பானுமதி வெங்கடேஸ்வரன்:
நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று ஒரு தியரியும், எதிர் காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து அந்த மாறுதலுக்கு தயாராகிறவர்களே சந்தோஷமாக இருக்க முடியும் என்று ஒரு தியரியும் இருக்கிறது. இந்த இரண்டில் எதை பின்பற்றுவது?
# கனமான கேள்வியாகக் கேட்டு விட்டீர்கள். மிக நீண்ட பதில் தராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
சந்தோஷம் என்ற ஒன்றுக்கு எதிராக சோகம் இருக்கும். எதோ ஒன்று சந்தோஷம் தருமானால் அது இல்லாத போதோ அல்லது எதிரான ஒன்று வந்தாலோ சோகம் / வருத்தம் உண்டாகிறது . இந்த இரண்டுமே வெளியிலிருந்து வருவன. சந்தோஷம் வந்தால் " மீண்டும் வரவேண்டும் " என்றோ " இன்னும் அதிகம் வேண்டும் " என்றோ மனம் கேட்கிறது . சோகம் என்றால் " இது விலக வேண்டும் " "இனி வரக்கூடாது " என நினைக்கிறோம். இது மாதிரி நினைப்புகள் ஏற்பட ஆசை வெகுளி மயக்கம் பொறாமை பாசம் ஆகியவை காரணமாகின்றன . இவற்றை ஒதுக்கி நிர்மலமான மனத்துடன் இருந்தால் சந்தோஷம் வருத்தம் இரண்டுமே இல்லாமல் அமைதியான நிலை ஏற்படும். இதுவே உன்னதமான நிலை ஆகும். எதற்கும் சரியான புரிதலோடு, ஒரு எதிர் வினையாகச் செய்யாமல் தகுந்த செயல்பாட்டுடன் எதிர்கொள்வது சரியான நிலை. கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் தகுந்த நடவடிக்கை எடுக்க ஒரு வழிகாட்டியாக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர உணர்ச்சிப் பெருக்கை உண்டாக்க விடக்கூடாது.
உணர்ந்து நடப்பது வேறு உணர்ச்சி வசப்படுவது வேறு. எதனாலும் ஒரு பார்முலா வாக இருந்தால் பயனில்லை. உலக இயல்பையும் நிலையாமையையும் அறிந்துகொண்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு அமைதி சாத்தியம்.
& நிகழ் காலத்தில் வாழ்வோம் - சரி. ஆனால் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்து, அதற்கேற்ப திட்டம் இடுவதை ஏன் ஒதுக்க வேண்டும்? விழித்திருக்கும் எல்லா நேரங்களிலுமே கடந்த காலம் + எதிர் காலம் பற்றிய சிந்தனையே இருக்கக் கூடாது என்று ஏன் நினைக்கவேண்டும்? ஒரு நாளில் சில நிமிடங்களாவது கடந்த காலங்களில் நாம் பெற்ற அனுபவங்களை, அதனால் நாம் கற்ற பாடங்களை நிகழ் காலத்தில் சிந்தித்து, எதிர் காலத்தில் எப்படி வாழ்வது என்று திட்டமிடலாம்
= = = = =
எங்கள் கேள்விகள் :
1) நம் மக்கள் பொதுச் சொத்துகளுக்கு , கல்வி நிறுவனங்களுக்கு என்ன காரணமானாலும் சேதம் விளைவிக்கக்கூடாது என்ற மனப்பாங்குபெற பெற்றோர் ஆசிரியர் பள்ளி அரசு என்ன செய்ய வேண்டும் ?
2) வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் வளர்க்க நினைக்கும் செடிகள் என்னென்ன ?
3) ஏற்கெனவே உங்களுக்கு எழுத, படிக்க, பேசத் தெரிந்த மொழிகளோடு புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன மொழி கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள்? ஏன்?
4) நீங்கள் சமீபத்தில் படித்த (+ உங்களுக்குப் பிடித்த) அல்லது நீங்கள் கண்டுபிடித்த சமையல் குறிப்பு எது?
5) உங்கள் கனவில் அடிக்கடி வருகின்ற பிராணி எது?
