வியாழன், 26 செப்டம்பர், 2019

நைட் லாம்ப்



இது கதை அல்ல...



பெரிய மருத்துவமனைதான் அது.  அம்மாவுக்கு ஹைப்போக்ளைசீமியா பிரச்னையால் மூன்று நாட்கள் ஆஸ்பத்திரி வாசம் செய்யவேண்டிய நிலை இருந்து, ஒருவழியாய் அதுவும் முடிந்து அன்று டிஸ்சார்ஜ்.

தனி அறையாய் எடுத்து சிகிச்சை எடுத்தாயிற்று.  ஒரு நாளைக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் கட்டணம் என்று நினைவு.  தொலைகாட்சி, ஏஸி, ஃ பேன் என்று சகல வசதிகளும் இருந்தது.

ஆனால் இரண்டு நாட்களும் இரவில் ஒருபிரச்னை.  இரண்டு மூன்று விதமாய் விளக்குகள் இருந்தும் (ஒரு ஓரமாய் அணைத்து ஒருபக்கம் மட்டும் போட்டுக் கொள்ளலாம்.)  இரவு விளக்கு இல்லாதது குறை.  சாதாரணமாய் நைட்லாம்ப் இருந்தால் தூக்கம் வராது. ஆனால் இங்கு எல்லா விளக்கையும் அனைத்து விட்டால் ஒரே இருட்டாய் இருந்தது.  விளக்குகளை அணைத்ததும் கண்கள் பழகினாலும் ஓரளவுக்குமேல் இருட்டுதான்.  அதற்காக ஒரு விளக்கைபோட்டுக்கொண்டே இருந்ததில் தூக்கம் சரியாய் இல்லை. அம்மா பற்றி கவலை இல்லை.   சும்மா மானிட்டரிங்க்குக்காகதான் இரண்டு நாள் அட்மிஷன்.

பணமெல்லாம் கட்டியாச்சு.  கிளம்ப வேண்டியதுதான்.   

உள்ளே வந்த நர்ஸ் ஒரு படிவத்தைக் கையில் கொடுத்தாள்.  அதில் அங்கு செய்யப்பட்ட சேவைகளில் ஏதும் கருணை இருந்ததா, என்ன யோசனை என்றெல்லாம் விசாரித்து மார்க் போடச் சொல்லி இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரிடமுமே நன்றாய் பழகியாச்சு என்பதாலும்,  இரண்டுநாட்களும் அவர்கள் அவ்வப்போது வந்து நல்ல உதவிகள் செய்ததாலும் அவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து விட்டு,  " எல்லாம் சரிதான்.  ஆனால் சின்னதா ஒரே ஒரு குறைப்பா..."  என்றேன்.

"என்னக்கா"  என்ன குறை?"

"ராத்திரி போட்டுக்க ஒரு நைட்லாம்ப்   இல்லாதது குறை.  எந்த சுவிட்ச் போட்டாலும் பளீரென்று எரிகிறது..."

"அட..   என்னக்கா?  இப்ப கேக்கறதை அப்பவே கேட்டிருக்கலாமே..." என்றவள்  நகர்ந்து சென்று பேஷண்ட் அட்டெண்டர் படுக்கும் படுக்கை அருகே தரையில் இருக்கும் ஸ்விட்ச்சைக் காட்டினாள்.  பல்பும் கீழ் மட்டத்திலேயே பொருத்தப் பட்டிருந்தது.

"அடப்பாவி...   இங்கே இருக்கா? 

அசடு வழிந்தது!

சில விஷயங்களை கூச்சம் பார்க்காமல் அவ்வப்போது கேட்டுவிடுவதே நல்லது இல்லை?

இது பாஸ் என்னிடம் சுருக்கமாகச் சொன்ன விஷயத்தை இங்கு வழக்கம்போல சற்று இழுத்துப் பகிர்ந்திருக்கிறேன்!  ("ஏங்க...   ஆஸ்பத்திரியில் நைட்லாம்ப்பே இல்லைன்னேன் இல்ல...?   கிளம்பறப்ப ராதிகா கிட்ட கேட்டேன்..   ஒரு நைட்லாம்ப் வச்சிருக்கக்கூடாதான்னு... அட என்னக்கா...  இதோ.. ன்னு நான் படுத்திருக்கும் பெஞ்ச் கீழ காட்டறா...")


===============================================================================================


முன்னர் சுஜாதா பகிர்ந்திருந்த ஒரு ஜென் கதையைச் சொல்லி இருந்தேன்.  அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்!  இப்போது மறுபடியும் சுஜாதா புதிர் போட்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறு கதை...  

Lolita எழுதிய நாபகோவ் என்கிற எழுத்தாளர் பற்றியது.  சுஜாதாவின் ஞாபகத்திலிருந்து அவர் அந்தச் சிறுகதையைச் சொல்லி இருக்கிறார்.

ஒரு அப்பா, ஒரு அம்மா;  ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.  ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது.  பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறு தினம்தான் போகமுடியும்;  அதற்குள்  என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அப்போது:

டெலிபோன் மணி அடிக்கிறது.  பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண்குரல்.  

"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை.  தப்பு நம்பர்" என்று வைத்து விடுகிறார்.

மறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் மணி அடிக்கிறது.

"ஹென்றி இருக்கிறானா?" அதே பெண்.

"மிஸ்,உனக்கு என்ன நம்பர் வேண்டும்?"

"5365849"

"என் நம்பர் 5365840.  ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது"

"ரொம்பத் தேங்க்ஸ்" என்று அந்தப் பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒரு வரிதான் இருக்கிறது.

சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நாபகோவின் புத்திசாலித்தனம் புரிகிறதா?  என்று கேட்கிறார் சுஜாதா.

புரிகிறதா?  பையன் ஆஸ்பத்திரியில் இருப்பதில் இருக்கிறது விடை என்று தோன்றுகிறது.  ஆனாலும் புரியவில்லை.


=============================================================================================

இதை எல்லாம் எப்படி நம்புகிறீர்கள்?என்று ஜீவி ஸார் கேட்கமாட்டார் என்று நம்புகிறேன்!   அங்கு வந்ததை, நான் படித்ததை பகிர்கிறேன்.  அஷ்டே!


அறிந்துகொள்வோம்' நுாலிலிருந்து: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, இடம் கொடுத்த தமிழர், சர்தார் ஆதிகேசவ நாயக்கர். 'சர்தார்' என்றால், வல்லபாய் படேல் என்று தான் பலருக்கும் தெரியும். 
காந்திஜியால், 'சர்தார்' என, போற்றப்பட்டார், இந்த தமிழர். காந்திஜியை, சென்னைக்கு அழைத்து வந்து, கூட்டம் போட்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, திலகர் திடல் கல்வெட்டில், சர்தார் ஆதிகேசவ நாயக்கரின் பெயரை காணலாம்.

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக, 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். வரிகொடா இயக்கத்தில் பங்கேற்றதால், இன்றைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள, பல கோடி ரூபாய் மதிப்பிலான இவரது சொத்துகளை, ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போதும், தொடர்ந்து தேச விடுதலைக்காக போராடியவர். 

