ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

செடியில் பூக்காத தொப்பிகள் ஊரில் பூக்கள் தானே வளரும் போல


விற்பனைக்கு வைத்திருக்கும் தொப்பிகள்தான் ..செடியில் பூக்கவில்லை

அப்போ பார்த்த அதே குழிதான் எவ்வளவு காலம் அருவி நீர் விழுந்து குழிந்திருக்கும்?  மாவரைத்திருப்பார்களோ?


கிராமத்தின் பெயர் தெரிந்து  கொள்வதுடன்
மக்கள் எவ்வளவு சிக்கனமாக இந்த வேலையை  முடித்தார்கள் என்று பாருங்கள் .  வரவுக்குள் செலவு

என்ன ஒரு அடர்த்தி ? ஒவ்வொரு கொத்தும் கிலோ கணக்கில்

மூங்கில், மூங்கில், மூங்கில் மட்டுமே.....

கொஞ்சம் கிட்டே .....


zoom OUT !

மரத்தைக் குடைந்து செய்யப்பட்டவை

இதெல்லாம் வீட்டு உபயோகத்துக்கா, இல்லை, வெறும் காட்சிப் பொருளா?

இந்தப் பூ செடியில் வெகுநாட்கள் வாடாமல் இருக்குமாம்

கல், புல் , பூண்டு எல்லாமே ..

வியக்க வைக்கின்றன

ஒரே பூவில் தெளிவான இரு வண்ணங்கள்

கிராமத்திலிருந்து வரும் வழியில் மீண்டும்  அதே உணவகம்

மாலை 5 மணிக்கு இருள் நீங்க காரில் விளக்குகள்

37 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  மலர்கள் பலபல வண்ணங்களில் பூப்பதே ஒரு ஆனந்தம்.

  மூங்கிலி பின்னப்பட்ட கைவினைப் பொருட்களும்
  மற்ற மரத்தால் குடைந்து செய்யப்பட்ட வீட்டு
  அலங்காரப் பொருட்களும் வெகு அருமை. அவர்கள் பொருளாதரத்துக்கு உதவியாக இருந்தால் நல்லதுதான்.

  குளிர் பிரதேசங்களில் பொதுவாக மலர்கள் வாடுவதில்லை.
  ஆனாலும் இந்த அழகு

  பல நாட்கள் நிலைத்து இருக்க வேண்டும் என்றால்
  மகிழ்ச்சியே. கண்ணுக்கினிய காட்சிகள். நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.....

   இனிய காலை வணக்கம்.

   ரசித்தமைக்கு நன்றிகள்.

   நீக்கு
 2. அனைவருக்கும் காலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. எப்போவுமே இம்மாதிரிப் பூக்கள் காட்டுப்பக்கம் நிறையவே காணக்கிடைக்கும். நாங்க ராஜஸ்தானில் லானைச் சுற்றி இப்படித் தான் பல்வேறு விதமான நிறங்களில் பூச்செடிகள் வைத்திருந்தோம். அங்கே உட்கார்ந்து கொண்டால் எதிரே மேடையில் மயில்கள் ஆடுவதைப் பார்க்கலாம். நிஜம்மாகவே மயில்கள், மயில்கள் அதெல்லாம் சொர்க்கம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >> நிஜம்மாகவே மயில்கள், மயில்கள்...<<<

   ம்ம்.. நாங்க மட்டும் என்ன மயிலு..ன்னா சொன்னோம்!..

   நீக்கு
  2. வாங்க கீதா அக்கா...    மையிலாடும் பாறை மர்மம் என்று சொல்வார்கள்...   இது பூ மர்மம் போல!

   நீக்கு
  3. மயிலுன்னா சிரிதேவியையா சொல்றீஹ...?

   நீக்கு
  4. கல், புல், பூண்டில் காணப்படும் அந்த அடர் சிவப்புப் பூக்களை நாங்க வெல்வெட் பூ என்போம். எல்லாமே பல நினைவுகளைக் கொண்டு வந்தது.

   //ம்ம்.. நாங்க மட்டும் என்ன மயிலு..ன்னா சொன்னோம்!..// ஹாஹா,ஹா, கீழே பாருங்க ஸ்ரீராமை!

