செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

காற்றினிலே 3 / 6 :: துரை செல்வராஜு

 

முந்தைய பகுதிகள் சுட்டி : பகுதி 1, பகுதி 2 

" சமுத்திரத்தின்  வழியாக கூர்ச்சரத்தினுள் நுழைந்திருக்கும் முரடர்கள் ஏற்கனவே மேற்குத் திசை வழியே புகுந்திருக்கும் அரக்கர்களோடு சேர்ந்து கொண்டு களேபரம் செய்கின்றார்களாம்... "

" அந்த முரடர்கள் கணேஷ்வர் ஆலயத்தில் இருந்து சோமேஸ்வர் ஆலயம் வரை பூஜா விக்ரகங்களைத் தகர்த்து நாசம் செய்திருக்கின்றார்கள்..

தேசத்தின் ஐஸ்வர்யங்களைக் கொள்ளையடிப்பதுவும் ஆலயங்களைத் தரைமட்டம் ஆக்குவதுமே பிரதான லட்சியம் .. அவர்களது வாளுக்குப் பலியான சாது சந்நியாசிகள் ஏராளம் ஏராளம் என்கிறார்கள்.. ராஜ புதன கொத்தளத்தைக் கூட தகர்த்து விட்டார்களாம்.. "

அன்னத் தூவியின் மீது அமர்ந்திருந்த அரசிளங்குமரி அவந்திகா ஸ்ரீஷாந்தினியைச் சுற்றி  சாமரம் வீசியபடி  இருந்த பெண்களில் சிலர்  - அவரவரும் அறிந்திருந்த நடப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர்..


" இதெல்லாம் அந்தப் பாவிகளுக்கு எப்படி சாத்தியமாகின்றது?.. "

" பரந்து விரிந்திருக்கும் பாரத தேசத்தில் முளைத்திருக்கும் விஷக் கிருமிகள் காரணமாக இருக்கலாம்.. "

" இளவரசி சொல்வதுதான் சரி.. நமது யுத்த சாஸ்திர வியூகங்களும் கோட்டை கொத்தள ரகஸ்யங்களும் கூட மிலேச்சர்களுக்குத் தெரிந்திருக்கின்றது என்றால் - நமது ஜனங்களுக்கிடையே துஷ்டர்கள் கலந்திருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம்!... " 

" இன்னொரு செய்தியும் வந்திருக்கின்றது.. செந்தூரச் சாந்தில் திளைத்திருக்கும் தேவி ஸ்ரீ காமாக்யாவின் அங்க அடையாளத்தை இரும்பு சம்மட்டியால் அடித்துப் பிளந்து விட்டு -  அந்தப் படிமத்தின் மெய் வடிவம் தேடி வெறியுடன் அலைகின்றார்களாம்.. வீர ஸ்வர்க்கம் எய்தியவர்களின் பார்யைகளையும் இதர  கன்னிகைகளையும் ஈவு இரக்கமின்றிக் கவர்ந்து சென்று ரத்தக் களறியாக்கி விடுகின்றார்களாம்.. "

" இந்தப் பாவிகளின் பார்வை விழக்கூடாது என்பதற்காக ராஜ புதனத்து ராணிகள் தம்மைத் தாமே வாளால் மாய்த்துக் கொள்கின்றனராம்.. ராஜ கன்னிகைகளும் தங்களது கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நெய் குளித்த சரீரத்துடன் அக்னி குண்டத்தில் ஜோதியாகி விடுகின்றார்களாம்!.. "

" ஜெய் பவானீ மாதா.. ஜெய்!.. "

" ஜெய் ஷத்ரிய புத்ரி.. ஜெய்!.. "

சுற்றிலுமிருந்த இளம் பெண்கள் வீராவேசத்துடன் கூச்சலிட்டதும்

இடை வாளை உருவி ஓங்கிச் சுழற்றியவாறு எழுந்து நின்று ஓங்காரமிட்டாள் அவந்திகா ஸ்ரீஷாந்தினி..

