புதன், 31 மார்ச், 2021

பேரக்குழந்தைக்கு உதவுவீர்களா ?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ஆன் லைனில் பள்ளித்தேர்வை எழுதிக் கொண்டிருக்கும் உங்கள் பேரக்குழந்தை தவறாக விடை எழுதுவது உங்களுக்குத் தெரிகிறது,நீங்கள் உதவுவீர்களா? அல்லது பேசாமல் இருந்து விடுவீர்களா?

# பேசாமல் தான் இருக்க வேண்டும். எல்லாரும் நூறு எடுத்தால் குட்டு வெளிப்பட்டு விடுமே.

& பேசாமல் இருந்துவிடுவேன். (முன்பு பேரனின் கணக்குப் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வித் தாளை ஒருமுறை படித்துப் பார்த்தேன். எனக்கு அதில் பரீட்சை வைத்திருந்தால் - சைபர் மார்க் கிடைத்திருக்கும்!!)

ஒருமுறை ஏ எம் ஐ இ - பரீட்சை எழுதியபோது (Modern Physics and Electronics Exam) Draw and describe common emitter amplifier circuit என்று ஒரு கேள்வி. 

நான் மனப்பாடம் செய்து சென்ற கேள்வி common base amplifier. ஆகவே, நான் தயார் செய்து வைத்திருந்த பதிலை, படம் போட்டு விளக்கமாக எழுத ஆரம்பித்தேன். Exam hall Invigilator ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டே வந்தவர், நான் போட்டிருக்கும் படத்தைப் பார்த்ததும் சற்றுத் தயங்கினார். பிறகு ஒரு சுற்றுப் போய்விட்டு வந்து ஒருமுறை கனைத்தார். நான் கண்டு கொள்ளவில்லை. 

காலியாக இருந்த பக்கத்து டெஸ்க் ல உட்கார்ந்து அவர் ஒரு தாளில் என்னவோ படம் போட்டார். அப்புறம் யோசனை செய்து அந்தத் தாளைக் கசக்கி எறிந்துவிட்டார். 

அப்புறம் மீண்டும் ஒரு சுற்று சுற்றி வந்த பின் என் அருகே வந்து மெல்லிய குரலில் ' கேள்வியை நன்றாகப் படிங்க. அவர்கள் கேட்டிருப்பது common emitter amplifier circuit.  நீங்க போட்டிருக்கும் படம்  common base amplifier circuit என்றார். 

நான் அவரை விட மெல்லிய குரலில் ' சார் - எனக்கு இது ஒன்றுதான் தெரியும் - அதனால் தெரிந்ததை எழுதுகிறேன் ' என்றேன். 

அவர் கொஞ்சம் திகைத்து - பிறகு புன்சிரிப்புடன் அப்பால் சென்றுவிட்டார்! 

= = = = = 

சென்ற வாரம் எங்களைக் கேள்வி கேட்க எல்லோரும் மறந்து போயிட்டீங்க. அதனால், நாங்க கொஞ்சம் கேள்விகள் கேட்கிறோம். 

1 ) உங்களுக்கு மறக்க முடியாத ஏப்ரல் முதல் தேதி (A F Day)அனுபவம் ஏதேனும் உண்டா? அது பற்றி எழுதுங்க. 

2 ) தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகை எது?

3 ) உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தேர்தல் எது?

4 ) உங்கள் ஸ்கூல் மாணவர் தலைவர் பெயர் என்ன?

5 ) நீங்க முதன் முதலில் வோட்டுப் போட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுங்க. 

= = = = = =

மீண்டும் சந்திப்போம்!

= = = = =

88 கருத்துகள்:

  1. என்ன இது! வர வர எல்லோரும் சோம்பேறியா ஆயிட்டு இருக்கீங்க? இத்தனை பேர் இருந்தும் தினம் நான் வந்து எல்லோரையும் எழுப்ப வேண்டி இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. --- க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் --- குறட்டை ஒலி !!

