ஞாயிறு, 12 ஜூலை, 2020

மலையோரம் மரமே...இந்த மரம் இன்று நிறைய இடத்தில்

கூந்தல் பனை போலிருக்கும் காய் தான் பூ வந்தி காய்  என்கிறார் 


அம்மாடி, என்ன உசரம்!

ஜாதிக்காய் மரம் ....வெறும் குச்சி தான் என்று நினைத்தோம்
நானே வருவேன்...இங்கும்...அங்கும் 

வெண் தேக்கு  மரம்
அரவங்காடு  ஊட்டியில் இருந்தவர்களுக்குப் புதிதல்ல

கொஞ்சம் உயரத்தில் இருந்ததால் யாரும் பறித்துப்  போடவில்லை

இலவன்  பஞ்சு 

இந்த மரம் வளர்ப்பவர்கள் ஒரு குரங்கையும் வளர்க்கணும்


ஏலக்காய்

அதே வெண்தேக்கு மரம் தான்

85 கருத்துகள்:

 1. காலைல முதல் ஆளா வர்றதுக்கு போட்டி போடுவோம் அப்படீனுலாம் நேத்தைக்கு யாரோ சொன்னாங்க. இங்க யாரையுமே காணலியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பையர் குடும்பம் ஒன்று சேரும் வரை இருக்கும் டென்ஷன்.  அப்புறம்தான் தூங்கி இருப்பாங்க...   வருவாங்க...

   நீக்கு
  2. முன்னெல்லாம் முதலில் வந்து கமென்ட் போடப் போட்டிக்கு ஆட்கள் இருப்பாங்க. இப்போ இல்லை என்பதால் முதலில் வரும் சுவாரசியம் இல்லை. அதோடு பதிவு வெளியிடும் நேரமும் முன்னுக்கு வந்திருக்கு. அந்த நேரம் வருவது கஷ்டம். கஞ்சி, காஃபி எனத் தயார் செய்து சமையலறை சுத்தம் செய்துனு வேலை இருக்கும்.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி.  வாங்க ..  .வணக்கம்.

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனாவின் பிடி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் பரவி வருகிறது. மதுரை போட்டி போடுகிறது.விரைவில் அனைத்து மாவட்டங்களும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுதலை பெறப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. கொரோனா பாதிப்பு குறைந்த பெங்களூரில் மீண்டும் அதிரகரிக்க,தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வருகிறது.ம்ஹூம்..!

   நீக்கு
 4. நேத்திக்கு ராத்திரி படுக்க நேரமானதாலோ என்னமோ பனிரண்டு மணி வரை தூக்கமே வரலை. அதன் பின்னரும் அரைகுறைத் தூக்கம் தான்.அதனால் எழுந்திருக்கும்போதும் தாமதம். காலை எழுந்து தான் பையர் ஹூஸ்டன் போய்ச் சேர்ந்து விட்டதைத் தெரியப்படுத்தி இருந்தார். அவரும் தூங்கிட்டாராம். சின்னச் சிட்டுக் குட்டிக் குஞ்சுலுவுக்கும் அவ அம்மாவுக்கும் ஜெட்லாக்! மெல்ல மெல்லத் தான் சரியாகும். ஆனால் குழந்தையை நேற்றுப் பார்த்துவிட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாலும் நிம்மதியான தூக்கம் நேற்று கிடைத்திருக்கும் இல்லையா?

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் மருமகளும் குழந்தையும் பத்திரமாக நலமுடன் அவர்கள் இருப்பிடம் சென்று சேர்ந்து குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. கீசா மேடம்... ரொம்ப சந்தோஷமான விஷயம். அவங்க அவங்க யதாஸ்தானத்தைவிட்டு இந்த கொரோனாதான் எவ்வளவு பாடுபடுத்திவிடுகிறது.

   இங்க குழந்தைக்கு அதிகமான விளையாடும் ஆப்ஷன், அங்க விட உண்டு இல்லையா?

   நீக்கு
  4. உங்கள் மருமகளும், பேத்தியும் சௌகரியமாக ஊருக்குச் சென்றது குறித்து சந்தோஷம்!

