புதன், 16 செப்டம்பர், 2020

கேள்வி - பதில்கள் - கேள்விகள்


நெலலைத்தமிழன் : 

தனக்குப் பிடித்தமாதிரி பதில் மற்றும் ஆலோசனை சொல்பவர்களை மட்டும்தான் நாம் விரும்புகிறோமோ? 

# அது நாம் எதற்காக ஆலோசனை கேட்கிறோம் என்பதைப் பொறுத்தது. வாழ்வாதாரமான பிரச்சினை, தீர்வு நமக்கு நாமே காணும் வகை இல்லை என்றால், நாம் நம்பும் ஒருவரது எந்த ஆலோசனையையும் ஏற்கத் தயாராக இருப்போம். அப்படியின்றி பிரச்சினை காஸ்மெடிக் (யார் அழகி - அ or த ) ஆகுமானால் நம்மோடு ஒத்துப் போகிற கருத்தை வரவேற்போம். மனித இயல்பு.

& '#' சொல்வதை ஆமோதிக்கிறேன். 

சகிப்புத் தன்மை ஏன் நமக்கு அத்தியாசவசியமான குணமாக இருக்கவேண்டியிருக்கு?

# சகிப்புத்தன்மை இல்லாதபோது எதிரணி பெருகிக் கொண்டே இருக்கும்.

& சகிப்புத் தன்மை இருந்தால்தான், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முழு கவனத்துடன் உள்வாங்க இயலும். சகிப்புத் தன்மை இல்லை என்றால், யார் சொல்வதையும் - குறிப்பாக எதிர் கருத்துகள் சொல்பவர் என்ன சொல்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலாது. 

டயபடிஸ் வருவதற்கு இந்த பற்பசைகளும் ஒரு காரணமா? இல்லை பற்கள் பாதிக்கப்படுவதற்கு மட்டும்தான் காரணமாக இருக்கா? வெல்லச் சீடைக்குப் போடற மாதிரி இனிப்பு சேர்க்கறாங்க. அதுதான். ஹாஹா

$ எங்க டாக்டர் டயாபடிஸ் வர நாக்கு தான் காரணம் என்கிறார்.

# டயாபடிஸ் இருந்தால் இனிப்பு விலக்கம். இனிப்பு சாப்பிடுவதால் வராது. 
உடனே சுத்தம் செய்வதால் பற்பசையால் கூட  கெடுதல் இல்லை.
=====

சென்ற வார படப் புதிருக்கான விடை :  S D சுப்புலக்ஷ்மி . 

இந்த பதிலை எங்கள் பிளாக் gmail  மூலம் கேட்டு, அதை அங்கே சொல்லியிருந்தார் திருமதி ரேவதி நரசிம்ஹன். 

அவர் அது யார் என்று கேட்ட கேள்விக்கு, நான், " செல்வி பத்மா சுப்ரமணியத்தின் தம்பியின் அம்மா " என்று சொல்லியிருந்தேன். பெயரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். 

பெரும்பாலானவர்கள் அதை கவனிக்கவில்லை. 

அப்புறம் mvgs  (அது யாரு ?) என்று ஒருவரும் சொல்லியிருந்தார். 

SD Subbalakshmi. 

அதையும் யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். 


(அதற்கப்புறம் நேற்று கீ சா மேடமும் அதை வழிமொழிந்து கமெண்ட்  பதிவு செய்துள்ளார். )


இந்த வாரக் கேள்விகள் : 


நெல்லைத்தமிழன் கேட்கிறார் : 

உங்களை எரிச்சலூட்டும் விளம்பரம்(ங்கள்) என்னன்ன?


எங்கள் கேள்வி : 

அக்காவுல இருக்கு தங்கையில இல்லை 
அப்பாவுல இருக்கு அம்மாவுல இல்லை
சிங்கத்துல இருக்கு சிகரத்துல இல்லை
பள்ளியில் இருக்கு பல்லியில் இல்லை
'வாளால்' காணலாம் - 'வாலால்' காண இயலாது 
எல்லோல இருக்கு பில்லோல இல்லை
'நகம்'ல இருக்கு 'நலம்'ல இல்லை

ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து தட்டி கொட்டி வரிசையில் 
அமைத்து பதிலை சொல்லுங்க! 