      நீக்கு
    2. என்னுடைய வேலைச் சூழல் மாறிவிட்டது.. இரவு பத்தரையாகி விடும் வேலை முடிந்து திரும்புவதற்கு.. அத ன் பிறகே உறக்கம்.. இதில் விடியற்காலை 3:00 (ஊரில் 5:30) மணிக்கு எழுவது எங்ஙனம்?...

      நீக்கு
    3. நான் முதல்ல வரணும்னு பார்த்தால், சீனியர் (ரொம்ப ரொம்ப சீனியர் ஹாஹா) கீசா மேடம் கோபிப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு. இல்லைன்னு சொன்னாத்தான் நான் முதல்ல வருவேன்.

      நீக்கு
    4. நெல்லை, நீங்க முதல்லே வரணும்னா நான் அன்னிக்கு வராமல் இருக்கணும்.

      நீக்கு
    5. மெதுவாகவே வாங்க துரை. நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்றேன்.

      நீக்கு
  2. இன்னிக்கும் இன்னமும் யாரும் எட்டிப் பார்க்கலையா? ஓகே! அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. பேரக்குழந்தைக்குப் படிப்பு விஷயத்தில் உதவுவது எனில் தெரியாததைச் சொல்லிக் கொடுப்பது. ஆனால் தேர்வின்போது அல்ல!

    பதிலளிநீக்கு
  4. திரு கௌதமனுக்கு நேர்ந்த மாதிரி எங்க பெண்ணுக்கும் பல்கலைக்கழத்தேர்வின் போது அனுபவம் ஏற்பட்டதைச் சொல்லி இருக்காள்.

    பதிலளிநீக்கு
  5. பின்னணியில் வாராஹி பற்றிய யூ ட்யூப் ஒளி/ஒலி பரப்பைக் கேட்டுக்கொண்டே எழுதறேன். அதைக் கேட்கும்போது "அத்திமலைத் தேவன்" நினைவில் வருது. இன்னமும் முழுசும் எழுதி முடிக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன எழுதி முடிக்கலை? அத்திமலைத் தேவன் விமர்சனம் என்ற பெயரில், முழுக்கதையையும் தட்டச்சு பண்ணறீங்களே அதையா? என்று கேட்க நினைத்தேன். காலையிலேயே கீசா மேடத்தின் கோபத்தை எதுக்கு வாங்கிக்கணும்னு கேட்கலை.

      நீக்கு
    2. ஓகே. அப்போ நான் மேலே சொல்லலை. சொன்னவரைக்கும் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தில் கொஞ்சமே கொஞ்சமும் தான் எடுத்துண்டேன்.

      நீக்கு
    3. சொல்லுங்க சொல்லுங்க கீசா மேடம்... உண்மையிலேயே டீடெயிலா இருந்தால்தான் விமர்சனமும் புரியும். உடனே கோச்சுண்டுட்டீங்களே..

