ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

அரண்மனைக் காட்சிகள், மைசூர்

 

மர நிழலின் ஓரத்தில் .. உள் புறம் நோக்கி படைஎடுப்பு -- வானும் நிலமும் -- வானும் கோனும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போல கும்பல் 
சிம்மாசனம் அணிவகுப்பு வெளிச்சத் தூண்கள் குதிரைப் படை -- தரையலங்காரம் -- தலைப்பாகை அலங்காரம் 
எங்கே செல்கிறார்கள் ? புகைப்பட வரிசை - நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது உண்டா ? ஊ ஹூ ம் !


====

31 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஜி.
  அனைவருக்கும் எல்லா நாட்களும் ஆரோக்கிய நாட்களாக இருக்கப்
  பிரார்த்தனைகள்.

  படங்கள் இருக்கும் மக்கள் கூட்டம் பார்த்தாலே இது
  8.9, மாதங்களுக்கு எடுத்ததாகத் தோன்றுகிறது:)
  முகக் கவசம் காணோமே.

  அழகான படங்கள். அருமையான ரசிப்புத்தன்மையுடன் கொடுக்கப்
  பட்ட தலைப்புகள். நன்றி மா.

  பதிலளிநீக்கு
 2. நிறைய படங்கள் ஒரேபோல் இருக்கிறதே ஜி. அருமையான காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரண்மனையின் பல பகுதிகள் ஒரேமாதிரி இருக்கிறதோ என்னவோ... நன்றி ஜி.

   நீக்கு
 3. இன்றைய பதிவின் படங்கள் அழகு..
  சென்னையைக் கடந்து சுற்றுலா எல்லாம் போனதேயில்லை..

  பதிலளிநீக்கு
 4. என்ன இன்று யாரையுமே காணோம்? பெரும்பான்மையோர் மைசூர்  அரண்மனையை பார்த்திருப்பார்களோ? எம்.ஜி.ஆர்., ரஜினி இருவருக்குமே மைசூர் ராசியான ஷூட்டிங்  லொகேஷனாம். ரஜினியின் பல படங்கள் தர்பார் உட்பட மைசூர் அரண்மனையிலேயே படமாக்கப் பட்டிருக்கும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பார்த்ததில்லை. பல பாடல் காட்சிகள் இங்கு எடுக்கப் பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்!

   நீக்கு
  2. நாங்கள் சென்று அரண்மனை முழுவதும்
   ரசித்த நினைவு.
   தர்பார் மண்டபம் எல்லாம் பல சினிமாக்களில் கண்ட
   காட்சி. நன்றி மா.

   நீக்கு
 5. படங்கள் அழகு
  பல ஆண்டுகளுக்குமுன் சென்று பார்த்த நினைவலைகள் எழுகின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பர் ஜெயக்குமார்.. பார்த்திருக்கிறீர்களா?

   நீக்கு
 6. ஒருத்தரையும் காணோமே..
  அரண்மனை பற்றிய பதிவு ஆனதால் காற்றோட்டமாக இருக்கிறதோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை ஏதோ புதிய டிஷ் தயார் பண்றார் போல... கீதா ரெங்கனுக்குக் கணினிப் பிரச்னை. கீதா அக்கா ஏதோ வேலையில் பிஸி போல...

   நீக்கு
  2. காலம்பர வந்தேன். ஆனால் இங்கே வரலை! ஹிஹிஹி, குழப்பறேனா? கணினியை எடுத்து இணையம் வந்தேன். அரை மணி நேரத்தில் மூடிட்டேன். மாமா உம்மாச்சியை எல்லாம் இன்னிக்குத் தேய்ச்சு அபிஷேஹம் பண்ணப் போறேன்னு சொன்னார். அப்போக் கூடவே ஆள் வேணுமே! அதான் போயிட்டேன். வீட்டை மொத்தமா ஒரு நாள் சுத்தம் செய்யாமல் தினம் ஒரு பகுதியாக சுத்தம் செய்வதால் தினம் தினம் வேலை இருந்துண்டே இருக்கு! :))))) எல்லாம் முடிஞ்சு பூத்தொடுக்க உட்கார்ந்தா கணினிக்கு வர முடியாது. கண் பிரச்னை கொடுக்கும். இன்னிக்குப் பூவேலை இல்லை. அதான் வந்தேன். உம்மாச்சிங்க எல்லாம் குளிச்சு முடிச்சுப் புத்தாடை அணிந்து யதாஸ்தானம் போறச்சே பனிரண்டு மணி ஆயிடுச்சு. அதுக்கப்புறமாப் பூ அலங்காரம் முடிஞ்சு சாப்பாடு சாப்பிட்டாங்க! அதுக்கப்புறமா நாங்க சாப்பிட்டோம். :))))

   நீக்கு
  3. அணைவருக்கும் மதிய வணக்கம்

   இன்று காலையில் எப்போதும் போல் வர இயலவில்லை. பெரிய அரண்மனையாததால் என்னை யாரும் தேடவில்லை போலும்.. மைசூர் பேலன்ஸ் மாதிரி ஆகி விடுமென்ற கற்பனையில் நேற்றிலிருந்து இங்கும் வீடு சுத்தம் செய்யும் வேலைகள். அதனால் வந்த உடல் அலுப்புக்கள்.

   படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. வாசகங்கள் வெகு பொருத்தம். நீல வான படங்கள் நன்றாக உள்ளன.
   அரண்மனையின் பளபளப்பு கண்களை பறிக்கிறது.

   நாங்கள் எப்போதோ இங்கு வந்த புதிதில் இரு தடவைகள் சென்று வந்தோம். இந்த வருட மார்ச்சில் (மைசூரில்) எல்லா இடங்களுக்கும் சென்று வர டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்திருந்தோம் . ஆனால்,இந்த வைரஸ் வந்து பிரயாண கனவுகளை பறித்துக் கொண்டு விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. நன்றி கீதா அக்கா.. ஏதோ முக்கிய வேலை என்று யூகித்தேன்.

   நீக்கு
  5. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்தததற்கு நன்றி கமலா அக்கா...

   நீக்கு
 7. நான் இப்போதான் வருகிறேன். நாலைந்து நாட்களாக ஏக பிஸி. நாளை முதல் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 8. கடைசியா அரண்மனையை 2010 ஆம் ஆண்டில் பார்த்தோம். ஒரு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் வீட்டில் தங்கினோம். சுற்றிப் பார்க்கக் கார் எல்லாம் கொடுப்பேன்னு சொல்லிட்டுக் கடைசியில் ட்ராவல்ஸ் காரரைக்கைகாட்டி நீங்க பேசிக்கோங்கனு சொல்லிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அங்கே நிலமோ அல்லது வீடாகவோ பார்க்கலாம்னு போனோம். ஆனால் எனக்கு என்னமோ பிடிக்கலை. சர்சிவி.ராமன் நகரிலும் "பெண்"களூரில் பார்த்தோம். ஆனால் என்னமோ தெரியலை கர்நாடகம் மனசுக்குப் பிடிக்கலை. அதுக்கு குஜராத்தோ, ராஜஸ்தானோ போயிடலாம்னு தோணித்து! சரினு வந்துட்டோம். 2011ஆம் ஆண்டில் சில மாதங்களே சென்னையில் இருந்தோம். பின்னர் அம்பேரிக்கா போயிட்டு அங்கிருந்து ஶ்ரீரங்கம் போய் உட்காரும் நோக்கத்துடன் கிளம்பி வந்து இங்கே வந்து ஒன்பதாண்டுகள். அங்கே சுத்தி, இங்கே சுத்தி ரங்கனிடம் வந்து சேர்ந்தாச்சு. இனி அவன் விட்ட வழி!

  பதிலளிநீக்கு
 9. அடிக்கடி பார்த்ததாலோ என்னமோ புதுசா ஒண்ணும் தெரியலை. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.சிங்காதனம் இருக்கும் அறையின் படங்கள் மட்டும் திரும்ப வந்திருக்கின்றன. படங்கள் எடுத்து சுமார் ஒரு வருஷம் ஆகி இருக்குமோ? இங்கே எத்தனை நாள் டேரா? யாருமே முகக் கவசம் அணியவில்லை என்பதிலிருந்து இது நல்லபடியா இருந்தப்போ எடுத்த படங்கள்னு புரியுது!இப்போன்னா இவ்வளவு கூட்டமும் வந்திருக்காது. இவங்களும் போயிருக்க மாட்டாங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கெல்லாம் பதிவாசிரியர்தான் பதில் சொல்ல வேண்டும்!

   நீக்கு
 10. அரண்மனை படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  படம் எடுக்க அனுமதி உண்டா? நாங்கள் போன போது அனுமதி இல்லை.

  பதிலளிநீக்கு
 11. வானும் நிலமும் , வானும் கோனும் இரண்டும் மிக நன்றாக இருக்கிறது.
  வான் மேகம் அழகு.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் பெரும்பாலும் நன்றாக வந்திருந்தாலும், சிலவற்றில் ஷேக் ஷேக்!

  இப்போதெல்லாம் உடனுக்குடன் பதிவுகள் பார்க்க முடிவதில்லை. சில சமயம் மூன்று நான்கு நாட்கள் கூட ஆகிவிடுகின்றன. வேலை சரியாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயங்களில் வேலை நெக்கு வாங்கி விடுகிறதுதான் வெங்கட். முடிஞ்சப்போ வாங்க.. நான் பாருங்க இன்னும் கம்மியாதான் வர்றேன்.

   நீக்கு
 13. மைசூர் படங்கள் கண்டதில் மகிழ்ச்சி.சென்றிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!