படம் பார்த்து கதை சொல்லுங்க : இது என்ன? 


==========


=========

74 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  கௌதமன் ஜி உங்கள் புதிருக்கு விடை எங்கள் ப்ளாக்:)

  பதிலளிநீக்கு
 2. கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
  நற்றாள் தொழாஅர் எனின்

  அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. படம் பார்த்தால் ஏதோ விலாங்கு மீன் மாதிரி இருக்கு.
  ஒரு வேளை காக்டஸ் வகையோ.

  பதிலளிநீக்கு
 5. அவர் அது யார் என்று கேட்ட கேள்விக்கு, நான், " செல்வி பத்மா சுப்ரமணியத்தின் தம்பியின் அம்மா " என்று சொல்லியிருந்தேன். பெயரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். //ஆமாம் இது அந்தப் பழைய காலக்கதை.
  மாமியார் அவரது தோழிகள் எல்லோரும் பேசுவார்கள்.:)

  ஸ்ரீமதி எஸ்.டி சுப்புலக்ஷ்மி ஒரு கனவுக்கன்னி ரேஞ்சுக்குப்
  பேசப்பட்டார்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ..ஸ்ரீமதி எஸ்.டி சுப்புலக்ஷ்மி ஒரு கனவுக்கன்னி ரேஞ்சுக்குப்
   பேசப்பட்டார்!//

   அந்தக்காலத்தில் ஜொல்லுவிட்ட கொள்ளுத்தாத்தாக்களை வரிசையாக வளைத்துவிட்டிருந்தாரோ !

   நீக்கு
  2. //எஸ்.டி சுப்புலக்ஷ்மி ஒரு கனவுக்கன்னி ரேஞ்சுக்குப்// - இறைவா.. என்ன அநியாயம் இது...

   நீக்கு
 6. தனக்குப் பிடித்தமாதிரி பதில் மற்றும் ஆலோசனை சொல்பவர்களை மட்டும்தான் நாம் விரும்புகிறோமோ?///////////////////////////////////////////////

  மனித மனம் மறுப்பு விவாதங்களை விரும்புவதில்லை.
  மூர்க்கமாக மறுக்கத்தான் விரும்புகிறது.
  ஆனால் ஆரோக்கியமான விவாதம்
  நன்மை செய்யும்.
  இப்பொழுது குழந்தைகளிடம் பேசும்போதே
  நாசூக்காகச் சொல்ல வேண்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. $ எங்க டாக்டர் டயாபடிஸ் வர நாக்கு தான் காரணம் என்கிறார்.///////// நான் சர்க்கரை பக்கமே சென்றதில்லை. அல்வா செய்தாலும்
  மற்றவர்களுக்காகத்தான்.
  எனக்கு டயபெடிஸ் வரக்காரணம், தேகப் பயிற்சி இல்லாமையும்,
  மன அழுத்தமும் தான் ஜி.
  குஜராத்திகள் காலையிலேயே ஜிலேபி சாப்பிடுவார்களாம்.
  அவர்களில் நிறைய நபர்களுக்கு வருவதில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ..எனக்கு டயபெடிஸ் வரக்காரணம், தேகப் பயிற்சி இல்லாமையும்,
   மன அழுத்தமும் தான் ஜி.//

   இந்தக் காலத்து டாக்டர்கள், ஸ்பெஷலிஸ்ட்டுகள் அடிக்கடிக் கொளுத்திப்போடுவது இது. அவர்களால் நோய்பற்றி வேறெதுவும் கண்டறிந்து சொல்ல துப்பில்லையென்றால் இப்படிச் சொல்லிக்கொண்டே வேகவேகமாக மருந்தெழுதிக் கொடுப்பார்கள்.

