சீர்வரிசை என்று ஒரு படம் 1976 இல் வெளிவந்தது.
முத்துராமன் -லஷ்மி திரைப்படம். ஸ்ரீகாந்த் வில்லன் என்று நினைக்கிறேன்.
படம் பார்த்திருந்தால் தெரியும். பாட்டு மட்டும் கேட்டால் விவரம் எப்படித்தெரியும்!! இணையத்தில் தேடினால் கிடைக்கவேண்டும். இப்படி விவரம் கிடைக்காத படங்கள் இருந்தால் 'நினைக்க'தான் வேண்டும்!
படம் எப்படி இருந்தால் என்ன, நாம் பாடல்களுக்குச் செல்வோம்!
கோவை செழியன் தயாரிப்பில் கே ஸ்வர்ணம் இயக்கத்தில் கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை!
இரண்டு பாடல்கள் இன்று.
இரண்டு பாடல்களுமே எஸ் பி பாலசுப்ரமணியம் - சுசீலா குரல்களில்தான். முதல் பாடல் அவ்வளவாக யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
முதலில் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா... இந்தப் பாடலில் பெரிய ப்ளஸ் எஸ் பி பி குரல். மற்றும் சுசீலாம்மா குரல். ஆரம்பமே கொஞ்சம் உயரத்தில் ஆரம்பிப்பது, சரணத்தில் முதல் இரண்டு வரிகள் முடிந்ததும் வரும் வித்தியாசமான டியூன் வரிகள் (நேத்துக்கு மனது கேட்டுது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன்).. அதையே இரண்டாவது சரணத்தில் எஸ் பி பி அந்த இடத்தைப் பாடும்போது கூடுதல் சுவாரஸ்யம்.
பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா.. ஓ..
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா..
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களால் சொல்லம்மா
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பாத்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பாத்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்
காட்டில பூவும் கூட்டில தேனும்பொங்குற போது சேத்துக்கிறேன்
ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க
ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது
பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லுங்க
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
சொல்லத்தான் தெரியாது
மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும்
வண்ணத் தாமரை துள்ளத் துள்ள கைகள் பின்னட்டும்
மங்கை மேனியில்பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும்
வண்ணத்தாமரை துள்ளத் துள்ள கைகள் பின்னட்டும்
உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ..
உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ.
நேத்துக்கு மனது கேட்டுது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கிறேன்..
தொட்டுத் தொட்டு பேசப் பேச சொகமா இருக்குங்க
தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடும்ங்க
தொட்டுத் தொட்டு பேசப் பேச சொகமா இருக்குங்க
தொட்டால் போதும்பத்தாம் மாதம்தொட்டில் ஆடும்ங்க
சின்னஞ்சிறுசுஅனுபவம் இல்லை ஏதோ கொஞ்சம் பார்த்து க்குங்க
மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி தீங்கு வராமல்பார்த்துக்கறேன்
அப்படி சொன்னாஇப்பவும் சரிதான் கைபிரியாமல் சேர்த்துக்கிறேன்
இனி நமது இன்றைய ஸ்டார் பாடலுக்கு வருவோம்.. இதைக் கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். கண்ணதாசன் திரைப்படங்களில் நிறைய கிருஷ்ணன் பாடல்கள் எழுதி இருக்கிறார்.
எல்லாமே ரசனையான பாடல்கள். இங்கும் கண்ணனை நினைக்காத நாளில்லையே என்று எழுத சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா? ராதையாக தன்னை நினைத்துக் கொண்டார் போலும்... சுசீலாம்மா குரலும் இனிமை. கண்ணன்தானே கண்ணன்தானே என்று பாலு இணையும் குரல் வெகு இனிமை, ரசனை.
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா... கண்ணா...
கண்ணன்தானே... கண்ணன்தானே
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நானாடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும்யமுனா நதி
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும்யமுனா நதி
கண்ணா உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ
வெண் நீலக்கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
நாளாக ஆக தாளாது கண்ணா
நீயில்லை என்றால் நானென்ன பெண்ணா
கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன்கை அதில் என்கை அதுதான் வழி
கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன்கை அதில் என்கை அதுதான் வழி
கண்ணே உன்னை மறப்பேனோ..
நான் உன்னை மறப்பேனோ
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
will come in a few minutes
பதிலளிநீக்குவாங்க....
நீக்குஇரண்டு பாடல்களுமே நான் அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்கள்தான் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி. முதல் பாடல் கொஞ்சம் அபூர்வமாகத்தான் கேட்டிருப்பார்கள் மக்கள் என்று நினைதேன்.
