வியாழன், 9 ஜூலை, 2020

விடாக்கொண்டர் கொடாக்கண்டர் கேஜிஜி !!

அது 2013 ஆம் வருடம்!   மே மாதம் முப்பதாம் தேதி.  அதற்கு முந்தைய நாளோ என்னவோ ரிஷபன் ஜி ஒரு கவிதை வெளியிட்டிருந்தார்.  அது என்ன என்று எனக்கு நினைவில்லை. உடனே நான் இதை எழுதி வெளியிட்டேன் - ரிஷபன் ஜிக்கு நன்றியுடன்.

பாசம் மறந்த

இலைகள்

மரத்தை விட்டுப்

பிரிந்தாலும்
வாசம் போவதில்லை!

(ஒரு கவிதையைப் படித்தால் நமக்குள்ளும் ஏதாச்சும் எழுதத் தோன்றும். அப்படி ஒரு கவிதை இது. ஆனால் அது போல இது இல்லை !) நன்றி ரிஷபன் ஜி!



"ஹா ஹா எனக்கேவா.."  என்று சிரித்தார் ரிஷபன் ஜி.

" நல்லபடி எடுத்துக் கொண்டதற்கு நன்றி ரிஷபன் ஜி!" என்று பூரித்துப் போனேன்.

" யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் " என்று பெருந்தன்மை காட்டினார் ரிஷபன் ஜி.

அப்புறம் வந்தார் கேஜிஜி.  என்னை உண்டு இ(ல்)லை என்று ஆக்கிவிட்டார்.  நீங்கள் எல்லாம் 'வாசம்' என்பதை மரத்தின் மீதான தொடர்பு, பற்று என்று எடுத்துக்கொண்டு (இது இப்போது தோன்றிய சமாளிப்பு!!  ஹிஹிஹிஹி....)  போனால் போகிறது என்று விட்டு விடுவீர்கள் இல்லையா?  இவர் விடவில்லை.

"இலைகள்? வாசம்? எங்கேயோ இடிக்குதே தலைவா! எனக்குத் தெரிந்து யுகலிப்டஸ் மர இலைகளுக்கு மட்டுமே இயற்கையில் மணம் உண்டு." என்றார் நவீன நக்கீரராய் மாறி.

'என்னடா இது கவிதைக்கு வந்த சோதனை' என்று எண்ணி நான் சமாளிக்கத் தலைப்பட்டேன்.

"ஹலோ.... இப்படியெல்லாம் கேள்வி கேட்கப் படாது... ஆமாம் சொல்லிட்டேன்!  யுகலிப்டஸ், மாவிலைல வாசம் நுகர்ந்தது இல்லை?" என்றேன்.

"பழமொழி.. கவிதை .. சொன்னா அனுபவிக்கணும்.. கேள்வி கேட்கக் கூடாது" என்று துணைக்கு வந்தார் ரிஷபன் ஜி. 

"மாவிலைக்கு வாசம் கிடையாது. பறிக்கும் பொழுது வருகின்ற வாசம் - மரத்தில் வடியும் மாம்பாலில் வருகின்ற வாசம்."  கே ஜி ஜி.  அவர் விடுவதாயில்லை.

நானும்!

"இதோ பாருங்க கே ஜி ஜி... இதுக்காக கவிதை (தானே இது?)யை எல்லாம் திரும்ப வாங்க முடியாது! இலை கீழே கிடந்தால் எடுத்து முகர்ந்து பார்த்து என்ன மரத்தின் இலை என்று சொல்லி விட முடியும்! (இவ்வளவு விளக்கம் கொடுக்க வச்சுட்டீங்களே!) ரிஷபன் ஜி சொல்லியிருக்கற மாதிரி ஆராயக் கூடாது...."

"கவிதை, விதை, கதை - எல்லாவற்றையும் ஆராய்ந்தே தீருவேன்!!" - ஆனாலும் பிடிவாதம் கேஜிஜிக்கு.

பொறுமை இழந்தேன்!!!!  நம்பியாராய் மாறினேன்.  இரண்டு உள்ளங்கைகளையும் குறுக்காய்ச் சேர்த்துப் பிசைந்தேன்.  என் உதடு கோணியது புருவங்கள் நெறிந்தன.  கண்கள் விட்ட்டத்துக்கும் மேலே எங்கோ பார்க்க,  

 "மாயாண்டி... ஆட்டோவைக் கூப்பிடு!"

நான் கேஜிஜியை மிரட்ட ஆட்டோ கூப்பிட, நான் எஸ்கேப் ஆவதாய் நினைத்து விட்டார் ரிஷபன் ஜி.   அவர் உடனே,

"ஸ்டாப்.. மீ ஆல்ஸோ கமிங்.."  என்றார்.

"இலையை அதன் ஷேப் அண்ட் சைஸ் பார்க்காமல், கண்களைக் கட்டிக் கொண்டு (யூகலிப்டஸ் தவிர) அது எந்த மரத்தின் இலை என்று கேஜீ உட்பட யாராலும் கண்டுபிடிக்க முடியாது."  இப்போது கேஜிஜி கேஜியையும் (ஞாயிறு புகைபப்டாப் பதிவாளர்) உள்ளே இழுத்தார்.

நான் என் அடுத்த சமாளிப்பை எடுத்தேன்.

"கே ஜி ஜி... "கண்ணுக்கு மையழகு..." அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்! உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கறேன்!"  தூண்டி விட்டேன்.

"பொய் வேறு, முரண் வேறு."  பிங்க் அமிதாப்பாய் நின்றார் கேஜிஜி.

எதிர்பாராமல் எனக்கு கேஜிஎஸ்ஸிடமிருந்து கொஞ்சம் ஆதரவு கிடைத்தது.  அவர் சொன்னார் :

"எலுமிச்சை, நாரத்தை, வேம்பு, வெற்றிலை, புதிநா கல்பூரவல்லி, இப்படி செடியோ கொடியோ, மரமோ எதிலிருந்து வந்திருந்தாலும் கண்டு கொள்ள முடியும் !  மரம் சந்தன மரமோ ? இலை உதிர்ந்தாலும் மரத்தின் வாசனை போகாமல் இருக்க ?"

கேஜிஜி அவரையும் எதிர்க்கட்சியில் உடனடியாகச் சேர்த்தார்!  "எலுமிச்சை நாரத்தை - இரண்டும் ஒரே வாசம்தான் வீசும்.   சந்தனமரம் பட்டுப் போனபின் தான் வாசமே வரும். இலையோடு இருக்கும் பொழுது வாசம் நஹீ"

கேஜிஎஸ் : "எங்கள் வீட்டில் lemon naaraththai இரண்டும் இருக்கிறது - சற்று வேறுபாடும் தெரிகிறது.  அப்போ சந்தன மரத்தை வெட்டி விற்பவர்கள் விறகுக்கா விற்கிறார்கள்?" 

கேஜிஜி : "இலையை கண்களால் பார்க்காமல், கண்களைக் கட்டிக் கொண்டு இனம் காண முயற்சி செய்யுங்கள்."

கேஜிஎஸ் :  "முகரலாமா கூடாதா?"