      நீக்கு
  6. 1. ஏப்ரல் ஒன்றாம் தேதி எல்லாம் எந்த மறக்க முடியாத நினைவுகளும் இல்லை. சில/பல சமயங்களில் ஏமாந்து அசடு வழிந்ததைத் தவிர்த்து!
    2.தமிழ்நாட்டில் மட்டும் மகர சங்கராந்தியைப் பொங்கல் என்னும் பெயரில் கொண்டாடுகிறோம். சின்ன வயசில் தமிழர் திருநாள் என்றும் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய பண்டிகை என்றெல்லாம் சொல்லுவதைக் கேட்டுக் கல்யாணம் ஆகி முதல் முதல் ராஜஸ்தான் போகும் வரைக்கும் மகர சங்கராந்தி என்னும் பெயரில் இந்தியா முழுசும் கொண்டாடுவாங்கனு தெரியாது. அதே போல் தசராவும். நவராத்திரிப் பத்து நாட்களும் அங்கேயும் ஒவ்வொரு நாள் இரவிலும் அம்பிகையை நடுவில் ஆவாஹனம் செய்து சுற்றி வந்து கோலாட்டம் ஆடிப் பாட்டுப் பாடிக் கொண்டாடுவதும் தெரியாது. இப்போல்லாம் இது டான்டியா என்னும் பெயரில் குதூஹலக் கொண்டாட்டமும் போட்டிகள்/பரிசுகள் நிறைந்த நவீன விழாவாகவும் மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
  7. 3. 67 ஆம் வருஷத் தேர்தல். காமராஜர், டிடிகே, பக்தவத்சலம் போன்ற பலரை நெருக்கமாகப் பார்த்துப் பேசினேன். அப்போ ஓட்டுப் போடும் வயசும் இல்லை. ஆனால் அடுத்த தேர்தலுக்குள் நான் மதுரையிலேயே இல்லை. ஓட்டும் அதுக்கப்புறமாப் பல வருஷங்கள் போட்டதே இல்லை. கல்யாணம் ஆகிக் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து முதல் முதல் ஓட்டுப் போட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. இந்த மாதிரில்லாம் வருஷங்களைக் குறிப்பிட்டு எழுதக்கூடாது. நாங்கள்லாம் கீசா மேடம் குழந்தை மாதிரின்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். பலர் நம்பிக்கிட்டிருக்காங்க. அவங்கபாட்டுக்கு, 2000 வரை, 33 வருஷம், அப்புறம் இன்னொரு 21 வருஷம், வாக்களிக்கும் வயது அப்போது 21, அதனால அப்போ கீசா மேடத்துக்கு 20 வயசும் 8 மாசங்களும் முடிந்திருக்கும். அப்போ இப்போதைய வயசு 75ன்னு (தவறா) கணக்குப் போய்ட்டு மயங்கிடப்போறாங்க. அப்புறம் வெந்நீரைக் கொட்டி எழுப்பினாலும் எழுப்பமுடியாமல் ஆகிடப்போகிறது.

      நீக்கு
    3. ஹிஹிஹிஹி, நெல்லை, உங்க கணக்கு நல்லாவே இருக்கு!

      நீக்கு
  8. 4. மாணவி தலைவி, பத்மா, பானுமதி. பானுமதி என்னோட வகுப்பு. பத்மா பள்ளியில் முதல் மாணவியாகவும் வந்தார்.
    5. முதல் முதல் ஓட்டுப் போடும்போது குழந்தைகளே விபரம் தெரிஞ்சவங்களா ஆயிட்டாங்க. அப்போ ஜேசிடி. பிரபாகரன் மிகவும் சுறுசுறுப்பாகத் தொகுதி வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்ததாலும் எங்க தெருவின் சாலை அமைக்கப் பல உதவிகள் செய்ததாலும் கட்சியைப் பற்றி நினைக்காமல் அவருக்கு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தோம். தொடர்ந்து அவரும் பல உதவிகளைச் செய்தார். ஆனால் நாங்க தான் மறுபடியும் மாற்றல் ஆகிப் போய்விட்டோம். அதன் பின்னர் பத்தாண்டுகளுக்கும் மேல் ஓட்டுப் போடவே இல்லை.

    பதிலளிநீக்கு
  9. இத்தனை நேரம் ஆகியும் இன்னமும் யாரும் வரலை. எனக்கும் வேலை இருக்கு. சங்கடஹர சதுர்த்தி. போயிட்டு முடிஞ்சால் மத்தியானமா வரேன்.

    பதிலளிநீக்கு
  10. தெரிந்த விடையெனில் பெயரனுக்கு உதவுவது(ம்) தா(த்)தாவின் கடமைதானே... ?

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் அனைவருக்கும் இன்ய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. எங்கள் அனுபவங்கள் அருமை.
    பேரன், பேத்திகள் படிப்பெல்லாம்
    என் படிப்புக்கு மிக மேம்பட்டவை.
    அதனால் அந்தப் பக்கமே போவதில்லை.

    பதிலளிநீக்கு
  14. ஏப்ரில் ஒன்று அனுபவங்கள் பள்ளி நாட்களில்
    மும்முரம். அப்புறம்
    குழந்தைகள் ஏமாற்றூம் போது ,ஏமாறுவதாக நடிக்க வேண்டி இருந்தது:)

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  16. தமிழ் நாட்டில் மட்டும் கொண்டாடப் படுவது ஆடி பதினெட்டோ?

