புதன், 1 ஜூலை, 2020

மெரீனாவில் சூரிய உதயம் பார்த்திருக்கிறீர்களா?


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

மஞ்சள் பத்திரிகை, கருப்புப் பணம், நீலப்படம், சிவப்பு விளக்கு என்று மோசமான விஷயங்களை நிறங்களோடு சம்பந்தப் படுத்துகிறோமே, அந்த நிறங்கள் என்ன பாவம் செய்தன?


$ எப்படி முருகன் சுப்ரமணியன் ராமன் சீதை என்றெல்லாம் பெயர்  வைக்கப்பட்டவர்கள்,  அந்தக் கடவுளர் பெயர்களுக்கு ஏற்ப வீரம்,கல்வி,பொருள்,ஈகை இவற்றில் அவர்கள் போல் சிறந்து இருப்பதில்லையோ, அது போலத்தான் ஆகு பெயர்களுக்குப் பின் பொருள் கண்டு பிடிப்பதும்! மஞ்சளால் பத்திரிக்கைக்கு கெட்ட பெயர் வந்தது என்றோ பத்திரிக்கையால் மஞ்சளுக்கு கெட்ட பெயர் என்பதோ சரியில்லை.

& மஞ்சள் நிலா, கருப்புத் தங்கம் (நிலக்கரி), நீலவானம், சிவப்பு முக்கோணம், செவ்விந்தியர், சிவப்புச் சூரியன், செஞ்சிலுவைச் சங்கம் இவை எல்லாம் நீங்க கேள்விப்பட்டதில்லையா! 

மெரீனாவில் சூரிய உதயம் பார்த்திருக்கிறீர்களா?

$ நிறைய முறை! 
பீச் அழுக்காக இருந்தபோதும் கூட !
S S Stamatis கரை தட்டி நின்ற 66 க்கும் முன்னிருந்த போதிருந்தே!




& நான் நாகை 'ஸ்டார்' டாக்கீஸ்ல 'சந்திரோதயம்' பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் வருகின்ற தேஷ் ராகப் பாடலை அடிக்கடி ஹம் செய்வேன். (மெரீனா என்று ஒரு தியேட்டர் இருக்கா? சூரிய உதயம் என்று ஒரு படம் வந்ததா? என்று கேட்டு, கூகிளில் தேடினால் - சூர்யோதயம் என்று ஒரு படம் 1999 ஆம் வருடம் வந்திருக்கிறது என்று தெரிகிறது. இதுவரை கேள்விப்பட்டிராத சினிமா! கதைச்சுருக்கம் படித்தால் பயமா இருக்கு!) 


கண்ணதாசன் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது? திரைப்பட பாடலைத்தவிர்த்து ரசித்த அவருடைய வேறு படைப்பு எது? அவருடைய சுய சரிதமான மனவாசம் எனக்கு பிடிக்கும்.

$ அர்த்தமுள்ள இந்துமதம் கூட.

# சரவணப் பொய்கையில் நீராடி.. இது கண்ணதாசனா என்று தெரியாது. திரை இசை நாட்டம் மிகக் குறைவு. (& சொல்கிறார் : கண்ணதாசன் பாடல்தான்)  இது சுட்டி 

கண்ணதாசன் சிறுகூடல்பட்டி உமையாம்பிகைத் துதியாக இயற்றிய பாக்கள் ரொம்பவும் பிடிக்கும்.
மனவாசத்தில் அவரது ஒளிவு மறைவில்லாத பாணி சில சமயங்களில் இது தேவைதானா என்ற வினாவை எழுப்பியதுண்டு. 
அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் நல்லவர்களுக்கு காலக்கிரமத்தில் நல்லது மட்டுமே நடக்கும் என்ற உறுதியான நிலைப்பாடும் விதிமீது அதீத நம்பிக்கையும் வியக்க வைத்தது.

