புதன், 23 செப்டம்பர், 2020

நல்ல மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

16 September - எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாள். அவர் இசையரசி என்று போற்றப்பட்டதற்கு அவருடைய குரல் வளம் மட்டுமே காரணமா?

# இல்லை. எளிமை, அடக்கம், பெரியவர்களிடம் அளவற்ற மரியாதை, கடவுள் பக்தி, எதையும் நன்கு கற்கும் ஆர்வம், எளிதில் கற்கும் திறன், லட்சுமிகரமான காம்பீர்யம் இப்படி நிறையக் காரணங்கள் உண்டு. காந்தி நேரு வரை இருந்த அவரது இசைத் தாக்கம் .

$ முயற்சியுடன் ராக ஞானம்,மொழிப் பயிற்சி இவற்றை கற்றுத் தேர்ச்சி பெற்று வெற்றி கண்டவர்.

ஒரு நல்ல மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?

a). தனக்கு கீழே பணி புரிபவர்களுக்கு ஒரு வேலையைக் கொடுக்கும் பொழுது அதை எப்படி செய்ய வேண்டும் என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டு, அங்கு நிற்காமல் அவர் வேலையை முடித்தவுடன் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுவது. 

b). அவர் கூடவே நின்று கொண்டு சரியாக செய்கிறாரா? என்று கவனிப்பது, 

இந்த இரண்டில் எது சரி?

# நல்ல மேலாளர் தன்னிடம் வேலை செய்பவரின் திறன், அதனை மேம்படுத்தும் சாத்தியக்கூறு, அவரை மன மகிழ்ச்சி- ஆர்வம் மிக்கவராக ஆக்கும் உபாயம் ஆகியவற்றை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

பின் நின்றபடி வழிகாட்டல் அல்லது குறைகாணல் நல்ல மேலாளர்களின் அடையாளம் அல்ல.

$ வள்ளுவர் கூட, 
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்." 
என்றாரே தவிர பின்னிருந்து கவனிக்கச் சொல்லவில்லை! 

நம் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது மகாத்மா காந்தி, நேரு போன்றவர்களுக்கு இருந்த புகழ் இப்போது குறைந்துவிட்டதே? இதற்கு என்ன காரணம்?

# காந்தி போன்றவர்களின் பெருமையைப் புரிந்து கொள்ளாத சமூகத்தை நாம் உருவாக்கி இருப்பதுதான் காரணம்.

நமக்கு ஏதாவது பண்டிகை என்றால் உடனே அதற்கான பிரசாதமும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. நேரு சொன்னது போல நம்முடைய மதம் கிச்சன் ரிலிஜனா?

# நம்முடைய மதம் கிச்சனோ இல்லையோ நாம் நாக்கினடிமைகள்.

$ நேருவுக்கு கிருஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைக்கு படைக்கப்படும் கேக், ஸ்வீட் வகையறாக்களைப் பற்றி தெரியாமலா இருந்திருக்கும்?

நெல்லைத்தமிழன்: 

யாரிடம் ஒரு மனிதன் தன் உண்மையான ஸ்வரூபத்தைக் காண்பிக்கிறான், காண்பிக்க இயலும்?

# தன்னிடம் மட்டுமே, எப்போதாவது! மற்றபடி பெரும்பாலும் தன் அடாத செயல்களுக்கும்கூட நியாயம் கற்பிக்க முனைகிறான்.

$ எதிர்த்து ஏதும் செய்ய முனையாதவர்கள் என்பதை விட முடியாதவர்களிடம் தான்.
 
=========

சென்ற வாரம், 
படம் பார்த்து கதை சொல்லுங்க : இது என்ன? 
என்று கேட்டிருந்தேன். 

யாரும் சரியான விடை சொல்லவில்லை. ( பார்க்க : மின்நிலா 018 Page 12)

சரியான விடை :  பன்மடங்கு பெரிதாக்கப்பட்ட தலைமுடி. 
==== 
இந்த வாரக் கேள்விகள் : 

ஒளிந்திருக்கும் நம் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடிங்க :  

a )  ' என்ன ஜி ! - இவர் கையிலே துப்பாக்கி வைத்திருப்பாரோ ? '

b ) ' மேலே உள்ளவரின் கடைசி எழுத்தை நீட்டி 'வி'ட்டால் இவர் கதை மன்னர்'

c ) 27 ஆம் நட்சத்திரம் + ஐந்தாவது ராசி 

d ) சாவியைக் கொடுங்க சாம்பு சார்! 

e ) எப்பொழுதுமே தனிமையிலே இனிமை காண்பவரோ? 

f )  

g  ) 


h ) 

i ) 

j ) 

நெல்லைத்தமிழன் கேட்கிறார் : 

எந்த மாதிரியான கதைகள் வாசித்தது நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும் என்று எங்கள் பிளாக் வாசகர்களிடம் கேட்கவும். 