= = = = = =
படம் பாருங்க; கருத்து எழுதுங்க!
1)
2)
3)
= = = = =
அனைவருக்கும் வணக்கம்
பதிலளிநீக்குவணக்கம், வாங்கோ!
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொற்று முற்றிலும் நீங்கி அனைவரும் ஆரோக்கிய வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்தனைகள்.
நீக்குநிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டே தான் எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் நினைக்கிறோம். கடந்ததை மறப்பது எல்லோருக்கும் எளிதல்ல. அதே போல் எதிர்காலத்திட்டங்கள் போடாதவரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகளைத் தவிர்த்து.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குகுட்டிப்பாப்பா மேல் எல்லாம் விழுந்துடப் போறது. பாப்பா எட்டி இழுத்துடும் போல!
பதிலளிநீக்கு:)) கருத்துரைக்கு நன்றி.
நீக்குஜன்னல் வழியே பூனையார் பார்ப்பது என்னவோ? படம் நிஜம் தானா?
பதிலளிநீக்குமூன்றாவது படமும் நிஜமானு கேட்க வைக்கிறது. ஆற்றில் இம்புட்டுத் தான் தண்ணீரா?
அவர்களைத்தான் கேட்கவேண்டும் !!கருத்துரைக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அருமை.
எதிர்காலத்தில் நாம் இருப்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று. ஆனாலும், எதிர்கால கனவுகளோடு, கடந்தகால இன்ப துன்பங்களின் சுமைகளை சந்தோஷ நினைவாகவோ இல்லை, பட்ட காயங்களின் வலிகள் தரும் சோகங்களுடனோ மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் நம்முடனே வந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்திலும், அதன் அடுத்த நொடி என்பது நம்முடன் கண்டிப்பாக இல்லை. ஆனால், இப்படியான கடந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்தபடி நிகழ்காலத்தில் தீடிரென கிடைக்கும் சிறிது சந்தோஷங்களையும் தொலைக்கிறோமோ என சிலசமயம் எண்ணுவதுண்டு. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1. பொது சொத்துக்கள் என்பவை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செலுத்தும் வரியால்தான் நமக்கு கிடைக்கின்றன என்பது பள்ளியிலும், ஊடகங்களில் அரசாங்கத்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டும்.
பதிலளிநீக்குஆம். கருத்துரைக்கு நன்றி.
நீக்கு2. ஒரு தென்னை மரம், ஒரு மாமரம், ஒரு நெல்லி மரம், பவள மல்லி, மகிழம்பூ இவைகளை வளர்க்க ஆசை. இடம் போகாததால் மணி ப்ளாண்ட், துளசி, பட்டன் ரோஸ், அவ்வப்பொழுது வெந்தயம், கொத்து மல்லி இவைகளை வளர்க்கிறேன்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குபெங்களூரில் வசிப்பதால் கன்னடம் கற்க ஆசை.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு4. என்னுடைய பிளாக்கிங் எழுதலாம் என்றிருக்கிறேன். அங்கே வாசித்துக் கொள்ளுங்கள்.
பதிலளிநீக்கு5. பாம்பு, புலி, யானை இவை வந்திருக்கின்றன, அடிக்கடி வராது.எப்போதாவது வரும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபதில் நிறைய யோசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குகடைசி படம் எடுத்தவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
பாராட்டுவோம். கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅபுதாபியில் இருந்தபோது சைனா மொழி கற்க வேண்டும் என்ற ஆசை.
பதிலளிநீக்குகாரணம் எனக்கு தெரிந்தவரை ஓர் வினோதமான வடிவம், மட்டுமல்ல சவாலான விடயமும்கூட... ஆகவே ஆசை
இங்குதானே இருக்கிறோம் கற்று விடலாம் என்ற சோம்பல் மட்டுமல்ல, வாய்ப்புகளும் அமையவில்லை.
திடீரென்று கேன்சலில் வரவேண்டிய நிலைப்பாடு.
இன்னும் அந்த தாகம் இருக்கிறது ஜி.
வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் ஆயுளும் இருந்தால் நிச்சயம் கற்பேன்.
வாய்ப்பு கிடைக்கட்டும். 给它一个机会。
நீக்குGěi tā yīgè jīhuì.
