புதன், 2 செப்டம்பர், 2020

௨௫ ௦௮ ௨௦௨௦ அன்று தமன்னா கூறியது என்ன?

கீதா சாம்பசிவம் :

1. தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? '&' தொலைக்காட்சியே பார்ப்பதில்லை என்று சொன்ன நினைவு.# செய்திகள் துப்பறியும் அமெரிக்க தொ.கா.தொ தவிர வேறு எதுவும் பார்ப்பதில்லை. 

& பெரும்பாலும் செய்தி சானல்கள் பார்ப்பேன். ரிபப்ளிக் டி வி, பாலிமர் நியூஸ். காலையில் svbc தமிழ். அவ்வப்போது சிரிப்பொலி, ஆதித்யா காமெடி. இந்தி சினிமா சானல்கள் பெரும்பாலானவை free என்பதால் நல்ல படங்கள் வந்தால், அதை பார்ப்பேன். 


2. சீரியல்களைப் பெண்களை விட ஆண்களே அதிகம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா? ஏன்?

# ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் என்பது சரியா என்று தெரியவில்லை.  எனவே "ஏன்" என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை.

& அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து, என் சம்பந்திகள் தமிழ் சீரியல்கள் பார்ப்பது உண்டு. இப்போதும் அவர்களிடம் அந்தப் பழக்கம் உள்ளதா என்று தெரியாது. 

3. தொலைக்காட்சித் தொடர்களில் வரும் ஆண்களைப் போலவும், பெண்களைப் போலவும் இப்போவும் இருக்காங்களா? உதாரணத்திற்கு நேற்றுச் சாப்பிடும்போது ஒரு தொடரின் காட்சி ஒன்றில் கிராமத்தின் பணக்கார எஜமானி கிராமத்தாரைப் பார்த்துத் தோலை உரித்துவிடுவேன். என்றெல்லாம் சொல்லுவதோடு அந்த கிராமத்தில் யாரேனும் காதலித்துக் கல்யாணம் செய்துக்கறவங்க இருந்தால் காலையும் உடைத்துவிடுவாராம்! இதெல்லாம் இப்போவும் நடக்குதா? எனக்கு வந்த கோபத்தில் மொபைலை எடுத்து வைத்துக்கொண்டு முகநூலில் "வேல் வகுப்பு" பற்றி மோகன் ஜி எழுதி இருப்பதைத் திரும்பவும் படிக்க ஆரம்பித்தேன்.

 # தொடர்களில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் வக்ரங்கள்.  நிஜ வாழ்வில் காண முடியாத கண்ணராவிகள். 

& மிகைப்படுத்துதல் என்பதற்கு நல்ல உதாரணம், தொலைக்காட்சி சீரியல்கள். நிஜவாழ்க்கையில் அப்படி நிகழ்வது பத்தாயிரத்தில் ஒன்று என்ற விகிதத்தில் இருந்தால் அதிகம்.  

4. இப்போது கடந்த சில வருடங்களாக அறிமுகம் ஆகி இருக்கும் "விதைப்பிள்ளையார்" நல்லதா? அல்லது பழைய முறையில் நீர் நிலைகளில் களிமண் பிள்ளையாரைக் கரைப்பது நல்லதா? (என்னோட பதில் பின்னர்)

# விதைப்பிள்ளையாரில் கூடுதல் நன்மை இருக்கிறதே..

& என்னோட பதில், உங்க பதிலைப் பார்த்த பின்னர். 

5.சமீபத்தில் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரை மரத்தில் கட்டி வைத்துப் பின் கைகளைக் கட்டிப் போட்டுச் சாணியைக் கரைத்து ஊற்றி சாம்பலில் குளிப்பாட்டி, மதுபானங்களால் அபிஷேஹம் செய்து மகிழ்ந்தவர்கள் என்ன மாதிரி மனிதர்கள்? இவர்களுக்கெல்லாம் மனிதத் தன்மையை யார் போதிப்பார்கள்? தமிழில் எந்தத் தொலைக்காட்சிச் சானலுக்கு மாற்றினாலும் அங்கே இதைத் தான் திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள்! இதன் மூலம் சமூகமே மனதளவில் பாதிக்கப்பட இடம் உண்டு அல்லவா? இதெல்லாம் எப்போது மாறும்?

 # முதலில் அந்த அபூர்வப் பிறவி இந்த மாதிரி கேவலங்களுக்கு ஏன் இடம் தர வேண்டும் ?  இது சமூகக்கேடுதான் ஐயமில்லை.
ஆனால் இது ஒரு தனி நிகழ்வு. இதை யாரும் தாமும் செய்ய முன்வர மாட்டார்கள். இதை பலமாக வலைதளங்களில் கண்டிக்க வேண்டும். அப்போது இது போன்ற ஆபாச ஆசைகள் மாறக் கூடும். 