சென்ற வாரம் நெ த கேட்ட " உங்களை எரிச்சலூட்டும் விளம்பரம்(ங்கள்) என்னன்ன?" என்ற கேள்விக்கு யாரும் ஒன்றும் பதில் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இந்த வாரமாவது அதற்கும் சேர்த்து பதில் சொல்லுங்க! 

==== 

90 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் .
  கேள்விகள் பதில்கள் சரிக்கு சரி.

  படங்களில் எனக்குப் புரிந்தது காசு ஷோபனா,
  கௌதமன் ஜி,
  ஸ்ரீராம் .

  பதிலளிநீக்கு
 2. 1,எரிச்சலூட்டும் பழைய விளம்பரம் இதயம் எண்ணெய் வாங்கிட்டு வாங்கன்னா
  வாங்கிட்டு வாங்களேன். மஹா எரிச்சல்.

  முதல் கேள்வி ,,,சாவியின் கதைகள் மனதில் நிற்கும்.
  நன்றி நெல்லைத்தமிழன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா.... லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்ஸோடதான் வரணும் என்ற விளம்பரம் உங்களை எரிச்சலூட்டவில்லையா?

   நீக்கு
 3. ' மேலே உள்ளவரின் கடைசி எழுத்தை நீட்டி 'வி'ட்டால் இவர் கதை மன்னர்'///
  JEEVEE SIR?

  பதிலளிநீக்கு
 4. a )  ' என்ன ஜி ! - இவர் கையிலே துப்பாக்கி வைத்திருப்பாரோ ? ' கில்லெர்ஜீ 
  b ) ' மேலே உள்ளவரின் கடைசி எழுத்தை நீட்டி 'வி'ட்டால் இவர் கதை மன்னர்'    ஜீ வி 

  c ) 27 ஆம் நட்சத்திரம் + ஐந்தாவது ராசி  ரேவதி நரசிம்மன் 

  d ) சாவியைக் கொடுங்க சாம்பு சார்!  கீதா சாம்பசிவம் 

  e ) எப்பொழுதுமே தனிமையிலே இனிமை காண்பவரோ? ஏகாந்தன் 
  f:  நெல்லைத்தமிழன் 
  g:  ஆதி வெங்கட் 
  h: gmb
  i:    காசு சோபனா 
  j: கமலத்துவம் 

  பதிலளிநீக்கு
 5. அட! இப்படிப் பார்ககணுமா? வாழ்த்துகள் Jayakumar Chandrasekharan.

  பதிலளிநீக்கு
 6. g தான் குழப்பமாக இருக்கிறது. பானுமதி வெங்கடேஸ்வரன் மற்றும் அதி வெங்கட்  இரண்டில் எது சரி என்று புரியவில்லை.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. ஒரு மனிதன் தன் மனைவியிடம்தான் உண்மை ஸ்வரூபத்தைக் காண்பிக்கிறான் என்பது என் அபிப்ராயம். அவனைப் பற்றி ஓரளவு அறிந்தவள் அவளே. அதனால் அவன் சாதனை நிகழ்த்தும்போது மத்தவங்களுக்குள்ள பிரமிப்பு அவளிடம் இருக்காது. பசங்கள்ட உண்மை முகம் காண்பிக்க இயலாது. வெளி ஆட்கள்ட சொல்லவே வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லாமல் விட்டேன். அவன் தான் உண்மை ஸ்வரூபத்தை மறைத்தாலும் மனைவி சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்.

   நீக்கு
  2. கணவனுக்கு மனைவியைப் பற்றியும் மனைவிக்குக் கணவனைப் பற்றியும் உண்மை முகம் தெரிந்துவிடும் என்பது உண்மை தான். ஆனால் மனைவியிடமே தன்னை மறைத்து நயவஞ்சகமாகப் பழகும் கணவன்மாரை என்ன சொல்ல முடியும்? இது பெண்களுக்கும் பொருந்தும்! எல்லாப் பெண்களும் கணவனிடம் எல்லாவற்றையும் பகிர்கிறார்களா?