& இன்றைக்கு நான் கேட்டு ரசித்த பாடல் இது: 

ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை                                                     (இங்கே கிளிக்குக !!)
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை                       


திரு நாள் தேடி தோழியர் கூடி
சென்றார் திரும்பவில்லை
தினையும் பனையாய் வளர்ந்தே
இரு விழிகள் அரும்பவில்லை

இரவில் உலவும் திருடன்
அவன் என்றார்
திருடாது ஒரு நாளும்
காதல் இல்லையென்றேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை!                                              (


கண்ணதாசன் எழுதிய புத்தகங்கள் என்று அர்த்தமுள்ள இந்து மதம் சில பாகங்கள் தவிர வேறு எதையும் படித்ததில்லை. ஆனால் அவர் குமுதத்தில் வாரம் ஒரு பக்கம் எழுதியவை எல்லாவற்றையும் படித்து ரசித்திருக்கிறேன். 

(இது புதன் பதிவா அல்லது வெள்ளி வீடியோ பதிவா என்று ஒரு சந்தேகம் உங்களுக்கு வந்தால், அது நியாயமே!)  ===================


நிலா மேடை 

நம் வாசகர்களுடன் இரண்டு சந்தோஷ சமாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்கிறோம் : 

ஒன்று :  நம்முடைய ஆசிரியர் குழுவின் இராஜ அச்சு, (king pin) ஸ்ரீராம் அவர்கள் எழுதிய " காசி பயணக் கட்டுரை" கிண்டில் புத்தகமாக அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அமேசான் கிண்டில் அன்லிமிடட் உறுப்பினர்கள், இந்தப் புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து, படிக்கலாம். 

அமேசான் கிண்டில் அன்லிமிடட் உறுப்பினர் அல்லாதவர்கள், இந்தப் புத்தகத்தை இந்திய ரூபாய் நூறு செலுத்தி, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இந்த கிண்டில் புத்தக வெளியீடு என்பதில் பல சிக்கலான படிகள் உள்ளன.  அந்தப் படிகளில், என்னைக் கையைப் பிடித்து ஜாக்கிரதையாக வழி நடத்தி, புத்தகப் பதிவேற்றம் என்னும் தெய்வத்தை தரிசனம் செய்யவைத்த நம் நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நானும் ஸ்ரீராமும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். 

இது ஸ்ரீராமின் காசி பயண அனுபவப் புத்தகத்தின் 
இந்தியப் பதிப்புக்கு சுட்டி : 

                                   காசிக்குப் போகும் சம்சாரி 


அமெரிக்கா : 

US (Amazon.com) LINK 

இந்த விவரங்களை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து, புத்தகத்தைப் படிக்கச் சொல்லுங்கள். 

===========================

இரண்டாவது சந்தோஷ சமாச்சாரம் : 
அனுபவ பாடங்கள் என்ற தலைப்பில், அடியேன் (!) எழுதிய புத்தகம் இன்று முதல் உலகெங்கிலும் அமேசான் கிண்டிலில் கிடைக்கும். 

லிங்க் :  அனுபவ பாடங்கள் 




==================================
மீண்டும் சந்திப்போம்!
==================================


68 கருத்துகள்:

  1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை.

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. இன்று குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பாட்ல்களுமே இனிமையானவை...

    அவ்வப்போது யூடியூப்னில் கேட்டு மகிழ்வேன்...

    பதிலளிநீக்கு
  4. எம்ஜார் சந்திரோதயம் என்று நடிக்க
    ஜிவாஜி அருணோதயம் என்று நடித்த வரலாறும் உண்டே ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரை, கௌதமன் ஜி, ஸ்ரீராம் மற்றும் இன்னும் வரப் போகிறவர்களுக்கு இனிய ஆரோக்கியம் நிறைந்த தினமாக அமைய
      பிரார்த்தனைகள்.

      சந்த்ரோதயம் பாடல் மிக அருமை. அதுபோலவே
      சரோஜாதேவி,+சுசீலாம்மா பாடலும் மிக அருமை.