கேஜிஜி :"ரலாம்" 

கேஜிஎஸ் :  ":if the leaves have any essential oil like geranium basil, viboothip pachchai marik kozhundhu etc, one need not even make an effort to smell"

கேஜிஜி : "மருக்கொழுந்து, விபூதிப் பச்சை இலைகள் கூட, கசக்கி முகர்ந்தால் - பச்சை வாடை மட்டுமே வரும்"

கேஜிஎஸ் : "எல்லா விளக்கும் விளக்கல்ல என்பது போல என் போன்றோருக்கு எண்ணெய் பசை உள்ள இலையே இலை"

அப்புறம் கழுகு சித்தர் என்ற ஃபேஸ்புக் நண்பர் "சார் ஒரு சாலையின் காட்சியை தத்ரூபமாக ஒரு படம் போல எழுத்துக்களால் காட்டிவிட்டீர்கள் . அடுத்து என்னவோ. குருவி ராமேஸ்வர பணியும் நடக்கிறதல்லவா?" என்றும் 

ஸ்விஸ் கவிதாயினி ஹேமா "விழுந்தாலும் காலடியில் கிடப்பதே தவம் !" என்றும் சொன்னதுடன் அன்றைய அந்த அனல் பறக்கும் விவாதம் முடிவுக்கு வந்தது!

இப்படித்தாங்க...  முன்பெல்லாம் ஃபேஸ்புக்கில் இப்படி வெட்டி அரட்டை எல்லாம் நடத்தி இருக்கோம்.  சினிமா படப்புதிர் எல்லாம் விளையாடி இருக்கோம்.  அனன்யா மகாதேவன், கீதா அக்கா, ஸ்ரீனிவாசகோபால மாதவன், இன்னும் சிலர் என்று ஒரு குழு கூடும் அங்கு!

==================================================================================================

கடந்த ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த உல்டாப் பாடல் ஒன்று!  இதை எனக்கு பாடி அனுப்பி இருந்தார் மாதவன்.  அவருக்கு இது சினிமாப பாடலின் உல்டா என்று தெரிந்திருக்கவில்லை.  கானாப்பாடல் போல பாடி அனுப்பி இருந்தார்.  ஆனால் அவரும் அறியாமல் ஒரிஜினல் பாடலின் ட்யூனின் சாயல் அதில் தெரிந்தது!



தனியாய் இருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காவைக் கொஞ்சம் பாருங்க அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க...

வீட்டை விட்டு வெளில வந்தா 'நாலும்' நடக்கலாம்
அந்த 'நாலும்' தெரிஞ்சு நடந்துகிட்டா
நல்லாயிருக்கலாம்..
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா.. - அந்த
'ஒன்று' நடத்தும் நாடகத்தை
நிறுத்த முடியுமா.. (தனியாய்)

கொஞ்ச மாதம் கொரோனா வந்து
ஓய்ந்து போகலாம் - வாழ்வில்
கூடிவரும் தீமைகளும்
தீர்ந்து போகலாம்.
நேற்றுவரை நடந்ததெல்லாம்
இன்று மாறலாம் - நாம்
தனிமையிலே நடந்து சென்றால்
நன்மை அடையலாம்... (தனியாய்)

தன்னைப் போல பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உலகத்திலே
தனிமை வேண்டுமே
நோயை வாங்கிப் பரப்புவதால்
ஆவதொன்றில்லை - நாம்
வாயை மூடி 'உள்'ளிருந்தால்
நன்மை வேறில்லை (தனியாய்)


=======================================================================================================

கண்முன்னே நிகழ்ந்த விபத்து!



==================================================================================================

பொக்கிஷம் பகுதியில் சில தமிழ்வாணன் கதைகள்!  இவற்றில் எதை எதை நீங்கள் படித்திருக்கிறீர்கள்?  எதனெதன் கதை உங்களுக்கு நினைவில் இருக்கிறது?  அவர் கதைமாந்தர் பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களாகவே இருக்கும்.  நீலக்கண்ணி, கூர்விழி, ஒப்பிலான், செம்மேனி...  இவரது ஆஸ்தான துப்பறிவாளர் சங்கர்லால்.  அவருக்கு தேநீர் ரொம்பவும் பிடிக்கும்.  கழுத்துப்பட்டையை தளர்வாக்கிக்கொண்டு மேசை மேல் கால்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓய்வெடுப்பார், புத்தகம் படிப்பார்!  அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியின் பெயர் வஹாப்.  அவர் வீட்டு சமையல்காரன் மாது...  கத்தரிக்காய் என்று கூட ஒரு கேரக்டர் உண்டு என்று நினைவு.  மர்ம மனிதன் என்கிற கதையில் சங்கர்லாலுக்கே டூப் உண்டு!  கருகிய கடிதம் என்கிற கதையில் லேசர் ஹோலோக்ராம் பிம்பம் பற்றியெல்லாம் எழுதி இருப்பார்.  பின்னர் சங்கர்லாலுக்கு தேநீர் செலவு செய்து கட்டுப்படி ஆகவில்லை என்று (!!) க்ளூகோஸ் மாத்திரை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு தமிழ்வாணனே துப்பறிய வந்தார்!


படித்திருக்கிறேன் என்றாலும் கதை சரியாய் நினைவில்லை.  பெரும்பாலும் இவர் கதைகளுக்கு வர்ணம்தான் ஓவியர்.


நடுவிரலை வைத்துதான் கதையின் சஸ்பென்ஸ் உடையும்.


ஜப்பானில் மக்கள் தொடுவது எல்லாம் மஞ்சள் நிறமாக, அங்கு ஓய்வெடுக்க வந்த சங்கர்லால் துப்பறிவார்.  இப்போ இருந்திருந்தால் வூஹான் மர்மத்தை  துப்பறிந்து ' பூ' என்று ஊதி இருப்பார்!






இதில் நாம் வில்லன் என்று நினைக்கும் துரைப்பாண்டிதான் கதாநாயகன்!



=================================================================================================

டீஸர் 2:


விரைவில் வெளியாகவிருக்கும் அப்பாதுரையின் ஜூல் கதையிலிருந்து சில வரிகள்....

​..............  விபரீத ஊளையோடு ஜுல் தாவியோடினான்ரீனா அவனை அடக்கிக் கட்டி விளையாடினாள். இந்தக் குலாவல் அடங்க இரண்டு நிமிடம் அமைதி காத்தேன்.  "ஜுல் இன்னும் என்னை மறக்கவில்லை" என்றாள்என்னருகே வந்து "நானும் உன்னை மறக்கவில்லை" என்று உரசினாள்.

"அதற்குத்தான் இந்தக் கொரில்லாவுடன் ஒடினாயா?" என்றேன்

"யு மீன் நிவா?  சேசேநிவா என் காதலியில்லை. ஒரு கட்டாயத்தின் பேரில் கூட்டாளிஅவ்வளவுதான்நீ உதவினால் நிவாவின் பிடியில் இருந்து விடுபட்டு என் காதலியுடன் மறுபடி சேர்ந்திருக்க முடியும்"

"நான் ஏன் உனக்கு உதவ வேண்டும்?"

"மூன்று காரணங்கள்என்றாள். “உன்னால் உதவ முடியும் என்பது முதல்உன்னால் மட்டுமே முடியும் என்பது இரண்டாவது"

"மூன்றாவது?"

"நீ உதவாவிடில் நிவா என்னையும் என் காதலியையும் கொன்று விடுவாள்"

சிரித்தேன். "கேள்வியை நான் சரியா கேட்கலை போலஉனக்கு உதவுறதால எனக்கு என்ன லாபம்?"

அசலில் தீவிரமானாள் ரீனா.  "உனக்கு நிவாவைத் தெரியாது. அடியாள் பலம்போலீஸ் நெருக்கம்அரசியல் அண்மை.. எல்லாம் உண்மை. நினைத்தால் அரைக் கணத்தில் உன்னைக்  கரப்பான் போல அடித்து நசுக்கித்  தேய்த்து விடுவாள்"...............


