வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வெள்ளி வீடியோ : இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் வாழ்பவன் மனிதன் என்றாராம்...

டயோஜீன்ஸ் ​என்றொரு கிரேக்க தத்துவஞானி.  "ஒரு மேதை பகல்வேளை கையில் விளக்குடன் சென்றாராம் என்று பாடல் வரி கேட்டிருப்பீர்களே...   அந்த மேதை இவர்தான்.சாக்ரடீஸின் சீடர் இவர் குரு.  கந்தலாடையே உடுத்துவார்.  ஒரு சமயம் கப்பலில் இவர் சென்று கொண்டிருந்தபோது கடல்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டாலும், அந்த எஜமான் இவரை விடுதலை செய்து விட்டாராம்.  பெரிய ஜாடிகளில் குறுகிப் படுத்துத் தூங்குவது இவர் வழக்கமாம்.  மாவீரன் அலெக்ஸ்சாந்தர் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க விரும்பியபோது வேண்டுமானால் அவரை வந்து என்னை  பார்க்கச்சொல் என்றாராம்.  அலெக்ஸ்சாந்தரும் இவரை வந்து பார்த்தபோது வெயிலில் காய்ந்து கொண்டிருந்தாராம் இவர்.  "உங்களுக்கு நான் ஏதாவது செய்ய முடியுமா?" என்று அலெக்ஸ்சாந்தர் இவரைக் கேட்க, "ஆம்..   கொஞ்சம் தள்ளி நில்.  வெயில் மறைக்கிறது" என்றாராம்.  இனி நான் ஒரு பிறவி எடுத்தால் டயோஜீன்ஸ போல பிறக்கவே வேண்டும் என்றானாம் அலெக்ஸ்சாந்தர்.  "இனி நான் பிறவி எடுத்தாலும் அலெக்ஸ்சாந்தர் போல இருக்கக் கூடாது" என்றாராம் இவர்.

இதே போல கதை ஒன்றை துக்காராம் பற்றியும் சொல்வார்கள்.  அவருக்கிருந்த ஞானத்துக்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்திருக்கலாம் என்றாலும் கந்தலாடை உடுத்தி பிட்சை எடுத்தே உயிர் வாழ்ந்து வந்தாராம்.  மாவீரன் சிவாஜி இவரைப் பார்க்க விரும்பி அரண்மனைக்கு அழைத்தபோது அதே பதில்!

சிவாஜி இவரைப் பார்க்கச் சென்று, அவரால் கவரப்பட்டு, தானும் கந்தலாடை உடுத்தி அவர் பின்னே அமர்ந்துவிட, சிவாஜியை காணாது தவித்த தாய் ஜீஜாபாய்க்கு தகவல் சொல்லப்பட, அவர் வந்து சிவாஜியை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றதாகக் கூறுவார்கள்.

சரி..   பாடலுக்கு வருவோம்...  தம்பிக்கு ஒரு பாட்டு 

வியட்நாம் வீடு சுந்தரம் தமிழில் எழுதி, கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தியிலிருந்து இறக்குமதியானது!இந்தப் பாடல் அவிநாசி மணி எழுதிய பாடல்.  சங்கர் கணேஷ் இசை.  சரியாக ஓடவில்லை என்று சொல்லப் பட்டாலும் 70 நாட்கள் வரை ஓடிய படம்.  மற்ற பாடல்களும் நன்றாய் இருக்கும்.எம் ஜி ஆர், கே ஆர் விஜயா, காஞ்சனா ஆகியோர் நடித்திருக்கும் திரைபபடம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்ததது.  இந்தப் படத்தின் நடன இயக்குனர் தங்கப்பன் மாஸ்டர்.  அவருக்கு அசிஸ்டன்ட் கமலஹாசன்!  அவிநாசி மணியின் அற்புதமான வரிகள் பாடலுக்கு பலம்.  டி எம் எஸ் ஸின் குரல் கம்பீரம்.

பட்டுக் கண்ணு செல்ல பாப்பா 
நல்ல தம்பி, வெல்லக் கட்டி சுட்டி பையா 

தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு 
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு 
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு 
உதவும் நான் சொல்லும் கதை பாட்டு 
நான் சொல்லும் கதை பாட்டு 

ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் 
ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் 
மனிதன் எங்கே... 
மனிதன் எங்கே காணவில்லை 
தேடுகிறேன் நான் என்றாராம் 
பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம் 
மனிதர்கள் அல்ல என்றாராம் 
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் 
வாழ்பவன் மனிதன் என்றாராம்
வாழ்பவன் மனிதன் என்றாராம் 
  
 கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு 
கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு 
இதயம் மட்டும் ஒன்று வைத்தான் 
சிந்தனை ஒரு வழி செல்வதற்கு 
உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால் 
தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே 
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் 
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே 
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே


=====

ரசனை (kgg)

கீழ் வரும் படக்காட்சியைப் பாருங்கள். கதாநாயகியின் நடிப்பு வித்தியாசமாக இருக்கிறது! கதாநாயகனுக்கு, அவன் மேல் இவள்  கொண்டிருக்கும்  காதல் தெரிந்திருக்குமா அல்லது இல்லையா என்பது சந்தேகமா இருக்கு. 


