வெள்ளி, 31 ஜூலை, 2020

வெள்ளி வீடியோ : ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து...


​1970 இல் வெளிவந்த கல்யாண ஊர்வலம் படத்தின் நாயகன் நாகேஷ்.  பெயருக்கு கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய சோகமும் கலந்த படம். 

சர்வர் சுந்தரத்தில் அவரை விரும்பாத கே ஆர் விஜயா இதில் விரும்புகிறார்!  பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணி (கோபாலகிருஷ்ணன்) - மயிலு இணைந்து விட்டார்கள் என்பதை அடுத்த படத்தில் அதாவது கிழக்கே  போகும் ரயில்படத்தில் சூசகமாகச் சொல்லி இருப்பாரே பாரதிராஜா, அது நினைவுக்கு வருகிறது!கண்ணதாசன் வாலி மா ரா எல்லாம் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் .  திரைக்கதை இசை தயாரிப்பு ஆர் பார்த்தசாரதி..  உதவி எல் வைத்தியநாதன் என்று போட்டிருக்கிறது. ஆச்சர்யம்! இயக்கம் கே எஸ் சேதுமாதவன்.கூந்தலிலே நெய் தடவி  பாடலைப் பகிர எண்ணி சென்று பார்த்தால் பெரும்பாலும் எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.  ஆனால் இன்னும் இரண்டு பாடல்கள் இதில் இருப்பது தெரிந்தது.  ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் எனும் டி எம் எஸ் குரலிலான பாடல் மற்றும் எந்தனுயிர்க் காதலன் கண்ணன் கண்ணன் எனும் பி சுசீலா குரலிலான பாடல். முதலில் டி எம் எஸ் பாடும் தத்துவப்பாடல்.  

ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் நான் 
அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கணும் 
ஏண்டா சாமி என்னைப் படைச்சே என்னைப் 
படைக்கையிலே என்ன நெனச்சே 

பணம் இருந்தா இந்த உலகத்திலே 
பலகதை நடக்குதப்பா = நீ 
படைக்கையிலே கொஞ்சம் நோட்டையும் திணிச்சு 
படைச்சா உதவியப்பா 
படித்தால் என்ன உழைத்தால் என்ன 
பணம்தான் வாழ்வின் எல்லையப்பா 

தர்மம் என்பது என்றோ ஒருநாள்  
தற்கொலை புரிந்ததப்பா 
தலைவன் உடம்பும் நீதிக்கு பயந்து 
கோவிலில் மறைந்ததப்பா
அழுதால் என்ன தொழுதால் என்ன 
நடக்கும் கதை தான் நடக்குதப்பா

ஒவ்வொரு உயிர்க்கும் இறைவன் தந்தது  
ஒரு சாண் வயிறல்லவா 
ஒரு சாண் வயிற்றுக்கு வழியில்லை என்றால் 
ஒரு முழம் கயிறல்லவா 
வயிறும் வயிற்றுக் கயிறும் வைத்து 
படைத்தது உந்தன் தவறல்லவாஅடுத்ததாக யேசுதாஸும் ஜானகியம்மாவும் பாடும் பாடல்.  யேசுதாஸின் ஆரம்பகால இளமையான குரல்!  கேட்க சுலபமாக இருந்தாலும், சரணங்கள் சட்டென உயரம் ஏறுகின்றன!  மொத்தத்தில் இனிய பாடல்.கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி 
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - 
இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர 
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் 
அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சும்.. 
​​காதலி உள்ளம் வெள்ளம் 
அதில் காதலின் ஓடம் செல்லும்

இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர 

கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ

நெஞ்சமெனும் ஆலயத்தில் 
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள் 
என் மனதைத் தன்னுடனே எடுத்துச் செல்வாள் 
அந்த அன்பு மகள் 
புதுமனையில் புகுந்து மணவறையில் 
கலந்திருக்க கல்யாண நாள் வருமோ 
கல்யாண நாள் வருமோ.

