திங்கள், 23 செப்டம்பர், 2019

"திங்க"க்கிழமை : அவல் புட்டு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பிஅவல் புட்டு

தேவையான பொருட்கள்:

கெட்டி அவல்    -. 11/2 கப்
வெல்லம் (உடைத்தது அல்லது துருவியது        - 11/2 கப்
தேங்காய் துருவல்   -  4 மேஜைக்கரண்டி 
நெய்.                   - 2 அல்லது 3 மேஜைக்கரண்டி
ஏலக்காய் பொடி - 3 சிட்டிகை
முந்திரி பருப்பு    - 10

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கெட்டி அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். 
பின்னர் அதை மிக்ஸியில் போட்டு உடைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, தண்ணீர் கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு அந்த வெந்நீரை உடைத்த அவலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசிறி வைக்கவும். வெந்நீரை சேர்க்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சேர்க்க வேண்டும், அப்படியே கொட்டினால் அவல் கொழ கொழவென்றாகிவிடும் அபாயம் உள்ளது. இந்த சூட்டிலேயே அவல் வெந்து விடும். 

பின்னர் அதே வாணலியில் துருவிய வெல்லத்தை போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி, வாணலியை கழுவி விட்டு வெல்ல ஜலத்தை ஊற்றி கொதிக்க விடவும். வெல்ல ஜலம் கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி, வெந்நீரில் பிசிறி வைத்திருக்கும் அவலையும் சேர்த்து  நன்கு கிளறவும். அவல்  கெட்டியானதும் இறக்கி உடைத்த முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறினால் சுவையான அவல் புட்டு தயார். நெய் அதிகம் தேவையில்லை. நான் செய்த பொழுது, தேங்காய் கொஞ்சம் குறைவு என்று தோன்றியதால், கடைசியிலும் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்த்தேன்.


செய்வதற்கு மிகவும் சுலபமான, எளிமையான, சத்தான உணவு இது.    

48 கருத்துகள்:

 1. அவல் புட்டு சுவையானது தான்..

  ஆனால்
  சுவைக்கத் தான் இயலவில்லை...

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஆஹா பானும்மா ரெசிபியா. சூபர்.

  வெல்ல அவல் பிரமாதமா இருக்கே.
  செய்முறை விளக்கமும் அழகு. படங்களும் அருமை.
  வெல்லம், தேங்க்காய் காம்பினேஷன் சத்துள்ளது.
  நன்றி மா. பேரனுக்கு செய்து கொடுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. பார்க்கவே அவல் ஆவல் கொள்கிறது...
  வாழ்த்துகள் மேடம்.

  பதிலளிநீக்கு
 4. அம்மா கூட வாழ்ந்த காலங்களில் அம்மா அடிக்கடி செய்து தருவதுண்டு. இந்த பாதார்தத்தை மறந்தே போய் இருந்த எனக்கு இந்த பதிவு நினைவூட்டியதும் அல்லாமல் அம்மாவுடனான நினைவுகளையும் கிளறிவிட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? நினைவுகள் சுகமானவை, சில சமயம் சுமையானவை.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

  இன்று சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் கை மணத்தில் உருவான அவல் புட்டு ரொம்பவே நன்றாக, அருமையாக உள்ளது. நான் அவலை உடைத்து சேர்ப்பதில்லை. அப்படியே முழுதாகவே தேங்காய், வெல்லத்துடன் சேர்த்து செய்வேன். இந்த முறை அசல் புட்டு மாதிரி இருக்கும் என்பது உண்மைதான். இனி இந்த மாதிரி செய்கிறேன்.அருமையான செய்முறைகளை படங்களுடன் விளக்கிய சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 7. அவல் புட்டு அடிக்கடி செய்வது உண்டு. குழந்தைகள் இருக்கும் போது.
  நவராத்திரி காலங்களில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அவல் புட்டு, அல்லது அரிசி புட்டு உண்டு.
  செய்முறை படங்களுடன் பதிவு அருமை.
  பானு வந்தால் நன்றாக இருக்கும். அவர்கள் பதிவு அவர்களை பார்க்கும் உணர்வை தந்தது.

  கிருஷ்ணா உடனடி புட்டு மாவு அவலில் செய்த புட்டு மாவுதான். இனிப்பு, மட்டும் காரம் செய்ய்லாம் வெது வெதுப்பான தண்ணீர் விட்டு பிசரி வைத்து விட்டால் ஐந்து நிமிடத்தில் ரெடி. (நாம் செய்வது போல் இருக்கிறது அவசரத்திற்கு கை கொடுக்குது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கென்னமோ இந்தத் திடீர்த்தயாரிப்பு மாவுகளில் எல்லாம் செய்தால் சரியாக இருப்பதாய்த் தோன்றாது. ஆகவே இதெல்லாம் வாங்குவதே இல்லை.

