வெள்ளி, 17 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : மடியில் நான் துயில  இடை துவள  கலை பயில  . 


சினிபாரத் தயாரிப்பில் 1977 இல் வெளிவந்த திரைபபடம் பெண் ஜென்மம்.  ஏ ஸி திருலோக்சந்தர் இயக்கத்தில் வாலி பாடல்களை எழுத, இளையராஜா இசை அமைத்த திரைப்படம்.  முத்துராமன் - ஜெயபாரதி நடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.மற்றபடி அதிக விவரங்கள் தெரியவில்லை.  இந்தப் பாடல் எனக்கு அப்போதிலிருந்தே மிகவும் பிடிக்கும்.கே ஜே யேசுதாஸ் மற்றும் பி சுசீலா குரலில் மாண்ட் ராகத்தில் அமைந்த பாடல்.   யேசுதாஸ் பாட ஆரம்பிக்கும் இடம் முதல் அவர் குரலில் வரும் சரணங்கள் எல்லாம் இனிமை.  மிக இனிமையான டூயட்.  இளையராஜா கொஞ்சம் MSV பாணியில் இசை அமைத்திருக்கிறாரோ என்று தோன்றும்.

வாலியின் வரிகள் இனிமை.

செல்லப் பிள்ளை சரவணன் - திருச்   
செந்தூர் வாழும் சுந்தரன்  
கோபத்தில் மனஸ்தாபத்தில் 
குன்றம் ஏறி வந்தவன் 

செல்லப் பிள்ளை சரவணன் - திருச் 
செந்தூர் வாழும் சுந்தரன்  . 

ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் - பின்பு  
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்  
கூந்தலில் மலர் சூடியே - அவன்  
கூட நான் வர வேண்டுவான்  
மயங்கி நான் 
மயங்கி நான் மெல்ல  
தடை சொல்ல  சினம் கொள்வான்  . 

செல்லப் பிள்ளை சரவணன் - திருச் 
செந்தூர் வாழும் சுந்தரன்  
வள்ளியை இன்பவல்லியை  
அள்ளிக்கொண்ட மன்னவன்   
செல்லபிள்ளை சரவணன் - திருச் 
செந்தூர் வாழும் சுந்தரன்  . 

மாலையில் ஒரு மல்லிகை - என  
மலர்ந்தவள் இந்த கன்னிகை  
மன்மதன் கணை ஐவகை - அதில்  
ஓர் வகை இவள் புன்னகை  
மடியில் நான்  
மடியில் நான் துயில  இடை துவள  
கலை பயில  . 

செல்லப் பிள்ளை சரவணன் - திருச் செந்தூர் வாழும் சுந்தரன்  . 

கார்குழல் உந்தன் பஞ்சணை - இரு  
கைகளே உந்தன் தலையணை  
வேலவன் கொஞ்சும் புள்ளிமான் - அதன்  
வடிவம்தான் இந்த வள்ளிமான்  
அருகில் நான்  
அருகில் நான் வந்தேன்  
இதழ் செந்தேன்  இதோ தந்தேன்  . 

செல்லப் பிள்ளை சரவணன் - திருச் செந்தூர் வாழும் சுந்தரன்.

 

44 கருத்துகள்:

 1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பாடல் கேட்டதாக நினைவு ஏதும் இல்லை...

  பாடல் வரிகளைப் படித்தேன்... காணொளி விடிந்ததும் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று துரை செல்வராஜூ ஸார்...   யேசுதாஸ், சுசீலா இருவரின் குரல்களும் இழையும்.

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய வெள்ளி காலை
   வணக்கம்.
   ஸ்ரீராமின் விருப்பம் மிக இனிமைமா.
   இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன்.

   தொலைக்காட்சியில் வந்திருக்குமோ என்னவோ.
   படம் பார்த்ததில்லை.

   ஆடி வெள்ளிக்கிழமைக்கு சரவணனையும், முருகனையும்
   எங்கள் ப்ளாகிற்கு அழைத்து விட்டீர்கள்.