ஆயிரம் காலத்தைக் கடந்து 
விழி நீரினைக் கண்கள் மறந்து 
அன்பெனும் வானத்தில் பறந்து- நீ 
வாழ்ந்திட வேண்டும் இருந்து 
இளம் பருவ மழையில் இரு 
புருவம் நனைந்து வர 
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ


95 கருத்துகள்:

 1. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. நான் இந்தப் படத்தைப் பார்த்ததில்லை..
  பாடல்கள் இனிமையானவை...

  பதிலளிநீக்கு
 3. இளம் பருவ மழையில்
  இரு புருவம் நனைந்து வர்...

  என்றிருக்க வேண்டுமோ!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செல்வராஜு சார்... இளம் பருவ மழையில் இரு புருவம் எப்படி நனையும்? வேர்த்து விறுவிறுத்துப் போயிருக்கிறாளா?

   அதற்குப் பதில்,

   இளம் பருவ மழையில் இதழ் நனைந்து நனைந்துவர. என்று இருந்தால் இன்னும் சரியாக இருக்கும்.

   நீக்கு
  2. இளம் பருவ மழை என்பது
   மண்ணில் பெய்வதல்ல...

   மனதில் பெய்வது!...

   அந்த மழை பெய்யும் போது
   புருவங்கள் வியர்த்திருக்கும்..
   கண்ணிமைகள் பளபளக்கும்..
   கன்னங்கள் மினுமினுக்கும்...

   இதழ்கள் நனைவது அப்புறம்!...

   நீக்கு
  3. என்ன என்னவோ ச்சொல்றீங்க. புரீல்ல. நமக்கு (எனக்கு) அப்சர்வேஷன் பவர் கம்மி போலிருக்கு. ஹாஹா

   நீக்கு
  4. //இளம் பருவ மழையில்
   இரு புருவம் நனைந்து வர...//

   மாற்றி விட்டேன்!

   நீக்கு
  5. விளக்கம் சூப்பர் துரை செல்வராஜூ ஸார்.

   // இதழ்கள் நனைவது அப்புறம்!...//

   ஹிஹிஹி...   என்ன இது...   வரலக்ஷ்மி பூஜையும் அதுவுமா....

   நீக்கு
 4. கூந்தலிலே நெய் தடவி...

  இப்பாடலின் இடையே மெல்லியதாக வரும் சித்தப்பா!!.. எனும் விளிப்பு நெஞ்சை உருக்குவது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  அப்போது மாப்பிள்ளை எதிரில் இன்னொரு வண்டியில் வருவார்.  அதை சித்தப்பாவிடம் சுட்டிக்காட்டுவார் பெண்!

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அன்பு துரை.
  அன்பின் வணக்கம் ஸ்ரீராம்.
  என் அம்மா பாடும் பாடல் இது.
  எப்படிம்மா இந்தப் பாடல் தெரியும் உனக்கு என்றால்
  ஏன் நீ மட்டும் தான் ரேடியோ கேட்பியொ
  என்றார். அந்தச் சிரிப்பை மறக்க முடியவில்லை
  என்னால்.
  அது நான் குழந்தைகளோடு பிசியாக இருந்த காலம். வானொலி
  கேட்கக் கூட மறந்துவிடும்.

  மிக நல்ல பாடல். மணிமாலாவுடன் நாகேஷ்
  பாடும் பாடல். அருமை. மீண்டும் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.   அம்மா சினிமா பாடல்கள் எல்லாம் பாடுவாரா?  ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்!

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம். முணுமுணுப்பார்.
   கேட்டால் வெட்கப்படுவார்.
   இதெல்லாம் நாங்கள் வீட்டை விட்டுச் சென்ற பிறகு
   கிடைத்த சுதந்திரம் என்று நினைக்கிறேன்.
   பாவம் அம்மா.

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய பிரார்த்தனைகளை இணைந்து செய்வோம்.  வாங்க .கமலா அக்கா...  வணக்கம்.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் வரலெட்சுமி விரத வாழ்த்துகள். அம்மனருள் அனைவரது வாழ்விலும் நல்லருள் சேர்க்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  இந்த இரண்டு பாடல்களையும் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். அருமையான பாடல்கள். படம் பார்த்ததில்லை. பாடல்களை இப்போதும் பிறகு கேட்டு மகிழ்கிறேன்.நாகேஷ் அவர்களின் நடிப்பு எனக்கு எப்போதுமே பிடிக்கும். குழந்தை இப்போது நலமாக உள்ளாள். பிரார்த்தித்து ஆறுதல் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தை நலமாக இருக்கிறாள் என்பதே மகிழ்ச்சி...

