சனி, 27 மார்ச், 2021

பேசமுடியாதவர்களின் உணவுகள் பேசுகின்றன.

 


சோனு வுக்குப் பெருமை சேர்த்த விமான நிறுவனம். 

= = = = 

பேசமுடியாதவர்களின் உணவுகள் பேசுகின்றன. 

சென்னை, வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலி'ற்கு பக்கத்தில் உள்ளது, இந்த வித்தியாசமான உணவு கடை. வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும்போது, இன்முகத்துடன், 'சைகை'யால் வரவேற்கின்றனர், இரு பெண்கள்.

வந்தவர்களும், பதில் வணக்கம் தெரிவித்து, 'சைகை'யால் ஏதோ சொல்கின்றனர். பெண்கள் இருவரும் புரிந்து, தலையாட்டுகின்றனர்.

சிறிது நேரத்தில், சப்பாத்தி, தோசை மற்றும் இட்லி சுடச்சுட தயாராகி, அவர்களது இருக்கைக்கு செல்கிறது. பிரமிளா, ரத்னம் என்ற, இந்த இரு பெண்களுக்கும் காது கேட்காது, பேச வராது. ஆனால், பிரமாதமாக சமைக்கத்  தெரியும்.

இருவரும் பிழைப்பு தேடி, தங்களது ஊரை விட்டு, சென்னை வந்தனர். 

இங்கே உள்ள காது கேளாதோர் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் சித்ராவை சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும்படி கேட்டனர்.

சித்ராவும் இவர்களை அழைத்து, மாற்றுத்திறனாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்களான, பிரபாகரன், கற்பகம் ஆகியோரை சந்திக்க வைத்தார்.

அவர்களது வழிகாட்டுதலின்படி, சேலம், ஆர்.ஆர்.பிரியாணி அதிபர், தமிழ்ச்செல்வனை சந்தித்தனர்.

'உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்று அவர் கேட்க, 'எங்களுக்கு தள்ளு வண்டி வாங்கிக் கொடுத்தால், சென்னையில், நடமாடும் உணவகம் அமைத்து, பிழைத்துக் கொள்வோம்...'  என்று கூறியுள்ளனர்.

'தள்ளு வண்டி வேண்டாம்; சிரமம் அதிகம். அதற்கு பதிலாக, வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும், என்னுடைய, ஆர்.ஆர்.பிரியாணி கடையையும், கடைப் பொருட்களையும், காலையும் - மாலையும் கட்டணமில்லாமல் உபயோகித்துக் கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து உதவினார்.

அதன்படி, இப்போது இவர்கள் , காலையில், இட்லி, தோசை மற்றும் இடியாப்பமும்; மாலையில், இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா மற்றும் 'பிரைடு ரைஸ்' என, விதவிதமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இவர்களது சுவையான உணவிற்காகவே, நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள், இவர்களின் நிலைமையை புரிந்து, 'சைகை' மொழியில் வேண்டியதை கேட்டு, சாப்பிடுகின்றனர்.

புது வாடிக்கையாளர்களுக்கும், இந்த இரு பெண்களுக்கு பாலமாகவும், பணவரவு செலவை பார்த்துக் கொள்ளவும் கூடவே இருக்கிறார், சித்ரா.

தற்போது, தங்களைப் போன்ற மேலும் சிலருக்கு வேலை வாய்ப்பு தர உள்ளனர்.உழைத்து பிழைக்க தயாரான இவர்கள், 

பலருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பாராட்ட வேண்டியது தான். 

தலைவணங்கிறேன்...🙏🌹🙏

Anguthai Balagurusamy  Facebook. 

= = = = 

‛பாடும் வானம்பாடி' பி.சுசீலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது வழங்கி கௌரவிப்பு. 

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடியாக வலம் வருபவர் பி.சுசீலா(85). 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பாடி வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரின் சாதனை எண்ணிலடங்காதது. பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வென்றிருப்பவர் 5 முறை தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு மற்றொரு மகுடமாய் தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடக துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

பாடகி பி.சுசீலாவுக்கு 2019ம் ஆண்டுக்கான புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும், பொற்பதக்கமும் அறிவிக்கப்பட்டது. வயது மூப்பு மற்றும் கொரோனா பரவல் அச்சத்தால் டாக்டர்கள் அறிவுரையை ஏற்று இவர் கலைமாமணி விருது வழங்கும் விழாவுக்கு சென்று விருதை பெற முடியவில்லை.