   நீக்கு
  5. அனைவருக்கும் நன்றி. குழந்தை அங்கே போனதுமே உள்ளே போய் அவளுடைய "பேபீஸ்" பொம்மைகளை எல்லாம் வந்து கிட்டப் போட்டுக்கொண்டு சோஃபாவில் அவளுடைய வழக்கமான இடத்தில் படுத்துக் கொண்டாளாம். ஏற்கெனவே விமானத்திலும், வீட்டுக்கு வரும் வழியிலும் தூங்கிக் கொண்டே தான் வந்திருக்கா! அத்தனையிலும் நினைவாப் போய் அவளுடைய குழந்தைகளை எல்லாம் எடுத்து வந்திருக்கா! :)))))

   நீக்கு
 5. இந்த வாரப் படங்களின் தலைப்புகள் எல்லாமும் கேஜி அவர்களே கொடுத்துட்டார் போல! மரங்கள், மரங்கள், மரங்கள்னு பார்க்கக் கண்களுக்குக் குளிர்ச்சி, அழகு. ஜாதிக்காய் மரம் நாங்களும் ஹொரநாட்டில் பார்த்தோம்னு நினைக்கிறேன். கேஜி சொல்லி இருக்காப்போல் ஊட்டி, அரவங்காடு நினைவுக்கு வருது தான். ஊட்டியை விட அரவங்காட்டில் மரங்கள் ஜாஸ்தி. ஊட்டி கொஞ்சம் நெரிசலும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே ஒருமுறை ஊட்டி சென்றிருக்கிறேன்!

   நீக்கு
  2. அங்கே இருந்து வந்தப்புறம் இன்னொரு முறை போய்த் தங்கணும்னு நானும் தலைகீழா நின்னேன். (அதுக்குனு ஒரு ஆசனப் பலகை பண்ணி வைச்சிருக்கோம்.) ஆனால் மாமா கூட்டியே போகலை. இத்தனைக்கும் மேல் பைகாரா பார்க்கலைனு கூடச் சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்! முதுமலை போகணும்னு சொல்லியும் கேட்கலை. நீ தான் யானை மேலே உட்கார மாட்டேன்னு சொல்லிட்டியேனுட்டார். :)))))

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கம்மா...   இனிய வணக்கம்.  பிரார்த்திப்போம் அனைவரும்.

   நீக்கு
 7. படங்களின் பசுமை அசர வைக்கிறது, ஜாதிக்காய்,

  ஓக், எல்லாவற்றின் உயரமும் திகைக்க வைக்கிறது.
  இலைகளின் செழுமை மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் எல்லை ஓரம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரயில் வழி பயணித்தால் சம்பல் பள்ளத்தாக்குக் காடுகளைக் காண முடியும். காடு என்றால் அதான் காடு. தேக்கு மரம் உச்சி எங்கேயோ இருந்தால் அதன் அடிப்பாகம் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈழே எங்கேயோ இருக்கும். மத்யபிரதேசம் ரத்லம்-காண்ட்லா வழியாக ராஜஸ்தான் பயணித்தால் வழியில் பாதாள்பூர் என்னும் ஓர் ஊர் வரும். நிஜம்மாப் பாதாள்பூர் தான்! அப்போல்லாம் காமிராவே கிடையாது. இப்போ நினைச்சாலும் போக முடியலை.

   நீக்கு
 8. இந்த மரம் வளர்ப்பவர்கள் குரங்கையும் வளர்க்க வேண்டும் ஹாஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...  நல்ல யோசனை.  ஆனால் மரம் ஏற ஏதோ புதிய இயந்திரங்கள் எல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்களே!

   நீக்கு
 9. கீதாமாவின் மருமகளும், சின்ன குட்டி குஞ்சுலும்
  அவர்கள் இல்லத்துக்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி.
  ஒரு வாரமாவது ஆகும் ஜெட்லாகில்
  இருந்து வெளிவர.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  இன்றைய படங்கள் அழகாக இருக்கின்றன. வானத்தை தொடுமளவிற்கு இருக்கும் மரங்களின் அழகும். மலைகளின் கம்பீரமும், பனி படர்ந்த வானமும் கண்களுக்கு விருந்து.

  ஜாதிக்காய் ஏலக்காய் மரம், வெண் தேக்கு மரம் என அனைத்தையும் தெரிந்து கொண்டேன். "நானே வருவேன்" என அங்குமிங்கும் வந்த மரத்தின் பெயரைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே?