   நீக்கு
 8. அவல் பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் மகனை நீங்கள் பார்த்ததில்லை. வருகைக்கு நன்றி. 

   நீக்கு
  2. ஆஆஆ இஎன்ன இது சம்பந்தமே இல்லாத பதில் என பல நாட்கள் ஓசிச்சு.... சரி சரி ஏதோ ஒரு புளோல வந்திட்டுது விட்டிருங்கோ:).. யோசிச்சுக் கண்டு பிடிச்சேன் பதிலை...
   எங்கள் இரு மகனுக்கும் பிடிக்கவே பிடிக்காது... சாஸ்திரத்துக்காக சுவாமிக்குப் படைச்சதென ஒரு குட்டி வாய் தீத்தி விட்டிடுவேன்..

   நீக்கு
  3. என் பிறந்தகத்திலும் அவல் அடிக்கடி பண்ண மாட்டாங்க. கிருஷ்ணன் பிறப்பு சமயத்தில் மட்டும் அவல் அதுக்குனு தனியா வாங்குவாங்க! அதே பெரியப்பா வீட்டில் மாலை பள்ளி விட்டு வந்ததும் ஆளுக்கு ஒரு கொட்டாங்கச்சியை எடுத்துச் சுத்தம் பண்ணிக் கொடுத்து அதில் அவலைப் போட்டுக் களைந்து கொள்ளச் சொல்லுவாங்க. பின்னர் அதில் வெல்லம், தேங்காய், ஊற வைத்த வேர்க்கடலை, தேங்காய்க்கீற்றுகள் போட்டுக் கிளறிக் கொடுத்துச் சாப்பிடக் கொடுப்பாங்க. அப்பா வீட்டில் நேர்மாறாக வயலில் இருந்து விளைந்து வரும் வேர்க்கடலையைக் கூடச் சாப்பிட விடமாட்டார். எல்லாவற்றையும் அக்கம்பக்கம் விநியோகம் பண்ணித் தீர்த்துடுவார். அம்மா மட்டும் தெரியாமல் ஒரு படி கடலையாவது எடுத்து வைத்து உருண்டை பிடித்து வைத்துக் கொடுப்பார்.

   நீக்கு
 9. ஆஆஆ இன்று பானுமதி அக்கா ரெசிப்பியோ.... நவராத்திரி ஆரம்பிக்கப் போவதன் ஆரம்பம்.
  நாங்களும் அவல் செய்வோம், ஆனா இவ்வளவு கஸ்டப்படாமல்:)...

  அடுப்பில்லாமல், அவலை தண்ணி விட்டுக் கழுவி எடுத்து ஒரு 20 நிமிடம் வைத்தால் சொவ்ட் ஆகிடும், பின்னர் அதற்குள் சக்கரையை இடித்துப் போட்டு தேங்காய்ப்பூ போட்டு சிலசமயம் சுவாமிக்கு எனில் கற்கண்டும் போட்டுப் பிரட்டுவோம்... அவல் ரெடீஈஈஈ:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவல் புட்டுக்கும், வெறும் வெல்லத்தைப் போட்டு கலக்கும் அவலுக்கும் வித்தியாசம் தெரியாமல், சிலர், கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கறாங்களே. இன்னும் என்ன என்ன புதுப் புது ரெசிப்பி அவங்கள்டேர்ந்து வரப்போகுதோ...

   நீக்கு
  2. இனிப்பாக ஏதாவது சாப்பிட்டால் தேவலை என்று தோன்றும் சில சமயங்களில் நீங்கள் சொல்லியிருப்பது போல செய்து சாப்பிடுவது உண்டு. நன்றி அதிரா. 

   நீக்கு
  3. நெல்லைத்தமிழன் இங்கின வந்தாரோ?:).. இல்ல யும்மாதேன் கேய்ட்டேன்ன்ன்:)...

   நீக்கு
 10. உங்கட ரெசிப்பியை ஒருமுறை ட்றை பண்ணுறேன் விரதத்துள்... வரும் வியாழன் தொடங்கி கந்தசஷ்டி சூரன் போர் வரை விரதம் தேன்ன்ன்ன்:)..

  தேங்காய்ப்பூப்போட்டுக் குழைச்ச பிறகு படமெடுக்க மறந்திட்டீங்க:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி எடுத்திருந்தால் முந்திரி போல தேங்காயும் அவலுக்குள் மறைந்திருக்கும். 

   நீக்கு
 11. அவல் புட்டு நல்லா வந்திருக்கு.

