வியாழன், 2 ஜூலை, 2020

பழையவரே புதியவராய்....

விக்கிரமாதித்தக் கேள்வி!

நெருங்கியவர்களிடையே அல்லது நட்புகளிடையே உங்கள் அதிருப்தியை எப்படி காட்டுவீர்கள்?  எதிர்பாராமல் காலை வாரினார் என் ஆஸ்தான ஆட்டோக்காரர்!

உறவுகளிடையேயோ, நட்புகளிடையேயோ கருத்து வேறுபாடுகள் சகஜம்.  ஆனால் அவற்றை ஒன்று சகித்துக்கொள்ள வேண்டும்,  இல்லை மென்மையாகச் சொல்ல வேண்டும்.  அதே போல அவற்றை எதிர்கொள்பவர்களும் எதிராளியின் நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும்.  அவர் முற்றிலும் நம்மை வெறுப்பவரா?  நம் மீது எப்போதும் கோபமாகவே உள்ளவரா?  இதை எல்லாம் யோசித்தே அப்போதைய அவரின் வெளிப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டும்.  இது என் வ(ப)ழக்கம்.

குணம் நாடி குற்றமும் நாடி...

நெருங்கிய உறவுகளுக்குள்ளே கூட எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரி செய்து கொண்டிருக்கிறேன்.  அவர்களின் இது மாதிரியான தற்காலிக வெளிப்பாடுகளை விட, பொதுவான நிலையைத்தான் கருத்தில் கொள்வேன்.

என் ஆட்டோக்காரர் என்ன செய்தாரென்றால், 

இந்த லாக்டவுன் காலத்தில் செலவானாலும், பதட்டம் இன்றியும், பாதுகாப்பாகவும் அலுவலகம் சென்றுவர அவரை ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.  எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றும் அவரையே கேட்டு அதைக் கொடுத்து வந்தேன்.

இடையில் அவர் பேத்திக்கு திருமணம் வர, அவர் ஒரு பெரும் தொகை என்னிடம் கடன் எதிர்பார்த்திருந்தார் போல.  மறைமுகமாக சொல்லவும் செய்தார்.  ஏற்கெனவே  அவருக்கு நான் அவ்வப்போது உதவியது  வளர்ந்து ஓரளவு பெரிய தொகை ஒன்று , அவரால் அது தரப்படாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டினேன்.  மௌனமானார்.  காலை அலுவலகம் சென்று விட்டோம்.  
  
போச்!
பழையவரும் 


வீடு திரும்ப வேண்டும்.  திடீரென அவர் வரவில்லை.  போனை எடுப்பதையும் தவிர்த்து விட்டார்.  அவர் போனில்  கோளாறு என்று நான் மறுபடி மறுபடி முயற்சிக்க, (அப்படி முன்னர் நடந்திருக்கிறது)  அப்புறம் பணிக்குச் செல்லவேண்டிய நேரம் நெருங்கி,  வேறொரு தெரிந்த ஆட்டோக்காரரை அவசரம் அவசரமாக வரவழைத்து அதில் சென்றேன்.

புதியவரும்!

பின்னர் தெரிந்தது,  இவர்களிடம் அவர் நான் பணம் குறைவாய்த் தருவதாய்ச் சொல்லி இருக்கிறார் என்று.  இவர்களுக்கும் அவர் என்னிடம் கடன் பட்டிருப்பது தெரியும், அவரை நான் எப்படி நடத்துவேன் என்பதும் தெரியும் என்பதால் அவர்கள் இவருக்கு அறிவுரை கூறியதோடு, இவ்வளவு பழகி விட்டு இந்த மாதிரி நெருக்கடியான சமயங்களில் திடீரென காலை வாருவது சரியில்லை என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்குமே...   அன்று பார்த்து ஊபர், வோலா சேவைகள் திறந்துவிடப்பட, என் கஷ்டம் தீர்ந்ததோடு, செலவும் கம்மியாகவே ஆனது.

மறுபடி முதல்வர் கம்ப்ளீட் லாக்டவுன் என்றார்.  இந்த வாடகைக் கார்கள் வராது.  என்ன செய்ய?  

எங்கள் ஏரியாவிலிருந்து மூன்று பேர்கள், உறவு வட்டத்தின் ஏரியாவிலிருந்து ஒருவர், பழைய நட்பு வட்ட ஆட்டோக்காரர்களில் இருவர் என்று தெரிவு செய்தேன்.  கைவசம் ஆப்ஷன் நிறைய இருந்தது!

இப்போது நான் சென்றுவர என் ஐ டி யும்,  அலுவலகத்தில் கொடுத்த சான்றிதழும் கையில் வைத்திருக்க வேண்டும்.  ஆனால் அது ஆஸ்தானத்திடம் இருந்தது.  பிரிந்த கடைசி நாளில் அவர் ஆட்டோவில் விட்டிருந்தேன்.  ஓரிருமுறை நண்பர்கள் வாயிலாகக் கேட்டும் இதோ அதோ என்றிருந்தார்.

கிட்டத்தட்ட 15 நாட்கள் கடந்துவிட்டிருந்த நிலையில் அவருக்கே போன் செய்தேன்.  இந்த முறை எடுத்தார்.  என் சான்றிதழ்களை உடனே தரச் சொல்லிக் கேட்டேன்.  மெதுவாய்ப் பேசினார்.  அவ்வளவு நாட்கள் பழகியவர் புதிதாய் பேசுபவர் போல தயங்கித் தயங்கிப் பேசினார்.

சான்றிதழை தருவதாக முதலில் சொன்னவர், இரண்டாவது வரியிலேயே தானே வருவதாகச் சொன்னார்.  'நீங்களா?  மறுபடி காலை வாரினால் என்ன செய்ய...  சான்றிதழை கொடுங்கள்.  நான் இரண்டு மூன்று ஆட்டோக்காரர்கள் ஏற்பாடு செய்திருக்கிறேன்' என்று சொன்னேன்.  'இல்லை, மறுபடி அப்படி நடக்காது' என்று சொன்னார்.  தானே வருவதாகச் சொன்னார்.

கொஞ்சம் யோசனைகளுக்குப் பின் கூட்டிக்கழித்துப் பார்த்து ஒப்புக்கொண்டேன்.  தெரியாத தேவதையை விட தெரிந்த டெவில் மேல்!  கொடுத்த பணத்தை முள்ளின் மீது விழுந்த சேலையாய் திருப்பி எடுக்க வேண்டும்!  போக்குவரத்துக் காவலர்களை சமாளிக்க புதிய ஓட்டுநர்களைவிட பழைய ஓட்டுநர் சிலாக்கியம்.  என் மற்ற பயணத் தேவைகளுக்கும் இவர் சரிப்பட்டு வருவார்.  குடும்பத்தில் ஒருவர் போல பழகியவராச்சே!

மறுபடி வந்து சவாரி செல்கையில் கடந்த அந்தப் பதினைந்து நாட்களில் அவர் சவாரி எதுவும் கிடைக்காமல் அன்றாடச் செலவுகளுக்குக் கஷ்டப்பட்டதையும் ஒளிக்காமல் என்னிடம் சொன்னார்.  

நான் ஏற்கெனவே சொன்னதுபோல அவரின் கடன் கிடைக்காத ஆத்திரத்தை புரிந்து கொண்டு, அவரின் இந்த அதீத நடவடிக்கையை மறந்து, மறுபடி அழைத்துக் கொண்டேன்.  சுயநலமும் கலந்துதான் இருக்கிறது என்பது மேற்சொன்ன குறிப்புகளிலும் புரிந்திருக்கும்...

என்ன நான் சொல்வது...

================================================================================================

இந்த லாக்டவுன் காலத்தில் சாயங்கால வேளைகளில் நாலு முழ நாக்கு ஓவர்டைம் பார்க்கிறது!  என் மகன்களும் அதில் ஆர்வமாய் இருப்பதால் பாஸ்-இளையவன் கூட்டுத் தயாரிப்பில் உருவான சில மாலை நேர நொறுக்ஸ்!  இன்னும் சில உண்டு..  கார போளி,  ப்ரெட் சில்லி ப்ரை, ப்ரெட் உப்புமா, சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா...!!


