன்றாய் இருக்கும். அப்படிதான் செய்வார்கள். இங்கு தயார் நிலையில் இருந்தது மட்டுமல்லாமல் திறந்தே இருந்ததும் பாஸுக்கு அதிருப்தி!

      நீக்கு
  24. ////பால சாஸ்தாவுக்கு தொடங்க இருக்கும் சந்தனக்காப்பு அலங்காரத்துக்காக ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள் இருவரும்! நாங்கன்னா நானும் பைரவரும்!//

    ஓ இவர் வைரவரோ.. ) ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வைரவரோடு கூட்டுச் சேர்ந்திட்டீங்களோ விட மாட்டேன்ன்ன்ன் அவர் என்னோட ஆளாக்கும்:)) ஹா ஹா ஹா

    .. கேட்பதை அடிச்சுப் பிடிச்சுத் தந்திடுவார்ர்:)) மனிசன் யோசிக்கவே மாட்டார் அவ்ளோ நல்லவர் வல்லவர்:) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பாருங்க... முன்னால இருக்கற தடை மறைக்கறது என்று நின்றபடியே எட்டிப்பார்க்கிறார்!

      நீக்கு
  25. //சுத்தமாக இரண்டு மணிநேரம் பிடித்தது.//
    ஆவ்வ்வ்வ்வ் எவ்ளோ பொறுமை வேணும்...

    //விடுங்கள்... பூவை ரசிப்போம். சிட்டுக்குருவியை நேசிப்போம்.//
    ச்சே..சே.. இந்தப் பயம் புயிக்கும்:)) ஹா ஹா ஹா நான் தேடிக் களைச்சிட்டேன்ன் சிட்டுக்குருவியைத்தான்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி பூவின் பின்னால் மறைந்து விட்டது... நான் என்ன செய்ய... அவர் அலங்காரம் செய்யும் வரை போட்டோ எடுத்து பொழுது போக்கினேன்!

      நீக்கு
    2. இப்பத்தான் லேசா ஞானம் பிறக்குது.. அந்தப் பூவிலிருந்து ஒரு லேகியம் பண்ணலாம்ன்னு சம்சயக்கிறேன்.

      நீக்கு
    3. நான் ஊரில் செம்பரத்தம் பூவில் இருந்து யூஸ் செய்து குடிப்போமே...

      நீக்கு
  26. குலதெய்வம் கோவில் நன்றாக இருக்கிறது, சந்தனக்காப்பு அலங்காரம் நன்றாக இருக்கிறது.
    மதுரை வீரன் பொம்மி அம்மன் எல்லோரும் அழகு. புளியோதரை கிடைத்து விட்டதே! (சுமாராக இருந்தாலும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா... புளியோதரை உப்பு இல்லாமல் காலையில் ஒப்பிலியப்பன் கோவிலிலும் கிடைத்ததே!

      நீக்கு
  27. ஓ இதுதான் ஸ்ரீராம் சொன்ன செம்பருத்தியோ அழகு.. பெரிய இதழ்கள்.. ஆனா இதன் இதள்கள் பின் பக்கமாக வளைஞ்சிருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நான் செல்லிலும்,என் மகன் டி எஸ் எல் ஆரிலும் வளைத்து வளைத்து படம் எடுத்தோம். இங்கு ஒன்று மட்டும் வெளியிட்டேன்!

      நீக்கு
  28. பனம் பழத்தின் நிறம் சரியில்லையே.. இது பெரிய சுவையாக இருக்காது என நினைக்கிறேன். தோல் நல்ல கறுப்பாக இருக்கும் பழம்தான் இனிப்பாக இருப்பதோடு, நல்ல களித்தன்மையாகவும் உள்ளே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனம் பழம் சாப்பிடுவார்களா என்ன? நான் சுவைத்ததில்லை. அந்த ஓட்டுநர் தம்பி அதிலிருந்துதான் நாட்டு சர்க்கரை எடுப்பார்கள் என்று மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்!

      நீக்கு
    2. //பனம் பழம் சாப்பிடுவார்களா என்ன?//

      என்ன இப்பூடிக் கேட்டு விட்ட்டீங்கள்.. பனை மரத்துக்கும் பனம் பழத்துக்கும், பனையிலிருந்து செயப்படும் பொருட்களுக்கும் பெயர் போன இடம் யாழ்ப்பாணம்.. ஆனா அங்கும் இப்போ நிறைய பனைகள் தறிக்கப்பட்டு வீடாகி விட்டது...