ஒரு ஆங்கில சொலவடை The past is dead. Future is uncertain. Live in the present.
பதிலளிநீக்குகாலம் என்பதே மாயை, நிகழ்காலம் என்பதுவும் இல்லை. வரும் காலம் என்பதுவும் இல்லை. இது நவீன விஞ்ஞான கோட்பாடு.
பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன் இருந்த அண்ட வெளி என்று நாசா வெளியிட்ட புகைப்படங்களை அண்மையில் பார்த்திருப்பீர்கள். பில்லியன் ஒளி வருடங்கள் என்பது கற்பனை செய்ய முடியாத தூரம். அது எப்படி இப்போது காண முடியும். அண்ட வெளியில் காலம் என்பதுவும் கணிக்க முடியாதது. ஒருவருக்கு நிகழ் காலம மற்றவருக்கு கடந்த காலம். வேறு ஒருவருக்கு அது வரப்போகும் காலம். காலத்தை ஒரு reference point வைத்தே கணக்காக்க முடியும். இந்தியாவில் பகல், அமெரிக்காவில் இரவு என்பது போன்று.
குழப்பம் ஆக இருக்கிறதா!
ஆகவே காலத்தை பற்றி கவலைப்படாமல் இன்று பொழுது தீர்ந்தது என்று காலத்தை ஓட்டுகிறேன்.
Jayakumar
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமூன்றாவது கேள்விக்கு பதில்: அவசியம் என்றால் எந்த மொழியையும் கற்க முடியும். மிருகங்களின் மொழி உட்பட.
பதிலளிநீக்குநான்காவது கேள்விக்கு பதில் பச்சை மிளகாய் அல்வா
மூன்றாவது படம் டைவ் அடிப்பது. சபாஷ் சிறந்த ஷாட். என்று சொல்ல வைக்கிறது. நிழலும் நிஜமும் (முடி நீரில் அமிழ்ந்தும் நிழல் அசைய வில்லை பாருங்கள்) சந்தித்ததைப் பிடிப்பது கடினம்! வியக்க வைக்கிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்...
பதிலளிநீக்குஆஹா... நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்...
போடா வருவது வரட்டும் - என்பவனே
நல்ல ரசிகன்...
அவன் இவனே
இவன் அவனே...
அட இன்றும் இல்லை நாளை இல்லை - இரவில்லை பகலில்லை - இளமையும் முதுமையும் முடிவும் இல்லை...
கருத்துரைக்கு நன்றி.
நீக்குதிண்டுக்கல் அவர்களின் நல்லதோர் பதில்.
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்..
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
வாழ்க வையகம்..
வணக்கம், வாழ்க !
நீக்குஇன்று கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது..
பதிலளிநீக்குஅறிவுஜீவிகளுக்கான பதிவு..
:))))
நீக்குவானில் மிதக்கும் மேகம் போலத் தான் எல்லாமும்..
பதிலளிநீக்குமேகத்திற்கு இலக்கு இருக்கின்றதா.. எது?..
யோசிக்க வேண்டிய விஷயம். கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமூன்று படங்களும் அருமை. ரசித்தேன்.
"கடந்தகாலத்தில் அந்த சிறு குழந்தையின் கைவசம் இருக்கும் கேக்கை எடுக்கும் எட்டாத முயற்சியின் பலனாக , அவளே நன்கு வளர்ந்து விட்ட எதிர்காலத்தில் ஒரு சவாலாக தன் திறமையை இடுப்பளவு தண்ணீரின் ஆழத்தில் அற்புதமாக டைவ் அடித்து காட்டுகிறாளே..... அபாரம்... இந்த நிகழ்காலத்தில் என் முயற்சியால் இருகாலூன்றி எழுந்து நின்று இதையும் ரசித்துப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை கிடைக்க வைத்த அந்த இறைவனுக்கு நன்றி... " என்கிறதோ அந்த பூனையார்.
அருமையான படங்களுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா! கருத்துரைக்கு நன்றி.