   நீக்கு
 4. மலைப்பிரதேசங்களில் இம்மாதிரிக் குழிகள் நிறையவே பார்க்கலாம். உட்கார்ந்து அரைச்சிருப்பாங்களோனு தான் தோணும். கொத்துக்கொத்தான பூக்கள், மூங்கில் கைவினைப்பொருட்கள் எல்லாமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காட்டு வாசிகள் இங்கேதான் துவையல் அரைப்பார்களாம்.

   நீக்கு
 5. அங்கெல்லாம் 3, 4 மணிக்கே இருட்டிக் கொண்டு வரும். 5 மணி என்பது நம்ம ஊர் 8 மணி போல இருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. கண்கவரும் பூக்கள் அழகு.. அழகு..
  சரி.. அவற்றுக்கொன்றும் கவிதை பாடவில்லையா?...

  அதான்.. அவங்க பேனா, பேப்பர் எடுத்துக்கிட்டுப் போகலையாமே!...

  இஃகி.. இஃகி.. இஃகி!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேப்பர் நனைஞ்சு போச்சாம்.  கவிதை கரைஞ்சு போச்சாம்!

   நீக்கு
 7. மூங்கில்களில் கை வண்ணம் அசத்துகிறது.
  பூக்கள் அழகோவியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. மூங்கில் கைவினைப் பொருட்கள் அழகு. மலர்களும் அழகு

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இப்பூக்களைப் போல இனிதான நாளாக பூத்துக்குலுங்க என் பிரார்த்தனைகளும்.

  பதிவு அருமை. அத்தனை பூக்களும் கண்களை கவர்கின்றன. அங்கு தொப்பி போன்ற மலர்களும் மலர்ந்துள்ளதோ என 2ஆவது படம் உண்மையிலேயே நினைக்க வைக்கிறது.

  படங்களும் அதற்கேற்ற பொருத்தமான வரிகளும் நன்றாக உள்ளது. ரசித்தேன்.

  மூங்கிலால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் அழகாக உள்ளது. மரத்தை வைத்துச்செய்த கலைப் பொருட்கள் அருமை.

  "கல்லிலே கலை வண்ணம் கண்டார்" என்ற பாடல் இந்த மலர்களுக்கு பொருந்தும். தன்னை இதழ்களின் ஓரமெல்லாம் அழகுபடுத்தியபடி மலர்ந்திருக்கும் மலர்களை கண்டு நானும் வியந்தேன்.

  கடைசி படம் மிகவும் அழகாக உள்ளது. எல்லாவற்றையுமே ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   ரசித்துப்பாராட்டியமைக்கும் நன்றி.

   விநாயகர் ஊர்வலம் என்று பார்க்க வந்து ஏமாந்தேன்!

   நீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. பதிவு மிக அருமை.
  படங்கள் எல்லாம் அழகு. மிக அழகு.

  மூங்கிலால் செய்யப்பட்ட. அனைத்துப் கலைப் பொருட்களும் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 12. கைவினை பொருளெல்லாம் விற்பனையாகுமா ரசிக்கத்தெரிந்தவர் எடுத்த படங்கள்\வியக்க வைக்கின்றன\வியக்க இப்புவியில் ஏராளம் ரசிக்கத்தெரிந்தால் ........

  பதிலளிநீக்கு
 13. கவித்துவமான தலைப்பு. படங்கள் அனைத்தும் ரசித்து எடுக்கப்பட்டுள்ளன. மூங்கில் கைவினைப் பொருட்களின் நேர்த்தி செய்தவர்களைப் பாராட்ட வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. பல நாட்களுக்கு வாடாமல் இருக்கக்கூடிய அந்தப்பூவை நான் பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
 15. அழகிய பூக்கள்.
  கிலோகணக்கில் இருக்கும் பூவில் வெள்ளை எங்கள் வீட்டில் இருக்கிறது.முதலில் சிவப்பும் இருந்தது அது மரணித்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 16. அழகான பூக்கள். அங்கே மூங்கில் பயன்பாடு அதிகம் தான். பல அழகான கைவினைப் பொருட்கள் அங்கே கிடைத்தன. நானும் பார்த்து ரசித்தேன். அருவியால் கல்லில் உண்டான பள்ளம் - அழகு! அருவியின் இடைவிடா உழைப்பு தந்த குழிகள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!