   முருகன் திருவருள் முன்நின்று காக்க...

   நலம் வாழ்க...

   நீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி கமலா ஹரிஹரன். குழந்தையை வேலவன் காத்தருளுவான்.

   நீக்கு
  3. குழந்தை நலமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. நல்லபடியாகப் பூரண குணம் அடைந்து முன்போல் விளையாடட்டும்.

   நீக்கு
  4. அன்பு கமலாமா,
   குழந்தை நலம் பற்றித் தெரிய மிக மகிழ்ச்சி.
   ஒரு நாளில் கலங்கினாலும் பிரார்த்தனைக்குப்
   பலன் எப்பொழுதும் உண்டு.

   நீக்கு
  5. பேத்தி உடல் நலம் தேறியது குறித்து மகிழ்ச்சி.

   நீக்கு
  6. பாடல்களை ரசித்ததற்கு நன்றி, மகிழ்ச்சி.  அதைவிட மகிழ்ச்சி குழந்தை உடல்நலத்துடன் இருப்பது.  முழு நலம் பெற வரலக்ஷ்மியைப் பிரார்த்திப்போம்.

   நீக்கு
  7. குழந்தைக்கு ஜுரம் சரியாகி நலமாக இருப்பது மகிழ்ச்சி.

   நீக்கு
 8. கல்யாண ஊர்வலமோ பாடல் கேட்டிருக்கிறேன்.

  பாடல் வரிகளை முழுமையாகப் படித்தபோது பாடல் மனதுல் ஓடுகிறது.

  நல்ல பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். இன்று வர லக்ஷ்மி விரதம் வழிபாடு செய்யும் அனைத்து சிநேகிதிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். வரலக்ஷ்மி நம் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்வையும், ஆரோக்கியத்தையும் வர வைக்கட்டும். தொடர்ந்து பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிநேகிதிகளுக்கு மட்டும் தானா..
   சிநேகிதர்களுக்கு கிடையாதா!?...

   நீக்கு
  2. விரதம் அவங்களுக்கு. பிரசாதம்(ங்கள்) நமக்கு. முந்தின நாள், தேங்காய், வாழை இலை வேணும், வாழைப்பழம் 1 டஜன், அது வேணும், இது வேணும் - என்ற கோரிக்கைகள்லாம் (வேலைகள்லாம்) நமக்கு

   நீக்கு
  3. முந்தின நாள், தேங்காய், வாழை இலை வேணும், வாழைப்பழம் 1 டஜன், அது வேணும், இது வேணும் - என்ற கோரிக்கைகள்லாம் (வேலைகள்லாம்) நமக்கு//

   பின்னே விரதம் பூஜைனா ரெண்டுபேரும் சேர்ந்துதானே செய்யணும்!!! அதுல உங்க பங்கும் வேணுமே!! பாவம் பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்யறப்ப பிரசாதம் சாப்பிடற ஆண்கள் இது கூடச் செய்யலைனா அப்புறம் என்னவாக்கும்னு கேக்கறேன்!! ஹா அஹாஹாஹாஹா..

   கீதா

   நீக்கு
  4. வாங்க கீதா அக்கா...   வணக்கம். .  இணைந்து பிரார்த்திப்போம்.  நன்றி.

   நீக்கு
  5. //பின்னே விரதம் பூஜைனா ரெண்டுபேரும் சேர்ந்துதானே செய்யணும்!!! அதுல உங்க பங்கும் வேணுமே!! //

   இங்கு பூஜைக்கான ஏற்பாடுகள், அலங்காரம் எல்லாம் அடியேன்!  கொழுக்கட்டை செய்ததும் அடியேன்தான்!