      முன்பு எங்கள் வீட்டின் பின்னால் பெரிய பனந்தோப்பு இருக்கும்.. இப்போ ஒரு மரம்கூட இல்லை எல்லாம் வீடுகள்.

      பனம் பழத்தை அப்படியே நெருப்பில் போட்டு கத்தரிக்காயைப்போல சுட்டு எடுப்பார்கள் ஸ்ரீராம், சுட்டு ஆறிய பின், தோலை ஈசியாக உரிக்கலாம், உரித்தபின் உள் சதைப்பகுதியை அப்படியே சூப்பிச் சூப்பிச் சாப்பிட எவ்ளோ சுவை தெரியுமோ...

      இப்படி சுட்ட களியை எடுத்து, அதில் பனங்காய்ப் பணியாரம் எனச் செய்வார்கள்.. இப்பவும் இலங்கை உணவுக் கடைகளில் கிடைக்கும் அது.. இம்முறை கூட கனடாவில் கண்டேன். இப்படி களியை எடுத்தபின், அந்தப் பனம் விதையை தாட்டு விட்டால் கிழங்கு வரும்...

      ஆனா இப்போ நெருப்பில் சுடும் வசதி குறைவு என்பதனால், களியை எடுத்துப் பின்பு காச்சுகிறார்கள்..

      https://www.youtube.com/watch?v=97T5YHQPMTs

      நீக்கு
  29. //நீ எடுக்கும் புகைப்படத்துக்கு நான் மயங்க மாட்டேன்..
    என் தெய்வத்தின் மேலிருந்து கண்ணை எடுக்க மாட்டேன்...//
    ஹா ஹா ஹா வைரவர் வாகனம்:)) என்னா கடமை உணர்வு.. அழகாக ஹைக்கூபோல சொல்லிட்டீங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியே பேஸ்புக்கிலப்போட்டிருந்தேன்! அதைஅப்படியே இங்கு!

      அப்புறம்...

      ஹைக்கூவுக்கான இலக்கணம் இது இல்லை!!

      நீக்கு
    2. //ஹைக்கூவுக்கான இலக்கணம் இது இல்லை!!//

      ஆஆஆ உள்குத்து ஏதும் இருக்கோ?:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. சேச்சே... அதெல்லாம் ஒன்றும் இல்லை. நிஜமாக ஹைக்கூ இலக்கணம் இது இல்லை.

      நீக்கு
  30. பைரவரின் வாகனம் தான் நாய் . இங்கு வாகனத்தை பைரவர் என்று அழைப்பது !

    அசலும் நகலும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். வாசலில் இருந்த அந்த நாயின் சிலையை கொஞ்ச தூரத்திலிருந்து பார்த்து என் மாமியார் அதை நிஜ நாய் என்றே நம்பினார்...​

      :)))

      நீக்கு
    2. ///வாசலில் இருந்த அந்த நாயின் சிலையை///
      ஆஆஆஆஆஆஅ இதென்ன இது புதுப்பாசை.. நீங்க வழமையாக இப்பூடிச் சொல்ல மாட்டீங்களே செல்லத்தை:))

      நீக்கு
    3. இங்கு நாய் என்பது திட்டு போலவே ஆகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம்! அதனால்தான் நான் நாய் என்று சொல்லியிருப்பது உங்களுக்கு வித்தியாசமாக இருக்கிறது. அதனாலேயேதான் நானும் செல்லம் என்றே அழைப்பது!

      நீக்கு
    4. வளர்ப்பவர்கள், வளர்த்தவர்கள் செல்லம் என்றே சொல்வார்கள்.

      நீக்கு
  31. //தூரப்பார்வையில் கோவில் //

    ஓ குட்டிக் கோயில் ஆனா மிக அமைதியான சூழலில்..

    பொம்மி என ஒரு பாடலில் வரும்.. நான் அது செல்ல வார்த்தை எனத்தான் நினைச்சிருந்தேன்.. பொம்மி என ஒரு தெய்வம் உண்டு என்பது இப்போதான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் குலதெய்வம் கோவில்கள் சிறிய அளவிலேயே இருக்கும். எண்களின் இரண்டாவது குலதெய்வம் சுவாமிமலை முருகன்.