=================================================================================================

155 கருத்துகள்:

  1. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறர்க்குச் செய்யும் நன்மை நமக்கு நாமே செய்துகொள்ளும் டெபாசிட் என்று எவ்வளவு எளிமையாச் சொல்லிட்டார்.

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கல்கண்டு வார இதழில் சங்கர்லால் துப்பறியும் கதைகளைப் படிப்பதில் அப்படியொரு ஆர்வம்...

    ஸ்ரீராம் சொல்வது போல நல்ல தமிழ்ப் பெயர்களாக வரும்..

    மற்றபடிக்கு வேறொன்றும் நினைவுக்கு வரவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஸ்ரீராம் , அன்பு துரை இனிய காலை வணக்கம்.
      இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாக இருக்க பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா..வணக்கம்.

      நீக்கு
  4. கவிதை மிக அருமை. காலத்துக்கேற்ற கவி வரிகள்.
    இதன் படி நடந்து கொண்டால்
    நல்லா இருக்கலாம்.

    நேற்று கேட்ட பொன் மொழி.
    நோய்த்தொற்று பற்றிய செய்திகளைக் கேட்காதீர்கள்
    என்பதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பயமுறுத்திய செய்தி

      2021 குளிர்காலத்தில் இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.8 லட்சம் மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப் போடுவார்களாம்.  முன்னணியில் இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, பிரேசிலும் சொல்கிரார்கள்.  அதாவது அதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, அது பலனளிக்கவில்லை என்றாலோ...!

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம் இந்த ஊரில் இந்த வருட நவம்பர்
      பாதிப்பே அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள். ஏனெனில்
      அது ஃப்ளூ சீசன். இரண்டுமாகச் சேர்ந்து...
      பயமா இருக்கிறது.
      தலைமைப் பைத்தியம்
      எல்லோரும் பள்ளிக்கூடம் போங்க. கல்லூரிக்க்ப்
      போங்கோ என்று விரட்டுகிறது:(

      நீக்கு
    3. ஆம் ம்மா....   நாம் எல்லோருமே இந்த வருட குளிர்காலத்தை நினைத்தேபயந்து கொண்டிருக்கும்போது அடுத்த வருடத்துக்குப் போய்விட்டது செய்தி.

      நீக்கு
  5. நானும் தமிழ்வாணன் கதைகள் விரும்பி படிப்பேன் எங்கள் ஊர்க்காரர் ஆயிற்றே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா தேவகோட்டைஜி!!! இனிய காலை வணக்கம்மா.

      நீக்கு
    2. ஓ...   உங்கள் ஊர்க்காரரா அவர்?  நன்று.

      நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
    3. யாரேனும் புகழ்பெற்றவராக இருந்தால் அது கில்லர்ஜி ஊர்க்கார்ராகத்தான் இருக்கவேண்டும். தேவி படத்தில் கிராமத்து தமன்னா காரைக்குடி பக்கமுள்ள ஊரில் நடித்ததாலும், அவரும் கில்லர்ஜி ஊர்க்கார்ர்தான். இல்லையா கில்லர்ஜி?

      நீக்கு
    4. நண்பரே மலையாளிகள்தான் இப்படி சொல்வார்கள்.
      தமிழ்வாணன் தேவகோட்டைக்காரர் என்பது உங்களுக்கு தெரியாததா

      எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் அவர்களது வீடு இருக்கிறது தமிழ்வாணன் இல்லம் என்று வீட்டில் கல் பதித்து இருக்கிறது.

      தமன்னா போன்ற கூத்தாடிகள் தேவகோட்டையாகவே இருந்தாலும் நான் இல்லை என்பதுபோல ஒதுங்கி விடுவேன் காரணம் அதில் எனது சுயகௌரவம் இருக்கிறது.

      நீக்கு
    5. விக்கிபீடியாவிலிருந்து சில துளிகள்....

      வாழ்க்கைச் சுருக்கம்
      தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார்.[1].

      இணைப்பு - https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

      நீக்கு
    6. அடடா... இந்த கில்லர்ஜி எல்லாத்துக்கும் ப்ரூஃப் வச்சிருக்கிறாரே. இனி கில்லர்ஜி, 'எங்க ஊர்க்காரர்'னு யாரையேனும் சொன்னால், அது உண்மைதான் போலிருக்கு.

      Jokes apart, நான் தமிழ்வாணன் காரைக்குடியைச் சேர்ந்தவர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் நகரத்தார் என்பது தெரியும்.

      நான் அவரது அணில் பத்திரிகையை (ஓசியில்) சென்னை வந்தபோது என் கஸின் நண்பர்கள் வீட்டில் படித்திருக்கிறேன். எங்கள் வீட்டில் எப்போதும் கல்கண்டு, துக்ளக் பத்திரிகை வாங்குவார்கள்.

      நீக்கு
  6. கல்கண்டில் படித்தது நினைவில் இல்லை.
    தமிழ்வாணனின் மணிமொழி நீ என்னை மறந்து விடு
    தொடர்கதையும்,
    அதற்கான மாயாவின் ஓவியங்களும் தான்.
    தெரு விளக்கு என்று ஒரு தொடர் வந்தது.
    இவர் எழுதியதா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். மாயா கல்கண்டில் வரைந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. விகடனில் தமிழ்வாணன் கதை?

      நீக்கு
    3. தெருவிளக்கு கதை எழுதியவரின் புனைபெயர் டபிள்யூ ஆர் ஸ்வர்ணலதா.
      மணிமொழி நீ என்னை மறந்துவிடு விகடனில் படித்ததுண்டு. மறந்துவிட்டேன்!

      நீக்கு
    4. "மணிமொழி நீ என்னை மறந்து விடு!" வந்தது ஆனந்த விகடனில். "தெரு விளக்கு!" வந்ததும் விகடனில் தான். டபிள்யூ.ஆர். ஸ்வர்ணலதா என்னும் பெயரில் யாரோ பிரபல எழுத்தாளர் எழுதினதாச் சொல்வாங்க. சிலகாலம் முன்னர் கூட அவரைப் பற்றிப் படித்தேன். பெயர் நினைவில் வரவில்லை! :)

      நீக்கு
    5. தமிழ்வாணன் வேறு பத்திரிகையில் கதை எழுதினார் என்பதே எனக்குச் செய்தி.

      நீக்கு
  7. வந்தவர்கள் வாழ்க, மற்றவர்கள் வருக!
    பாடல்:

    வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
    நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு

    விளக்கம்:

    பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்

    English Translation

    Those who worship with flowers at the feet of
    the one with a beautiful body and a trunk
    will have the gift of the tongue, an alert mind,
    the grace of the Goddess of wealth and a healthy life.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய நற்காலை வணக்கம் கௌதமன் ஜி.
      வாக்குண்டாம் பாடலுக்கு மருத்துவ குணமும்
      உண்டு என்று அவ்வைப் பாட்டி நூல் ஒன்றில் படித்தேன்.

      நீக்கு
  8. நோயை வாங்கிப் பரப்புவதால்
    ஆவதொன்றில்லை - நாம்
    வாயை மூடி 'உள்'ளிருந்தால்
    நன்மை வேறில்லை (தனியாய்) Just superb.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா...   பாடிப் பார்த்தீர்களா?

      நீக்கு
    2. ம்ம்ம். பின்ன பாடாமல் இருக்க முடியுமா.?
      மாப்பிள்ளை வேலையாக இருப்பதால்
      மூடிய அறை ஒன்றில் பாடிப்பார்த்தேன்.

