புதன், 18 செப்டம்பர், 2019

புதன் 190918 :: ஆர்ம்ஸ்ட்ராங்கை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் ?


சென்ற வாரப் பதிவில் கருத்துப் பதிந்தவர்களுக்கும், பாராட்டியவர்களுக்கும், கேள்வி கேட்டவர்களுக்கும் எங்கள் நன்றி. 




ஜீவி :

நாட்டில் மோட்டார் வாகன உற்பத்தி சுணக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன?   

 # தேவை - இருப்பு பொருத்தமின்மைதான்.
ஒரு கார் வாங்கினால் குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தான் அடுத்த கார் வேண்டி வரும். இரண்டு கார்கள் உள்ள குடும்பங்கள் கூடப் பெருகி விட்டன. பழைய வண்டிகள் விற்பனைக்கு ஏராளமாக சந்தைக்கு வருகின்றன . அது போக பலப்பல மாடல்கள் போட்டி போட்டுக்கொண்டு படையெடுக்கின்றன. எலக்ட்ரிக் கார் சோலார் கார் என்று வரப்போவதாக ஆவல்-பயம் வேறு. சுணக்கத்துக்கு இன்னும் என்ன வேண்டும் ?

& என்னுடைய விரிவான பதில், நான்கு வாரங்களுக்குப் பிறகு எழுதுகிறேன். (நான் காடராக்ட் ஆப்பரேஷன் இந்த மாத இறுதியில் செய்துகொள்ளவேண்டும். ஓய்வுக்குப் பிறகு என்னுடைய விரிவான பதிலை பதிவு செய்கிறேன். ) 

சுருக்கமாக, I feel it is a recession period.

Image result for recession 2019 india

 1972 to 2006 காலகட்டத்தில், ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிலையை நான் வேலை பார்த்த கனரக வாகன உற்பத்தித் தொழிற்சாலை சந்தித்தது உண்டு. அந்த கால கட்டங்களில் Maintenance closure, layoff, உற்பத்திக் குறைப்பு என்று பல நிலைகளைப் பார்த்ததுண்டு. அந்த வகை தேக்க நிலை வரும் என்று முன்கூட்டியே யோசித்து, நாங்கள், வடிவமைப்பில் பல பெரிய மாற்றங்களை செய்து, வண்டிகளை  புது மாற்றங்களோடு  கொண்டு வருவோம். கடுமையான Bharath Stage Pollution restrictions மேலும் ஒரு காரணம். 


ச க பு  அதிரா : 

1) காலையில படுக்கையை விட்டு எழும்போது என்ன நினைப்பீங்க?.. அதாவது கண் முழிச்சவுடன் அல்ல.. படுக்கையை விட்டு எழும்பும்போது:)).. ஏனெனில் நான் டெய்ய்ய்ய்லி ஒரு விசயம் நினைப்பேன்ன் :)) அதை அடுத்த புதன் சொல்கிறேன்.

# எல்லாம் நல்லபடியாக, எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதாக .. அனைத்தும் ஆதிமுதலுக்கு அர்ப்பணம் என எண்ணிக்கொண்டு விழிப்பது வழக்கம். அண்மையில் "கராக்ரே வசதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி .. " சுலோகம் ரேடியோ ஸிடியில் கேட்டுக் கேட்டு மனதில் ஓடுகிறது.

& 'சரி, எந்திரிச்சி வேலையைப் பார்ப்போம்' என்று சொல்லிக்கொண்டேதான் எழுந்திருப்பேன். 

2. உங்கள் வாழ்க்கை அனுபவத்தை வச்சு, எனக்கும் அஞ்சுவுக்கும் சொல்ல விரும்பும் அல்லது சொல்ல நினைக்கும் ஒரு அறிவுரை/புத்திமதி?

# பொறுமை இன்மொழி இரண்டும் வெற்றிக்கு நல்வழி.

& நான் அனுபவப்பட்ட வரையில், பெரும்பாலான மக்களிடம் காணப்படும் விரும்பத்தகாத குணங்கள்:
 

- Expecting something for nothing. இலவசங்கள், ஓட்டுக்கு நோட்டு போன்ற தீயகுணம். 

- Revenge attitude. பழிக்குப்பழி வாங்குகின்ற எண்ணம். 

இந்த இரண்டு தீயவைகளையும் ஒதுக்கி, giving out something for nothing and never take revenge on anyone  என்னும் நிலையை நாம் பின்பற்றத் தொடங்கினால், எல்லாமே நன்மையே! 
3. உண்மையை மட்டும்தான் சொல்லோணும், உங்களுக்கு திருமணமாகும்போது, கூட்டுக் குடும்பத்தில் இருக்க விருப்பமாக இருந்ததோ? இல்லை தனிக்குடும்பம் போகும் விருப்பம் இருந்ததோ?.


# திருமணம் ஆகுமுன் கண்காணா ஊரில் தனிக்கட்டை. தனிக்குடித்தனம் தவிர்க்க இயலாததாகி விட்டது. அந்த சமயம் கூ.கு ரொம்ப வசதியாக இருந்திருக்கும்.

& கூட்டுக்குடும்பம்தான். 
4.மனிதர்கள் கூட்டுக்குடும்பமாக வாழோணும் என வலியுறுத்துவோரே, பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகளை தம் பிள்ளைகளின் ஆசைக்கு இணங்கி, பிரித்து எடுத்துக் குடுக்கின்றனர்.. இது எந்த வகையில் நியாயம்?


