வெள்ளி, 25 செப்டம்பர், 2020

மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா

வெளிவந்த வருடம் 1965.  இயக்கம் பி. மாதவன்.  திரைக்கதை : கே பாலச்சந்தர்.  கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசை.

படம் : நீல வானம்.


என்னைப்பொறுத்தவரை இந்தப் படத்தில் எனக்குப் பிடித்தது மூன்று பாடல்கள், முறையே ஓ லிட்டில் ஃபிளவர், ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே, சொல்லடா வாய்திறந்து ஆகிய பாடல்கள்.

முன்னரே லிட்டில் ஃபிளவர் பாடல் பகிர்ந்தாச்சு என்று ஞாபகம்.  எனவே இன்று 'ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே' பாடல்.


ராஜஸ்ரீயைக் காதலித்து விட்டு தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் தேவிகாவை மணம் செய்வார் சிவாஜி.  அப்புறம் என்னாச்சு என்பதுதான் கதை.


பி. சுசீலாவின் குரலில் அற்புதமான பல பாடல்களில் இதுவும் ஒன்று.  கண்ணதாசன் வரிகள் பாடலுக்கு வலு!  

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே

ஓடோடிச் சென்று காதல் பெண்ணின் உறவைச் சொல்லுங்களே
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின் நிலையைச் சொல்லுங்களே

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆகலாம்
ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம்

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம்
காலதேவன் கோயில் மீது பாசதீபம் காணுவோம்

  
====
ஹி ஹி அடுத்த பாடல் (kgg தேர்வு)
சி யின் தெ ரசிகர்களுக்கு மட்டும்.
(கீ சா மேடம் போன்ற) சி கே கள் மன்னிக்கவும்!

====

57 கருத்துகள்:

 1. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான பாடல்...
  மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..

  பதிலளிநீக்கு
 3. இரவும் நிலவும் வளரட்டுமே!...

  தாத்தாக்களின் பழைய நினைவுகளில் பேராண்டிகளுக்கு சந்தோஷம்!...

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம். இடுகையை முழுமையாக அப்புறம் படிக்கிறேன்.

  எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நிலை நல்லா இல்லை எனக் கேள்விப்படறேன். அதற்கு ப்ரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை... காலை வணக்கம். எஸ் பி பிக்காக பிரார்த்திப்போம்.

   நீக்கு
 5. இந்த நாள் இனிய நாளாகட்டும்.
  இந்த காலை நற்செய்திகளையே தரட்டும்.
  இறைவன் என்றும் நம்முடன் இருந்து
  காத்திடப் பிரார்த்தனைகள்.
  அன்பு ஸ்ரீராம், அன்பு துரை, அன்பு நெல்லைத்தமிழன் அனைவருக்கும்

  நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. வாங்க வல்லிம்மா.. வணக்கம். இனிதாகட்டும் இனி வரும் நாட்கள்..

   நீக்கு
 6. ஓஹோஹோ பாடல் என்றும் நினைவில் வலம் வரும்.
  சுசீலா அம்மாவின் குரலும்
  பாடல் வரிகளும் மிக மிக இனிமை. அந்தக் குரலை இசையைக் கேட்கவைத்த இறைவனுக்கு நன்றி.
  இதேபோல இன்பத்தேனை நம் செவிகளில் இன்னும்
  சேர்த்து வரும் எஸ்பி பி சார் இந்த பூட்டுக்குப் பிழைக்க வேண்டும்.
  மனம் நிறையப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா... இணைந்து அனைவரும் பிரார்த்திப்போம்.

   நீக்கு
 7. கௌதமன் ஜி யின் சாய்ஸும் நலம் தான்.

  பால முரளி கிருஷ்ணா , சுசீலா அதுதான் மாற்றம்.
  அதே கோவில். அதே சிற்பங்கள். இதே பேலூர், ஹலபேடு
  கோவில் சிற்பனகளை. 1969 டிசம்பர் மாதப் பயணத்தில்
  சிங்கம் படங்கள் எடுத்து சேமித்தார்.
  இன்னும் சில படங்கள் இருக்கின்றன.
  நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பயமுறுத்தும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. நல்லபடி அனைத்தும் அடங்கி எல்லோர் வாழ்க்கையிலும் நலமே விளையப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 10. நீலவானம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தேன். எப்போவும் போல் பாஸ் தான். ஆனால் கர்ணன் படம் தியேட்டரில் பார்த்தேனா இல்லையா என்பது நினைவில் இல்லை. "உயர்ந்த மனிதன்" படத்தைப் போல் இதையும் தண்டனையாகச் சில முறைகள் பார்க்கவைக்கப்பட்டேன் என்பது மட்டும் நினைவில் இருக்கு. பின்னாட்களில் தொ"ல்"லைக்காட்சிகளிலும் போட்டார்கள். சமீபத்தில் டிஜிடலாக்கப்பட்டதாகச் சொல்லிப் படுத்தினார்கள். நேரம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... படத்தை விடுங்கள்.. பாட்டை ரசியுங்கள்!

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   இன்றைய பாடல்கள் இரண்டும் அருமை.
   நீலவானம் படம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். இயல்பான சிவாஜி, தேவிகா இருவரின் நடிப்பும் நன்றாக இருக்கும். பாடல்கள் பல முறை கேட்டு ரசித்துள்ளேன். இன்றும் இரு பாடல்களையும் கேட்டு ரசிக்கிறேன்.