   என் விஷயத்தைக் கொஞ்சம் வைக்கிறேன்: மன அழுத்தத்திற்கு வாழ்வில் என்றும் பஞ்சமிருந்ததில்லை - பணி, சூழல், என் பொதுவான குணங்கள் எனக் காரணங்கள் பல. தேகப்பயிற்சி என்றால் என்ன என்று இளம்வயதில் கேட்டிருக்கிறேன். இப்பவும் விடாமல் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன். என் சாப்பாட்டு முறைகளில் எந்த மாறுதலையும் நான் செய்யவில்லை.. அதே அளவு சீனி, சர்க்கரை, வெல்லம், தித்திப்பு, காரம், நெய் இத்தியாதிகள். காஃபியையும் ஆனந்தமாக ரசித்தே வருகிறேன். எக்ஸ்ட்ரா கப்பு எப்போது கிடைத்தாலும் விடுவதில்லை. நாக்கு வளவமாகவே வாழ்ந்துவருகிறது. உடம்பும் நான் எங்கு சென்றாலும் என்கூடத்தான் வருகிறது, இன்னும்!

   அது சரி, டயபெடிஸ்? என் பக்கத்தில்வந்து நிற்கக்கூட அதற்கு தைரியம் இருந்ததில்லை!

   நீக்கு
  2. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். இனிப்பு எங்கே கிடைத்தாலும் தாராளமாக சுவைத்துச் சாப்பிடுவேன்!

   நீக்கு
  3. இதற்கு உடல் வாகுவும் முக்கியம். நான் இனிப்புப் பிரியன். அதனாலேயே செளசெள கூட்டு போன்றவை சின்னவயதிலிருந்தே பிடிக்கும் (அதில் உள்ள லைட் இனிப்புச் சுவையினால்). ஆனால் ஷுகர் செக் பண்ணி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது (இல்லை.. இரண்டு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் ரேண்டம் செக் பண்ணினார், இருந்தாலும் 12 மணி நேர உபவாசம், சாப்பாடு, பின் இரண்டு மணி நேரத்தில் இன்னொரு டெஸ்ட் என்று எடுத்து ஆறு மாதமாகிவிட்டது.

   //என் பக்கத்தில்வந்து நிற்கக்கூட அதற்கு தைரியம்// - அப்படீல்லாம் எழுதாதீங்க.இதெல்லாம் வராத வரையில் நல்லதுதான்.

   கடந்த 10 வருடங்களில் என்னிடம் ஏற்பட்ட மாற்றம், கெக்கேபிக்கே இனிப்புகளை ரசிப்பதில்லை (எண்ணெய் வழிந்துகொண்டிருக்கும் அப்பம், ஜீனிப்பாகைவிட எண்ணெயே தெரியும் ஜாங்கிரி, அளவுக்கதிகமான அல்வா சாப்பிடுவதில்லை, அதிகபட்சம் 100 கிராம்தான்).

   டயபடீஸுக்கு முக்கியக் காரணம் பரம்பரை, மற்றும் movements இல்லாத வாழ்க்கை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இதற்கு அலோபதி மருத்துவர்களை consult செய்யக்கூடாது என்பதும் முக்கியம் (ஹாஹா)

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோரும் ஆரோக்கியமான நல்வாழ்வு வாழவும் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. ஒரு பழைய புத்தகத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மியின் இந்தப் படம் வந்திருந்தது. பொழுது போகாமல் புரட்டியப்போப் பார்த்தேன். சரினு சொல்ல வந்தால் ஏற்கெனவே யாரோ சொல்லிட்டாங்க. அதை ஆமோதித்து விட்டுப் போயிட்டேன். வேறே வழி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பரிசு போச்சு! :) ஆனால் நான் அவங்களோட கதாகாலட்சேபம் கேட்டிருக்கேன். மதுரையில் மேலகோபுர வாசலுக்கு எதிரே இருக்கும் ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க்கடையின் வெள்ளி விழாவில்.! நல்லாச் சொல்லுவாங்க! கொத்தமங்கலம் சுப்பு, எம்.எஸ். எம்.எல்.வினு பிரபலமானவர்களின் நிகழ்ச்சி. அதிலே தான் விகடம் கிருஷ்ணமூர்த்தியின் விகடக் கச்சேரியும் கேட்டேன். எம்.எல்.வியின் கணவர், நடிகை ஸ்ரீவித்யாவின் அப்பா.