& எனக்குத் தெரிந்த ஒரு சிறுவன், தனக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று கூறி ஓடி விடுவான். அப்புறம் விஜாரித்துப் பார்த்ததில், தன்னுடைய அண்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக்கை எடுத்து அண்ணன் முகத்தில் பூசி, அண்ணனின் நண்பர்கள் கலாட்டா செய்தorigதைப் பார்த்ததில் தனக்கும் அப்படி செய்வார்களோ என்ற பயத்திலேயே பிறந்தநாள் கொண்டாட்டங்களை வெறுத்திருக்கிறான் என்று தெரியவந்தது. 


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1. All right  என்னும் ஆங்கில வார்த்தை எப்படி, ஏன்  OK ஆனது?

# Oll Korrect எனும் தவறான ஸ்பெல்லிங் தான் இதன் அடிப்படை எனக் கருதப்படுகிறது.

& " mid 19th century (originally US): probably an abbreviation of orl korrect, humorous form of all correct, popularized as a slogan during President Van Buren's re-election campaign of 1840 in the US; his nickname Old Kinderhook (derived from his birthplace) provided the initials." 

2. வெட்டியாக இருப்பதை ஓபி அடிப்பது என்கிறார்களே? அப்படியென்றால் என்ன?  அது OB யா? OP யா?

 # OP (out of parade) என்பது ராணுவப் பயிற்சி அணிவகுப்பினின்று தப்பும் யுக்தி. OP OB ஆனதாகச் சொல்லப் பட்டாலும் வேறு ஒரு ஆபாச விளக்கமும் உண்டு.

நெல்லைத்தமிழன்: 

தனித் தமிழ், தமிழ் மொழியை வளர்க்கிறோம் என்றெல்லாம் பேசி, தமிழ் எண்களை உபயோகிக்காதவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

$ மிகவும் உயர்வாக !

# தமிழ் எண்கள் பரவலாக அறியப்படாதவரை அவற்றைப் பயன்படுத்துவது அறிந்தே பிறர்க்கு சங்கடம் தருவதாகத் தான் இருக்கும்.


& தமன்னா அவர்கள் ௨௫  ௦௮  ௨௦௨௦  அன்று ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்  தான்  ௪ ௫ வாரங்களுக்கு முன்பு  சந்தித்த முரளி என்பவரைப் பற்றி  சொன்னார். அந்த முரளியிடம்  திரும்பவும்  பேச ஆசைப்படுவதாகவும், முரளி  ௯௪௪௫௬ ௮௭௮௪௦  என்ற எண்ணை வருகின்ற ௧ ௯ ௦௯ அன்றைக்கு  ௧௨ ௪௫ மணிக்கு அழைத்துப் பேசவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்த தமன்னா தமிழ் புரிகிறதா தமிழரே உங்களுக்கு? ===

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

இப்போது இருக்கும் சமுதாய சூழலை பார்க்கும் பொழுது இன்னும் இருபது வருடங்களில் திருமணம் என்னும் அமைப்பே இருக்காது என்று தோன்றுகிறது. என் தோழிகள் சிலர் இருபது வருடம் என்பது மிக அதிகம் என்கிறார்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

$ தோழிகள் புத்திசாலிகள்.

# திருமணம் இல்லாத் தொடர்பு எவ்வளவு இருக்கிறது என்று ஊகிப்பது இயலாது. எனக்கு என்னவோ நம் பெண் மக்கள் அப்படி ஒரேயடியாக மாற மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

& இருபது வருடங்கள் கழித்து, எங்கள் ப்ளாக்  05 09 2040 புதன் கேள்வி பதில் பகுதியில் நான் இதற்கு பதில் சொல்கிறேன். 


முன்பு யூனியன்கள் கோலோச்சிய காலத்தில் தொழிற்சாலைகளில் லாக் அவுட் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது லாக் டவுன் என்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

# தொழிலாளர்களை வெளியே அனுப்பி தொழிற்சாலையைப் பூட்டி வைப்பது லாக் அவுட். 

தொழில் தற்காலிகமாக வேறு காரணங்களால் நிறுத்தி வைப்பது லாக் டவுன்.  (ஷட் டௌன் மாதிரி)

====

72 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.. எல்லோரும் இறைவன் அருளில்., ஆரோக்கிய நல் வாழ்வு பெற பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கேள்விகள், சுவையான பதில்கள். முக்கியமாக தமன்னா கேட்கும் முரளி யார்:)எண் வடிவக் கதை பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 3. கீதா சாம்பசிவம் கேள்வி, ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பற்றிய செய்தி. அதிர்ச்சி தந்தது. இப்படி நடப்பதைக் காணபிக்கும் தொலைக்காட்சி சானல்கள். இங்கே இருப்பதால் அதை எல்லாம் பார்க்கவில்லை என்ற மகிழ்சசிதான் கொடுத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அதை எல்லாம் பார்க்கவில்லை. அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