   நீக்கு
  3. கீசா மேடம்... நீங்க சொல்றதுல பாயிண்ட் இருக்கு. நாம எல்லாரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். (சாகத்தான் போகிறோம் என்று எழுத நினைத்தேன்). உலகத்தில் ஒருவரிடம், அதிலும் நமக்கு உலகத்திலேயே மிகவும் நெருக்கமான மனைவியிடம்/கணவனிடம் உண்மையா இருக்க முடியலைனா, தன் குறைகள் தவறுகள் எல்லாவற்றையும் சொல்ல முடியலைனா, செய்த அபத்தங்களுக்கும், அவளுக்கு/அவனுக்குச் செய்த அவமரியாதைகளுக்கும் மன்னிப்புக் கேட்க முடியலைனா அப்புறம் வாழ்க்கை வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

   நீக்கு
  4. இருந்திருக்காங்க. மனைவி இறந்த பின்னரும் அவளைத் திட்டிக் கொண்டே கடைசி வரைக்கும் இருந்த கணவன்மார் உண்டு. பெரிய குடும்பத்தில் சின்ன வயசில் இருந்து பழகி, வாழ்க்கைப் பட்டதும் பெரிய குடும்பத்தில்! எல்லோருடைய பலம், பலவீனங்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டு வந்திருக்கேன். திகைக்க வைக்கும் நிகழ்ச்சிகள் உண்டு! :( எல்லாவற்றையும் தள்ளிக் கொண்டு போனதால் தான் வாழவே முடிந்திருக்கிறது.

   நீக்கு
 9. இத்துப்போன நடிகைகள், சம்பந்தமில்லாத விளம்பரங்களில் தோன்றி நமக்கு அட்வைஸ் பண்ணும்போது வரும் எரிச்சல் சொல்லி மாளாது. அம்ருதால படிங்க, தங்கத்தை இவன்ட கொண்டுபோய் வித்துடுங்க, அப்புறம் இட்லில அரை லிட்டர் நல்லெண்ணெயை ஊற்றும் விளம்பரங்களும்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா !! நேற்றைய கனவுக்கன்னி - நாளைய இ போ ந !!

   நீக்கு
  2. தலைவரே.. அது நம்ம ப்ராப்ளம் இல்லை. அவங்க நாம் ரசிக்கும் அந்த வயதைக் கடந்துவிடுகிறார்கள். அது அவங்க ப்ராப்ளம். என்ன நான் சொல்றது?

   நீக்கு
 10. மனதில் தாக்கம் ஏற்படுத்தும் நல்ல கதைகள்தாம் நினைவில் இருக்கும். எந்தே கதைகள் சொல்லணும் என்ற கண்டிஷன் போட்டால் பிரபலமான ஸ்டான்டர்ட் கதைகள் தவிர வேறு எதுவுமே பலருக்கு நினைவுக்கு வராது. பொன்னியின் செல்வன், அலைஓசை, து.சா, மோ மு, , சாண்டில்யன் ஒரு சில நாவல்கள், வா.தி, மி வி போன்றவைகளில் மூன்றாவது சொல்லிடுவாங்க. மற்றபடி கதாசிரியர்கள் என்றால் சு, பா கு, க, சா, ராகிர, சா போன்றவர்கள்தாம். துண்டு துக்குடு எழுத்தாளர்கள் பலரை யாரும் நினைவுகூர்வதில்லை. அதனால் நல்ல படைப்புகளும் நினைவுகூரப்படுவதில்லை எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாத்தையும் பதம் பிரித்துப் பார்த்து புரிந்துகொண்டு பிறகு வருகிறேன்.

   நீக்கு
  2. என்னைப் பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். சிலரின் கட்டுரைகள் உள்பட. ரா.கணபதி, பரணீதரன் ஆகியோரின் ஆன்மிக எழுத்தும் அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் இங்கே தாக்கத்தைப் பற்றிக் கேட்டிருப்பதால் நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்" நாவல்தான்! 21,22 வயசில் முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ அண்ணாவிடமிருந்த புத்தகங்களிலிருந்து அங்கே படிக்க எடுத்துச் சென்றது. நாகர்கோயில் பிள்ளைமார்களின் பழக்கங்கள்,குடும்பம், குழந்தைப் பிறப்பு, கல்யாணம்னு எல்லாம் வரும்.