  இந்த உயரமான மரங்களுக்காக குரங்கை வளர்க்கலாம். நம் மனமே அதனோடு ஒத்துப் போகும் போது, அதுவும் ஒழுங்காக நம் பேச்சை கேட்க வேண்டுமே..! ஹா.ஹா நாம் ஏதாவது அதற்கு வேலைகள்(அந்த மரங்களின் காய், கனி, பூக்கள் பறித்துப் போடும் வேலைகள்) தந்து, அது தன் இயல்பான குணத்தில் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டிருந்தால், அண்ணாந்து பார்த்தபடி இருக்கும் நம் தலைகணம் அதிகமாகும். (ஒரு வேளை அது நம் சொல் பேச்சு கேட்டு செவ்வனே பணிகள் தொடர்ந்தால், பிறரிடம் அதைக் குறித்து பெருமை கொள்ளும் போதும் நமக்கு தலைகணம் அதிகரிக்கும்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  2. //"நானே வருவேன்" என அங்குமிங்கும் வந்த மரத்தின் பெயரைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே?// அது மரங்களுக்கு இல்லை, மேகங்களுக்கு என நம்புகிறேன்.

   நீக்கு
  3. இல்லையே.. மேகங்களுக்கா? முதலில் அந்த மரத்தைப் பற்றிதானே இது "அங்குமிங்கும் வரும்" என்பதாக குறிப்பிடபட்டிருந்தது. அதற்கேற்றாற்போல் "நானே வருவேனுக்கு" கீழ் படமாக அந்த மரமும்..அதனால்தான் பெயர் கேட்டேன். எதற்கு என்பதை சகோதரர் ஸ்ரீராம் வந்து பதில் சொன்னால்தான் தெரியும்.

   நீக்கு
 11. மரங்கள், இலைகள் என்று அனைத்துப் படங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சி.

  இதில் ஜாதிபத்ரி எது, தேக்கு எது என எப்படித் தேடுவது? எதுக்குத் தேடணும். அதான் ஶ்ரீராம் சொல்லியாச்சு இல்ல.. இலைக்கு, பெண்டிரின் கூந்தலைப்போல், இயற்கையான மணம் கிடையாது என்று. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானா?  எப்போ?!! நான் உண்டு என்று இல்லை சொல்லி மாட்டிகிட்டேன்!

   நீக்கு
  2. //அதான் ஶ்ரீராம் சொல்லியாச்சு இல்ல.. இலைக்கு, பெண்டிரின் கூந்தலைப்போல், இயற்கையான மணம் கிடையாது என்று. ஹா ஹா// எதையும் முழுமையாக படிப்பதே கிடையாது, கலாய்க்க வந்து விட வேண்டியது.. இலைக்கு இயற்கையில் மணம் கிடையாது என்று சொன்னது கௌதமஞ்ஜி.

   நீக்கு
  3. இடுகையைப் படிச்சுட்டு எக்சாமா எழுதப் போறோம்? ஶ்ரீராம் சொன்னா என்ன கேஜிஜி சார் சொன்னா என்ன... ஆகமொத்தம் பெண்டிர் கூந்தலுக்கு ... ஐயையோ... இலைக்கு மணம் கிடையாது.

   நீக்கு
  4. ஆ.. அதெப்படி? இருங்க கேஜிஜி வரட்டும்..!

   நீக்கு
  5. // எதையும் முழுமையாக படிப்பதே கிடையாது, //

   அப்போ அவர் பதிவைப் படிக்காமல்தான் கமெண்ட்ஸ் போடறார்ங்கறீங்களா பானு அக்கா?

   நீக்கு
  6. அநேகமான பதிவுகளில் முழுசும் படிக்காமலேயே கருத்திடுகிறார் என்பதே என் கருத்தும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

   @பானுமதி! ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜிங்சக்க!

   நீக்கு
  7. அப்படி இல்லை கீசா மேடம். சில சமயம், ஒரு பத்தி முடிச்ச உடனே என்ன தோணுதோ அதை எழுதிடுவேன். பிறகு தொடர்ந்து படிப்பேன். இல்லை முதலில் பின்னூட்டம் ஏதாவது கண்ணில் பட்டால் அதற்கு மறுமொழி எழுதுவேன்.