   நீக்கு
  6. ஹாஹாஹா, துரை, பூஜை செய்வது அவங்க தானே! சிநேகிதர்களுக்குக் கொழுக்கட்டை, சுண்டல், அப்பம், இட்லி, பழங்கள் ஆகியவை! :))))))

   நீக்கு
 10. அதிசயமாக இரண்டுமே கேட்ட பாடல்கள். அதிலும் "ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும்.!" ரொம்பவே அதிகமாக் கேட்டிருக்கேன். நாகேஷ் என்றோ, படத்தின் பெயரோ தெரியாது. வானொலி உபயத்தில் கேட்ட பாடல்கள் தான்.

  பதிலளிநீக்கு
 11. பாசம், காதல் இழைந்தோடும் பாடல்.
  நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றவள் தான் என் அண்ணன் மகள்.//
  எத்தனை அன்பு நாகேஷ் முகத்தில்.
  !!!. தனக்கு வரப்போகும் கணவனை கண்டு அந்தப்
  பெண் முகத்தில் தான் எத்தனை நாணம். மிக அருமையான
  பாடல்.

  பதிலளிநீக்கு
 12. பணம் இருந்தா இந்த உலகத்திலே
  பலகதை நடக்குதப்பா = நீ
  படைக்கையிலே கொஞ்சம் நோட்டையும் திணிச்சு
  படைச்சா உதவியப்பா
  படித்தால் என்ன உழைத்தால் என்ன
  பணம்தான் வாழ்வின் எல்லையப்பா //உண்மைதான். பாடல்களுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு இந்தப் பாடல் இன்னும் சில பாடல் காட்சிகளை நினைவு படுத்தும்.  நாகேஷ் என்று எடுத்துக் கொண்டால் "நானும் கூட ராஜாத்தானே நாட்டு மக்களிலே" பாடல்.  டி எம் எஸ் என்றால் "ஏறுதம்மா ஏறுதம்மா றெக்கை கட்டி ஓடுதம்மா விலைகள்..  பாடல்!

   நீக்கு
  2. சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டைக் கட்டி இருக்காக:)

   நீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வரமஹாலட்சமி தின நல்வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வு என்னும் வரத்தை எல்லோருக்கும் அம்மன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.  வரம் அருளப் பிரார்த்திப்போம்.  வாங்க பானு அக்கா..  வணக்கம்.

   நீக்கு
 14. இரண்டும் கேட்ட பாடல்கள். ஆனால் கவனித்து கேட்டதில்லை. வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் வருகிறேன் என்று சொல்லி சென்றிருக்கிறீர்களா?  (இனி நாளைய பதிவுக்கு) வருகிறேன் என்று டாட்டா காட்டி விட்டு சென்றிருக்கிறீர்களா?!!!

   நீக்கு
 15. முதல் பாடல் (எ)இன்றைக்கும் பொருத்தமான பாடல்...

  பதிலளிநீக்கு
 16. இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட இரு பாடல்களும் சிறப்பு. கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. கே.ஜே.யேசுதாஸ் பாடல் என்றும் இனிமை.

  பதிலளிநீக்கு
 18. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். எல்லாம் இலங்கை வானொலி உபய்த்தினால்தான்.

  ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் நான் அவனிடம் ஒன்ணே ஒண்ணு கேட்கனும்..அதே அதே ஸ்ரீராம். இப்ப அதே தான். இது எப்ப காணாமப் போகப் போகுதுன்னு கேட்கணும்.

  இரண்டு பாடல்களும் ரசித்தேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இது எப்ப காணாமப் போகப் போகுதுன்னு கேட்கணும்.// - ஏம்பா... நான் குடுத்ததை வச்சி ஒழுங்கா இருக்காம, நீங்களே பிரச்சனையை வரவழைச்சுப்பீங்களாம். (சைனாக்காரன் ரிலீஸ் பண்ணுவான். சிலர் மத்தவங்களுக்கு பரப்புவாங்க. அரசு சொன்னப்பறமும் ஜாக்கிரதையா இருக்காம முகமூடி இல்லாம ஊர் சுத்தறது, டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணாம இழையறது, வெளில போகாம இருக்கறதில்லை, போனாலும் வந்து சுத்தப்படுத்தி பாதுகாத்துக்கறதில்லை) அப்புறம் எங்கிட்ட, எப்போ பிரச்சனை தீரும்னு கேட்பீங்களாம். உங்களுக்கே அநியாயமாத் தெரியலையா? - என்று கடவுள் கேட்பாரே... அதுக்கு பதில் ரெடி பண்ணி வச்சுக்கோங்க.