   சாப்பிடப் போகணும். சாப்பிட்டு வரேன். :)

   நீக்கு
  3. அந்தக் கதையின் கதாநாயகன் தன் அக்காவின் வாழ்க்கை நன்கு அமையப் போராடுவதே கதையின் முக்கியக் கரு. ஆனால் அதைக் கதையின் வில்லனும், அவன் அக்காவின் முதல் கணவனும் ஆன சிவந்த பெருமாள் எப்படிக் கெடுக்கிறான் என்பது தான் கதையின் முடிவு. மனசே அதிர்ந்து விட்டது. அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு அதன் தாக்கம் என்னிடமிருந்து மீளவில்லை. பல புத்தகங்களைத் திரும்பப் படித்திருக்கும் எனக்கு இந்தப் புத்தகத்தைத் திரும்பப் படிக்கும் மனம் இல்லை! அதுவும் அப்போதைய நாட்களில் நான் அங்கே தனியாக ஒன்றரை வயதுக் குழந்தையை வைத்துக் கொண்டு நாள் பூரா பெரிய பங்களாவில் இருப்பேன். சுற்றிலும் மர்மர, மர்மர என்னும் மரங்களின் சப்தங்களும், எங்கிருந்தோ கேட்கும் ராணுவ வீரர்களின் ஆணைக்குரல்களும் எப்போதாவது கத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆந்தையும், புறாக்களும் தான் துணை! அத்தகைய சூழ்நிலையில் இந்தக் கதையைப் படித்துவிட்டு வாய்விட்டு அழுதிருக்கேன்.

   நீக்கு
  4. சுஜாதாவின் 24 ரூபாய், தீவு! குமுதத்தில் தொடராக வந்தப்போ மனசு தாங்காமல் படிப்பதையே நிறுத்திட்டேன். பின்பு புத்தகமாகப் படித்தேன். ஆனாலும் மனசு வேதனைப் பட்டது. ஏன் படிச்சோம்னு இருக்கும். சுஜாதாவின் ஒரு சில சிறுகதைகளும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

   நீக்கு
 11. என் கேள்விகளுக்கு சிறப்பான பதில்கள் தந்ததற்கு நன்றி.
  //காந்தி போன்றவர்களின் பெருமையைப் புரிந்து கொள்ளாத சமூகத்தை நாம் உருவாக்கி இருப்பதுதான் காரணம்.// இந்த பதிலை படித்தபொழுது மனம் வலித்தது.
  கிச்சன் ரிலிஜனு்க்கு கொஞ்சம் காரசாரமான பதிலை எதிர்பார்த்தேன்.கீதா அக்கா வரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ! அவங்க வந்து காரசாரமா எங்களை ஏதாவது கேட்பாங்களா !!

   நீக்கு
  2. நேரு, காந்தி ஆகியோரின் உண்மை ஸ்வரூபத்தைக் காண நேர்ந்தது பள்ளி நாட்களிலேயே! அதுவும் நவகாளி யாத்திரை பற்றித் தெரிந்து கொண்டபோது வயிறு எரிந்தது. Freedom at Midnigt வெளிவந்த சில நாட்களிலேயே படிக்கக் கிடைத்தது. அது படிச்சப்புறமா ரத்தமே கொதிக்க ஆரம்பிச்சது! இப்போதைக்கு இது போதும்.

   நீக்கு
  3. பானுமதியின் முதல் கேள்விக்கு நானாக இருந்தால் கொடுத்திருக்கக் கூடிய பதில், "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார், இந்த உலகிலே!"

   நீக்கு
  4. எம் எஸ் சுப்புலக்ஷ்மி பற்றிய கேள்வி அல்லவா பா வெ முதலில் கேட்டிருக்கிறார்!

   நீக்கு
  5. அதுதானே? நானும் குழம்பி விட்டேன். 