திலகபுரி ராஜ கன்னிகையின் வதனம் கொதித்திருந்தது.. 

பெருமூச்சுடன் விம்மித் தணிந்த மேனியை மயில் தோகையால் வருடி விட்டாள்  அந்தரங்கத் தோழி மித்ரா சுபாஷினி..

பிரதர்ஷன வீணையை எடுத்து வந்து ஒரு பெண் இசைத்தாள்.. இன்னொருத்தி சந்தனத்தை பன்னீரில் கரைத்து இளவரசியின் அங்கம் எங்கும் பூசி விட்டாள் -  கொதித்திருக்கும் மேனி குளிரட்டும் என்று..

" அமருங்கள் தேவி.. அமருங்கள்!.. " - தோழிகள் சாந்தப்படுத்தினர்..

" எதிரிகள் நமது எல்லைக்குள் கால் வைக்க முடியாத படிக்கு ஸ்ரீ மகாராஜா அவர்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள்.. குதிரைகளில் வரும் முரடர்கள் இடறி விழுந்து அழியும்படிக்கு ஆழ் குழிகளை வெட்டி அவற்றுள் விஷத்தில் நனைக்கப்பட்ட முள் குறடுகளை இட்டு வைத்திருக்கின்றனர்!.. "

" அப்படியும் சாகாமல் தப்பிப் பிழைத்து வருவோர் தீப்பிடித்து ஒழியும்படிக்கு எண்ணெயில் நனைக்கப்பட்ட அக்னி அஸ்திரங்களும் கபாலம் உடைந்து சிதறும்படிக்கு கவண் கற்களும் ஆயிரம் ஆயிரமாய் கோட்டை மேல் குவித்து வைக்கப்பட்டுள்ளன!.. "

" அதற்கும் தப்பிப் பிழைத்து எவரும் வருவாரானால் போர் முகத்தில் நின்று எனது வாளை கொண்டு பிளந்து எறிவேன்.. ஜெய் பவானீ!.. "

அவந்திகா வீராவேசமாகி சூளுரைத்தாள்..

" ஜெய் ஜெய் பவானீ!.. "

" ஜெய் ஜெய் பவானீ!.. "

கன்னிகைகளின் ஜெயகோஷம் விதானத்தைத் தொட்டது..

ஆய கலைகள் அறுபத்து நான்கினில்  ஒன்றைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் அறிந்திருந்தாள் அவந்திகா..

பௌர்ணமி தோறும் - இமயத்தின் மடியில் இருக்கும் திலகபுரியில் இருந்து ஸ்ரீ உஜ்ஜயினி மாநகருக்குச் சென்று அங்கே வீற்றிருக்கும் ஸ்ரீ மகா காளேஸ்வரரையும் ஸ்ரீ மகா காளீஸ்வரியையும் வழிபட்டு வருபவள்.. அவளது வழிபாட்டிற்கு இன்று வரை ஒரு தடங்கலும் வந்ததில்லை..

கூடவே யோகி ஒருவர் சொன்னார் என்பதற்காக நாக வழிபாடும் செய்து வந்தாள். அந்த உபாசனை சித்தியான வேளையில் நாக கன்னிகை ப்ரத்யட்சமாகி கட்டை விரலின் முதற் கணு அளவிற்கு ரத்னக் கல் ஒன்றை வழங்கி வாழ்த்திச் சென்றாள்..

அதன் பயனாக அவந்திகா ஸ்ரீஷாந்தினி சினமும் சீற்றமும் கொண்டு எதிரிகளின் முன்பு நிற்கும்போது நாகவல்லியின் ரூபம் தெரியும்.. கடும் சீறலும் அவர்களுக்குக் கேட்கும்..

நாககன்னிகை வழங்கிய ரத்னக் கல்லை ஸ்வர்ணத்தில் பதித்து நெற்றிச் சுட்டியாக சிரத்தில் தரித்துக் கொண்டாள்..

அடுத்து வந்த நாட்கள் வசந்தமாகத் தான் இருந்தன.. நான்காம் நாள் ஊர் அதிரும் படிக்குப் போர் முரசு முழங்கிற்று மூர்க்கர்கள் வந்து விட்டார்கள் என்று..