      நீக்கு
  32. //சப்தகன்னியர்//

    ஆவ்வ்வ்வ் இப்படி ஒரு படம் நானும் எடுத்து வந்தேனே கனடாவில் இருந்து... அங்கும் எல்லாக் கோயில்களிலும் எழுதியிருக்கிறார்கள் படமெடுக்கக்கூடாது என.. ஆனா என்னை மன்னிசிடப்பா என வேண்டிக் கொண்டே எடுத்திட்டேன் ஃபோனில் படங்கள்.. காட்டிக் குடுத்திடாதீங்கோ என்னை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.. ஹா...

      படம் எடுக்காதீர்கள் என்று சொன்னால் நாம் கேட்டுவிடுவோமா என்ன!

      இங்கு என்னை கேள்வி கேட்க ஆளில்லை! எடுத்துத் தள்ளிவிட்டேன்!

      நீக்கு
  33. //பொங்கலும், புளியோதரையும் (ஆமாம், புளியோதரைதான்! சுமாரான சுவை!) //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கிடைச்சதே பெரிய விசயம் இதில சுமாரான சுவையாம் ஹா ஹா ஹா.

    நாங்கள் ரொரண்டோவில் ஒரு ஆடிச்செவ்வாயன்று ஒரு பிள்ளையார் கோயில் போயிருந்தோம், பெரிய கோயில்.. உள்ளே போகும் போது , வெளியே வருவோர் கையில் பொக்ஸ் களில் சாதம் எடுத்துப் போவது தெரிஞ்சது, உள்ளே போனபோது நேரம் 11 மணி. கும்பிட்டு அர்ச்சனை எல்லாம் முடிச்சிட்டு வர 12.30 ஆகி விட்டது.. கீழே பேஸ்மெண்ட்டில் தான் கோயில்களில் உணவிருக்கும்..

    அங்கு சாப்பாடு எடுக்கலாமே எனப் போனால்ல்.. சக்கரைக்புக்கை செய்திருக்கிறார்கள்.. எல்லோரும் எடுத்துப் போய் வெறும் பாத்திரம் இருந்தது.. கரண்டியால வழிச்சு.. ஒரு சாஸ்திரத்துக்காக/ சம்பிரதாயத்துக்காக:) ஒவ்வொரு வாய் சாப்பிட்டோம் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாஸ்திரத்துக்காக... ஹா.. ஹா... ஹா.. பந்திக்கு முந்த வேண்டாமோ! சென்னையில் ஆஞ்சநேயர் கோவிலில் பெரும்பாலும் எனக்கு வெண்பொங்கல்தான் கிடைக்கும்.

      நீக்கு
  34. //உரத்த சிந்தனை என்று கொள்ளலாமா? பின்னே கஷ்டங்கள் மட்டுமே உணரப்பட்டால் வேறு எப்படிதான் நினைக்க? //

    உண்மையான சிந்தனைதான்... 1000 தில் 900 பேரும் கஸ்டம் வந்தால் மட்டுமே அதிகம் கடவுளை நினைக்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... சந்தோஷம் என்றால் யார் கடவுளிடம் போய் நிற்கிறார்? அவர் ஒரு சுமைதாங்கி!

      நீக்கு
  35. கடவுளுக்குத் தெரியுமாம், நம்மால் எவ்வளாவு பாரத்தைச் சுமக்க முடியும் என்பது.. அதற்கேற்ப கஸ்டத்தைக் குடுப்பாராம்... கஸ்டத்தைக் குடுப்பவர்.. அதைத் தாங்கும் சக்தியையும் நிட்சயம் குடுப்பார்... எல்லாம் நன்மைக்கே.. இதுவும் கடந்து போகும் என நினைச்சால் மனம் ஈசியாகும்...

    நமக்கு ஒரு இழப்பு என வரும்போது.. அன்று குமுறி அழுகிறோம்ம்.. நாமும் சாகலாமா என்றுகூட எண்ணுகிறோம்ம்.. ஆனா ஒரு 2,3 வருடங்கள் போனபின் .. கவலை உள்ளிருக்கும் ஆனாலும் சிரிக்கிறோம் நன்கு சாப்பிடுகிறோம்ம்... ஆனா இப்போ சிரிக்கும் நம்மால் இதேபோல அன்று ஏன் சிரிக்க முடியாமல் அழுதோம் என நினைக்கையில். பதில் ஒழுங்காக கிடைக்குதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளுக்கு தெரியும் என்று நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்கிறோம்! தாங்கும் சக்தியை அவர்தான் கொடுக்கிறார் என்று நம்பி தாங்குகிறோம்... வேறுவழி?!!