# வாழ்க்கை இம்மாதிரியான நியாய நியமங்களுக்கு உட்பட்டதல்ல. அது விருப்பு வெறுப்பு அடிப்படையில் நடத்திச் செல்லப் படுகிறது.

& எனக்குத் தெரிஞ்சி பன்னிங்கதான் கூட்டமா வாழ்கின்றன. பூனைக்கூட்டம் பார்த்ததில்லை. நாய்கள் கூட்டமாக இருந்தால் ஒன்றுக்கொன்று சண்டைகள்தான் போடுகின்றன. ஆக, பூனைக்குட்டிகளை / நாய்க்குட்டிகளை பிரித்து எடுத்து வளர்ப்பதில் தவறு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஏஞ்சல் : 

1, மண் இட்லி ,கூட்டாஞ்சோறு ,அஞ்சாங்கல் ,பாண்டி கண்ணாமூச்சி ...இவற்றை இன்னமும் நம் நாட்டு பிள்ளைகள் விளையாடுகிறார்களா ?

# இல்லை என்பதே சோகமான உண்மை.

& எல்லாமே பொம்பளைங்க சமாச்சாரம் என்று வளர்ந்த பையன்கள் சொன்னாலும், ஒற்றைப்படை எண் வயதில், எல்லாமே நான் ஆடியது உண்டு. நான் இப்போது இருக்கும் அபார்ட்மெண்டில் ஏரோப்ளேன் பாண்டி கோடுகளை தரையில் அவ்வப்போது பார்ப்பது உண்டு. ஏதோ சில சிறுமிகள் இன்னும் அதை ஆடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். 

கிராமப்புறங்களில் இவைகள் இன்றும் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். 

2, ஒருவர் புனிதராக மாறுவது எப்படி ? 


# இறந்து பட்டால் எல்லாரும் புனிதரே.

& மனத்துக்கண் மாசில்லாத மனிதர்கள் அனைவரும் புனிதரே, 
            
3, மனதுக்கு வலியூட்டும் தலையங்க செய்திகள் தீய விஷயங்களை முதல் பக்கத்தில் பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் வெளியிடுவது அவசியமா ?

# அவர்கள் வியாபாரத்துக்கு மூலப்பொருள் வாசகரின் ஆர்வம். அது மட்டுமே.

& அவசியமில்லைதான். ஆனால், நாம் சொல்லி அவர்கள் கேட்கப்போவதில்லை. 

4, உங்கள் மனங்கவர்ந்த ஓவியர் ,ஓவியம் எது ?


# நிறைய இருக்கிறது. நார்மன் ராக்வெல் ரென்வார் முதல் லிம் வரை . . 

& அந்தக் காலத்தில், மாயா, ஜெயராஜ் மற்றும் மாருதி வரைந்த படங்களை அதிகம் ரசித்தது உண்டு. மனதில் நிற்பவை, அப்புசாமி சீதாப்பாட்டி படங்கள். 

5, உங்கள் மகன் /மகள் குழந்தையாய் இருந்தபோது சுவற்றில் படம் அ ஆ இ ஈ என்று வரைந்து சுவற்றை அழகுபடுத்தி :))) வைத்த தருணத்தை இப்பவும் நினைவு கூர்வதுண்டா ? 


# மகன் மகள்கள் - கிறுக்கியது இல்லை.

& மகன், மகள் சுவற்றில் கிறுக்கியது இல்லை என்றுதான் ஞாபகம். ஆனால் நோட்டுப் புத்தகங்களில் அவர்கள் போடும் படங்களை, எழுதிய எழுத்துக்களை பெரிதும் ரசித்து இப்பவும் நினைவுகூர்வது உண்டு. சிலவற்றை பத்திரப்படுத்தியும் வைத்துள்ளேன். ஆனால், பேரன்கள் சுவற்றில் நிறைய கிறுக்கினார்கள்! 

6, இரவு உறங்கப்போகுமுன் என்ன செய்வீங்க ?


# விசேஷமாக ஏதுமில்லை.

& லைட் எல்லாம் off செய்தாச்சா (முக்கியமாக கதவு மூடியிருக்கும் பாத்ரூம் லைட்கள்) கதவுகள் தாழ்ப்பாள் இடப்பட்டுள்ளனவா, ஃபிரிட்ஜ் க்குள் வைக்கப்படவேண்டியவை வைத்தாயிற்றா என்று செக் செய்துவிட்டு, 'இத்துடன் இந்த அலைவரிசையில் இன்றைய ஒளிபரப்பு முடிவடைந்து, மீண்டும் நாளைக்காலை நாலரை மணிக்கு ஆரம்பமாகும்' என்று சொல்லி, உறங்கப்போவேன். 

7, தீயவை அதாவது தீய எண்ணம் சொல் செயல் எல்லாம் நம்மில் நம்முள் இருந்து வெளிவருது அப்படியென்றால் அவை நமக்குள் ஸ்லீப்பர் செல்ஸ் போலெ இருக்கா ??


# நம்முள் நினைவுகளும் கற்பனை செய்யும் திறனும் விருப்பு வெறுப்புகளும் உள்ளன. இவற்றின் கலவைதரும் வெளிப்பாடு தான் எல்லாமும். 

& தீய எண்ணங்கள், செயல்கள், நல்ல எண்ணங்கள், நற்செயல் எல்லாமே விதிக்கப்பட்டுள்ளவை என்று தோன்றுகிறது. 'நீங்கள் பிறக்கும் முன்னரே பெயரிடப் பட்டுள்ளீர்கள்' என்னும் பைபிள் வாசகம் ஞாபகத்திற்கு வருகிறது. 


8, எதையும் செய்யாம சாதிக்காம ஒரு மனிதனால் சந்தோஷமா இருக்க முடியுமா ?


# முடியும். சந்தோஷம் சாதனை வெவ்வேறு. 

& ஓ! முடியுமே. நான் அப்படித்தானே இருக்கிறேன்! 

9, விருப்பமற்ற ஒன்றை செய்ய வேண்டிய சூழல் வந்ததுண்டா ? அப்போ உங்க மனநிலை எப்படி இருந்தது ?