  பதிலளிநீக்கு
 10. அது ஏதோ சுறாமீன், திமிங்கிலத்தின் வால் பகுதி மாதிரி இருந்தாலும் அது இல்லை. அப்படின்னா என்னவாக இருக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூகிளாண்டவரைச் சரண் அடைஞ்சால் ஏதேதோ வங்காளத்தில் வருது. அநேகமாக மீன்கள் சமைக்கும் முறைனு நினைக்கிறேன். ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துட்டேன். மெதுவாச் சொல்லுங்க கேட்டுக்கலாம். அவசரமே இல்லை! :)))))

   நீக்கு
  2. மஹாளயபக்‌ஷம் சமயத்துல கீசா மேடத்துக்கு என்ன நினைப்பு வருது. இந்த மாதிரிலாம் ஆழ்மனத்துல இருந்தால், ஏன் பயங்கரக் கனவுலாம் வராது?

   நீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  4. நார்மலா எத்தனை 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' போடுவாங்க, இப்போ போட்டிருக்கிறது எத்தனை மடங்கு என்று கணக்குப் பண்ணினால்தான் எவ்வளவு கோபம் இந்த கீசா மேடத்துக்கு வந்திருக்கு என்று கண்டுபிடிக்க முடியும் போலிருக்கு. (ஒரு வேளை இன்று ப்ரெஷர் டேப்லட் சாப்பிட மறந்திருப்பாங்களோ?)

   நீக்கு
 11. கேள்வி-பதில் சுவாரஸ்யம் ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 12. இன்றைய கேள்வி பதில்கள் குறைவாக இருந்தாலும் நிறைவு. 

  பதிலளிநீக்கு
 13. எஸ்.டி. சுப்புலட்சுமி என்பதுதான் சரியான பதில் என்பது சென்ற வாரமே வந்துவிடவில்லையோ? இன்று எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளாம். அவர்  இசையரசி என்று போற்றப்பட்டதற்கு அவருடைய குரல் வளம் மட்டுமே காரணமா?(இது அடுத்த வாரத்திற்கான கேள்வி)

  பதிலளிநீக்கு
 14. படப்புதிர் மீன் போலவும் தோன்றுகிறது, யானைத்தந்தம் போவும் தோன்றுகிறது. அவை இரண்டும் இல்லை, வேறு என்னவாக இருக்கும்? ஆலோசிக்கிறேன். 

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
  நலமெலாம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 16. புதிருக்கான படத்தில் இருப்பது
  வதக்கிய பச்சை மிளகாய்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா! செண்பகமே, செண்பகமே - கத்தரி வெண்டையோடு பச்சை மிளகாயும் - கூடையில் உண்டா? ரெண்டு வாரம் கழித்து பார்ப்போம்!

   நீக்கு
  2. கொள்ளிடத்துக் கத்தரியும் வெண்டையும் அமிர்தம் தான்...

   நீக்கு
 17. கேள்விகள் பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  நம் கேள்விக்கு நமக்கு ஒத்து போகிற கருத்தை சொல்பவர்களை பிடிப்பது மனித இயல்புதான். அவர்களைதான் பிடிக்கும். ஆனால் அதிலும் கவனம் தேவை.

  சகிப்பு தன்மை வீட்டில், வெளியில் அதிகம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் சண்டையிட்டு கொண்டே இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 18. படம் பார்த்து கதை சொல் :-
  பெட்ரோல், டீசல், அல்லது தண்ணீர் குழாய்கள் போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 19. //டயாபடிஸ் வர நாக்கு தான் காரணம்// - அப்படி எனக்குத் தோணலை. டயபடீஸ் நம்மை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்வதற்கு நாக்கு காரணமாக இருக்கலாம். எனக்குத் தெரிந்த டயபடீஸ்காரர்கள், இனிப்பு, விருந்துலாம் நல்லாவே சாப்பிட்டுட்டு, பிறகு இரண்டு மடங்கு மாத்திரையைப் போட்டுக்குவாங்க (அப்போ ஆனைக்கும் பானைக்கும் சரியாப்போயிடுமாம்).