   நீக்கு
  2. //இது எப்ப காணாமப் போகப் போகுதுன்னு கேட்கணும்./

   வாங்க கீதா...    சில இயற்கைப் பேரிடர் காலங்களில் அலுவலகங்களில் சில பைல்களை அந்த பேரிடரில் சென்று விட்டதாக கணக்கு எழுதுவார்கள்.  இப்போது கடவுள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் போல....

   நேற்று என் நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்தேன்.  மிகவும் வருத்தம்.

   நீக்கு
 19. பல வருடங்கள் கழித்துக் கேட்கிறேன் இரு பாடல்களும். ரசித்தேன்.

  மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 20. அவர் பெயரை ஜேசுதாஸ் என்று எழுதுவதும் உச்சரிப்பதும் தான் என் வழக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜீவி ஸார்...   நானும் முன்னால் அபப்டிதான் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அவர் பெயர் இதுதான் என்று தெரிந்த பிறகு இப்படியே எழுதி வருகிறேன்.

   நீக்கு
 21. 'ஹரிவராசனம்' 'மஹா கணபதிம்' -- இரண்டும் ஜேசுதாஸ் பாடிக் கேட்க வேண்டும். தெய்வீகக் குரல் அவருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த இரண்டு மட்டும்தானா?  மிச்சம்?

   நீக்கு
  2. ஒரு பானை சோறுக்கு இரண்டு பருக்கைகள் பதம் ஒரு காரணத்தோடு தான் இந்த இரண்டும்.

   நீக்கு
 22. இப்படத்தினைப் பார்த்ததில்லை. ஆனால் பாடல்களைக் கேட்டுள்ளேன். ரசித்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 23. வரமஹாலக்ஷ்மி விரதநாள் ஸ்பெஷலாக பாக்யாத லக்ஷ்மி பாரம்மா அல்லது ஏதாவ்து தேவி பாடல்கள் எதிர்பார்த்தேன் இதில்வரும் பாடல்கள் கேட்டதில்லை நோ ரிக்ரெட்ஸ் பாடல்கள்வெகு சுமார் ரகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருடா வருடம் ரிப்பீட் ஆகும் பாடல்கள் அவை.  பூஜையை வீட்டோடு வைத்துக்கொண்டு பொழுதுபோல் தளத்தில் வைத்து விட்டேன்!    நன்றி ஜி எம் பி ஸார்...

   நீக்கு
 24. நேற்றைய பதிவில் ஜீவி ஸார் விருப்பப்படி குறுந்தொகைப் படத்தை இணைத்து விட்டேன்.  படத்தையும் ஜீவி ஸாரே அனுப்பி இருந்தார்.  நன்றி.  நண்பர்கள் அனைவரும் படத்தைப் பார்த்து மறுபடி கவிதையைப் படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜீவி அண்ணா அவர்கள் அனுப்பி வைத்துள்ள படம் எனது கணினிக்குள் இருக்கின்றது... கணினியை இன்னும் இணையத்துடன் இணைக்காததால் ஒன்றும் செய்ய இயலவில்லை..

   ஜீவி அண்ணா அவர்களுக்கு நன்றி...

   நீக்கு
  2. அப்படியும் பழைய படத்தை எடுக்க உங்களுக்கு மனம் வரவில்லை, பாருங்கள்..
   டெக்னிக் சூப்பர்!.. இருந்தாலும்
   நெல்லை கேட்டால் எப்படி சாமாளிப்பதாக உத்தேசம்?
   ஹஹாஹா....

   நீக்கு
  3. இதுக்கு பழசே மேல் என்பாரோ?.. ஹி..ஹி..