   அருமையான இதமான குரலில் இருவரும் பாடி இருக்கிறார்கள்.
   வேறு ஒரு பாடலின்
   சாயல் இருக்கிறதோ.
   என்ன பாடல் இதே போல ரீங்கரிக்கும் என்று தெரியவில்லை.

   நல்ல பாடலுக்கு மிக மிக நன்றி மா.ஸ்ரீராம்.
   அனைவரும் மனவளம், உடல் வளம் பெற்று சிறக்க வேண்டும்.

   நீக்கு
  2. அன்பான ப்ரார்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு நல்வரவு, வணக்கம்.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா...

   அடடே...    உங்களுக்கும் இந்தப் பாட்டு பிடிக்குமா...   சூப்பர்மா...   ஆடி எல்லி என்றெல்லாம் பார்க்கவில்லை.   அதுபாட்டுக்கு வரிசையில் வருகிறது!!!!

   வேறு என்ன பாடல் நினைவுக்கு வருகிறது?

   நீக்கு
  4. ஹாஹாஹா, ஆடி வெள்ளி, ஆடி எலியாகிவிட்டது போலும்! இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்புகிறதோ என்று நினைத்தால் சென்னையின் கொரோனா புள்ளி விபரம் தப்பு எனச் சிலர் சொல்கின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களில் ஏறி வருவதையும் சுட்டுக் காட்டுகிறார்கள். என்னவோ ஒண்ணும் புரியலை. விரைவில் எல்லாம் சரியாகப் பிரார்த்திப்பதைத் தவிர வேறே வழியே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   இணைந்து பிரார்த்திப்போம்.  சரியாகி விடும் என்று நம்புவோம்.

   நீக்கு
 5. இந்தப் படமே தெரியாது. பாடலை எப்படிக் கேட்டிருப்பேன்! இப்போக் கேட்டேன். இப்படி ஒரு பாடலைக் கேட்டதாகவே நினைவில் இல்லை. ஸ்ரீராம் ஆழத்தோண்டித் துருவி எடுக்கிறார். இந்த அளவுக்குத் திரைப்படங்கள் பற்றியோ பாடல்கள் பற்றியோ தெரிந்தவர்கள் யாருமே இல்லை. ஸ்ரீராம் மட்டும் தான். பாடல்களிலும் ராகங்களிலும் ஆழ்ந்த ரசனை. ஒவ்வொரு பாடலையும் அனுபவித்துக் கேட்பார்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பாடல்கள் வெளியாகும்போது கேட்ட உடன் மனதில் நுழைந்து விடுகிறது கீதா அக்கா...  இனிமையான பாடல்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் நம்மைக் கவரும் பாடல்கள் என்றால் அவை நம் மனதில் தங்கி விடுகின்றன!

   இந்தப் பாடல் இனிமையாய் இருந்ததா இல்லையா?

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை வணக்கம். நல்ல இனிமையான பாடல். பெண் ஜென்மம் என்று ஒரு படமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா...  காலை வணக்கம்.  ஆமாம்.  அப்படி ஒரு படமாம்!  ஆனால் பாடல் ரொம்ப பரிச்சயம்.  நன்றி  சிலோன் ரேடியோ...

   நீக்கு
 7. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட நல்ல பாடல் ஜி

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  பாடல் பகிர்வு அருமை. இந்தப் பாடல் ரேடியோ கேட்கும் காலத்தில் கேட்ட மாதிரிதான் உள்ளது. படம் பேரும் கேள்விபட்டுள்ளேன். ஆனால் இரண்டுமே நினைவிலில்லை. இப்போது தங்கள் பதிவின் வாயிலாக கேட்ட போது சற்று நினைவுக்கு வருகிறது. பாடல் இனிமையாக நன்றாக உள்ளது. கேட்டு ரசித்தேன். இன்னுமொரு முறை மதியம் நிதானமாக கேட்கிறேன்.

