இந்த வாரம் வந்துட்டேன். அடுத்த வாரம் + சில வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது இருக்கும் என்று நினைக்கிறேன்.
வல்லிசிம்ஹன் :
பாட்டுப் பாட முடியாமல் தொண்டை ,படும் சிரமம்,என் மாதிரி வயதானவர்களுக்கு மட்டுமா. அப்படியானால் ஏன்?
# கேள்விலேயே பதில் இருக்கிறதே. வயசானால் தளர்ச்சி இயல்புதான்.
& வயதான காலத்தில் மகாராஜபுரம் விஸ், செம்மங்குடி ஸ்ரீ எல்லோரும் பாடவில்லையா என்ன! எல்லாம் தொடர்ந்து பயிற்சி செய்தால் சரியாக வரும். நாம் எல்லோரும் ப்ரோஃபஷனல் பாடகர்கள் இல்லை என்பதால் தினமும் சாதகம் செய்வதில்லை, குரல் வளத்தை நிரந்தரமாகப் பாதுகாத்துக்கொள்வதும் இல்லை. அவ்வளவுதான்!
அதிரா :
1. காற்று, தண்ணி, நெருப்பு.. இந்த மூன்றில் நீங்கள் பயப்படுவதை தர வரிசைப்படுத்தவும்... அதாவது அதிகமாக முதலில் எதுக்குப் பயப்படுவீங்க, கொஞ்சமாக எதுக்குப் பயப்படுவீங்க என. பெரிய சுனாமி.. பூகம்பம் இப்படி அளவில் சிந்திக்காமல், சின்னதாக சிந்திச்சு பதில் சொல்லுங்கோ.
# அருகில் சிகரெட் பிடிப்பவர் இருப்பின் நெருப்புக்கும், சகபயணி மணம் பரப்பும்போது தண்ணிக்கும், என்மேல் புழுதி வாரித் தூற்றினால் காற்றுக்கும் அஞ்சாமல் என்ன செய்ய ?
& சரி சிறிய அளவிலேயே சிந்திக்கிறேன். நான் புத்தகம் படிக்கும்போது அல்லது பரீட்சை எழுதும்போது பின்னாடியிலிருந்து அதைப் பார்த்து / படித்து யாராவது என் கழுத்தில் விடுகின்ற மூச்சுக் காற்று அதிகம் வெறுப்பு அடையச் செய்யும்.
தண்ணி யடிச்சுட்டு ரோடுல விழுந்து கிடப்பவன், அப்படியே கன்னாபின்னாவென்று வசைச் சொற்களை வீசுபவன் - என்னை அடுத்து கோபமூட்டுபவர்கள்.
பொது இடங்களில் புகை (நெருப்பு) பிடிப்பவர்கள் விடும் புகையும் அவ்வாறே!
சிறு வயதில் நெருப்புக்கும் ஆற்றுத் தண்ணீருக்கும் பயந்தது உண்டு. காற்றைக் கண்டு பயந்த ஞாபகம் இல்லை.
# அசல் நகல் பாகுபாடு புரியும்போது புன்னகையே உயர்வு.
& புன்னகையும் இன்முகமும் எல்லோரையும் கவரும் என்பது சரிதான். அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்களில் காலையில் காண்போர் எல்லோரையும் புன்னகையுடன்தான் எதிர்கொள்வேன்.
நினைவில் நிற்கும் சக ஊழியர் ஒருவருக்கு மட்டும் ஏனோ அவரைப் பார்க்கும்போது நான் புன்முறுவல் பூத்தால் பிடிக்காது. 'என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் சிரிக்கிறீங்க? ' என்று கோபப்படுவார்!
அப்படி விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக புன்னகை + இன்முகம் என்பது - அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழிக்கு ஒப்ப, நல்ல மனம் உள்ளே இருக்கின்றது என்று வெளியுலகிற்குக் காட்டும் கண்ணாடி.
3. உண்மையில் கவரிமான் என ஒன்று இருந்ததோ?..
இந்தக் கவரிமான் பரம்பரை எனும் சொல்லை வைத்தே எங்கள் ஊரில் அநியாயமாக ஒரு அக்கா சூசைட் பண்ணிக்கொண்டா.. அதை மறக்கவே முடியாது. சயன்ஸ் பிரிவில் படிச்சுக் கொண்டிருந்தவ, மிகவும் கெட்டிக்காரி, மெடிசின் கிடைக்கும் என ஸ்கூலே எதிர் பார்த்தவேளை, அவ ரியூசனில் ஒரு மாஸ்டரிடம் அதிகம் கேள்விகள் கேட்பாவாம், அதை வச்சு சிலர் தப்பாகப் பேசியிருக்கின்றனர்.. ஏதோ இருவருக்கும் தொடர்பிருக்கு என்பதுபோல.. இதனை அறிஞ்ச அவ, கவரிமான் தன் மயிரில் ஒன்றை இறந்தாஅலும் உயிர் வாழாதாம், அப்படித்தான் நானும் என கடிதம் எழுதி வைச்சுப் போட்டு சூசைட் பண்ணிட்டா.. ஸ்கூலே கலங்கிப்போச்சு அன்று.