   நீக்கு
  6. மன்னிக்கவும், அதைக் கவனிக்கவில்லை. காந்தி, நேரு பற்றிய கேள்விக்கு என மாற்றிக் கொண்டு படிக்கவும். :( சாப்பாட்டு நேரமா, மனசு அதிலேயே இருந்தது! சாப்பாட்டு ராமி! :)

   நீக்கு
 12. a. கில்லர்ஜி
  b. ...
  c. ரேவதி நரசிம்மன்
  d. கீதா சாம்பசிவம்
  e. ...
  f. நெல்லைத் தமிழன்
  g. பானுமதி வெங்கடேஸ்வரன்
  h. ஜி.எம்.பி.
  i. காசு சோபனா
  j. கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 13. மீண்டும் புதிர் புதன் போல படக்கதைகள்...
  அழகு.. அருமை..

  பதிலளிநீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. கேள்விகளும் , பதிகளும் அருமை.
  சென்ற வார படம் பார்த்து கதை சொல் விடை வியப்பை அளித்தது.
  இந்த வாரக் கேள்விக்கு விடை சொல்லி விட்டார்கள்.

  விளம்பரங்கள் திரும்ப திரும்ப காட்டப்படுவதே எரிச்சல் , அதிலும் உணவு சாப்பிடும் போது தொலைக்காட்சியை போட்டு விடக் கூடாது எல்லா சேனலிலும் வரும் டாய்லெட் விளம்பரம் எரிச்சல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைவிட 'அப்ப்ப்ப்ப்பாபாபாஸ்' என்று வழியும் விளம்பரம்தான் பெரிய தொல்லை, இல்லையா கோமதி அரசு மேடம்.

   நீக்கு
 16. எனக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விளம்பரம் எனில், விசேஷம் உண்டா எனக் கேட்கும் பெண்ணிடம், "பிசினஸ் நல்லாப் போகுது, சொந்த வீடு வாங்கிட்டோம்! இதைவிட என்ன" என்னும் பெண். கேட்கும் பெண் குழந்தைப் பேறு பற்றிக் கேட்க பதில் சொல்லும் பெண்ணோ, குழந்தை அநாவசியம் என்பது போல் பதில்!

  அடுத்தது சேர்ந்து வாழ்வதைப் பற்றி வரும் விளம்பரம். அம்மாவிடம் பிள்ளை, ஒரு பெண்ணைக் காட்டித் தாங்கள் சேர்ந்து வாழ்வதாகத் தெரிவிக்க அந்தப் பெண் போட்டுக் கொடுக்கும் தேநீரைக் குடிக்கும் தாய், "பரவாயில்லை" என்று சமாதானம் சொல்வதாக வரும் தேநீர் விளம்பரம். அந்த ப்ரான்ட் தேயிலையே நாங்க வாங்குவதில்லை. இந்த இரு விளம்பரங்களுமே குடும்ப வாழ்க்கை, ஒழுக்கம், ஒத்து வாழ்வது, குழந்தை பெற்றுக்கொள்வது ஆகியவற்றை அவசியம் இல்லை என்று வற்புறுத்துவது போல் இருப்பது கலாசாரக் கேடு. ஏற்கெனவே 30 வயதுக்குக் கல்யாணம் ஆகும் பெண்கள் குழந்தைப் பேற்றை 35 வயதுக்குத் தள்ளிப் போடுகின்றனர். நாள் கழிச்சுப் பிறக்கும் குழந்தையோடு ஓடி, ஆடும்போதும் மற்ற சமயங்களிலும் அவர்களுக்கு நடுத்தர வயதுக்குரிய மனோநிலை, உடல்நிலை இரண்டும் வந்துவிடுவதால் பெரும்பாலானவர்கள் குழந்தையைச் சரியாய் வளர்ப்பதே இல்லை.

  பதிலளிநீக்கு
 17. குடும்பக் கட்டுப்பாடு ஆரம்பித்த புதுசில் 3 குழந்தைகள்னு சொன்னது பின்னர் இரண்டு, "நாம் இருவர், நமக்கு இருவர்" என்றாகி இப்போது "நமக்கு ஒன்று போதும்!" என்னும் நிலைக்கு வந்து இப்போது "ஒன்றும் எதுக்கு?" என்று வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடக்கே இன்னமும் குறைந்த பட்சமாக 3 குழந்தைகள் இருந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கானும் அங்கே இங்கே இரண்டு/ ஆனால் ஒரு குழந்தை என்பதே அநேகமாகக் கிடையாது!