காந்திஜிக்கு தெரிந்த இவரின் பெருமை, சென்னை தமிழனுக்கு தெரியாதது, வருத்தமான விஷயம். இதன் விளைவு, நாட்டுக்கு உழைத்த இந்த மாமனிதருக்கு எங்குமே சிலை இல்லை.

இவரது குடும்பத்தினர், தற்போது, சென்னையில் தான் வசித்து வருகின்றனர். சென்னை மண்ணிற்கு எவ்வித தொடர்பும் இல்லாதவர்களுக்கு எல்லாம், சிலைகள் எழுப்பி வணங்கும் நாம், மண்ணின் மைந்தர், சர்தார் ஆதிகேசவ நாயக்கரை நினைத்து பார்ப்போமா!  


தினமலர் திண்ணை பகுதியிலிருந்து... 


=====================================================================================================

பேஸ்புக்கில் பகிர்ந்ததுதான்... இங்கும் பகிர்கிறேன்.  பேஸ்புக்கை விட இங்கு ரெஸ்பான்ஸ் கொஞ்சமாவது கூட இருக்கும்!!

எல்லோருக்கும் 
எழுத வாய்ப்பு
அன்றாடம் நிரம்புகின்றன
அண்டப் புத்தகத்தின் 
பக்கங்கள்.

புத்தகம் தயார் 
பக்கங்கள்தான் 
இன்னும் 
நிரம்பிக்கொண்டே இருக்கின்றன.



======================================================================================

140 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க கீதாக்கா....  

      நல்வரவும், வணக்கமும்,  நன்றிகளும்.

      நீக்கு
  2. இப்போதெல்லாம் பெரும்பாலும் இரவு விளக்குகள் கீழேயே பதிக்கப்படுகின்றன. இங்கே யு.எஸ்ஸில் எல்லா விளக்குகளுமே கீழே தான் இருக்கும். இப்போது கட்டப்படுவனவற்றில் கொஞ்சம் உயரத் தூக்கி வைக்கின்றனர். எங்க குடியிருப்பு வளாகத்தின் எல்லாக் குடியிருப்புக்களிலும் இரவு விளக்குக் கீழே இருக்கும். வீட்டுக்கு விருந்தாளிகளாக வருகிறவங்களுக்கு நாங்க உள்ளே நுழைந்ததுமே பாடம் எடுத்துடுவோம். இது கீஸர் ஸ்விட்ச், இது விளக்கு, இது இரவு விளக்கு, இது மின் விசிறி. இரண்டு பக்கங்களில் இருந்தும் போடலாம். இது ஏ.சி. என. :))) அசடு வழியக் கேட்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சம்பவம் இப்போதல்ல, இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது!  அப்போது அசடு வழிந்ததை எழுதலாமேயென்றுதான்....

      நீக்கு
  3. ஹென்றி என்பது அந்தப் பையரா? அல்லது இவரின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கச் செய்த யுக்தியா? எனக்கெல்லாம் ம.ம. சட்டுனு புரியாது. புரிஞ்சவங்க சொல்லட்டும். கேட்டுக்கறேன். பையர் இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் புரியவில்லை என்றுதான் இங்கேகொடுத்திருக்கிறேன்.   தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் யாராவது சொன்னால் நானும் தெரிந்து கொள்ளலாமே என்று... புதிய புதிய ஐடியாக்களும் கிடைக்கும்!

      நீக்கு
  4. சர்தார் ஆதிகேசவ நாயக்கர் பற்றிச் சென்னைப்பட்டினத்தின் கதை புத்தகத்தில் ஆறாம் வகுப்பில் படிச்ச நினைவு. சர்தார் என்பது வீர, தீர சாகசங்களோடு சுதந்திரப் போராட்டத்துக்குப் போராடியவர்களைச் சொல்லுவார்கள் என நினைக்கிறேன். இதே போல் திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டையில் சர்தார் சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் இருந்தார். இவரை வைத்துத் தான் ர.சு.நல்லபெருமாள் "கல்லுக்குள் ஈரம்" நாவல் எழுதினார். இவங்க எல்லாம் புரட்சிக்காரர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அவர் பெயரும் கேள்விப்பட்ட மாதிரிஇருக்கிறது.   கல்லுக்குள் ஈரம் என்றால் பாரதிராஜா படம்தான் நினைவுக்கு வருகிறது!  ஒரே ஒரு நல்ல பாட்டு!  

      நீக்கு
  5. அண்டப்புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றா, இரண்டா? எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? முகநூலில் இந்தக் கவிதையைப் பார்த்த நினைவு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையாவது படிக்கும்போது அதில் தோன்றும் நம் சிந்தனைகளை இப்படி மாற்றி விட வேண்டியதுதான்! !

      நீக்கு
  6. வேதாரண்யம் உப்பு சத்யாக்ரஹத்தில் கலந்துக்கொண்டவர் 'சர்தார்'வேதரத்தினம்பிள்ளை. ராஜாஜியுடன் அதில் கலந்துக் கொண்டார்.

    பதிலளிநீக்கு
  7. கமெண்ட் போடுவதற்குமுன் ஒரு சிந்தனை:
    எங்கே ரொம்ப நாளா காமாட்சி அம்மாவைக் காணோம்? கீதா ரெங்கனைக் காணோம்? தகவலுண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை.  தள்ளாமை.

      கீதா ரெங்கன் கை வலி...   தோள்பட்டை வலி...

      நன்றி ஏகாந்தன் ஸார் .

      நீக்கு
    2. உடல் சிரமங்களிலிருந்து இருவரும் விரைவில் மீண்டு வரட்டும் நலமாக.

      நீக்கு
  8. அன்பு கீதாவுக்கு மாலை வணக்கம். மற்றவர்களுக்கு இனிய காலை வணக்கம். அனைவரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    ஒரே ஆஸ்பத்திரி வாசனை.:)
    தரையில் பட்டனா.
    இங்கே தரை உய்ரத்தில் ப்ளக்குகள் இருக்கும். குழந்தைகள் வந்தால்
    மூடி வைத்துவிடுவோம்.

    சுஜாதா கதை புரியவில்லை. யாராவது சொல்லட்டும்.

    முக நூல் அண்ட புத்தகமா ஆஹா. எனக்கும் இதைப் படித்த மாதிரி நினைவில்லை.
    நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...    வணக்கம்..   (எதற்கு காலை மாலை என்று குழம்பிக்கொண்டு!!!)

      சுஜாதா கதை இல்லை அது.   கதையைப் பிடித்தால் அந்த மிச்ச ஒருவரி கிடைத்துவிடும்.  இதெக்கெல்லாம் எஞ்சல்தான் சரி...   அவர்தான் இதை எல்லாம் தேடி எடுப்பார்!

      நீக்கு
    2. Fiction
      May 15, 1948 Issue
      Symbols and Signs
      By Vladimir NabokovMay 7, 1948

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆ ஆராட்சி அம்புஜம் லாண்டட்ட்ட்:))

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா...   வாங்க...  வாங்க...  கால் வீக்கம் எல்லாம் குறைந்து நார்மலாயிருப்பீர்கள் என்று நம்புகிறேன் / விரும்புகிறேன்.