நீக்கு2) ரோஜாச் செடிகள் . ஓக்கிட். நமது வெப்பத்துக்கு சிலகாலம் தான் நிற்கின்றன பின் பட்டுப்போய் விடுகின்றன. தொடர்ந்து வளர்க்க விருப்பம்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஉங்கள் கேள்விகளுக்கு - 1 - பொதுநல பொறுப்புணர்வு, சமூகப் பொறுப்புணர்வு சிறு வயதிலிருந்தே மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் அல்லது உணரும் பக்குவம் வேண்டும்.
பதிலளிநீக்குஅரசும் பள்ளியும் அப்படிச் சேதம் விளைவிக்கும் மாணவர்களோ அல்லது பொது மக்களோ யாரானாலும் வலுவான தண்டனை விதிக்க வேண்டும் ஆனால் இது எல்லாவற்றிற்கும் மிக முக்கியம் ஊழலில்லா பொறுப்பான அரசாங்கம்.
கீதா
ஆம். கருத்துரைக்கு நன்றி.
நீக்கு2. வளர்க்க நினைக்கும் லிஸ்ட் பெரீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீய்சு....ஆனால் நிலம் தான் இல்லை...எனக்குப் பல் வகை பயிர் - காய்கறிகள் சாகுபடி, தோட்டம் ஆர்வம் அதிகம்...மாடித் தோட்டம் செய்யலாம் அதுக்கும் சொந்த இடம் வேண்டுமே..
பதிலளிநீக்குகீதா
அடடா... பேசாம எங்க வீட்டு மொட்டை மாடில காய்கறித் தோட்டம் அமைச்சுத் தந்துடுங்களேன் கீதா ரங்கன்(க்கா). புடலை, கத்தரி, வெண்டை, சௌசௌ, கீரை வகைகள், ...... லிஸ்ட் ரெடி. எப்படிப் பண்ணறதுன்னுதான் தெரியலை
நீக்கு:)))
நீக்குபோட்டுட்டா போச்சு....அதுக்கு முதல்ல் நல்ல எரு வேணும். மாடித் தோட்டம் எபி லயே ஒரு பதிவு வந்ததே நெல்லை....
நீக்குகீதா
மாடித்தோட்டம் போடணும்னா ராமச்சந்திரன் உஷா வை அணுகுங்கள். எனக்குத் தெரிந்து அவர் சென்னை வீட்டில் மாடித்தோட்டமும், கோவை வீட்டில் வீட்டைச் சுற்றித் தோட்டமும் போட்டு வெற்றி கண்டவர். நல்ல அனுபவசாலி. எனக்குத் தெரிந்து பத்து வருஷங்களுக்கும் மேல் போட்டுக் கொண்டிருக்கார். இப்போது மீண்டும் சென்னை வீட்டுக்கே வந்துவிட்டபடியால் மாடித்தோட்டம் தான். முகநூலில் தான் அதிகம் வரார். முன்னால் "நுனிப்புல்" என்னும் பெயரில் வலைப்பக்கம் வைத்திருந்தார். அதில் எழுதுவார். இப்போதெல்லாம் வலைப்பக்கம் வருவதில்லை. அறிவு ஜீவி ரகம். எனக்குப் பதினைந்து வருஷங்களுக்கும் மேல் சிநேகிதி. ஆனால் நேரில் பார்த்ததில்லை. fujairahusha@gmail.com (ramachandranusha)
நீக்குfujairahusha@gmail.com
எனக்கு அம்பத்தூர் வீட்டில் இருக்கையில் மாடித்தோட்டம் போடரொம்ப ஆசை. ஆனால் அதை எங்க மாடிக் கூரை தாங்குமானு இவருக்கு சந்தேகம். அதனால் வரும் இடர்களை எதிர்கொள்ளப்பயந்து கொண்டு போடவில்லை. இப்போ இங்கே அதெல்லாம் முடியாது. :(
நீக்குஎருவெல்லாம் அவங்க வீட்டிலேயே தயார் செய்வாங்க.
நீக்கு3. ஹிஹிஹி இங்கு வந்து கன்னடம் கற்க நினைத்து.....ஹிஹிஹி...
பதிலளிநீக்கு4. சமீபத்தில்?...அப்படி என்றால் வீட்டில் தான் உல்டா நிறைய நடக்குமே நிறைய புது புதுசா ஏதேதோ உருமாறும்...ஹாஹாஹா...
