1) "பேக்கரி வேலையுடன், கார் மாற்றியமைக்கும் வேலையையும் செய்தேன். 2001-ல், டில்லியில் நடந்த தேசிய அளவிலான, வாகனத் தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்க, கேரளாவில் இருந்து டில்லி வரை, என் காரை நானே ஓட்டிச் சென்றேன்; எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இப்போது, 'டாடா நானோ' முதல், பி.எம்.டபிள்யூ., வரை எல்லா கார்களையும் மாற்றுத்திறனாளிகளுக்காக, 'ரீ-டிசைன்' செய்து கொடுக்கிறேன்; "
விபத்தில் இடுப்புக்கு கீழே இயங்காத நிலையிலும், கடுமையாக உழைத்து, தொழிலதிபராக உயர்ந்துள்ளது பற்றி முஸ்தபா.
2) பல ஆண்டுகளாக ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம், புற்று நோயாளி, விபத்தில் சிக்கியவர்கள், இயலாதவர்களுக்கு உதவி என பல 'மல்டி ஹெல்ப்' மனம் கொண்டவராக திகழ்கிறார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் துரை பிரிதிவிராஜ்.
3) கேரள முதல்வர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மற்றும் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்...
4) நாடு முழுதும் உள்ள சமூக பின்தங்கியோரின் நிலைபற்றிய கதைகளைக் கேட்க நேர்ந்தால், மனது வலிக்கிறது. இருப்பினும் அவ்வப்போது இருண்ட வானில் ஒளிக்கீற்றுபோல் ஒன்றிரண்டு செய்திகள்..
3) கேரள முதல்வர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மற்றும் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்...
4) நாடு முழுதும் உள்ள சமூக பின்தங்கியோரின் நிலைபற்றிய கதைகளைக் கேட்க நேர்ந்தால், மனது வலிக்கிறது. இருப்பினும் அவ்வப்போது இருண்ட வானில் ஒளிக்கீற்றுபோல் ஒன்றிரண்டு செய்திகள்..
தன் மற்றும் தன் இனத்தின் பரிதாப நிலையை மனதில் அழுத்திக்கொண்டு, துன்பங்களை உத்வேகத்துடன் கடந்து, தேர்வு வரை வந்து, அதில் சாதித்தும் விட்டார் ‘குடுகுடுப்பை’ சமூக மாணவி ஒருவர். அவரைப்போன்றோர் படிக்க நிகழ்வதே அபூர்வம். படிப்பைத் தொடர்ந்தது அபூர்வத்திலும் அபூர்வம். அதில் சாதித்தும் இருப்பது....
கடவுளே, சரி.. நீ இருக்கிறாய் ! (நன்றி ஏகாந்தன் ஸார்)
======================================================================================================
ஆண்டாளின்
அருள்
ரமா ஸ்ரீநிவாசன்
===================
விளையாட்டுப்
போல நான் “எங்கள் பிளாக்”கில் அறிமுகமாகி எழுதத்
தொடங்கி
ஒரு வருடத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கின்றேன்.
நாட்கள்
ஓடவில்லை,
பறக்கின்றன.
நான்
போன வருடம் நவம்பரிலோ டிசம்பரிலோ
(சரியாக நினைவில்லை)
நம் பிளாக்கில் திருப்பாவை என்னும் காவியத்தை வடித்த ஆண்டாள்
நாச்சியாரைப் பற்றி ஓர் கட்டுரை
வெளியிட்டிருந்தேன்.
நேற்று
ஆண்டாள் நாச்சியாரின் திருவாடிப் பூரமாகும், அதற்கேற்றாற்போல்
இன்று என் வாழ்க்கையில் நாச்சியாரின்
சம்மந்தமுள்ள ஓர் சுவையான
அனுபவத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து
கொள்வதற்காக இக்கட்டுரையை
வடிக்கின்றேன்.
பிறப்பில்
நான் ஓர் சைவக் குலத்தைச்
சேர்ந்தவள். என் பெற்றோர்
அதீத
சிவ பக்தர்கள். நானும் அவ்வகையே.
நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த நான் என்
பெற்றோருக்கு
ஒரே செல்லப் பெண். மற்ற
இருவரும் என்
அண்ணன்மார்கள். ஆகவே, செல்லமாகவே பெற்றோருடனும்
அண்ணன்களுடனும்
வளர்ந்தவள்.
என்
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு
எனக்கு மத்திய அரசின் கலால்
துறையின் தேர்வில் வெற்றி பெற்று சென்னையிலேயே நந்தனத்திலுள்ள
ஓர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.
ஆங்கிலப்
பள்ளியில் பயின்று சரளமாக ஆங்கிலம்
பேசும் ஓர் சிறு வயது
பெண்ணாய் போய் அங்கு வேலைக்குச்
சேர்ந்தேன். கல கலவென பேசி
சிரித்து பழகும் நான் யாவருடனும்
சரி சமமாக கலந்துரையாடி இருக்கும்
இடத்தையே ஆரவாரப் படுத்தும் இயல்புடையவள்.
திரு.
ஸ்ரீனிவாசன் அதே அலுவலகத்தில் எனக்கும்
முன் சேர்ந்து நல்ல அனுபவம்
வாய்ந்தவர். அவர் ஓர் வைணவ
குடும்பத்தை சேர்ந்தவர். கல்லூரி
முடிந்தவுடனே வேலை கிடைத்து வந்து
சேர்ந்து விட்டதால், என்
உலக அனுபவம் பூஜியத்தில் நின்றது.
அலுவலகத்திற்கு வேண்டிய நெளிவு
சுளிவுகளையும் சாமர்த்தியமாக வேலை செய்வதையும் பொறுமையுடன்
எனக்கு கற்று தந்தவரும் அவரே.
பழகப்
பழக் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர்
ஈர்ப்பு ஏற்பட்டது.
எங்களுக்கு
நடுவில் பாலமாக இருந்தது
இருவருக்கும் பிடித்த ஆங்கில
மொழிதான். எண்ணிலடங்கா ஆங்கில எழுத்தாளர்களை பற்றியும் கவிஞர்களைப்
பற்றியும் மணிக்கணக்காக அமர்ந்து
உரையாடுவோம்.
இருவருமே
நிறைய ஆங்கிலத்தில் எழுதுவோம்.
இவ்வாறாக
நாட்கள் ஓடிக் கொண்டிருந்த போது,
திரு. ஸ்ரீனிவாசனின்
தாய்
தந்தையருக்கு எங்களின் நட்பு பற்றி தெரிய
வந்தது. அவரது தந்தையார்
வாழ்க்கை முடிவை தன் பிள்ளையிடமே
விட்டு விட்டார்.
எங்கள்
வீட்டிலும் ஒரு ஆட்சேபனையும் இல்லை.
ஆனால்,
திரு. ஸ்ரீனிவாசனின் அன்னை ஓர் பழமைவாதம்
(orthodox) மிகுந்த
வைணவ குடும்பத்திலிருந்து வந்தவர். எனவே, எங்களுக்கு முதல் முட்டுக்
கட்டை அவர் ரூபத்தில் வந்தது.
எங்கள் திருமணத்திற்கு ஆணித்தரமாக
அழுத்தமாக மறுத்து விட்டார். அதுவுமில்லாமல்
திரு ஸ்ரீனிவாசன்
இல்லத்தில் என்றுமே மதுரையாட்சிதான். எனவே
அவரது தந்தை
என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினார். ஆனாலும் அவருக்கு என்னை
மிகவும் பிடித்திருந்தது என் அதிர்ஷ்டம்.
நாங்கள்
இருவருமே பெற்றோரை மீறி ஒரு முடிவு
எடுக்கக் கூடாது என்பதில்
உறுதியாக இருந்தோம். அவருடைய அன்னை சம்மதிக்கும்
வரை காத்திருக்க
முடிவு செய்தோம். மிகவும் குழப்பத்திலும் பயத்திலும்
உழன்று கொண்டிருந்தோம்.
நுங்கம்பாக்கத்தில்
உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் வருடா
வருடம் திருவாடிப்
பூரத்தன்று “ஆண்டாள் திருக்கல்யாணம்” வெகு
விமரிசையாக நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் நானும் ஸ்ரீனிவாசனும் அதைக்
காண ஆஜாராகி
விடுவோம்.