  முத்துராமன் நடிப்பில் படமும் நன்றாக குடும்பகதையாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது. நல்ல நல்ல படங்களையும், அவற்றின் சில பாடல்களையும், அப்படங்களின் சில விபரங்களையும் தொகுத்துத் தரும் உங்களுக்கு என் நன்றிகள். இன்றைய பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய கதையை திரும்பப் படிக்கிறேன் கமலா அக்கா...   நான் படம் பார்ப்பது குறைவு.  பாடல்கள் நிறைய கேட்பேன் அப்போதெல்லாம்.  இப்போது அதுவும் குறைவுதான்.

   நீக்கு
 9. இந்த பாடலை கேட்டதாய் நினைவில் இல்லை...

  பதிலளிநீக்கு
 10. எப்போதோ கேட்ட பாடல்! ரொம்ப வருடங்களுக்குப்பிறகு கேட்டதும் அதன் இனிமை மனதை நிறைத்தது. மீண்டும் கேட்க, ரசிக்க‌ வைத்ததற்கு உங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. இனிமையான பாடல்...

  // மன்மதன் கணை ஐவகை - அதில்
  ஓர் வகை இவள் புன்னகை //

  வாலி அவர்கள், கணையில் உள்ள ஐந்து வகை பூக்களில், புன்னகையை எந்த பூவிற்கு சொல்கிறார் என்று தெரியவில்லை...!

  இதே படத்தில் "வண்ணக்கருங்குழல்" என்றொரு பாடல் உண்டு... 'என்னது இசை இளையராஜாவா...?' என்று வியந்தது உண்டு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... சட்டென நினைவுக்கு வரவில்லை. அப்புறம் கேட்டுப் பார்க்கணும் DD.

   நீக்கு
 12. பாடல் நல்லா இருக்கு. முன்பு எப்போவோ கேட்ட நினைவு.

  ஆனால் வெறும்ன பாடல் கேட்டால் இது எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்ததுதான் என்று மனதில் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் கொஞ்சகாலம் இளையராஜா பொது பாணியிலிருந்து மாறாமல் விருந்தளித்தார். பின்னர்தான் அவை தனித்துவம் பெறத் தொடங்கின... வாங்க நெல்லை...

   நீக்கு
 13. இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன். முன்னர் கேட்ட நினைவில்லை.

  பதிலளிநீக்கு
 14. ஆகா!...

  எங்கேயோ கேட்ட குரல் மாதிரி
  எப்போதோ கேட்ட பாடல்...

  கண்ணன் ஒரு கைக் குழந்தை - பாடலை
  அக்கா என்றால் இந்தப் பாடலைத் தங்கை என்று சொல்லலாம் !...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், எனக்கும் தோன்றும். இரண்டு படங்களும் இதே ஆண்டில்தான் வெளிவந்தன.

   நீக்கு
 15. அழகான சந்தத்தில் வாலி விளையாடுகின்றார்.. இனிமை.. இனிமை..

  பதிலளிநீக்கு
 16. பாடல் கேட்டதே இல்லை. அருமையான பாடல்

  அனைவருக்கும் ஆடி வெள்ளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் வாழ்த்துகள். வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 17. படமோ பாடலோ பார்த்த அல்லது கேட்டநினைவில்லை

  பதிலளிநீக்கு
 18. படம் கேள்விப்பட்டிருக்கிறேன் பாடல் ஞாபகமில்லை .பாடல் நன்றாக இருக்கிறது -அபயாஅருணா

  பதிலளிநீக்கு
 19. பாடல் கேட்டு வெகு காலம் ஆகி விட்டது. மீண்டும் இன்று தான் கேட்கிறேன்.
  பழைய பாடல் வரிசையில் இந்த பாடல் வைக்கவே இல்லை. சில பாடல்களே மீண்டும் மீண்டும் வைக்கிறார்கள்.

  படம் பார்க்கவில்லை.
  இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அருமையான வரிகள். கேட்காத பாடல். கண்டிப்பாக கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!