      நீக்கு
    2. நலமாகி விட்டேன்.
      நம்பிக்கை, விரும்பம் இரண்டுக்கும் மிக நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. உற்சாகம் தரும் செய்தி.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  10. ஆதி கேசவ ஐயா பற்றி
    எப்பொழுதோ படித்த நினைவு.
    தமிழர்களுக்கு யாரை எங்கே வைப்பது என்றே தெரியாதே.

    பதிலளிநீக்கு
  11. //தரையில் இருக்கும் ஸ்விட்ச்சைக் காட்டினாள். பல்பும் கீழ் மட்டத்திலேயே பொருத்தப் பட்டிருந்தது.//

    மருத்துவமனையில், ஓட்டலில் தங்கும் அறைகளில் இப்படி கீழ் பகுதியில் விளக்கு இருக்கும்.
    ஸ்விட்ச் கட்டில் அருகில் இருக்கும்.

    நீங்கள் முதல் நாளே கேட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நைட்லாம்ம்ப்பே தேவை இல்லை கோமதி அக்கா.   எனக்கு இருட்டா இருந்தால்தான் தூக்கம் வரும்!

      நீக்கு
    2. வீட்டில் வெளிச்சம் தேவையில்லை, ஆனா புது இடம் எனில் நிட்சயம் தேவைப்படும் இல்லை எனில் பயமாக இருக்கும்.. ஹோட்டேல்களில்.. அப்போ ஹொஸ்பிட்டல் எனில் எவ்ளோ பயமாக இருக்கும்:)

      நீக்கு
  12. சர்த்தார் ஆதிகேசவநாயக்கரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
    அண்டபுத்தகம் கவிதை மிக அருமை.
    //நாபகோவின் புத்திசாலித்தனம் புரிகிறதா? என்று கேட்கிறார் சுஜாதா//

    தேவை இல்லாமல் தன் போன் நம்பரை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்ட புத்திசாலித்தனத்தை பற்றி கேட்கிறார் போலும்.

    பதிலளிநீக்கு
  13. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் நான் குடியிருந்த குடியிருப்பில் இரவு விளக்கின் ஸ்விடச் படுக்கையை ஒட்டி கை எட்டும் இடத்தில் கீழே ஆமைத்திருப்பதை பார்த்துவிட்டு என்னுடைய வீட்டிலும் அவ்வாறே அமைத்தேன். படுக்கையில் இருந்தவாறே இயக்கமூடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் ஜோஸப் ஸார். எங்களுக்கு அல்லது என் பாஸுக்கு அப்போது அது தெரிந்திருக்கவில்லை!

      நீக்கு
  14. சென்னை எப்பொழுதுமே ஊரைவிட்டு ஓடி வந்தவர்களுக்கே பூர்வீகமாக மாறி வருகிறது.
    தமிழன் நன்றி மறப்பவனாக மாறிவிட்டான் இதே தமிழன் சசிகலாவை தியாகத்தலைவி என்கிறான் இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை.

    தரையில் பல்பு வைக்கும் விடயம் வந்து 25 வருடங்களை தாண்டி விட்டதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி... ச்சிகலா, கருணாநிதியோ ஸ்டாலினோ செய்யாத தவறு ஏதேனும் செய்திருக்கிறாரா? சொல்லுங்க... எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே லட்சியம்தான்... எப்படி தனக்கும் குடும்பத்திற்கும் சொத்து சேர்க்கிறது, மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கணும், அதிகாரத்தை வைத்து தாங்கள் முன்னுக்கு வரணும். இது இல்லாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டாங்க.

      விஜய் தெரியுமா, வ.உ.சிதம்பரம் பிள்ளை தெரியுமான்னு யார்ட்ட வேணும்னாலும் கேட்டுப்பாருங்க.

      நீக்கு
    2. மேலே ஜோஸப் ஸாருக்கு சொன்ன பதிலே உங்களுக்கு கில்லர்ஜி!

      நன்றி!

      நீக்கு
  15. நைட்லாம்ப் - எனக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் வந்திருக்கு. இரவில் ஹோட்டல் அறையில் (துபாய்) சில விளக்குகளை அணைக்க ஸ்விட்ச் எங்கன்னு தெரியாம க்வில்டுக்குள்ள தலையை மூடிக்கிட்டு தூங்கியிருக்கேன்.

    பையன் இறக்கும்வரை ஏன் காத்திருக்க நினைக்கிறார்கள்?

    சுதந்திரப் போராட்ட வீர்ர்கள், தலைவர்களின் தியாகம், அவர்களின் சந்ததியை எவ்வளவோ பாதித்திருக்கிறது. நாட்டு மக்கள் யாருமே அவர்களைப்பற்றிக் கவலை கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி...    துணைக்கு ஆள் இருக்கு...  நம்ம கட்சியில இன்னொருத்தர்!

      //பையன் இறக்கும்வரை //

      திருத்தி விட்டேன்.  மட்டுமல்லாது வாகன வசதி காரணமாக கதைக்கு வசதியாக மறுநாள்தான் போகமுடியும் என்று சொல்கிறார்கள்!

      நீக்கு
    2. //பையன் இறக்கும்வரை ஏன் காத்திருக்க நினைக்கிறார்கள்?//

      ஆஆஆ இப்போதான் பார்க்கிறேன்ன் இதை:).. எழுத்துப்பிழையக்கூட சரியாக கணிச்சு எடுக்க முடியாமல் ஒரு அப்பாவிப் பையனை இறக்கும் தறுவாய்க்கு நகர்த்தி விட்டாரே எங்கட டமில்ப் புரொஃபிஸர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      அதிரா கண்ணுக்கு அனைத்தும் தெரியுமெல்லோ:)).. அதனாலதான் துரை அண்ணனே ஜொள்ளிட்டார்ர் ஜலங்கை மோகினியாமே:)).. அவ அவ்ளோ அழகாக இருப்பாவோ?:))

      நீக்கு
    3. //அவ அவ்ளோ அழகாக இருப்பாவோ?:)// - ஆமாம்... அதிலும் அந்த பெஞ்சுல உட்கார்ந்துக்கிட்டு, பக்கத்துல இருக்கற பூங்கொத்தோட (நீங்கதான் பார்த்திருக்கீங்களே...உங்க ஊர்ல. நிறைய பெஞ்ச், அதில் பூங்கொத்து) மெல்லிய நீராவி போன்ற உருவத்தோட.... அழகாவே இருப்பாங்க.

      நீக்கு
    4. //நிறைய பெஞ்ச், அதில் பூங்கொத்து) மெல்லிய நீராவி போன்ற உருவத்தோட.... அழகாவே இருப்பாங்க.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்:) இது என்ன புயு வம்பாக்கிடக்கூஊ:))

      https://www.holidogtimes.com/wp-content/uploads/2016/05/crazy-running-cat-1.jpg

      நீக்கு
    5. நீராவி போன்ற உருவத்தோடா...?  ஹையோ...   ஒண்ணும் புரியலையே...

      அபுரி.  அபுரி...  அபுரி!