   ஆனா படிக்கும்போது சில விஷயங்கள் கண்ணில் சட்னு படாமல் (அல்லது மூளையில் ரெஜிஸ்டர் ஆகாமல்) போய்விடும்.

   இங்க வீட்டுல பசங்களும் அம்மாவும் ஜிங்சக் ஜிங்சக், அனேகமா எப்போதும். ஹா ஹா

   நீக்கு
 12. மரம், குழங்கு இவற்றைப் பற்றியெல்லாம் படித்தபோது எனது நினைவுக்கு வந்தது... எங்க வீட்டில் இருந்த மாமரங்களில் மேலே மேலே என தைரியமாக ஏறி மாங்காய்கள் பறிப்பேன். பிறகு வருடங்கள் கடக்க, அடிமரத்தைத் தாண்டி ஏறவே மனதில் பயம் வந்துவிட்டது. பிடிமானம் கிடைக்காதோ, கீழ விழுந்துவிடுவோமோ என்றெல்லாம். இது எதனால்?

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் காலை வணக்கம்! மரம்,மரம்,மரம். இப்போது இங்கே மேக மூட்டமாக இருப்பதால், இந்தப் படங்களை பார்க்கும் பொழுது காட்டில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா...   காலை வணக்கம்.

   இங்கும் மேகமூட்டம்...  சில்!

   நீக்கு
 14. பதில்கள்
  1. பூவை பூ ன்னும் சொல்லலாம்...  புய்ப்பம்னும் சொல்லலாம்...   நீங்கள் சொல்றா மாதிரியும் சொல்லலாம்...!!!

   நீக்கு
  2. எங்க மாமனார் தோப்பில் 2,3 இலவ மரங்கள் இருந்தன. எல்லோர் கல்யாணத்திற்கும், வீட்டுப் பயன்பாட்டுக்கும் பஞ்சு அங்கே கிடைத்துவிடும் என்பார்கள். பின்னால் அவற்றை எல்லாம் விற்று விட்டார்கள். மதுரையில் நான் படித்த பள்ளியில் பெரிய இலவ மரம் உண்டு. பஞ்சு வெடித்ததும் குத்தகை ஆள் வந்து பஞ்சுகளைப் பறித்துச் சுத்தம் செய்து ஆசிரியைகளுக்கு எல்லாம் தலையணை,மெத்தை எனத் தைத்துத் தருவார்.

   நீக்கு
 15. ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் சப்தமி திதி பானு சப்தமி என்று அறியப்படும். க்ரஹணதிற்கு ஈடான அந்த நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு அதிக பலன் உண்டு. என்வே இன்று காலை 8:30 முதல் 10:30 வரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட பிரார்த்திக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்திப்போம்...   சூரிய கிரகணம் போச்சு...   அந்த அமாவாசை போச்சு...   குருப்பெயர்ச்சி போச்சு...    இப்போ இது...   சதிலீலாவதி பண்டிகை புருஷன் ஜோக் நினைவுக்கு வருது!

   நீக்கு
  2. மெல்ல மெல்ல விடுபடவேண்டும். திருச்சியில் கொரோனா விகிதம் ஏற ஆரம்பித்துவிட்டதால் இப்போக் கடைத்தெருவை எல்லாம் முழு ஊரடங்கில் கொண்டு வந்திருக்காங்க.

   நீக்கு
 16. மரங்களைத் தேடி ஆசையாகப் படமெடுத்தவருக்கு நன்றி. சில இடங்களில் போர்டு பெரிசாக முன் வந்து நின்றதால் மரத்தைக் காணோம்!

  பதிலளிநீக்கு
 17. இனிய காலை வணக்கம்.

  படங்கள் அனைத்தும் அழகு. இயற்கையான சூழலில் இருப்பது மிகவும் பிடித்தமானது! அதனால் தானோ என்னவோ காங்க்ரீட் காடுகளில் நம்மை இருக்க வைத்திருக்கிறார்கள்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் இயற்கை ஆர்வம் உலகறிந்தது!  பயணம் செல்லாமல் போர் அடிக்கும் உங்களுக்கு!

   நன்றி வெங்கட்.

   நீக்கு
 18. 12 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் வனாந்தரத்தில் சில மணி நேரங்கள் இருந்தது நினைவுக்கு வருகிறது..