==================================================================================================

சுஜாதாவின் வார்த்தைகளிலிருந்து நான் 'அபுரி' யைத் திருடி இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.  கடந்த வெள்ளிக்கிழமை பதிவில் ஜீவி ஸார் கூடக் கேட்டிருந்தார்.  அது வந்த சுஜாதாவின் கதையின் பக்கங்களைக் கொடுத்திருக்கிறேன்.  எனக்கு மட்டுமல்லாமல் எங்கள் வீட்டுப் பூச்சிகளுக்குக் கூட சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகள் (கம்பியூட்டரே ஒரு கதை சொல்லு) பிடித்து விட்டது போல.  ரொம்ப "உள்வாங்கி" படித்திருக்கின்றன!  

அந்தப் புத்தகத்தின் சுஜாதா முன்னுரை 


ஒரு கதையில் அபுரி வரும் இடம்!  முக்கியக்குறிப்பு : வலது பக்கத்தை முதலிலும், இடது பக்கத்தை அடுத்தும் படிக்க வேண்டும்!


இதிலேயே பிற்காலத்தைய சிதிலடமடைந்த தமிழாய் சுஜாதா உருவகப் படுத்தி இருப்பது..!  அது சரி...   இந்தக் கதையைப் படித்த ஞாபகம் இருக்கிறதா?


=====================================================================================================

பேஸ்புக் பக்கம்...  அதற்கு வந்த கமெண்ட்ஸுடன்!

இந்த வாரம் கொஞ்சம் சுருக்கமாக முடித்திருப்பதாய் நினைத்துக் கொள்கிறேன்!

153 கருத்துகள்:

 1. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைக்கு காலையில் இராம்மூர்த்தி என்னும் டாக்டர் ஓய்வு பெற்றதிலிருந்து வீட்டிலேயே ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருவதையும், வருபவர்கள் முன்பு 1 ரூபாய் கொடுத்தவர்கள், விலைவாசி உயர்வினால் இப்போதை ஐந்துரூபாய் கொடுத்து மருந்தும் வாங்கிச் செல்கிறார்கள் என்றும் படித்தேன். அவரதை கைராசி கருதி பணக்கார்ர்களும் காரில் வந்து அவரது இலவச கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக்குச் செல்கிறார்கள் என்றும் படித்தேன்.

   தங்கள் வாரிசு தன்னைவிடப் படித்திருந்தால் அவரைச் சுற்றியுள்ள மக்களுக்கெல்லாம் நன்மை அளிக்கும் என்பது உண்மைதான். (அப்பா கிளர்க். மகன் பி எச் டி முடித்து பேராசிரியராக இருந்தால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நன்மை பயக்கும்.

   அதைவிட, அறிவுடமை என்று குறிப்பிடுவது, பிறருக்கு உதவும் குணம் இருப்பது என்ற பொருள் இந்தக் குறளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

   நீக்கு
  2. ஒரு உதாரணத்துடன் விளக்கம் - அருமை நெல்லை.

   நீக்கு
  3. //அறிவுடமை என்று குறிப்பிடுவது,பிறருக்கு உதவும் குணம் இருப்பது என்ற பொருள் இந்தக் குறளுக்குப் பொருத்தமாக இருக்கும்.// அத்தனை சரியாக இல்லை தம்பி. டி.டி உதவுவாரா? பார்க்கலாம். 

   நீக்கு
  4. தம்பி டி.டி.வந்தால்... !?..

   இயன்றவரை தினம் ஒரு குறள் பதிவு செய்வதற்கு என்றேனும் ஆதரவு அளித்துள்ளாரா?..

   எபி யில் குறள் பதிவுக்கான அவரது கருத்துகளை இரு வாரங்களுக்கு முந்தைய ஏதோ ஒரு நாளில் காணலாம்...

   நீக்கு
  5. //அறிவுடமை// - நான் தமிழில் எழுதுவதில் குற்றம் கண்டுபிடிப்பது, எனது தமிழறிவுக்கு விடப்பட்ட சேலஞ்சாகவே நான் நினைப்பேன்.

   வலிமையான ஒரு ஆள் நம்மை எதிர்க்கிறார். தோற்றுவிடுவோம் என்ற நிலை நமக்குத் தெள்ளெனத் தெரியும்போது சண்டையை தவிர்ப்பது அறிவுடமை.
   பிறருக்கு உதவுவது தன் வாழ்க்கைக்குச் செய்துகொள்ளும் நன்மை என்று நினைப்பது அறிவுடைமை.
   சிலவற்றை சிலர் புரிந்துகொள்ளச் செய்யமுடியாது (எந்த அட்வைஸாக இருப்பினும்) என்று நமக்குப் புரியும்போது நாம் அதைத் தவிர்ப்பது அறிவுடைமை.
   இதுமாதிரி நாம் உலக இயல்பை, நல்லது கெட்டது அறிந்து அதன்படி நடந்துகொள்வது அறிவுடைமை.
   இந்த அறிவுடைமையை simpleஆ பட்டப்படிப்பு என்று நினைக்கக்கூடாது. பட்டறிவாகவும் இருக்கலாம்.
   பட்டறிவில் கண்டுகொண்டதை செயல்படுத்துவதுதான் அறிவுடைமை என்பது என் அபிப்ராயம். ஒருவன் நிறைய கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினால் அதனை அறிவுடைமை என்று சொல்லமுடியாது. அது பிறருக்குப் பயன்படும்போதுதான் இந்தக் குறளின் அர்த்தம் வெளிப்படும். நான் தியானம் செய்கிறேன், இந்த மாதிரி வழியில் செல்கிறேன், இதோ கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அதிலேயே ஒருவன் இருந்தால், அது அவனுக்கு மட்டும்தான் பயன்படும். ஆனால் தான் கண்டுகொண்டதை பிறருக்கும் வழிகாட்டும்போதுதான் அது 'அறிவுடைமை'யின்பாற் படும். இதனைப் புரிந்துகொண்டதாலேயே புகழ்பெற்ற குருமார்கள் அனைவரும், தாங்கள் கண்டுணர்ந்ததை பிறருக்கு உபயோகமாக இருக்கும்பொருட்டு எழுதிவைத்தார்கள், சீடர்களுக்குக் கற்பித்துக்கொடுத்தார்கள்.

   நீக்கு
  6. துரை செல்வராஜூ ஐயா... தவறு என் மீது தான்... நீங்கள் குறிப்பிட்ட நாள் வரை, எங்கள்ஸ் பதிவுக்கேற்றவாறு குறள் சொல்வதாக தான் நினைத்திருந்தேன்... அங்கு மறுமொழிகளை வாசித்த பின்பு புரிந்து கொண்டேன்... சார்ந்தோர்கள் மன்னிக்கவும்... தினம் ஒரு குறள் என்று தெரிந்து கொண்டது அதற்கு பின்பு தான்... நன்றி...

   நீங்கள் குறிப்பிட்ட இன்றைய குறளின் சில குரல்கள் : -

   1) "புலி எட்டடி பாய்ந்தால் புலிக்குட்டி பத்தடி பாயும்", "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...?" என்று சொல்லி சிலர் மகிழ்ச்சி அடைவார்கள்... குழந்தைகளின் பெருமை குறித்துப் பெற்றோரைவிட உலக மக்கள் மிக மகிழ்வார்கள் எனப் பெற்றோர்களே நினைப்பது பற்றி சிந்திக்க வேண்டும்...

   2) குழந்தைகளின் அறிவுடைமையை அவர்களின் பெற்றோர் அறிவோடு உறழ்ந்து காட்டுகிறது என நினைக்காமல், தனது குழந்தைகளின் அறிவுடைமையை உயர்த்திக்காட்டுவது பற்றி சிந்திக்க வேண்டும்...

   3) யாவர்க்கும் இனிது எனப் பொருள் கொண்டால், சமுதாயம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு ஆதரவு தருவது... வளர்ச்சியே இயற்கை...? உலகில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாற்றங்களின் பரிணாம வளர்ச்சி...? முந்தைய தலைமுறையைக் காட்டிலும் பின்வரும் தலைமுறை அறிவில் முதிர்ச்சி பெறுவது இயல்பானதா..? அது தான் இனிது என ஐயன் சொல்லியுள்ளாரா...? எப்போதும் அவ்வாறே அமையும் என்று கூறியுள்ளாரா...? என்பதையும் சிந்திக்க வேண்டும்...

   4 ) மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் = இந்த உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம் (விலங்குகள், பறவைகள் உட்பட அனைத்து உயிர்களுக்கும்) தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது = உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம் இயற்கையாக இன்பம் தருவது... இன்பம் தருவது = இயற்கை தருவது...

   முடிவாக :- இதற்கான விடைகள் இந்த அதிகாரத்தின் மற்ற குறள்களிலேயே உள்ளன...