   நீக்கு
  4. //அப்படியும் பழைய படத்தை எடுக்க உங்களுக்கு மனம் வரவில்லை, பாருங்கள்..
   டெக்னிக் சூப்பர்!.. இருந்தாலும்//

   கவிதைக்கு மூலம் மாயா படம்.  குறுந்தொகைப் அப்படத்துக்கு மூலம் அந்தக் கவிதை.  கவிதையின் பின்விளைவு குறுந்தொகைக்காட்சி...   எனவே....

   நீக்கு
  5. //இதுக்கு பழசே மேல் என்பாரோ?.. ஹி..ஹி..//

   இல்லை, நெல்லை அப்படிச் சொல்ல மாட்டார்...   ஏன்னா அதில் ஃபீமேலும் இருக்கே!  ஹிஹிஹிஹிஹி...

   நீக்கு
 25. அழகுக்கு அழகு செய்ய
  அணி வகுத்த தமிழே..
  முகங் கண்டு முகில் என்று
  முகிழ்த்த தெல்லாம் அமிழ்தே!..

  அழகு.. அழகு...

  பதிலளிநீக்கு
 26. இன்று பணி ஓய்வு பெரும் திருமதி ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.  பணி ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்வாகவும் அமைய பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரமா ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துகள். பணி ஓய்வு பெற்ற பின்னராவது நின்று நிதானமாக எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். முக்கியமாய்ச் சாப்பிடுவது. அலுவலகம் கிளம்புகையில் அவசரமாக அள்ளிப் போட்டுக்கணும். அது இல்லாமல் நிதானமாகச் சாப்பிடட்டும்.

   நீக்கு
 27. ரமாஸ்ரீக்கு வாழ்த்துக்கள். இனிமேலாவது தவறாது வருகைப் பதிவேட்டில் (பின்னூட்ட பாக்ஸில்) sign பண்ணட்டும். ஆமாம், இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிகிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹ்ஹ்ஹ்....  அவர் அவ்வப்போது தொலைபேசுவாரே...  மேலும் நம் வாட்ஸாப் குழுமத்தில், இங்குமே அவரே முன்னரே சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
 28. இரண்டு பாடல்களும் முன்பு அடிக்கடி கேட்டு இருக்கிறேன் வானொலியில்
  பிடித்த பாடல்கள்.

  முதல் பாடல் நாகேஷ் நடிப்பு ஆட்டம் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 29. ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  //பணி ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்வாகவும் அமைய பிரார்த்தனைகள்.//

  நல்ல வாழ்த்து நானும் அப்படியே வாழ்த்துகிறேன் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 30. எனக்கு என்னவோ கடைசி வரிகள், இரு உருவம் நனைந்து வர என்று இருந்த ஒரிஜினல் பதிவு வரிகள்தான் சரி, என்று தோன்றுகிறது. சாதாரண மழைகளிலும் அல்லது பருவ(!) மழைகளிலும் புருவம் மட்டும் நனைவது சாத்தியமில்லை என்றே படுகிறது. ஆகையால், மின்நிலாவில் இரு உருவம்தான் நனையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணதாசன் பாடல்களில் பருவம் வந்தால் அதற்கு அடுத்து உருவம்தான் வரும். புருவம் உயர்த்தாமல் யோசித்துப் பாருங்கள்! பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.... அடுத்த வரி என்ன?

   நீக்கு
  2. கௌதம் ஜி..

   நனைந்த ( மழையினால் அல்ல) புருவங்களைப் பார்த்தில்லையா!...

   நீக்கு
  3. ரசனை!!!!!! நெற்றி வியர்ப்பதால் புருவங்கள் நனைவது இயற்கையே.

   நீக்கு
  4. புருவம் 'மட்டும்' நனைவது இல்லை - நெற்றியோடு சேர்ந்து புருவம் நனையலாம். எந்த மழையிலும் - வியர்வை மழை உள்பட புருவம் மட்டும் நனைய வாய்ப்பு இல்லை!

   நீக்கு
 31. பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை.
  எமது வீட்டுக்கு முன்னால் உள்ள முருகன் கோவிலில் பத்து நாள் உற்சவம் நடக்கிறது. முருகன் பக்திப்பாடல்கள் போடுகிறார்கள் என்ன சத்தம்தான் அதிகம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!