திங்கள், 15 மார்ச், 2021

'திங்க'க்கிழமை :  பாவ் பாஜி - பானுமதி வெங்கடேஸ்வரன் 

 

பாவ் பாஜி


பாவ் பாஜி செய்து அதிக நாட்களாகி விட்டதே செய்யலாம் என்று முடிவு கட்டினேன். தேவையான காய்கறிகள் இருந்தன. வெண்ணெய் ரெடி. பாவ் 
பாஜி மசாலா இல்லை, கடையில் வாங்குவதற்கு பதிலாக நாமே தயாரிக்கலாம் என்று கூகுள் ஆண்டியை தொடர்பு கொண்டேன். நெல்லைத் தமிழன் போல நிறைய பேர்களுடைய செய்முறையை அலசும் பொறுமை எனக்கில்லாததால், கிடைத்த முதல் செய்முறையின்படி பாவ்பாஜி மசாலா தயாரித்தேன். 

மசாலாவிற்கு தேவையான பொருள்கள்:

கொத்துமல்லி விரை    − 1 டேபிள் ஸ்பூன்
மிளகு     − 1 டேபிள் ஸ்பூன்
சீரகம்      − 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு   − 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் − 1
கிராம்பு  − 1
லவங்க பட்டை 1 இஞ்ச் அளவு
மிளகாய் வற்றல்  − 3 

இவை எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொண்டு, மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

பாஜி செய்ய தேவையான காய்கறிகள்:

உருளைக்கிழங்கு   − 2
தக்காளி     −  3
வெங்காயம்  − 2
காரட்   − 1
பீன்ஸ்  − 3 அல்லது 4
காலிஃப்ளவர்  − ஒரு கப். 
பட்டாணி  −  1கரண்டி
பச்சை மிளகாய் − 2
பூண்டு − 7 பல்
எலுமிச்சம்பழம்  − 1 மூடி

செய்முறை:


உருளைக்கிழங்கு,  காலிஃப்ளவர்,பட்டாணி,பீன்ஸ், காரட் இவைகளை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு அது பளபளப்பாக வதங்கியவுடன் அதில் தக்காளி, பூண்டு,பச்சை மிளகாய் இவைகளை சேர்த்து வதக்கி அதோடு மசிக்கப்பட்ட காய்கறி கலவையை சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி, நிறத்திற்காக காஷ்மீரி சில்லி 1/2 டீ ஸ்பூன், அரைத்த மசாலா பொடியில் 2 டேபிள் ஸ்பூன் இவைகளை சேர்த்து கொதிக்க விட்டு(கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறக்கி 1/2 மூடி எலுமிச்சம்பழம் புழிந்து பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை தூவவும். பாஜி தயாராகி விட்டது. 

தவாவை சூடாக்கி, அதில் பாதியாக நறுக்கப்பட்ட பாவின் இரு பக்கங்களிலும் வெண்ணெயை தாராளமாக தடவி சூடாக்கி, பாஜியோடு  சாப்பிடுங்கள். 




</

58 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. பாவ் பாஜி அழகான செய்முறை படங்களுடன் பார்க்கவே அருமையாக இருக்கிறது.
    இங்கு மருமகளும் நன்றாக செய்வார்.

    பதிலளிநீக்கு
  3. பாவ்பாஜி செய்முறை நன்றாக வந்திருக்கிறது. மனைவி நிறைய தடவை செய்வார். எனக்கு அதில் பாவ் ஒத்துக்கொள்ளாது (என்று நினைத்துக்கொள்வேன்).

    பசங்க கேட்ட பிறகுதான் (சின்ன வயசுலேர்ந்தே) அவள் இதையெல்லாம் பண்ணுவாள். நான் ரொம்ப வருடங்கள் கழித்துத்தான் சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று சாப்பிட்டுப்பார்த்து, அடடா இத்தனை வருடங்கள் இவையெல்லாம் சாப்பிடாமல் இருந்துவிட்டேனே என்று நினைப்பேன்.