பெண்களையும் கன்னியரையும் பாதுகாப்பாக இருத்தி விட்டு எதிரிகளின் மீது  வெறியுடன் பாய்ந்தனர் திலகபுரியின் வீரர்கள்..  இருநூறு கொடூரர்களும் கொஞ்சம் அடிமைகளும் என்ற அளவில் மட்டுமே இருந்த மிலேச்சர்கள் திலகபுரி சைன்னியத்தின் வியூகத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகினர்.. 

ஆனாலும் ராஜ மகளிர் வெற்றி அல்லது வீர ஸ்வர்க்கம் என்ற மனோநிலையில் இருந்தனர்..

கீழே நடப்பவை அனைத்தையும் உப்பரிகையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் அவந்திகா..

எல்லாம் மிகச் சரியாய் நடந்து கொண்டிருந்தன.. குழிகளில் விழுந்த குதிரைகளின் சத்தமும் கவண் கற்களால் மண்டை ஓடு உடைபட்ட கயவர்களின் ஓலமும் அந்தப் பகுதியை நிறைத்தது.. மிலேச்சர்கள் கொத்து கொத்தாக மடிந்து விழுந்தனர்.. 

ஆனாலும் -

விதி செய்த சதியாய் ஐந்து பேர் தப்பிப் பிழைத்து கோட்டை வாயிலுக்குள் நுழைய - தனது வாளுக்கு வந்து விட்டது வேலை என்று அவந்திகா ஸ்ரீஷாந்தினி  போர்க் கோலம் பூண்டாள்..

ரத்தத் திலகம் தரித்து வேளையில் மன்னரது வீர ஸ்வர்க்கத்தைச் சொல்லியபடி வாத்தியங்கள் அழுதன..

" சேனாதிபதி வீர்பகதூர் என்ன ஆனார்?.. தந்தையின் மெய்க் காவலர்க்கு என்ன ஆயிற்று?.. "

விடை தெரியாமலே போயின கேள்விகள்..

ஆனாலும், துக்கத்தை அடக்கிக் கொண்டாள்..

" இறுதி வரை இம்மண்ணைக் காத்து நிற்பேன்.. சென்று வாருங்கள் தந்தையே!.. " - என்று கைகூப்பி வணங்கி நின்றாள்..

காட்டெருமை போல கனைத்துக் கொண்டே அரண்மனையின் உள்ளே நுழைந்தான் கொடூரர்களின் தலைவன்.. ஆறடிக்கும் மேலான உயரம்.. ரத்தம் கசியும் மொட்டைத் தலை.. வழித்த முகத்தில் கீழுதட்டுக் கீழ் சில பிசிறுகள்..

கீழ் தளத்தின் காவலர்கள் வீர ஸ்வர்க்கம் எய்தினர் போலும்..

மேல் மாடத்தில் இளங்குமரிகளைக் கண்டதும் -  " ஹா.. " - என்று கூச்சல் அவனிடமிருந்து.... 

" ஏய்!.. "  - என்று  அவந்திகா முன்னெடுத்துப் பாய்வதற்குள் 

நாலெட்டாகத் தாவி -

மேல் தளத்துக்கு வந்தான் அவன்..

அவனுடன் இன்னும் நான்கு அரக்கர்கள்..

உடன் இருந்த சேடிப் பெண்கள் வாள் பயிற்சி பெற்றவர்களாக இருந்தாலும் இந்த முரடர்களை எதிர்த்து நிற்பதற்கு அவர்களால்  இயலவில்லை..

மேலும் மூர்க்கர்களின் நோக்கமே வேறாக இருந்தது.. அவர்களிடம் இருந்து கற்பினைக் காத்துக் கொள்வதற்காக கோட்டையின் உச்சிக்கு ஓடினர்..

" ஜெய் பவானீ!.. " வாளைச் சுழற்றி அந்த முரடனை நோக்கி வீசினாள் அவந்திகா..