நீக்குஉண்மைதான் ஸ்ரீராம்! இந்தப்பாட்டைக் கேட்ட நினைவு எனக்கு இல்லை! தவிரவும் இந்தமாதிரிப் பாடல்களை பிரபலப்படுத்திவந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இங்கே மவுசு இழந்து நீண்டகாலமாகி விட்டதே!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள். குட்டிக்குஞ்சுலு ஒரு வேலை கஷ்டமான வேலையைக் கொடுத்து விட்டது. அதோட கார் பொம்மையை அது பிய்த்துவிட்டு என்னைச் சேர்த்துக் கொடுனு சொல்லிக் கொண்டிருக்கிறது. அதைச் சேர்த்தால் நிற்கவே இல்லை. ரப்பர் பான்ட் போட்டுத் தாத்தாக் கட்டிக் கொடுத்ததுக்குக் கோபம் வந்துடுத்து! இஃகி,இஃகி,இஃகி, இப்போ அது அப்பாகிட்டேபோய்க் கொடுத்திருக்கு! பார்க்கலாம் இஞ்சினியர் சார் என்ன பண்ணப் போறார்னு! :)))))) அதான் வந்துட்டு உடனே போயிட்டேன். இல்லைனா கத்தும்! :))))
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். நல்வரவு. நன்றி.
நீக்குகுகு செம வேலை கொடுத்திருக்கார்... எஞ்சினியர் என்ன செய்தார் என்று சொல்லுங்களேன்....!
நீக்குவீட்டிலே எல்லோரும் அது கிட்டே மாட்டிக் கொண்டு முழிச்சுட்டு இருக்கோம். மை கார் நு கத்திண்டு இருக்கு! யார் போட்டுக் கொடுத்தாலும் உடனே எடுத்துடறது! :)))))
நீக்குஹா... ஹா.. ஹா...
நீக்குபடிக்கவே ரசனையா இருக்கு கீசா மேடம். அதைப் பிரிந்து ஶ்ரீரங்கம் வந்தால் உங்களிருவருக்கும் வெறிச்சுனு கொஞ்ச மாதங்கள் இருக்கும்
நீக்குகிருஷ்ணதேவ ராயருக்குத் தெனாலிராமன் சொன்ன மாதிரித்தான். அரச சபைக்குத் தாமதமாக வந்த தெனாலியிடம் ராயர் தாமதத்துக்கான காரணம் கேட்கப் பிடிவாதம் பிடித்த தன் குழந்தையைச் சமாதானம் செய்யப் பார்த்ததாகவும், அது முடியவே இல்லை என்பதால் ஒரு மாதிரி தப்பித்து வந்ததாகவும் சொன்ன ராமனைப் பார்த்துச் சிரித்த ராயர் தன்னால் முடியாததும் உண்டோ? என நினைத்துக் குழந்தையை எடுத்துவரச் சொன்னாராம். அவ்வாறே குழந்தையை ராமன் அரச சபைக்கு எடுத்து வரக் குழந்தையைத் தூக்கி விளையாட்டுக் காட்டிய ராயர் அதற்கு என்ன வேண்டும் எனக் கேட்கத் தன் மழலையில் ஆனைக்குட்டி வேண்டும் எனச் சொல்லி உள்ளது. ஆனை பொம்மை ஒன்றை ராயர் கொடுக்க அதைத் தூக்கி எறிந்த குழந்தை மீண்டும் ஆனை வேண்டும் எனச் சொல்ல ஆனைக்கொட்டடியிலிருந்து ஒரு குட்டி ஆனை அரசசபைக்கு வந்து சேர்ந்தது. ஆனாலும் குழந்தை விடாமல் அழவே மீண்டும் ராயர் தன்னால் முடியாததும் உண்டா எனக் குழந்தையிடம் மறுபடி இப்போ என்ன வேணும்னு கேட்டாராம். ஒரு பானை எனச் சொல்ல சிரித்த ராயர் உடனே பானையைக் கொண்டு வர, குழந்தை அந்த ஆனைக்குட்டியைப் பானைக்குள் போட்டுத் தரச் சொல்லி அழுததாம்! திகைத்த ராயர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதைப் போல நேத்திக்கு அதுவா மறக்கும்வரை எல்லோரும் போட்டுப் போட்டுப் பார்த்துட்டு முடியாமல் முழிச்சோம்.
நீக்குஆகா குட்டிக் குஞ்சுலுவின் கும்மாளத்தில் அக்காவிடமிருந்து அழகிய கதை கிடைத்துள்ளது...