    இரண்டு நாட்கள் முன்பு, வாழ்க்கையில் முதல் முதலா மெத்தி ஆலு சாப்பிட்டேன். அவ்வளவு ருசி. இன்னொரு தடவை பண்ணு என்று சொல்லியிருக்கேன் (எபிக்கு அனுப்பலாம் என்று). அவள் மனம் வைக்கணும். (காரணம் மாலை 6 மணிக்கு மேல் எதையும் நான் சாப்பிடுவதில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மாலை நேரம் உணவு எடுத்துக்காதீங்க! ஹிரண்யகசிபுவின் சம்ஹாரம் நடந்த நேரம். அதோடு பிரதோஷ காலம். பிரதோஷ காலம் கடவுள் சிந்தனை தவிர்த்து வேறு ஏதும் சிலாக்கியம் இல்லை. உங்கள் 144 தடை உத்தரவை ஒரு மணி நேரம் நீட்டித்து ஏழு மணிக்குள் உங்கள் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள். _/\_

      நீக்கு
    2. அப்படியா.... இனி 6-6:30 என்று மாற்றிக்கொள்கிறேன். நன்றி

      நீக்கு
    3. சைவ உணவுக்காரர்களுக்கு சாய்ஸ் குறைவு. அதனால் எதையும் ஒதுக்குவதில்லை.

      நீக்கு
    4. ஆறரை எல்லாம் இல்லை. ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள். ஆகவே ஆகாது நீங்க தினம் தினம் சந்தியா காலத்தில் சாப்பிடுவது! :( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் தொற்று நீங்கி ஆரோக்கியமும் அமைதியும் கிட்டப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. பாவ் பாஜி நிறையச் சாப்பிட்டாச்சு. அம்பேரிக்காவில் பையர் வீட்டிலும், பெண் வீட்டிலும் அடிக்கடி பண்ணுவார்கள். நான் குழந்தைகள் இருக்கும்போது பண்ணியது தான். அதுக்கப்புறமாப் பண்ணியதே இல்லை. பாவ் வடா அடுத்து வரும் என எதிர்பார்க்கிறேன். கட்ச் பிராந்தியத்தின் புஜ் நகரின் பிரபலமான டபேலியும் அடுத்து எதிர்பார்க்கிறேன். இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டபேலி... செய்து விட்டால் போகிறது. நிலக்கடலை சேர்ப்பார்கள் இல்லையா? எனக்கு கடலை ஆகாது.

      நீக்கு
    2. ஹிஹிஹி, கடலை போடாதீங்க. ஆனால் மாதுளை முத்துக்கள் கட்டாயம்! இதுக்கும் சரி, சில பேர் மிஸ்ஸி ரொட்டிக்கும் சரி மாதுளை முத்துக்கள் சேர்க்காமல் பண்ண மாட்டார்கள்.

      நீக்கு
  6. பாவ் என்றால் என்ன? அதை யாராவது சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, ஒரு வகை இரட்டை பன். இரண்டிரண்டாக பேக் செய்வார்கள். நான் அவன்/இவன் எல்லாம் வைச்சிருக்கும்போது பன்/பாவ் பன் எல்லாமும் வீட்டிலேயே செய்திருக்கேன். பன் செய்தால் அதோடு ஹாட் டாக் எனப்படும் உருளைக்கிழங்கு மசாலா வைத்தது தான் அன்றைய தினம் குழந்தைகளுக்கு! விரும்பிச் சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு மசாலா காரமாக இருக்கணும் ஹாட் டாக் தயாரிக்க.

      நீக்கு
    2. 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀இப்படி நான் சொல்ல வந்ததை எல்லாம் நீங்க சொல்லிட்டால் எனக்கு

      கருத்து சொல்ல வழியே இல்லை. ஹாஹ்ஹா.@ கீதாமா.

      நீக்கு
    3. // பன்/பாவ் பன் எல்லாமும் வீட்டிலேயே செய்திருக்கேன்.// வீட்டில் எப்படி செய்வது? அதை யாராவது விவரமா ஒரு திங்க கிழமைப் பதிவில் சொல்லுங்கள்.