அப்படி
பார்த்துக் கொண்டிருந்த ஒரு வருடம் என்
அருகில் ஓர் வயது முதிர்ந்த
அம்மையார் அமர்ந்திருந்தார்;. அவரை நான் போகும்
போதும்
வரும்
போதும் வீதிகளில் பார்த்திருக்கின்றேனேயன்றி அவர் யார், எங்கிருக்கின்றார்
என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
ஆண்டாளில்
மாங்கல்ய தாரணத்தின் போது, திடீரென்று திரும்பி என்னைப்
பார்த்த அவர் “நன்னா ஆண்டாளுண்ட
வேண்டிக்கோம்மா. தினம்
உன்னுடைய
நாச்சியார் திருமொழியான வாரணம் ஆயிரம் படிக்கறேன்.
எம்
மனசுக்கு
பிடிச்சவரையே நான் கல்யாணம் பண்ணிக்கறத்துக்கு
நீதான்
அணுக்கிரகம்
பண்ணனும்னு வேண்டிக்கோம்மா. நிச்சயம் ஆண்டாள் நடத்தி
வைப்பாள்”
என்று அழுத்தமாகக் கூறினார். நான் பிரமித்துப் போய்
நின்றேன்.
அதற்குள்
விழாவும் முடிவுற்றது. யாவரும் கலைந்து போயினர்.
நானும்
ஸ்ரீனிவாசனும்
பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும்போது
நடந்ததை
அவரிடம்
நான் கூறினேன். குழம்பியிருந்த எங்களுக்கு தாயாரே ஓர்
உபாயம்
கூறியது போல் இருந்தது.
அன்று
முதல் தினம் “வாரணம் ஆயிரம்”
ஒரு நாள் கூடத் தவறாமல் பக்தியுடன்
படித்தேன். ஆண்டாள் திருக்கல்யாணமும் ஒவ்வொரு
வருடமும் தரிசித்து
வேண்டிக் கொண்டேன்.
நண்பர்களே,
காத்திருந்தால் கல்லும் கரையும் என்பது
பழமொழியல்ல. நடை
மொழி. நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல. ஏழு வருடங்கள்
காத்திருந்தோம். தினப் பொழுதும் வாரணம்
ஆயிரத்துடனே சென்றது.
தன்
பிள்ளை வேறு எந்த பெண்ணையும்
திருமணம் செய்து கொள்ள மாட்டான்
என்று ஸ்ரீனிவாசனின் தாய் முற்றிலும் உணர்ந்து
கொண்டு வேறு வழியில்லாமல்
அரை மனதுடன் எங்கள் திருமணத்திற்கு
1991ஆம் வருட இறுதியில்
சம்மதித்தார்.
1992ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம்
நாள் எங்கள் திருமணம் சென்னையில்
மிகச் சிறப்பாக நடந்தேறியது.
தேடிப்
பிடித்து எந்த அம்மையார் என்னை
ஆண்டாளிடம் வேண்டிக்கொள்ள
சொன்னார்களோ, அவர்களை இருவரும் நேரில்
சென்று திருமண பத்திரிக்கை
வைத்து எங்கள் திருமணத்திற்கு அழைத்தோம்
என்று கூறவும் வேண்டுமோ?
வைணவ
மத வழக்கப் படி எனக்கு
ஆண்டாள் கொண்டை போட்டு, வைணவத்
திலகமிட்டு மடிசார் உடுத்தி திரு
ஸ்ரீனிவாசன் அவர்கள் என் கழுத்தில்
திருமாங்கல்யம் அணிவித்தார். அந்த நிமிடம் முதல்
நான் திருமதி
ரமா ஸ்ரீனிவாசன் ஆனேன்.
நண்பர்களே,
ஆண்டாளின் சக்தியும் தன்னை அண்டியவரை அணைத்து
அரவணைக்கும்
பண்பும் அதை அனுபவித்தவருக்கு மட்டுமே
புரியும். அன்று
முதல்
இன்று வரை நான் தினமுமே
“வாரணம் ஆயிரம்” சொல்லாமல் ஒரு
நாள்
சென்றதில்லை.
