வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

வெள்ளி வீடியோ : யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை

பி மாதவன் இயக்கத்தில், கர்ணன் ஒளிப்பதிவில் 1967 இல் வந்த திரைப் படம் பெண்ணே நீ வாழ்க.

வழக்கம்போல பாடல் தெரிந்த அளவு படம் பெயர் நினைவில்லை.  ஆனால் படத்தின் தலைப்பு 'புதியபறவை' சிவாஜி கணேசனின் கிளைமேக்ஸ் வசனத்தை நினைவு படுத்துகிறது.  "பெண்மையே நீ வாழ்க...!"

ஜெய்சங்கர், கே ஆர் விஜயா, நாகேஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம்.

வாலியின் பாடலுக்கு திரைஇசைத் திலகம் கே வி மகாதேவன் இசை,  டி எம் எஸ், பி சுசீலா குரலில் பாடல் ஒலிக்கிறது.

பாடலின் வரிகளிலிருந்து கதையை ஓரளவு யூகிக்க முடிகிறது.  பாடல் காட்சி 'வாழ்க்கைப்படகு' பாடலான "சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ" பாடல் காட்சியையும் நினைவு படுத்துகிறது.

பாடலின் காட்சியில் அந்தக் குழந்தை வரிகளுக்கேற்ப சிரித்துக் கொண்டிருப்பபதும் அழகு. சுசீலாம்மாவின் குரல் சம்திங் ஸ்பெஷல்!

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ... 

ங்கையரைப் பார்த்ததுண்டு மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு மாலையாய்த் தொடுத்ததில்லை
மணக் கோலம் பார்த்ததுண்டு மாப்பிளையாய் ஆனதில்லை
மணக் கோலம் பார்த்ததுண்டு மாப்பிளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ

தெய்வம் ஒரு சாட்சி என்றால் நேரிலே வருவதில்லை
பிள்ளை மறு சாட்சி என்றால் பேசவே தெரியவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ
பொல்லாத புன்சிரிப்பு

உன் வீட்டுத் தோட்டத்திலே ஒரு மரம் தனி மரமாம்
தனி மரம் தவிக்கக் கண்டு தளிர்க்கொடி தழுவியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ 
பொல்லாத புன்சிரிப்பு


====== 

என் தேர்வு - KGG

நடிகை மீனாவின் பெண் நைனிகா பாடும் பாடலைக் கேளுங்கள் : 


= = = = 

33 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் இறைவன் அருள் நம்மைக்காக்க
    பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க வல்லிம்மா...   வணக்கம்.

      நீக்கு
  2. இன்று வந்திருக்கும் பாட்டு மிக இனிமை.

    டி.எம்.எஸ் சுசீலாமா குரல்கள்

    உணர்ச்சு இழையோட பாடுவதுதான்
    மிகச் சிறப்பு.
    ஜெய்சங்கர் அந்தக் குழந்தையை
    எவ்வளவு அழகாகக் கையாளுகிறார். மென்மை
    தெரிய, கன்னத்தோடு பாடுவது.
    மிக அருமை. கடைசியில் சேர்ந்து கொள்ளும் சுசீலா
    அவர்களின் குரல் சொல்லவே வேண்டாம்.
    இவர்கள் எல்லாம் இல்லாமல் எந்தப்
    படம் நிறைவு காணும்.?
    மிக நன்றி மா.
    மீனாவின் பெண்ணும் நடிக்கிறாரா. மழலையே
    போகவில்லையே.
    அம்மா சொன்னதை ஒப்புவிக்கிறார் போல இருக்கிறது.
    நன்றாகப் படித்து முன்னுக்கு வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே மீனாவின் பெண் நடிகர் விஜயுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.  இன்றைய பாடலில் நீங்கள் ரசித்திருக்கும் இடங்களை நானும் ரசித்தேன்ம்மா.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நன்மைகளே பெருகவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  வணக்கம்.    இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. நைனிகா பாடும் காட்சியை வேறே எங்கேயோ பார்த்தேன். எங்கேனு நினைவில் இல்லை. ஜெய்சங்கர் பாடும் பாடலும் அடிக்கடி கேட்டிருக்கேன். படம் பெயர் இன்று தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய ட்ரெண்டிங்..  வாட்ஸாப்பில் கூட வருகிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  5. அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல்.
    இரண்டாவது காணொளி கண்டேன் அனாச்சாரத்தை ஊக்குவிக்கும் கூட்டம் இதற்கு மக்கள் ஆதரவு கூடட்டும்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  7. இன்றைய பதிவின் பாடல் ரசனைக்குரியது..
    சிறு வயதில் இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன்.. ஆனாலும் இந்தப் பாடலைத் தவிர வேறொன்றும் நினைவில் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பதின்ம வயதில் பார்த்து ரசித்த படம். கதையின் சஸ்பென்ஸ் அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்டது. எனக்கு முழு கதையும் ஞாபகம் உள்ளது. மற்றொரு முக்கியமான அம்சம், இந்தப் படத்தை நான், எனது அண்ணன் விசுவேஸ்வரன் மற்றும் என்னுடைய சித்தப்பா - வேறொரு ஊரில் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர் - அவரோடு சேர்ந்து நாங்கள் இருவரும் பார்த்த ஒரே படம் இது.

      நீக்கு
  8. நல்ல பாடல்தான்.

    மீனாவின் மகள் - பாவம்.... அது ஒரு தனி வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  9. //உன் வீட்டுத் தோட்டத்திலே ஒரு மரம் தனி மரமாம்
    தனி மரம் தவிக்கக் கண்டு தளிர்க்கொடி தழுவியதாம்
    ஒன்றுக்கொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம்
    ஒன்றுக்கொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம்
    பழகிய பழக்கத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ
    பொல்லாத புன்சிரிப்பு //

    மொத்த திரைப்படக் கதையையும் உள்வாங்கிக் கொண்டு நாலைந்து பாடல் வரிகளில் அதை அடைத்துக் காட்டும் திறமை கண்ணதாசனுக்குத் தான் உண்டு என்று இது வரை நினைத்திருந்தேன். அந்த சித்து வேலை வாலிக்கும் வசப்பட்டிருக்கும் பாடல் இதிஉ.

    பதிலளிநீக்கு
  10. முன்பு கேட்டிருக்கலாம், நினைவில் இல்லை. இனிமையான பாடல். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்குத் தெரிந்த ஞாபக சக்திப் புலி - உங்களுக்கே நினைவில் இல்லை என்பது ஆச்சரியம்!

      நீக்கு
  11. முன்பு கேட்டிருக்கலாம், நினைவில் இல்லை. இனிமையான பாடல். மீனாவின் மகள்... விஜய், அஜித், விஜய் சேதுபதி, ஆர்யா, சூர்யா, ஜீவா இவர்களோடு நடிக்க கதாநாயகி ரெடி என்று சொல்லுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினியை விடலாமா? இது தகுமா? சிவாஜி இருந்திருந்தால் அவரையும் சேர்த்திருப்பேன். போனாப் போகுது பாவம் (நான் நைனிகாவைச் சொல்லலை)

      நீக்கு
  12. பாட்டு முன்பு வானொலியில் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
    படம் கூட பார்த்து இருப்பேன் மறந்து விட்டது.
    குழந்தை அழகாய் சிரிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அழகான அந்தக் குழந்தையை மிகவும் இயல்பாக படம் எடுத்திருந்தார் டைரக்டர் P மாதவன்.

      நீக்கு
  13. பொல்லாத புன்சிரிப்பு பாடல் கேட்டதில்லை. இப்போது தான் கேட்கிறேன்.

    தொடரட்டும் பாடல் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!