      நல்ல வேலை திருமணப் பத்திரிகை மஞ்சளும்
      இளஞ்சிவப்பு நிறமாக அமைந்தது பெரிய நன்மை.எனக்குத் தெரிந்த மெரினா எப்பொழுதும் அழகு.
      பௌர்ணமிக்கு அங்கே சென்று அமர்ந்து
      கடலில் வெள்ளி அலைகள் ஆடுவது அபூர்வமான அழகு.
      நடை பயின்ற காலங்களில்
      சூரியோதயமும் பார்த்ததுண்டு.

      தங்கள் புத்தக வெளியீட்டுக்கு மனம் நிறை வாழ்த்துகள் கௌதமன் ஜி.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா... இனிய வணக்கம்.

      நீக்கு
    3. வாங்கோ, வாங்கோ, வணக்கம் !நன்றி!

      நீக்கு
    4. சந்திரோதயம், சூரிய உதயம் என்று ஆரம்பித்த வாழ்க்கை இப்போது உதயம் பருப்பு வகைகள், நரசுஸ் உதயம் காப்பி என்று சென்றுகொண்டிருக்கிறது!

      நீக்கு
    5. @துரை செல்வராஜு சார்: எம்.ஜி.ஆர். சந்திரோதயம், சிவாஜி அருணோதயம்.. அட! ஆமாம்.

      நீக்கு
    6. //நல்ல வேலை திருமணப் பத்திரிகை மஞ்சளும்
      இளஞ்சிவப்பு நிறமாக அமைந்தது// Yes.

      நீக்கு
    7. மெரீனா எப்போதும் அழகுதான். ஆனால், மாலை வேளைகளில் அதிக கூட்டம், மீன் வறுவல் நாற்றம், எண்ணெய் புகை,இவை அந்த அழகை ரசிக்க விடுவதில்லை எனவே காலையில் மெரீனா செல்வதுதைத்தான் விரும்புவேன். காலையில் கடலில் கால் நனைத்து விட்டு, கற்பகாம்பாளையும், கபாலியையும் தரிசித்து விட்டு, சரவணபவனில் நாஷ்டாவை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோம். சில சமயங்களில் கோவிலில் நவகிரக சன்னதியை சுற்றிக் கொண்டிருக்கும் பொழுதே, மனம் சரவண பவனுக்குச் சென்று விடும்.
      ஒரு முறை கூட சூர்யோதயத்தை பார்க்கும் பாக்கியம் வாய்க்கவில்லை.

      நீக்கு
    8. அந்தக் கால மெரீனாவிற்கு காலையில் சென்றால் வேறுவகை காட்சிகள், மனிதக் கழிவுகள் நாற்றம் எல்லாம் இருந்தது உண்டு.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்றைய கேள்வி பதில்கள் மிகவும் குறைவு.

    முதல் மின்னூலுக்கு ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாராச்சும் கேள்வி கேட்டா தானே சார் நாங்க பதில் சொல்ல முடியும்!

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் குறைவாக இருப்பினும் நிறைவானதாக உள்ளது. அருமை.

    பகிர்ந்த இரு பாடல்களும் மிகவும் நன்றாக உள்ளது. இது சத்தியம் பாடல்கள் அனைத்தும் இனிமையாகத்தான் இருக்கும்.நானும் அந்த பாடல்களை அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். (இந்தப் பாடல்களை கேட்டு கருத்து எழுதும் போது எனக்கும் இன்று வெள்ளிகிழமையோ என்ற சந்தேகந்தான் வருகிறது. ஹா ஹா.)

    எ. பியின் ஆசிரிய குழுவின் "இராஜ அச்சு" என்ற அந்த உவமானத்தை ரசித்தேன். ஸ்ரீராம் சகோதரர், கெளதமன் சகோதரர் இருவருடைய முதல் மின்னூல்கள் வெளியீட்டுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. என்னைப் பொறுத்த வரையில் எ.பிக்கு அச்சாணி ஶ்ரீராமும் கேஜிஜி சாரும்தான். ஒரு மாத்த்துக்கு மேல் ஶ்ரீராமால் கணிணி உபயோகப்படுத்த முடியாதபோதும் எல்லாம் சரிவரச் சென்றுகொண்டிருந்ததே.