      நீக்கு
  16. உடனே என்றால் மௌத்தினம்தான் போகமுடியும்;//what is மௌத்தினம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெளத் - இறப்பு மெளத் தினம் - இறந்த அன்று - இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். மவுத் ஆயிட்டான் அப்படீன்னா இஸ்லாமியர்களிடையே, 'செத்துப் போயிட்டான்' என்று அர்த்தம்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ நான் கீழே எழுதிப்போட்டு வந்தேன் இங்கு நெ.தமிழன் விளக்கம் கொடுத்திருக்கிறார்ர்.. ஆ அது அரபு மொழி.. ஊரில் இஸ்லாமியர்களோடு பழகியதால்.. இது மனதில் இருந்தது ஆனா சிங்களமாக இருக்குமோ எனவும் சந்தேகம்..

      ஆனா ஸ்ரீராம் சொல்ல வந்தது ~மறுதினம்~ என ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. //ஸ்ரீராம் சொல்ல வந்தது// - கற்றாரைக் கற்றாரே காமுறுவர்... இப்போல்லாம் உங்கள்ட இருந்து 'ஸ்பெல்லிங் மிஸ்டேக்' (நாகரீகமா தட்டச்சுப் பிழை) விடுவது ஸ்ரீராமுக்கும் வந்துட்டோ?

      நீக்கு
    4. திருத்தி விட்டேன்.  மறு தினம்தான் போகவேண்டும் என்றிருக்கவேண்டும்.
      பிழைபொறுத்தருள்க...!

      நீக்கு
    5. நெல்லை, அதிரா...

      அதிரா சரியாக யூகித்திருக்கிறார்.  டைப்பிக்கொண்டே வரும்போது அந்த வார்த்தையில் R மட்டும் அழுந்த விட்டுப்போனதால் வந்த வினை!

      நீக்கு
    6. @நெ தமிழன்
      //ஸ்ரீராம் சொல்ல வந்தது//

      ஏன் இதில் தப்பு இருக்கோ? இது பேச்சுவழக்குத்தானே.... வியக்கம் பீச்ச்ச்ச்ச்ச்ச்ச்?:))

      //கற்றாரைக் கற்றாரே காமுறுவர்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  17. ///இது பாஸ் என்னிடம் சுருக்கமாகச் சொன்ன விஷயத்தை இங்கு வழக்கம்போல சற்று இழுத்துப் பகிர்ந்திருக்கிறேன்!//

    ஆஆஆஆ நீங்களும் எனைப்போல:), புள்ளி போட்டால் கோலம் போடும் பெயர்வழிபோல இருக்கே ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நீங்கள் என் பழைய இழுவை எல்லாம் படித்ததில்லை போல!!!

      நீக்கு
  18. //சில விஷயங்களை கூச்சம் பார்க்காமல் அவ்வப்போது கேட்டுவிடுவதே நல்லது இல்லை?
    //
    100 வீதம் உண்மை, ஸ்ரீராம் தான் கூச்சப்படுவார் என நினைச்சுக்கொண்டிருக்கிறோம்:)) ஆனா அண்ணி அதைவிடக் கூச்சப்படுறாவே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பாஸ் பரவாயில்லை.  ஆனால் அவர் அப்படிஇருந்திருக்காது என்றே நினைத்திருக்கிறார்.  ஸ்விட்ச்கள் இருக்கும் இடத்தில இருந்த சுவிட்ச் எல்லாவற்றையும் அழுத்தி  விட்டார் என்பதால் அவருக்கு தோன்றவில்லை!

      நீக்கு
    2. கீழே இருக்கும் சுவிஜ் தெரிய ஞாயமில்லை.. உண்மையில் நேர்ஸ் வந்து சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் கேட்காமலேயே...

      நீக்கு
  19. எல்லாமே நமக்கு அனுபவம் மூலம்தானே கிடைக்கிறது, பிறக்கும்போதே தெரிஞ்சுகொண்டா பிறக்கிறோம்.. இப்படிச் சம்பவங்கள் நடக்கும்போதுதான் தெரிஞ்சு கொள்கிறோம்..

    பதிலளிநீக்கு
  20. //உடனே என்றால் மௌத்தினம்தான் போகமுடியும்; //

    ஆஆஆஆஆஆ என்ன ஸ்ரீராம் இப்படிச் சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா சில சமயம் எழுத்துப்பிழைகள்.. அர்த்தத்தை மாற்றிப்போடுது:))

    ... மெளத்தாகிட்டார் என ஒரு பாஷை இருக்கிறதெல்லோ.. அதாவது காலமாகிட்டார் என்பது.. அது எந்தப் பாஷை என சரியாக தெரியவில்லை.. சிங்களம் அல்லது இஸ்லாமிய.. அரபு மொழியாக இருக்கோணும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் யூகித்திருப்பது நூறு சதவிகிதம் சரி அதிரா...   பதிவிலும் திருத்தி விட்டேன்.  ஆத்தாடி...    கதைக்குப் பொருத்தமாக அர்த்தமே அனர்த்தமாகிறதே!

      நீக்கு
  21. // இப்போது மறுபடியும் சுஜாதா புதிர் போட்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறு கதை... //

    இக்கதையில் புதிர்க்கேள்வி இருக்கோ? புரியவில்லையே...

    ஒருவேளை கோல் பண்ணும் அப்பெண்ணும், புத்தி சுவாதீனமானவராக இருக்குமோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஒரு வரியில் அந்தக் கதை முடியவேண்டும்.    ஏஞ்சல் சரியாகக் கண்டு பிடிப்பார் பாருங்கள்!

      நீக்கு


    2. yes i got it .
      he tries to escape or ends his life because he becomes extremely volatile

      நீக்கு
    3. @ஸ்ரீராம்:)
      //ஏஞ்சல் சரியாகக் கண்டு பிடிப்பார் பாருங்கள்!//
      இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எங்களைக் களம் குதிச்சு அடிபட விட்டிடுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      //yes i got it yes i got it .
      he tries to escape or ends his life because he becomes extremely volatile .//

      ஹா ஹா ஹா என்னா நம்பிக்கை பாருங்கோ அஞ்சுவுக்கு:).. பாருங்கோ பிள்ளை ரோட்டலி புரூட்டலி கொயம்பிட்டா:)) இப்போ இவோக்கு வைத்தியம் பண்ணணுமே முதலில் கர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  22. சர்தார்ஜிகள் பற்றிய கதை ஒன்று பூஸ் ரேடியோவில் கேட்டேன்.. அதிர்ந்து போயிட்டேன்ன்ன்.. படிச்சு நீங்களும் அதிருங்கோ:)).. எதுக்கும் அருகில் இருப்பவரைப் பிடிச்சுக்கொண்டு படியுங்கோ இதை:))

    அதாவது சர்தாஜி ஜோக் என, நாம் அவர்கள் பற்றி பல முட்டாள்தனமான வேலை செய்வோர் என்பதுபோல நிறைய ஜோக்ஸ் படிக்கிறோம், நகைக்கிறோம், ஆனா உண்மையில் சர்தார்களில் ஒரு பிச்சைக்காரர்கூட கிடையாதாமே... பிச்சையே எடுக்க மாட்டார்களாம்..