நீக்குஅருமை.. மகிழ்ச்சி...
படமும் தெரியாது, பாடல்களும் கேட்டதில்லை.
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??????????????????????????
நீக்கு:)))))
நீக்கு'கண்ணனை நினைக்காத நாளில்லையே...' பாடலைக் கூடவா கேட்டதில்லை? அப்போது ஒரு நாளைக்கு மூன்று முறைகள் ஒலி பரப்பப்பட்ட பாடலாயிற்றே.
நீக்குஅதானே....
நீக்குஒருவேளை கேட்டிருப்பேன். ஆனால் கேட்ட நினைவு இல்லை. அவ்வளவு தூரம் திரைப்படங்களில் ஞானம் இல்லைனா யாரு ஒத்துக்கறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஇப்போத் தான் இரண்டு பாடல்களையும் போட்டுக் கேட்க முடிந்தது. கண்ணனை நினைக்காத நாளில்லையே பாடலைக் கேட்டிருக்கேன் என்பதைத் தாழ்மையுடனும், பெருமையுடனும் சொல்லிக் கொள்கிறேன். இன்னொரு பாட்டு தெரியாது! கேட்டதே இல்லை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.
இன்றைய பாடல்கள் இரண்டுமே இனிமையானவை. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இங்கும் பிறகு கேட்டுப் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குபாடல்களைக் கேட்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி.
இரண்டாவது பாடல் மிக அருமை. நிறைய தடவை கேட்டு ரசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்களுக்கு பழைய பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் சிலை வைக்கப் போறதா கேள்விப்பட்டேன். யாரும் ரசித்திராத, வெற்றிபெறாத பாடலைக் கொண்டாடுகிறீர்கள் என்று
ஆம். இரண்டாவது பாடல் கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள் - கீதா அக்கா தவிர! கண்ணதாசன் எழுதிய கண்ணன் பாடல்கள் வைத்திருந்தேன். அகில் இதற்கும் இடம் உண்டு. முதல் பாடல் எஸ் பி பி குரல் வசீகரமாய் இருக்கும்.
நீக்குகேட்டிருக்கேனு சொல்லிட்டேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குமுதல் பாடலுக்கு ஏத்த குறள் என்னன்னு துரை செல்வராஜு சர் நோசனையா இருக்காரா?
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்,கீதாமா, முரளிமா..
நீக்குஎன்ன துரையைக் காணோம். ?
குட்டிக் குஞ்சுலு படா குஞ்சுலுவாக் கோபம் கத்துக்கறது போல இருக்கு கீதாமா. அனுபவியுங்கள் அமுதத்தை.:)
நீக்குதங்களது தேடலுக்கு நெஞ்சார்ந்த நன்றியம்மா...
நீக்குநேற்று சந்தர்ப்ப வசத்தால் நள்ளிரவு 1:50 க்குப் பிறகு தூக்கம் வரவில்லை...
பகலிலும் வேறொரு விஷயமாக அலைச்சல்... உறங்குவதற்கு இரவு 10:45 ஆயிற்று...
வழக்கம் போல அதிகாலை 3:20க்கு விழிப்பு வந்தும் எழ முடியவில்லை...
அதுதான் தாமதம்...
இன்று தை அமாவாசை அல்லவா...
சமையலும் சேர்ந்து கொண்டு விட்டது...
பிறகு வருகிறேன்...
மகிழ்ச்சி.. நன்றி..
நலமே வாழ்க துரை. அன்புடையார் என்றும் நலம் பெறுவர்.
நீக்குவாங்க துரை ஸார்.. வெள்ளி விடுமுறைதானே? பாடல் பற்றிய அபிப்ராயங்களைக் காணோமே! நிறைய சங்கதிகள் இந்நேரம் வந்து விழுந்திருக்க வேண்டுமே!
நீக்குசீரகச் சம்பா சோறு, சின்ன வெங்காயம் சிவப்பு முள்ளங்கி சாம்பார், மோர், கருப்பட்டி பாயசம்...
நீக்குஆக, அமாவாசை தீர்த்தம் கொடுத்தாயிற்று...
இனி எல்லாம் அவர் செயல்...
வழக்கங்கள் வேறுபடும். நாங்கள் வெங்காயம், முள்ளங்கி அமாவாசைகளில் சேர்க்க மாட்டோம்!!
நீக்குஅப்படியா!!
நீக்குஅத்தகைய சாஸ்திர விதிமுறைகள் தெரியாது...
அந்த முள்ளங்கியும் நம்மூரில் உள்ளது போல அல்ல...