    கேஜிஜியின் இன்வால்வ்மென்ட், எப்படியோ நேரம் ஒதுக்குவது.... பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. பகிர்ந்திருக்கும் பாடலின் வரிகளும், பாடப்பட்டிருக்கும் விதமும் மிக இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. நல்ல பதிலை வரவழைத்த உங்கள் கேள்விக்கும்!

      நீக்கு
  11. இரண்டு (காணொளி) பாடல்களும் இனிமையானவை...

    மின்னூல்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. https://www.facebook.com/groups/2743891672308813/?ref=share

    முகநூல் "அமேசான் கிண்டில் தமிழ் புத்தகங்கள்" குழுமம் - இணைந்து அங்கும் இணைப்பை தரலாம்... இலவச அறிவிப்பு உட்பட பலரின் பதிய மின்னூல் புத்தகங்களை தரவிறக்கம் செய்யலாம்... குழும உருவாக்கம் :- நம் வலைப்பூ பதிவர் (முன்னாள்?) கடற்கரை விஜயன் அவர்கள்...

    பதிலளிநீக்கு
  13. ரெண்டு பாட்டுமே கேட்ட நினைவில் இல்ல

    பதிலளிநீக்கு
  14. வ்ணக்கம் வணக்கம்.

    முதலில் ஆசிரியர்கள் ஸ்ரீராம் மற்றும், கௌ அண்ணா இருவரின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்! இன்னும் நிறைய வர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. (இது புதன் பதிவா அல்லது வெள்ளி வீடியோ பதிவா என்று ஒரு சந்தேகம் உங்களுக்கு வந்தால், அது நியாயமே!) //

    ஹா ஹா ஹா ஹா யெஸ்ஸ்ஸு...இதுல வேற எனக்கு பல சமயம் இந்த டே குழப்பம் வரும். பெரும்பாலும் காலண்டர் பார்க்காம (வீட்டுல காலண்டர் கிடையாது. கணினி சைட்பார் தான்!!!) எபி பதிவு பார்த்து கிழமை தெரிந்து விடும்!! சென்ற வியாழன் டக்குனு ஒரு குழப்பம் வந்தது ஆனா இன்று வரலை ஏன்னா மொத்தல்ல இதைப் போட்டிருந்தீங்கனா வந்திருக்கும். பானுக்கா பெயர் கேள்வி ந்னு வந்ததால் குயப்பம் வரலை.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. பானுக்காவின் முதல் கேள்விக்கு

    & பதில் பார்த்து சிரித்துவிட்டேன்!! முடிலப்பா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாரி கௌ அண்ணா அது பானுக்காவின் மெரினாவில் சூரியோதயம் பற்றிய பதில்லுக்கான கருத்து...தெரியாம முதல் நு போட்டுவிட்டேன்

      கீதா

      நீக்கு
  17. மின்நூல் வெளியீட்டுக்கு எமது வாழ்த்துகள் ஜி
    தொடர்ந்து ஆவணப்படுத்துங்கள் நான் இப்பொழுதுதான் அமேசனில் நுழையப் பழகி வருகிறேன்.

    அவசியம் படிப்பேன் ஜி

    பதிலளிநீக்கு
  18. மின்னூல் வெளியீட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைக்கு கீதா சாம்பசிவம் சகோதரியை ஏன் இதுவரை காணவில்லை.? காலையிலேயே வந்து விடுவார்களே..! வேறு வேலைகள் வந்து பிஸியாகி விட்டார்களா? இல்லை, வாட்சப் குழுமத்தில் தன் இன்றைய தாமத வரவு குறித்து ஏதேனும் சொல்லியுள்ளார்களா ? இவ்வளவு நேரம் வரை காணோமேயென கேட்கிறேன்.