# வேண்டா வெறுப்பாகத் தான் இருக்கும். சில சமயம் வந்ததுண்டு.

& சூழல் வந்தது உண்டு. மனசு கஷ்டமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? 'இதுவும் கடந்துபோகும்' என்னும் நம்பிக்கையோடு செய்யவேண்டியதுதான். 

10, நீங்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் ?


# தனிமையும் ஏதேனும் பழுதாகும் என்ற அச்சமும் இல்லவே இல்லையா ?



1) ஆர்ம்ஸ்டிராங் அண்ணே - அங்கே எல்லாம் ஒரு கிரவுண்ட் என்ன விலை?

2) ஆர்ம்ஸ்டிராங் அண்ணே - இங்கே ஒருத்தர் சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே கனவு தேவதையே ..." என்று பாடிக்கொண்டிருக்கிறார் - அவர் மீது நீங்க வழக்கு தொடர்வீர்களா?


=============================

மீண்டும் சந்திப்போம். 

=============================

120 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அப்போ ஆறு மணிக்குள் எழுந்தும், நான் ஆறுதானா? பரவாயில்லை..! "ஆறு மனமே ஆறு. இது ஆண்டவன் கட்டளை ஆறு" என தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி...

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா...
      இனிய காலை வணக்கம்.

      நீங்கள் சொல்லப்போகும் இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      புதன் மட்டும் ஆறு ஐந்தரை ஆகிவிடும்! ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆ இப்போ மீதான் 50 ஆவது கொமெண்ட்டூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. கமலாக்கா இன்று தானேதான் 1ஸ்ட்டு என ஓடி வந்தா.. அன்று ஸ்லிப்பர் தேடியதால தாமதமானா:)) இன்று ஆறு:)தலாக வந்து ஆறைத்தழுவிக்கொண்டா:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. //ஆஆஆஆஆஆ இப்போ மீதான் 50 ஆவது கொமெண்ட்டூ/

      நான் நூறாவதாகும்!

      நீக்கு
    6. வணக்கம் அதிரா சகோதரி

      /கமலாக்கா இன்று தானேதான் 1ஸ்ட்டு என ஓடி வந்தா.. அன்று ஸ்லிப்பர் தேடியதால தாமதமானா:)) இன்று ஆறு:)தலாக வந்து ஆறைத்தழுவிக்கொண்டா:)) ஹா ஹா ஹா../

      ஹா.ஹா.ஹா. ஆமாம் சகோதரி.. இப்போ கொஞ்ச நாளைய பழக்கப்படி, தூக்கத்தை ஆறாத்தழுவி கொண்டபடி இருந்த கண்களை அவசரமாக திறந்து நான்தான் 1ஸ்ட்டுன்னு ஓடி வந்தேன். ஆனால் அதற்கு முன்பாக கடைசி சாமம் தூங்காமலே காத்திருந்து முதலிடத்தை பிடித்துக் கொண்ட தங்கள் வருகை கண்டதும், உங்களுக்கு வாழ்த்துச் சொல்லி போகலாமென்றால், உங்களையும் காணாது, ஆவலுடன் ஓடிவந்த என் மனதை ஆறுதலாக்க "ஆண்டவன்" மேல் பழி போட்டு பாட்டு பாடி விட்டு ஓடி விட்டேன்.

      உற்சாகமாக சத்தம் கொடுத்து அனைவரையும் எழுப்பியதற்கு வாழ்த்துக்கள் அதிரா சகோதரி. உங்களின் உற்சாகம் இன்று எங்களையும் தொத்திக் கொண்டது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆஆ நானேதான் 3 வதும்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா இத்தோடு நிறுத்துறேன் பிக்கோஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வெ.மா.அ.-வுக்கான கேள்வி!
      ‘மீ ரொம்ப நல்ல பொண்ணு’-ஆக எப்போது ஆனீர்கள்? ஆரம்பத்திலேர்ந்தே அப்படித்தானா? இல்லை, அப்பாவிடம் முதுகில் ரெண்டு வாங்கிய நாளிலிருந்தா?

      நீக்கு
    2. //ஏகாந்தன் !18 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:37
      இது வெ.மா.அ.-வுக்கான கேள்வி!//

      ஆஆஆஆஆஆஆஆ உள்ளம் உருகுதையாஆஆஆஆஆஆஅ ஹா ஹா ஹா பாருங்கோ மக்களே அதிராவுக்கு வைட் மனசு:)) எனச் சொல்லிட்டார் ஏ அண்ணன்:)).. வெ.மா.அதிரா என்றால் வெள்ளை மனசையுடைய அதிரா என வருமாக்கும்:))..

      அது ஏ அண்ணன் 6 வயசிலிருந்தே மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. //..வெ.மா.அதிரா என்றால் வெள்ளை மனசையுடைய அதிரா என வருமாக்கும்:))..//

      ஸ்காட்லாந்துப்பக்கம் பேசுற தமிழில் வருமோ ! இது தகுமோ ?

      நீக்கு
    4. ஸ்ஸ்ஸ்ஸ் ஏ அண்ணன்.. [கால்] காலை:)) எல்லாம் கவனிக்கப்பூடா:))

      நீக்கு
  3. ///ச க பு அ அதிரா : ////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதைப்பார்த்திட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா நினைக்கப் போகினமே வைரவா:)... ஹா ஹா ஹா மிகுதிக்கு நாளைக்கு வாறேன்ன்ன்..
    ஆஆஆஆ சொல்ல மறந்த கதை:)...
    எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்... மகிழ்ச்சியாக சத்தமாக சிரிச்சுக்கொண்டிருங்கோ நாளை சந்திப்போம்ம்ம்... _()_

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தமா சிரிச்சேன். வெளியில் நடைப் பயிற்சி செய்பவர் சந்தேகமாகப் பார்த்துச் செல்கிறார்!