    என்ன அதிர்ந்து போயிட்டீங்களோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   அதிர்ந்து போய்விட்டேன்...    நான் முன்னாலேயே படிச்சிருப்பது இப்போதுதான் உங்களுக்குத் படிக்கக் கிடைத்திருக்கிறது என்று தெரிந்து அதிர்ந்து போய்விட்டேன்!

      நீக்கு
    2. @3raam:)
      https://secure.i.telegraph.co.uk/multimedia/archive/03269/Angry_Cat_1_3269958k.jpg

      நீக்கு
  23. // பேஸ்புக்கை விட இங்கு ரெஸ்பான்ஸ் கொஞ்சமாவது கூட இருக்கும்!!//

    ஆவ்வ்வ்வ்வ் உண்மையாவோ?:)) அல்லது எங்களை உசுப்பேத்தி விடுறீங்களோ?:)), ஏனெனில் இப்போ வலையுலகை விட்டு எல்லோரும் பேஸ்புக்கில்தானே தஞ்சமாகி விட்டனர்:))..
    நாம் தானாக்கும் ~அப்பா வெட்டிய கிணறு என்பதற்காக, உப்பு நீரையே குடிச்சுக் கொண்டிருக்கிறோமோ~ எங்கும் முன்னேறிப் போகாமல் என நினைச்சுக் கொண்டிருக்கிறேன்:)).. ஆனாலும் மகிழ்ச்சி எங்கு கிடைக்கிறதோ அங்குதான் எனக்கு சொர்க்கம்.. அது மிக மிகப் புராதனமான ஒன்றாக இருந்தாலும்கூட:))

    ஆனா எதையும் அறியாமல் தெரியாமல் இருப்பதில்லை, எல்லா இடமும் போய், பேஸ்புக் ருவிட்டர் என.. முடிவில் இதுதான் நல்லது என திரும்ப ஓடி வந்தேன் இங்கு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அல்லது எங்களை உசுப்பேத்தி விடுறீங்களோ?:))/

      ச்சே...  யாரை ஏமாற்றினாலும் ஏமாற்றலாம்...   இவங்க மட்டும் உஷாரு! ஆனால் அங்கு நிஜமாவே இங்கை விட கம்மியாகத்தான் ரெஸ்பான்ஸ் வருகிறது அதிரா.

      எல்லோரும் பேஸ்புக்கில் தஞ்சம்தான்..  ஆனால் பிடித்தாரா யாரும் என்பதே தெரியாது!

      நீக்கு
  24. iம்முறை ஸ்ரீராம் கொஞ்சம் செந்தமிழ் பாவிச்சுக் கவிதை எழுதிட்டாரோ?:) ஏனெனில் அதிராவுக்கே புரியவில்லை:) அப்போ பேஸ்புக்கில இருப்போருக்கு எப்பூடிப் புரியும்?:) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த சுவாமிப்படம் கட்டியிருக்கும் தெருவோர மரத்தடியில் எறிஞ்சிடுங்கோ ஸ்ரீராம்:))..

    //அண்டப் புத்தகத்தின்
    பக்கங்கள்.//
    அண்டம் என்றால் உலகம்தானே?.. வசனம் சரியாகப் புரியவில்லை..

    //புத்தகம் தயார்
    பக்கங்கள்தான்
    இன்னும்
    நிரம்பிக்கொண்டே இருக்கின்றன//

    இதிலும் வசனம் பொருந்தாமல் இருப்பதைப்போல ஒரு ஃபீலிங் வருதே...

    “பக்கங்கள்
    நிரம்பிக்கொண்டே
    இருக்கின்றன
    புத்தகம் தான்
    இன்னும்
    தயாராகவில்லை”.. இப்படி வந்திருக்கோணுமோ.. எனக்கு இது புரியவில்லை ஸ்ரீராம் .. நான் ஏற்கனவே 3 நாட்களாக குழம்பிப்போய் இருக்கிறேன் :(....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை புத்தகம் தயார்.   ஏற்கெனவே எழுதி வைத்த வாழ்க்கையைத்தான் நாம் வாழ்கிறோம்.  நமக்குதான் அது தெரியாது.  நாம் வாழ்ந்து முடித்த ஒரு நாள் தீர்ந்த உடன் ஒருபக்கம் அங்கு காணக்கிடைக்கிறது...   அதை நாம் எழுதியதாக நினைத்துக் கொள்ளலாம்.

      நீக்கு
    2. எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை, சரி விடுங்கோ ஏதோ நல்ல தத்துவம் சொல்லியிருக்கிறீங்கள்.

      நீக்கு
    3. //எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை,// - என்னாத்தப் புரியலை உங்களுக்கு? அவனவன் கைரேகை, ஜாதகம் இதெல்லாப் பார்த்து இப்போ கல்யாணம் நடக்கும், இத்தனை பெத்துக்குவீங்க, இப்போ போயிடுவீங்கன்னு புட்டுப் புட்டுச் சொல்றான். அவன் சொல்றதெல்லாம் அப்படியே (ஜோஸியரின் திறமையைப் பொறுத்து) நடக்குது. அப்புறமும் அது முன்ன்ன்ன்ன்னரே எழுதி வைத்த வாழ்க்கை ஸ்கெலடன் என்பது புரியலையா?

      நீக்கு
    4. மீ தான் 108 ஆவதூஊஊஊஊஊ:)) ஆஆ நெல்லைத்தமிழன் நீங்க கொஞ்சம் உறுக்கியதும்தாம் புரிஞ்சது ஹா ஹா ஹா இப்போ எல்லாமே புரியுது எனக்கு:))..

      எல்லோரையும் இங்கு அடிபட விட்டுப்போட்டு:)) ஸ்ரீராம் ஒரக்கண்ணால் கொமெண்ட்ஸ் படிச்சுப் படிச்சு வேலையில் படு பிஸியாக இருக்கிறார்ர்:)) ஹா ஹா ஹா.. நமக்கு எப்பவும் ரைம் தேவைப்படும்போதுதான்.. அன்று பார்த்து ஏதோதோ வேலை எல்லாம் வரும்:)).. விதி வலியது...

      நீக்கு
    5. ஆமாம் மியாவ் :) ஸ்ரீராம் கதை சுருக்கத்தை போட்டதில் ஓடி படிச்சி யோசிச்சி  அந்த situation போன உணர்வில் என்னென்னமோ ஆகியிருக்கேன் ஆனா அவரைக்காணோம் :)

      நீக்கு
    6. //ஸ்ரீராம் ஒரக்கண்ணால் கொமெண்ட்ஸ் படிச்சுப் படிச்சு வேலையில் படு பிஸியாக இருக்கிறார்ர்:))//

      ஓரக்கண்ணால் கூடப் பார்க்கவில்லை!  இப்போதுதான் பார்க்கிறேன்.

      நீக்கு
    7. // ஓடி படிச்சி யோசிச்சி அந்த situation போன உணர்வில் என்னென்னமோ ஆகியிருக்கேன் ஆனா அவரைக்காணோம் :) //

      வந்து விட்டேன்.  கொஞ்சம் வேறு வேலை வந்து விட்டது! நன்றி ஏஞ்சல்...   பல்லிடுக்கில் சிக்கிய பாக்கை விடுவித்ததற்கு!