      கரகர என்று தகர டப்பாமேல ஆணி கீற்றுகிற மாதிரி
      சத்தம் வந்தது.
      எனி திங்க் ராங்க் பாட்டி ? என்று கதவைத் தட்டினான் பேரன்:))))))

      ஆனால் ராகத்துக்கு ஏற்றார்ப்போல்
      வரிகள் இருந்தன. மிக அருமை ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஹா...  ஹா...  ஹா...  

      நன்றி அம்மா.  பேஸ்புக்கில் போட்டபோது நீங்கள் பார்க்கவில்லையா?

      நீக்கு
    4. எனி திங் ராங் பாட்டீ - ஹா ஹா ஹா . ரொம்ப ரசனையா எழுதியிருக்கீங்க வல்லிம்மா...

      நீக்கு
    5. குயில் கிழடாகும் போது
      குரல் தவளையாகிறது மா முரளி.:)
      எல்லோரும் எம்.எஸ், டீ கே.பி ஆகமுடியுமா.

      நீக்கு
    6. நெல்லை.. வல்லிம்மா பாடிய பாடலொன்று நம்ம ஏரியா ப்ளாக்கில் தேடினால் கிடைக்கும்.

      நீக்கு
  9. தமிழ்வாணன் கதைகள் & கட்டுரைகள் அந்தக் காலத்தில் கல்கண்டு வார இதழில் விரும்பி படித்ததுண்டு. மருமக்கதை மன்னன் எழுதிய 'பேய் பேய்தான்' கதையைப் படித்து பயந்ததும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  அப்படி ஒரு கதை வந்தது எனக்குத் தெரியாது அல்லது நினைவில்லை!

      நீக்கு
  10. முக நூல் அரட்டை மிக சுவாரஸ்யம்.இதை நான் பார்த்ததில்லை.
    நம் எபியில்
    அரட்டை நன்றாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் தேதி இருக்கிறது பாருங்கள் அம்மா...   பழசு!   அது அந்தக் காலம்!

      நீக்கு
    2. மே 2013 இல் நான் எங்கிருந்தேன்?
      ஏதாவது பயணமோ.தெரியவில்லை.

      ஆனால் இத்தனை பேரும் கலந்து
      உரையாடுவது எத்தனை அழகு.
      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. ஆட்டோ, டிரக் மோதல் அனாவசியம். பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் தான்
    அதிர்ச்சி. ஏன் தான் இந்தப் போட்டியோ:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போக்குவரத்தே இல்லாத சாலையில் அவசரம் காட்டிப் பறப்பதால் வரும் வினை!

      நீக்கு
    2. அப்பாதுரையின் கதையே புதுமையாகத் தான் இருக்கும். இங்கே கொடுத்திருக்கும் வரிகள் வேறு இலக்கை நோக்கிப் பயணிக்கிறதோ.
      கதானாயகன் ஆண்?
      காதலிக்கு இன்னோரு காதலி?
      நிவா,ரீனா .
      ஜூல் ஒரு செல்லமா.

      நீக்கு
    3. அப்படி ஒரு ஆவலைத் துடைத்தான் டீசர் அம்மா.

      நீக்கு
    4. கொஞ்சம் லேசாத் தலை சுத்தற மாதிரி கதை எழுதுவதில் மன்னன்
      துரை:)

      நீக்கு
    5. // ஆவலைத் துடைத்தான் //

      * ஆவலைத் தூண்டத்தான்

      நீக்கு
    6. கொஞ்சம் லேசா தலை சுத்தறா மாதிரியா.. இப்படி என்னை குறைச்சு மதிப்பிடலாமா?

      அத்தனை வரிகளில் இந்த வரிகளை எடுத்துப் போட்டார் பாருங்க ஶ்ரீராம்..

      நீக்கு
  12. அந்நாளில் படித்த தமிழ்வாணன் இன்று நினைவுக்கு வந்தார் உங்கள் மூலமாக.

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா...  வணக்கம்.  பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் முதல் மலராய் இணைந்த இலைக்கவிதை அழகு. ஒரு கவிதைக்கு பொய்தான் முதல் அழகு. (முக அழகும் கூட..) அது முக நூலில் வாதிட்டு வென்ற காட்சிகளை நீங்கள் விவரித்தது அருமை. இலைகளின் இயற்கையான வாசங்கள் காலையிலேயே என்னைச்சுற்றி மணம் பரப்பி மனம் மகிழ்வித்தது. அதன் வாசங்களுடன் தொடர்ந்து போரிட்ட வாசகங்களின் போர்த்திறமையும் ரசிக்கும்படி இருந்தது.(ஒரு சரித்திர கதை மாதிரி..) ஒரு சிறு கவிதையை ரசிக்கும்படி நகர்த்திக் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி. இப்போதைய எ. பியில் அவ்வப்போது வரும் வார்த்தைப் போர்களையும் விடாமல் படித்து ரசிப்பேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைகளில் ஆரோக்கியமான வாத, பிரதிவாதங்கள்தான் எங்கள் ப்ளாக் ன் தனிச்சிறப்பு! நன்றி!

      நீக்கு
    2. //முக நூலில் வாதிட்டு வென்ற காட்சிகளை நீங்கள் விவரித்தது //

      வாதத்தில் வென்று விட்டேனா?  அப்படி யார் சொன்னது?  நைஸாய் நழுவி விட்டேன்!

      நீக்கு
    3. நீங்கள் படைத்த அந்தக் கவிதை வென்று விட்டது எனச் சொன்னேன். நீங்கள் நைசாக கழன்று விடப் பார்த்த போதும், அது (கவிதையின் இலைகள்) அதன் இனத்துடன் (மணம் வீசும் மற்ற இலைகள்) அதிக நேரம் நின்று போராடியிருக்கிறதே..!

      நீக்கு
    4. அடடே.. இது கூட நல்லாயிருக்கே...

      நீக்கு
  15. சங்கர்லால் கதைகள் நிறைய, ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். கல்கண்டு எங்க அப்பா வீட்டில் வாங்கும் பத்திரிகை. சங்கர்லால் கதையின் ஆஸ்தான ஓவியர் ராமு அவர்கள். காலை நடைப்பயிற்சி செய்து ஓவியர் வீட்டிற்குச் சென்று சங்கர்லாலின் தலைமுடி முன்நெற்றியில் விழும்படி எப்படி ஓவியர் வரைகிறார் என்றெல்லாம் ஆர்வமெடுத்து பார்ப்பாராம்.

    அவர் கதைகளின் மின்னூல்கள் இருக்கு. அப்போதிருந்த ஈர்ப்பு இப்போ குறைவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு ரசனை.

      நீக்கு
    2. வாங்க நெல்லை...  உண்மைதான்.  அப்போது தவா கதைகில் இருந்த சுவாரஸ்யம் இப்போதும் படித்தால் இருக்குமா என்பது சந்தேகம்!

      நீக்கு
  16. இனிய காலை வணக்கம்.

    முகநூல் விவாதங்கள், பாடல், என நல்லதொரு தொகுப்பு.

    எழுத்துரு - முயற்சி நன்று. அளவு கொஞ்சம் அதிகமாக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...  நன்றி.

      // எழுத்துரு - முயற்சி நன்று. அளவு கொஞ்சம் அதிகமாக்கலாம்! //

      அபுரி!!!

      நீக்கு
    2. அப்பாதுரை கதையின் டீசர் - வேறு எழுத்துருவில் இருக்கிறது! அதைச் சொன்னேன் ஸ்ரீராம். அளவு சிறியதாக இருக்கிறது!

      நீக்கு
    3. ஓ... ஓகே ஓகே.. ஆனால் புதிய எழுத்துரு முயற்சியெல்லாம் இல்லை, அவர் அனுப்பியதை அப்படியே காபி பேஸ்ட்...!