      நீக்கு
    4. //வீட்டில் எப்படி செய்வது?// - கடைல போனா பாவ் என்று பாக்கெட் 30-40 ரூபாய்க்குத் தருவான். அதில் 3 ஜோடி பன்கள் இருக்கும். அதை வீட்டுக்குக் கொண்டுபோய், பாஜி ரெடியான பிறகு, வெண்ணெய்/நெய் தடவி தவாவில் சூடுபடுத்த வேண்டியதுதான். மற்றபடி பாவ் வீட்டிலேயே செய்யணும் என்றால் அது நம்மை நொந்துபோகவைக்கும் வேலை.

      நீக்கு
    5. மற்றபடி பாவ் வீட்டிலேயே செய்யணும் என்றால் அது நம்மை நொந்துபோகவைக்கும் வேலை.// உண்மைதான்.

      நீக்கு
    6. பண்ணத் தெரியலைனாலோ, பண்ண வரலைனாலோ நொந்து போக வைக்கலாம்.நான் அவனில் பிட்ஸா கூடப் பண்ணி இருக்கேன். காமாட்சி அம்மா கூட அவங்களும் பண்ணியதாகச் சொன்ன நினைவு. இப்போது நம்ம ஆதி வெங்கட் ப்ரெட் கூட அவன் இல்லாமல் பண்ணிக் காட்டினாங்க. நம்ம நெல்லையின் மகள் பண்ணலையா? அந்த ப்ரெட் பக்குவம் தான் பன்னுக்கும். சின்னதாகப் பண்ணணும். நெல்லையின் மகளால் முடியும்.

      நீக்கு
    7. என்னை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி மாமி. ப்ரெட் டின் இல்லாததால் கேக் panல் வட்டமாக செய்திருந்தேன்..:) நன்றாகவே வந்திருந்தது.

      நீக்கு
    8. கீசா மேடம்... முன்னாலெல்லாம் நான் என் மனைவிட்ட விசேஷ நாட்களின்போது சொல்வேன், சாஸ்திரத்துக்கு ஒரு காரம், ஒரு இனிப்புன்னு பண்ணு. லிஸ்ட் போட்டு நிறையப் பண்ணிக் கஷ்டப்படாதே.. கடைல காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் தந்துட்டுப் போறான் என்று.

      பாவ், பன், தில்பசந்த் எல்லாம் வீட்டில் பண்ணலாம். நல்லாத்தான் இருக்கும். நிச்சயம் குவாலிட்டி இன்க்ரிடியண்ட்ஸ்தான். ஆனால் பாவ், பன், ப்ரெட் போன்றவற்றை ஸ்டாண்டர்ட் கடைகளில் வாங்கிவிட்டால் ரொம்ப சுலபம்.

      என் பெண்ணுக்கு புது Oven, bake பண்ண, வாங்கித்தர்றேன் என்று ஒவ்வொரு வருடமும், கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சொல்லிக்கிட்டிருக்கேன்.

      நீக்கு
    9. @ Gowthaman sir ...

      அங்கே பேக்கரில பெங்களூர் பேக்கரில பெரிய திக் சைஸ் பிரெட் கிடைக்கும் மில்க் ப்ரெட் இல்லைன்னா பன் இதிலும் நல்லா இருக்கும்னு நினைக்கிறன் .அந்த பெங்களூர் பேக்கரி மசாலா sandwich !!!! மனம் ஏங்குதே ..

      நீக்கு
  7. அழகான விளக்கம் தந்தமைக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  8. பானுமதியின் செய்முறையும், விளக்கமும், படங்களும் அருமை வழக்கம் போல். நான் பெரும்பாலும் எந்த மசாலாவும் வீட்டில் நானே தயாரிப்பது தான்! கடைகளில் வாங்குவது இல்லை. பாவ் பாஜி மசாலா வாங்கி எல்லாம் பாஜி தயாரித்தது இல்லை. மஹாராஷ்ட்ராவின் பிரபலமான கோடா மசாலா கூட வீட்டில் தயாரிப்பது. ஆனால் என்ன பிரச்னை எனில் என்னதான் கொஞ்சமாகப் பொருட்களைப் போட்டாலும் சுமார் ஐம்பதிலிருந்து நூறு கிராம் வரை மசாலாப் பொடி வந்துடும். சீக்கிரம் தீர்க்கணும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். பாவ் பாஜி மசாலா தயாரித்து வீட்டில் வைத்து விட்டு யாத்திரை கிளம்பி விட்டேன். ஊர் திரும்பி பயன் படுத்த வேண்டும்.