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் அதிரா...   நானும் சத்தமா சிரிச்சேன்.பாஸ் வந்து கவலையுடன் பார்க்கிறார்.

      நீக்கு
    3. ஆண்கள் சிரித்தால், பெண்களுக்குக் கவலை வந்துவிடுகிறது!

      நீக்கு
    4. // கவலை வந்துவிடுகிறது!// அப்படி என்னங்க கவலை! பொறாமையாக இருக்குமோ?

      நீக்கு
    5. //ஏகாந்தன் !18 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:40
      ஆண்கள் சிரித்தால், பெண்களுக்குக் கவலை வந்துவிடுகிறது!//
      நோஓஓஓஓஓஓ டப்பு டபாப் புரிஞ்சுகொள்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது பெண்களின் கவலை என்பது நெல்லிக்கனியைப்போல:)).. அதாவது எடுத்ததும் சிரிச்சிடாமல்.. கொஞ்சம் கவலைப்பட்டு ஜிந்திச்சு பின்பு பகல் முழுவதும் சிரிச்சுக்கொண்டே இருப்பது:)).. இது அந்தக் கவலையாக்கும் த்றீராம் வீட்டில நடந்தது:)) ஹா ஹா ஹா .. எங்கே ஏ அண்ணன் இப்போ கவலைப்படாமல் சிரியுங்கோ பார்ப்பாம்.. ஜத்தமாக.. இனும் ஜத்தமா:)) அதிராவுக்கு கேட்கோணும்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. //..அதிராவுக்கு கேட்கோணும்:)) ஹா ஹா ஹா..//

      இப்படி அதிராவுக்குக் கேக்கறாப்புல தமிழ்நாட்டுல எல்லோரும் சிரிச்சா..! சரி, தேம்ஸுப்பக்கம் அவசரமாப் போகும்படி தீயணைப்புப் படைக்குச் சொல்லிருவோம்...

      நீக்கு
    7. வெயிட்..வெயிட். ஏ அண்ணன்:)) நான் இன்னும் சிரிக்கத் தொடங்கேலையாக்கும்:)) அஞ்சுவுக்காக வெயிட்டிங்:)) ஹா ஹா ஹா.. சேர்ந்து சிரிக்கலாமே எண்டுதேன்ன்ன்ன்:))

      நீக்கு
    8. //ஸ்ரீராம்.18 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 5:59
      இனிய காலை வணக்கம் அதிரா... நானும் சத்தமா சிரிச்சேன்.பாஸ் வந்து கவலையுடன் பார்க்கிறார்.//

      அப்படின்னா நீங்க சிரிச்சே  அவர் பார்க்கலை அதான் கவலையா பார்த்தாரோ :))))))))

      நீக்கு
    9. நான் சொல்லவில்லை?  ஏஞ்சல் கரெக்ட்டா கண்டுபிடிசுடுவாங்கன்னு...!!

      நீக்கு
    10. இல்லையே... நீங்க சொல்லல்ல ஶ்ரீராம்:)....
      ஹா ஹா ஹா

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அதிரா சொன்னவுடன் நீங்கள் சத்தமாக சிரித்ததில் நானும் எழுந்து விட்டேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம். அப்போ இனிமேல் அவர் பெயரை, சாமக்கோழி அதிரா என்று மாற்றிக்கொள்வாரோ?

      நீக்கு
    2. அனைத்து எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் கேள்விகள் கேட்டு
      அசத்திய அதிராவுக்கும் இனிய காலை மாலை வணக்கங்கள்.

      நீக்கு
    3. காலை மாலை வணக்கம் வல்லிம்மா...  வாங்க...

      நீக்கு
    4. அவர்தான் நிறைய பெயர்களை தன் கைவசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறரே! நீங்கள் வேறு ஒரு புதுப் பெயர் சூட்டி விட்டீர்கள். அனேகமாக அடுத்து இந்தப் பெயருடன்தான் அவர் களத்தில் (வலைத் த(க)ளத்தில்) இறங்கப் போகிறார் என எனக்குள் ஒரு பட்சி (கோழி?) சொல்கிறது. ஹா ஹா ஹா.

      (ஆகா. நானும் சத்தமாக சிரித்து விட்டேன். எல்லோரும் எழுந்து விடுவார்கள். ஹ ஹ ஹ.)

      நீக்கு
    5. எல்லோரும் இனிதே வாழவேண்டும்! சிரித்து வாழ வேண்டும்!

      நீக்கு
    6. ஹா...   ஹா..  ஹா...

      நானும் எழுந்தோடிப் போகிறேன்..    இனி மதியம்தான்!

      நீக்கு
    7. எல்லோருக்கும் இனிய பொழுதாக அமையட்டும் வல்லிம்மா, கமலாக்கா...

      //
      கௌதமன்18 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:25
      இனிய காலை வணக்கம். அப்போ இனிமேல் அவர் பெயரை, சாமக்கோழி அதிரா என்று மாற்றிக்கொள்வாரோ?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா பின்தூங்கி முன் எழும்பும் பரம்பரையாக்கும்:))... அதாவது கவரிமான் பரம்பரை:)) ஏன் கவரிமான் லேட்டாவோ படுக்கும் எனக் கேய்க்கப்பூடா கர்ர்ர்ர்ர்:)).. இங்கு கேள்விகளைக் கேட்கும் உரிமை நமக்குத்தான் உண்டு கெள அண்ணனுக்கு இல்லை:)) ஆவ்வ்வ் யூப்பர் மாட்டீ:))

      நீக்கு
  5. அன்பு கமலா ஹரிஹரன் சொன்னது போல இப்படிச் சிரிக்க வைக்க அதிராவால் மட்டுமே முடியும்.