விலங்குத் தோல் கொண்டு செய்யப்பட்டிருந்த ஆறடுக்குக் கவசம் அவனைக் காத்திருந்தது..

அடுத்த நொடியில் அவந்திகாவின் கழுத்து அவனது கைக்குள் இருந்தது..

துள்ளித் திமிறிய அவந்திகாவுக்கு ஆதரவாய் மித்ராவும் இதர தோழிகளும்  வாளெடுத்து வீசினர்..

பெண்களை போர்க் கோலத்தில் கண்டறியாத அவன் -  விகாரமாகச் சிரித்தான்..

" விடியற்காலை ரோஜாவைப் போல் சிரிக்கத் தான் நீ... விடிய விடிய உன் அருகில் இருந்து  ரசிக்கத் தான் நான்.. வாழத் தெரியாதவளாக இருக்கின்றாயே நீ!.. வா.. என் மார்பினை அலங்கரித்திட வா..  " - உளறிக் கொண்டே அவந்திகாவின் தலைக் கவசத்தைத் தட்டி விட்டான்..

உள் மறைவாக இருந்த ரத்னச் சுட்டி  நெற்றிக்கு நழுவி ஒளி வீசியபடி ஆடியது.. அதன் அழகில் கவரப்பட்ட அரக்கன் தலை முடியோடு அதைப் பற்றி இழுத்தான்.. 

" இளமை அழகை எல்லாம் மூடி மறைத்து இதென்ன?.. " அவந்திகாவின் போர்க் கவசத்தைப் பிடித்து இழுத்து எறிந்தான்..

அனல் பட்ட புழுவாய்த் துடித்த அவந்திகா சினங்கொண்டாள்.. ஐந்தலை அரவமாகச் சீறினாள்..

இவ்வளவு நேரமும் அவனது பிடியில் இருந்த கழுத்து - நெய் தடவினாற்போல ஆகி  வழுவழுப்புடன் நெளிந்தது.. முதல் முறையாகத்  திடுக்கிட்ட அவன் தடுமாறினான்.. பிடியைத் தளர விட்டான்..

அரக்கனின் பிடியிலிருந்து விடுபட்ட அவந்திகா அடுத்திருந்த அறைக்குள் ஓடி கதவைத் தாழிட்டுக் கொண்டாள்..

அது அவளது சயன அறை...

அவந்திகாவைத் தொடர்ந்து அவன் செல்வதற்குள் ஒரு காரியம் செய்தான்..  பற்றி இழுத்த நெற்றிச் சுட்டியை உள்ளங் கைக்குள் வைத்து நசுக்கினான்..

ஓடு பிரிந்த கடலையைப் போல் ரத்தினக் கல்  தனியானது..  அதை அப்படியும் இப்படியுமாகப் பார்த்து ரசித்த கொடூரன் தனக்குப் பின்னால் வந்தவனை நோக்கி வீசி விட்டு -  அவந்திகா தாழிட்டுக் கொண்ட அறையை நோக்கி ஓடினான்..

அவந்திகாவின் சயன அறைக் கதவுகளில் கொடூரன்  முட்டினான்.. மோதினான்.. தாழ்ப்பாள் தகர்ந்தது.. கதவுகள் திறந்து கொண்டன..

பலத்த சிரிப்பு அவனிடமிருந்து..

நடந்தவை எதையும் கவனியாமல்  - சக்கர வாள் எனப்பட்ட ஆயுதத்தைக் கை விரலில் ஏந்தி ஏனைய அரக்கர்களோடு போராடிக் கொண்டிருந்தாள் மித்ரா...

அவளது விரலில் சுழன்ற சக்கர வாளின் வேகத்தில் -  கொடூரனுடன் மேல் தளத்துக்கு  ஓடி வந்த நால்வரில் மூவர் அழிந்து போயினர்..

எஞ்சியிருக்கும் இருவரில் இவனுக்கு நேரம் வந்து விட்டது என்று, சக்கர வாளினைச் சுழற்றி வீசினாள்..  காற்றில் சுழன்று சென்ற சக்கர வாள் எதிரில் நின்றவனது விழிகளை  மூக்குத் தண்டுடன் கிழித்து விட்டு அவளிடமே திரும்பி வந்தது..