   நீக்கு
  2. இங்கே பாலிமரில் கூடப்பார்த்தேன் வல்லி! திரும்பத் திரும்ப 2,3 தொலைக்காட்சி சானல்களில் காட்டினாங்க! :(

   நீக்கு
  3. என் அக்கா மகன் சொல்லியிருக்கிறான், அவன் பிட்ஸ் பிலானியில் படித்த பொழுது பிறந்த நாள் என்று சொல்லவே பயப்படுவார்களாம். ஏனென்றால் யாருக்கு பிறந்த நாளோ,அந்தப் பையனை திரும்பி நிற்கச் சொல்லி, அவன் பிருஷ்டத்தில் எல்லோரும் உதைப்பார்களாம், அதற்கு 'பர்த் டே பம்' என்று பெயராம். அது இந்த அளவு வளர்ந்திருக்கிறது சாரி தாழ்ந்திருக்கிறது போல. 

   நீக்கு
 4. காலை வணக்கம். அனைத்தையும் படித்தேன்.

  தமிழ் எழுத்தில் எண்கள், வருடங்கள் போன்றவை 1940வரையுள்ள புத்தகங்களைப் பார்த்தாலே தெரியும். 60கள் வரை திருமணப் பத்திரிகைகளிலும் உண்டு. அதன் எச்சம்தான் இப்போதும் திருமணப் பத்திரிகையில் ஆவணி மீ 21 அன்று இத்தனை நாழிகையில் என்றெல்லாம் போடுவது. தமிழ் எண்கள் என்பதை நாம் அநாதி காலம் தொட்டு தமிழ் மொழி கொண்டுள்ளது. வடநாட்டு இந்தோ எண்கள் அரபு தேசத்தின் ஒரு பகுதியில் எடுத்தாளப்பட்டு பிறகு அரபு எண்கள் என்ற பெயரைப் பெற்று, அதனையே ஐரோப்பிய கலாச்சாரம் (ரோமன் எண்களை விட்டுவிட்டு) தங்களுக்கு எடுத்துக்கொண்டது. ஆங்கில ஆட்சியில் தமிழ் எண்களைப் புரிந்துகொள்ள முடியாமல் parallel ஆக ஆங்கில எண்ணும் கொடுக்க ஆரம்பித்து மெதுவாக நாம் தமிழ் எண்களையே மறந்துவிட்டோம். மொழியின் ஒரு கூறை நாம் இழந்துவிட்டோம். அப்புறம், தனித் தமிழ் என்று ஜல்லியடிப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?

  உலகில் தமிழ் எண்களும் ரோமன் எண்களும் பழமையானவை. ரோமன் எண்களில் லட்சம் (கோடி யா என்பது நினைவில்லை) என்பதற்கு மேல் எந்த இலக்கியத்திலும் எழுதப்படவில்லை. தமிழில் நம்ப முடியாத அளவு வரை (லட்சம் கோடி கோடிகளுக்கு மேல்) எண்ணிக்கைக்கு பெயர் உண்டு (வெள்ளம் என்ற எண்ணிக்கைதான் மி உச்ச எண் என நினைவு. அதுபோல பிற மொழிகளில் இல்லாத, 1/320 என்பதெற்கெல்லாம் நம்மிடம் அளவீடு உண்டு.

  நீங்கள் எழுதிய தமிழ் எண் ஆங்கிலம் வந்த பிறகு சுலபத்திற்காக எழுதப்பட்டது. 20 என்பதை உ0. என எழுதுகிறீர்கள். தமிழ் எண்கள் மரபுப்படி அதனை உய0. அதாவது இரண்டு பத்துகள் ஒரு பூச்சியம் என எழுதணும். 2020ஐ, இரண்டு ஆயிரம் இரண்டு பத்து ஒரு பூச்சியம். என எழுதணும்.

  Sorry for நெடிய விளக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெடிய விளக்கமாக இருந்தாலும் - அரிய விளக்கம்; அறியக் கொடுத்தமைக்கு ௧௦௦௦ நன்றிகள்! (என்னுடைய பதில் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. நாம் இந்தக் காலத்தில் என்னதான் தமிழ் எண்களைப் பார்த்தாலும், அதை அரேபிய எங்களாக translate செய்துதான் புரிந்துகொள்கிறோம். எனவே இந்தக் காலத்தில், தமிழ் எண் என்றெல்லாம் எழுதுவது வேண்டாத வேலை.