      நீக்கு
    4. இன்னொரு டீசருக்கு நன்றி ஶ்ரீராம்.. இப்ப மரியாதையா கதையை எழுதிக் கொடுத்தாகணும்..

      நீக்கு
  17. அனைவருக்கும் காலை வணக்கம்.  என்ன எல்லோரும் ஒரேயடியாக தமிழ்வாணனை நினைவு கூறுகிறீர்கள்? செல்லப்பா சாரின் பதிவை படித்த பாதிப்பா? நான்கூட சிறு வயதில் சங்கர்லால் துப்பறியும் மர்ம மனிதன் என்று ஒரு கதை படித்திருக்கிறேன். ஆனால் சுத்தமாக நினைவு இல்லை. சங்கர்லால் படம் மட்டும் ஞாபகம் இருக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...   நான் தமிஹவானான் பற்றி பதிவில் படங்களோடு பேசி இருப்பதால் எல்லோரும் கதைத்திருக்கிறார்கள்!  பார்க்கவில்லையா?!

      நீக்கு
    2. நான் பின்னூட்டங்களைத்தான் குறிப்பிட்டேன் ஸ்ரீராம். இராய செல்லப்பா சாரும் தமிழ்வாணன் பற்றி எழுதியிருந்தார் அதிலும் குறிப்பாக சங்கர்லால் பற்றி, நீங்களும் அதையே எழுதியிருந்தீர்கள். அதனால்தான் செல்லப்பா சாரின் பாதிப்பா என்று கேட்டிருந்தேன். 

      நீக்கு
    3. //சங்கர்லால் படம் மட்டும் ஞாபகம் இருக்கிறது. // இங்கு நான் குறிப்பிட்டிருப்பது சங்கர்லால் கதைக்கு போடப்பட்ட படம். நீங்கள் கமலஹாசன் நடித்த பாடாவதி படம் என்று நினைத்துக் கொள்ளவில்லையே?உஸ்! அப்பாடா! முடியல கோனார் நோட்ஸ் போடா வெச்சுட்டாங்களே?!

      நீக்கு
    4. ஓ.. மன்னிக்கவும் பானு அக்கா.. செல்லப்பா ஸார் போட்டிருந்ததை நானும் படித்தேன். ஆனால் அதனால் அல்ல இது!

      நீக்கு
    5. சங்கர்லால் பாடவதிப் படம்தான். ஆனால் அதில் ஸ்ரீதேவி மிக அழகாய் இருப்பார். இளையராஜாவின் கைவண்ணத்தில் ஒரு பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

      உங்கள் கேள்விக்கு பதில், "ஹி..ஹி... அப்படி நினைக்கவில்லை"

      நீக்கு
  18. வாழை இலை, புளிய இலை போன்ற இலைகளுக்கும், ஏன் க்ரோட்டன்ஸ் இலைகளுக்கும் கூட மணம் உண்டு. கண்களை கட்டிக்கொண்டு, அவற்றை முகரும் வண்ணம் நாம் இயற்கையோடு இயைந்து வாழ்வதில்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் பார்த்தால் எல்லா இலைகளுக்குமே ஒரு வாசனை இருக்கும். மனிதனின் நுகரும் சக்திக்கு அப்பாற்பட்டு...

      நீக்கு
    2. உண்மை ஶ்ரீராம். கீரி தன்னை பாம்பு கடித்துவிட்டால் ஓடோடி குறிப்பிட்ட இலையைச் சுவைக்குமாம். நாம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்திருந்தால் நமக்குத் தேவையான முகரும் திறமை நம்மிடம் தங்கியிருந்திருக்கும்.

      நீக்கு
    3. உண்மை நெல்லை. நாய் கூட அஜீரணம் என்றதும் ஒரு செடியைத் தேடி வந்து இலையை மென்று தின்னும்.

      நீக்கு
  19. //தெரு விளக்கு என்று ஒரு தொடர் வந்தது.இவர் எழுதியதா என்று தெரியவில்லை.//தெரு விளக்கு, ராண்டார்கை எழுதியது என்று ஞாபகம். 24 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருப்பார். அது சரி யார் இந்த ராண்டார்கை?((இதை புதனுக்கான கேள்வியாக எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.) தான் யார் என்பது வெளிப்பட கூடாது என்பதில் அவர் மிகவும் குறியாக இருந்தாராம்? சூரியகாந்தி படத்தில் வரும் 'நான் என்றால் அது அவளும் நானும்..' பாடலில் ஜெ.லலிதா பேசும் ஆங்கில வசனங்களை அவர்தான் எழுதியிருப்பார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராண்டார்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  தவப்புதல்வன் படத்தில் வரும் ஆங்கிலப்பாடலின் வரிகளையும் எழுதியது அவர்தம் என்று நினைக்கிறேன்.  அவர் அவ்வளவு மர்மமாக யாரென்று தெரியக்கக்கூடாது என்று பெயர் வைத்துக் கொண்டாரா, தெரியாது.

      நீக்கு
    2. RAANDARGUI is jumbled form of RANGADURAI. He was working in police department. ஆளவந்தார் கொலை வழக்கு உட்பட பல உண்மைச் சம்பவ நிகழ்வுகளை எழுதினார் என்று ஞாபகம்.

      நீக்கு
    3. ஆமாம், எங்கள் பைண்டிங் கலெக்‌ஷனில் பார்த்த ஞாபகம்.

      நீக்கு
  20. அன்பின் நெல்லை..

    திருக்கோளூர் எனும் திவ்ய தேசத்தில் பெருமாளின் திருப்பெயர் வைத்த மாநிதிப் பெருமாள்...

    வைப்புழி - பொன் பொருளைச் சேர்த்து வைக்கும் இடம், களஞ்சியம்..

    நிறைந்திருக்கும் களஞ்சியமே (நாமோ முன்னோர்களோ பிற்காலத்துக்கு என்று சேர்த்து) வைத்த மா நிதி...

    தமிழே உன்னால் இருந்தேன் - வானோர் விருந்து அமிழ்தும் மறந்தேன்!..

    என்று பாடினாராம் ஒரு புலவர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவதிருப்பதி, கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோவில்களை நினைவுகூற வைத்துவிட்டீர்கள் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  21. கவிதையும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசம் உண்டு, குறுத்துக்கு ஒரு வாசம், இலைக்கு ஒரு வாசம், காய்ந்தபின் ஒரு வாசம் உண்டுதான்.

    //விழுந்தாலும் காலடியில் கிடப்பதே தவம்//

    விழுந்தாலும் அந்த மரத்திற்கு உரமாகும் அந்த இலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... அந்த கமெண்ட் ஹேமா சொன்னது இல்லையா?

      நீக்கு
  22. ஏகாந்தமாய் இருக்கும் காகம் தந்த கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  23. கண் முன் நிகழந்த விபத்து மனதை விட்டு அகல நாள் ஆகும். நல்லவேளை இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை, இறைவனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிருக்கோ உடைமைக்கோ சேதமில்லை என்பதால் பெரிய பாதிப்பு இல்லை கோமதி அக்கா.

      நீக்கு
  24. ஆனந்த விகடனில் வெளிவந்த 'தெருவிளக்கு' என்ற தொடர்கதையை எழுதியவர்
    ஸ்வர்ணலதா.

    கறுப்புப் பிண்ணனியில் வெள்ளை எழுத்துக்கள் ஒளிர்கிற மாதிரி அந்தக் காலத்திற்கு புது மாதிரியில் இந்தத் தொடரைப் பிரசுரித்திருந்தது விகடன்.

