ஸ்ரீரங்கப்பட்டணம்.
இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த போசள மற்றும் விஜய நகர அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளது.
ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில்
இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.
= = = =
பஞ்சரங்க தலங்கள்
கோவில் | அமைவிடம் |
ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில் | ஸ்ரீரங்கப்பட்டணம் |
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் | திருவரங்கம் |
சாரங்கபாணி திருக்கோவில் | கும்பகோணம் |
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் | திருப்பேர்நகர் என்ற கோவிலடி |
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் | மயிலாடுதுறை |
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபங்குனி மாதம் பிறக்கும் வேளையில் ரங்க தரிசனம்.
அனைவரையும் இறைவன் அருள் காக்கட்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குகோவில் கோபுரப்படங்கள் மிக இனிமை'.
பதிலளிநீக்குகோவில் தலபுராணமும் இருக்குமே.
பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
ஆம், நானும் இப்பொழுதுதான் பஞ்ச ரங்கம் பற்றி தெரிந்துகொண்டேன்.
நீக்குமூன்று அரங்கப் பெருமான்கள் மட்டுமே தெரியும்.
பதிலளிநீக்குமற்ற பெருமாள்கள், பள்ளி கொண்ட பெருமாள்கள் நிறைய உண்டு.
அருமையான படங்கள்.
மூன்று அரங்கப் பெருமாள் கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய உங்களை வீட்டிலிருந்து அழைத்து சென்று திருமபி வீட்டில் விட ஒரு ஏற்பாடு இருப்பதாக ஓட்டுநர் பாபு சொன்னார்.
நீக்குகுதிரை பொம்மைகள் உருவமைக்கப் பட்ட விதம்
பதிலளிநீக்குபின் கால்களிலும் வாலும் நிற்குமாறு இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி இயல்பான நடைமுறைகளுக்குத் திரும்பப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசீரங்கப்பட்டினம் ஒரே முறை எண்பதுகளில் போனது தான். அதன் பின்னர் பலமுறை அதைத் தாண்டிச் சென்றும் கோயிலுக்குப் போகவில்லை. :( சிவசமுத்திரமும் அரைகுறை நினைவு. இங்கே கொடுத்துள்ளப் பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் கோயிலடி போகணும்னு நினைச்சாலும் பக்கத்திலேயே இருந்தாலும் போக முடியலை. அதே போல் உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் பார்க்கலை! எப்போ அழைப்பு வரும்னு காத்திருக்கோம்.
பதிலளிநீக்குவிரைவில் தரிசனம் கிடைக்கட்டும்.
நீக்குஅப்பக்குடத்தான் தரிசனம் விரைவில் உங்களுக்குக் கிட்டட்டும். நிறைய படிகள் ஏறணும். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாலையில் அப்பம் பிரசாதம் கிடைக்கும். உறையூர் கோவில் பக்கத்துலதானே இருக்கு. டக்குனு போய்ட்டு வரலாமே.
நீக்குஅப்பக்குடத்தானை தரிசிக்கவென ஒரு முறை போயிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டாசாரியார் வர தாமதம் ஆனதால் பார்க்க முடியலை. அதன் வழியாகவே செல்கிறோம். ஆனால் இன்னமும் தரிசனம் கிட்டவில்லை. அவன் அருள்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான கோவில் தரிசனம் கண்டு கொண்டேன். இந்த கோவிலுக்கு இங்கு வந்தவுடன் தீடிரென மைசூர் பயணம் செல்லும் சமயம் அவசரமாக சென்று தரிசித்துதான். அதிகம் நினைவில் நிறுத்த இயலவில்லை. அதனால் சென்ற மார்ச் மாதம் திட்டமிட்டு மைசூர் பயணங்கள் வகுத்ததில், இந்தக் கோவிலை ஆறஅமர தரிசித்து ரெங்கனை வழிபட ஆசை கொண்டோம். கொரோனா வந்து தடை செய்து விட்டது. இனி எப்போது ரெங்கன் அழைக்கப் போகிறாளோ?
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. மறுபடி அதே மார்ச்சில் அரங்கன் கோபுர தரிசனம் கண்டு திருப்தியடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
நன்றி.
நீக்குஆதிரங்கம் சென்றுள்ளேன். அருமையான கோயில்.
பதிலளிநீக்குஅப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி....விக்கிப்பீடியாவில் இக்கோயிலின் கோபுர புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டதாகும்.
அருமை ஐயா...
நீக்கு// விக்கிப்பீடியாவில் இக்கோயிலின் கோபுர புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டதாகும்.// அப்படியா! பாராட்டுகள்.
நீக்குபடங்கள் அழகு ஜி
பதிலளிநீக்குவிவரணங்களும் அருமை
நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஅனைத்தும் அழகான புகைப்படங்கள்! மயிலாடுதுறையிலும் புகழ்பெற்ற பெருமாள் கோவில் உள்ளது என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு. பஞ்சரங்கத் தலங்கள் - மூன்று இடங்களுக்குச் சென்றிருக்கிறேன் - திருவரங்கம், கோயிலடி மற்றும் கும்பகோணம். மற்ற இரண்டு இடங்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை.
பதிலளிநீக்குவிரைவில் சந்தர்ப்பம் கிடைக்க வாழ்த்துகள்.
நீக்குஸ்ரீரங்கப்பட்டினம், சிக்க திருப்பதி, மேலக்கோட்டை - ஒவ்வொரு முறை சென்று தரிசித்துள்ளேன், பெங்களூர் வந்து வசிக்க ஆரம்பித்தபின்பு. அழகான கோயில்கள், அமைதியான தரிசனங்கள்.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குஏகாந்தன் சொல்லுவது மிக உண்மை. தர்மஸ்தலா தவிர்த்த அனைத்துக் கர்நாடகக் கோயில்களிலும் அமைதியாகவும் நிதானமாகவும் தரிசிக்க முடியும். அதே தமிழ்நாட்டுக் கோயில்களில் முடியாத ஒரு விஷயம். :(
நீக்கு1970ல் ஸ்ரீரங்கப்பட்டணம் பள்ளிச்சுற்றுலாவில் போனேன் . அப்புறம் போகவே இல்லை,
பதிலளிநீக்குபடங்கள், வரலாறு எல்லாம் மிக அருமை.
நன்றி.
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை
பதிலளிநீக்குஒருமுறை சென்றிருக்கிறேன்
நன்றி