பாடல் இடம் பெற்ற படம் : கீத கோவிந்தம் (தெலுங்கு)
பாடியவர் : சின்மயி 

===

104 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. அன்பு ஸ்ரீராம் உங்களுக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பொருள் படைத்த நல்ல பாடல்கள். புரட்சித்தலைவர் படங்களில்
  பிரசித்தம். குழந்தைகளுக்காகவும், தத்துவங்கள் நிறைந்ததாகவும், மனித குலத்தை மேம்படுத்துவதாகவும்

  உற்சாகம் கொடுக்கக் கூடியவை அவை.
  நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
  பாடலும், இன்னும் எத்தனையோ
  எண்ணிக்கை இல்லாத பாடல்களைச் சொல்லலாம்.

  நல்ல பாடலைக் கேட்கவைத்து, அதற்கான படங்கள் ,'நிகழ்வுகள் கொடுத்ததற்கு மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  வல்லி சகோதரிக்கும் என் அன்பான காலை வணக்கம்.

  இன்று பதிவை படிக்க ஆரம்பித்ததும், வியாளனிலிருந்து இன்னமும் வெள்ளி மீளவில்லையோ என்ற சிறு சந்தேகம் வந்து விட்டது. செய்திகள் அறிந்த பின் இது புதுமை வெள்ளியென வந்த பாடல் கண்டு தெளிவானேன். தந்த விபரங்கள் அருமையாக உள்ளது. படத்தின் பெயர் என்ன என்பதை குறிப்பிடவில்லையே? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. கேஜிஜி சாரின் ரசனை மிக அருமை. ஏண்டி என்று வருகிறதே
  ஒரு வேளை பழைய பாடலோ என்று நினைத்தேன்.
  உண்மையிலியே ரசிக்க வைக்கும் நடிப்பும்
  இசையும்.
  இப்படியும் பாடல்கள் வருகின்றன என்று
  அறிய மிக மகிழ்ச்சி. நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 6. //அவரை வந்து எண்ணெய் பார்க்கச்சொல் என்றாராம். // Please correct the spelling mistakes. :)

  பதிலளிநீக்கு
 7. //ஒரு பியாவி// பிறவி

  //பிட்சை// இது இங்கே "பிச்சை" என்னும் பொருளிலேதான் வந்திருக்கணும். ஏனெனில் பிக்ஷைக்கும் பிச்சைக்கும் வேறுபாடுகள் நிறையவே.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல் விபரங்கள் அருமை. பாடல் வரிகள் நன்றாக கருத்துடன் உள்ளது.பாடலை பிறகு ரசித்து கேட்கிறேன்.

  ரசனை பட பாடலும் தொலைக்காட்சியில் அடிக்கடி பார்த்து ரசித்துள்ளேன். அந்தப் படம் நான் மட்டும் இன்னமும் பார்த்ததில்லை. வீட்டில் மற்ற அனைவரும் பார்த்து விட்டனர். பகிர்ந்த பாடல்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. எழுத்துப் பிழைகளைப் பார்த்ததும் காலை வணக்கம் வைக்காமலேயே கருத்துச் சொல்லிட்டேன். அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  ஜிவாஜி "லக்ஷ்மி கல்யாணம்" படத்தில் கையில் விளக்குடன் வந்து கடைத்தெருவில் மனிதனைத் தேடிக் கொண்டே, "யாரடா மனிதன் இங்கே!" என்று பாடுவார். அதை விட்டுட்டீங்களே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜிவாஜி ரசிகர்களே இப்படி இருந்தால்! :P:P:P:P:P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் பக்தர்களைவிட, கடவுள் மறுப்பாளர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறவர்கள் என்று சொல்வார்கள். சிவாஜி ரசிகரைவிட சிவாஜி கேலியாளர்கள்தான் ..