    பதிலளிநீக்கு
  17. மறக்க முடியாத தேர்தல், காமராஜர் தோற்ற தேர்தல்.1967?
    மிக வருத்தமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. எங்கள் பள்ளி மாணவிகள் தலைவி ஜி.ஞானம்.
    பிற்காலத்தில் சீதாலக்ஷ்மி ராமசாமி திருச்சியில்
    பேராசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட? ரேவதி! ஞானம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் இல்லையோ? அவங்க மாமா எங்களோடு மதுரையில் குடி இருந்தார். அந்தக் கால ஆனந்த விகடன் திருச்சி மலர் அட்டைப்படத்தில் அவர் படம் வந்தது. எங்களுக்கு ஒரு காலத்தில் நல்ல பழக்கம். அவர் தங்கை தன் மாமா பையரையே கல்யாணம் செய்து கொண்டார்.

      நீக்கு
    2. அன்பு கீதாமா,
      இதெல்லாம் எனக்கு இன்னோரு தோழி சொல்லித் தெரியும்.
      நான் சொல்லும் ஞானம்,மீனாக்ஷி இருவரும் நல்ல
      படிப்பாளிகள்.
      தந்தை பெயர் கோபாலன்.
      ஏற்கனவே இதைப் பற்றிப் பேசி இருக்கிறோமோ???
      நினைவில்லை மா.

      நீக்கு
  19. அதற்குப் பின அவர் தங்கை மீனாக்ஷி
    தலைவி ஆனாள். என் வகுப்புத் தோழி.
    அந்தப் பதவி வகிக்கும்போது அவள் மூக்கு
    இன்னும் நீண்டு விட்டதாகத் தோன்றும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..அதற்குப் பின அவர் தங்கை மீனாக்ஷி
      தலைவி ஆனாள். //

      ஓ.. குடும்ப ஆட்சியா!

      நீக்கு
    2. // அந்தப் பதவி வகிக்கும்போது அவள் மூக்கு
      இன்னும் நீண்டு விட்டதாகத் தோன்றும்:)// ஹா ஹா அது எப்படி? !!

      நீக்கு
    3. மீனாக்ஷியா அவர் தங்கை பெயர்? எனக்கு நினைவில் இல்லை.

      நீக்கு
    4. உங்களுக்கு ஞானம் ,எங்க ஊர்ப்பெண்ணைத்
      தெரியுமா கீதா மா. ஜி.ஞானம், ஜி .மீனாக்ஷி இருவரும் சகோதரிகள்.

      நீக்கு
  20. தேர்தல் அனுபவம் இரு தேர்தல்கள் போது. இரண்டு தடவையும்
    நாங்கள் ஓட்டுப் போட்டவர் ஜெயிக்கவில்லை.!!!!
    ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை
    அறிவிக்கும் நாட்களில் தொலைக்காட்சியில்
    சினிமா கண்டு களித்ததும்,
    ப்ரணாப் ராய் 'ஸ்விங்க்'பற்றிப் பேசியதும்
    மறக்க முடியாதது!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது சேனல்கள் பொதுவாக (வாங்கிய காசுக்கேற்ப) கூச்சல், ஜால்ரா அல்லது ஒப்பாரி.

      உண்மையில் அவர்கள் ‘லைவ்’ ஆக, ’லைவ்லி’-ஆக காணப்படுவது தேர்தல் முடிவுகள் வரும் நாளன்றைக்குத்தான். தமிழ்நாட்டின் முடிவு எதுவாக இருந்தாலும் கேட்க, பார்க்க ஜாலியாக இருக்கும் நம்ம சேனல்கள் - மே 2 அன்று! நேஷனல்/பிற மொழிச் சேனல்களும்தான்..

      நீக்கு
    2. ஆம், தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள் கிரிக்கட் பார்ப்பது போல ஒரு சுகானுபவம். எவ்வளவு விக்கெட் - எவ்வளவு ரன் என்பது போல --- !!

      நீக்கு
  21. முதல் முதலில் வாக்களித்தது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் சக்கரபாணிக்கு என்று நினைவு (எம்.எல்.ஏ).