அதே போல் ஒவ்வொரு
மார்கழி மாதமும் விடியலில் எழுந்து
நீராடி திருப்பாவை வாசித்த பின் பெருமாள்
கோவிலுக்கு சென்று பெருமாள்,
தாயார் மற்றும் ஆண்டாளைச் சேவித்த
பின்னர்தான் நாளையே தொடங்குவேன்.
என் இரு பெண் குழந்தைகளுக்கும்
இந்த “வாரணம் ஆயிரம்”
ஸ்லோகத்தைக் கற்று கொடுத்துள்ளேன். அவர்களுடைய நலத்தையும்
நன்மையையும் அவள் பார்த்துக் கொள்வாள்.
ஆண்டாள்
திருவடிகளே சரணம்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
பதிலளிநீக்குஅன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..
நலம் வாழ்க...
நலமே விளைக
நீக்குஇடுகைக்குச் சம்பந்தமான பொருளில் அமைந்த குறள்,
நீக்குதெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வழுத்தக் கூலி தரும்
இல்லையா?
'மெய்வழுத்த’?
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...
பதிலளிநீக்குஅன்னை என்னையும் ஆண்டு கொண்ட விதம் ஒன்று உண்டு...
அதை நினைக்க நினைக்க பிரமிப்பு.. பிரமிப்பு..
ஒன்றல்ல... ஒன்றல்ல..
பதிலளிநீக்குஇரண்டு முறை அவள் அருள்மழை பொழிந்திருக்கிறாள்...
ஆண்டாள் அருள் உங்களுக்கும் பொழிந்திருக்கிறதா...
நீக்குஅவள் தாய். ஜகன்மாதா. அவள் அருள் அனைவருக்கும் என்றும் உண்டு.
நீக்குதஞ்சையம்பதியில்
நீக்குபல ஆண்டுகளாக மார்கழிப் பதிவுகள்
வருவதற்குக் காரணம் அவளது நல்லருளே..
அனைவருக்கும் காலை வணக்கம். துரை சார், வியாழன் பதிப்பில் உங்கள் அனுபவங்களை எழுதலாமே? ப்லீஸ்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள். தொடரும் கடுமையான நாட்கள்/மக்கள் பிரச்னைகள் குறையப் பிரார்த்திப்போம். கந்தன் அருள் முன்னின்று கவசமாகக் காத்து நிற்கவும் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். கதிர்வேலன் நம்மைக் காக்கட்டும், பிரார்த்திப்போம்.
நீக்குநல்ல செய்திகளில் ஒன்றும், இரண்டும் தெரிந்தவை. மற்றவை புதியது. பகிர்வுக்கு நன்றி. திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் அனுபவங்களைப் படித்ததும் கண்ணில் நீர் வந்து விட்டது. மனோதிடத்துடன் காத்திருந்திருக்கிறார். வீட்டில் பெற்றோரும் சம்மதித்துக் காத்திருந்தது தான் அதை விட ஆச்சரியம். பெரும்பாலான பெற்றோர்கள் ஒரே பெண் எத்தனை வருஷம் காத்திருப்பாள் என நினைத்து வேறு இடத்தில் பார்க்கலாம் என நினைப்பது உண்டு. நல்லபடியாகத் திருமணம் முடிந்து இரண்டு பெண்களையும் நன்றாக வளர்த்து அருமையாகப் படிக்க வைப்பதைப் பார்த்துவிட்டு அவர் மாமியார் இப்போது மனம் மாறி இருப்பார். பிரார்த்தனைகள், வாழ்த்துகள். ஆசிகள்.
பதிலளிநீக்குநன்றி. நேற்று யதேச்சையாக அவருக்கு நான் வாட்ஸாப்பிய படங்களும் இது சம்பந்தமாகத்தான்... அப்புறம் பார்த்தல் இந்தக் கட்டுரையை அனுப்புகிறார்...
நீக்குOh!!!!!!!!!!! OK.
நீக்குஸ்ரீராம், மீண்டும் சொல்கிறேன். Great minds think alike.