      நீக்கு
  9. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் வளமாக,அமைதி கூடி இருக்க இறைவன் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு பானுவின் மிக அருமையான குறிப்புகள், வண்ணப்படங்களுடன் விவரமாக
    வந்திருக்கும் பதிவுக்கு மிக நன்றி.
    இன்று ஸ்ப்ரிங்க் ஃபார்வர்ட் ஆரம்பித்தது.
    காலையில் காரடையான் நோம்புக்காக
    வெகு சீக்கிரம் எழுந்ததில்

    எல்லாமே அவசரம்.

    பதிலளிநீக்கு
  11. இத்தனை விளக்கமாக அருமையாக பாவ் பாஜி செய்முறையைச் சொன்னது
    அழகு.

    குழந்தைகளுக்காக நாங்கள் கற்ற விஷயம்.
    இல்லையெனில் மயிலை ஷாந்தி விஹாருக்குச் செல்லும் எண்ணம் அவர்களுக்கு வரும். வாரம் ஒரு முறை
    இதுவும் பீட்சாவும், வெஜ்ஜி பர்கரும் செய்வது
    வழக்கமாக இருந்தது.
    இனிய நாட்களை மீண்டும் நினைவு கொள்ள
    வைத்த அன்பு பானுவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. என்னால் இவ்வளவு கச்சிதமாகப் படங்கள் எடுத்துப்
    பதிய முடியவில்லை:)
    நன்றி பானுமா. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. விளக்கமும், படங்களும் அருமை , எனக்கு மிகவும் பிடித்தது இது.பஞ்சாபிகள் இதை மிக் அருமையாக செய்வார்கள்.. ஒருமுறை நான் செய்ததை பஞ்சாபி பெண் ஒருத்தர் சாப்பிட்டுவிட்டு அவர்கள் அம்மாவிடம் சொல்லி நான் செய்தது மிகவும் அருமையாக இருந்தது அது போல செய்து தாருங்கள் என்று இருக்கிறார். அவர்களுக்கோ இது மிகவும் ஆச்சிரியம் நம்மை விட தமிழ் நாட்டுக்காரன் மிகவும் அருமையாக செய்து இருக்கிரானே என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர்கள் அம்மாவிடம் சொல்லி// ஓ... பஞ்சாபிகளிலும் சிலருக்கு பாவ் பாஜி செய்யத் தெரியாதா மதுரைத் தமிழன்? ஹிஹி

      நீக்கு
    2. நன்றி ம.தமிழன். என் மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது நான் செய்து கொடுத்த பாலக் பனீரை சாப்பிட்ட ஒரு பஞ்சாபி பெண்(from Delhi)This is the best palak I ate in South India என்று கூறி என் தலையே கிறுகிறுக்க வைத்தாள்.

      நீக்கு
    3. நெல்லைத்தமிழரே, பாவ் பாஜி/பாவ் வடா இரண்டும் மஹாராஷ்ட்ரத்தின் தேசிய உணவு. ஒரு தேர்தலில் கூட ஒரு ரூபாய்க்குப் பாவ் வடா கொடுப்போம்னு சிவசேனா கட்சி சொன்ன நினைவு. 80 சதவீத மஹாராஷ்ட்ர மக்களுக்கு/முக்கியமாய் மும்பை மக்களுக்குப் பாவ் வடாதான் காலை உணவு. எளிமையாகவும், வயிறு நிறையவும் சாப்பிடக் கூடியது. விலையும் கம்மி.