    ஸ்வர்ணலதா யார் என்று கேட்டால் எனக்குத் தெரியாது. வேறு யாரேனும் கூட ஸ்வர்ணலதா என்ற பெயரில் ஒளிந்திருக்கலாம். எழுத்தாளர்களின் நடையழகு அத்துப்படியானவர்களுக்கு இப்படிக் கண்டுபிடிப்பதெல்லாம் ஜூஜூபி வேலை.

    'மலையில் மறைந்த மனிதன்' தொடரின் இங்கு பிரசுரமாகியிருக்கும் பகுதியில் கூட சிகரெட் என்று வார்த்தை வருகிறது பாருங்கள். தமிழ்வாணன் சிகரெட்டை வெண்சுருட்டு என்று தான் எழுதுவார். ஏனோ இங்கு சிகரெட்டை சிகரெட்டாகவே எழுத்தில் காட்டியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்... டபிள்யூ ஆர் ஸ்வர்ணலதா என்று இன்ஷியலோடு இருக்கும்!! மணியன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கணேஷ்பாலாவைக் கேட்டால் சரியாகச் சொல்லுவார்.

      நீக்கு
    2. விட்டுத் தள்ளுங்கள்..

      kasu Sobhana -வே யாருன்னு நமக்குத் தெரியாத போது... :))

      ஹஹ்ஹாஹ்ஹா.. (இது யார் ஸ்டைலுன்னு சொல்லுங்க பார்ப்போம்..)

      நீக்கு
    3. நிச்சயம் உங்கள் ஸ்டைல் இல்லை.. இது டீஸர் நாயகர் ஸ்டைல்?

      நாளைய பதிவுக்கு எல்லோரும் இன்னொருத்தர் பாணியில் கமெண்ட் பண்ணலாமே.. கண்டுபிடிக்க முடிகிறதா பார்ப்போம்!

      நீக்கு
    4. டீஸர் நாயகர் இல்லை. அப்போ வேறே யார்?..

      நைஸா கா.சோ. விஷயத்திலிருந்து நழுவி விட்டீர்கள், பார்த்தீர்களா?..

      நீக்கு
    5. அப்போ நெல்லைதான்! கா சோபனா தூக்கத்தைக் கெடுக்கிறார் போலிருக்கே...!

      நீக்கு
    6. //டபிள்யூ ஆர் ஸ்வர்ணலதா என்று இன்ஷியலோடு இருக்கும்!! //  ஓ! எஸ்! ராண்டார்கை என்று முதலில் சொல்லி விட்டேன். பிறகு இல்லை டபுள்யூ என்ற இன்ஷியலில் தொடங்குமே..? என்ன பெயர் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். சிக்கவில்லை. நன்றி ஜி.வி. சார். 

      நீக்கு
    7. ஜீவி சார்... இது வை கோபு சாரின் ஹ்ஹ்ஹாஹ்ஹா. தானே

      நீக்கு
    8. நன்றி ஜீவீ சார்.
      டபிள்யு. ஆர். ஸ்வர்ணலதா. மை காட்!!
      மறந்த நினைவுகள்.
      அப்படியே அந்தப் பக்கம் கண் முன் நின்றது.

      நீக்கு
  25. சாபம் பொடிபடும்..
    சங்கடங்கள் இடிபடும்!..

    டுர்ர்ர்... ர்ர்ர்ர்... ர்ர்ர்ர்!..

    மின்னஞ்சலோ.. மின்னஞ்சல்!...

    பதிலளிநீக்கு
  26. கவிதையும், பாடலின் உல்டாவும் அருமை...

    தமிழ்வாணன் கதைகள் படித்த ஞாபகம் வருகிறது...

    டீஸர் 2-யை துப்பறிந்து படித்தேன்...!
    (Ctrl key மற்றும் + key இருமுறை சொடுக்கி விட்டு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... ரொம்பப் பொடி எழுத்து இருக்கா DD? ஆபீஸ் கம்ப்யூட்டரில் வைத்துச் சேர்த்தது! அவசரம்!

      நீக்கு
    2. அலுவலகத்தில் இதுவும் நடக்கிறதா....?

      நீக்கு
    3. // அலுவலகத்தில் இதுவும் நடக்கிறதா....? //

      சில சமயங்களில்!

      நீக்கு
    4. 😎👌😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

      நீக்கு
  27. தமிழ்வாணன் கதைகள் நிறைய படித்து இருக்கிறேன்.
    நினைவுக்கு வரவில்லை. மூலிகையை கொடுத்து கிராமத்து மக்களை வசியம் செய்து வேலை வாங்குவார்கள் ஒரு கதையில் அவர்கள் சாவி கொடுத்த பொம்மை போல் நடமாடுவார்கள் கண்களில் எந்த உணர்ச்சியும் இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்த நினைவாகவும் இருக்கு.. விவரமும் தெரியவில்லை!

      நீக்கு
  28. இன்று ஏன் கீசா மேடம் வரவில்லை? எந்த விசேஷமான நாளும் இல்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே? ஏன் இன்னும் காணோம்?

      நீக்கு
    2. விசேஷம் எல்லாம் இல்லை. இன்னிக்குச் சமையலறையின் காபினெட் எல்லாம் சுத்தம் செய்தேன். காலை ஆறரைக்கு ஆரம்பிச்சது முடிய எட்டு மணிக்கு மேல் ஆயிற்று. அதன் பின் வீடு சுத்தம் செய்து, குளியல், சமையல், சாப்பாடு எனப் பனிரண்டு மணி வரை வேலை. பனிரண்டு மணிக்கு உட்கார்ந்தே தூங்கிவிட்டேன் கொஞ்சம். அப்புறமா ரங்க்ஸ்தான் எழுப்பினார் சாப்பிடணும்னு! சாப்பிட்டு இப்போ உட்கார்ந்திருக்கேன். ஏனோ மறுபடி போய்ப் படுக்கச் சொல்கிறது உடம்பு! பார்ப்போம்! எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறேன் என!

      நீக்கு
    3. // ஏனோ மறுபடி போய்ப் படுக்கச் சொல்கிறது உடம்பு! //

      வல்லிம்மா இரண்டு நாட்களுக்குமுன் எனக்குச் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்கிறேன் : "உடம்பு சொல்றதைக் கேளுங்க.. போய்ப் படுங்க"

      நீக்கு
  29. ஸ்ரீராமின் இந்தக் கவிதையும் அதை ஒட்டிய உரையாடல்களும் புதிதாகவே இருக்கின்றன. நான் கலந்து கொண்டதாய்த் தெரியலை. ஆனால் 2013 ஆம் ஆண்டு மேயில் இங்கே தான் இருந்தோம். அக்டோபரில் தான் அயோத்யா பயணம். என்னைப் பொறுத்தவரை இலைகளுக்குத் தனி மணம் உண்டு என்றே சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்திருக்க மாட்டீர்கள் கீதா அக்கா..

      நீக்கு
    2. கண்டிப்பா.... பின்ன என்ன... ஐயங்கார் புளியோதரை சாப்பிட்ட இலையும், பெருமாள் கோவில் த்த்யோன்னம் சாப்பிட்ட இலையும் அபுபக்கர் பிரியாணி சாப்பிட்ட இலையும் ஒரே மாதிரியா மணக்கும்? தனித் தனி மணம்தான்.