   கர்ணன் தெலுங்கு டப்பிங்கா ? அதுவும் (தமிழில்) தியேட்டரில் பார்த்துள்ளேன். அதன் பாடல்களும் அருமையாக ரசிக்கும்படி இருக்கும்."உள்ளத்தில் நல்ல உள்ளம்" உருக்கமான பாடல். பழைய பாடல்கள் மனதுள் என்றுமே நிற்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. நன்றி கமலா அக்கா. கர்ணன் தெலுங்குப் பதிப்பு பார்த்திருக்கிறீர்களா?

   நீக்கு
  4. அதென்ன, அந்தப் பாடல் கேஜிஜி தெ.ரசிகர்களுக்கு மட்டும்னு சொல்லி இருக்கார்? த.ரசிகர்களுக்காகத் த.பாடலையும் பகிர்ந்திருக்கலாம் இல்லையோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  5. //நீலவானம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தேன்.// நான் நீலவானம் வாரத்தில் பல முறை பார்க்கிறேன், மழை இல்லாத நாட்களில்.

   அது சரி... அருமையான பாடல்... கர்ணன் படம். எந்த மொழியா இருந்தால் என்ன.... அருமையான இசை, பாடகர்கள், உணர்வு. நல்ல பகிர்வு

   நீக்கு
 11. இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது...

  பதிலளிநீக்கு
 12. குண்டு உடலமைப்பாக இருந்தாலும் முக பாவனை, நடை பாவனைகளை முக்கியப்படுத்தி கர்ணன் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த்ச்வர் சிவாஜி. சகட்டு மேனிக்கு மேலோட்டமாக சிவாஜியை மதிப்பீடு செய்வது அநியாயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜீவி ஸார். அந்தக் காலத்தில் குண்டு உடலமைப்பை எல்லாம் யாரும் அவ்வளவாக லட்சியம் செய்யவில்லை!

   நீக்கு
  2. //சிவாஜி. சகட்டு மேனிக்கு மேலோட்டமாக சிவாஜியை மதிப்பீடு செய்வது அநியாயம்..//

   நியாயப்படி இதற்குத் தான் நீங்கள் கருத்து சொல்லியிருக்க வேண்டும். அப்பொழுது தான் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

   நீக்கு
  3. ராயல்டி, ராயல்டி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பயனாளிகள் ராயல்டியை அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

   நீக்கு
 13. நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் 'ஓஹோஹோ! ஓடும் மேகங்களே..' பாடலும் ஒன்று. இன்றும் அந்தப் பாடலை முணுமுணுத்தபடி கணினியைத் திறந்தால், அதே பாடல்... !
  இரண்டாம் பாடலும் மிகவும் பிடிக்கும். ஆனால் ஏன் தெலுங்கு? 

  பதிலளிநீக்கு
 14. இரண்டாவது பாடல் கேட்டும் போது தமிழே காதில் தேனாக பாய்ந்தது...!

  பதிலளிநீக்கு
 15. ஓடும் மேகங்களே.. another susheela masterpiece. அது ஒரு காலம். அது ஒரு வாழ்க்கை. இனி இல்லை அது என்பது அயர்வு தருகிறது.

  நாராயண ரெட்டிகாருவின் வரிகளில் பாலமுரளி-சுசீலாவின் சுந்தரத் தெலுங்கும் கேட்க நன்றாக இருக்கிறது. வியாழன் இரவில் தெலுங்கு பாட்டுக் கேட்பவரா கேஜிஜி-ஜி!

  பதிலளிநீக்கு
 16. இந்தப் பக்கம் பாட்டைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் போனால்.. அதிர்ச்சி..
  என்றும் குரலினிமை, வளமை, இளமை காட்டி மகிழ்வித்த எஸ்பிபி அடுத்த உலகிற்குத் தேவைப்பட்டுவிட்டார்...

  அன்னாரின் ஆன்மா ஆண்டவன் கருணையில் அமைதியுறட்டும்.

  பதிலளிநீக்கு
 17. தான் பாடிய ஆயிரக்கணக்கான அமுதமான பாடல்களில் எப்போதும் வாழ்வார் அவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.

   எஸ்பிபி அவர்களுக்கு அஞ்சலிகள்.

   நீக்கு
  2. நோய் விட்டாலும் பாதிப்பு விடவில்லை. அமைதி பெறட்டும்.

   நீக்கு
  3. நானும் இன்று மதியம் எஸ் பி பி அவர்களின் மறைவு கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். சற்று குணமாகி வருவதாக செய்திகள் வரும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது. வளமான குரல் இனிமையால் நம்மை கட்டிப் போட்டவர்.அன்னமையாவில் அவர் பாடலை கேட்டால் உருகாத மனமும் உருகும். இறைவனும் அவ்வாறே உருகித்தான் அவரை அழைத்துக் கொண்டான் போலும்.. இறைவனின் நிழலில் இளைப்பாறும் அவர் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்தித்துக் கொள்வோம்.

   நீக்கு
 18. முதல் பாடல் பிடித்த பாடல்.
  இரண்டாவது இப்போது தான் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது.
  ஆனால் பாடலை கேட்கும் போது வாய் தமிழ்பாடல் வரிகளை பாடுகிறது.

  பதிலளிநீக்கு
 19. கேட்டிருக்கிறேன் இனிய பாடல்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!