    கண்விழித்ததும் கைகளைப் பார்த்து சொல்வது கராக்ருதே ஸ்லோகம் தான்.
    சிறுவயதிலிருந்து அதுவே வழக்கம்.
    இப்பொழ்து நீல் ஆர்ம்ஸ்ட் ராங்கைப் பார்த்தால் எங்கள் சந்த்ராயன் அங்கே வந்துவிட்டதே என்று கேட்கத் தோன்றும்.

    இந்த வாரக் கேள்வியாக நான் கேட்டு இங்கே பதிவது,
    பாட்டுப் பாட முடியாமல் தொண்டை ,படும் சிரமம்,என் மாதிரி வயதானவர்களுக்கு மட்டுமா. அப்படியானால் ஏன்.
    முன்பே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் சகோதரி

      உண்மைதான்.. இப்படி உற்சாகமாக கமெண்ட்ஸ் தர அதிராவால்தான் முடியும். அவரின் உற்சாகமான கருத்துக்களை படிக்கும் போது, அவருடன் சேர்ந்து நம்மிடமும் அந்த உற்சாக அலைகள் இணைந்து கொள்கின்றன. அவரின் சந்தோஷ மனப்பான்மைக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம், வந்தவர்களுக்கும் இனி வரப் போகிறவர்களுக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. கலகலப்பான காலைப் பொழுது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  8. //மகன், மகள் சுவற்றில் கிறுக்கியது இல்லை என்றுதான் ஞாபகம். ஆனால் நோட்டுப் புத்தகங்களில் அவர்கள் போடும் படங்களை, எழுதிய எழுத்துக்களை பெரிதும் ரசித்து இப்பவும் நினைவுகூர்வது உண்டு. சிலவற்றை பத்திரப்படுத்தியும் வைத்துள்ளேன். ஆனால், பேரன்கள் சுவற்றில் நிறைய கிறுக்கினார்கள்!// இங்கே வீட்டில் முழுக்க முழுக்கக் குட்டிக் குஞ்சுலுவின் கைவண்ணம்! அவ அப்பாவோட ஆஃபீஸ் அறை தவிர்த்து எங்கெங்கு பார்க்கினும் குட்டிக்கைகள், குட்டிக் குட்டி விரல்கள், இன்னும் என்னென்னமோ ரூபங்களில் தீற்றல்கள். எல்லாவண்ணங்களிலும். அதை ரெயின்போ என்று சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! ரசனையாக உள்ளது. படம் எடுத்து, வாட்ஸ் அப் ல அனுப்புங்க!

      நீக்கு
    2. எங்க மகள் ஜெர்மனில pvc தரையில் படம் வரைஞ்சு வச்சிருந்தா அப்புறம் சோபாவில் பின்பக்கம் படங்கள் :) அந்த சோபாவை லண்டன் கொண்டு வரமுடியலைன்னு வருத்தமா இருந்தது 

      நீக்கு
    3. உண்மைதான். அந்தக் காலத்திலேயே மொபைல் காமிரா இருந்திருந்தால் என்னுடைய மகன் மகள் வரைந்த ஓவியங்களை போட்டோ எடுத்து சேமித்து வைத்திருந்திருப்பேன்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி.

      அதேதான் இங்கும். என் குழந்தைகள் சுவற்றில் கிறுக்கியதில்லை. "வாடகை உன்னுடையதாக இருந்தாலும் வீடு என்னுடையது பார்" என்று ஒரு படத்தில் தங்கவேலு நகைச்சுவையாக சொல்வது போல்,"வாடகை வீடு" என எங்களின் கண்டிப்பில், குழந்தைகளை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டோம்.

      இன்று பேரன், பேத்தி இருவருமே சுவற்றில் ஒரு இன்ச் விடாமல் கிறுக்கி தங்கள் ஓவிய திறமையை பறை சாற்று கிறார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. சந்தோஷமாகப் பார்த்து அவர்களுடன் ரசிக்க வேண்டியதுதான்! படமெடுத்தும் வைத்துள்ளேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. உண்மைதான் கமலாக்கா .எங்க வீட்ல எங்க பொண்ணு எந்த இடத்திலும் படம் வரையலைன்னு சந்தோஷபட்டுடிருந்தோம் :) பிறகுதான் மேடம் சுவரை தவிர எல்லா இடத்திலும் ஆர்ட் வரைஞ்சி வச்சிருந்ததை கண்டுபிடிச்சோம் :)அதுவும் கண் காது மூக்கு வரைந்து வட்ட முகமா எல்லாம் சிரிக்கும் முகமா வரைஞ்சிருந்தா சோபாவின் பின்பக்கம் :)  

      நீக்கு
  9. தங்கள் பதிலுக்கு நன்றி, கேஜிஜி. கார் மந்த உற்பத்தி நிலைக்கும் ஆளும் பிஜேபி அரசுக்கும் முடிச்சு போட்டு சில்ரின் பிதற்றலை சமீப்காலமாகக் கேட்டு வருவதால் இந்தக் கேள்வியை இது விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும் என்ற ஆவலில் கேள்வி எழுந்தது.
    காட்டராக்ட் ஆப்ரேஷன் இனிதே முடிந்த பிறகு விவரமான பதில் பெறக் காத்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஆம், விரிவான பதில் பிறகு அளிக்கின்றேன்.

      நீக்கு
  10. //ஒருவர் புனிதராக மாறுவது எப்படி ?

    இறந்து பட்டால் எல்லாரும் புனிதரே//

    உண்மைதான் ஒன்றுக்கும் உதவாத குடிகாரமட்டைகூட கடவுளாகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இறந்தால் பட்டம்!

      நீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்ல பதில்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. (கேள்வி கேட்டவர்கள் கோபித்துக்கொள்ளப்போகிறார்கள்)

      நீக்கு
    2. அதுதானே?:) என்ன இப்பூடிப் பொசுக்கெண்டு ஜொள்ளிட்டார்ர்:))

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. இன்றைய பொழுது எனக்கு கீழே விழுந்து விழுப்புண்கள் பெற வேண்டிய தினம் போல்.