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. அனைத்தையும் விரிவாக இப்போதுதான் படித்தேன். விளக்கின் சூட்சுமம் பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிப்பது சிரமம்தான் போலிருக்கிறது.

    சுஜாதா எதையுமே நறுக்கென்ற வாசகத்தில் சுருக்கமாக விவரிக்கும் அருமையான எழுத்தாளர். அந்த கதையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பையன் சிகிச்சை முடிவில் (அல்லது ஆரம்பத்திலேயே) பெண் குரலில் பேசும் பெண் பித்தர் ஆகிவிட்டார் போலும். ஒரு ஊகந்தான். அதைத்தான் கவலைக்கிடம் என மருத்துவமனை முடிவு செய்து அழைத்திருக்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது. கடைசி பூஜ்யத்தை ஒரு வரியில் விளக்கி விட்டாரோ என நினைக்கவும் தோன்றுகிறது. சர்தார்ஜி கதைகள் பெரும்பாலும் அசட்டு பிசட்டென்று இப்படித்தான்... இன்னமும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  கதம்பத்தை ரசித்ததற்கு நன்றி.  சர்தார்ஜி கதைகளுக்கும் (ஜோக்குகளுக்கும்)  இந்த சர்தார் அடைமொழிக்கும் சம்பந்தமில்லை!  

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நானும் ஜென் கதை என்பதாக குறிப்பிட மறந்து சர்தார்ஜி என தவறுதலாக எழுதி விட்டேன்.மன்னிக்கவும்.

      தாங்கள் பகிர்ந்துள்ள திரு.ஆதி கேசவ நாயக்கரின் விடுதலை தாகத்தையும், அவரின் பெருமைகளையும்,படித்தறிந்து கொண்டேன். சிறப்பான பகிர்வு.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி அக்கா...    இதில் மன்னிக்க என்ன இருக்கிறது?!!

      நீக்கு
  26. சர்தார் ஆதிகேசவ நாயக்கரின் பெயரை காணலாம்.//

    சர்தார் என்று காந்தியே (எதற்கும் மகாத்மா காந்தி என்று தெளிவுபடுத்துகிறேன் -போலிகளின் காலம்!)- அழைத்திருக்கிறார் ஆதிகேசவ நாயக்கரை. எப்பேர்ப்பட்ட தமிழர் ? சென்னை செண்ட்ரலுக்கு இவருடைய பெயரை வைத்திருக்கவேண்டும். வழக்கம்போல் நம்ம தமிளன் அறிந்திராத தமிழர் ! என்ன செய்வது?

    ‘சர்தார்’ என்பது ஒரு டைட்டில் போல் வடநாட்டில் selective -ஆக பயன்படுத்தப்பட்ட அந்தக்கால வார்த்தை. ஒரு 'Chief', 'Chieftain' என்பதாக - ஒரு பெரிய அல்லது உயர்ந்த நிலையில் -a man championing a cause . இந்த வார்த்தைப் பிரயோகத்தை ஸர்தார், ஸர்தார்ஜி (சீக்கியர்) எனக் குழப்பிக்கொள்ளக்கூடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு டியூப்லைட்.    சர்தார்ஜி பற்றி இங்கு ஏன் பிரஸ்தாபம் வந்தது என்று இப்போதுதான் யோசிக்கிறேன்!

      நீக்கு
  27. ..பக்கங்கள்தான்
    இன்னும்
    நிரம்பிக்கொண்டே இருக்கின்றன.//

    அண்டப்புத்தகம் என்பது குண்டுப்புத்தகம் என விளக்கவேண்டியதில்லை! அது நிரம்பிக்கொண்டேதான் இருக்கும். எல்லோரும் இவ்வண்டத்து எழுத்தாளர் அல்லவா!

    பதிலளிநீக்கு
  28. ஸ்ஸ்ஸ்ஸ்யப்பாஆ இப்போதான் டைம் கிடைச்சது :)  வணக்கம் எல்லாருக்கும் 

    பதிலளிநீக்கு
  29. போனில் படித்தேன் இருங்க முதலில்  பாராட்டுக்கள் ஒரு சின்ன சம்பவத்தை வைத்து அழகாய் கதை சொல்லியமைக்கு :)எனக்கே சமீபத்தில் அசடு வழிய வைத்தது ஒரு சம்பவம் ஹாஸ்பிடலில் :)4 மாசமா 3 நிமிஷத்தில் போக வேண்டிய மெயின் வாயிலுக்கு  ஊரை சுற்றி 8 நிமிஷம் நடந்து போயிருக்கேன் :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு சின்ன சம்பவத்தை வைத்து அழகாய் கதை சொல்லியமைக்கு :)/

      இரவு மருத்துவமனையில் படுத்திருப்பதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.  ரொம்ப இழுக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

      நீக்கு
  30. //பையன் ஆஸ்பத்திரியில் இருப்பதில் இருக்கிறது விடை என்று தோன்றுகிறது.  ஆனாலும் புரியவில்லை.//
    இதில் புரிய சுலபம் எனக்கு ..எதுக்கு சொல்றேன்னா அங்கே தானே வேலை செய்கின்றேன் இப்போ 
    //ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். //
     மெண்டல் அசைலம்கள் மனுஷரை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளும் .அடைந்த இடம் ஆன்டி டிப்ரசென்டஸ் அச்சோ  :( பாவம் அவர்கள் நிலை ..உண்மையில் நாம்  எல்லாருக்கிமே சிறு  மெண்டல் ஹெல்த் இஸ்யூஸ் இருக்கு ஆனா பெரும்பாலானோர் எல்லாவற்றையும் பாஸிடிவாக்கி கடந்து செல்வர் .இயலாதோர் அடைக்கப்படும் இடம் ஹாஸ்பிடல் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எல்லாருக்கிமே சிறு மெண்டல் ஹெல்த் இஸ்யூஸ் இருக்கு// - இதைத்தான் கீதா சாம்பசிவம் மேடத்தின் தலைவர் 'உலக்கை நாயகன்' தேவர் மகன் படத்தில் சொல்வாரோ? என்னுள்ள தூங்கிக்கிட்டிருக்கற மிருகத்தைத் தட்டி எழுப்பாதே என்பது போல...

      நீக்கு
    2. ஹாஹ்கா இப்போ கமல் அங்கிளை எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க :)ஆனாலும் இது 100 % உண்மை தான் .இங்கே கோடிக்கணக்கில் பணம் இருப்போருக்கும் டிப்ரேஷன் இருக்கு ஹோம்லெஸ் பெர்சனுக்கும் இருக்கு .மிக பெரிய கிரிமினல் லாயர் ஒருவர் ஹாஸ்பிடலில் இருந்தார் .நானா அவரை பார்த்து முதலில் யாரோ  டாக்டர்னு நினைச்சேன் !! பிறகுதான் தெரிந்தது அவர் பேஷண்ட் என்றே  

      நீக்கு
    3. ////எல்லாருக்கிமே சிறு மெண்டல் ஹெல்த் இஸ்யூஸ் இருக்கு///
      இதன் அறுத்தம்:)) என்ன டெரியுமோ நெல்லைத்தமிழன்:)).. அதாவது டேவடைக் கிச்சின் தூசு தட்டப்பட்டு விட்டதாம் ஹா ஹா ஹா ...