      ஆமாம்.. இப்போது பெரிதாகத் தெரியும் துக்கமோ, சந்தோஷமோ... கொஞ்ச நாட்கள் கழித்து ஒன்றுமில்லாமல் ஆகும்!

      நீக்கு
  36. //சுற்றிச் சுற்றி வந்த யானை..//
    இதுக்கும் தேவர் அவர்களின் படத்துக்கும் என்ன சம்பந்தம் புரியவில்லையே...

    //அதற்காக ஒரு பழைய மதன் ஜோக் - இம்போசிஷன் பற்றி!//
    ஹா ஹா ஹா.. நாம் நம் காலத்தில் முக்கி முக்கிப் படிச்சதெல்லாம் இப்போ மனப்பாடம் செய்யத் தேவையில்லை என பல விசயங்கள் இங்கத்தைய சிலபஸ் ல வந்திருக்கு..

    உதாரணத்துக்கு கெமிஸ்ரியில் H,HE,LI,Be,B,C இப்படி.. இதனை நாங்கள் ஒரு பாட்டாக இயற்றிப் பாடமாக்கி வைத்திருப்போம்.

    ஆனா இப்போ மகனிடம் பாடமோ? ஏதும் பாட்டு மாதிரி நினைச்சிருக்கிறீங்களோ எனக் கேட்டால், சிரிக்கிறார்ர்.. அதெல்லாம் பாடமாக்கத் தேவையில்லை, ஸ்கூலில் தருவார்கள்.. இதை எதுக்கு பாடமாக்கோணும் எனச் சொல்கிறார்ர்.. ஆனாலும் நான் விடாமல் கொஞ்சம் மிரட்டினேன்:) பாடமாக்கி இருந்தால் நல்லதெல்லோ என.. அவர் தன்பாட்டில் பாடமாக்கிட்டார்ர் ஆனா தேவையில்லையாம் என்றார்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படங்களை எடுத்தவர் தேவர் பிலிம்ஸ்தானே? அதைச்ச்சொன்னேன்.

      ஆமாம்.. மனபபடம் என்பதுஇப்போது ஹெவை இல்லாமல்போய்விட்டது. முன்பெல்லாம் பல தொலைபேசி நம்பர்களை மனதிலேயே வைத்திருப்போம். இப்போது அந்த வேலையை அலைபேசி செய்துவிடுவதால்... நம் நம்பர் நமக்கு சரியாய் சொல்ல வரமாட்டேன் என்கிறது!

      நீக்கு
    2. Many vets earn money just sitting under but trees..first letter in each word represents planets

      நீக்கு
  37. //புதிதாக வலைப்பதிவு தொடங்குவது முதல் கணினி பயன்படுத்தும் முறை பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள் புதுவை வலைப்பதிவர் குழுமம்//

    ஆஆஆஆஆஆ இந்த வகுப்புக்கு அஞ்சுவை அனுப்பி வைப்போம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  38. தலை வாரி பூச்சூட்டிய பொம்மி அழகோ அழகு .பைரவர் எதற்கும் அசையாமல் இறைவனை பார்க்கிறார் .இதன் பின் ஏதும் ஸ்டோரி இருக்கா ஸ்ரீராம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்காவுக்குத் தெரியும். அவங்க யு எஸ் கிளம்பற ஆயத்தத்தில் இருப்பதால் இப்போ கதை கிடையாது ஏஞ்சல்!

      நீக்கு
    2. அவர்தானெ அஞ்சு வைரவரின் காவலாளி:)) எங்கட ட்றம் அங்கிளின் பின்னால சிலர் நிற்பதைப்போல:)) அதனால உற்றுப் பார்க்கிறார் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. அப்படியா .இவர் அப்படியே மே/மெய்  மறந்து பார்க்கிறார் 

      நீக்கு
  39. பனம்பழம் இதுவரை சாப்பிட்டதேயில்லை .சுவை எப்படி இருக்கும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதைதான் கேட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. எனகு சுவை சூப்பரா பிடிக்கும் ஆனா அதுக்காக எல்லோருக்கும் பிடிக்கும் எனச் சொல்ல முடியாது... நீங்கள் பனாட்டு சாப்பிட்டதுண்டோ? அதுவும் இந்தப் பனங்களியை வெயிலில் காயவிட்டு எடுப்பது.. என்னிடம் இப்பவும் ஃபிறிஜ்ஜில் இருக்குதே பினாட்டு.. வேஎணுமோ?:).. ஆனா பினாட்டை விட, பனங்களி சுவை அதிகம்.