நீக்குஆண்டாள் அம்மாவிடம் கேட்டால் கேட்டதைக் கொடுக்காமல் இருந்தது இல்லை. அவளின் அருள் கிடைத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. சமீபத்தில் கூட மாட்டுப்பெண்ணும், குழந்தையும் நல்லபடியாக ஊர் திரும்ப அவளையும் வேண்டிக் கொண்டேன்.
பதிலளிநீக்குவரம் கொடுக்கும் அம்மா...
நீக்குYes. Sure.
நீக்குமாமரத்திடம் என்னதான் வேண்டிக்கொண்டு அழுது புரண்டாலும், அந்த சீசன் வந்தபிறகுதான் பலன் தருவது போல, தெய்வத்திடம் என்னதான் வேண்டிக்கொண்டாலும் உரிய காலத்தில்தான் பலன் கிடைக்கும். காலம் கைவிடும்போது தெய்வத்தால் கொடுக்க முடியாது என்பதும் நம் நினைவில் இருத்த வேண்டும்.
நீக்குபலர் இடுகையைப் படிக்கும்போது, ஏன் ஏழு வருடங்கள் ஆனது என்று நினைப்பார்கள். பனி விலகினால்தான் பாதை தெரியும். பனியை விலகச் சொல்லும்படி மட்டும்தான் வேண்டிக்கொள்ள இயலும்.
சரியாகச் சொன்னீர்கள் நெல்லை... இந்த ஊரடந்கு உங்களை தத்துவவாதியாக்கி இருக்கிறது!
நீக்குநெல்லை, தீர்க்க தரிஸி நீங்கள். ஆயின் இறைவன் என்றுமே கை விடுவதில்லை.
நீக்குநெல்லை சார் என்று படிக்கவும்.
நீக்கு//த்த்துவ்வாதி/- இதைப்பற்றி சமயம் வரும்போது நிச்சயம் எழுதுவேன். “நேரம்” என் வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. To come in terms with விதி took more than two years. Unimaginable loss, agony....
நீக்குநெல்லை அப்படியே டிட்டோ செய்கிறேன் உங்கள் கருத்தை. நான் அடிக்கடி சொல்லும் கருத்து. இங்கும் கூட கருத்தில் சொல்லும் போது இதே கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
நீக்கு//தெய்வத்திடம் என்னதான் வேண்டிக்கொண்டாலும் உரிய காலத்தில்தான் பலன் கிடைக்கும். காலம் கைவிடும்போது தெய்வத்தால் கொடுக்க முடியாது என்பதும்//
//பனியை விலகச் சொல்லும்படி மட்டும்தான் வேண்டிக்கொள்ள இயலும்.// யெஸ்ஸு யெஸ்ஸு...
நம் நம்பிக்கையை விடக் கூடாது. நம்பிக்கை போனால் மனம் தளர்ந்து அதுவும் நல்லதல்ல. என்வே அடிப்படையில் வேண்டியது அழுத்தமான ஆழமான நல்ல நம்பிக்கை.
கீதா
நம்பிக்கை பற்றி சொல்லியதும் உடன் நினைவுக்கு வருவது ரா சு நல்லபெருமாள் எழுதிய நம்பிக்கைகள் நாவல். அழகான நாவல். அமுதசுரபியோ, கலைமகளோ நினைவில்லை கலைமகள் என்றுதான் நினைக்கிறேன் அதில் பரிசு பெற்ற நாவல். என் அப்பாவின் அம்மா என் பாட்டி நிறைய வாசிப்பார். அவர் பைன்ட் செய்து வைத்திருந்தது. அருமையான கதை அது.
நீக்குகீதா
இப்பொழுது தான் அமரர் ர.சு. நல்லபெருமாள் பற்றி என் பதிவில் எழுதி விட்டு வந்தால், இங்கே நீங்களுமா?..
நீக்குஇதை ஒரு தற்செயல் நிகழ்வாக நினைக்க முடியவில்லை என்பது உண்மை தான்.