   நீக்கு
  2. இப்படி ஜிவாஜியை பகடி பண்ணுகிறவர்கள்தாம், பொதிகைல போடற ஒரு ஜிவாஜி படத்தையும் விடறதில்லை என்றும் செய்தித்தாள்களில் போட்டிருக்காங்க.ஹாஹா

   நீக்கு
  3. பொதிகைத் தொலைக்காட்சி பார்த்தே ஒரு மாசத்துக்கும் மேலே ஆகிறது. இந்த ரிமோட்டில் அது எத்தனாவது எண்ணில் வருதுனும் தெரியலை! :(

   நீக்கு
  4. @நெல்லை, லக்ஷ்மி கல்யாணம் படம் மதுரையிலே "தேவி" தியேட்டரில் என் சிநேகிதியோடு பார்த்தேன். ஹிஹிஹி, அப்பா எங்கேயோ ஏதோ ஊருக்குப் போயிருந்தார். அம்மாவும், நானும் தான் வீட்டில், தம்பி ஸ்கூல்/காலேஜ்! அம்மாவிடம் கேட்டுக் கொண்டு போயிட்டு வந்தேன். காலைக்காட்சி!

   நீக்கு
  5. பொதிகை தொலைக்காட்சி டாடா ஸ்கை சானல் 1578. டாடா ஸ்கை எல்லா regional சானல்களின் எண்களையும் செப்டம்பர் எட்டாம் தேதி மாற்றிவிட்டனர். ஏற்கெனவே favorite சானல்கள் சேமித்து வைத்திருந்தவர்கள் எல்லோரும் மீண்டும் ஒருமுறை, சானல் எண் 1501 தொடங்கி, 1599 வரை பார்த்து, தங்கள் ரிமோட்டில் மறு சீரமைப்பு செய்யவும்.

   நீக்கு
  6. கீதா அக்கா... இங்கு குறிப்பிட மறந்தாலும் அந்தப் பாடல் ஏற்கெனவே வெள்ளி வீடியோவில் பகிர்ந்துள்ளேன்.

   நீக்கு
 10. இன்னிக்கு என்ன யாரையும் காணோமே! கௌதமன் தூங்கிட்டாரா? அவர் வருவார்னு ஸ்ரீராமும் வரலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எப்பவுமே காலை நாலே கால் மணி முதல் ஏழு மணி வரை பிஸி.

   நீக்கு
  2. ஆமாம், அதுவும் வேலை செய்யற பெண் வரலைனால் காலையில் சில நாட்கள் கணினியில் உட்காரக் கூட முடியாது!

   நீக்கு
  3. என்னால் இப்பதான் வரமுடிந்தது!

   நீக்கு
 11. கேஜிஜியின் ரசனையை மத்தியானமா அனுபவித்து ரசித்துப் பார்க்கிறேன். இப்போ உட்கார்ந்தால் நேரம் ஆகும்போல! இதோ எழுந்திருக்கணும் பத்து நிமிஷங்களில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன். நல்ல அருமையான பாடல். அந்தப் பெண்ணின் அழகும் அவள் கண்களில் தெரியும் காதலும்! அற்புதம்! இயல்பாய் வந்திருக்கு. உண்மையிலேயே அந்த நடிகரைக் காதலிக்கிறாரோ என எண்ண வைத்தது.

   நீக்கு
  2. எம்ஜார் நடிச்ச இந்தப் படம் எப்போ வந்தது? தம்பிக்கு ஒரு பாட்டு, அன்புத்தங்கைக்கு ஒரு பாட்டுப் பாடல் போலவே ஜிவாஜி படம் ஒண்ணிலும் "எங்க மாமா" வந்திருக்கு. ஒரு வேளை இதுக்கு அது போட்டியா? அதுக்கு இது போட்டியா?

   நீக்கு
  3. 1972 ஆம் வருடம் வந்த 'நான் ஏன் பிறந்தேன் ' படம். எம்ஜியார் தி மு க விலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு சற்று நாட்கள் முன் ரிலீசான படம்.

   நீக்கு
 12. கேஜிஜியின் ரசனையை மத்தியானமா ரசிக்கிறேன். இப்போ உட்கார நேரம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, முதல் கருத்துச் சொல்லும்போது எரர் வரவே மறுபடி வேறே கொடுத்தேன், துரோகி, கணினி/இணையம்? இரண்டையும் வெளியிட்டிருக்கு! அநியாயமா இல்லையோ? :)))))

   நீக்கு
  2. //துரோகி, கணினி/இணையம்?// - இரண்டும் இருக்காது. போன தடவை anti virus install பண்ணினவருக்கு முழுப் பணமும் செட்டில் செஞ்சாச்சா?

   நீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யார் இந்த அந்நியர்? என்னைக் கவனிச்சுட்டே இருந்திருக்கார் போல! இங்கே வந்து போட்டுக் கொடுக்க முயற்சி பண்ணுகிறாரே! :))))) ஐயா/அம்மா, Unknown, இம்முறை அவர் கூடவே பணம் வாங்கிட்டுப் போயிருக்கார். ஆகவே பிரச்னைன்னா அவரைச் சும்மா விட மாட்டேனாக்கும்! :)))))

   நீக்கு
 13. ஞானியின் கதை வித்தியாசமாக இருந்தது ஜி இதுவரை கேள்விப்பட்டதில்லை.

  பாடல்களை கேட்டேன் நன்று முதல் பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டபாடல்.

  பதிலளிநீக்கு
 14. அந்தப் பாடல் எனக்கும் அதிகம் பிடிக்கும்..காணொளி அருமை..வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
 15. அந்த ஞானிக்கப்புறம் எம்சிஆரு-தான் நினைவுல வந்தாராக்கும் - பேரக்குழந்தைகளைக் கட்டில்ல ஒக்காரவைச்சு.. ’தம்பி’க்கு ஒரு பாட்டுன்னு பாடற ஆளு!

  அந்த கிரேக்க ஞானி - Diogenes. கிரேக்க உச்சரிப்பு : டயோஜனீஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா !
   கிரேக்க ஞானி பெயரை ஆங்கிலத்தில் / தமிழில் படித்தால் ஏதோ ஜீரண மருந்து ஞாபகம்தான் வருகிறது!

   நீக்கு
  2. ஜீரணப் பிரச்னை இங்கு அதிகம்! டைஜீன் நிறைய விற்கும் நாடு இது!

   நீக்கு
 16. அனைவருக்கும் காலை வணக்கம். இன்றைய பாடல் இடம் பெற்றிருக்கும் படம் 'நான் ஏன் பிறந்தேன்'தானே? அந்த படத்தை தொலைகாட்சியில் பார்த்த பொழுது எம். ஜி. ஆர் படம் மாதிரியே இல்லையே? படம் ஓடியதா? என்று தோன்றியது. கண்ணன் என் காதலன் பார்த்த பொழுதும் அப்படித்தான் தோன்றியது. அது மோசமான தோல்விப் படமாமே?
  வியட்நாம் வீடு சுந்தரம் சிவாஜியின் ஆஸ்தான கதாசிரியர் அல்லவா? அவர் எம்.ஜி.ஆருக்கும் கதை கொடுத்திருக்கிறாரா? அல்லது கொடுக்க வைக்கப்பட்டாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம்ஜியார் புதுக் கட்சி தொடங்கிய நேரம், விகடனில் 'நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதினார். அந்த டைட்டில் அவ்வளவு பிரபலமாகிவிடவே அப்பொழுது எடுக்கப்பட்ட அவர் படத்துக்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. கண்ணன் என் காதலன் வந்த 1968 ஆம் ஆண்டு சில அரசியல் உள்ளடி வேலைகள் நடந்ததால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்று வதந்தி இருந்தது.

   நீக்கு
 17. தாயுமானவரைப் பற்றி கூட இப்படி ஒரு செய்தி உண்டு. அவர் துறவறம் மேற்கொண்டதும், அந்த ஊர் அரசன் வந்து அவரிடம்,"இப்படி துறவியாக இருப்பதில் என்ன சுகத்தைக் கண்டார்கள்? வீட்டிற்கு திரும்புங்கள்" என்றானாம். அதற்கு தாயுமானவர்,"நீ நிற்க, நான் இருக்கும் சுகத்தைக் கண்டேன்" என்றாராம். சாதாரணமாக அரசனுக்கு முன்பு மற்றவர்கள் அமர முடியாது. ஆனால் ஒரு துறவியை அரசன் பணிவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவர்கள் (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் பணியமாட்டார்கள் (பணிவு வேற இறுமாப்பு வேற). யார் தன்னைவிடப் பெரியவர்களோ அவர்களிடம் பணிந்துதான் ஆகவேண்டும்.

   இதுதான் துறவிகளுக்கு உள்ள சிறப்பு என்று நினைக்கிறேன். பா.வெ. எழுதியது படித்ததை நினைவுபடுத்தியது.

   நீக்கு
 18. இன்றைய இடுகை ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகிறேன்.

  பாடல் - நிறைய தடவை கேட்ட ரசிக்க வைக்கும் பாடல்.

  ஜொள் பாடல் காட்சியையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 19. மக்கள் திலகத்தின் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க படங்களுள் இதுவும் ஒன்று.. ஆனாலும்

  வறுமையான சூழலில் கதாநாயகன் கோட்டும் ஷூட்டும் ஷூவும் அணிந்திருந்தாலும் உடன் பிறப்புகள் படத்தை வெற்றி பெற வைக்க வில்லை..