சின்னச் சின்னதாக உருண்டையாக இருக்கும்.. Baby Radish என்று வரும்...
நாலைந்து மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் வெங்காயம் வந்திருக்கின்றது...
இங்கே இரண்டும் கிடைக்கின்றன. பெரிய முள்ளங்கி அநேகமாச் சப்பாத்திக்கு வைத்துக் கொள்வோம். எப்போவானும் அதில் சாம்பார்! ஆனால் நான் அறிந்தவரையில் மதுரையில் எப்போவுமே சிவப்பு முள்ளங்கி தான் வரும். சின்ன வயசில் அதிலேதான் அம்மா சாம்பார் பண்ணுவார். நான் வெள்ளை முள்ளங்கியை, பெரிய வெங்காயத்தை எல்லாம் பார்த்ததே சென்னை வந்து தான். அதே போல் கோவைக்காயும் தெரியாது.
நீக்குஇரண்டுமே நல்ல பாடல்கள். லக்ஷ்மி நாட்டுப் புறப் பெண்ணாக இருப்பார். பண்ணையைப் பார்வையிட வந்த முத்துராமன் காதலித்துக் கல்யாணம்
பதிலளிநீக்குசெய்வதாக வாக்குக் கொடுத்துவிட்டுப் பெற்றோருக்குப் பயந்த
பிள்ளையாக விழிப்பார்.நடுவில் அவளை ஏதோ கோயிலில் திருமணமும் செய்திருப்பார்.
சீர் இல்லாத பெண்ணாக வந்த லக்ஷ்மியை
முத்துராமன் வீட்டார் துரத்தி விடுவார்கள்.
பெரிய பணக்கார வீட்டுப் பெண் போல வேஷமிட்டு
வரும் லக்ஷ்மி எல்லோரையும் அரட்டி மிரட்டி வழிக்குக் கொண்டு
வருவார்னு நினைக்கிறேன்.
எஸ்பிபி குரல் பளிச்சென்று இருக்கும் பாடல்கள் ஆயிரத்தில் இதுவும்
ஒன்று.
சுசீலாம்மாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
இரண்டுமே இசையில் நல்ல பாடல்கள்.
மிக நன்றி ஸ்ரீராம்.
வாங்க வல்லிம்மா... கதையையே சொல்லி விட்டீர்கள். இது மாதிரி நிறைய கதைகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
நீக்குமுதல் பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. இரண்டாவது பாடல் ஆஹா! எத்தனை முறை கேட்டு ரசித்திருக்கிறேன்!!மிக நல்ல இந்தப்பாடலை நகைச்சுவைக்கு பயன்படுத்திக் கொண்ட அந்த இயக்குனரை என்ன செய்தால் தேவலை?
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... எனக்கும் அதேபோல தோன்றியது.
நீக்குரீல் ஜோடியில் என்னைக் கவர்ந்த ஜோடிகளுள் முந்துராமன் லட்சுமி ஜோடியும் ஒன்று.
பதிலளிநீக்குஓ... எனக்கு பெரிய அபிப்ராயமில்லை!
நீக்குஇரண்டையுமே ரசித்த பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க...
நீக்குபாடல்கள் அடிக்கடி கேட்டு ரசித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குபடமும் பார்த்து இருக்கிறேன்.
(தொலைக்காட்சி தயவால்)
முதலில் பட்டிக்காடு, பாதியில் டாக்டராக வருவார் என்று நினைக்கிறேன்.(முத்துராமனை குணபடுத்து டாக்டராக வருவார் )
சூப்பர் கோமதி மா. சட்டென்று சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
நீக்குஇப்போது நினைவுக்கு வருகிறது. நன்றி.
ஓ... வல்லிம்மா விட்ட குறிப்பை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்!
நீக்குஇணையத்தில் கதை இல்லை. படம் இருக்கிறது.
பதிலளிநீக்குநம் சினிமாத்துறையில் தான் ஏழைப்பெண்ணின் முகத்தை மறந்து பணக்காரப் பெண்ணை ஏற்றுக் கொள்வார்கள்.
படத்துக்கு ஏற்ற பாடலும் காட்சியும்.
முத்துராமனின் களங்கம் இல்லாத முகம் மறக்க முடியாது.
ஆம்... நானும் தேடி ஏமாந்தேன்!
நீக்கு//படத்துக்கு ஏற்ற பாடலும் காட்சியும்.// அப்படியா? படம் பார்க்காததால் தெரியவில்லை.
பதிலளிநீக்குயார் சொல்லியிருப்பது? நானில்லையே?!