அந்தக் கதை தெரிஞ்சால் அதையும் கூறவும் பிளீஸ்ஸ்.. கவரிமான் கதை.
# கவரிமான் கற்பனை மான்தான் என எனக்குத் தோன்றும். அவப்பெயர் வந்து விடுமே அல்லது வந்து விட்டதே என உயிர் விடுதல் தவறான புரிதல். அறிவார்ந்தது இல்லை.
& சென்ற வாரப் பதிவில் திருமதி கீதா சாம்பசிவம் இதற்கு சரியான பதிலை சொல்லியிருக்கிறார்.
// "யாக்" என அழைக்கப்படும் எருமைகளே "கவரிமா" எனப்படும். இவற்றுக்கு உடல் முழுதும் அந்த இமாசலக்குளிரில் இருந்து காப்பாற்றும் வகையில் அடர்த்தியான மயிர் இருக்கும். இந்த மயிரை அதன் உடலில் இருந்து நீக்கிவிட்டால் குளிர் தாங்காமல் இறந்து விடும். இதைத் தான் வள்ளுவர் "மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார் தம் உயிர் நீப்பர் மானம் வரின்!" எனச் சொல்லிச் சென்றிருக்கிறார். மற்றபடி கவரிமான் என்றொரு மான் வகை எல்லாம் இல்லவே இல்லை. எந்த ஒரு சொல்லையும் தமிழர்கள் புரிந்து கொள்ளும் விதமே தனியாக இருக்கிறதால் பலரும் கவரிமான் என்றொரு வகை இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.//
ஆதலால், என் பங்குக்கு நான் எதையாவது சொல்லி, சொதப்புவதாக இல்லை!
ஏஞ்சல் :
1, கலாச்சாரம் பாரம்பர்யம் பண்பாடு இவற்றை அதிகம் கெட்டியாய் பிடித்து தொடர்வோர் நம்நாட்டில் வசிக்கும் இந்திய மக்களா அல்லது வெளிநாட்டில் குடிபெயர்ந்து அங்கே கிளைகளை பரப்பி வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களா ?
# சடங்கு தான் கலாச்சாரம் என்றால் உள்நாடு வெளிநாடு எல்லாம் சமம்தான். கடையில் விற்கும் கொழுக்கட்டை.
& என் பார்வையில் வெளிநாட்டில் குடிபெயர்ந்து அங்கே கிளைகளைப் பரப்பி வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் அவற்றை கெட்டியாகப் பிடித்துத் தொடர்கிறார்கள் என்று தோன்றுகிறது.
இந்தியாவிலேயே வாழும் மக்களுக்கு அது கிணற்றுத் தண்ணீர். எப்போ வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளலாம் என்கிற அலட்சிய மனோபாவம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அது மழைநீர். மழை பெய்யும்போதே அதைப் பிடித்துப் பயன்பெற வேண்டும். விட்டால் பிடிக்கமுடியாது என்ற நினைப்பு இருக்கும்.
===============================
ஓஓஓஓ லலலாஅ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ
பதிலளிநீக்குவாழ்க!
நீக்குமீதான் பெஸ்ட்டூஊஊஉ சே சே 2ண்ட்டூஊஊஊ
பதிலளிநீக்குவாழ்க, வாழ்க!
நீக்குமீதான் 3 ஆவதும்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ இனி ஆர் வேணுமெண்டாலும் வரட்டும்:)... நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்... நல்ல காலம் பிறக்கட்டும் ஜக்கம்மாவோடு ஜலங்கை மோகினி வந்திருக்கிறாக:)..... ஹா ஹா ஹா...
வாழ்க, வாழ்க, வாழ்க!
நீக்குஆஆஆவ்வ்வ் பதில்கள் நன்று... நன்றி நன்றி.... கிளவியின் திலகம் சே சே கேள்வியின் திலகம் இம்முறை ரொம்ப அடக்கொடுக்கமாக ஒன்றோடு நிறுத்திட்டாவே:)... இது நாட்டுக்கு நல்லதில்லையே:)...
பதிலளிநீக்குநாங்களும் ஆச்சரியம் அடைந்தோம்!