இந்நிலையில் சுசீலாவின் இல்லத்திற்கே சென்று சிறப்பு கலைமாமணி விருதை இயல் இசை நாடக மன்ற அதிகாரி ஹேமநாதன் வழங்கி கௌரவித்தார். இதை மகிழ்ச்சியுடன் சுசீலாவும் பெற்றுக் கொண்டார். இந்த விருதை பெறும் முதல் இசை கலைஞர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

= = = =

இயற்கை எனும் ஒலி வைத்தியர்!

நகர்ப்புற ஒலிமாசு, மனிதனின் மன நலம் மற்றும் உடல் நலனை பாதிக்கிறது. இதற்கு மாற்றாக, அடர்வன பகுதிகளில் எழும் இயற்கை ஒலிகள் மனதிற்கும், உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கனடாவிலுள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், கானக ஒலிகள் குறித்து, 11 நாடுகளில் நடத்தப்பட்ட, 36 ஆய்வுகளை தொகுத்து ஆராய்ந்தனர். இதன் முடிவில், இயற்கை ஒலிகளைக் கேட்பவர்களுக்கு மனநிலை மேம்படுவது, மூலையின் ஆக்கப்பூர்வ திறன் உயர்வது, நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பது, மனச் சுமை தணிவது, பதற்றம் மற்றும் எரிச்சல் குறைவது போன்ற நல்ல பலன்கள் கிடைப்பது தெரியவந்துள்ளது.

மேலும், எழும் வெவ்வேறு ஒலிகள், வெவ்வேறு பலன்களைத் தருவதையும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. உதாரணமாக, நீர் வீழ்ச்சி, நீரோடை போன்றவை எழுப்பும் இனிய ஓசைகள் நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கின்றன. உடல் நலத்தையும் அதிகரிக்கின்றன. அடர்வனத்தில் பறவைகள் எழுப்பும் கூக்குரல்களைக் கேட்பவர்களுக்கு, மனச்சுமைகள் மற்றும் கவலைகள் கரைந்து போகின்றன.

நகர்ப்புறத்தை தாண்டாமல் வசிப்போருக்கு, அவ்வப்போது வன உலா போவது, அல்லது நகரத்தில் அடர் மரங்கள், செடிகள் உள்ள பகுதிகளில் நடை பயில்வது போன்றவை நல்ல பலன் தரும் என, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

= = = =

பாரத்தை தூக்கி செல்லும் ட்ரோன்கள்!

விரைவில் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு தரும் சேவைகளுக்கு, ட்ரோன்கள் பரவலாகிவிடும். ஆனால், இந்த சிறு வாகனங்களால் குறைந்த எடையையே சுமக்க முடியும். இக்குறையைப் போக்க, அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதிய யுக்தியை சோதித்து, வெற்றி கண்டுள்ளனர்.

நான்கு சிறிய ட்ரோன்களை இணைக்கும் வசதியுள்ள ஒரு பெட்டி மூலம், அவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, அந்த பெட்டிக்குள் வைக்கப்படும், 5.4 கிலோ எடையுள்ள சரக்கை, நான்கு ட்ரோன்களும், ஒரே நேரத்தில் துாக்கிச் செல்லவும், பறக்கும் திசை, வேகம், தரையிறங்கும் நேரம், எடையைப் பொறுத்து தரவேண்டிய அழுத்தம் போன்றவற்றை, நான்கு ட்ரோன்களையும் ஒருங்கிணைக்கும் தானோட்டி அமைப்பு கணக்கிட்டு செலுத்துகிறது.

இந்த முறையில், சரக்கின் எடையைப் பொறுத்து, கூடுதலாக இன்னும் பல, ட்ரோன்களை சேர்ந்து பறக்கும்படி செய்ய முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சரக்கு வண்டி, வீட்டின் மதில் சுவர் அருகே வந்து நிற்க, ஒரு ட்ரோன், சரக்குப் பெட்டியை எடுத்து, முகவரி தாரரின் வீட்டு, கதவருகே கொண்டு போய் வைத்துவிட்டு வண்டிக்கு திரும்பிவிடும். சரக்கு அதிக பளுவுடன் இருந்தால், வண்டியில் இருக்கும், ஐந்தாறு ட்ரோன்கள் ஒருசேர, பெட்டியை துாக்கிக் கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பும்.