   எதற்கு குழப்பம்! + வம்பு? இந்தக் குறளில் உள்ள சொல்லை ஆய்வு செய்ய நினைக்கும் போது, குறள் 444 க்கு சென்று விடுகிறேன்... அப்பாடா நிம்மதி... பானுமதி அம்மா அவர்களுக்கும் நன்றி...

   நீக்கு
  7. தனபாலன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

   குறள் விளக்கங்களுக்கும் மகிழ்ச்சி...

   இந்த குறளுக்காக புலவர் கீரன் ஐயா அவர்கள் கொடுத்த விளக்கமும் இப்படித் தான் இருந்தது..

   தமிழின் வழி நம் பணி தொடரட்டும்...

   நீக்கு
  8. அருமையான தெளிவான விளக்கங்கள் அளித்த DD க்கு நன்றி.

   நீக்கு
  9. @நெல்லை தமிழன் உங்கள் தமிழறிவை மெச்சுகிறேன். ஆனால், நீங்கள்  அன்புடைமை  அறிவுடைமை  இரண்டையும் குழப்பிக் கொள்கிறீர்களோ என்பதுதான் என் சந்தேகம். அல்லது அறிவுடைமை என்பது அன்புடைமைதான் என்னும் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன்  சுல்தானா  கட்சியோ? 

   நீக்கு
  10. ஒரு நல்ல கலந்துரையாடல்.  அனைவருக்கும் நன்றி.  நன்றி DD 

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் ..அன்பு ஸ்ரீராம், துரை மற்றும் வரப்போகிறவர்களுக்கும்

  இந்த நாளும் எந்த நாளும் நலமே கிடைக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதொரு பிரார்த்தனைக்கு நன்றி அம்மா...   வாங்க வணக்கம்.

   நீக்கு
  2. எந்த நாளும் நலமே கிடைக்கட்டும்.

   நீக்கு
 3. அபுரி வந்த விதம் அருமை.அட்டகாசமான இந்த நடையைக்
  கொடுத்தவரை என்னாளும் கொண்டாடலாம்.
  என்ன ஒரு வசீகரம் அவர் எழுத்தில்!!
  இவ்வளவு கற்பனை இந்த அள்வில் ஒருவரிடம் இருக்க இயலுமா
  என்று என்றும் வியக்கவைப்பவர்.
  நன்றி ஸ்ரீராம். சுஜாதா சாரை மீண்டும் பார்க்கும் ஆனந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டோக்காரர் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. ஜாக்கிரதையாகவே
   இருங்கள்.
   வாழ்வு நல்ல பாடங்களைக் கொடுக்கும் நேரம்.
   நானும் என் மருந்துக்கடைக்காரரிடம்
   மருந்துகளை அளவு குறைத்து அனுப்பியதற்காக
   வருத்தம் தெரிவித்து,மனதளவில்
   மிகுந்த கோபம் கொண்டிருந்தேன்.
   அவர் மேல் தவறில்லை,
   கூரியரின் பிழை என்று தெரிந்ததும்
   மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.

   உங்கள் நிலைமை வேறு.நல்ல பொறுமைதான்.
   காலம் மாறட்டும்.

   நீக்கு
  2. உங்கள் வீட்டுக் குறிப்புகளே திங்கள் கிழமைகளில் பதிவேற்றலாம் போல
   இருக்கிறது.
   காரபோளி,
   ப்ரெட் உப்புமா என்று எல்லாப் படங்களுமே அருமை.
   பாஸிடம் வாழ்த்துகளைச் சொல்லவும்.

   நீக்கு
  3. மழைக் கவிதை பிரமாதம் வாராது போல மாமணி 2015இல்
   வெள்ளமாக வந்ததே உங்கள் கவிதையைப்
   பார்க்கத்தானோ:)
   முகனூலில் அப்போது நான் பார்க்கவில்லை போல.
   இப்பொழுதும் நிறைய பதிவுகளைக் காண்பதில்லை.
   நான் படிப்பத்ற்குள் அவை மிகவும் கீழே போய் விடுகின்றன.

   நீக்கு
  4. ஆமாம் வல்லிம்மா...  அதனால்தான் அந்த ஒரு மனதிலேயே தங்கிவிட்டது! சமீபத்தில் ஜீவி ஸார் இந்த வார்த்தையை அதிகம் உபயோகிக்கிறார் பார்த்தீர்களா?!!

   நீக்கு
  5. ஆட்டோக்காரர் மீண்டும் வந்தாலும் பழைய குறை அவர் மனதில் இருக்கத்தான் செய்கிறது.  ஆனாலும் அவருக்கும் வேறு வழி இல்லை.  கூரியர் காரர்கள் மருந்துகளை முழுமையாக சப்ளை செய்யாமல் விட்டு விட்டார்களா?

   ஆம், திங்களில் சேர்க்கலாம் என்ற எண்ணமும் இருந்தது.  கேஜிஜியும் சொன்னார்.

   நீக்கு
  6. மழைக்கவிதைப் பாராட்டுக்கு நன்றி அம்மா.

   நீக்கு
  7. காரபோளி ப்ரெட் உப்புமா ... என்பதை கார்ப்பரேட் உப்புமா என்று படித்தேன்!

   நீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோருடைய உடல் நலனும் கொரோனாவை எதிர்க்கும் சக்தி கொண்டதாய் இருக்கவும் பிரார்த்தனைகள். இனி வரும் நாட்கள் நல்லவையாக அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...  வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.  பிரார்த்தனை செய்வோம்.

   நீக்கு
  2. எல்லோருமே தற்காத்து, தற்கொண்டார் பேணி இருக்கவேண்டிய காலகட்டம். வெங்கட் நாகராஜ் சாரின் இன்றைய பதிவின் அலுவலக மனிதர் போல இருக்கக்கூடாது.

   நீக்கு
 5. நேற்றைய பதிவும் நேற்றே படித்தேன். ஆனாலும் பதில் கருத்துக் கொடுக்க முடியவில்லை. இன்றைய பதிவும் படித்துவிட்டேன். ஸ்ரீராம் சொல்லி இருக்கிறாப்போல் அனுபவங்கள் எங்களுக்கும் நிறையவே உள்ளன. ஆனால் ஆட்டோவிலேயே சான்றிதழை வைத்துவிட்டு வர மாட்டோம். என்னதான் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும் அப்படிச் செய்யக் கொஞ்சம் யோசனையா இருக்கும். இவரும் கேட்டுக் கேட்டுக் கொடுக்காமலேயே இழுத்தடிச்சிருக்கார். கடைசியில் அவர் ஆட்டோவிலேயே போகும்படியும் ஆயிற்று. இந்த விஷயத்தில் நம்ம ரங்க்ஸ் ஸ்ரீராம் மாதிரித்தான். காந்தித்தாத்தாவின் நேரடி சீடர். மன்னிப்பை வாரி வழங்கிடுவார். நானெல்லாம் திரும்ப அதே ஆட்டோவில் போக யோசிப்பேன். நம்பிக்கையில் மெல்லியதாகவேனும் விரிசல் ஏற்பட்டுவிடுமே! இங்கே அப்படித்தான் ஒரு ஆட்டோக்காரரை வளர்த்துவிட்டு இப்போ அவர் எங்களைத் திரும்பியே பார்ப்பதில்லை. பார்த்தாலும் ஏதோ புதிய மனிதர்களைப் பார்ப்பது போல் பார்க்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...  ஹா...  ஹா...  ஆட்டோக்காரர் என்று  இல்லை...  அலுவலகத்தில் சில விஷயங்களுக்கு கைப்பணம் கொடுத்து முடித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  அங்கும் இப்படி எதிர்பார்ப்பின் அளவு ஏறிக்கொண்டே இருக்கும்!

   எனக்கும் இப்போது வேறு வழி இல்லை..  உலகம் புதுமையான ப்பாதையில் அல்லவா போய்க்கொண்டிருக்கிறது!

   நீக்கு
  2. ஸ்ரீராம்... எனக்கு எப்போதுமே டிப்ஸ் கொடுப்பது பிடிப்பதில்லை. அது தவறான வழக்கம் என்றே என் மனதில் பதிந்துபோயுள்ளது. சரவணபவனில் இங்கு டிப்ஸ் வழங்கக்கூடாது என்று போட்டிருப்பார்கள். ஒரு ஹோட்டலில் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும்போது எல்லா costம் அதனில் அடக்கி பிறகு லாபம் வைத்து பொருளின் விலையை நிர்ணயிப்பார்கள். அப்படி இருக்கும்போது, சர்வர் வந்து நமக்கு உணவை பரிமாறும்போது, அதற்கு எதற்கு நாம் டிப்ஸ் தரணும் என்று நினைப்பேன். ஒருவர், அவரது வேலை கிடையாது என்றபோதும் நமக்கு உதவ முன்வந்தால் அதற்கு நான் டிப்ஸ் கொடுப்பேன்.