  பதிலளிநீக்கு
 20. என்னைப் பொறுத்தவரைக்கும் சர்க்கரை 85-110 அளவிலேயே தான் இருந்தது. இப்போத்தான் நான்கு வருஷங்களாக வக்கரிப்பு. ஏன் என்று தெரியலை! :))))) ஆனால் அதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நெல்லிக்காய்+பாகற்காய்ச் சாறு தினம் உண்டு. கஞ்சியில், சமையலில் வெந்தய ஆதிக்கம் எப்போதும் உண்டு. ஆகவே ரொம்ப அலட்டிக்காமல் இருக்கேன். அவ்வப்போது முருங்கைக்கீரையும் சமைப்பேன். இவ்வளவுக்கும் மேல் சர்க்கரை அளவு குறையலைனா அது மாற்ற முடியாது, இனிமேலே என விட்டுவிட்டேன். இப்போச் சாப்பிடுவதை விடக் கொஞ்சமாச் சாப்பிட்டால் நடமாடவே தெம்பு இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நெல்லிக்காய்+பாகற்காய்ச் சாறு தினம் உண்டு. கஞ்சியில், சமையலில் வெந்தய ஆதிக்கம் எப்போதும் உண்டு. // - இதைவிட ஒரு மனுஷன் (மனுஷி) வேற எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்? விட்டால், சாதத்துக்குப் பதிலா வெந்தயத்தை தளிகை பண்ணி அதில் குழம்பு விட்டு சாப்பிடறோம், மாலை ஸ்னாக்ஸ் பாகற்காய் வறுவல்தான், இரவுக்கு மிது பாகல்காய் வற்றல் தொட்டுக்கிட்டு மோர் சாதம், ஆனா நாங்க ஷுகருக்கெல்லாம் (டயபடீஸுக்கு) முக்கியத்துவம் கொடுக்கறதில்லைனு சொல்லுவாங்க போலிருக்கே

   நீக்கு
  2. ஹெஹெஹெஹெஹெ! இல்லை, என்னைப் பார்க்கிறவங்க முக்கியமா உறவுகளில் சிலர் என்னிடம், "வளைச்சுக்கட்டிக் கொண்டு சாப்பிடக் கூடாது!" என புத்திமதி சொல்லுவார்கள். இதை விட மோசம் ஒரு ஆயுர்வேதப் பெண் மருத்துவர் கால்களின் வீக்கத்தை வீக்கம்னு எடுத்துக்காமல் "கரணை கரணையாக இப்படிக் குண்டாய் இருக்கீங்களே! சாப்பாட்டைக் குறைங்க!" என்றார். போதாததுக்கு எண்ணெய் சிகிச்சை தான் கொடுக்கணும் என்றார். எனக்குத் தெரிந்த நான் முதலில் காட்டிய ஆயுர்வேத, ஆங்கில மருத்துவர்கள் எல்லாம் உள் வீக்கம் என்றும் உள்ளே ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கு என்றும் தான் சொன்னார்கள். அதே போல் எனக்குச் சில சமயம் கொஞ்சம் அழுத்திச் சொரிந்து விட்டால் கூட ரத்தம் வந்துடும். இப்போ அந்த மருத்துவர்கள் எல்லாம் சென்னையில் இருப்பதால் போய் வருவது கஷ்டமாய் இருக்கேனு இங்கே காட்டிட்டு இருக்கோம். நல்ல வைத்தியர் கிடைச்சிருக்கார். சரியான சிகிச்சையும் கிடைக்குது. ஆனாலும் பார்த்ததும் இப்படிப் பலரும் சொல்லுவதால் நான் எதுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லைனு சொன்னேன். ஏன்னா மருத்துவர்கள் சாப்பாடைக் குறைம்பாங்க. நாலு இட்லி என்றால் இரண்டு சாப்பிடு என்பாங்க! இரண்டு அல்லது மூன்று மட்டும் சாப்பிடுகையில் அதையும் எப்படிக் குறைப்பது? ஆகவே எதானாலும் சிகிச்சை மட்டும் முக்கியம். உணவுக்கட்டுப்பாடு என்பது ஏற்கெனவே இருக்கு! இனிமேலும் கட்டுப்பாடு வேண்டாம். இதான் என்னோட "கொ"ல்"கை"! இப்போக் காட்டும் மருத்துவர் பத்தியமோ, சாப்பாடைக்குறைனோ சொல்லலை என்பதும் முக்கியம். என்னமோ ரொம்பவே ஆசைப்பட்டுக்கொண்டு குண்டாய் இருப்பதாய்ப் பலரின் எண்ணம்! :))))))))