    4வது படிக்கும்போது ஏப்ரல் ஃபூல் என்று, இங்க் பேனாவினால் சட்டைல மை தெளிப்பாங்க, அப்புறம் உருளைக்கிழங்கை பாதியா கட் பண்ணி அதில் F என்று வெட்டி அதில் மை தடவி சட்டைல அடிப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! உருளைக்கிழங்குள A F என்பதை mirror image ஆக கட் செய்து ink ல தோய்த்து சட்டையில் stamp செய்வார்கள்!

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது. எங்கள் வீட்டில் இன்னமும் பேரக் குழந்தைகள் பெரியவர்கள் ஆகவில்லை. தினமும் அவர்களுக்கு சொல்லித்தரும் ஆரம்ப பாடங்களை அவர்கள் தேர்வு என்ற ஒன்றின் போதும் அழகாக எழுதி விடுகிறார்கள். அதனால் பிரச்சனையில்லை.

    ஏப்ரல் ஒன்றாம் தேதி சின்ன வயதில் சில சமயங்களில் அறிவாளி ஆகியிருக்கிறோம் . பல சமயங்களில் பலரையும் அவ்விதமே ஆக்கியிருக்கிறோம். அப்போது இந்த நாள் கண்டிப்பாக நினைவிலிருக்கும் ஒன்று. இப்போது வருடங்கள் செல்லச் செல்ல தினமுமே ஏதோ ஒரு வகையில் கடவுளே இந்த விளையாட்டை நம்முடன் விளையாடிக் கொண்டேயிருக்கிறார்.

    தேர்தல் அனுபவங்கள் அவ்வளவாக இல்லை. சென்னையிலிருக்கும் போது வந்த முதல் தேர்தலில் வாக்குப் போடும் வயது வரவில்லை. பிறகு வந்த தேர்தலில் ஆங்காங்கே பயணம், இடமாற்றங்கள். மதுரை வந்த பின் ஒரு தடவை நான் வாக்கு தந்த கட்சி வெற்றியடைந்த சந்தோஷத்தோடு என் ஓட்டனுபவம் முடிந்து விட்டது.

    பொதுவாக எல்லா பண்டிகைகளையுமே ஒவ்வொரு மாநிலங்களிலும் விதவிதமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். தமிழ் நாடு மட்டும் கொண்டாடுவது என்றால் சித்திரை வருடப்பிறப்பை தமிழ் வருட பிறப்பாக கொண்டாடினோம்.. ஆனால் அதையே கேரளாவிலும் அன்றைய தினம் அமோகமாக கொண்டாடுகிறார்கள்.

    ஒருவேளை மாநிலங்கள் பிரிவினை நாளை இங்கு (பெங்களூரில்) நவம்பர் ஒன்றாம் தேதி என்று இருப்பதைப் போல தமிழ் நாட்டிலேயும் இப்போது ஒரு மாத நாளில் கொண்டாடுவதாக கேள்விப்பட்டேன்.(மாதம், நாள் நினைவிலில்லை) அதுவாக இருக்குமோ? அனைவரிடமிருந்தும் விபரங்கள் அறிய காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்திரை மாதப் பிறப்பு விஷுக்கனி காணும் விழாவாகக் கேரளத்தில் கொண்டாடப்படும். பட்டாசெல்லாம் வெடிப்பார்கள். விஷு புண்ய காலம் என நம்மவர்களிலும் கொண்டாடுவார்கள். என் அப்பாவின் அப்பா/தாத்தா வழியில் வடக்கே நர்மதா நதி தீரத்துக்காரர்கள். கொள்ளுப் பாட்டனார் கேரள நம்பூதிரிப் பெண்ணை மணந்து கொண்டார். அவர் தான் மேல்மங்கலத்தில் வந்து குடித்தனம் செய்ய ஆரம்பித்தார். கொள்ளுப்பாட்டி அந்தக் காலத்தில் புடைவை கட்டத்தெரியாமல் தவிப்பாங்க என்பார்கள். இந்த மாதிரிக் கலப்பு இருந்ததால் எங்க அப்பா வீட்டில் யுகாதி/விஷூ/தமிழ் வருஷப்பிறப்பு எல்லாமும் அமர்க்களமாய்க் கொண்டாடப்படும்.