      நீக்கு
    3. பனம் பழம் ஒரு வித அசட்டு தித்திப்புடன் இருக்கும். (ஸ்வீட் மரச்சீனி கிழங்கு மாதிரி) சாப்பிடும் போதே வாயில் தித்திப்பு தெரிந்தாலும், நார்நாராக வரும். அப்போதெல்லாம் எங்கள் அம்மா பனம்பழத்தை சாப்பிட விடுவதில்லை உடம்புக்கு ஆகாது என தடை. அதை மண்ணில் நட்டு கிழங்காகி வரும் போது அதை விறகு அடுப்புத்தீயில் சுட்டோ, இல்லை வேக வைத்தோ சாப்பிடுவோம்.அதற்கே நிறைய சாப்பிட தடைகளும் உண்டு. சகோதரி அதிரா சொல்லும் விதங்கள் எனக்கு புதிது. அப்படியெல்லாம் பனம்பழத்தை விதவிதமாக்கி சாப்பிட்டதில்லை.

      நீக்கு
  40. ஆஆஆஆஆஆஆஆஅ மீ தான் 104 ஊஊஊஊஊஊஊஊஊஉ:)).. என்னை வாழ்த்துங்கோ எல்லோரும் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்த வயதில்லை எமக்கு ஆகவே உம்மை வணங்குகின்றோம் 

      நீக்கு
    2. //வாழ்த்த வயதில்லை எமக்கு ஆகவே உம்மை வணங்குகின்றோம் //

      :))))

      நீக்கு
    3. http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20180704185101.jpg

      நீக்கு
    4. @MIYAAW

      https://d1k5w7mbrh6vq5.cloudfront.net/images/cache/07/36/9c/07369c1ce0877e90022ada31bc348fde.jpg

      நீக்கு
    5. https://cdnaws.sharechat.com/a9125d67-3cc2-496a-af72-a592b606603d-b096b2c6-1554-4c2f-9d0a-87293f72b947_compressed_40.jpg

      நீக்கு
  41. //கிணறு என்றும் ஒன்று உண்டு.  தண்ணீர்தான் இல்லை.  உள்ளே ஒரு ஒற்றைச் செருப்புக்கிடந்துச்சு!//
    அது சொல்வாங்க நீர் வற்றிய கிணற்றில் இப்படி செருப்பை வீசிப்போட்டா அது அவமானம் தாங்காம நீர் சுரக்குமாம் ..ஒரு ஆச்சி பாட்டி சொன்னது நானா சின்ன பிள்ளையா இருந்தப்போ 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கும், காய்க்கும் மரங்கல் காய்க்க வில்லை என்றால் செருப்பு கட்டி விடுவதை பார்த்து இருக்கிறேன். செடியின், மரத்தின் பக்கத்தில் போய் நீ பூக்கவில்லை என்றால் காய்க்கவில்லை என்றால் வெட்டி விடுவேன் என்பார்களாம் . அப்படி சொன்னால், பூக்குமாம் காய்க்குமாம். சில நம்பிக்கைகள்.

      நீக்கு
    2. ஓ அப்படியாக்கா .அந்த செருப்புக்குத்தான் தெரியும் அது அங்கே லேண்ட் ஆகிய பின்னணி 

      நீக்கு
    3. ஆமாம். கோமதி அக்கா சொல்வதுபோல மரங்களில் அப்படிச் செய்வார்கள். கிணற்றில் யாரோ தெரியாமல் அல்லது வேண்டுமென்றே போட்டிருக்கவேண்டும்.

      நீக்கு
    4. //அந்த செருப்புக்குத்தான் தெரியும் அது அங்கே லேண்ட் ஆகிய பின்னணி //

      பாவம்... எஜமான் இப்படி கைவிட்டு விட்டாரே என்று.. இல்லை இல்லை கால் விட்டு விட்டாரே என்று சோகத்திலிருக்கும்!