பெருத்த சத்தத்துடன் அலறினான் அவன்..

திரும்பி வந்த சக்கர வாளினை விரலில் ஏந்திய மித்ரா மீண்டும் சுழற்றி விட்டாள்.. 

குறி தவறாமல் சென்ற அது அந்தக் கொடூரனின் குரல் வளையைக் கிழித்தது.. அலறல் சத்தமும் அத்துடன் நின்று போனது..

இப்போது எஞ்சியிருப்பவன் தலைக் காயம் பட்டிருக்கும் தலைவன் மட்டுமே..

" எங்கே அவன்?.. "  மித்ராவின் விழிகள் சுழன்றன..

அதோ அவன்!.. அவந்திகாவின் சயன அறைக்குள்...

" ஏய்!.. " - அலறியபடி பாய்ந்த மித்ராவின் விரலில் சக்கர வாள் சுழன்று கொண்டிருந்தது..

(தொடரும்) 

88 கருத்துகள்:

  1. முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அக நக நட்பது நட்பு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    காற்றினிலே தொடரின் மூன்றாம் பகுதியைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    அழகிய சித்திரத்தால் அழகு செய்திருக்கும் அன்பின் திரு. கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. சித்திரச் செல்வர் அவர்களது கை வண்ணத்தால் அழகிய படம் கண்களைக கவர்கின்றது.. பிரமிக்க வைக்கின்றது.. நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. பதிவு முழுவதையும் செந்நிறத்திற்கு மாற்றி கதையின் சூழலை உணர்த்தியிருக்கும் விதம் அருமை..

    பதிலளிநீக்கு
  6. நேற்று முழுப் பொழுதிலும் பதிவில் - அன்பின் ஸ்ரீராம் அவர்களையும் KGG அவர்களையும் காண முடிய வில்லையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆறேகால் மணிக்கு கிளம்ப ஆயத்தம் செய்து கிளம்பி விடுவேன்.  அதற்குள் கமெண்ட்ஸ் வந்தால் பார்த்து விடுவேன்.  பின்னர் வரும் கமெண்ட்ஸ் அன்றைய நாளில் நேரம் கிடைக்கும்போது!  அலுவலகத்திலும் கடினமான பொழுதுகள்!

      நீக்கு
    2. நேற்று - அப்பப்போ கொஞ்சம் எட்டிப் பார்த்தேனே !!

      நீக்கு
  7. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வாழ்த்துகள்.

    எல்லோருக்கும் நோயில்லா வாழ்வு கிடைக்க
    இறையருள் சேர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

      நீக்கு
    2. // எல்லாருக்கும் இறையருள் சேர வேண்டும்..//

      வல்லியம்மா அவர்களது வேண்டுதலுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சிறப்பான கதை அம்சத்துக்கு
    அப்படியே கண் எதிர் காட்சி போல

    கௌதமன் ஜி யின் ஓவியம் மிகச் சிறப்பு.
    உருவங்களின் அளவும் ,வண்ணங்களும்

    அருமையாக வந்திருக்கின்றன. மனம் நிறை
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. என்ன ஒரு மஹா கொடூரமான நிகழ்வு!!

    சரித்திரம் இப்படி இருந்திருக்கிறது என்று
    நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரித்திரத்தின் பக்கங்கள் இதை விடவும் கோரமானவைகளாகத் தான் இருக்கின்றன..

      வளங்களைக் கொள்ளையிட வந்தவர்களால் இந்த நாடு அடைந்த துன்பங்கள் கொஞ்சமல்லவே..

      தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றியம்மா..

      நீக்கு
    2. ஆமாம் பா.

      உணர முடிகிறது. கோவில் தோறும் இந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் நொந்தது நினைவில்.
      அதனால் தான் இப்போது நிறைய துன்பங்கள்
      விளைகின்றன.

