ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

மைசூர் செல்லும் வழியில் ..


மைசூர் செல்லும் வழியில் இரண்டு வேலைகள் 







ஒன்று சாப்பாடு 



இரண்டு : காமெராவுக்கு ஒரு XD  கார்டு 



இப்போது நீங்கள் காணும் காட்சிகள் எல்லாம் போன் காமெராவில் 



கடைக்காரர்களும் சாப்பிடப்போய்விட்டார்கள் 



முதலில் XD கார்டு ...பின்னர்தான் சாப்பாடு என்று தீர்மானித்தோம் 







field marshal கரியப்பாவுக்கு அவர் பிறந்த ஊரில் ஒரு நினைவு சின்னம். (இதுல யாரு கரியப்பா?) 



மாடியில் போ .. ய் ஸ்டுடியோக்காரரைக் கேட்டு  XD கார்டு கிடைக்குமிடம் அறிந்தோம் 


காத்திருக்கும் பிட்ஷுக்களைப் பார்த்தாலே நாம் இருக்குமிடம் பற்றி சொல்லவேண்டாம் 



அதோ... அங்...கே போய் ...



ஜியோ வுக்கு கீழே...


முதலில் கண்ணில் பட்டது ஸ்வீட் ஷாப் தான் 



காத்திருக்கும் போதே ஏதோ ஸ்வீட் உம்  கொஞ்சம் வாங்கிடலாம் 





சிறிது வயிற்றுக்கும் ஈந்து .. 


வெள்ளை மேகம் - 



கொஞ்சம் கறுத்து .. 



நீல மேகத்தின் மீது படை எடுத்து -- 







கார் மேகம் ஆகி -- 



மழை வருது, மழை வருது --- 







கார் மேகம்,  தம்மையும் 'நீல மேகம்' என்று நினைத்து ஆக்கிரமிக்குமோ என்று இந்த நீலக் கட்டடம் அஞ்சுகிறதோ ! 



எல்லோரும் நாற்காலிகளைக் காலி பண்ணிவிட்டு zoom மீட்டிங் ...


===

53 கருத்துகள்:

  1. காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு துரை, அன்பு கமலாமா,அன்பு கௌதமன் ஜி
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அன்பு துரையின் உடல் நிலை தேவலை என்று நம்புகிறேன்.
    நோயில்லா மகிழ் வாழ்வு நமக்கு இறைவன் அருள்வான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் சகோதரி

      துரை சகோதரர் ஜலதோஷத்திலிருந்து குணமாகி பூரண உடல்நலம் பெற நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதற்கு தகுந்தாற்போல் வாசகங்களும் அருமை. மழை மேகங்கள் சூழும் படங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

    நீல கட்டிடத்திற்கு தந்த வாசகங்கள் பொருத்தம். ரசித்தேன்.

    /field marshal கரியப்பாவுக்கு அவர் பிறந்த ஊரில் ஒரு நினைவு சின்னம். . (இதுல யாரு கரியப்பா?) /

    கண்டு பிடித்து விட்டேன். அவர் கண்டிப்பாக காமிராவில் பிடிபடாமல் "மேலேதான்" இருக்கிறார்.:)

    அழகான படங்களை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. மைசூர்ப் பயணம் இனிதே தொடங்கியது.
    வயிற்றுக்கும் காமிராவுக்கும் உணவு
    இட்ட பிறகு தொடரும் காட்சிகள் அருமை.
    இந்தப் பயணத்தில் கதிரவனையே பார்க்கவில்லை.

    மேக மூட்டம் தான். அந்த ஊர்க்காரர்கள்
    மந்தகதியில் இயங்குவதற்கும் இது ஒரு காரணம்
    என்று தோன்றுகிறது:)

    பதிலளிநீக்கு
  6. மைசூருடன்... இனிப்பு பாகும் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  7. சுதந்திரத்திற்கான பேச்சுகள் மௌன்ட் பேட்டன், இந்திய அரசியல் தலைவர்கள் நடத்திக்கொண்டிருந்தபோது, இந்திய ஆர்மி சீஃப் ஆக நாம் பிரிட்டிஷாரை நியமிக்கலாமா என நேரு ஆர்மி தலைவர்களிடம் பேசியபோது, இந்தியரையே நியமிக்கணும் என ஒருமித்த குரலில் சொன்னார்கள். உங்களில் நாரை நியமிப்பது என்றதற்கு, அது எதற்கு, நம்மிடையே அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த ஜெனரல் கரியப்பா இருக்கிறாரே என அடையாளம் காணப்பட்டு சுதந்திர இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீஃப் ஆக ஆனார் எனப் படித்திருக்கிறேன்.

    அவர், நம்ம ஊர் தேவாரம் போன்ற பலரின் abilityஐ நாம் காலவெள்ளத்தில் மறந்துவிட்டோம் என்பது விசனத்துக்குரியது.