    காலையில் இருந்து வலிகளை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.

    அனைத்து கேள்விகளும் , பதில்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கோமதி அக்கா. என்ன ஆச்சு? நிலத்தில தண்ணி ஏதும் இருந்து சறுக்கி விட்டதோ?

      நீக்கு
    2. ஓ! ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. ஹாட் வாட்டர் மசாஜ் செய்யுங்கக்கா .அதோடு உடனே மருத்துவரிடம் செல்லவும் 

      நீக்கு
    4. நிலத்தில தண்ணி ஏதும் இருந்து சறுக்கி விட்டதோ?//

      ஆமாம் ,அதிரா

      நீக்கு
    5. ஹாட் வாட்டர் மசாஜ் செய்யுங்கக்கா .அதோடு உடனே மருத்துவரிடம் செல்லவும் //

      நன்றி ஏஞ்சல். ஹாட் வாட்டர் மசாஜ் கொடுத்தேன், உப்பு ஒத்தடம் கொடுத்தேன், அதிரா சொன்ன மஞ்சள் போட்டு பால் குடித்தேன், மாலை அந்த டாகடர் ஆறு மணிக்குத்தான் வருவார். அவரிடம் மாலை போய் காட்டி வர வேண்டும்.

      நீக்கு
    6. ஓ கோமதி அக்கா தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.... முதலில் ஒரு பரசிட்டமோல் எடுங்கோ...
      மூட்டு வலிகளுக்குத்தான் கோமதி அக்கா மஞ்சள் குடிக்கச் சொன்னேன்...

      நீக்கு
    7. வணக்கம் சகோதரி

      ஏன்.. என்ன ஆச்சு சகோதரி? கால் தடுக்கி கீழே விழுந்து விட்டீர்களா? காயம் ஏதும் இல்லையே? தற்சமயம் எப்படி உள்ளது? மருத்துவரிடம் சென்று விட்டு வந்து விட்டீர்களா? அவரின் ஆலோசனை பேரில் மருந்துகள் எடுத்துக் கொள்ளவும். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளவும். விரைவில் கால் வலிகள் பூரணமாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    8. அதிரா, தலை தப்பியது தமிரான் புண்ணியமே. கை, காலோடு போச்சு. எலும்பு முறிவு இல்லை.

      இதுவும் மூட்டுவலிதானே! முட்டியில் அடிப்பட்டதால், அதனால் மஞ்சல் பால் குடித்தேன்.
      பரசிட்டமால் எடுத்துக் கொண்டேன். மாலை மருத்துவரிடம் போய் , எகஸ்ரே அது இது என்று எல்லாம் ஆச்சு.
      மூன்று நாள் ஒய்வு தேவை.

      நீக்கு
    9. வணக்கம் கமலா, வாழ்க வள்மௌடன்
      சோப் தண்ணீரில் வழுக்கி விழுந்து விட்டேன். கையில் காயம், முட்டியில் வீக்கம்
      மருத்துவரிடம் சென்று வந்து விட்டேன். அவர் ஆலோசனை படி மருந்துகள் எடுத்துக் கொள்கிறேன்.
      காலில் மருந்து வைத்து கட்டி இருக்கிறார்.
      வலி குறைந்து வருது.
      உங்கள் விசாரிப்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  14. //ஆர்ம்ஸ்ட்ராங்கை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் ?//

    இனியும் போகும்போது அங்கி நிலத்தில இருக்கும் கற்களை கொஞ்சம் எனக்கு அள்ளி வந்து தரச்சொல்லிக் கேட்பேன்:))..
    [அங்கின நிலத்தில கல்லோடு கல்லாக வைரம் தங்கம் எல்லாம் கொட்டிக் கிடகுதாம் என ஊருக்குள்ள அரசல் புரசலாகப் பேசினார்கள் கெள அண்ணன்:).. அதனாலதான் சோழியன் குடும்பி சும்மா ஆடாதெல்லோ:)).. காசா பணமா நிலக் கற்களை கேட்டிருக்கிறேன்ன்:))]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பளைப் பார்த்தால் அவர் கல்லாலேயே அடித்துவிடுவார்!

      நீக்கு
    2. அடி வாங்கினாலும் தங்க வைர கல்லால் வாங்கி தூக்கிட்டு ஓடிடனும் :)

      நீக்கு
  15. கேள்விகள் பதில்கள் சுவாரஸ்யம்.. உங்கள் அனுபவப் புத்திமதிகளை கடைப்பிடிக்கிறேன்.

    4 வது கேள்விக்கான நாய்க்குட்டிகள் பூனைக்குட்டிகளுக்கான பதிலை மனம் ஏற்றுக் கொள்கிறது.. அவர்களின் நன்மை கருதி, நாம் வளர்ப்பதில் தவறில்லை.

    வீட்டில் அடைத்து கோட் ஃபிஸ்கள் வளர்க்கிறோம் தானே, அவற்றையும் சில சமயம் கவலைப்படுவேன் நான், கடலில் வாழ வேண்டியதை இப்படி வீட்டில் அடைச்சு வளர்கிறோமே என... , இல்லை அவை கடலில் விட்டால் உயிர் வாழாது , இப்படி வைத்திருந்தால்தான் வாழும் என ஹஸ்ஸ்ஸு ஆறுதல் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  16. //ச க பு அ அதிரா :

    1) காலையில படுக்கையை விட்டு எழும்போது என்ன நினைப்பீங்க?.. அதாவது கண் முழிச்சவுடன் அல்ல.. படுக்கையை விட்டு எழும்பும்போது:)).. ஏனெனில் நான் டெய்ய்ய்ய்லி ஒரு விசயம் நினைப்பேன்ன் :)) அதை அடுத்த புதன் சொல்கிறேன்.//

    ஹா ஹா ஹா நான் எழும்பி நின்று திரும்பி ஒரு பார்வை பார்த்து.. சே..சே இந்தக் கட்டிலில் திரும்ப எப்போ வந்து படுப்பேன் என நினைச்சுக்கொண்டே எழுந்து போவேன் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா - இதுதானா! நான் ஏதோ பெருசா கற்பனை செய்துகொண்டிருந்தேன்! அட வைரவா!