      நீக்கு
    3. // அதனால் தான் இப்போது நிறைய துன்பங்கள்
      விளைகின்றன..//

      உண்மை.. உண்மை..
      தங்களது கருத்திற்குத் தலை வணங்குகின்றேன்..

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. வேறு பதிவுக்கான பின்னூட்டத்தை
    இங்கே பதிந்து அதை நீக்கி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. அவந்திகாவும் மித்ராவும் வெற்றிபெற அந்த பவானி மாதாவே
    அருள வேண்டும்.

    அசர வைக்கும் பிம்பங்களை வர்ணித்திருக்கிறார்
    துரை.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  13. துரை அண்ணாவின் கதை விறு விறுப்பாக அங்கிங்கு திரும்பாதபடி வாசிக்க வைத்தது. மிக நன்றாக எழுதியிருக்கிறார். காட்சிகள் விரிகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. கௌ அண்ணா படம் அசத்திட்டீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  15. முந்தைய பகுதியில் நாகத்தின் புஸ் புஸ் சத்தம் கேட்டதன் அர்த்தம் இப்பகுதியில் விளங்கியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் முடிச்சுகள் எல்லாம் ஒவ்வொன்றாக விளங்கும்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் அமைதியும் நிம்மதியும் மேலோங்கி ஆரோக்கியத்துடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அமைதியும் நிம்மதியும் மேலோங்கி ஆரோக்கியத்துடன் வாழப் பிரார்த்திக்கிறோம்..//

      அப்படியே பிரார்த்திப்போம்..

      நீக்கு
  17. சரித்திரத் தகவல்கள் இது எந்தக் காலத்துக் கதை என்பதைக் காட்டுகிறது. அருமையான விறுவிறுப்பான ஓட்டத்துடன் செல்கிறது கதை/சம்பவம். அடுத்து என்ன என மனம் பரபரக்கிறது. கதையின் ஓட்டத்துக்கு ஏற்ப இளவரசியின் சித்திரம். மிக அழகான இளவரசியின் நெற்றி ரத்தினக்கல் பளீர் என ஜொலிக்கிறது. கூடவே இருக்கும் தோழிகளின் அழகுக்கும் ஈடு இணை இல்லை. கதையில் ஆழ்ந்து போய் ஓவியம் வரைந்திருக்கும் திரு கௌதமனுக்கும் அந்தக் கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் தம்பி துரைக்கும் வாழ்த்துகள்.பாராட்டுகள். பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. சம்பவம் நடந்த காலத்தை யூகித்துக் கொண்டீர்கள்..
      திரு. கௌதம் அவர்கள் எந்த அளவுக்கு கதையுடன் ஒன்றி விட்டார் என்பதை ஓவியம் காட்டுகின்றது..

      அன்பின் வருகையும் கருத்தும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. //

      நானும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    மூன்றாம் பகுதியான இன்றைய கதை விறுவிறுப்பாக நகர்கிறது. படிக்கும் போதே நம்முள்ளும் வீராவேசம் தொற்றிக் கொள்ளும்படியான எழுத்துக்களை ஆழ பதிந்துள்ளீர்கள். இளவரசி கண்டிப்பாக அந்த மூர்கனை கொன்று வெற்றியடைந்தது விடுவாள். அடுத்தப் பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இன்றைய கதைக்குப் பொருத்தமாக அழகு ததும்பும் இளவரசியையும், பணிபுரியும் சேடிகளையும், ஓவியமாக்கிய சகோதரர் கௌதமன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஓவிய பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.. //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. கதை நன்றாக இருக்கிறது. சரித்திர கதைகளும் அருமையாக எழுதுகிறார் சகோ.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    அவந்திகா, மித்ராவின் வீரத்தை சொன்ன விதம் அருமை.
    அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  22. கதைக்கு பொருத்தமாக படம் வரைந்து இருக்கிறார் கெளதமன் சார்.
    நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்து.. //

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  23. சிந்தனை வழி நடத்திச் சென்று எழுத்துக்களாய் வரிகளாய் உருக் கொண்டது தெரிகிறது. இடையில் உறுத்தாமல் காட்சி விவரிப்புகளும். இது வரை இல்லாத வித்தியாசமான தம்பியின் படப்பிடிப்பு எழுத்துக்கள்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி அண்ணா..