நீக்குஆமாம் :) எனக்கு நிறைய மனதில் இருந்தது ..கேள்விலாம் இல்லாத தோணாத நிமிஷமேயில்லை .அனால் மகளை யுனிவெர்சிட்டிக்கு அனுப்பற பிசியில் இருந்ததால் கணினியில் டைப்பா நேரமில்லாம போச்சு :)இன்னிக்கு வரும் நிறைய :)
நீக்கு////ஆதலால், என் பங்குக்கு நான் எதையாவது சொல்லி, சொதப்புவதாக இல்லை! ////
பதிலளிநீக்குஹா ஹா ஹா:)...
சரி சரி அதிரா சிரிச்சிட்டுப் போறா என ஶ்ரீராமுக்குச் சொல்லிவிடுங்கோ கெள அண்ணன்... நாளை ஜந்திப்போம்ம்ம்:)...
வாங்க அதிரா... வணக்கம்....
நீக்குபர்ஸ்டு. பெஸ்ட்டு எல்லாம் நீங்களே.!
நான் இந்த பின்னூட்டத்தை பார்க்கவில்லை லை லை
நீக்குஅனைவருக்கும் நல்வரவு. முதலில் வந்திருக்கும் அதிரடிக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பார்த்துட்டேன், படிச்சுட்டேன். கேள்விகள் எல்லாம் இருக்கு. ஆனால் இப்போக் கேட்கப் போவதில்லை. காலம்பர வரேன்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா வணக்கம்.
நீக்குநல்வரவு. பிரார்த்தனைகளுக்கு நன்றி.
"கவரிமா" பற்றிய என்னோட விளக்கத்தை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்!...
பதிலளிநீக்குவணக்கம்!
நீக்குகவரிமா பற்றிய விளக்கம் அருமை...
பதிலளிநீக்குபள்ளி நாட்களில் ஆசிரியர் சொன்னதுவும் இதுவே...
நலம் வாழ்க...
என்னுடைய ஆசிரியர் ஏனோ அப்படி எல்லாம் சொல்லவில்லை! கவரிமான் என்றே சொன்னார்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்த பொன்னாளாக பிரகாசிக்கவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நேற்று முழுவதும் சில வேலைகளினால் என்னால் வலை உலா வர இயலவில்லை நேற்றைய கதையும் அருமை. உடன் கருத்திடாவிடினும் இன்று வருகிறேன். அதனால் என் பதிவில் பதில்களும் தாமதம். அனைத்திற்கும் மன்னிக்கவும். இன்றைய கேள்வி பதில்கள் கண்டிப்பாக அருமையாகத்தான் இருக்கும்.படித்து விட்டு பிறகு மீண்டும் வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குஎன் கேள்விக்கு சரியான பதில் கொடுத்திருக்கிறீர்கள் மிக நன்றி.
சாதகம் செய்யாவிட்டால் குரல் கெடும் தான்.
கீதாவின் கவரி மா/யாக் விளக்கம் சூப்பர்.
அதிரடிக் கேள்வி அதிராவுக்கு வாழ்த்துகள். மற்றவை காலையில். இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குஎன் கேள்விக்கு சரியான பதில் கொடுத்திருக்கிறீர்கள் மிக நன்றி. அப்போ தெரிந்த பதில் தானா
தெரிந்த பதிலாகவே இருந்தாலும், நினைத்த பதிலையே சொன்னால் அல்லது சொல்லக் கேட்டால் அதிலே ஒரு சந்தோஷம்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகேள்விகளும், பதில்களும் மிக அருமை.
நன்றி!
நீக்கு//நாம் எல்லோரும் ப்ரோஃபஷனல் பாடகர்கள் இல்லை என்பதால் தினமும் சாதகம் செய்வதில்லை, குரல் வளத்தை நிரந்தரமாகப் பாதுகாத்துக்கொள்வதும் இல்லை. அவ்வளவுதான்! //
பதிலளிநீக்குஅதிரா சொல்வது போல் புன்னகையிலும் வேஷம் (விஷம்)இருக்கும் . அதை கண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் சில விதி விலக்கு .
கவரி மா விளக்கம் அருமை. அதிராவின் அனுபவம் சேரமான் கணைக்கால் இரும்பொறை மன்னன் நினைவுக்கு வருகிறார்.
ஆஹா! ஆமாம், ஆமாம்!
நீக்குஏஞ்சல் கேள்விக்கும் பதில்கள் அருமை.