   நீக்கு
  2. ௲ நன்றிகள் என்று எழுதணும். தமிழ் எண் எழுதுவது வேண்டாத வேலை என்பது நம்ம மனநிலையாக மாறிடுச்சு. என் கேள்வி, தமிழ் மட்டும் எதுக்கு? அதுவும் நமக்கு அவசியமில்லையே (மற்ற மொழிகளில் பேசத் தெரிந்தால்). சுலபம் என்று பார்த்தால் நமக்கு ஒரு பாரம்பர்யமும் மொழியும் போயிடும் என்பது என் எண்ணம். (உடனே தமிழ்த் தீவிரவாதின்னு நினைச்சுடாதீங்க)

   இப்போ தமிழ் மாதங்களே நமக்கு பெரும்பாலும் தெரியாது. தேதிகள் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் ஐரோப்பிய தேதிகள் மட்டும்தான். ஆவணி 12ல கல்யாணம் வச்சிருக்கேன் என்றால், எதுக்கு அவ்வளவு தூரத்துல வச்சிருக்க, இந்த ஊர்லயே வச்சிருக்கக்கூடாதா என்ற நிலைமையை நோக்கித்தான் நம் பயணம் இருக்கு.

   நீக்கு
  3. ஹா ஹா ! சரிதான்! (ஆமாம், யாருக்குக் கல்யாணம் ஆவணி மூல வீதியில?)

   நீக்கு
  4. நெல்லையார் எழுதிய விளக்கம் அருமை. தமிழ் எண்கள் பற்றிய அவர் விளக்கத்தை நானும் படித்துள்ளேன். உச்ச அளவு உண்டு என்று அவர் சொல்லி இருப்பதும் தெரியும். இதைப் பற்றி நானும் என்னோட கணினியில் சேமித்து வைத்திருந்தேன். இப்போது அந்தக் கணினியே பயன்பாட்டில் இல்லாததால் பென் டிரைவ் எதில் இருக்குனு தேடினால் தான் தெரியும். அதோடு முன்னெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுவது தமிழ் மாதத்தில் வரும் நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடிக்கொண்டிருந்தோம். இப்போல்லாம் ஆங்கிலத் தேதிக்கு மாறியாச்சு என்பதோடு நக்ஷத்திரத்தை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சிலர் எந்த ஆங்கில மாசம் பிறந்தாங்களோ அந்த மாசம் வரும் அந்த நக்ஷத்திரத்தன்று பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிடறாங்க. அதாவது புரட்டாசியில் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவருக்கு ஆங்கில மாதம் செப்டெம்பரில் பிறந்த தேதி வந்திருந்தால் செப்டெம்பரில் சுவாதி நக்ஷத்திரம் எப்போ வருதோ அன்னிக்குப் பிறந்த நாள் என எடுத்துக்கிறாங்க. செப்டெம்பரில் பதினைந்து தேதி வரை ஆவணி மாதம். அதன் பின்னரே புரட்டாசி. சில சமயங்களில் ஆவணி மாதக் கடைசித் தேதியில் சுவாதி நக்ஷத்திரம் வந்திருக்கும். இவங்க செப்டெம்பர் மாசம் சுவாதி நக்ஷத்திரம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைப் பொழிவாங்க. ஆனால் மாசம் புரட்டாசியா இருக்காது. அப்போது புரட்டாசி சுவாதி நக்ஷத்திரம் ஆங்கில மாதம் அக்டோபருக்கும் போயிடும் சில சமயங்கள். இதெல்லாம் புரிஞ்சுக்கறவங்க இப்போ இல்லை. நல்லவேளையாப் புரோகிதர்கள் இன்னமும் இதைக் கடைப்பிடிக்கிறாங்க.

   நீக்கு
  5. இதை விட இன்னமும் மோசம் யாருக்கும் மாதத்தில் இரண்டு பிரதமை (அமாவாசைக்கு அடுத்து, பௌர்ணமிக்கு அடுத்து) என்பதோ எல்லாத் திதிகளும் கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம் என்று வருவதோ புரியறதில்லை. கிருஷ்ண பக்ஷம் என்றால் பௌர்ணமிக்குப் பின்னால், சுக்ல பக்ஷம் என்றால் அமாவாசைக்குப் பின்னர் எனச் சொன்னால் ஓரளவு புரிந்து கொள்கிறார்கள். வளர்பிறை, தேய் பிறை என்பதைக் கூடச் சிலர் தான் புரிஞ்சுக்கறாங்க. ஸ்ராத்த திதி வளர்பிறையா, தேய் பிறையா என்றே பார்ப்பதில்லை. ஏகாதசி திதியா, அந்தக் குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் அல்லது ஆங்கில மாதத்தில் வரும் ஏதோவொரு ஏகாதசி திதியில் செய்கிறார்கள். சொன்னாலும் புரிஞ்சுக்கறதில்லை. நம்மைத் தப்பா எடுத்துக்கறாங்க! :(((( எல்லாமே மாறி விட்டது. எல்லாத்தையும் புரிந்து கொண்டு செய்பவர்கள் அரிதாகி வருகிறார்கள்.

   நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  10. முன்னெல்லாம் தமிழ் மாதங்களும், கிழமைகளும் மனப்பாடமாகச் சொல்லும் பழக்கம் இருந்தது. அதே போல் பல தமிழ்ப் பழமொழிகள், வழக்குச் சொற்கள் இவற்றிற்கு எல்லாம் பொருளோடு வாக்கியங்களாக அமைக்கவும் சொல்லிக் கொடுத்துச் செய்யச் சொல்லுவார்கள். இப்போதெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. சன்டே என்றால் தான் பலருக்கும் இப்போது புரிகிறது. ஞாயிற்றுக்கிழமை என்றால் புரிவதில்லை. கேட்கும்போதே இன்னிக்கு என்ன டே என்று தான் கேட்கின்றனர்.

   நீக்கு
  11. இன்னிக்குப் பூரா மடிக்கணினி இப்படியே வித்தை காட்டும் போல இருக்கு. தலைப்பைப் பார்த்துட்டு என்னவோ, ஏதோ எனப் பதறிட்டு வந்தால்! இங்கே தமிழ்ப் பாடம் நடக்குது! :)))))

   நீக்கு
  12. இப்போதெல்லாம் இன்னொரு கூத்து நடக்கிறது. சனிக்கிழமை விரதம் என்கிறார்கள், சனிக்கிழமை இரவு பன்னிரண்டு ஆனதும் விரதம் முடிந்து விடுமாம்.எங்கள் உறவில் ஒரு பெண்ணுக்கு வியாழன் இரவு 1.15க்கு குழந்தை பிறந்தது. நமது கணக்குப்படி ஞாயிறுதான் புண்யாகவாசனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் இரவு 12 மணிக்கு மேல் வெள்ளி வந்துவிடும் என்று எடுத்துக் கொண்டார்கள். நான் சொன்னதை கேட்கவில்லை. அதே போல் இன்னொரு அபத்தம் காசிக்கும்,கயாவுக்கும் போய் பிண்டம் போட்டு விட்டு வந்து விட்டால் அதற்குப் பிறகு திவசம் செய்ய வேண்டியதில்லை என்று ஒரு புது தியரி!    நீக்கு
  13. ஆமாம், எல்லாமே இப்போது ஆங்கில முறைப்படி ஆகிக் கொண்டு வருகிறது. எங்க குடியிருப்பிலும் ஒரு பெண்ணுக்குச் சனிக்கிழமை இரவு ஒன்றரைக்குக் குழந்தை பிறந்ததை ஞாயிறு எனக் கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். நான் அப்படி வராது என்றேன். கேட்கவில்லை. இந்த கயா ச்ராத்தம் பற்றியும் நீங்கள் சொல்வதைப் போல் தான் பலரும் எங்களிடம் சொன்னார்கள். போதாதுக்கு இப்போ 2 வருஷம் முன்னர் மாத்ரு கயா போயிட்டு வந்ததும் வேறே இன்னமும் ஏன் ச்ராத்தமெல்லாம் பண்ணறீங்கனு கேட்டாங்க! :(

   நீக்கு
 5. Rman எண்களில் எண் இருக்கும் இடத்தைப் பொருத்து மாறுபடும் XI - 11. IX -9. . தமிழில் அந்த மாதிரி கிடையாது. தமிழில் 9க்கு ஒரு எழுத்து, 11க்கு யக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'ஐயகோ' (இது என்ன எண் சொல்லுங்க பார்க்கலாம்!)

   நீக்கு
  2. இப்படி ஒரு எண் இல்லை. ரோமன்ல IYACO அல்லது IYAGO - இதுவும் தவறு. பெரிய எண்ணில் ஆரம்பித்து சிறிய எண்ணில் முடிக்கணும்.

   நீக்கு
  3. ரொம்ப சீரியஸா பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே!

   நீக்கு
  4. தமிழ் எழுத்து, எண்கள் பற்றி ஒரு பழைய புத்தகம் படித்தேன். அதன் விளைவுதான் இது. ஹாஹா. நானும் நீங்க விடுகதை போடறீங்கன்னு நினைத்து சீரியஸா யோசித்தேன். பார்த்தா டுபாக்கூரா இருக்கு

   நீக்கு
 6. ஆண்கள் தொலைக்காட்சி சீரியல்கள் அதிகமா பார்க்கறாங்களாம்... அண்டப் புளுகு ஆகாசப் புளுகை விட மோசமா இருக்கே.