    அன்யுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைத் தேடியதற்கு நன்றி கமலா. வல்லியும் தேடி இருந்திருக்கார். எங்க பெண்ணையும் விசாரித்திருக்கார். அன்புடனும், பாசத்துடனும் என்னிடம் அக்கறை கொண்டு விசாரித்த உங்கள் இருவருக்கும் என் நன்றி. வேலைகள் தான் காரணம். வேறே ஒன்றுமில்லை. இங்கே வந்து படிச்சேன். ஆனால் கருத்திட முடியவில்லை. மின்சாரம் வேறே போயிட்டுப் போயிட்டு வந்தது. வாட்சப் குழுமத்தில் நான் எப்போதாவது தான் ஏதானும் போடுவேன். அங்கே நடக்கும் வாத, விவாதங்களைப் படித்து ரசிப்பேன். அதோடு சரி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இன்று வியாழன் கதம்பத்தில் உங்கள் கருத்துகளை இப்போதுதான் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். நான் இன்று தாமதம். தினமும் காணும் ஒருவரை காணவில்லையெனறால், எங்கேயென மனம் தேடுகிறது. இங்கும் வந்து நீங்கள் பதில் அளித்தமை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. மின்னூல் வெளியிட்டமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. கேள்விகளும் பதில்களும் அருமை.
    பகிர்ந்த பாடல் இரண்டையும் கேட்டு ரசித்தேன்.

    //அதில் வருகின்ற தேஷ் ராகப் பாடலை அடிக்கடி ஹம் செய்வேன்.//
    அதையும் பகிர்ந்து இருக்கலாம்.

    ஸ்ரீராம், கெளதமன் சார் மின்னூல்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. அணைவருக்கும் வணக்கம்.
    கேள்வி பதில்களும் பாடல்களும் அருமை.
    மின் நூல் வெளியிட்ட இரு ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    ஸ்ரீராம் அவர்களின் நூல் கிண்டில் ஃபார் பீசீயில் திறக்கலை. புகைப்படங்கள் நிறைய இருந்து அவற்றிற்கான எழுத்துப்பூர்வமான விளக்கங்கள் இல்லாமல் இருப்பது காரணமாக இருக்கும்.
    கௌதமன் ஐய்யாவின் நூல் தறவிறக்கம் செய்தாகிவிட்டது.
    கூடிய விரைவில் வாசிக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மெரீனா மாலையில் பார்த்திருக்கிறேன்.
    ஸ்ரீராம்,கெளதமன் இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. கிண்டில் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் . பாடல்கள் இரண்டுமே இனிமையாகவே இன்றும் மவுசு குறையாத பாடல்கள்

    பதிலளிநீக்கு
  25. அபயா அருணா ஏனென்று தெரியவில்லை என் ஜப்பானீசு பிளாக் id (abayaarunajp)தான் வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அந்த மெயில் தான் திறந்திருக்கும். அதனால் வருகிறது. Sign out செய்து விட்டு நீங்கள் விரும்பிய கணக்கு வழி உள்ளே வாருங்கள்!

      நீக்கு
  26. உறக்கம் பிடிக்கவில்லை பாடல் இனிமை; அமைதியான இரவில் தூங்கப்போகும்போதும் கேட்கலாம்போல் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  27. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்!

    இரண்டு மின்னூல் வெளியீடுகள் - உங்களுக்கும் ஸ்ரீராம் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்! தொடரட்டும் வெளியீடுகள்.

    பதிலளிநீக்கு
  28. நேற்று வர முடியவில்லை... இன்றாவது வந்துவிட வேண்டும் என வந்துவிட்டேன்.

    கண்ணதாசன் அங்கிள் பற்றிப் பாசப்பட்டிருக்கிறது, நேற்று வந்திருந்தால் நிறையச் சொல்லியிருப்பேன் நானும்.. மிஸ்ஸாகிவிட்டது...

    இரு மின்னூல்கள் வந்து விட்டனவோ.. ஆஆஆ கிண்டிலில் தேடிப் பார்க்கிறேன்... சந்யாசி..புத்தக முகப்பு அழகு... தலைப்புக்களும்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

    ஸ்ரீராம் காசிக்குப் போய் வந்த சன்னியாசி எல்லோ... போகும் சன்யாசி எனப் போட்டு விட்டீங்களே ஹா ஹா ஹா.. ஹையோ அது சம்சாரி... எனக்கு காசி என்றாலே சந்நியாசி எனத்தான் வருது.... வாழ்த்துக்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!