  அழகிய காடு - பறவைகள்
  பழகிய காடு..

  மனிதனால் அழிபடா
  திருக்க வேண்டும்..
  பல்லுயிர் பெருக்கத்தில்
  திளைக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரையில் பல வருடங்கள் இருந்திருந்தும் கொடைக்கானல் சென்றதில்லை!

   நீக்கு
  2. மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் பழனிக்கு 2007 ஆம் ஆண்டிலும், கொடைக்கானலுக்கு 2016 ஆம் ஆண்டிலும் தான் போனேன். நம்ம ரங்க்ஸ் பழனிக்குப் போயிருக்கார். என்ன ஒரு விஷயம்னா கீழே தான் திருவாவினன்குடினு தெரியாமல் அந்தக் கோயிலுக்குப் போகாமலேயே வந்துட்டோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யாரையும் சரியாக் கேட்டுக்கலை. அதோடு நம்மவருக்கு மேல்மங்கலம் போகும் அவசரம். பழனியிலிருந்து அங்கே செல்லும் வழி கொள்ளை அழகு. இதே போல் மஹாப் பெரிய மரங்கள், காடுகள்னு பார்க்கலாம்.

   நீக்கு
  3. எனக்கு இன்னும் பழனி செல்லும் வாய்ப்பு அமையலை. கொடைக்கானலிலிருந்து தூரக்க அந்த மலையைப் பார்த்ததுதான். பார்ப்போம். எப்போ அமையுது, எப்போ பஞ்சாம்ருதம் அங்கேயே வாங்கமுடியுது என்று.

   நீக்கு
 19. சபரிமலைக் காடுகளும் இப்படித்தான்...
  பனித் திரைக்குள்
  மேகப் பொதிகளை வைத்த
  மாதிரி இருக்கும்...

  பதிலளிநீக்கு
 20. //கூந்தல் பனை போலிருக்கும் காய் தான் பூ வந்தி காய் என்கிறார் //

  பூவந்திக் காயைத் தான் பூந்திக்காய் என்று சொல்கிறோமா?.. சீயக்காயுடன் (சிகைக்காய்?) இதைச் சேர்த்து மிஷினில் அறைக்கும் பொழுது சீயக்காய் பொடிக்கு கூடுதல் வழவழப்பைத் தருவதோடு, கூந்தல் பராமரிப்புக்கும் நல்லதாம் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் தெரியவில்லை.  பதிவாசிரியர் பதிலளிக்கக் கூடும்.

   நீக்கு
  2. ஜீவி அண்ணா சொல்வது சரி..

   இந்த பூவந்திக் கொட்டையை இடித்து நீரில் கலக்கினால் நுரைத்துக் கொண்டு வரும்..
   அந்த காலத்தில் பொற்கொல்லர்கள் இதைக் கொண்டுதான் பொன் வெள்ளி நகைகளை சுத்தம் செய்வார்கள்...

   நீக்கு
  3. இப்போவும் நான் பூந்திக்கொட்டை பயன்படுத்திச் சுத்தம் செய்வது உண்டு. கூந்தல் பரமாரிப்புக்கும் நல்லதே! இதோடு அல்லாமல் மதுரைப்பக்கம் உசிலம்பொடி என்னும் ஒரு பொடி பச்சை நிறத்தில் கிடைக்கும். அதுவும் ஏதோ மூலிகைப்பொடி தான். இதன் மூலம் தெரியவில்லை. ஆனால் சின்ன வயசில் இருந்து சீயக்காயோடு சேர்த்துத் தேய்த்துக் குளித்திருக்கிறேன். குளிர்ச்சி என்பார்கள். அதை உணரவும் முடியும். கண்களுக்குள் அந்தக் குளிர்ச்சி தெரியும். எல்லாமே இப்போ இல்லை. உசிலம்பொடி யாரோ கொடுத்துத் தேய்த்துக் கொண்டால் பழைய மாதிரி வாசனை இல்லை. சீயக்காய் இல்லாமல் வெறும் உசிலம்பொடி கூடத் தேய்ச்சுக்கலாம். தண்ணீரில் கரைத்தால் வழவழப்பாக நுரையுடன் வரும்.