      நீக்கு
  23. இப்போது என் சகோதரிகளின் பேரக்குழந்தைகள் ஆன் லைனில் தேர்வு எழுதி்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு அக்காவின் பேரன் அவன் தேர்வெழுதும் பொழுது யாரும் உள்ளே வரக்கூடாது என்பான்.

    பதிலளிநீக்கு
  24. இந்த வாரம் கேள்வி கேட்க யாருமே இல்லை போல!

    உங்கள் கேள்விகள் நன்று. என்ன பதில்கள் வரும் எனப் பார்க்கலாம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே - நீங்க எதுவும் பதில் சொல்ல மாட்டீங்க !!!

      நீக்கு
  25. நான் முதன் முதலில் ஓட்டு போட்டது ஶ்ரீரங்கம் முனிசிபாலிட்டி(அப்போது ஶ்ரீரங்கம் முனிசிபாலிட்டிதான்) எலக் ஷனில். எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருவான திருவடித்தெரு முனிசிபாலிடி பள்ளியில்தான் ஓட்டுச்சாவடி. நடக்கும் தூரம்தான். நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது சேர் (நாற்காலி) சின்னத்தில் போட்டியிட்ட வாக்காளர் கட்சி என்னை ரிக் ஷாவில் அழைத்துச் சென்றனர். அர்களுடைய செலவில் வந்துவிட்டு,வேறு கட்சிக்கு எப்படி ஓட்டு போடுவது? என்னும் நன்றியுணர்ச்சியில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் நாற்காலிக்கே வாக்களித்தேன். அவர் ஜெயித்தது வேறு விஷயம்.
    அந்த தேர்தலில் இன்னொரு விஷயம், பெண் வேட்பாளராக ஒருவர் நிற்க வேண்டுமே? அதற்கு யாரும் கிடைக்காமல் அலைந்த காங்கிரஸ் கட்சி என்னிடம் போட்டியிட முடியுமா? என்று கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன். ஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ! சந்தர்ப்பத்தை விட்டு விட்டீர்களே ! தானைத் தலைவி ஆகியிருக்கலாம் - இப்போது !!

      நீக்கு
  26. ஏப்ரல் முதல் தேதியன்று ஒரு முறை"பையன்கள் பையன்கள் சட்டையில் இங்க் அடிக்கிறார்களே நாமும் அடிக்கலாம் என்று ஒரு பெண்ணின் சட்டையில் இங்க் லேசாக அடிக்க, அவள் என் சட்டையின் மீது பயங்கரமாக அடிக்க, இரண்டு பேரும் டீச்சரிடம் செம டோஸ் வாங்கினோம். சட்டையை தோய்க்க கஷ்ட்டப்பட்டது தனி கதை. ஆண்கள் செய்யும் எல்லா விஷயங்களையும் பெண்கள் செய்யக்கூடாது என்று அன்று புரிந்தது.

    பதிலளிநீக்கு
  27. தவறு என்பது தவறி செய்வது
    தப்பு என்பது தெரிந்து செய்வது
    தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்
    தப்பு செய்தவன் வருந்தியாகணும்

    பதிலளிநீக்கு
  28. எனக்குத் தெரிந்து தமிழ் பிராமணர்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகை காரடையான் நோன்பு.
    காணும் பொங்கல் தமிழகத்தில் மட்டுமே கொண்டாடப் படுகிறது என்று நினைக்கிறேன். தமிழகத்தில் மட்டுமே பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி, காரடையான் நோன்பு, வரலக்ஷ்மி விரதம் இப்போது அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக ஆகிப் பல வருடங்கள் ஆகின்றன. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே எங்கள் குடியிருப்பு வளாகத்தில் பிராமணரல்லாதோர் பலர் வரலக்ஷ்மி விரதம் பூஜை கலசம் வைத்தும், காரடையான் நோன்பு சரடு கட்டிக் கொண்டும் கொண்டாடுவார்கள்.

      நீக்கு
  29. ஆயிற்று! "நீட்" தேர்வுக்கான காலம் வந்து கொண்டு இருக்குனு நினைக்கிறேன்.அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தேவையா? தேவை இல்லையா?