      நீக்கு
  31. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.//அப்பா பெயர் ஹென்றி என நினைக்கிறேன் .அவருக்கு ஹாபிடலில் இருந்து வரும் செய்தியை கேட்க விருப்பமில்லை அதனாலேயே wrong நம்பர் என்று சொல்லி வைக்கிறார் ,
    //கதையில் இன்னும் ஒரு வரிதான் இருக்கிறது.//
    அது  கதாசிரியரின் புத்திசாலித்தனம்  வாசிப்போர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அவரவர் விருப்பத்திற்கு விடுகிறார் option A ..ஹென்றியின் மகன்  மருத்துவமனையில் இருந்து  தப்பிவிடுகிறார் OPTION பி . தன வாழ்க்கையை முடித்து கொள்கிறார் OPTION C .அங்குள்ளோரை தாக்கி  கொன்று விடுகிறார் .
    ஹென்றிக்கு நெகட்டிவ் விஷயத்தை கேட்பதில் இஷ்டமில்லை அதுபோல கதாசிரியருக்கும்  சொல்லாமல் சொல்லிவிடுகிறார் முடிவை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்லை இதுவெல்லாம் வராது:) ஸ்ரீராம் ஓடி வந்து எனவுன்ஸ் பண்ணுங்கோ.. “அஞ்சு சொன்னதெதுவும் பொருந்தாது” எண்டு:))).. அந்த வரியைப் பார்த்தபின்புதான் மீ கினோவாவில் செய்த குழைஜாதத்தை இன்று ஆப்புடுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  32. HE is extremely volatile

    ////பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். //இதில் கவலைக்கிடம் மனநலம் தான் தவிர உடல் நலம் இல்லை 

    பதிலளிநீக்கு
  33. இதில் ஹென்றியின் உள்ளுணர்வு எதோ துர் செய்தி என்பதால் அதை கேட்க விருப்பமில்லாததால் போனை இருமுறை wrong நம்பர் என்று சொல்லி தவிர்க்கிறார் 

    பதிலளிநீக்கு
  34. ஹாஹா எவ்ளோ யோசிச்சிருக்கேன் ..ஆனா ஆசிரியர் பேரை போட்டா அவர் கதை லிங்க் கிடைச்சது https://www.enotes.com/topics/signs-symbols 
     https://www.newyorker.com/magazine/1948/05/15/symbols-and-signs

    பதிலளிநீக்கு
  35. மற்ற ஜென்  கதை எங்கே ? லிங்க் ப்ளீச் அதையும் கண்டுபிடிக்கறேன் 

    பதிலளிநீக்கு
  36. நான் கதையை படிச்சிட்டேன் ஸ்கிம் ரீடிங் :) சுஜாதா இதை  முழுதும் மொழிபெயர்க்கவில்லையா ??அந்த பெற்றோர் தங்களுக்குள் தங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் காரண காரியத்தோடு ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி பார்க்கிறாரகள் இக்கதையில் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஜொன்னனே ஸ்ரீராம்:)).. எனக்கு முடிவு சரியாக சொல்ல தெரியவில்லை எனச் சொல்லாமல்:)).. அந்த 3 நிமிட வாசலை 8 நிமிடத்தில் அடைஞ்ச கதையைப்போல:)).. சுத்திச் சுத்தி என்னமோ எல்லாம் சொல்லி என்னைக் குழப்புகிறா.. யுவர் ஆனர் மீ ஏற்கனவே கொயம்பியிருக்கிறேன்ன்.. இப்பூடி இன்னும் குழப்புவதுக்கு எனக்கு நஷ்ட ஈடு வேணும்ம்ம்ம்:)).. இது எங்கள் புளொக்கில் நடப்பதனால்.. கெள அங்கிளின் அந்த ஸ்கூட்டரை:) அல்லது ஸ்ரீராமின் மொட்டை மாடியை வித்தாவது நேக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆஆஆஆஆஆஆ இப்பூடி வேர்க்குதே.. அஞ்சூஊஊஊஊ ஒரு ஹொட் மங்கோ ஊஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர் :) நானா குழப்பவிலை மியாவ் .பொதுவாவே இந்த ரஷ்ய ஐரோப்பிய எழுத்தாளர்களே பல குழப்பத்தில் ஆழ்ந்தவர்கள்தான் பாதி பேர் யூதர்கள் பிறர் அவர்களுக்கு உதவப்போய் பல இன்னல்களை பார்து வளர்த்தவர்கள் அவங்க எழுத்தெல்லாம் இப்படித்தான் இருக்கும் .லிங்கில் ஸ்டோரி இருக்கு ஆனா படிங்கனு சொல்ல தயக்கம் 

      நீக்கு
    3. அந்த மொட்டை மாடி வித் முருங்கைமர வியூவுடன் உங்களுக்கே :) 

      நீக்கு
    4. ஏஞ்சல்? சூப்பர் மா. பயங்கரமான நிலைதான் இந்தக் கதை. பாவம் அந்த அப்பா.

      புத்திசாலி தேவதை. எனக்கு இந்தக் கதை படிக்க வேண்டாம்:(

      நீக்கு
    5. ///அவங்க எழுத்தெல்லாம் இப்படித்தான் இருக்கும்// - ஸ்ரீராம் சொன்னாரேன்னு அந்த லோலிட்டா - நாபகோவ் கதையைப் படிச்சா (வேகமாத்தான்).... ஐயே... என் நேரம் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம். ஆனா இந்தக் கதையை ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க.

      நீக்கு
    6. //
      Angel26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 5:12
      அந்த மொட்டை மாடி வித் முருங்கைமர வியூவுடன் உங்களுக்கே :) //

      இல்ல நீங்க ஸ்ரீராமிடன் சைன் வாங்கித் தாங்கோ:)) அப்போதான் மீ உண்ணாவிரதத்தை முடிப்பேன்ன்:)).

      ஆஆஆஆ நெல்லைத்தமிழன் இப்பூடிச் சொல்லிட்டார்ர் இனி நான் கதை படிக்க மாட்டேனாக்கும்:))

      நீக்கு
    7. /ஆனா இந்தக் கதையை ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க./அதேதான் நெல்லைத்தமிழன் இதை சிலாகிக்கவும் சிலர் இருக்காங்க :) ஜோல்னா பை குறுந்தாடி  அடையாளத்துடன் சுஜாதா  வகைப்படுத்துவாரே அந்த வகையினர் .நாமெல்லாம் சாமானியர் :)

      நீக்கு
    8. லிங்குக்கு சென்று நானும் கதை படித்து விட்டேன்.  நன்றாகத்தான் இருக்கிறது.   பிற்பகல் கமெண்ட்ஸுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது சிறுகதை ஒன்றுக்கு ஒரு முடிச்சு கிடைத்தது.   உடனே குறித்துக்கொள்ளாததால் அதை இழந்து விட்டேன்!  மறந்து விட்டது!!