பதிலளிநீக்குசடங்குகள், பண்டிகைகளை எடுத்துக் கொண்டால் வேலை தொந்திரவு, வேலை செய்ய ஆள் இல்லை என்று இங்குள்ளவர்கள் குறைத்து வருகிறார்கள். நவராத்திரி வருகிறது வயதானவர்கள் பண்டிகை என்றால் மலைக்கும் காலம் வந்து விட்டது. நிறைய வீடுகளில் வய்தானவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சிறு வயதினர் எல்லாம் மேல் நாடுகளில்.
அங்கு உள்ளவர்கள் எல்லோரும் வேலைகளை பகிர்ந்து கொண்டு பண்டிகைகளை எளிதாக்கி வருகிறார்கள். ஆளுக்கு ஒரு பிரசாதம் செய்து கொண்டு வந்து இறைவனுக்கு படைத்து எல்லோரும் சேர்ந்து உண்டு மகிழ்கிறார்கள்.
இங்குள்ள உறவினர்களை சந்திக்க முடியவில்லை அங்கு இருப்பவர்களை தங்கள் உறவுகளாய் நினைத்து கிடைக்கும் பண்டிகை நாட்களை எல்லா மத பண்டிகைகளையும் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு.
ஆம். அதேதான்!
நீக்கு//யாக்" என அழைக்கப்படும் எருமைகளே "கவரிமா" எனப்படும். இவற்றுக்கு உடல் முழுதும் அந்த இமாசலக்குளிரில் இருந்து காப்பாற்றும் வகையில் அடர்த்தியான மயிர் இருக்கும். இந்த மயிரை அதன் உடலில் இருந்து நீக்கிவிட்டால் குளிர் தாங்காமல் இறந்து விடும். இதைத் தான் வள்ளுவர் "மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார் தம் உயிர் நீப்பர் மானம் வரின்!" எனச் சொல்லிச் சென்றிருக்கிறார் மற்றபடி கவரிமான் என்றொரு மான் வகை எல்லாம் இல்லவே இல்லை//
பதிலளிநீக்குஇதன் விபரம் என்னிடம் டிராப்டில் கிடக்கிறது.
சகோ கீ.சா.அவர்கள் சொல்வது உண்மையே...
நன்றி!
நீக்குகேள்விகளுக்கான பதில்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் எப்போதும் போல் நன்றாக உள்ளது. சகோதரிகள் வல்லி சிம்ஹன், அதிரா, ஏஞ்சல் அனைவரின் கேள்விகளும், அதற்குத் தகுந்த பதில்களும் அருமை.
சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் "கவரிமா"விளக்கம் அபாரமாய் இருக்கிறது. அனைத்தையும் ரசித்தேன். தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி!
நீக்குநெருப்பிலும் தண்ணீரிலும் விளையாடக்கூடாது, ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் என்பார்கள். காற்று அந்த அளவு பயப்படவேண்டிய சமாச்சாரம் அல்ல. (அதுக்காக புயல் அடிச்சிக்கிட்டிருக்கும்போது மரங்கள் இருக்கும் பகுதி வழியா நடக்கக்கூடாது)
பதிலளிநீக்கு//வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அது மழைநீர். மழை பெய்யும்போதே அதைப் பிடித்துப் பயன்பெற வேண்டும். விட்டால் பிடிக்கமுடியாது என்ற நினைப்பு இருக்கும்// - இதுதான் சரியான பதில். வெளிநாட்டுக்குப் போனவங்களுக்கு புதுக் கலாச்சாரத்த முழுவதுமாக ஏற்கும் மனம், தன் வாரிசுகள் புதுக் கலாச்சாரத்தில் புழங்குவதை ஏற்பது - இது இரண்டும் வருவது கடினம். அதனால அவங்க தங்கள் சொந்தக் கலாச்சாரத்தைப் பேண நினைக்கிறார்கள் (அப்படி பேணுவது சாத்தியமில்லை என்றபோதும். ஏனென்றால் ஒரு தலைமுறை தாண்டிவிட்டால், கலாச்சாரம் சிதைந்துவிடும்)
//தினமும் சாதகம் செய்வதில்லை, குரல் வளத்தை நிரந்தரமாகப் பாதுகாத்துக்கொள்வதும் இல்லை// - அப்படி இல்லை. வயது குரலுக்கு தளர்ச்சி கொடுக்கும். அதை மீறமுடியாது. எம்.எஸ்.எஸ். கடைசிக் கச்சேரி சோபிக்கலை. அதனால்தான் அவங்க பாடுவதை நிறுத்திட்டாங்க. Peak Period முடிந்துவிட்டால், மேடையிலிருந்து இறங்கிடணும். இது எல்லோருக்கும் பொருந்தும்.