  ஆண்கள் அக்கடான்னு நிம்மதியா இருக்க (மனைவியின் நச்சரிப்பு இல்லாமல் ஹாஹா) இருக்க நினைப்பாங்க. குடிகாரன், இன்னோத்தனுக்கும் அந்தப் பழக்கத்தைப் பரப்பிவிடற மாதிரி, இந்த ஆள் நியூஸ், SVBC லாம் பாத்துக்கிட்டிருந்தா நமக்கு எப்படி சீரியல் பார்க்க முடியும் என நினைத்து கணவருக்கு பழக்கி விட்டுடறாங்களோ? இருக்கும் க்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! ஆமாம்! அப்படியும் இருக்கலாம்!

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. உங்க இருவருக்கும் உண்மையான நிலைமை புரியலைனு நினைக்கிறேன். பல வீடுகளிலும் பார்த்திருக்கேன். எங்க வீட்டிலேயும் என்னை விட அவர் தான் பார்ப்பார். எங்க சொந்தங்களிலேயும் இதைப் பற்றி ஒருவரை ஒருவர் சந்திக்கையில் கலந்துரையாடல் நிகழ்த்துவார்கள். முகநூலிலும் பல ஆண்கள் தொடர்கள் பற்றிக் கருத்துச் சொல்வதைக் கண்டு வருகிறேன்.

   நீக்கு
  5. நான் ஒருதடவை சொன்னா .... மூன்று முறை சொன்ன மாதிரி!

   நீக்கு
  6. haahaahaa! I was about to remove them. somebody came so shut down the computer. :))) will remove now. Today it is happenning in all blogs. :)))))

   நீக்கு
 7. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இப்போது மூடத்தனமாக நடத்தப்படுகிறது.

  இறந்துபோன அரசியல் தலைவரின் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்குவதே மடத்தனம்தானே...

  தமிழ் எண்களை புழக்கத்தில் கொண்டு வருவது இருக்கட்டும். தமிழ் எழுத்துகளை படிக்கத் தெரியாதவரின் எண்ணிக்கை உயருகிறதே... இதன் முடிவு ?

  பதில்களை ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 8. 1970 களில் தமிழ் நாட்டின் அரசு ஆங்கில மாதங்களின் பெயர்களைத் தமிழ் உச்சரிப்புக்கு மாற்றியது.. ஜூலை - சூலை என்றானது..

  சூலை என்றால் தமிழில் வயிற்றுவலி...

  நல்லவேளை.. மாற்றியதோடு விட்டார்கள்.. மக்களும் இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று நச்சரிக்கவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுலவேற, டமிள் பற்று உள்ளவனுங்க, ஆகத்து என்று ஆகஸ்டுக்கு பேர் போடறாங்க. சரி உன் பேர் என்னன்னு கேட்டால், ஜான் ராபர்ட்னு சொல்றாங்க. என்னத்தைச் சொல்றது.

   நீக்கு
  2. // சூலை என்றால் தமிழில் வயிற்றுவலி...// ஹா ஹா !

   நீக்கு
  3. ஜான் ராபர்ட் என்பதை தமிழில் சொன்னால், சான் இராபத்து?

   நீக்கு
  4. வெல்லெசுலி - இதாவது பரவாயில்லை...

   சாசகான்.. சகாங்கீர்.. இப்படியானால்!?..

   நமது தலை தப்பிக்க வேணும்...

   நீக்கு
  5. :)) Wellesley ய வெள்ள சுண்டெலி பண்ணாம விட்டா சரிதான்!

   நீக்கு
 9. //இருபது வருடங்களில் திருமணம் என்னும் அமைப்பே இருக்காது// - அப்படீல்லாம் நடக்கவே நடக்காது. எப்போதும் திருமணம் என்ற அமைப்பு இருக்கும், அது மட்டும்தான் ஒருவருக்கு பாதுகாப்பு. அரசுப் பாதுகாப்பும் கிடைக்கும். என்ன ஒண்ணு, திருமணம் ஆகும் வயது (30 வயசுக்கு மேல திருமணம் செய்தால் போதும் என்ற எண்ணம் போன்றவை), பெண்கள் தாங்களே முடிவு செய்வது இப்படித்தான் நிலைமை மாறும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொல்வது நியாயம்தான் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 10. //இந்த தமன்னா தமிழ் புரிகிறதா// - அந்தம்மா யாரையோ முரளின்றவரை சந்திக்கிறதுல எனக்கு என்ன ஆர்வம் இருக்க முடியும் கேஜிஜி சார்?