நீக்குவல்லி அக்காவின் கமெண்டை சரியாக படிக்காமலே கமெண்ட் போட்டிருக்கிறீர்கள்.
நீக்குஓ.....!
நீக்குஅடுத்த வாரத்திற்கான நேயர் விருப்பம் அக்னிசாட்சியில் இடம் பெற்ற 'கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல..' பாடல்.
பதிலளிநீக்கும்... உடனே இல்லாவிட்டாலும் நேரம் அமையும்போது...
நீக்குஉண்மையில் இது என் லிஸ்ட்டில் இருக்கும் பாடலும் கூட!
சென்ற வாரம் ஒரு பாடல் சொல்லியிருந்தேன்..
பதிலளிநீக்குஅது கதவு இடுக்கில் ஒளிந்த சுண்டெலி ஆயிற்று...
அது போகட்டும்...
இன்றைய பாடல்களைப் பற்றி என்ன சொல்வது....
Ghost எழுத்தாளர் என்பார்கள்..
அதுபோல் இருக்கிறது...
பாடல்கள் மட்டும் கேட்டிருக்கிறேன்...
சென்ற வாரமா? நேயர் விருப்பமா? கவனிக்காமல் விட்டேனா?
நீக்குபாடல் ghost எழுத்தாளர் போல இருக்கிறதா? அபுரி!
இது வேறு பாடலின் வரிகள்..
பதிலளிநீக்குதீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே...
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே...
அடடா... அடடா!...
முத்துராமன் - லக்ஷ்மி ஜோடி..
கவியரசர் - மெல்லிசை மன்னர்...
ஜேசுதாஸ் - சசிரேகா பாடியது..
இது வள்ளுவப்பெருமானின் வார்த்தைகளில்..
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...
அப்பா...
இன்று குறள் சொல்லாத குறையும் தீர்ந்ததே!.
வீணை அதை மீட்டும் பாடல் இதுன்னு நினைக்கிறேன். சரியா
நீக்குதுரை?
வீணை அது பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு.ARUMAI.
நீக்குஆமாம்...
நீக்குஅந்தப் பாடல் தான்....
பாடல் இரண்டும் கேட்டிருக்கிறேன் . படம் பார்கவில்லை.
பதிலளிநீக்குநன்றி சகோதரி மாதேவி.
நீக்குஎன்ன ஒற்றுமை! எனக்கும் இந்தப் பாடலைக் கேட்டதும், 'வீணை பேசும் அது மீட்டும் விரல்களைக் கொண்டு..' பாடல்தான் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஎனக்கு முதல் பாடல் தான் பிடிக்கும். எஸ்.பி.பியின் குரலில் இளமை துள்ளும். இரண்டு பாடல்களுமே என் சேமிப்பில் இருக்கின்றன. இரண்டாவது பாடலில் காட்சியமைப்பு நன்றாக இருக்காது என்பதால் பாடலும் அப்படியே ஆகி விட்டது.
பதிலளிநீக்குஅடடே... முதல் பாடலுக்கு முதல் ரசிகர்! நன்றி மனோ சாமிநாதன் மேடம்...
நீக்கு//இரண்டாவது பாடலில் காட்சியமைப்பு நன்றாக இருக்காது என்பதால் பாடலும் அப்படியே ஆகி விட்டது.//
காட்சி எப்படியிருந்தாலும் பாடல் வெகு இனிமை மேடம்.
??????????
பதிலளிநீக்கு!?.....
பதிலளிநீக்குinnum post varalai?
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!....
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு ஸ்ரீராம்? ஓகே தானே? :(
பதிலளிநீக்குtoo busy may be!
பதிலளிநீக்குயாரானும் வந்து பதில் சொல்லுங்க! கவலையா இருக்கு!
பதிலளிநீக்கும்ம்...
பதிலளிநீக்குஇதுவரைக்கும் இவ்வளவு தாமதம் ஆனது இல்லை....
schedule பண்ணி வைக்கலை போல! அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா?
பதிலளிநீக்குபாடலில்சந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால் படத்தோடு ஒட்டுகிறதா தேரியவில்லை படம்தான் பார்க்க வில்லையே
பதிலளிநீக்கு1976-ல் வந்த படம்! எனக்கு ஐந்து வயது! நிச்சயம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. :) முதல் பாடல் பிறகும் கேட்ட நினைவில்லை.
பதிலளிநீக்குஇரண்டாம் பாடல் - கேட்ட மாதிரியே இருக்கிறது! ஒரு வேளை இதே மெட்டில் வேறு பாடலாகவும் இருக்கலாம்.