சரக்கு அஞ்சல் சேவை நிறுவனங்கள், இதன் மூலம் ஒரே அளவிலுள்ள ட்ரோன்களை மட்டுமே வாங்கினால் போதும். கூடுதல் எடைக்கு, கூடுதல் திறனுள்ள, பெரிய ட்ரோன்களை வாங்கும் செலவை, இதன் மூலம் தவிர்க்கலாம்.

= = = =


55 கருத்துகள்:

  1. வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பார்கள்.

    உண்மையில் வாயுள்ள பிள்ளைகள் பலர் பிறரது பிழைப்பை கொல்லுகிறார்கள்.

    இத்தனை ஆண்டுகள் ஆனாலும் பி.சுசீலா அம்மாவுக்கு இன்னும் தமிழ் சரியாக பேச வரவில்லையே...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா காலங்களிலும் தொடர்ந்து திறமையைக் காட்டி அசத்திவரும் மனிதர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். வாய் பேச முடியாட்டி என்ன? கைகள் இருக்கின்றனவே என உழைத்துக்காட்டும் பெண்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. சோனு சூத் பற்றிய செய்தி அடிக்கடி பார்க்க முடிகிறது. ட்ரோன்கள் இன்னும் நேரில் பார்க்கலை. அவற்றின் பயன்பாடுகள் அசத்துகின்றன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் பறவைகளின் கூச்சல் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. இங்கேயும் அந்தக் குறிப்பிட்ட நேரம் கூவும் செம்போத்தின் குரல் கேட்கவில்லை எனில் என்னவோ ஏதோ எனத் தவிப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. மாற்றுத்திறனாளிகளின் உணவகம் பற்றிய செய்தி என்னைக் கவர்ந்தது.

    ட்ரோன்கள் - என்ன என்ன பிரச்சனைகளைக் கொண்டுவரப்போகிறதோ.

    பறவைகள் குரல் - எப்போதும் நமக்க் மகிழ்ச்சி ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாளும் ஆரோக்கியத்துடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. சுசீலா அம்மாவுக்கு கௌரவம் செய்து நாம் பெருமைப்பட
    வேண்டும். அவரை மாதிரிக் குரலை ஒத்து வேறெந்தக் குரலையும்
    கேட்கவில்லை.
    பேச முடியாத பெண்களின் தயாரிப்பில்
    கிடைக்கும் உணவு மிக அருமையாகத்தான்
    இருக்கும். மிக உயர்ந்த சேவைக்கு நன்ற்யும் வாழ்த்துகளும்.

    சோனு சூத் பற்றி நல்ல விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
    எத்தனையோ வேண்டாத செய்திகளுக்கிடையே
    இது போன்ற நல்ல செய்திகள் மனதுக்கு மகிழ்ச்சி.
    ட்ரோன்
    நம் வீட்டிலேயே ஒன்று இருக்கிறது:)
    நல்ல விஷயங்கள் நடக்கட்டும்.
    விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏது தடை. நன்மை விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேச முடியாத பெண்களின் தயாரிப்பில் கிடைக்கும் உணவு மிக அருமையாகத்தான் இருக்கும்//

      பெண்கள் சமையல் செய்யும்போது பேசாமல், சமையல் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தால், சமையல் அருமையாக இருக்கும் என்ற அர்த்தம் வருகிறதே வல்லிம்மா....ஹாஹா

      நீக்கு
    2. ஓ ! அப்படியும் இருக்குமோ!

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  9. முதல் இரண்டு செய்திகளும் முன்பே படித்திருக்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கென்றே தன் கடையை கட்டணமில்லாமல் உபயோகிக்கக் கொடுத்த திரு. தமிழ்செல்வனைத்தான் மனதார பாராட்ட வேண்டும்.
    ஒலி வைத்தியம் புதியது. ஆனால் மிகவும் அருமையான விஷயம்.
    திருமதி.பி.சுசீலாவிற்கு எத்தனை மகுடங்கள் சூட்டினாலும் அவர் அதற்கு மிகவும் தகுதியானவர் தான்! அவரின் இனிமையான குரல் எத்தனை எத்தனை மனங்களுக்கு அருமையான தாலாட்டாக இருந்திருக்கிறது, இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவரின் இனிமையான குரல் எத்தனை எத்தனை மனங்களுக்கு அருமையான தாலாட்டாக இருந்திருக்கிறது, இருக்கிறது!// ஆம்!

      நீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  11. வாய் பேச இயலாத பெண்களுக்கு
    நல்லாதரவு அளித்த திரு. தமிழ்ச்செல்வன் பாராட்டிற்குரியவர்..

    பதிலளிநீக்கு
  12. //பேசமுடியாதவர்களின் உணவுகள் பேசுகின்றன.//

    பிரமிளா, ரத்னம் இரு பெண்களுக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    இவர்களுக்கு உதவி செய்த திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பாடும் வானம்பாடி' பி.சுசீலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது வழங்கி கௌரவிப்பு.//
    வாழ்த்துக்கள்.

    //பறவைகள் எழுப்பும் கூக்குரல்களைக் கேட்பவர்களுக்கு, மனச்சுமைகள் மற்றும் கவலைகள் கரைந்து போகின்றன.//

    ஆமாம், உண்மை.

    ட்ரோன்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.

    இன்றைய செய்திகள் எல்லாம் அருமை.



    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    ஹிந்தி நடிகரின் பொதுநல தொண்டுகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். காது கேட்காத வாய் பேச முடியாத பெண்களின் தைரியம் வியக்க வைக்கிறது. அவர்களின் உணவகம் நன்கு முன்னேற வாழ்த்துகள்.

    பிண்ணனி பாடகி திருமதி பி. சுசிலா அவர்களுக்கு கிடைத்த விருது நம்மையும் பெருமையடைய வைக்கிறது.
    இயற்கை ஒலி வைத்தியம் சிறந்ததுதான். இயற்கையோடு நாம் ஒன்றி வாழ்ந்தால் பாதிப்புகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். டரோன்கள் பற்றிய செய்தி புதிது. விஞ்ஞான வளர்ச்சி பிரமிக்கச் செய்கிறது. அத்தனைப் பகிர்வினுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. ..பறவைகள் எழுப்பும் கூக்குரல்களை//

    பறவைகள் போடும் சத்தம் (chirping of birds), அல்லது பறவைகள் எழுப்பும் ஒலி என்பதே சரி. பறவைகளின் கூப்பாடு என்பதும் ஓகே. ஆனால் கூக்குரல் அல்ல அது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நீங்கள் சொல்வது சரி. (என்ன சத்தம் இந்த நேரம்? ..)

      நீக்கு
    2. என்ன சத்தம் இந்த நேரம்..
      உயிரின்... ஒலியா..

      - ஆஹா.. நினைவுபடுத்திவிட்டீர்கள். அழகான பாடலைக் கேட்டு நாளாகிவிட்டது. வெள்ளிக்கிழமை ஒன்றில் ஸ்ரீராமுக்கும் நினைவு வரட்டும்!

      கூடவே, இப்படியெல்லாம் எழுதிய கவிஞனா, இப்படிப் போய்விட்டான் என்கிற ஆகங்கமும்..

      நீக்கு
  15. பிரமீளா, ரத்னத்திற்கு உதவி சரியான காலத்தில் கிடைத்திருக்கிறது. தமிழ்ச்செல்வன் சாதாரண மனிதரல்ல! மேலும் உதவி வேண்டும்/உதவி நல்கும் நல்ல உள்ளங்கள் ஒன்றோடொன்று கலக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  16. வாய் பேச முடியாவிட்டாலும், வாய்க்கு ருசியாக உணவளிக்கும் அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வணக்கம். 
    //உதாரணமாக, நீர் வீழ்ச்சி, நீரோடை போன்றவை எழுப்பும் இனிய ஓசைகள் எதிர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கின்றன.// எதிர்மறை எண்ணங்களையா ஊக்குவிக்கிறது? தயாராக இருக்கிறதே?

    எடை தூக்கும் ட்ரோன்கள்??? ம்ம்ம்...

    பி.சுசிலாவை கௌரவித்தது கௌரவம். 

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான். செய்தித் தாளில் தவறாக அச்சாகி உள்ளது. சரி செய்துவிட்டேன். நன்றி.