   நீக்கு
  3. நான் சில பேரைப் பார்த்திருக்கேன். சும்மா வளைச்சுக் கட்டி சாப்பிடுவாங்க. ஒவ்வொரு சாதத்துக்கும் (குழம்பு, சாத்துமது, மோர்), குளம் வெட்டி சாப்பிடுவாங்க. இனிப்பும் சும்மா 5,6 பீஸ் சாப்பிடுவாங்க. ஆனா ஆளைப் பார்த்தால் ஒல்லியா இருப்பாங்க.

   நானெல்லாம் தண்ணியைக் குடித்தாலே வெயிட் போடுது. அதுனால இது உடல் வாகு என்றுதான் நம்புகிறேன் (இதுக்குப் பின்னணி ஒன்று இருக்கு. பிறகு சொல்றேன். என் மனசுல 'சாபத்தினால்' இப்படி ஆகியிருக்கலாம் என்ற எண்ணம்).

   மத்தபடி இந்த திடீர் டாக்டர்கள் சும்மா பொழுது போகாம, சாப்பாட்டைக் குறைங்க (நாம ஏதோ சமையலறையிலேயே வாசம் செய்யற மாதிரி), 7-8 வேளையா பிரிச்சுச் சாப்பிடுங்க என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுவாங்க. எங்கயாச்சும் பார்க்கிறவங்களும், தினம் நடங்க (அவங்க ஏதோ தினமும் சென்னைக்கும் திருப்பதிக்குமா நடக்கிற மாதிரி), எண்ணெய் அதிகமா எடுத்துக்காதீங்க என்றெல்லாம் ஆரம்பிச்சுடுவாங்க. இந்த மாதிரி யாரேனும் சொல்ல வந்தாலே, பந்தி ரெடியான மாதிரி இருக்கே எல்லாரும் போய்க்கிட்டிருக்காங்களே என்று சொன்னால், பஞ்சாப் பறந்துடுவாங்க.

   நீக்கு
 21. நம் எண்ணத்தோடு ஒத்துவாராதவர் மேல் வெறுப்பு வரக்கூடாது

  பதிலளிநீக்கு
 22. என் நாக்குக்கு பிடித்ததெல்லாம்சாப்பிடுவேன்

  பதிலளிநீக்கு
 23. //தனக்குப் பிடித்தமாதிரி பதில் மற்றும் ஆலோசனை சொல்பவர்களை மட்டும்தான் நாம் விரும்புகிறோமோ? .//

  அப்படீன்னு இல்லை. பிடித்தமாதிரி பதில் சொல்வோருடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. குறிப்பிட்ட விஷயத்தில் இரண்டு பேருக்குமான கருத்து ஒத்துப்போவதால் இயல்பாகவே இருவருக்கும் அந்த விஷயத்தில் ஒரு மன இணக்கம் ஏற்பட்டு விடுகிறது.

  குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மாற்றுக்கருத்து கொண்டோரிடம் தான் எனக்கு பேசுவதற்கு நிறைய இருப்பதால் அவர்களோடு பேசி நம் கருத்தை தெள்ளந்தெளிவாக எடுத்துச் சொல்ல எனக்கு மிகவும் பிடிக்கும்.

  நாம் சொல்வதற்கு அறிவுபூர்வமாக இன்னொரு கருத்துச் சொல்லி எதிர் கருத்து கொண்டிருப்பவரை தன் கருத்தை ஏற்க வைப்பதற்கு சளைக்காமல் விவாதிப்பவர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