      நீக்கு
  30. மாதவனின் பாடல் இந்தக் காலத்துக்கு ஏற்றதாய் உள்ளது. ஆனால் முகநூலில் பார்த்த நினைவு இல்லை. நல்லவேளையாய் அந்த விபத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

    தமிழ்வாணன் பிடித்த எழுத்தாளர். அண்ணா பூணூலுக்குத் திருமலை போயிட்டுத் திரும்பும்போது தான் முதல் முதலாகச் சென்னைக்கு அப்பா எங்களை அழைத்து வந்தார். அப்போத் திநகர் வழியாப் பேருந்தில் போகும்போது தணிகாசலம் தெருவில் மணிமேகலைப் பிரசுரத்தைப் பார்த்துவிட்டுக் கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணாத குறை. அதன் பின்னரும் 67,68 வரையும் ஈர்ப்பு இருந்தது. பின்னரே படிப்படியாகக் குறைந்தது. மணிமொழி நீ என்னை மறந்துவிடு! என்று அவள் அப்பா அவளிடம் முதல் அத்தியாயத்திலேயே சொல்லுவார்! அந்த அத்தியாயத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த அத்தியாயத்திலோ கொலை செய்யப்பட்டு இறந்தும் போய்விடுவார். முத்தழகு என்பது கதாநாயகன் பெயர். அவன் வீட்டுக்குத் தான் அவன் அண்ணி வேடத்தில் மணிமொழி அவன் அண்ணன் குழந்தையுடன் வருவாள். முத்தழகின் அண்ணியின் பெயரும் மணிமொழி தான். பின்னால் உண்மை வெளிப்பட்டதும் மணிமொழி திருமணம் ஆகாதவள் என்று புரிந்து முத்தழகுக்கு ஓர் நிம்மதி வரும். இருவரும் இல்வாழ்க்கையில் ஒன்று சேர்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவனின் பாடல்?!!! நான் உல்ட்டா பண்ணி எழுதியதை மாதவன் பாடி அனுப்பி இருந்தார்.

      தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். என் அப்பா அப்போது தமிழ்வாணனைக் கூப்பிட்டு மீட்டிங் போட்டிருக்கிறார்.

      நீக்கு
    2. ஆஹா. கீதா மா. நினைவுக் களஞ்சியம் நீங்கள்.
      இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
      வெள்ளை சேலையில் மணிமொழி!!!
      ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி. நிம்மதி.

      நீக்கு
  31. அப்பாதுரையின் "டீசர்" ஏதோ சைன்ஸ் ஃபிக்ஷன் மாதிரித் தெரிகிறது. எப்போ ஆரம்பம்? விளம்பரங்கள் ஆவலைத் தூண்டுகின்றனவே!
    அநேகமாய்த் தமிழ்வாணன் எழுதிய அத்தனை நாவல்களும் படித்திருக்கேன். கல்யாணம் ஆகிப் போன பின்னரும் கொஞ்ச காலம் கல்கண்டு வாங்கி இருக்கோம். தமிழ்வாணன் இறந்ததும் தான் நிறுத்தினோம். லேனாவின் எழுத்து அவ்வளவாய்ப் பிடிக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு வருடங்கள் வாழ்வதெப்படி என்று புத்தகம் போட்ட அவர் ஐம்பது ப்ளஸ்ஸில் மறைந்து போனார். தகவல் களஞ்சியமாக இருக்கும் கல்கண்டு அப்போது. குமுதம், கல்கண்டு இரண்டும் அப்பா தவறாமல் வாங்குவார்.

      நீக்கு
    2. அதுக்குக் காரணம் ஐந்து வயசுலேயே ஐம்பது வயசு பெரியவர் மாதிரி படிக்கிறவங்களுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்ததுதான். இந்த வாரிசுகள் தொல்லை தாங்கலைடா சாமி என்றாகிவிடுகிறது கீசா மேடம்.

      நீக்கு
    3. ஶ்ரீராம்.... எனக்குத் தெரிந்து எந்த கைகாட்டியும் ஊர் போய்ச் சேர்ந்ததில்லை. வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி, பெண்களை மயக்குவது எப்படி, 30 நாளில் அஸ்ஸாமி மொழி கற்பது..... என்று ஏகப்பட்ட புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த ஆசிரியர்கள் எவரும் அதில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். ஹா ஹா ஹா

      நீக்கு
    4. 15 காசு என்கிற விலையில் இருந்து 35 காசுகள் வரை கல்கண்டு வாங்கியிருக்கிறேன். நிறைய துணுக்கு, பெட்டிச்செய்திகள். சுவாரஸ்யமாக இருக்கும். கூடவே அவருடைய துப்பறியும் ‘சங்கர்லால்’! தமிழ்வாணனின் கருப்புக்கண்ணாடி, தொப்பி லோகோ, அவரது கதைகள், கட்டுரைகளில் போடப்பட்டிருக்கும். இளம்வயதில் பிடித்திருந்தது. எழுத்தாளர்கள் பலர் தொளதொள சட்டை, வேட்டி, ஜோல்னாப்பையுடன்தலைநரைத்து அலைந்தபோது, தமிழ்வாணன் டிப்-டாப் !
      அவரை திருச்சியில் ஒரு கல்யாணத்தில் பார்த்திருக்கிறேன். அங்கேயும் புத்திமதிப் பேச்சு. ஆனால் ஜனங்கள் ஆர்வத்துடன் கேட்டனர். அவர் ஒரு celebrity அப்போது !

      நீக்கு
    5. நன்றாகச் சொன்னீர்கள் நெல்லை.  கைகாட்டி ஊர் போய்ச்சேராது!

      வாங்க ஏகாந்தன் ஸார்...   எனக்கும் அதே விலைகளில் கல்கண்டு வாங்கிய நினைவு இருக்கிறது.  ஒருநாள் முன்பின்னாக குமுதமும் கற்கண்டும் வெளியாகும்!

      நீக்கு
  32. ஆஆஆ இப்போ வரச் சொல்லுங்கோ... இப்ப வரச் சொல்லுங்கோ.... இப்போ வரச் சொல்லுங்கோ கேஜிஜி அங்கிளை:).... நீங்க தனிய நிண்டபோது வந்து உருட்டி எடுத்திருக்கிறார்ர் ஹா ஹா ஹா பறவாயில்லை சமாளிச்சிட்டீங்கள்:)...

    இலைகள் மரத்தில் இருக்கும்வரை
    அதன் சத்தை உறிஞ்சுகின்றன
    மரத்தை விட்டுப் பிரியும் போதும்
    வாசத்தை உறிஞ்சிக்கொண்டே பிரிகின்றன!!!!

    ஆஆஆஆஆ கவித கவித நேக்கும் வந்திட்டுதூஊஊ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.. ஹா... வந்துட்டார். ஆனா உங்களைக் காணோமே...!

      சூப்பரா எழுதி இருக்கீங்க நீங்களும்.

      நீக்கு
    2. ///கௌதமன் 9 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:43
      வந்துட்டேன்.///

      ஆஆஆஆஆஆஆ கொஞ்சம் அவசரப்பட்டிட்டமோ:)) ஆளம் அறியாமல் காலை விட்டிட்டனோ:)).. ஹையோ ஆண்டவா எனக்கு எப்பவும் கொயப்பமாகவே இருக்கு:)).. கேஜிஜி எண்டதும்.. நான் ஸ்ரீராமின் மற்ற அங்கிள் ஆக்கும் என நினைச்செல்லோ சவுண்டு விட்டிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா ஹையோ அது கெள அண்ணனா?:))... இவர் கேஜி என நினைச்சேன் ஹையோ இனிமேலாவது சோட் அண்ட் சுவீட் ஐ விட்டுப்போட்டு முழுப்பெயர் சொல்லவும் பீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).. என் போன்ற ஞானிகளுக்கு அது ஜெல்ப்பாக இருக்கும்...:))

      ஹா ஹா ஹா சூப்பரோ? ஸ்ரீராம் மெதுவாப் பேசுங்கோ கல்லெறி வரப்போகுது:))

      நீக்கு
  33. ஒரு மரத்துக்கு வாசனையைக் கொடுப்பது ... அதாவது அடையாளத்தை... ஐடண்டிட்டியைக் கொடுப்பது இலைகள் தானே:)... இலையை வைத்துத்தான் மரம் என்ன என்பதைக் கண்டு பிடிக்கிறோம்.... முகத்தைப் பார்த்தே ஆளைக் கண்டு பிடிப்பதைப்போல:)... சில மரங்கள் விதி விலக்கு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசனை என்றால் அடையாளமா! தமிழ்ல (A + B ) whole squired ஆ !!