      நீக்கு
    4. கீசா மேடம்... அது வடா பாவ் (உடனே பூவை பூ ன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம் என்று எழுதாதீங்க). எனக்கென்னவோ வடா பாவ் அவ்வளவாக இஷ்டமில்லை. என் பெண், ஃபிலாஃபில் பண்ணுவா. எனக்கு ரொம்பப் பிடித்தமானது. ஆனால் எப்போதாவது ஒரு முறைதான்.

      நீக்கு
    5. நானும் சேர்ந்துக்கறேன் :) ஒரு பஞ்சாபி பெண் மகள் ஸ்கூலுக்கு கொண்டுபோன  நான் செய்த சப்பாத்தியை சாப்டுட்டு மிகவும் மிருதுவா இருந்ததுன்னு சொன்னாளாம் :) 

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவுக்கு சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறையில் பாவ் பாஜி மிக அமர்க்களமாக உள்ளது. நாங்கள் முன்பு வெளியில் உணவகத்தில் வாங்கி சாப்பிட்டதுதான். வீட்டில் செய்ததில்லை. படங்களும், செய்முறை விளக்கங்களும் துல்லியமாக இருக்கிறது. சகோதரிக்கு பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. அட! இன்று பாவ் பாஜி வெளியாகி விட்டதா? நான் அடுத்த வாரம் வரும் என்று நினைத்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. Pபாவ் Bபாஜி செய்முறை நன்று. Pபாவ் - இரண்டாக Cut செய்யப்பட்ட Bபன்! இங்கே கடைகளில் கிடைக்கும். நான்கு Pபாவ் 35/- ரூபாய் மட்டும்.

    Pபாவ் Bபாஜி சில சமயம் சுவைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  18. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்....

    பதிலளிநீக்கு
  19. பாவ் பாஜி...பாப் பாஜி..
    எல்லாரும் சொல்றாங்களே தவிர -
    அதைச் சாப்பிட்டுப் பார்க்கணும்..ன்னு ஆர்வம் மனதில் ஏற்படுவதில்லை...

    சில மாதங்களுக்கு முன்பு வரை இங்கிருந்த வட இந்திய உணவகங்களுக்கு சென்றாலும் அங்கே சில வகை இனிப்புகளும் சமோசாக்களும் தான் விருப்பம்...

    கொரோனா பேரிடரால் அருகிருந்த சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டு விட்டதில் வருத்தம்..

    பதிலளிநீக்கு
  20. பாவ் பாஜி சாப்பிட்டதேயில்லையா? ருசித்துப் பாருங்கள்,கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  21. looks yummy! haven't prepared in home. Thank you so much for this chat recipe!

    பதிலளிநீக்கு
  22. பாவ் பாஜி செய்முறை அருமை பானும்மா..கடையில் வாங்கிய பாவ்வில் ஒருமுறை செய்து சுவைத்திருக்கிறேன்..பாவ் வீட்டிலேயே செய்யணும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்..நேரம் ஒத்து வரணும்..:)

    பதிலளிநீக்கு
  23. பாவ் பாஜி இதுவரைக்கும் டேஸ்ட் பண்ணினதே இல்லை .இனியும் சுவைக்க முடியுமான்னு தெரில ..க்ளூட்டன் பிரீ ப்ரெட் பன்னில் செய்து பார்க்கணும் 

    பதிலளிநீக்கு
  24. பாவ்பாஜி பன் இங்கெல்லாம் தாராளமாகக் கிடைக்கிரது. பாஜியை செய்துவிட்டு பன்னைரோஸ்ட்செய்து உள்ளே பாஜியை வைத்து சுடச்சுட கொடுக்க வேண்டியதுதான். கடைகளில் நடுவே பன் ரோஸ்ட் செய்வார்கள். பாஜி தவா ஓரங்களில்சூடாகிக் கொண்டு இருக்கும். வேண்டிய அளவு வேறு ஒரு கரண்டியால் எடுத்து உள்ளே வைத்துக் கொடுப்பார்கள்.இது காட்மாண்டுவில் நான் முதலில் பார்த்தது. பானுமதி அவர்கள் மஸாலாக் குறிப்பும் கொடுத்து விட்டார்கள். செய்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். சாப்பிட ருசியானது. செய்து அசத்துங்கள்.அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!