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பகுதி திரௌபதி வஸ்திராபரணமா இல்லை தினத்தந்தியின் சிந்துபாத்தா என்பதற்கே ஒரு பட்டிமன்றம் வைக்கலாம் போலிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் பாகமண்டலாவெல்லாம் போயிட்டுப் படங்கள் போட்டாரே! இப்போ மைசூரைப் பார்க்க வேண்டாமா? நாங்க 3,4 தரம் போயிருக்கோம். ஆனால் பாலஸுக்கு ஒருதரம் தான் போனோம். சாமுண்டி ஹில்ஸ் 3 தரம் போனோம்.

      நீக்கு
    2. ..இல்லை தினத்தந்தியின் சிந்துபாத்தா..//

      தினத்தந்தியின் கன்னித்தீவு !

      நீக்கு
    3. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், எல்லோருக்கும் நன்றி!!

      நீக்கு
    4. ஹாஹாஹா, கௌதமன் ஜி, உங்களுக்கே புரியலையா? இந்தப் பயணத்தின் புகைப்படங்கள் பகவான் திரௌபதிக்கு அளித்த வஸ்திரங்களை விடவும், தினத்தந்தியின் "கன்னித்தீவு" தொடரை விடவும் நீண்டு கொண்டு போவதாக நம்ம நெல்லையார் கருத்து.

      நீக்கு
    5. எங்க ஃபார்முலா சிம்பிள் !

      சண்டே பிக்சர்
      மண்டே குக்கிங்
      ட்யூஸ்டே ஸ்டோரி
      வெட்னஸ்டே கேள்வி
      தர்ஸ்டே அரட்டை
      ஃப்ரைடே பிலிம்
      சாடர்டே பாசிட்டிவ்
      அவ்வளவுதான்.
      சண்டே ஆடியன்ஸ் எப்பவுமே கம்மிதான்!

      நீக்கு
    6. இது கீழே வந்திருக்கணுமோ? :)

      நீக்கு
    7. அதுவும் உங்க கமெண்ட்தானே. எங்கே இருந்தாலும் எடுத்துக்குங்க!

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் நன்மையையே தரும்படிப் பிரார்த்திக்கிறேன். துரை அவர்களின் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீர்த்து வைக்கும்படி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அது சரி, நீல "மேகமா" நீல "வானமா"? இஃகி,இஃகி, நீல வானம்னு வந்திருக்கணுமோ? படங்கள் அனைத்தும் அழகு! அதிலும் அந்தச் சாய்ந்த கோணம்! "வெள்ளை மேகம்" அருமை. சுஸ்பெரி( எங்க ஊர் பாஷை) சாப்பிடுபவர் முகத்தைக் காட்டவே இல்லையே! போயிட்டுப் பின்னர் வரேன். இன்னிக்கு எல்லாமே தாமதம்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீல மேக ஷ்யாமள வர்ணா என்று நீங்க கேள்விப்பட்டதில்லையா?

      நீக்கு
    2. நல்ல சமாளிப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

      நீக்கு
  11. ஏன் XD கார்ட் தேடி அலைந்தீர்கள். லேப்டாப் கொண்டு போக வில்லையா?  கார்டில் உள்ள கோப்புகளை கம்ப்யூட்டரில் காபி செய்து விட்டு கார்டில் உள்ள சில கோப்புகளை நீக்கி இருக்கலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல யோசனை. லேப்டாப் கொண்டு போகவில்லை.

      நீக்கு
    2. நான் காமிராவும் கொண்டு போயிடுவேன், செல்லிலும் படம் எடுத்துப்பேன். ஆனால் இந்த மாதிரிப் படங்கள் எல்லாம் தேடித்தேடி எடுத்தது இல்லை. இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  12. இதோ வந்துவிட்டேன்...

    ஜலதோஷம் எல்லாம் ஒரு பிரச்னையே அல்ல..
    மூடர்களின் நிர்வாகத்தில் தான்..

    கழுதை கால் பணம்..
    சுமை கூலி முக்காற்பணம்..

    என்பது மாதிரி பழைய சமையல் கூடத்தை விலைக்கு வாங்கி அந்தப் பணத்துக்கு மேலாக செலவிட்டு புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அரற்கு மேல் -
    ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகத்தை நுழைப்பதற்காக ஊழியர்களைப் போட்டு பிறாண்டுவது...

    பதிலளிநீக்கு
  13. நலம் விசாரித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    அனைவரும் நலத்துடன் வாழ வேண்டும்.. இதுவே வேண்டுதல்...

    பதிலளிநீக்கு
  14. படங்கள் எல்லாம் அருமை.

    கார் மேகம், நீலமேகம் எல்லாம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அனைத்தும் அழகு. மேகங்களின் படங்கள் சிறப்பு.

    கேமராவிற்கான கார்டு - எப்போதும் இரண்டு வைத்திருப்பது நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இன்னொன்று வாங்கத்தான் போயிருக்கிறார் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  16. படங்கள் அழகு. மைசூர் சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!