   நீக்கு
  4. எஸ். இப்பொழுதும் சென்னையில் பூந்திக் கொட்டை கடைகளில் கிடைக்கிறது.
   உசிலம் பொடி, காதி அல்லது சர்வோதையா ஸ்டோர்களில் கிடைக்கிறது. சீகைக்காயை அரைத்த பின்னால் அதனுடன் கால் பங்கு உசிலம் பொடியைக் கலந்து உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது.
   தனி உசிலம்பொடி எண்ணையே போகாமல் பிசுப்போடு இருக்கும் என்பதினால் அதைத் தனியாக உபயோகிப்பதில்லை.
   சென்னையில் சில கடைகளில் சீகைக்காய் பொடி என்றால் உசிலம்பொடியைத் தான் தருகிறார்கள். ஆனால் கவரின் மேல் சீகைக்காய் பொடி என்று எழுதியிருக்கும். சிகைக்காய் அரைக்கும் மிஷின் சில மாவுமில்களில் தான் இருக்கும். சீகைக்காய்+ காய்ந்த செம்பருத்தி பூ+ அரிசி கால்படி+பூந்திக் கொட்டை இதையெல்லாம் கலந்து எப்படியோ தேடித் திரிந்து இப்பொழுதும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அரைத்து வைத்துக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. மீராவெல்லாம் உபயோகிப்பதில்லை.
   வழக்கமாக அமெரிக்காவுக்குப் போகும் பொழுது எடுத்துச் செல்லும் பொருள்களில் அரைத்த சீகைக்காய் பொடியும் ஒன்றாக இருக்கும்.

   நீக்கு
  5. ஓ! பொற்கொல்லர் உபயோகிப்பது இதைத் தானா? இன்று தான் தெரிந்தது. தம்பி துரைக்கு நன்றி.

   சோளக்கட்டை மாதிரி ஒன்று இருக்குமே, அதன் பெயர் என்ன?

   நீக்கு
  6. சோளக்கட்டை மாதிரியா!?...
   அதென்னவோ தெரியவில்லையே...

   நீக்கு
  7. இப்படியான இயற்கைப் பொருள்களின் பயன்பாடுகளை அழித்து விஷங்களின் பக்கம் திருப்பி விட்டது அலங்கார வனிதைகளின் அரைகுறை ஆட்ட விளம்பரங்கள் என்றால் மறுப்போர் உண்டோ!...

   நீக்கு
  8. என்னத்த இயற்கையோ... பயன்பாடுகளோ துரை செல்வராஜு சார். சிகைக்காய் போட்டுக் குளித்தால் 5 வாரங்களில் அலைபாயும் கூந்தல், உசிலம்பொடி தேய்த்தால் மென்மையான சருமம் ஆறே வாரங்களில் - இப்படீல்லாம் விளம்பரம் வந்திருக்கா? அலங்கார வனிதைகள்லாம் பலவித க்ரீம்களை உபயோகப்படுத்தி எண்ணி ஆறே வாரங்களில் ஜொலிக்கிறாங்க. அப்புறம் எப்படி இயற்கைப் பொருட்கள்லாம் போணியாகும்?

   நீக்கு
  9. இயற்கை முறைப்படி சிகைக்காய்த் தூள் ஒரு கிலோ அரைத்தால் அதிக பட்சம் நூறு ரூபாய் கூட ஆகாது...

   ( இன்றைய விலை நிலவரத்துக்குத் தகுந்தவாறு கணக்கிட்டுக் கொள்க..)

   ஆனால் அரைகுறை ஆடை அலங்கோல வனிதையர் ஆடிப் பாடி விற்கும் இரசாயன / விஷப் பொடிகள் - 2 கிராம் ஐந்து ரூபாய்...

   ஆதாயம் கூடுதல் என்று ஆடிப் பாட வேண்டியது தான்...

   நீக்கு
 21. வான் நிலவைதான் அமாவாசையன்று காண முடியாது. மின் நிலாவுக்கு என்ன?

  பதிலளிநீக்கு
 22. அழகான் இயற்கை காட்சிகள். ஓங்கி வளர்ந்த மரங்கள், மழையில் குளித்த இலைகளில் மினு மினுப்பு அழகு.

  கொடைகானல், குன்னூர், ஊட்டி போலத்தான் இருக்கிறது.


  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!