      நீக்கு
  18. //பதற்றடம் மற்றும்// //இனிய ஓசைகள் எதிர்மறை எண்ணங்களை//

    எனெக்கென்னவோ கேஜிஜி சார் தொலைக்காட்சியின் சத்தத்தில் (அனேகமாக அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சியாக இருக்கும்) இந்த இடுகையைத் தயார் செய்திருப்பார் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரிக்கட் பார்த்துக்கொண்டே செய்த அவசர copy & paste. மன்னிக்கவும்.

      நீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அனைவர்க்கும் முகம் மலர அன்பான காலை வணக்கம்! மக்களுக்கு சேவை செய்யும் தொண்டுள்ளம் கொண்ட திரு.சோனுசூட் மற்றும் திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கு நன்றிகள்!
    இறைவன் ஒரு குறை வைத்தால், அதனை சரி செய்ய மற்றொரு மேன்மையான திறனை அருள்கின்றார். மாற்றுத்திளிறனாளி சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்! அவர்களை போல திறமையுள்ளவர்கள் வாழ்வு மிளிரட்டும்!
    சுசீலாம்மாவிற்கு பாராட்டுக்கள்!
    இயற்கை நமக்களித்த கொடைகள் அனைத்துமே நேர்மறையானதும் , மனதிற்கு இதமளிப்பதுமே ஆகும். இயற்கையை நேசிப்போம்...நம்மால் இயன்ற பொழுது மரங்களும், செடிகளும் வளர்ப்போம்! சின்னஞ்சிறு ஜீவன்களுக்கு உணவளிப்போம்

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு
  21. //காலையில், இட்லி, தோசை மற்றும் இடியாப்பமும்; மாலையில், இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா மற்றும் 'பிரைடு ரைஸ்'//

    ஆர்.ஆர். சிற்றுண்டி சாலை?

    எளியோர்களுக்கு வாழ்வு கிடைத்தால், இறைவன் மகிழ்வான்!..

    பதிலளிநீக்கு
  22. உங்கள் பதிவு எழுத்துக்களைப் பெரிதாக்கிப் படிக்க முயன்றாலே என்னன்னவோ மேஜிக் எல்லாம் நடக்கிறது. பாதிப் பின்னூட்டத்தில் மீண்டும் பதிவுப் பகுதியை வாசிக்க மேல் நோக்கிச் சென்றாலோ, அம்புட்டு தான்!.. பாதி தட்டச்சு செய்திருந்த பின்னூட்டம் காணாமல் போய்விடும்! நீண்ட பின்னூட்டங்கள் போடும் எனக்கு கடந்த சில நாட்களாக இந்த சங்கடம் நீடிக்கிறது. கெளதமன் சார்! ஆவன செய்ய வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  23. இளங்கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லாத் துறைகளிலும்
    இருக்கத் தான் செய்கிறது!

    பதிலளிநீக்கு
  24. அமைதி தவழும் அடர் கானகப் பகுதிகள் தங்கள் சிறப்பையும் மனித குலத்திற்கு அருளும் நன்மைகளையும் இழக்காது இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!

    அமெரிக்க கானகப் பகுதிகளை நகர்புறங்களுக்கு நடுவிலேயும் அப்படி அப்படியே அட்டகாசமாக பராமரிக்கிறார்கள். கால்மணி நேர கார் ஓட்டலில் போய் இரண்டு மணி நேர உள் சுற்றலில் சலசலத்துக் கொட்டும் உள் சுனை பார்த்து வண்டி வண்டியாய் சந்தோஷத்தை சம்பாதித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி விடலாம். நம்மவர்களுக்கு இதெல்லாம் அந்நியப்பட்டவை என்பதே நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  25. ட்ரோன்கள் உங்கள் உபயோகத்தில் இப்பொழுது தான் எனக்கு அறிமுகம். வல்லிம்மா
    வைத்திருக்கிறார்களாமே! அது பற்றி நாலு நல்ல வார்த்தைகள் சொல்லக்கூடாதா?
    நீங்கள் வேண்டுமானால் அடுத்த சனிக்கிழமைக்கு இதுபற்றி அவரிடக்ம் ஒரு பேட்டி எடுத்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்வது kids விளையாடும் working model என்று நினைக்கிறேன். என் பேரன் கூட ஒன்று வைத்துள்ளான்.

      நீக்கு
  26. இந்த வாரத்தின் தகவல்கள் அனைத்துமே சிறப்பு. பாராட்டுகள் - அனைவருக்கும். உணவகம் தகவல் - அந்தப் பெண்மணிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!