      // இது வரை இல்லாத வித்தியாசமான தம்பியின் படப்பிடிப்பு எழுத்துக்கள்..//

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. இன்னும் விவரித்து எழுதலாம்.. சிறு தொடர் என்பதை மீறி விடுமே என்ற எண்ணம்.. நமது நண்பர்கள் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சந்தேகமும் இருந்தது..

      பார்க்கலாம் அடுத்த முறை...

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. போர்க்காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற வர்ணனை அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  25. தஞ்சை கரந்தை பூக்குளத்தில் ஸ்ரீ வேதவல்லி உடனாகிய ஸ்ரீ நாகநாதர் திருக்கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் இருக்கும் பேறு பெற்றிருக்கின்றேன்...

    மதியத்திற்கு மேல் சந்திப்போம்.

    ஓம் சிவாய நம..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிகளில் என் கண்வரும் நானும் கலந்து கொள்வோம். மாயவரத்தில். கோயில்களிலும், வீடுகளிலும் நடக்கும். சில இடங்களில் பாடல்களுக்கு விளக்கம் சொல்வார்கள் என் கணவர்.

      ஊருக்கு வந்த பின் நல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
    2. மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  26. மித்ரா தேவியை மித்ராவாக்கியதை வாசிக்கும் பொழுது நெருடலாக உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளவரசியின் தோழி மித்ரா சுபாஷினி.. சுருக்கமாக மித்ரா எனச் சொல்லியிருக்கின்றேன்..

      நீக்கு
    2. மித்ரா என்பது ஆணின் பெயர் போல தோன்றுவதால் அந்த நெருடல்..

      நீக்கு
    3. மித்ரன் - தோழன்..
      மித்ரா - தோழி..

      சுதேசமித்திரன், சங்கமித்ரா - எனும் பெயர்களைத் தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை..

      மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
  27. இந்த மாதிரி கதைகளை வாசிக்கும் பொழுது சாண்டில்யன் தவிர்க்கவே முடியாமல் பின்புலத்து நினைவாக மனசில் உலா வந்து கொண்டே இருக்கிறார். அந்தளவிற்கு அவர் சாதனை என்பதற்காக இதைச் சொல்லத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்மைதான் அண்ணா..

      ஜாம்பவான்களின் சாயல் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்..

      நீக்கு
  28. தம்பி துரை.. தங்கள் கருத்துரைக்கு நன்றி என்ற வழக்கமான பின்னூட்டங்களுக்கான உங்கள் பதிலைத் தவிர்த்து உங்கள் மனதில் அந்தந்த சமயங்களில் தோன்றுவதை பின்னூட்டங்களுக்கு பதிலாக்கினால்
    பின்னுட்டமிடுபவர்களுக்கும் தனிப்பட உற்சாகம் ஏற்படும். கதை எழுதியவர் வாசகர்களுடன் தன் கருத்தைப்பரிமாறிக் கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பும் இதான்.
    அதை இழக்காமல் உபயோகப்படித்திக் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. தாங்கள் சொல்வது சரிதான்.. பல சமயங்களில் அப்படித்தன் செய்கின்றேன்.. இருப்பினும் எல்லாமும் கைத் தொலை பேசியில் தட்டச்சு செய்வது மிகவும் சிரமமாக இருக்கின்றது..

    தங்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  30. கதையின் இந்தப் பகுதியும் ஓவியமும் சிறப்பு. கதையின் அடுத்த பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. சரித்திரப் பின்னணி கொண்ட மர்ம தொடர்! அழகாகக் கொண்டு செல்கின்றீர்கள் துரை செல்வராஜு சார்!

    அடுத்த என்ன அறியும் ஆவல். தொடர்கிறேன். எப்படித் தற்போதையதோடு பொருத்தி முடியப் போகிறது என்பதை அறிய ஆவலுடன் தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      முதலில் திட்டமிட்டிருந்த கதையின் போக்கு வேறு விதமானது..