      நீக்கு
  17. //2, ஒருவர் புனிதராக மாறுவது எப்படி ? //
    இது தெரியாதாமோ அஞ்சுவுக்கு ஹையோ ஹையோ.. சந்திரிக்கா சோப் போட்டுக் குளிச்சிடோணும்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சந்திரிக்கா சோப் போட்டுக் குளிச்சிடோணும்// - அந்த அக்கா எங்க இருக்காங்க? போய் அவங்க சோப்பை வாங்கிட்டு வந்து உடனே புனிதனாகணும். சீக்கிரம் சொல்லுங்க. டவல் கைல எடுத்துக்கிட்டு ரெடியா இருக்கேன்.

      நீக்கு
    2. ஹையோ வைரவா இப்போ புனிதனா முக்கியம்:), முதல்ல சந்திரிக்கா அக்காவைக் காப்பாத்துங்கோ நெல்லைத் தமிழனிடமிருந்து... குடனூர் படையப்பாஆஆஆஆஆ:)... பொங்கல் புளி போட்டுப் பொங்கிப் படைப்பேன்ன்ன்ன்ன். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. சே சே அஞ்சுவுக்கு வாற டவுட்டுகளால வலையுலகமே ரெண்டாகிடப்போகுதே மேரி மாதாவே:)..

      நீக்கு
  18. ///6, இரவு உறங்கப்போகுமுன் என்ன செய்வீங்க ?//
    ஹா ஹா ஹா காலையில எழும்புவதில் இருந்து இரவுவரை கெள அண்ணனின் வாழ்க்கை வரலாற்றையே கேட்டுவிட்டோம்ம் ஹா ஹா ஹா நல்லவேளை நீலப் பதில்க்காரர் தப்பித்துக் கொண்டார்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் இப்போ பதிலே தரதில்லை :) அடுத்த வாரம்  எல்லாருமே சேர்ந்து மொத்தமா 10 கேள்வீஸ் அவருக்கு மட்டும் கேட்கணும் 

      நீக்கு
    2. ஆம்! அதுதான் சரி! சரிராம் -- ஸ்ரீராம் தப்ப முடியாது!

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆஆஆஅ புளொக்கில மணிச்சத்தம் கேட்குதே:)) ஏன் எனப் பார்த்தேன்ன் அட அஞ்சு லாண்டிங்:))...
      யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்பே அப்படி ஒரு பழமொழி இருக்கோ கெள அண்ணன்?:) இல்ல ச்ச்சும்மா கேய்ட்டேன்ன் நீங்க ஒண்ணும் டப்பா நினைக்காதீங்க:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. https://previews.123rf.com/images/isselee/isselee1712/isselee171200016/91808604-white-kitten-mixed-breed-cat-wearing-a-bell-collar-isolated-on-white.jpg

      நீக்கு
    5. ஆஆஆஆ வ்வ்வ் பூஸுக்கு மணிகட்டியது ஆர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா

      நீக்கு
  19. ஆஆஆஆஆஆ கெள அண்ணன் உங்கட நோட் புக்கை எடுங்கோ.. விட்டால் மறந்திடுவேன் நான்:).. அதனால மனசில வரும்போது கேட்டிடுறேன்.. நீங்களும் ஓடி ஓடிப் பெறுகி எடுங்கோ:)).. ஒன்றாகக் கேள்வி கேட்டால் ஓரிடத்தில இருந்து கொண்டே “நோகாமல் நொங்கெடுக்கப்பார்கிறார்” கர்ர்:)) ஹா ஹா ஹா..

    1. காற்று, தண்ணி, நெருப்பு.. இந்த மூன்றில் நீங்கள் பயப்படுவதை தர வரிசைப்படுத்தவும்... அதாவது அதிகமாக முதலில் எதுக்குப் பயப்படுவீங்க, கொஞ்சமாக எதுக்குப் பயப்படுவீங்க என. பெரிய சுனாமி.. பூகம்பம் இப்படி அளவில் சிந்திக்காமல், சின்னதாக சிந்திச்சு பதில் சொல்லுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /தண்ணி// - இது எந்தத் தண்ணி? ஐயோ..இது புதன் கிளவி இல்லை. இந்தக் கேள்வி கேட்டவுங்களுக்கான கேள்வி. ஹா ஹா

      நீக்கு
    2. @நெ த
      ஹா ஹா ஹா இப்போ எதுக்கு என் கிளவியை டச்சுப் பண்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... கெள அண்ணனுக்குத் தெரியாத தண்ணியோ?:)... தெரியாட்டில் ஶ்ரீராமிடம் கேட்டுத் தெரிஞ்சு புரிஞ்சு கொள்ளுவாராக்கும்:)

      நீக்கு
    3. எனக்குத் தெரிந்தது எல்லாம் காவிரித் தண்ணிதான்!