   என்னைப் பொறுத்தவரையில் பொதுவா நாம் கொடுக்கும் டிப்ஸ் ஸுக்கு தமிழில் அர்த்தம் கையூட்டு. ஹா ஹா.

   நீக்கு
  3. டிப்ஸும் ஒருவகை லஞ்சம்தான் என்பதும் உண்மைதான்.

   நீக்கு
 6. காரபோளி, ப்ரெட் உப்புமாப் படங்கள் ஏற்கெனவே போட்டுப் பார்த்திருக்கேனோ? காரபோளி பக்கத்தில் துண்ட மாங்காய் ஊறுகாய்னு நினைச்சேன். அது கடைசியில் ப்ரெட் சில்லி ஃப்ரை நு நினைக்கிறேன். அனுஷ்காவுக்காக ஒரு கவிதை. இதுவும் படிச்ச நினைவு. சுஜாதாவின் இந்தக் கதையும் படிச்சிருக்கேன். ஆனால் "அபுரி" நினைவில் இல்லை. இந்த வாரம் சுருக்கமாகவே வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரம்போலி, ப்ரெட் உப்புமா படங்கள், விவரங்கள் பேஸ்புக்கில் பார்த்திருப்பீர்கள்!  அனுஷுக்கு கவிதை இல்லை.   கவிஷய்க்கு அனுஷ்.

   //இந்த வாரம் சுருக்கமாகவே வந்திருக்கு.//

   நன்றி.  அதுதான் சௌகர்யம் இல்லையா?

   நீக்கு
 7. காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை.  மழைக்காலை வணக்கம்! சென்னையில் நசநச மழை!

   நீக்கு
  2. இங்க மூன்று நாட்களாக மேக மூட்டம். இரு நாள் முன்பு இரவு மழை பெய்தது. ஆனால் வானத்தில் சூரியனை மறைத்து கருமேகங்கள். அடையாறில் மரங்கள் சூழ இருந்தும் இந்த க்ளைமேட் வரவில்லை.

   நச நசன்னு மழை இருந்தால் தரையெல்லாம் (தெருவில்) சகதி மயமாகிவிடும். நடப்பதே கஷ்டம். இங்கு அதிருஷ்டவசமா மழை நீர் தேங்குவதில்லை. அதனால் குளுகுளுன்னு இருக்கு. நடக்கவும் (Daily walk) நன்றாக இருக்கு.

   நீக்கு
  3. எங்கள் தெரு படுமோசம்.  என் மோச, என் றை மோச!  மழை காரணமாகவும்  எங்கள் தெரு மட்டும் சகதியாய் கால் வைக்கவே முடியாத மாதிரி இருக்கிறது!

   நீக்கு
 8. ஆட்டோக்கார்ரின் பேராசை வியக்க வைத்தது. சென்னையில் வீட்டுவேலை செய்த பெண்ணுக்கு, மகள் படிப்புக்காக கடன் கொடுப்பது வழக்கம். ஒரு தடவை அவர் கேட்ட கடன் அதிகமாகத் தோன்றியதால் கொடுக்க இயலவில்லை. அவர் எங்களுக்கு திருப்தியான வகையில் வேலை செய்வார்.

  நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் நைச்சியமாகப் பேசி பேப்பர்களை வாங்கிக்கொண்டு கழட்டி விட்டிருப்பேன். தவறுகளை எப்படி மன்னித்து நம்பிக்கை கொள்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியக்க ஒன்றுமில்லை.  மனித மனம்!  நைச்சியமாகப்ப் பேசி கடனைத் திரும்ப வாங்கும் கலை இப்போதுள்ள நிலையில் விர்க்கவுட் ஆகாது!

   நீக்கு
 9. நான் பசங்களை சின்ன வயதுகளில் எடுத்த போட்டோ காணொளி போன்றவற்றை அவ்வப்போது பார்த்து மகிழ்வேன்.

  ஶ்ரீராமும் அதைச் செய்கிறார் என்று அ படம் போட்டதில் புரிந்துகொண்டேன்.

  மழை என்றாலே பையா படம் நினைவுக்கு வரவில்லையே? இல்லை.. அதற்கு முன்பான ஜெயம் ரவி ஸ்ரேயா படம் நினைவுக்கு வரவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...   ஹா...  ஹா...  மழை என்றதும் மனதில் ஈரம்.  குளிர்...  உடனே அனுஷ் நினைவுக்கு வந்து விட்டார்!

   நீக்கு
  2. //ஹா... ஹா... ஹா... மழை என்றதும் மனதில் ஈரம். குளிர்... உடனே அனுஷ் நினைவுக்கு வந்து விட்டார்!// அது!

   நீக்கு
 10. இந்த வாரம் சட்னு இடுகை முடிந்துவிட்டது. கேஜிஜி சார் சென்சார் செய்து மீதிப் பகுதியை, முன்பு வெள்ளித் திரையில் காண்க என்று சொல்வதுபோல் மின்னூலுக்கு எடுத்துச்சென்றுவிட்டாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நெல்லை... இரண்டு மூன்று வாரங்களாய் நீளமாக பதிவு இருப்பது போல ஃபீல் ஆனது. எனவே கொஞ்சம் சுருக்கி விட்டேன்!

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம்போல அன்பான ப்ரார்த்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு வரவேற்பும், வணக்கமும், நன்றியும்!

   நீக்கு
 12. குரோம்பேட்டை குறும்பன்2 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:36

  எங்கள் ப்ளாக் வலைக்கு என்னவோ ஆயிடுச்சு போலிருக்கு. புதன் பதிவில் வெள்ளி வீடியோ போடுறாங்க, வியாழன் பதிவுல திங்க கிழமை எட்டிப்பாக்குது! ஐயா ஆசிரியர்களே! வெள்ளி, சனிக்கிழமைகளில் என்ன போடுவீங்களோ !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கேடா கொஞ்ச நாளா ஆளையே காணோமே என்று நினைத்தேன்! வந்தாச்சா?

   நீக்கு
  2. எல்லாம் கொரோனா காலம். இந்த ஊரில் ஆட்டோ ஓட்டுபவர்கள், மற்ற வேலை செய்பவர்கள் பலரும் காய்கறிக் கடை, பழக்கடை ஊரடங்கு காலத்தில் போட்டார்கள். அதுனால எபியிலும் இந்த மாதிரி மாற்றங்கள் வருதா?

   வியாழன் பதிவு ஸ்ரீராமுடையது. அதில் அவர் செய்முறைலாம் போடமாட்டார். ஆனால் புதனில் பாடல்கள் போட்டதுதான் டூ மச். ஹா ஹா

   நீக்கு
  3. குகு!! ஹா ஹா ஹா

   திங்க அன்று திங்க பதிவுடன் அதுக்கான பாடல் கூட வரலாம்!!!! மீ ஓடி விடுகிறேன்!!!

   கீதா

   நீக்கு
 13. இந்த வாரமே சிக்கன சிறப்பிதழ்களாக வந்திருக்கிறது போலிருக்கிறது. சமையல் குறிப்புகளை கதை போல் நீட்டி எழுதும் கீதா ரங்கனே சுருக்கமாக எழுதியிருந்தார். புதன் கேள்வி பதில்கள் குறைவாகத்தான் இருந்தன. இன்றைக்கும்  சற்று  சுருக்கமான பதிவு. மூர்த்தி சிறிதானாலும்,கீர்த்தி பெரிதுதான். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானுக்கா ஹா ஹா ஹா ஹா ஹா...

   அதனால்தான் நான் எழுத்தையே சுருக்கிக் கொண்டுவிட்டேன்!!!! எனக்குச் சுருக்கி எழுத வர மாட்டேங்குதே என்று...ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 14. சில சமயங்களில் இப்படித்தான் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் நம்பிக்கையை இழக்கச் செய்து விடுகிறார்கள். ஆட்டோ அனுபவமும் இப்படியே.

  அபுரி - கதை படித்த நினைவில்லை.

  பதிலளிநீக்கு
 15. நேற்றும் இன்றும் மைத்துனரின் பெண் கல்யாணம் ஆன்லைன் ஸ்ட்ரீமில் காட்டுகிறார்கள். அதான் லேட்டு. இதோ இப்ப முகூர்த்தம்...வரேன் பார்த்துவிட்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகூர்த்தம் முடிஞ்சுதா?  என்ன டிபன்?