  ஸ்ரீராமுக்கு இன்னைக்குள்ள கணிணி பிரச்சனை சரியாயிடணும்னு நான் வேண்டாத தெய்வமில்லை. நாளைக்கு அவருடைய தொடர்கதை இறுதிப்பகுதி. அவர் வந்து பதில் சொல்வாரா? இல்லைனா, என்றைக்கு கணிணிப் பிரச்சனை சரியாகிறதோ அன்றைக்கு வந்து பதில் சொல்லட்டும், மறக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 11. நியூஸ் சானல்கள் போட்டால் எங்க வீட்டில் ஒரே சானல் ஐந்து நிமிஷங்கள் நீடித்து இருக்காது. மாறிட்டே/மாத்திட்டே இருப்பார். நான் பாலிமர் நியூஸ் போடச் சொல்லுவேன். போட்டுட்டு அதில் விளம்பர இடைவேளை வந்ததும், சன் நியூஸ், நியூஸ்7, தந்தி நியூஸ், சத்யம், புதியதலைமுறை, ராஜ் நியூஸ் என மாறிப் பின்னர் ரிபப்ளிக், என்டிடிவி, டைஸ் நவ் எனப் போயிட்டு இருக்கும். அதுக்குள்ளாகப் பாலிமரில் நான் பார்த்து/கேட்டுக் கொண்டிருந்த செய்தி முடிஞ்சுடும். இந்த செட்டாப் பாக்ஸ் வந்ததிலே எனக்குத் தொலைக்காட்சியில் சானல்களைக் கொண்டு வரது பிரச்னையா இருக்கு. நான் போட்டால் எஸ்விபிசி, பொதிகை, மக்கள், தூர்தர்ஷன் பாரதி என்று பார்ப்பேன். அதுவும் எப்போவானும். மத்தியானமோ, காலை வேளையோ தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுப் பார்ப்பது என்பதே இல்லை. எப்போவானும் தேர்தல் செய்திகள், முக்கியமான செய்திகள் இருந்தாலோ, பட்ஜெட் செய்திகள்னாலோ அவர் பார்ப்பார். இல்லைனா எப்போவுமே மாலை ஐந்தரைக்கு மேல் தான்.

  பதிலளிநீக்கு
 12. தொலைகாட்சி சானல்களில்தொடர்களில் சில அல்ல அல்லபல விஷ்யங்கள் மிகைப்படுத்தி காண்பித்தாலும்ச்லநிகழ்வுகள் சரியே ஆனால் எல்லாப் பெண்களும் வில்லிகளாக் சித்திரிக்கப்படுவது உண்மையோ என்னவோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ! பெண்கள் எல்லோரையும் வில்லிகளாக சித்தரிப்பதால்தான், ஆண்கள் அதிகம் பேர் பார்த்து சந்தோஷப்படுகிறார்களோ !!

   நீக்கு
 13. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
  கருத்துக்களும் கலந்துரையாடல் போல் நன்றாக இருக்கிறது.


  பதிலளிநீக்கு
 14. எங்கள் வீட்டிலும் என் கணவர்தான் சீரியல்கள் பார்ப்பார். சீரியல்கள் பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, எல்லாமே ஆண்கள்தான் அதிகம் செய்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் இதையெல்லாம் நான் சொன்னால் நெல்லை  ஒப்புக்  கொள்ளவா  போகிறார்? 

  பதிலளிநீக்கு
 15. //திருமணம் இல்லாத் தொடர்பு எவ்வளவு இருக்கிறது என்று ஊகிப்பது இயலாது. எனக்கு என்னவோ நம் பெண் மக்கள் அப்படி ஒரேயடியாக மாற மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.//இருபது வருடங்கள் முன்பு பெண்கள் இவ்வளவு சகஜமாக புகைப்பார்கள், குடிப்பார்கள் என்று நினைத்தோமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போ எவ்வளவு பெண்கள் சகஜமாக குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு அலுவலக பார்ட்டியில் சிறிது jin மட்டும் குடித்த ஒரு மேலதிகாரி பெண்மணியைப் பார்த்தேன். சென்னையில் ஒரு அலுவலகத்தில் மாடிப்படி அருகே நின்று புகை பிடித்த கவுன் போட்ட பெண்மணியைப் பார்த்தேன். பெங்களூரில் ஐந்து வருடங்களுக்கு முன்பு பொது வெளியில் சிகரெட் பிடித்த (இவர்களும் கவுன் போட்டவர்கள்!) பெண்மணிகளைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு ஏன்? ஐம்பது வருடங்களுக்கு முன்பு நான் குடியிருந்த சென்னை வீட்டில், பக்கத்து போர்ஷனில் குடியிருந்த ஒரு கிழவி, அதிகாலையில் டாய்லெட் அறைக்குள் சுருட்டு பிடிப்பார். அவர் டாய்லெட்டிலிருந்து வெளிவந்த பத்து நிமிட நேரத்திற்கு டாய்லெட்டில் சுருட்டு நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். புகைப் பழக்கம் புற்றுநோயை வரவழைக்கும் என்று தெரிந்த பின்னரும், அதை கண்மூடித்தனமாக தொடரும் ஆண், பெண் யாராக இருந்தாலும், அவர்கள் அறிவிலிகளே !