  கடேசி வரைக்கும் வாத்தியார் லவ் பண்ண வில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு...

  வாத்தியார் இந்தப் படத்தின் கடைசியில் விஜயாவைக் கழற்றி விட்டு காஞ்சனாவைக் கட்டிக் கொள்வார் என்று உபிக்கள் எதிர் பார்த்திருந்தனர்!?...

  பதிலளிநீக்கு
 20. தம்பிக்கு ஒரு பாட்டு...
  அண்ணன்களுக்கும் பிடித்த பாட்டு...

  பதிலளிநீக்கு
 21. திரு அவினாசி மணி அவர்கள் இயற்றி பெரும் புகழ்பெற்ற பாடல் தான் -

  கற்பூர நாயகியே கனகவல்லி
  காளி மகமாயி கருமாரியம்மா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பாட்டு ஜனரஞ்சகமானது. உற்சாகமாக பக்தர்கள் பாடுவது.
   இவரெழுதியது என இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

   நீக்கு
  2. நன்றி துரை ஸார், ஏகாந்தன் ஸார்.

   நீக்கு
 22. 1. கருத்துள்ள அருமையான பாடல்...

  2. இள வட்டத்திற்கு-ம் பிடித்த பாடல்...!

  பதிலளிநீக்கு
 23. யாரு அந்த வி.கே?(விகே'ஸ் கார்னர்) இரண்டு, மூன்று நாட்கள் முன்னால் போய் ஒரு நோட்டம் விட்டேன். இன்னிக்குச் சில பதிவுகள் படித்தேன். இங்கேயும் வருகிறாரா? என்ன பெயரில்?

  பதிலளிநீக்கு
 24. டயோஜீன்ஸ் ​என்றொரு கிரேக்க தத்துவஞானியைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
  பகிர்ந்த பாடல்கள் இரண்டும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. என்னோட பதிவு "சாப்பிடலாம் வாங்க" இங்கே அப்டேட் ஆகவே இல்லையே???????????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அயல் நாட்டு சதி போலிருக்கு. என்ன என்று விசாரிக்கிறேன்.

   நீக்கு
  2. அங்கே எல்லாம் வந்து நாளாச்சு...

   நீக்கு
  3. சாப்பிட வாங்க, எண்ணங்கள் இந்தத் தளங்களில் கருத்துப் போட்டால் அது எப்போ அப்டேட் ஆகும் என்று அந்தத் தளங்களுக்கே தெரியாதாமே. இது யார் சதியாக இருக்கும்?

   நீக்கு
 26. அவிநாசி மணியின் பாடலோடு அந்த சினிமாக் காட்சியோடு போய் விடாமல் அந்தப் பாடலில் வரும் ஒரு வரியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு டயோஜீன்ஸ் படத்தைத் தேடிப்பிடித்துப் போட்டு பதிவை வாசிப்போருக்கு ஆர்வத்தைக் கூட்டியிருப்பது நல்ல உத்தி. இந்த மாதிரி நுணுக்கமான வேலைகள் மற்ற தள பதிவுகளிலிருந்து வித்தியாசப்படுத்தும் என்பது உண்மை தான்.

  அவிநாசி மணியின் பாடலும் நன்றாகத் தான் இருக்கிறது.

  //மனத்தால் மட்டும்
  வாழ்பவன் மனிதன் என்றாராம்//

  சினிமா பாட்டுக்கு இந்த வரிகள் பொருத்தமாகத் தான் இருக்கின்றன. அறிவுக்கு அடிமையாக வாழாமல் மனச்சாட்சி வழிகாட்டலிலும் வாழ முயற்சிப்பது உத்தமமான காரியம் தான்.

  உடம்பு மனசு தாண்டி எதுவும் இல்லை என்று நினைப்பது தான் அகங்காரம் என்று நேற்று தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நான் மிகவும் மதிக்கும் துறவி ஒருவர் சொன்ன போது இந்த அறிவு, மனசு, உடம்பு சேர்க்கைகள் தாண்டி அவர் சொல்ல வந்த விஷயம் இன்னும் கூர்மைப்பட்டது. மேற்கொண்டு யோசிப்பவர்களுக்காக இது.

  பதிலளிநீக்கு
 27. சிறந்த கருப்பொருளை முன்வைத்துத் தொகுத்த பதிவிது. பாடல்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 28. காலை வணக்கம்.

  முதல் பாடல் நன்று. இரண்டாம் பாடலும் ஓகே! இரண்டையும் பார்த்து/கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!