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. @miyaww

      ஆங் :) அந்த மற்றது பத்திரமா r .பார்த்திபன் கிட்டே இருக்காம் :)
      ஹாஹாஆ .இது என்ன சொல்றேன்னு உங்களுக்கு  புரியாது 

      நீக்கு
    7. எனக்கு எதுதான் புரிஞ்சிருக்கு இது புரிவதற்கு கர்ர்ர்ர்ர்ர்ர்:)... எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கடமை நேர்மை எருமை ஆக்கும் ஹா ஹா ஹா:)...

      நீக்கு
  42. நான் ஒரே ஒரு முறை பனம்பழம் சாப்பிட்டு இருக்கிறேன்.
    தூத்துக்குடியில் இருக்கும் போது.(சிறு வயதில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குப் பிடிச்சுதோ கோமதி அக்கா? சிலர் பச்சையாக சாப்பிடுவினம் அது சுவை இருக்காது, நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டால்தான் நல்ல சுவை.

      நீக்கு
  43. >>> சுற்றிச் சுற்றி வந்த யானை..<<<


    ஸ்ரீராம் ..
    நான் என்னவோ உங்களைத் தான் யானை சுற்றிச் சுற்றி வந்ததாக நினைத்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைச் சுற்றி யானை...

      நினைக்கவே....

      ஹிஹி..

      சந்தோஷமா இருக்கு என்று சொல்லவந்தேன்!

      நீக்கு
  44. யானை சுற்றிச் சுற்றி வந்ததைப் போல

    அந்த ரங்கனும் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறான்!..

    எந்த ரங்கன் என்று தெரிகிறதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுரி! இப்பல்லாம் சட்டுனு எதுவும் புரிவதில்லை!!

      உங்கள் அந்தரங்கத்தில் இருக்கும் அந்த ரங்கன் யாரென்று புரியவில்லை!

      நீக்கு
    2. நம்ம ரங்கன் தான். இந்தியா முழுசும் சுத்தினானே! சரித்திரம் மறந்துடுச்சா?

      நீக்கு
  45. குலதெய்வ வழிபாடு மனதை நிறைக்க வைத்தது.

    யானையாரும் பல படங்களில் ....
    பனம் பழம் சிறிய வயதில் நிறைய சாப்பிட்டு இருக்கிறோம் புளிவிட்டு கலந்தும் சாப்பிடுவார்கன். பனங்காய் பணியாரம்தான் மிகுந்த சுவை. சிலநாட்களுக்கு முன்னும் செய்து சாப்பிட்டோம்.
    என்னுடைய சின்னு ரேஸ்ரியில் முன்பு பகிர்ந்தி ருக்கிறேன்.
    http://sinnutasty.blogspot.com/p/blog-page_28.html?m=0

    பதிலளிநீக்கு
  46. குலதெய்வ வழிபாடு நல்லபடியாக முடிந்தது குறித்து மகிழ்ச்சி. பைரவர் இங்கே ஏன் இருக்கார்னு எனக்கும் புரியலை. பொதுவா சாஸ்தா கோயில் எனில் யானைதான் இருக்கும். ஒரு சில கோயில்களில் புலி! இங்கே பைரவர். என்னனு பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ...எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இருக்கிறது!  வாங்க கீதாக்கா.

      நீக்கு
  47. கும்பகோணத்தில் பல ஓட்டல்களிலும் சுவையான உணவு கிடைப்பதில்லை. மெஸ் என நம்பிப் போனதெல்லாம் ஓட்டல் முறையாகவே இருக்கின்றன. சும்மா பேருக்குத் தான் மெஸ். இருப்பதில் பெரிய கடைத்தெருவில் அர்ச்சனாவும் அதே பெரிய கடைத்தெருவில் இன்னொரு பக்கம் இருக்கும் வெங்கட்ரமணாவும் கொஞ்சம் பரவாயில்லை ரகம். மங்களாம்பிகா மெஸ் என்னும் பெயரில் கும்பேஸ்வரர் கோயில் கடைத்தெருவில் இருக்கும் மெஸ் ஒரிஜினல் மங்களாம்பிகா இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா... அங்கே எதுவும் நல்ல ஹோட்டல்னு இல்லை. அதே சமயம். நாங்கள் கும்பகோணம் நகருக்குள் செல்லவில்லை.

      நீக்கு
  48. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வும்!

    சிறு வயதில் நல்ல நேரம், ஹாத்தி மேரா சாத்தி, மா படங்களை நாங்கள் விரும்பிப் கேட்டு தியேட்டர் சென்று பார்த்த நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!