      முதல் அத்தியாயத்தை எழுதிய பிறகு அமானுஷ்யமாக சில வரிகளில் சொல்லப்பட்டது இந்தச் சம்பவம்.. அப்போது இரவு மணி பதினொன்று..

      மறுநாள் இளவரசி அவந்திகா ஸ்ரீஷாந்தினியும் தோழி மித்ரா சுபாஷினியும் ஒளியுருவம் காட்டினார்கள்..

      வித்தியாசமான அனுபவம்..
      தங்கள் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  32. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!
    விறு விறுப்பாக செல்கிறது வீர மகளீரின் சரித்திரக் கதை! இத்தனை துன்பங்களை கடந்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர். மித்ராவும், அவந்திகாவும் வெல்வதற்கு ஜெய் பவானி துணை நிற்பாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நல்வரவு..

      மேற்கத்திய கொள்ளையர்களின் படையெடுப்புகளால் வட தேசத்து மக்கள் அனுபவித்த கொடுமைகள் கல்லையும் உருக்குவன... அதிலும் பெண்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் ஆயிரம் ஆயிரம்..

      அதற்கெல்லாம் காரணம் நம்மிடையே அன்று ஒற்றுமை இல்லாதது தான் என்று சொல்லப்பட்டாலும் அதுவே முழு முதற் காரணம் அல்ல..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க பாரதம்..

      நீக்கு
    2. நாங்கள் சௌராஷ்ட்ரா இனத்தை சேர்ந்தவர்கள். முகலாயரின் படையெடுப்பிற்கு பயந்து, தங்கள் பிள்ளைகள், பெண்கள், தாய், தந்தையர்கள் மற்றும் , கொண்டு வருவதற்கு முடிந்த பொருட்களைக் கொண்டு , வடக்கிலிருந்து கிளம்பி, பல நாட்கள் நடையாய் நடந்து, நம் தமிழகம் வந்து சேர்ந்திருக்கின்றனர் . தங்கள் கைத்திறனும், அறிவும் கொண்டு பல ஊர்களில் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளனர். பாசமாய் பட்டுநூல்காரர்கள் என இங்கு எங்களை அழைக்கிறார்கள். பயண வசதிகள் இல்லாத அந்த காலத்தில், எப்படி இவ்வளவு தூரம் பயணம் செய்தனர் என்பதை நினைக்க மலைப்பாக உள்ளது. தங்களின் பெண்களையும், தன்மானத்தையும் காத்துக் கொள்ள கடும் பயணத்தை தவிர வேறு வழி இல்லாமல் இங்கே வந்து சேர்ந்திருக்கின்றனர். அந்த சோமநாதரின் ஆசியால், தமிழகம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து நல்ல வாழ்வும் கொடுத்துள்ளது. இன்று எங்கள் சமூகத்தினர் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை! எல்லாம் அந்த இறைவனின் கருணை அன்றி வேறொன்றுமில்லை!

      நீக்கு
    3. தங்களுக்கு நல்வரவு..

      படிக்கும்போதே நெஞ்சம் கலங்குகின்றது.. இப்படியான கொடூர நிகழ்வுகள் பற்பல..

      எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தான் நமது வாழ்க்கைப் பயணம்..

      ஆனாலும் இன்னமும் உண்மையை மறைத்துக் கொண்டு அன்பு அமைதி இதெல்லாம் அந்நிய படையெடுப்புக்குப் பிறகு தான் நமது நாட்டிற்கு வந்ததாக பினாத்திக் கொண்டு திரிகின்றன சில ஜந்துகள்..

      நல்லோர் தம் வாழ்வில்
      இறைவன் நலம் அருள்வானாக!..

      நீக்கு
  33. சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தது.....அய்யோ அப்புறம் ??? திகில்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அப்புறம்?..//

      அடுத்தடுத்த வாரங்கள் அதற்காகத் தானே!..

      தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!