      நீக்கு
    2. பூவ, காய்... இலையையும் பார்த்துத்தானே என்ன மரம் என்பதைக் கண்டு பிடிக்கிறோம்.. மரத்தை மட்டும் பார்த்தால் எப்பூடிக் கண்டு பிடிப்பதாம்:))..

      நீக்கு
  34. பாடலை ஒலி வடிவில் போட்டிருந்தால் ஓகே... இது என்ன இது ச்ச்சும்மா எங்களைப் பேய்க்காட்டுறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)

    தமிழ்வாணன் கதைகள் படிக்க விருப்பம்... ஏதாவது படித்திருக்கிறேனோ என நினைவில்லை

    4 நாட்களுக்கு முன்பு கிண்டிலைத் திறந்து ஒரே மூச்சில் கண்ணதாசன் அங்கிளின் எண்ணங்கள் ஆயிரம் படிச்சு முடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! உங்கள் சாதனை பாராட்டுக்குரியது.

      நீக்கு
    2. ஒரிஜினல் பாடலைப் போட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? நீங்கள் கேட்டதில்லையோ? கிண்டிலில் நீங்கள் இரண்டு முக்கியமான புத்தகங்களைப் படிக்கவில்லையே...!

      நீக்கு
    3. //ஸ்ரீராம்.9 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:18
      ஒரிஜினல் பாடலைப் போட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? நீங்கள் கேட்டதில்லையோ?//

      அவர் பாடி அனுப்பினார் எனச் சொன்னீங்களே.. அந்த ஒலி வடிவத்தை சொன்னேன்...

      ///கிண்டிலில் நீங்கள் இரண்டு முக்கியமான புத்தகங்களைப் படிக்கவில்லையே...!///
      ஆஆஆஆஆஆஆஆஆ இந்த ரணகளத்திலயும் வைச்சிட்டார் ஆப்பூஊஊஊஊ ஹா ஹா ஹா ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாவே இருக்கிறாரே ஹா ஹா ஹா... அது என்னமோ காசிக்குப் போன சன்யாசி அம்பேரிக்காலயும் இந்தியாவிலயும் மட்டும்தானே கிடைக்கும் என கெள அண்ணன் சொன்னார்.. அதனால தேடவில்லையாக்கும் நான் கோபத்தில.. அதெப்படி யூக்கே யில கிடைக்காமல் அம்பேரிக்காவில கிடைக்கலாம்.. அல்லது அவர் எப்படி அப்படிச் சொல்லலாம்ம்.. நான் போராட்டம் நடத்த நினைச்சு நேரமில்லாமல் ஓடிட்டேன்ன்.. :)

      நீக்கு
    4. KGG's book : UK LINK : https://www.amazon.co.uk/dp/B08C2ZGBYJ

      நீக்கு
    5. Sriram's book : UK LINK : UK link : https://www.amazon.co.uk/dp/B08BYVY5C3

      நீக்கு
    6. //அவர் பாடி அனுப்பினார் எனச் சொன்னீங்களே.. அந்த ஒலி வடிவத்தை சொன்னேன்...//

      ஓ...    நான் கூட நினைத்தேன் அதிரா...    முன்னரே அவரிடம் அனுமதி வாங்கிச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன்.   விட்டுப்போய்விட்டது.

      நீக்கு
  35. மணி ஓசைதான் வந்து கொண்டிருக்குது... ஆளை இன்னும் காணம்:)..

    பதிலளிநீக்கு
  36. தமிழ் வாணன் கதைகள்நிறைய படித்திருக்கிறேன் ஆனால்நினைவுக்கு வருவதில்லை மகளிர் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசமா என்பது போல் இருக்கிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் தமிழ்வாணனைப் படிக்காதவர்கள் ரொம்பப் கம்மி ஜி எம் பி ஸார்!

      நீக்கு
  37. ராண்டார் கை கொலை வழக்குகள் பற்றி எழுதி இருக்கிறார் பாகவதர் எனெஸ் கே வழக்குகள் பற்றி இவர் எழுதி இருந்ததை படித்தநினைவு

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    ஒற்றைக்காகம் பாடும் பாடல் ரசித்தேன். அதற்கு தகுந்தாற் போல போட்ட காக்கை படமும் அவ்வளவு அழகாக உள்ளது. "எனக்குமா?" என்றும், இதில் இவர்களுக்கு (மனிதர்கள்) அடுத்து "நான்தான் மாட்டிக்கிட்டேனா?" எனவும், அது உணர்ச்சி வசப்பட்டு ஆள் இல்லாத் தீவில் தனியாக சிந்திப்பது போன்று தோற்றமளிக்கிறது. பாவம்..! ஹா.ஹா.ஹா.

    தமிழ்வாணன் கதைகள் முன்பெல்லாம் நிறைய படித்திருக்கிறேன். நன்றாக இருக்கும். ஆனால் இன்ன கதைகள் என்று அவ்வளவாக நினைவிலில்லை. இப்போது படித்தால் கதைகள் நினைவுக்கு வரலாம்.

    /ஜப்பானில் மக்கள் தொடுவது எல்லாம் மஞ்சள் நிறமாக, அங்கு ஓய்வெடுக்க வந்த சங்கர்லால் துப்பறிவார். இப்போ இருந்திருந்தால் வூஹான் மர்மத்தை துப்பறிந்து ' பூ' என்று ஊதி இருப்பார்!/

    ஹா.ஹா.ஹா. அருமையான விமர்சனம். நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த கதைகளின் பெயர்களை பார்க்கும் போது அத்தனையுமே படித்த ஞாபகம் வருகிறது.இன்றைய கருத்துரைகளில் தமிழ்வாணன் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் காலத்திற்குப் பின் அவர் மகன் லேனா தமிழ்வாணன் அவரிடத்தை நிரப்பினார் என்றே நினைக்கறேன்.

    விரைவில் எ. பியில் வெளியாகவிருக்கும் திரு. அப்பாதுரையின் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  39. தமிழ்வாணனுக்கும் எஸ் ஏ பிக்கும் நெருங்கிய நட்புண்டு என்று படிதிருக்கிறேன்.

    “இது சங்கர்லால் ஜப்பான் போய் வந்த போது மூர் மார்கெட்டில் வாங்கிக் கொடுத்த பேனா”
    - வாணனின் லாவக வரியொன்று

    பதிலளிநீக்கு
  40. விடா கொடா ரசித்து சிரித்தேன்

    பதிலளிநீக்கு
  41. //ஹா ஹா ஹா.. //

    சில நேரங்களில் ஹா மூன்று எண்ணிக்கை தாண்டவும் செய்யும், இல்லையா?.. ஹா.. ஹா... க்கு இடையில் ஹ் வரக்கூடாது, அந்த ஒரே கண்டிஷன் தான், இல்லையா?..

    கரெக்ட். நான் தான் தப்பாய் சொல்லி விட்டேன், நெல்லை.

    பதிலளிநீக்கு
  42. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!