  முந்திரிப் பருப்பெல்லாம் தெரியலை என்றாலும் உள்ளேயே மூழ்கியிருக்கும்னு நினைக்கறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. முந்திரியை சேர்த்து, கிளறும் முன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். //உள்ளேயே மூழ்கியிருக்கும்னு நினைக்கறேன்.// திரவமாக இருந்தால் நீங்கள் சொல்லியிருப்பது சரி எனலாம். இது திட வஸ்து அல்லவோ? சொற் குற்றம்;)

   நீக்கு
 12. இன்னிக்கு பானுக்கா ரெசிப்பியா ..இந்த அவல் ஸ்வீட் அப்பா செய்வார் ஊரில் பாகு மாதிரி வெல்லத்தை காய்ச்சி அதில் ஏலக்கா போட்டு கெட்டி சிவப்பு அவலி ல் செய்வார் ..ரெசிப்பி நல்லா  இருக்கு 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஏஞ்சல். தொலைகாட்சியில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஏஞ்சல் என்று பெயர் கொண்ட கதாநாயகியை காமெடியன் அஞ்சலை என்று விழிப்பார், உடனே கதாநாயகன் ''ஏஞ்சல் டா'' என்றதும், காமெடியன் தமிழில் அஞ்சலை என்பார். பார்த்ததும் உங்கள் நினைவுதான் வந்தது. 

   நீக்கு
  2. ஆஆஆ பானுமதி அக்கா .... அதிரா பெயர் வரும் படம் பாருங்கோ இண்டைக்கு:)..

   நீக்கு
  3. ஹாஹா :) பானுக்கா ஜெர்மனில என்னை  அஞ்சலா ன்னு தான் கூப்பிடுவாங்க :) 

   நீக்கு
 13. புட்டு என்றாலே எனக்கு திருவிளையாடல் புராணமும் புட்டுக்கு மண் சுமந்த பெருமானின் நினைவும் வந்து விடும்.

  நேற்று எங்கள் வீட்டில் அவல் உப்புமா என்றால் இங்கே அவல் புட்டா?

  பதிலளிநீக்கு
 14. பானுமதி அக்கா இடையில மிஸ் பண்ணிட்டீங்க, ராமலஸ்மிக்கும் கோமதி அக்காவுக்கும் பதில் குடுக்கேல்லை:).. அதிரா கண்ணுக்கு அனைத்தும் தெரியுமே:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக பூஸார்களுக்கும் பூஸார்களின் கண்களுக்கும் எல்லாம் தெரியும்!.. என்பார்கள்..
   - ஜலங்கை மோகினி ...

   நீக்கு
 15. அருமையான குறிப்பிற்கு அன்பு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. பார்க்கும்போதே ருசியா இருக்கு . அருமை மேம் :)

  பதிலளிநீக்கு
 17. //பானு வந்தால் நன்றாக இருக்கும். அவர்கள் பதிவு அவர்களை பார்க்கும் உணர்வை தந்தது.//
  என்று நான் சொன்னேன். அது போல் வந்து விட்டார் பானு.
  மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 18. இன்று பானுமதியோட ரெசிபியா? அவல் புட்டு செய்வது எளிது. அவலை வறுத்து மாவாக்கித்தான் புட்டுப் பண்ணுவோம். வெல்ல அவலுக்கு அவலை வறுத்துக் கொண்டு நீர் விட்டுக் கிளறி அதிலே வெல்லம், தேங்காய் போட்டுக் கிளறியும் பண்ணுவோம். வெறும் அவலை ஊற வைத்துக் கொண்டு அதில் வெல்லத்தைப் பொடி செய்து போட்டுத் தேங்காய் சேர்த்தும் சாப்பிடுவோம். அல்லது சர்க்கரை சேர்த்துக் கொண்டும் அதில் தேங்காய் சேர்த்துப் பண்ணுவோம். கிருஷ்ணன் பிறப்புக்கு எங்க வீட்டில் இந்த ஊற வைத்த வெல்ல அவல் கட்டாயம் உண்டு. ஆனால் மாமியார் வீட்டில் அவலை ஊற வைக்காமல் அதிலேயே ஓர் வெல்லக்கட்டியை வைக்கச் சொல்லுவார்கள். கிருஷ்ணனுக்கு வெல்ல அவல் இல்லையேனு மனசு பரிதவிக்கும். :)

  பதிலளிநீக்கு
 19. பானுமதி இந்தச் சமையல் குறிப்பை முன்னரே எழுதி அனுப்பி இருப்பார்.ஆனாலும் இன்று வெளிவந்ததும் வந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் பதில் கொடுத்ததில் மனம் சந்தோஷம் அடைகிறது. தொடர்ந்து இணையத்தில் உலாவரும்படி வேண்டிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. ஆஹா... பிரமாதம். இன்றே செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!