    2. மருத்துவப் படிப்புப் படிக்கும் மாணாக்கர்களுக்குப் பல்வேறு விதங்களில் தேர்வுகள் வைத்துத் தேர்வு செய்யும் வெளிநாட்டுப் படிப்பு முறை இங்கே உள்ளவர்கள் அறிவார்களா?
    3. தேர்வே இல்லாமல் மருத்துவமோ, பொறியியலோ படிப்பதைஆதரிக்கிறீர்களா?
    4. "நீட்" தேர்வுக்கு உள்ள எதிர்ப்பு ஜேஈஈ, ஐஐடி, மற்றும் சிவில் சர்வீஸ், எம்பிஏ படிப்புக்களின் தேர்வுக்கு ஏன் இருப்பதில்லை? அதில் மட்டும் தேர்வில் மாணாக்கர்களைத் தேர்வு செய்வது சரியா?
    5.உயிர்காக்கும்படிப்புக்கு மாணாக்கர்களைஅவங்க விரும்புகிறார்கள் என்பதற்காகத் தேர்வு செய்ய முடியுமா?
    6. முன்பு இருந்த படிப்புக் கட்டணம் அதிகமாக இருந்ததால் பலர் பாதியில் படிப்பை விட்டு விட்டுப் போய்விட்டார்கள். இது ஏற்கக் கூடியதா?அதன் பின்னர் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
    7. நீட் தேர்வைக் காங்கிரஸ் தன் ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வந்துவிட்டது. அப்போது அதை ஆதரித்தவர்கள் பின்னால் எதிர்ப்பது ஏன்?

    பதிலளிநீக்கு
  30. கீதா அக்கா நீங்கள் நிஜமாகவே கேள்விதான் கேட்கிறீர்களா? அல்லது அந்த சாக்கில் பி.ஜே.பி.க்கு ஆதரவு தேடுகிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ,
      கொழுக்கட்டை வெந்தால் சரி!...

      நீக்கு
    2. இந்த 'நீங்கள்' மட்டும் இல்லைனா (ப்ளஸ் றீர்க பதில் றார்க), கேஜிஜி சார் 'பதிலளிப்போம்' என்று எழுதியிருப்பார்.

      நீக்கு
    3. நான் கேட்டிருக்கும் கேள்விகள் பொதுவானவை. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டவை. அதற்குமா அரசியல் சாயம் பூசுவீர்கள்? மேலும் இந்த "நீட்" தேர்வு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே வந்து விட்டது. அறுபதுகளில் திறக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயாவின் பாடத்திட்டங்கள் மத்திய அரசின் கல்வித்துறையின் வல்லுநர்களால் முன்னரே ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதைய எதிர்க்கட்சிகள் அதை என்னமோ இப்போதைய மத்திய அரசு தான் புதிதாகக் கொண்டு வந்தது போல் ஹிந்தித் திணிப்பு என்கின்றனர். அதைப் போல் தான் நீங்களும் குற்றம் சுமத்துகிறீர்கள். தரமான மருத்துவக் கல்விக்கும் மருத்துவப் படிப்புப் படிக்கத் தகுதி வாய்ந்தவரைத் தேர்ந்தெடுக்கவும் நுழைவுத் தேர்வு அவசியம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? நம்ம அதிரா அவர்கள் ஸ்காட்லான்டில் அவர் மகனை மருத்துவப் படிப்பில்சேர்க்க எவ்வளவு தேர்வு முறைகளைக் கடந்து வர வேண்டி இருந்தது என்பதை விரிவாக ஒரு பதிவில் எழுதி இருந்தார். நீங்கள் அப்போது அந்தப் பதிவைப் படிக்கவில்லை.

      நீக்கு
    4. ஐயோ கீதா அக்கா, நான் உங்களை கலாய்த்திருக்கிறேன், அதைப் போய் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதில் சொல்கிறீர்களே? உங்களை கலாய்க்கும் உரிமை நெல்லை தமிழனுக்கு மட்டும்தான் உரியதா? ஒரு வேளை எனக்கு கலாய்க்கத் தெரியவில்லையோ? 

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!