  நாம் சொல்வது அவருக்குப் பிடிக்காதோ என்று தன் கருத்தை தன்னோடையே வைத்துக் கொண்டு விவாதிக்காமல் ஒதுங்கி விடுவதே பலருக்குப் பழக்கமாக இருக்கிறது. இது ஒருவிதமான ஒரு கை ஓசை. பதிவு பின்னூட்டங்களில் இந்தப் போக்கைத் தவிர்த்தால் வெற்று பொழுது போக்கு உணர்வுகளிலிருந்து மீண்டு நாம் நிறைய தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு விவாதிக்கிற விஷயங்களில் ஒரு ஈடுபாடு வேண்டும். அது இல்லாதபட்சத்தில் என் கருத்து என்னோடு, உன் கருத்து உன்னோடு என்று ஒருவித ஒதுங்கல் ஏற்பட்டு விடும்.
  இந்த போக்கை கூடியவரை தவிர்ப்பது எல்லா விஷயங்களிலும் ஒரு புரிந்துணர்வையும் தெளிவையும் ஏற்படுத்த மிகவும் உபயோகமாக இருக்கும். அந்த உபயோகத்திற்குத் தானே மாங்கு மாங்கு என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறோம்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி சார்.

   நீக்கு
  2. விவாதம்னு செய்வதற்கும் அந்தக் குறிப்பிட்ட விஷயம் முக்கியத்துவம் வாய்ந்ததாய்ப் பொருள் பொதிந்ததாய் இருந்தால் சரி. சும்மாவானும் வாதம் செய்தால் ஒதுங்கித் தான் போகணும். அதான் நல்லது.

   நீக்கு
  3. விவாதம் என்பதற்கு பதிலாக வேணுமானால், கலந்துரையாடல் என்று கொள்ளலாம். சும்மாவானும் வாதம் என்று எதுவுமேயில்லை என்பது என் கருத்து.

   நீக்கு
 24. I think diabetes is created by pharma companies. How can i, a vegetarian 5'8" Indian be within the same band of 80-120 with a 6+", "rare" steak eating African or an afro american or an Australian??? The height, weight, food habits, climate, type of ones profession, work place atmosphere etc which are vastly different from country to country, continent to continent can't be fitted into a band. Our doctors blindly follow these norms and put you on insulin medicines if your blood reports (again using a standard software) show aberrations.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம்விஜிஎஸ் சரியாகச் சொல்லி இருக்கார். இதைத் தான் நான் நம்ம ரங்க்ஸ் கிட்டேயும் சொல்லுவேன். ஆனால் அவர் புரிஞ்சுக்கறதே இல்லை. :(

   நீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  இன்று நிறைய வேலைகளில் தாமதமாகி விட்டது. இன்றைய கேள்வி பதில்கள் அருமை.

  தனக்கு பிடித்த மாதிரி பதில் சொல்பவர்களுடன் மட்டுந்தான் ஒரு சிலருக்கு பேசப் பிடிக்கும். மற்றவர்களுடன் வரும் பேச்சு வளரும் போது அவர்களும் இவர்களை மாதிரி இருந்து விட்டால், வாக்கு வாதத்தில் போய் முடியும். (இதில் இரண்டாவது கேள்வியும் ஒத்து வருகிறது.) முதலில் பிடித்ததாக (பதில் சொல்பவர்கள்) கருதப்படும் அவர்கள்தான் என்றுமே சகிப்புத் தன்மையுடன் பதில் சொல்லி பழக்கப்பட்டவர்கள்.

  தங்கள் பதில்களும் நன்றாக உள்ளது.
  டயாபடிஸ் வந்தால் கால் பாதங்கள் விரலோடு சேர்த்து மரத்தது போல் இருக்குமா?

  சென்ற வார புதிருக்கு விடை அறிந்து கொண்டேன் தந்தது குறித்து மகிழ்ச்சி. உங்கள் கேள்விகளுக்கு பதில் யோசிக்க வேண்டும். இந்த வாரப் புதிர் படம் குளோசப்பில் ஏதோ காய் (பட்டாணி) மாதிரி உள்ளது. விடை அடுத்த வாரம் தெரிந்து விடுமே....! பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கமலா, சர்க்கரை உள்ளவர்களின் பாதங்களில் எரிச்சல் இருக்கும், விரல்களோடு சேர்த்து மரத்துப் போகும் என்றே சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாமல் பல வருடங்கள் முன்னரே எனக்கு ரத்த ஓட்டத்தினால் அம்மாதிரி ஆகிவிட்டது. அதே போல் என் மாமியாருக்கும் கடைசிவரை சர்க்கரை என்பதே இல்லை. ஆனால் அவங்களும் பாதங்களில் எரிச்சல், மரத்துப் போகிறது என்பார்கள்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!