      நீக்கு
  37. இரண்டு தடவை அந்த 'என்னக்கா'வைப் பார்த்து விட்டு திகைப்பு. கடைசியில் உங்கள் பாஸ் சொன்னது என்று தெரிந்து ஒரு 'ங்+ஏ'.
    (ஒரு பழைய எழுத்தாளர் நினைவு வந்திருக்குமே?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜேந்திரகுமாரைச் சொல்கிறீர்கள் ஜீவி ஸார்...    கதை சொல்லியாக ஒரு ஆணை, அதாவது என்னை நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்த "என்னக்கா?"  கொஞ்சம் ஜெர்க்கொடுத்திருக்கும்!   

      நீக்கு
    2. ஙேஏஏஏஏஏஏஏ எவ்வளவு சுலபமாக வருது! :))))) ஞேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இதுவும்!ஆனால் ராஜேந்திரகுமார் ஙே க்குத் தான் அதாரிடி.

      நீக்கு
  38. இப்பொழுதெல்லாம் ப்ளோர் லாம்ப் என்று வந்து விட்டது. இரவு நேரங்களில் பாத் ரூம் போக வேண்டியவர்களுக்கு ரொம்ப செளகரியம்.
    பகல் நேரத்தில் கூட ஸ்விட்சைப் போடாவிட்டாலும் மினுக்கிக் கொண்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " என்னக்கா " ந்னு சொன்னது பன்ச்லைன்.
      அதாவது ஆஸ்பத்திரியில் இருந்தது ஸ்ரீராமின் பாஸ்னு
      நாம தெரிஞ்சுக்க,,, ஜீவீ சார்.
      ராஜேந்திர குமார்லாம் படிக்காம இருக்க முடியுமா. ஞே...............:)

      நீக்கு
    2. எனக்கு ராஜேஷ் குமார் தான் பிடிக்கும். சஸ்பென்ஸை பிரமாதமாக காப்பாற்றுவார். மர்மக் கதைகள் எழுதுபவர்களில் நல்ல எழுத்து நடை கொண்டவர் இவர் ஒருவரே!

      நீக்கு
    3. //இப்பொழுதெல்லாம் ப்ளோர் லாம்ப் என்று வந்து விட்டது. இரவு நேரங்களில் பாத் ரூம் போக வேண்டியவர்களுக்கு ரொம்ப செளகரியம்.//


      தரையில் லைட்...    கொஞ்சம் அசௌகரியம்!    அணைத்து வைக்க முடியும் இல்லையா? 

      நீக்கு
    4. வல்லிம்மா..    சட்டுனு வந்து பக்குனு சொல்லிட்டீங்க!   நன்றி!

      நீக்கு
  39. In Detroit ,the floor lamps will light up as soon as you enter a room. It will help ,especially.. when a baby is sleeping there,
    in night times.

    பதிலளிநீக்கு
  40. இது என்னடா பெரிய தொந்தரவா போச்சு என்று ஆஸ்பத்திரியிலிருந்து வந்த அவசர தொலைபேசி அழைப்பை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    -- என்பது கடைசி வரியாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஜீ.வி .சார்   சுஜாதா  நாபகோவ் என்ற பெயரை சொல்லாம விட்டிருந்தா இந்த முடிவை அப்படியே எடுத்துக்கலாம் :) நபகோவும் லலிதாவும் :) ஹாஹா lolita வும் நிஜ கதையை படித்து வைக்க உந்திட்டாங்க :)

      நீக்கு
    2. கிட்டத்தட்ட அதேதான் ஜீவி ஸார்.

      நீக்கு
  41. காங்கிரஸார் ஆட்சியில் 'சர்தார் ஆதிகேசவ நாயக்கர் தெரு' என்று ஒரு தெருவுக்கு பெயர் வைத்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
    பின் வந்த ஆட்சியில் முதலில் சர்தாரை நீக்கி ஆதிகேசவ நாயக்கர் தெரு என்று ஆக்கியிருப்பார்கள்.
    அடுத்து வந்த காலகட்டத்தில் 'நாயக்கரை' எடுத்து விட்டு ஆதிகேசவர்(ன்) தெரு ஆகியிருக்கும்
    நல்ல வேளை அந்த அலங்கோலங்கள் எல்லாம் நடக்க வில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய தெருப்பெயர்கள் அரைகுறையாக தொங்குகின்றன!

      நீக்கு
  42. பதில்கள்
    1. கரெக்ட்! என் தமிழ் தட்டச்சில் அந்த எழுத்தை தட்டச்ச முடியவில்லை. அதற்காகத் தான் அப்படி குறிப்பிட்டேன்.

      நீக்கு
  43. நான் ஒரு முறை ரயிலில் பயணித்த பொழுது செகண்ட் ஏ.சி. ஸ்லீப்பர் பர்த்தில் தலை மாட்டில் இருக்கும் விளக்கை மூடி விட்டால் விளக்கு அணைந்து விடும் என்பது தெரியாமல், விளக்கை போட்டுக் கொண்டே தூங்கினேன். 
    கவிதை மிக நன்றாக இருக்கிறது. 'அண்டப்புத்தகத்தின் பக்கங்கள்' அருமையான பிரயோகம்! ஆனால், பக்கங்கள் நிரம்பிக்கொண்டே இருக்கும் பொழுது புத்தகம் எப்படி தயாராகும்  என்று அதிராவுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது(great people think alike என்று அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன்)
    சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடம் கொடுத்த சர்தார் ஆதி கேசவ நாயகரைப் பற்றி மெட்ராஸ் டே கொண்டாடப்படும் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருக்கலாமோ? 
    நல்ல தொகுப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...

      பயணத்தில் ஆரம்ப நாட்களில் ஏஸியை நமக்கு மட்டும் வேண்டாமென்றால் நிறுத்திக் கொள்ளலாம் என்று அறியாமல் இருந்தேன்.   அப்புறம் தெரிந்தது! 

      கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி.  அதிராவுக்கு கொடுத்த பதிலைப் படித்திருப்பீர்கள்!

      நீக்கு
  44. >>> என்னிடம் சுருக்கமாகச் சொன்ன விஷயத்தை இங்கு வழக்கம்போல சற்று இழுத்து..<<<

    ஒற்றை நூலை வேஷ்டியாக்கும் வித்தை வேறு யாருக்கெல்லாம் கை கூடி வரும்?...

    நைட் லாம்ப் மகாத்மியம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒற்றை நூலை வேஷ்டியாக்கும் வித்தை//

      ஹா... ஹா...  ஹா...நல்ல உவமை!  முயற்சித்தால் எல்லோருக்கும் வரும்.

      நன்றி துரை செல்வராஜூ ஸார்...

      நீக்கு
  45. மற்றபடி அந்த தலை வால் புரியாத பக்கத்திற்கெல்லாம் போவதில்லை..
    ரொம்பவும் குழப்பி சேறாக்கிக் கொள்வதால் என்ன லாபம்?..

    சர்தார் ஆதி கேசவநாயக்கரைப் பற்றிய செய்திகள் புதிது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த தலை வால் புரியாத பக்கத்திற்கெல்லாம் போவதில்லை./

      என்ன இப்படிச் சொல்லிட்டீங்க...!!!!  அங்கெதான் தெளிவாக்கி விட்டார்களே....

      நீக்கு
    2. மறுபடி நான் அந்தப் பக்கத்துக்குப் போகலையே!...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!