   நீக்கு
  2. முகூர்த்தம் முடிந்தது ஸ்ரீராம். சாப்பாட்டுப் பக்கமே வீடியோ கேமரா போக மாட்டேங்குதே!!!! ஹா ஹா ஹா ஹா நானும் பார்த்துட்டுருக்கேன்

   வீடியோ வேறு கட் கட் ஆகி வருது. அப்பப்ப ரிஃபெரெஷ் செய்து பார்க்க வேண்டும் போல.

   இப்ப அடுத்து வரும் ரிச்சுவல்ஸ் எல்லாம் நடந்து கொண்டிருக்கு.

   கீதா

   நீக்கு
  3. ஆன்லைன் ஸ்ட்ரீமில் - மொய்ப் பணம் எப்படி அனுப்புவீர்கள்?

   நீக்கு
  4. இதெல்லாம் ஒரு சந்தேகமா கேஜிஜி சார்... திருமணம் நடத்தறவங்க என்ன பண்றாங்க? பந்தியையும் அங்கு செய்யப்பட்டிருக்கும் உணவையும் நமக்கு "காட்டறாங்க". அதுபோல கீதா ரங்கனும், ஸ்கைப் வழியா ரூபாய் நோட்டுகளை காட்டினால் போதாதா?

   நீக்கு
 16. நொறுக்ஸ் சூப்பரா இருக்குதே...

  நானும் சில எடுத்து வைத்திருக்கிறேன் திங்கவுக்கு அனுப்பவும், சும்மா படங்கள் ப்ளாகில் போடவும்....திங்கவுக்கு 4, 5 இருக்கு அனுப்பவே இல்லை படங்கள் எல்லாம் கோர்த்து செய்ய வேண்டும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் பாஸும் இளையவனும் இணைந்து கலக்கியது...   அவர்கள் குறிப்பு கொடுத்தால்தான் முடியும்!  

   நீக்கு
 17. அவர் முற்றிலும் நம்மை வெறுப்பவரா? நம் மீது எப்போதும் கோபமாகவே உள்ளவரா? இதை எல்லாம் யோசித்தே அப்போதைய அவரின் வெளிப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டும். //

  அதே அதே...ஹைஃபைவ்...மீ டூ

  கீதா

  பதிலளிநீக்கு
 18. எல்லா விசயங்களிலுமே ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கத்தான் இது இறை நியதி போலும்.

  தொடர்க... தொடர்பூ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாடிக்கையாளர்களை maintain செய்யணும் என்று சொல்வது இந்தக் காரணத்துக்குத்தான். அவரை விட்டுவிட்டால், அவர் வேறு தீர்வைக் கண்டுபிடித்துவிடுவார். அப்புறம் திரும்பவும் தன்னுடைய வாடிக்கையாளராக வைத்துக்கொள்வது மிகக் கடினம்.

   நான்லாம், ரெகுலர் காய்கறி கடைலாம் இந்த மாதிரி வாய்ப்பு வந்தபோது வேறு கடையைத் தேடிக் கண்டுபிடித்தபிறகு, தவிர்த்திருக்கேன். இது எல்லா பிஸினெஸுக்கும் பொருந்தும்.

   நீக்கு
  2. பழகியவரைத் தவிர்க்க நான் படத்தை பாடு பாடுவேன்.  மனம் வராது.

   நீக்கு
 19. இவர்களுக்கும் அவர் என்னிடம் கடன் பட்டிருப்பது தெரியும், அவரை நான் எப்படி நடத்துவேன் என்பதும் தெரியும் என்பதால் அவர்கள் இவருக்கு அறிவுரை கூறியதோடு, இவ்வளவு பழகி விட்டு இந்த மாதிரி நெருக்கடியான சமயங்களில் திடீரென காலை வாருவது சரியில்லை என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.//

  நல்ல மனிதர்கள். வாழ்க!!
  பெரும்பாலும் அட்வேன்டேஜ் எடுத்துக் கொள்பவர்கள்தான் இருப்பார்கள். மிக மிக அழகாக அட்வைஸ் செய்திருக்கிறார்கள்...வாழ்க அவர்கள் நல்ல மனது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தப்பு செய்பவர்கள் இருந்தால் திருத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

   நீக்கு
 20. எப்படியோ பழையவரே புரிந்து கொண்டு வந்திருக்கிறாரே. நல்லதே நினைப்போம் இனி அப்ப்டிச் செய்யமாட்டார் என்று. நீங்கள் சோல்லியும் இருக்கீங்க.

  //சுயநலமும் கலந்துதான் இருக்கிறது என்பது மேற்சொன்ன குறிப்புகளிலும் புரிந்திருக்கும்...//

  இதைச் சுயநலம் என்று சொல்லுவதை விட வின் வின் சிச்சுவேஷன் எனலாம். அவருக்கும் உங்களால் நன்மை அவரால் உங்களுக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 21. சுஜாதா பயன்படுத்திய அபுரி உங்களிடம் இருந்துதான் தெரிந்து கொண்டேன் ஸ்ரீராம். இது வாசிக்க வேண்டும். சுஜாதா கதைகளில் ஆன்லைன் லிங்கில் இக்கதை இருக்கும் என்று நினைக்கிறேன்.

  புத்தகத்தை எப்படி அரித்திருக்கிறது பூச்சி! எதுவும் செய்ய முடியாதோ ஸ்ரீராம்? பூச்சி அரிக்காமல் இருக்க ஏதோ ஒரு டேப்லெட் கிடைப்பதாகத் சொல்லுவார்களே..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பூச்சி அரிக்காமல் இருக்க ஏதோ ஒரு டேப்லெட் கிடைப்பதாகத் சொல்லுவார்களே// டேப்லட்டை நாம் சாப்பிடணுமா இல்லை பூச்சி சாப்பிடணுமா?

   நீக்கு
 22. கவிதை அருமை!!

  என்ன ஸ்ரீராம் அனுஷ் படம் இது முன்னரெ போட்டுருக்கீங்க வேறு இல்லையோ?!! ஹிஹிஹி

  உங்கள் கவிதைக்கு வந்த முதல் கமென்ட் ஹா ஹா ஹா சிரித்துவிட்ட்டேன். கௌ அண்ணாவின் கமென்ட் ஹா ஹா ஹா நல்ல கலாய்ச்சல்!

  கீதா

  பதிலளிநீக்கு
 23. சுருக்கமாகத்தான் முடிச்சிருக்கீங்க!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 24. தெரிந்த டெவில் நிச்சயமாக மனம் மாறி, தெரியாத தேவதையாக இனி இருப்பார் என்றே நினைக்கிறேன்...

  இனிமையான சாயங்கால வேளை...

  நீண்ட நாட்கள் கழித்து அனுஷ்...! சென்னையில் சில நாட்களாக மழை என்று கேள்விப்பட்டேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருந்தால் நலம்தான் DD.  ஆமாம் சென்னையில் விட்டு விட்டு மழை.  வெயில், வெப்பம் இப்போது இல்லை.

   நீக்கு
 25. பணம் பழகியவர்களையும் எதிராளியாக்கும்..

  பதிலளிநீக்கு
 26. நாம் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தங்கள் செயலாலும், சொல்லாலும் நமது நம்பிக்கையைக் குலைத்துவிடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
 27. ஆட்டோக்காரர் தனது தவறை உணர்ந்து விட்டாரா?
  டிபன் அருமை.

  அனுஸ்காவும் வந்து விட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணர்ந்தாரா என்று தெரியாது.  அவர் தேவைக்கு(ம்) என்னை உபயோகித்துக் கொள்கிறார்!  நன்றி மாதேவி.

   நீக்கு
 28. எல்லாருக்கும் வியாழக்கிழமை வணக்கம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ முருகா.. இதென்ன இது சொல்லி வச்சதைப்போல இருவரும் என நினைச்சிடப்போகினமே எல்லோரும் ஹா ஹா ஹா:))

   நீக்கு
  2. ஆஆஆ!! ஞவல்லி உங்களை பற்றி 4 வார்த்தை பாராட்டி எழுத நினைச்சு டைப்பி அப்புறம் அழிச்சுட்டேன் :)

   நீக்கு
  3. அல்லோ மிஸ்டர்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் பெயரை ச்பெல்லிங்கூஊஉ மிசுரேக்கு இல்லாமல் முதலில் உச்சரிச்சுப் பழகிட்டுப் பின்னர் பாராட்டி எழுதலாம் ஓகே:)).. சரி சரி முன்னே வச்ச காலைப் பின்னே வைப்பது நேக்குப் பிடிக்காது:)) பாராட்டுங்கோ.. எதுக்கும் நான் கொலர் வச்ச பிளவுஸ் போட்டுக் கொண்டு ஓடிவாறேன்ன்.. பின்ன பாராட்டும்போது கொலரைத்தூகித்தூக்கி விடோணுமெல்லோ:))

   நீக்கு
  4. நான்லாம் சொல்லாம செய்வேன் இப்போ சொல்லிட்டு செஞ்சா  சரியில்லை அதனால் காலர் இல்லா சர்ட் போட்டு வாங்க 

   நீக்கு
  5. வாங்க ஏஞ்சல்...  வாங்க அதிரா...   நீண்ட நாட்கள் கழித்து வருகை.  ஆனால் இன்று நான் சுருக்கமாக பதில் அளித்து வருகிறேன்!

   நீக்கு
 29. //நெருங்கியவர்களிடையே அல்லது நட்புகளிடையே உங்கள் அதிருப்தியை எப்படி காட்டுவீர்கள்?///
  குறிப்பால் உணர்த்துவது நல்லது அதுவும் அவர்கள் செய்த காரியத்தை பொறுத்தே அதிருப்தி வெளிப்படும் .நான்லாம் பிடிக்காட்டி வெளியேறும் டைப் .நாம் சொல்லி யாரும் திருத்திக்கப்போறதில்லை என்ற பட்சத்தில் வெளியேறல் நல்லது .

  பதிலளிநீக்கு
 30. ட்றைவர்... இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.. அதாவது.. ஒரு வாத்து, டெய்லி தங்க முட்டை இடுகிறது எனில்... டெய்லி இப்படி இடுகிறதே, வாத்தையே வெட்டினால் மொத்த முட்டையையும் அள்ளிடலாம் என நினைப்பதைப்போல...

  நீங்கள் அவரை நிறுத்திய பின்புதான் .. வெயிலின் அருமை நிழலில் தெரிவதைப்போல இருந்திருக்கும்.. பின்ன டெய்லி சொல்லி வச்சதைப்போல இப்படிக் கிடைப்பதை உதறிவிட்ட்டு விட்டோமே எனக் கவலைப்பட்டிருப்பார், அதனாலதான் திரும்பி வந்திருப்பார்...

  ஆனால் அவர் இனி அப்படித்தவறேதும் பண்ண மாட்டார், இருப்பினும் நம் மனதில் ஒரு கீறல் விழுந்துவிட்டமையால இனிமேல் 100 வீதம் அவரை மனம் நம்பாது:).. தொட்டதுக்கெல்லாம் சந்தேகம் வரும் ஹா ஹா ஹா..

  இப்படித்தான், ஊரில் ஒரு வான் வச்சிருந்தவர், எயார்போர்ட் ட்ரிப்புக்களுக்கு வருவார்.. அவர் நீண்ட காலம் நமோடு கூட எல்லா இடங்களும் சுற்றுலாக்களுக்கெல்லாம் வந்து போனவர்.. நல்லவர்தான், இடையில தனிப்பட்ட முறையாக அப்பாவிடம் ஒரு பெரும் தொகை வாங்கி விட்டார் .. அப்பாவும் பாவமே என ரகசியமாகக் கொடுத்து விட்டார், பின்னர் அவர் திரும்பிக் கொடுக்கவுமில்லை, ட்ரிப்புக்கு கூப்பிட்டால் நேரமில்லை என சாக்குப்போக்கு சொல்ல வெளிக்கிட்டுவிட்டார்...

  அப்பா வீட்டில் அம்மாவிடமும் சொல்லி ஏச்சுவிழுமே எனும் பயத்தில, அவரோடு பேசிப்பேசி.. கொஞ்சம் பணமாகவும்... இன்னும் கொஞ்சம் ட்ரிப்பாக நம்மை ஏற்றியும்.. மிகுதியைப் போனால் போகுதென விட்டாச்சு..

  ஆனால் அவர் திரும்ப முதல் ட்ரிப்புக்கு வரும்போது நமக்கு உண்மை தெரியும், அதனால நாம் எல்லோரும் அப்பாவுடன் சண்டைபோட்டோம்... இவர் ஏமாத்திடப்போறார்.. அதுவும் எயார்போர்ட் ட்ரிப்.. ரைம் க்குப் போக வேண்டும், எதுக்கு இவரை ஒழுங்கு பண்ணினனீங்கள் என.. இரவு 2 மணிக்கு வந்து ஏத்தோணும் எம்மை, அந்நேரம் வேறு வாகனம் பிடிப்பதும் கஸ்டம்... எல்லோருக்குமே ரென்ஷன், அப்பா மட்டும் உறுதியாக இருந்தார், அவர் வருவார் என.. வந்துவிட்டார் ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///அப்பாவும் பாவமே என ரகசியமாகக் கொடுத்து விட்டார், //
   ஹாஹ்ஹா உங்கப்பாவுமா மியாவ் :) எங்க அப்பாவும் எங்களுக்கு தெரியாம செஞ்சி மாட்டி இருக்கார் 

   நீக்கு
  2. ஹா ஹா ஹா அப்பாக்கள் எல்லாம் இப்படித்தான் போலும் ஆனா ஆத்துக்காரர்கள் இப்படி இல்லையாக்கும்:)) பிக்கோஸ் நாமெல்லாம் பயங்கர உசார் ஆச்சே:)) ஹா ஹா ஹா:)..

   நீக்கு
  3. அதானே :)))))))) நமக்கு தெரியாம செஞ்சிடத்தான் முடியுமோ :) நான் லாம் குலோப்ஜாமூனை செஞ்சுவைச்சாலும் எத்தனை செஞ்சிருக்கேண்ணே கணக்கு பண்ணி வைப்பேன் ஹைட் அகலம் குறைஞ்சாலும் அலாரம் அடிக்கும் :) 

   நீக்கு
  4. உங்கள் அனுபவங்களையும் படித்து ரசித்தேன் அதிரா...   ஸாரி உங்கள் அப்பாப்பாவின் அனுபவங்கள்..    என் மாதிரி இருக்கிறார் அவர்!  அல்லது அவர் மாதிரி இருக்கிறேன் நான்.

   நீக்கு
 31. லொக்டவுண் உணவுகளை இனி நம் வாழ்நாளில் மறக்க மாட்டோம்ம்.. அத்தோடு இப்படி ஒரு காலம் இனி இந்த ஜென்மத்தில் வராதுதானே:)) நாம் அனுபவிக்கக் கொடுத்து வச்சிருக்கிறோம்..:)..

  பிர்ட் சில்லி ஃபிறை... ஆசையைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 32. ஆஆஆ !! ஆட்டோக்காரர் செய்தது தவறு .எங்கப்பாகூட உங்களை மாதிரிதான் நிறைய பேருக்கு உதவி செஞ்சிருக்கார் எதுவும் திரும்பி  வந்ததில்லை .ஆனா இந்த பணம் என்பது நல்ல குணத்தை நல்ல நட்பை அப்படியே தலைகீழாக்கிடும் :(கூடுமானவரை பணஉதவியை இல்லாதோருக்கே செய்யணும் ஸ்ரீராம் நான் அப்படிதான் செய்வது .அந்த ஆட்டோட்ரைவர் சான்றிதழை வைத்துக்கொண்டது திருப்பித்தராம டிலே செய்தது மிகவும் தவறு .அது சரி இப்பவாச்சும் சான்றிதழை  வாங்கி வச்சாச்சா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சான்றிதழைக் கொண்டுதானே வந்திருக்கிறார்போலும் நேரில் சந்திக்க:)).. அதனை வேறு ஆரிடமாவது கொடுத்து அனுப்பியிருந்தால், நேரில் சந்திக்க சாட்டு இல்லை என்பதால, கொடுக்காமல் வச்சிருந்திருக்கிறார்ர்...

   ஹா ஹா ஹா இனிமேல் ஸ்ரீராமுக்கு ஒரு கான்ட்பாக் குடுக்கோணும்:)) அப்போதான் எதையும் வாகனத்தில் வைக்க மாட்டார்:)).. ஆனால் காண்ட்பாக்கையே வச்சிட்டு எடுக்க மறந்திட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்?:)) ஃபோனில எலாமும் வைக்கொணும் காண்ட் பாக்கை எடுக்கோணும் என எலாம் அடிச்சதும்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  2. இல்லை ஞான எலி :) அது அந்த ஆ.காரர் ..ஆட்டோக்காரரை சுருங்க சொன்னேன் :)இனிமே ஸ்ரீராம் தனது பெர்மனண்ட் கஸ்டமர் அதனால் சான்றிதழ ஆட்டுவிலே நிரந்தரமா யிருக்கட்டும்னு செய்யலாமில்லையா :)

   நீக்கு
  3. //ஆ.காரர் ..ஆட்டோக்காரரை சுருங்க சொன்னேன் //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆத்துக்காரர் என நினைச்சிடப்போகினம்:))..

   //ஸ்ரீராம் தனது பெர்மனண்ட் கஸ்டமர்///
   இல்ல இல்ல ஸ்ரீராம் இப்போ “காசிக்குப் போகும் சந்யாசி” ஹா ஹா ஹா

   நீக்கு
  4. நான் என்ன செய்திருக்கிறேன் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள்!

   நீக்கு
 33. ஸ்ரீராம் நீங்கள் அபுரி சொல்லும்போதெல்லாம் அதன் அர்த்தம் “புரியவில்லை” என புரிஞ்சுகொண்டேன்:)).. ஆனாலும்.. விரிவாகம் என ஒன்று இருக்கும் என நினைச்சேன்.. அப்படி இல்லைப்போலும்.. கதைப்பக்கம் படிச்சும் கண்டுபிடிக்க முடியவில்லை..
  அதாவது ஆதோஅவ எனில் ஆசை தோசை இப்படி விளக்கம் இருப்பதைப்போல.. அ..பு.. ரி.. மூன்று வார்த்தைகளின் தொகுப்பு என நினைச்சிருந்தேன்.. அப்படி இலைப்போலும்...

  அபுரி என்றால்.. புரியவில்லை....என அர்த்தம் இதைப் பார்த்ததும் என் பக்கம் போட்ட நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருது...

  நண்பன்1: ஐ ஆம் கோயிங் 2 ஸ்லீப்.. இதுக்கு அர்த்தம் சொல்லுடா..

  நண்பன் 2: நான் தூங்கப்போகிறேன்ன்ன்

  நண்பன்1: பிளீஸ்டா இதுக்கு அர்த்தம் சொல்லிட்டுத் தூங்குடா:))

  ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...  இதே மாதிரி நான் இன்னொன்று கேள்விப்பட்ட நினைவு.  இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை.

   நீக்கு
 34. லாக் டவுன் ஸ்நாக்ஸ் சுவையா இருக்கு எங்க வீட்ல அப்பா மகள் கூட்டணில நிறைய தயாரானது :)  நான் இல்லா நேரம் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நான் இல்லா நேரம் //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சு பொருட்பிழை விட்டிட்டா.. மீ கரெக்ட் பண்ணிடுறேன்ன்ன்.. அது “நான் தூங்கும் நேரமும்” என வந்திருக்கோணும்.. பிளீஸ் மாத்திக் கரெக்ட்டாப் படியுங்கோ:))

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர் ஜெலஸ் பூனை :)

   நீக்கு
  3. /// நான் இல்லா நேரம் //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏதோ வாரத்தில ஒரு பத்து மணித்தியாலம் வேலைக்குப் போயிட்டு வந்து.. இவ்ளோ பில்டப்பூஊஊஊஊஊஊஊ விடுங்கோ என்னை விடுங்கோ மீ காசிக்கே போயிடுறேன்ன்ன்ன்:))

   நீக்கு
  4. எல்லா இடங்களிலும் கூட்டணியில்தான் உருவானது போலும்!

   நீக்கு
 35. ஆஆஆ அப்போ அபுரி அவரோடதா :)
  அ .வ .சி , விவிசி மாதிரில்லா நினைச்சேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹெல்லோ, ஏஞ்சல்! அ/வ/சி, விவிசிக்கு நாங்க காப்பிரைட் வாங்கி வைச்சிருக்கோமாக்கும்! :))))))

   நீக்கு
  2. ஹாஹாஹா கீதாக்கா :) அது உங்கள் வசனமா :) ஓகே ஓகே :) 

   நீக்கு
  3. விவிசி எண்டால்ல்.. விக்கி விக்கிச் சிரித்தல் எனப் பொருளாக்கும்:)))

   நீக்கு
  4. அவசி எண்டால் அடக்கி வச்சுச் சிரித்தல் எனப் பொருள்:))

   நீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிஞ்சு ஞானவில்லி, சேச்சே, வல்லி, அ.வ.சி என்றால் அசடு வழியச் சிரிக்கிறேன்/ விவிசி என்றால் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் என்று பொருள்.

   நீக்கு
  6. ஆஆஆஆஆஆஆ கீசாக்கா அப்போ சி என்றால் சிரிப்பதுதானோ? அவ்வ்வ்வ்வ் ச்சும்மா சொல்லிப் பார்த்தேன் பொருந்திவிட்டதே.. ஹா ஹா ஹா

   நீக்கு
  7. LOL = Laughed out loud = வா வி சி : வாய் விட்டுச் சிரித்தேன்
   ROFL = Rolled on floor with laughter. = வி வி சி : விழுந்து விழுந்து சிரித்தேன்.
   வி வி சி முகநூலில் பல வருடங்களாக புழக்கத்தில் உள்ளது.

   நீக்கு
  8. சுவையான அரட்டை, விவரங்கள்   எனக்கு இதெல்லாம் முன்பே தெரியுமாக்கும்!

   நீக்கு
 36. நீங்கள் சுஜாதாவிம் நல்ல கதைகள் என 4 தலைப்புச் சொன்னீங்கள் ஸ்ரீராம்.. அதில் 2 படித்து விட்டேன்.. ஜன்னல் மலர்கள்... மற்றது நினைவுக்கு வரவில்லை, நான் கிண்டிலில் படிச்ச புத்தகங்களைத் தொகுப்பாக எழுதோணும் என நினைச்சு இன்னமும் செய்யவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புக்கெல்லாம் படிக்கிறீங்க மியாவ் ..எனக்கு நிறைய ஆன்லைன் ட்ரெயினிங் தான் இப்போ அதைபடிக்கவே டைம் சரியா இருக்கு .

   நீக்கு
  2. புக் படிச்சு கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாகுது அஞ்சு... இப்போதெல்லாம் எங்கே இருக்குதாக்கும் நேரம் ஹா ஹா ஹா... லொக்டவுனில, நேரம்... புஸ்வாணம் போல பறக்குது கர்ர்ர்ர்:))

   நீக்கு
  3. கற்றதும் பெற்றதும் படியுங்கள் அதிரா...  

   நீக்கு
 37. கவிதை ஓகேயாக இருக்கிறது.. ஆனாலும் உங்கட சொத்தை.. ஐ மீன் ரசிகையை:) நீங்கள்தானே பாதுகாக்க வேண்டும்:).. அதைவிட்டுப்போட்டு இப்பூடிப் பப்ளிக்கில் அனைவரையும் ரசிக்கப் பண்ணலாமோ ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ஓடிடுறேன்ன்ன்ன்..

  “நாய்க்கு வேலையும் இல்லை, இருக்க + நிற்க நேரமும் இல்லை”.. ஹா ஹா ஹா இது எனக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ஸ்ஸ்ஸ் ரசிகையையா ?? இப்போ யார் யாரை ரசிக்கிறார் எனக்கு அபுரி :) 

   நீக்கு
  2. //உங்கட சொத்தை.. ஐ மீன் ரசிகையை:)// ஆஆ! அனுஷ் ஸ்ரீராமின் ரசிகையா? இப்போதுதான் கிண்டலில் ஒரு புத்தகம் பதிப்பித்திருக்கிறார், அதற்குள் அனுஷ் ரசிகையாகிவிட்டாரா? சொல்லவேயில்ல..அல்லது அதிரா அவர் பெயரை அஞ்ஞானவல்லி என்று மாற்றிக் கொள்ள வேண்டுமோ? அவர் வருவதற்குள் நான் எஸ்கேப்..

   நீக்கு
  3. //Angel2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:36
   ஸ்ஸ்ஸ்ஸ் ரசிகையையா ?? இப்போ யார் யாரை ரசிக்கிறார் எனக்கு அபுரி :) ///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு தமிழில் டி வாங்கிய பிள்ளை[என்னைச் சொன்னேன்:)).. பொருட் பிழை விடுவேனோ?:)) ஹா ஹா ஹா சமாளிச்சிட மாட்டேன்ன்ன்:))..

   //இப்போதுதான் கிண்டலில் ஒரு புத்தகம் பதிப்பித்திருக்கிறார், அதற்குள் அனுஷ் ரசிகையாகிவிட்டாரா? //
   ஆஆஆஆஆஆஅ பானு அக்கா குறுக்காலே வந்து என்னைக் காப்பாற்றிப் போட்டா:)) ஹா ஹா ஹா ... அதானே நெடுகவும் ஸ்ரீராம் தான் அனுக்காவுக்கு ரசிகராக இருக்க வேண்டுமோ:)).. ஒரு சேஞ்சுக்காக இப்போ அனுக்காவை ஸ்ரீராமின் ரசிகையாக்குவோம்ம் ஐ மீன் கிண்டிலை முழுவதும் முதலாவதாகப் படிக்கும் மானசீக ரசிகை ஆக்கும் அனுக்கா:)) ஹா ஹா ஹா

   ///அல்லது அதிரா அவர் பெயரை அஞ்ஞானவல்லி என்று மாற்றிக் கொள்ள வேண்டுமோ?//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது அனுக்காவுக்கே பொறுக்காதாக்கும்..க்கும்..க்கும்..:))

   நீக்கு
  4. ஆஆஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழன் இப்போ எங்கே ஓடுகிறார்:)).. ஓ அவரும் மின்னூல் வெளியிட்டு தமனாக்காவை ரசிகையாக்கவோ:)) ஹையோ வைரவா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணூ+ அப்பாவீஈஈஈஈஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. கவிதையை ரசித்ததற்கு அனைவருக்கும் நன்றி.   கவிதை என்று நான் சொன்னது நான் எழுதிய கவிதையை மட்டும் அல்ல என்று உங்களுக்கும் தெரியும்!

   :)))

   நீக்கு
 38. குடும்பத்தில் ஒருவர் போல பழகியவராச்சே!//

  "குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை " என்று சொல்வார்கள், குடும்பத்தில் ஒருவர் என்று சொல்லி விட்டீர்கள் அப்புறம் குற்றங்களை மறந்து விட வேண்டியதுதான்.

  //பாஸ்-இளையவன் கூட்டுத் தயாரிப்பில் உருவான சில மாலை நேர நொறுக்ஸ்!//
  முக நூலில் பார்த்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பாஸ்-இளையவன் கூட்டுத் தயாரிப்பில் உருவான சில மாலை நேர நொறுக்ஸ்!//
   முக நூலில் பார்த்து இருக்கிறேன்.// அட!!!!!!!!!!!!!!!! எனக்கு அதெல்லாம் வரவே இல்லையே! ஆதி போடுவது தான் உடனே வரும். :)))))

   நீக்கு
  2. வாங்க கோமதி அக்கா...  நன்றி.

   கீதா அக்கா..  நீங்கள் பார்த்து ஏதோ கமெண்ட் போட்ட ஞாபகம்.

   நீக்கு
 39. அபுரி விளக்கம் நானும் தெரிந்து கொண்டேன்.
  கவிதை நன்றாக இருக்கிறது மழை சாரலில் நனைந்தவரும் நன்றாக இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 40. உங்க ஆட்டோக்காரர் மாதிரியே எனக்கும் இது போன்ற அனுபவங்கள் வேலை செய்யும் பெண்மணியிடம் இருந்து பிரச்னை வந்திருக்கிறது. பிறகு நானும்சேர்த்துக்கொண்டேன் . நாம் பழகும் மனிதரில் இவர் பத்தாயிரத்தில் ஒருவர் இங்கே என்ன வீம்பு வேண்டிக்
  கிடக்குது என்கிற லாஜிக்கில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  அதுதான் உண்மை.  என்ன தூக்கிக்கொண்டு போகப்போகிறோம்!

   நீக்கு
 41. வணக்கம் சகோதரரே

  தங்கள் ஆஸ்தான ஆட்டோகாரர் பற்றி நல்லவர் என்று அடிக்கடி பதிவில் சொல்லியுள்ளீர்கள். இப்படி அவசரத்திற்கு பணம் கேட்ட பின் கொடுக்கவில்லை யென்றால் இத்தனை நாள் நட்புடன் பழகிய பழக்கத்தை நிறுத்துவது சரியா? பிறகு யார் சொல்லியோ, இல்லை, மனசாட்சி உணர்த்திய உணர்ந்துள்ளார் போலும்..! என்ன செய்வது? உறவுகளிலும் சில சமயம் இப்படித்தான் நெருடல்கள் வரும். எங்களுக்கும் அதுபோல் வந்துள்ளது. இன்னமும் சரிவர நீங்கவில்லை.

  இப்போது அவரிடம் நீங்கள் தந்துள்ள பழைய பாக்கியை பற்றி கேட்க முடியாத சூழ்நிலை என நீங்கள் கூறுவதை நானும் ஆமோதிக்கிறேன். ஆயினும் தங்களுடைய அவசிய சான்றிதழ்களையாவது வாங்கி வைத்துக் கொள்ளலாம். மனித மனம் தீடிரென மாறும் இயல்புடையதுதானே..!

  அழகான வரிகளுடன் பிறந்த கவிதை அருமை. அதற்கு வந்த கருத்துரைகளையும் படித்து ரசித்தேன். கவிதையை ரசித்து அனுவும், கண்மூடி மழையை கூட பொருட்படுத்தாது நனைந்தபடி ரசிக்கிறார்.

  தங்கள் வீட்டு தயாரிப்பான ஸ்நாக்ஸ் படங்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது.இவற்றையெல்லாம் திங்கள்தோறும் விவரணையுடன் சேர்க்கலாம் என எல்லோரையும் போலவே நானும் நினைக்கிறேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.கதம்பம் அருமையாக உள்ளது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  2. //திங்கள்தோறும் விவரணையுடன் சேர்க்கலாம் என// - ஹா ஹா ஹா. நீங்க சொல்ற ஐடியா, சரவணபவன்ல போண்டா ரொம்ப நல்லா போடறீங்க, நீங்களே முழுசையும் சாப்பிட்டுவிடலாமே என்று சரவணபவன் முதலாளிகளைப் பார்த்து (அல்லது பிராஞ்ச் மேனேஜரைப் பார்த்து) சொல்ற மாதிரி இருக்கு. அப்புறம் கஸ்டமருக்கு என்ன பாக்கி இருக்கும்?

   இப்போவே செய்முறை அனுப்பினா, ஆனி போய் ஆவணில போட்டுடுவோம் என்று சொல்றாங்க. இப்போ ஸ்ரீராமும், ஊரடங்கு சாக்குல தி.பதிவு எழுத ஆரம்பிச்சார்னா, அப்புறம், அடுத்த ஆனிக்குத்தான் மத்தவங்க அனுப்புறது வெளியாகும்.

   இருந்தாலும், எனக்கு எபி ஆசிரியர்களும் மற்றவர்களுமே தி.பதிவுகள் எழுதணும்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  3. (நீங்க சொல்ற ஐடியா, சரவணபவன்ல போண்டா ரொம்ப நல்லா போடறீங்க, நீங்களே முழுசையும் சாப்பிட்டுவிடலாமே என்று சரவணபவன் முதலாளிகளைப் பார்த்து (அல்லது பிராஞ்ச் மேனேஜரைப் பார்த்து) சொல்ற மாதிரி இருக்கு. அப்புறம் கஸ்டமருக்கு என்ன பாக்கி இருக்கும்?/

   ஹா.ஹா.ஹா. அது சரி.. நான் அப்படியா சொன்னேன்.? அவர் நம் திங்கப் பதிவுகளுக்கு நடுவில் அவரது இல்லத் தயாரிப்புகளை பிரசுரித்தால், அதைப் பார்த்து அதே போன்ற நம் பக்குவத்தையும் நம் வீட்டில் செய்து அசத்தலாமே என்றுதான் சொன்னேன்..!

   சமீப காலமாக உங்களது பதிவுகள் திங்களன்று வரக்காணோமே? விரைவில் (ஆவணியிலாவது) உங்களது நளபாகத்தை எதிர்பார்க்கிறேன்.

   நானும் ஒன்றிரண்டு பழைய பணிகளில் எழுதி வருகிறேன். (அதை அடுத்த ஆவணியில் எதிர்பார்க்கலாம். ஹா ஹா ஹா.) நன்றி சகோதரரே.

   நீக்கு
  4. பழைய பாணிகளில் எனப் படிக்கவும்.

   நீக்கு
 42. நிறைய பதிலுக்கு பதில் சொல்ல ஆசை.  ஆனால் கடும் பணிச்சுமை.  

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!