குடுகுடுப்பை சமூக மாணவ தெய்வானையின் உத்வேகம் பிரமிக்க வைக்கிறது. அரசு உதவிக்குத் தகுதியானவர்கள் (இன்னும் அதிக உதவிக்கு) இந்தச் சமூகமும் குறவர் சமூகமும். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை. வணக்கம். நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய நற்காலை வணக்கம்.
நீக்குஆண்டாள் அன்னையின் அருள்
மிகப் பெரியது.
அவள் வாழவைக்கும் தெய்வம்.
எத்தனையோ நூற்றாண்டுகளாக அவளின் நாச்சியார்
திருமொழி திருமணங்களையும், மனங்களையும்
இணைத்துக் கொண்டு வருகிறது.
ரமா ஸ்ரீனிவாசனின் திருமணத்தைப் பற்றி
எங்கள் சம்பந்தியும் சொல்லி இருக்கிறார்.
தாயார் சேர்த்து வைத்த திருமணம்
பல்லாண்டு நிலைக்கும்.
மிக அருமையான பொறுமையான டிருமணம்.
மன்ம் நிறை வாழ்த்துகள்.
பெற்றோரையும் ஆதரித்துத் தன் கல்வியையும் நிறைவேற்றிய
நீக்குதெய்வானை, திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்து
சாதித்தது எத்தனை அருமை.
அங்கீகாரம் கிடைத்திருக்கிறது வாழ்வில் நல் முன்னேற்றம் காணவேண்டும்.
இறைவன் முருகன் அருள் அவருடன் இருக்கும்.
திருமணம் என்று படிக்கவும்.
நீக்குஅருமையான நேரத்தில்
நீக்குதளர்வில்லாமல் ஓட்டி
ஒரு குருத்தின் உயிர் காத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு
மனம் நிறை நன்றிகள்.
ஏற்பாடு செய்த முன்னாள் முதல் அமைச்சருக்கும்,
நம் அமைச்சருக்கும் வாழ்த்துகள்.
நீடூழி வாழ குழந்தைக்கு ஆசிகள்.
தான் பாதிக்கப்பட்டாலும் மற்றவர்களுக்கு உதவும்
நீக்குமனம் படைத்த முஸ்தபா அவர்களைப் பற்றி
அறிய மிக நெகிழ்ச்சி.
அதே போல் நோயுற்றவர்களுக்கு
உதவி செய்யும் துரை பிரிதிவிராஜ் போன்றவர்கள்
இருக்கும் வரை நம் மக்களுக்குக் கவலை இல்லை.
நல்ல செய்திகளை அளிக்கும் எங்கள் ப்ளாகிற்கு
கோடானு கோடி நன்றி..
வாங்க வல்லிம்மா... செய்திகளை படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.
நீக்குஇனிய காலை வணக்கம். நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் சிறப்பான செய்திகள். முதல் செய்தி நம்பிக்கை தருகிறது. பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
ஆண்டாளின் அருள் - கட்டுரை நன்று. காத்திருந்து சாதித்த கட்டுரையாளருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி வெங்கட்.
நீக்குவெங்கட் சார், அந்த காலத்தில் ஒரு வில் ஒரு சொல் போல், ஒரே காதல் என்று வாழ்ந்து வந்தோம். எனவே, இது ஒன்றும் பெரிய புரட்சியல்ல.
நீக்கு//இது ஒன்றும் புரட்சியில்லை// எப்படி சிம்பிளா எழுதறீங்க. எவ்வளவு பெரிய லைஃப் ரிஸ்க் எடுத்திருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ல ஆண் நிலை வேறு பெண் நிலை வேறு
நீக்குதங்களது முயற்சி இறுதியில் ஆண்டாள் அருளால் வெற்றி பெற்றுள்ளது வாழ்த்துகள் ரமாஸ்ரீ மேடம்.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குகில்லர்ஜீ சார், மிக்க நன்றி
நீக்குஎன்னடா இது, ஆண்டாள் என ஆரம்பித்துத் தன் கல்யாணப் படத்தைப் போட்டுவைத்திருக்கிறாரே ரமா ஸ்ரீனிவாசன் என நினைத்துத் தயங்கினேன். படித்தேன் பின்னர். ஆண்டாளின் அருள் அழகான அனுபவம். அவள் கவனித்துக்கொண்டிருக்கையில் கவலை ஏதுமில்லை!
பதிலளிநீக்குஅதே அதே ஏகாந்தன் சார்.
பதிலளிநீக்குஅறியாத முதல் செய்தி... அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குரமா ஸ்ரீநிவாசன் அவர்களின் சுய கட்டுரை மிகவும் அருமை...
மிக்க நன்றி டி.டி. சார்
நீக்குபாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்த அப் பெண்ணிற்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குசகோதரி ரமா ஸ்ரீனிவாசன் அவர்கள் தன்னைப் பற்றி எழுதியது நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் தன் மனதிற்குப் பிடித்தவரை மணந்திருப்பது இறைவன் அருளால். அருமை
துளசிதரன்
//அவர்கள் தன் மனதிற்குப் பிடித்தவரை மணந்திருப்பது இறைவன் அருளால். அருமை/ இதற்குதானே சார் இவ்வளவு போராட்டமும்.
நீக்குமுதல் செய்தி நம்பிக்கையூட்டும் செய்தி என்றால் 2 வது செய்தி முன்னுதாரணம்.
பதிலளிநீக்கு3, 4 ம் ஆஹா என சொல்ல வைத்தது. ஆம்புலன் ஓட்டிக்குப் பாராட்டுகள்.
குடுகுடுப்பை சமூக மாணவியை நினைத்து மனம் மகிழ்ச்சியடைந்தது //நாடு முழுதும் உள்ள சமூக பின்தங்கியோரின் நிலைபற்றிய கதைகளைக் கேட்க நேர்ந்தால், மனது வலிக்கிறது. இருப்பினும் அவ்வப்போது இருண்ட வானில் ஒளிக்கீற்றுபோல் ஒன்றிரண்டு செய்திகள்.. //
டிட்டோ. தெய்வயானை மனதை நெகிழ்ச்சிய்டைய வைத்துவிட்டார். அவர் நினைப்பது நடந்து வாழ்வில் மேன்மேலும் வெற்றிகள் பல பெற்றிட வாழ்த்துவோம்.
கீதா
ரமா வாவ்!! மனதிற்கு உகந்தவரை அதுவும் கணவரின் அம்மா மனம் மாறும்வரை காத்திருந்து உங்கள் அம்மா அப்பாவும் டென்ஷனாகாமல் உங்கள் விருப்பத்திற்கு ஓகே சொல்லிக் காத்திருந்து இறுதியில் நல்லதாக முடிந்தது. இப்போது குழந்தைகளும் நல்லபடியாக வளர்ந்து வளர்க்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்ற்னர். கண்டிப்பாக இனியும்நல்லதே நடக்கும் ரமா.
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
கூடவே நம்ம ஸ்ரீராமும் பாஸும் நினைவுக்கு வந்துட்டாங்க!! ஹா ஹா ஹா
கீதா
என் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் யாவரும் நலண்க இருப்பதே நமது அடுத்த அஜெண்டா.
நீக்குஎங்கள் வீட்டிலும் கல்யாணம் நடக்க வாரணமாயிரம்தான் சொல்லச் சொல்லுவாங்க. இப்போது கூட உறவினரின் பெண்ணிற்குக் கல்யாணம் தாமதமவதால் வாரணமாயிரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
பதிலளிநீக்குயார் சொல்லச் சொன்னாலும் அதை அப்படியே மனதில் ஒன்றி விஷுவலைஸ் செய்து சொல்ல வேண்டும். நல்லது நடக்கும்
கீதா
பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குமுஸ்தபா அவர்கள் தன்னம்பிக்கையை , உழைப்பை பாராட்ட வேண்டும்.
தெய்வானையின் கனவு நனவாக வேண்டும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் பகிர்வு அருமை.ஸ்ரீனிவாசன் அவர்களையும் பாரட்ட வேண்டும்.இருவரும் பொறுமையாக காத்து இருந்து திருமணம் செய்து கொண்டது ஆண்டாள் நாச்சியாரின் அருள்தான்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன். குழந்தைகளுக்கும் ஆண்டாள் நல்லவாழ்க்கையை அருள்வார்.
ஓ மை காட், இந்த ஆசியைத் தவிற வேறொன்றும் அறியேன் பராபரனே.
நீக்குநம்பினார் கெடுவதில்லை
பதிலளிநீக்குநான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும்
ஆண்டவனே காப்பு
இந்த வரிகளை மேம்படுத்துகிறது ரமா ஸ்ரீனிவாசனின் அனுபவம்.
கல்லூரி நாட்களில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த நாட்களிலிருந்து நானும் ரமாவும் தோழிகள். நான் அவர் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். மிகவும் சிறப்பாக நடந்தேறிய வைபவம். ஆனால் அந்த திருமணத்திற்காக அவர் எடுத்த முயற்சிகள் காத்திருந்த நாட்கள் அனைத்தும் எனக்கு தெரியும். தெளிந்த மனம் நல்ல சிந்தனை தெய்வ நம்பிக்கை இவை மூன்றும் இவரது பலம். இவரை நன்றாக புரிந்துகொண்டு இவர் மீது பாசம் வைத்து திருமணம் செய்து கொண்டவர் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள்.
ரமா ஸ்ரீனிவாசன் தன்னைச் சேர்ந்த அத்தனைபேருக்கும் நல்லதை மட்டுமே நினைக்கும் சுபாவம் உள்ளவர். இவரது மாமனார் தற்போது உயிருடன் இல்லை ஆனால் இவர் மீது மிகவும் அதிகமான பாசம்
வைத்திருந்தவர். திருமணமானவுடன் மாமனார் மாமியாரை கழட்டி விடும் இந்த காலத்தில் இன்றும் 90 வயதான தனது மாமியாருக்கு பணிவிடை செய்து கொண்டு இருக்கிறார். ரமா ஸ்ரீனிவாசனை என் தோழி என்று சொல்வதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மஹாரவி
அய்யோ மஹா, அதெல்லாம் நமது கடமை என்று வளர்த்த பெற்றோரின் பெருமை. அதை விடாமல் கடை பிடித்து பெற்றோரை பெருமை படுத்த வேண்டும் என்பதே என் அவா. ஆயினும் நீ எழுதியிருப்பதை படித்தபோது லேசாக ஒரு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது என்னமோ உண்மைதான். After all, man is a social being. Occasionaly, he also likes to be praised and pampered. Thank you.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
ரமாஸ்ரீ,
பதிலளிநீக்குஆங்கில எழுத்தாளர்களை பற்றியும் கவிஞர்களைப் பற்றியும் மணிக்கணக்காக அமர்ந்து உரையாடுவோம்.
நாங்கள் இருவருமே பெற்றோரை மீறி ஒரு முடிவு எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள்
-- உங்களின் இந்தக் கட்டுரையில் இதெல்லாம் எனக்குப் பிடித்த வரிகளாய் உணர்ந்தேன்.
ப்ரேமும் புகைப்படமும் புதுமையாக அழகாக இருந்தது. தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.
//அதே போல் ஒவ்வொரு மார்கழி மாதமும் விடியலில் எழுந்து நீராடி திருப்பாவை வாசித்த பின்..//
திருவெம்பாவையையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதா?..
நான் போட்ட பின்னூட்டம் எங்கே? வல்லி அக்காவின் பின்னூட்டத்தை தொடர்ந்து நான் எனது பின்னூட்டத்தை போட்டிருந்தேன். இன்றைய பாசிட்டிவ் செய்திகள் வித்தியாசமாக இருக்கின்றன. முஸ்தபாவும், தேவானையும் வியப்பூட்டுகிறார்கள். வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குநான் போட்ட பின்னூட்டம் எங்கே? வல்லி அக்காவின் பின்னூட்டத்தை தொடர்ந்து நான் எனது பின்னூட்டத்தை போட்டிருந்தேன். இன்றைய பாசிட்டிவ் செய்திகள் வித்தியாசமாக இருக்கின்றன. முஸ்தபாவும், தேவானையும் வியப்பூட்டுகிறார்கள். வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குநானும் நேற்று ரமாவை நினைத்துக் கொண்டேன்.