ஆம், சரிதான். வயதான காலத்தில் ஆண் பாடகர்கள் அளவுக்கு பெண் பாடகிகள் ஏனோ சோபிப்பதில்லை, பி சுசீலா போன்ற சிலரைத் தவிர.
நீக்கு@ நெல்லைத்தமிழன் சரியா சொல்லிட்டிங்க ..
நீக்குமுக்கியமா தாய்மொழி எப்படியாச்சும் கற்றுக்கொடுக்கிறார்கள் .உடை விஷயத்திலும் அப்படியே .தீவாளி ,மற்றும் பைசாகி கொண்டாட்டம் இங்கே ஜெகஜோரா நடக்கும்
இங்கே வெள்ளைக்கார பையனை கல்யாணம் செய்தாலும் அதையும் பஞ்சாபியர் அவங்க ட்ரெடிஷன்படிதான் செய்து வைக்கிறாங்க :)
ஹை நானும் அதே தண்ணி நெருப்புகை வாசனைக்கு அலறி ஓடுவேன் :)
பதிலளிநீக்குகௌதமன் சார் .டேக் கேர் .உடல்நலனை கவனியுங்க ..
பதிலளிநீக்குசரி இருங்க கேள்விகளை தயாரிச்சிட்டு வரேன் :)
பதிலளிநீக்குசிவப்பு மாளிகை சிங்காரம் என்ற பெயரில் பின்னூட்டங்களில் கலக்கலாமா என்று ஒரு யோசனை. என்ன நினைக்கிறீர்கள்?..
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது வெள்ளை மாளிகைக்கு எதிரே இருக்குமோ?:))
நீக்குமதன மாளிகையில் மந்திர மாலைகளாம் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.
நீக்கு1,இந்த உணவைத்தான் உண்ண வேண்டும் என்று நம்மை செய்ய முடிவெடுக்க தெரிவு செய்ய வைப்பது எது ?
பதிலளிநீக்கு2, நாம் உண்ணும் உணவு நமது மனதின் இயல்பை மெண்டல் ஹெல்த்தை கட்டுப்படுத்துமா ?
3, ஒரு அறையில் அமர்ந்திருக்கும்போது எங்கிருந்தோ நமக்கு பிடித்த உணவின் சுவை நாசியை துளைக்கும் :) அதை உணர்ந்திருக்கிறீர்களா ?
4, இப்போதும் எனக்கு நான் சமைக்காத கருணைக்கிழங்கு /சேனைக்கிழங்கு பொரியல் வாசம் வருகிறது :) இதன் காரணம் என்ன ?முக்கியக்குறிப்பு எங்க வீட்டருகில் இந்தியர்களே இல்லை ஆனாலும் பொரியல் வாசனை சுத்தி சுத்தி வருது ?
5, ஊடங்கங்கள் பேயை கூட தேவதையாகவும் தேவதையைக்கூட பிசாசாகவும் காட்டக்கூடியவை என்பது உண்மையா ?
6, தற்காலிகமா தப்பிப்பதற்கு பொய் சொல்லி வசமா மாட்டியுள்ளீர்களா ??
7, அரிஸ்டாட்டில் ,பிளேட்டோ சாக்ரடிஸ் எல்லாருமே தத்துவ ஞானிகள்தான் ஆனா மகிழ்ச்சி சந்தோஷம் இது குறித்து வெவ்வேறு பார்வைகள் இருக்கே இவர்களை போன்ற தத்துவ ஞானிகளுக்கு ?அது ஏன் ?
8, இந்த கேள்வி என்னை குடைஞ்சிட்டே இருக்கு கொஞ்சம் நாளா :) பட்டுப்புடவை ப்ளஸ் டாட்டூ இந்த காம்பினேஷன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? காது மூக்கு குத்துவது போலத்தான் இதுவும்னு சிலர் சொல்றாங்க ஆனாலும் பெர்மனன்ட் டாட்டூவை ஏற்க மனம் தயங்குகிறது .இதன் காரணமென்ன ?
9, அழகின் இலக்கணம் அழகு பற்றிய எண்ணம் கருத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதன் காரணமென்ன ?சிலருக்கு தமன்னாவும் சிலருக்கு பாவனாவும் சிலருக்கு அனுஷ்காவும் மட்டும் அழகோ அழகா தெரிவதன் காரணம் என்ன ?
10, பெண் குழந்தைகள் அப்பாவிடம் அதிக பாசமுடன் இருப்பதன் காரணமென்ன ? (இது கொஞ்சம் பொற்ற்றாமையுடன் வந்த கேள்வி :)
பதிலளிப்போம்.
நீக்குகேள்வி பதில்கள் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு