வெள்ளி, 11 செப்டம்பர், 2020

வெள்ளி வீடியோ : இளைய பாரதத்தினாய் வா வா வா எதிரிலா வலத்தினாய் வா வா வா

எம் எஸ் பாடல்களில் எனக்குப் பிடித்த இரண்டு பாடல்களை இங்கு பகிர்கிறேன்.

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!  
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிபடைத்த மொழியினாய்  வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 
தெளிமை பெற்ற மதியினாய்  வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
ஏறுபோல் நடையினாய் வா வா வா 

மெய்மை கொண்ட நூலையே 
அன்போடு வா வா வா 
வேதமென்று போற்றுவாய் வா வா வா 
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா 
நொய்மையற்ற சிந்தையாய்  வா வா வா 
நோய்களற்ற உடலினாய் வா வா வா 
தெய்வ சாபம் நீங்கவே -நீங்கள் சீர்த் 
தேசமீது தோன்ருவாய் வா வா வா 

இளையபார தத்தினாய் வா வா வா 
எதிரிலா வலத்தினாய் வா வா வா 
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும் 
உதய ஞாயிரறோப்ப  வா வா வா 
களையிழந்த நாட்டிலே-முன்போலே 
கலைசிறக்க வந்தனை வா வா வா 
விளையுமாண்பு யாவையும் -பார்த்தன் போல் 
விழியினால் விளக்குவாய் வா வா வா 

விந யநின்ற நாவினாய்  வா வா வா 
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா 
முழுமைசேர் முகத்தினாய வா வா வா 
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா 
கருதிய தியற்றுவாய் வா வா வா 
ஒற்றுமைக்கு ளுய்யவே -நாடெல்லாம் 
ஒரு பெருஞ் செயல்செய்வாய் வா வா வா 


அப்படியே இதையும் பார்த்து, கேளுங்க *என் சாய்ஸ் - kgg "
61 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்.அன்பு ஸ்ரீராம்.
  இரண்டும்

  அருமை.
  ஆசை ஆசையாய்ப் பாடும் பாடல்கள்.
  எத்தனை வீர்யம் மஹா கவியின் சொற்களில்!!!

  களையிழந்த நாட்டிலே முன் போலே
  களை சிறக்க வந்தனை வா வா.
  அதே போல் நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

  மன எழுச்சி கொடுக்க இந்தப் பாடலைப்
  போல ஏது.!!!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. சிங்காரவேலனே தெய்வீகம்.
  குழந்தையும் அழகு. அம்மாவும் அப்பாவுமோ?

  இசை பெருக வாழவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. ம்காகவியின் நினைவு தின சிறப்புப் பதிவு..

  பதிலளிநீக்கு
 5. வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
  வையக மாந்தரெல் லாம்,
  தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
  ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.///////////ஓம் ஓம் ஓம்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மஹாகவிக்குச் செய்திருக்கும் அஞ்சலி அருமை. கேஜிஜியின் பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டே எழுதுகிறேன். அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 7. கொஞ்சும் சலங்கை பாடல் உலகம் அழியும்வரை ரசிக்கப்படும் கானம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பாடலை வரைந்த கு.மா.பாலசுப்ரமணியத்தையும், தேவ இசையை மண்ணில் இறக்கிவிட்ட எஸ்.எம். சுப்பையா நாயுடுவையும் கூடவே நினைவுகூரல் நல்லது.
   எஸ்.ஜானகிக்கு இந்த ஒரு பாடலே போதும், எப்போதும் பேர் சொல்ல.

   நீக்கு
 8. பாரதியின் இரு பாடல்கள்....மிகவும் ரசித்தேன். நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

  ஆவேசத்துடன், வீர தீரத்துடன் பாடவேண்டிய வரிகள், பாடுகிறவர்கள் மென்மையாகப் பாடி காதுக்கு இனிமையாகப் பாடினாலும் பாடலின் உணர்ச்சி அதில் வரவில்லை என்பது என் அபிப்ராயம். செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடலில் அத்தகைய வித்யாசம் தெரியவில்லை. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் போன்ற பாடல்களிலும் எழுதியவரின் மனநிலையை பாடுபவர் கொண்டுவந்திருந்தார்.

  பதிலளிநீக்கு
 9. நம்புவதே வழி என்ற மறைய தன்னை - ஏதோ தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. மறையதனை என்று வரணுமா. இல்லை அதன்னை என தமிழில் எழுத முடியுமா என சந்தேகம் வருது.

  இரண்டாவது பாடலில் இரு இடங்களில் வார்த்தைகள் காணவில்லை, சந்தம் இடிப்பதுபோல் உள்ளது. (அன்போடு, கலைசிறக்க வந்தனை, )

  பிறகு சரிபார்க்கணும்.

  சந்தப் பாடல்கள் படிப்பதற்கே பேரின்பம்.

  பதிலளிநீக்கு
 10. எடுத்தவுடனேயே சிங்கார வேலனிடம் போய்விட்டதால், லயித்திருக்கிறேன்..
  மற்றதற்கு வர நேரமாகும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! தெய்வீகமான பாடல். இந்தப் படம் வெளிவந்த பிறகு, சிக்கல் சிங்காரவேலரை தரிசித்தபோதெல்லாம் இந்தப் பாடல் காட்சிதான் ஞாபகம் வரும். அப்பொழுது நாகையிலிருந்து சிக்கல் சிங்காரவேலர் கோவில் சைக்கிளில் செல்லும் தூரம்தான்.

   நீக்கு
  2. நாகைக்குப் பக்கத்திலா சிக்கல்? போனதில்லை.
   திருச்செந்தூர் போயிருக்கிறேன் எப்போவோ.. காலம் நினைவிலில்லை. மற்ற அறுபடைவீடுகளுக்குப் போனதாய் நினைவில்லை.

   நீக்கு
  3. நாகை to திருவாரூர் ரயில் மார்கம் : நாகப்பட்டினம், அந்தணப்பேட்டை, சிக்கல், கீழ்வேளூர் (கீவளூர்), கூத்தூர், அடியக்கமங்கலம், திருவாரூர்.

   நீக்கு
  4. சிக்கல் சிங்கார வேலரை இருமுறை தரிசித்திருக்கிறேன். ஒரு முறை அவசர கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்த பெருமாள் சன்னதிக்குச் சென்றிருக்கிறேன்.

   வீரசைவர்கள் போல வீர வைஷ்ணவர்களைப் பற்றியும் எழுதலாம் போல.

   நீக்கு
  5. சிக்கல் திருவாரூருக்கு அருகில் இருப்பதாக நினைத்தேன். சிக்கல்,எட்டுக்குடி, எண்கண் மூன்றும் அருகருகேதானே இருக்கின்றன.? இந்த மூன்றையும் இணைத்து  ஒரு கதை  உண்டே? 

   நீக்கு
  6. எல்லாமே அருகருகே அமைந்துள்ள ஊர்கள். கதை என்ன? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அல்லது வாட்ஸ் அப் வீடியோவில் சொல்லி அனுப்புங்கள்.

   நீக்கு
  7. கீழக்கரை, ஏர்வாடி அருகிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அருகே "இளஞ்செம்பூர்" நடிகர் செந்தில் ஊர்.

   நீக்கு
  8. http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_07.html

   http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_08.html

   http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_09.html

   சில்பா சிற்பி பற்றிய இந்தக் கதையைத் தான் பானுமதி சொல்கிறார் என நினைக்கிறேன். நாங்க மூன்று கோயில்களுக்குமே போனோம். எட்டுக்குடியில் தான் நம்ம ரங்க்ஸ் வழுக்கி விழுந்து பாதியில் ஊர் திரும்பினோம். அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் எண்கண் போனோம்.

   நீக்கு
  9. http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_8297.html கந்த சஷ்டியை ஒட்டி எழுதிய பதிவுகள். சுமார் பத்து இருக்கலாம். நேரம் இருந்தால் படிப்பதற்காகச் சுட்டிகளைக் கொடுத்திருக்கேன். முடிந்தால் படிக்கவும். ஆனால் இந்தப் பதிவுகளில் தான் முதல் முதலாக கௌதமன் அவர்கள் வந்து கருத்துச் சொன்னதாய் நினைவு.

   நீக்கு
  10. ஆமாம், இந்த சிற்பியின் கதையேதான். உங்கள் பதிவுகளைப் படித்தேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். 

   நீக்கு
  11. @ பானுமதி! என் வேண்டுகோளுக்கு இணங்கிப் படித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. பாரதியை ரசிக்கும்படி நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். எல்லாமே மிகவும் இனிமையான பாடல்கள். 'சிங்கார வேலனே தேவா ..' பாடலை ப்ரியங்கா என்னும் பெண் சூப்பர் சிங்கரில்(ஜுனியர்)  மிகவும் அருமையாக பாடினார். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

   நீக்கு
  2. உண்மையில் நான் அதைத்தான் தேடினேன். அப்படி தேடும்போது, இந்த காணொளி கிடைத்தது. இதில் அந்த சிறுவனின் முகபாவங்கள் என்னை ரொம்பக் கவர்ந்தது. அதனால்தான் இதை வெளியிட்டேன்.

   நீக்கு
 13. திகட்டாத தேன் மழையில் நனைத்து விட்டீர்கள்..

  இத்தகைய அமுதூற்றுகள் பொங்கித் ததும்பும் இத்திருநாட்டில் ஒரு புல்லாய்ப் பிறந்திருக்கவும் பெருந்தவம் செய்திருக்க வேணும்..

  என்ன தவம் செய்தனை மனமே!..

  அறிந்தேன். உணர்ந்தேன்.. உய்ந்தேன்!...

  பதிலளிநீக்கு
 14. பகிர்ந்த மூன்று பாடல்களும் பிடித்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
  சிங்காரவேலன் பாடல் அருமை, குழந்தைக்கு மேடை பயம் இல்லை பாட்டிலை வைத்துக் கொண்டு விளையாடுகிறான். அம்மாவைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது, என் சிறு வயதில், நான் சென்ற கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் ஞாபகம் வந்தன. கச்சேரி கேட்க, என் அம்மா என்னை துணைக்கு அழைத்துச் செல்வார்கள். அம்மா பக்கத்தில் உட்கார்ந்து, என் அம்மா கச்சேரி கேட்டு ரசிப்பதையும், பாடகர் பாடுவதையும், முக்கியமாக மிருதங்க வித்வான் தனியாவர்த்தனம் வாசிப்பதையும் பார்த்து, கேட்டு ரசிப்பேன்.

   நீக்கு
  2. அம்மா அவர்களை போல உங்களையும் சங்கீத ரசிகர் ஆக்கி விட்டார்.

   நீக்கு
 15. எத்தனை முறை கேட்டாலும் எப்போதும் ஈர்க்கும் சிங்கார வேலனே பாடல்...

  பதிலளிநீக்கு
 16. காலையில் பாடலைக் கேட்டுக்கொண்டே எழுதியதில் சின்னப் பயலைப் பார்க்கவில்லை. இப்போ மறுபடி போட்டுக்கேட்டுக்கொண்டே பார்த்தேன். சமர்த்துப் பயல்! அந்தப் பெண்ணின் குரல் வளம் வியக்க வைக்கிறதெனில் அதை அப்படியே எதிரொலிக்கும் நாதஸ்வரம், இது இனியும் பிழைக்க வாய்ப்புள்ளது எனச் சொல்லாமல் சொல்கிறது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. காரம், சாரம், மணம், குணம் நிறைந்த எங்கள் பாரதியின் வார்த்தைகள்..
  காலமெலாம் ரீங்காரமிடும், மகிழ்விக்கும்; இசைக்கும் மனிதரும் மிகுந்திடுவர்!

  பதிலளிநீக்கு
 18. சிங்கார வேலன் பாடல் நல்லா இருந்தது...ஆனால் யாழ் நகர், நல்லூர் நிகழ்ச்சி என்பதைப் பார்த்ததும்..... காலம் யாழ்ப்பாணத் தமிழர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது நினைவுக்கு வந்துவிட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா! ஆனால் இது 2015 ஆம் வருட நிகழ்ச்சி அல்லவா?

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  மஹா கவியின் நினைவு நாளை ஒட்டி இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. எம். எஸ் அவர்களின் குரல் வளத்தில் பாடல்களின் கம்பீரம் ஈர்க்கிறது.
  இறுதியில் உங்கள் சாய்ஸ் சிங்கார வேலவனும் அழகான பாடல். பாடியவர்களின் திறமைக்கும், அதை ரசித்தபடி அமர்ந்திருக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகள். சூப்பர் சிங்கர் ஆரம்பமா, இல்லை அடுத்ததிலா எனத் தெரியவில்லை. அதில் கலந்து கொண்ட குழந்தை அல்கா அஜித் இந்தப்பாடலை மிக அழகாக பாடியது நினைவுக்கு வந்தது. அழகான பாடல்களை இன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம். பாடல்களை இனிமேல் தான் கேட்க வேண்டும். இப்போது தான் வல்லிம்மாவின் தளத்தில் மஹாகவி பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  இங்கே பகிர்ந்த பாடல்களும் கேட்பேன்! தொடர்ந்து! :)

  தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 21. மூன்று பாடல்களையும் கேட்டு ரசித்தேன். எம்.எஸ். அவர் பாடலுக்குக் கேட்கவா வேண்டும் - நன்றாகவே இருந்தது. மூன்றாவது கேஜிஜியின் சாய்ஸ் பாடலும் நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!