      நீக்கு
  20. கொஸ்ஸன் நெம்பர்:-
    2. ஒருவர் புன்னகையுடனும், இன்முகத்தோடும் இருப்பின், நமக்கு[எனக்கு] அவரைப் பிடித்துவிடுகிறது, நல்லவராக இருக்கிறாரே என நம்பி விடுறோம்[விடுகிறேன்], ஆனா சிரிப்பவர் எல்லோரும் நல்லவர் எனும் வரிசையில் வராது என்கினமே.. ஆனா.. பொன்னகை வேண்டாம் புன்னகையுடன் இருங்கோ எனவும் சொல்கின்றனர்... இதை எப்படிப் பிரிச்செடுப்பது? எல்லாத்துக்கும் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  21. கொஸ்ஸன் நெம்பர்:-
    3. உண்மையில் கவரிமான் என ஒன்று இருந்ததோ?..
    இந்தக் கவரிமான் பரம்பரை எனும் சொல்லை வைத்தே எங்கள் ஊரில் அநியாயமாக ஒரு அக்கா சூசைட் பண்ணிக்கொண்டா.. அதை மறக்கவே முடியாது. சயன்ஸ் பிரிவில் படிச்சுக் கொண்டிருந்தவ, மிகவும் கெட்டிக்காரி, மெடிசின் கிடைக்கும் என ஸ்கூலே எதிர் பார்த்தவேளை, அவ ரியூசனில் ஒரு மாஸ்டரிடம் அதிகம் கேள்விகள் கேட்பாவாம், அதை வச்சு சிலர் தப்பாகப் பேசியிருக்கின்றனர்.. ஏதோ இருவருக்கும் தொடர்பிருக்கு என்பதுபோல.. இதனை அறிஞ்ச அவ, கவரிமான் தன் மயிரில் ஒன்றை இறந்தாஅலும் உயிர் வாழாதாம், அப்படித்தான் நானும் என கடிதம் எழுதி வைச்சுப் போட்டு சூசைட் பண்ணிட்டா.. ஸ்கூலே கலங்கிப்போச்சு அன்று.

    அந்தக் கதை தெரிஞ்சால் அதையும் கூறவும் பிளீஸ்ஸ்.. கவரிமான் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ நான் டீச்சரிடம் நிறைய கேள்வி கேட்கிறேன்னு என் க்ளாஸ் மேட்ஸ் தனியா கூப்பிட்டு மிரட்டியிருக்காங்க :) இது யூனிவெர்சிட்டியில் :)

      நீக்கு
    2. கவரிமான் என்றொரு பிரிவு மான்வகை உண்மையில் கிடையாது.

      நீக்கு
    3. அது 'கவரிமா'. இந்த விலங்கு இமயமலைப் பகுதியில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12087&cat=748&Print=1

      நீக்கு
    4. ஓ அது கவரிமா ஆ?... லிங் பார்த்தேன் பின்பு படிக்கிறேன்.. இப்போ வெளியே நிற்கிறேன்

      நீக்கு
    5. "யாக்" என அழைக்கப்படும் எருமைகளே "கவரிமா" எனப்படும். இவற்றுக்கு உடல் முழுதும் அந்த இமாசலக்குளிரில் இருந்து காப்பாற்றும் வகையில் அடர்த்தியான மயிர் இருக்கும். இந்த மயிரை அதன் உடலில் இருந்து நீக்கிவிட்டால் குளிர் தாங்காமல் இறந்து விடும். இதைத் தான் வள்ளுவர் "மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார் தம் உயிர் நீப்பர் மானம் வரின்!" எனச் சொல்லிச் சென்றிருக்கிறார். மற்றபடி கவரிமான் என்றொரு மான் வகை எல்லாம் இல்லவே இல்லை. எந்த ஒரு சொல்லையும் தமிழர்கள் புரிந்து கொள்ளும் விதமே தனியாக இருக்கிறதால் பலரும் கவரிமான் என்றொரு வகை இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

      நீக்கு
    6. ஆஆஆ இவ்ளோ இருக்கா இதுக்குள்... பாருங்கோ இந்தக் கவரிமானால ஒரு உயிர் போச்சே....

      நீக்கு
  22. நிறைய கேள்விகளை கேட்க ஆசை ஆனா நேரப்பற்றாக்குறை ஒரு கேள்வி மட்டும் கேட்கின்றேன் 
    மற்றவை விரைவில் வரலாம் :)1, கலாச்சாரம் பாரம்பர்யம் பண்பாடு இவற்றை அதிகம் கெட்டியாய் பிடித்து தொடர்வோர் நம்நாட்டில் வசிக்கும் இந்திய  மக்களா அல்லது வெளிநாட்டில் குடிபெயர்ந்து அங்கே கிளைகளை பரப்பி வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலென்ன ஜந்தேகம் வெளிநாட்டில் வாழ்வோர் தச்ன்:).. எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பட்சை:) பச்சை:)..

      நீக்கு
  23. கேள்வி பதில்கள் ரசனை.

    சிரி...சிரி...சிரி...
    நோயில்லா வாழ்வின் மருந்து.

    பதிலளிநீக்கு
  24. //பூனைக்குட்டிகளை / நாய்க்குட்டிகளை பிரித்து எடுத்து வளர்ப்பதில் // - நம்ம ஆசைக்காக ஒரு விலங்கின் வாழ்க்கையை நாம் முடிவு செய்வது சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் வந்தாச்சா. வெரி குட்.

      நீக்கு
    2. வந்தாச்சு... வரலை... என்பதுதான் என் பதில் கேஜிஜி சார்.

      நீக்கு
  25. கேள்வி பதில்களை ரசித்தேன்.

    //'நீங்கள் பிறக்கும் முன்னரே பெயரிடப் பட்டுள்ளீர்கள்' // - அப்படியா? ஏதேதோ நினைவலைகளை உருவாக்குகிறது.

    பதிலளிநீக்கு
  26. //ஓ! ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.//

    நன்றி கெளதமன் சார். ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
    உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஆச்சு கோமதி? உடல் நலம்பெறப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. கீழே விழும் திருவிழாதான். கையில் விழுபுண்.
      முட்டியில் அடி வீக்கம். மருத்துவரிடம் போய் வந்தேன்.
      இப்பொது ஒரளவு நலம்.
      விசாரிப்புக்கு நன்றி கீதா.

      நீக்கு
  27. ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் திருமதி கோமதி அரசு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!