   நீக்கு
 18. லேசா பாத்துட்டு, ஐபிஎல் அது இதுன்னு ஓடிடலாம்னு பாத்தா எம்பேரும் அடிபடற மாதிரி..!

  பதிலளிநீக்கு
 19. இத்துப்போன நடிகைகள்..//
  உளுத்துப்போன உலகநாயகன்லாம் ’பிக்-கு.. பாஸு..’ -ன்னு உலா வரும் தமிழ்நாட்டில, இத்துப்போன நடிகைகளைத்தான் விளம்பரத்துக்கு பயன்படுத்துவான்க கார்ப்பரேட்டுகள். என்ன செய்யறது?


  பதிலளிநீக்கு
 20. சில வருடங்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்து கொண்டிருந்தது ஒரு பெற்றோர் தன் மகனிடம் அவன் ஒவ்வொரு பாடத்திலும்  எத்தனை மதிப்பெண்கள் என்று கேட்டு விட்டு அவன் சிநேகிதன் எவ்வளவு என்று கேட்பார்கள். ஒரு பரீட்சைக்கு அவன் சிநேகிதன் வரவில்லை காரணம் அந்த பையனுக்கு சிக்கன்  பாக்ஸ்  என்று மகன் கூறியதும் தாயும், தந்தையும் குதூகலிப்பார்கள், அதைப் பார்த்தால் அருவருப்பும்,எரிச்சலும் வரும். சிக்கன் பாக்சிற்கான தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்  விளம்பரமாம். நல்ல வேளை நிறுத்தி விட்டார்கள்.  

  பதிலளிநீக்கு
 21. இப்போது வரும் விளம்பரங்களில் எரிச்சலூட்டுவது தங்கத்தை விற்கச்சொல்லும் விளம்பரங்கள், ஒவ்வொரு 20 நிமிடத்திலும் பிரசவத்தில் ஒரு பெண் இறக்கிறாள் என்னும் UNICEF விளம்பரம் மனசை மிகவும் கஷ்டப்படுத்தும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கத்தை விற்கச் சொல்லுவதோடு அல்லாமல் தங்கத்தை அடகு வைத்தும் பணம் வாங்கச் சொல்லுவார்கள். எல்லாமே கேரளக் கம்பெனிகள்! :(

   நீக்கு
  2. அத்திகாவுக்கு வாங்க - இல்லை விற்க.

   நீக்கு
 22. தங்கத்தை விற்கக் கூப்பிடும் எந்த விளம்பரமும் பிடிக்கவில்லை..

  பதிலளிநீக்கு
 23. வாசகர்கள் தங்களோடு ரிலேட் பண்ணிகொள்ளக் கூடிய கதைகள், நான் சொல்ல நினைத்ததை இவர் சொல்லி விட்டாரே என்று நினைக்க வைக்கும் கதைகள், நாம் பெரிதாக நினைக்கும் விஷயங்கள் ஒன்றுமே இல்லை என்று அனாயசமாக கடந்து செல்லும் கதைகள், நாம் இதுவரை சிந்திக்காத ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் கதைகள்  இப்படிப்பட்ட கதைகளை மறக்க முடியாது. சுருக்கமாக கௌதம் வாசுதேவ் மேனன் பாஷையில் சொல்வதானால் அந்தக் கதை நம்மைத்  தாக்க வேண்டும், தலை கீழாக புரட்டிப் போட வேண்டும். அப்படிப்பட்ட கதைகள் மறக்காது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாக்கி, தலை கீழா புரட்டிப் போட்டா - எந்திரிச்சி வேகமா ஓடிடுவேன், உயிர் முக்கியம்!

   நீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்விகள், பதில்கள் எப்போதும் போல் அருமை. சகோதரி பானுமதி அவர்களின் முதல் கேள்விக்கு பதில் நன்றாக உள்ளது.

  சென்ற வார படப் புதிருக்கு விடை எங்கோ படித்துள்ளேன். நீங்கள் சொன்னவுடன் தலைக்குள் மெல்லியதாக விளக்கெரிந்தது..

  இந்த வார புதிர் கேள்விகளுக்கும், புதிர் படங்களுக்கும் அனைவரிடமிருந்தும் சிறப்பான முறையில் பதில் வந்து விட்டது. அனைவருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளும். படப்புதிரில் என்னையும் குறிப்பிட்டுள்ளமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!