   நீக்கு
  2. எப்படி உலகம் போகும், நம் ஊரில் என்ன ஆகும் என்பதைத் தெரிந்துகொள்வது பெரிய கம்பசூத்திரம் இல்லை. சரிசம உரிமை என்றில்லாவிட்டாலும் ஓரளவு உரிமை இப்போ பெண்களுக்குக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அது இன்னும் அதிகமாகும். திருமணம் செய்துகொள்வது இருவரின் விருப்பம்/உரிமையாக மாறும்.

   எப்போ பெற்றோரின் நிழலில் இருக்காமல் தன்னிச்சையாக வாழப் பழகுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு மாறுதல்கள் இருக்கும். பெற்றோர் சொத்தும் வேணும், நான் என்னிஷ்டப்படியும் நடக்கணும் என்றிருந்தால் மாற்றம் வராது, ஆனால் இப்போ ஒவ்வொருவரும் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். இது சமூக மாற்றத்தையும் பெண்களுக்கான சுதந்திரத்தையும் பெற்றுத்தரும்.

   பெண்கள் சகஜமாக குடிப்பது - இதனை நான் 20 வருடங்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன். எல்லா சமூகத்தின் பழக்கவழக்கங்களும் கலந்துவிட ஆரம்பித்துள்ளது. அதனால் இத்தகைய மாற்றங்கள் தவிர்க்கமுடியாது. சிகரெட், தண்ணீர் இந்தப் பழக்கங்கள் அவர்களைத் தொத்திக்கொண்டதற்குக் காரணமே, 'நானும் உனக்குச் சரிசமம்தான்' என்று ஆழ்மனத்தில் அவர்கள் காட்டத் துடிக்கும் எண்ணம்தான்.

   /திருமணம் இல்லாத் தொடர்பு// - இது கமிட்மெண்ட் சம்பந்தப்பட்டது. அதனால் மனசாட்சியைக் கட்டுப்படுத்துவது. இன்றைக்கு குறிப்பிடத்தக்க சுதந்திரம் இல்லாததால் தவறு நடக்கலாம், வாழ்க்கைச் சுதந்திரம் வந்த பிறகு இந்த மாதிரி நடக்காது.

   நீக்கு
  3. இந்தத் திருமணம் இல்லாத் தொடர்புக்கு இப்போதெல்லாம் விளம்பரத்தில் வேறே சொல்லி அறிமுகம் செய்கிறார்கள். தேநீர் விளம்பரத்தில் வருகிறது. அந்த விளம்பரம் வந்தாலே நான் பார்க்க மாட்டேன். :( நியாயப் படுத்துகிறார்கள். அதே போல் இப்போது குழந்தை வேண்டாம் என்பதையும் நியாயப்படுத்தி விளம்பரம் வருகிறது. ஒரு பெண்மணி தெரிந்த இளம்பெண்ணிடம், "குட் நியூஸ் ஒண்ணும் இல்லையா?" என்று கேட்பதற்கு அந்த இளம்பெண் தனியாக சொந்த பிசினஸ் ஆரம்பிச்சாச்சு, புது வீடு வாங்கியாச்சு! இதைவிட குட் நியூஸ் வேறே என்ன வேண்டும்? என்கிறாள். :( மனித இனத்திற்கே ஆபத்து நெருங்குகிறது. இதைப் பார்த்து எத்தனை பெண்கள் குழந்தை வேண்டாம் என்று தீர்மானிப்பார்களோ? ஏற்கெனவே கல்யாண வயசு 30 எனவும், குழந்தை பெற்றுக்கொள்வது 35 இல் எனவும் ஆகிவிட்டது! 35இல் கூடக் குழந்தை பெற்றுக்கொள்ள யோசிப்பவர்கள் இருக்காங்க. :(

   நீக்கு
 16. //எங்கள் ப்ளாக்  05 09 2040 புதன் கேள்வி பதில் பகுதியில் நான் இதற்கு பதில் சொல்கிறேன்.//ஹாஹா! அப்போது மின் நிலாவில் பொக்கிஷம் பகுதியில் 2020யிலேயே இப்போதிருக்கும் நிலை பற்றி பானுமதி வெங்கடேஸ்வரன் என்பவர் கேள்வி கேட்டிருக்கிறார் என்று வரும் என்று நினைக்கிறேன் :))   பதிலளிநீக்கு
 17. கேள்வி பதில்கள், பின்னூட்டங்கள் என்று எல்லாமே நீண்ட கருத்துகளாக! பொறுமையாக படிக்க வேண்டும்! பின்னர் வருகிறேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!