சில வருடங்களாகவே.... நாம் தினமும் செய்யும் குழம்பு, ரசம் வகைகள் எல்லாமே நொடியில் ரெடி தயாரிப்புகள், (ரசம், மோர்க்குழம்பு, மணத்தக்காளி, சுண்டைக்காய் குழம்பு, பாகற்காய் பிட்லை உட்பட) தயாரிப்பு என்றதும் வியாபாரம்லாம் இல்லை....என் மகனுக்குத்தான்.....
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு5. கனவே அரிது...
பதிலளிநீக்குகீதா
உங்க மாதிரி கடுமையா உழைத்தால், படுத்த உடனே தூக்கம் வந்துடும். ஆனா என்னை மாதிரி ஆட்களுக்கு கனவுதானே வருது?
நீக்குகனவில் வந்தவர் யார் என்று சொல்லலாமே!
நீக்குபடம் 1 - கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைனு சொல்லுவாங்க இங்க கைக்கே எட்டலையே...
பதிலளிநீக்குபடம் 2 - இந்த அம்மா என்னை இப்படி வீட்டுல விட்டுட்டு எங்க போனாங்க எப்ப வருவாங்க்ளோ...வந்துட்டாங்களோ வண்டிச் சத்தம் கேட்குதே...
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடம் 3- அசாத்தியாமன புகைப்படம். செம ஷாட். அதன் நிழல் கூட வந்திருக்கிறது!!! எடுத்தவருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅப்பெண் டைவ் அடிக்கும் போதும் கூட ஜாக்கிரதையாகத் தன் குட்டைச் சட்டையைப் பிடித்துக் கொண்டு டைவ் அடிக்கிறார் அது எப்படி சாத்தியமானது என்பது ஆச்சரியமே நல்ல பயிற்சி இருக்க வேண்டும்.
நீராங்கனையோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
ஆம்! கருத்துரைக்கு நன்றி.
நீக்குநிகழ்காலச்சிந்தனைகள் நுண்ணியதாக வும் (at micro level) , செயல் படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். வருங்கால சிந்தனைகள் சற்று பரந்த எண்ணங்களாக ( at different macro levels for a 5 ,10 and 15 year horizon) இருப்பது நலம். இதை மாற்றி செய்யும் போது,சந்தர்ப்ப இழப்புகளும்,தேவையற்ற கவலைகளும் முறையே நிகழ்கின்றன.
பதிலளிநீக்கு...........
பெற்றோரும் மற்றோரும் வன்முறை சம்பவங்களை தடுக்க செய்யக்கூடியது ஏதும் இல்லை என்பது என் கருத்து. காவல் துறை ஆட்சியாளர்களுக்கும் , உள்ளுர் சமூக விரோதிகள், கட்சிக்கார்ர்களின் ஏவலாளிகளாக செயல்படும் அவலம் மாற வேண்டுமெனில் சட்டம் ஒழுங்கு மத்திய பொறுப்பாக மாறி, காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட வேண்டும்.
நல்ல கருத்து. கருத்துரைக்கு நன்றி.
நீக்குநிகழ்காலத்தில் வாழ்வதே நல்லது என்றாலும் எதிர்காலம் என்பது நிலையானது இல்லை என்றாலும் அதனாலேயே எதிர்காலத்தைப் பற்றிய சில திட்டங்கள் அவசியம், நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்காகவாவது.
பதிலளிநீக்குகடந்த காலம் பற்றிய நல்லதை மட்டுமே அசை போட வேண்டும். இல்லை என்றால் நிகழ்காலம் தொலைந்துவிடும்.
துளசிதரன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வியும் பதிலும் அருமை.
பதிலளிநீக்குகடந்த காலத்தை மறக்க முடியாமல் நிகழ்கால மகிழ்ச்சியை முழுமையாக ரசிக்க முடியாமல், வருகாலம் எப்படி இருக்குமோ! என்ற நினைப்பும் இப்போது இருந்து கொண்டுதான் இருக்கிறது. நிகழ்காலத்தில்வாழு, இன்றைய பொழுதுக்கு நன்றி சொல்லி நாளை பொழுதை இறைவனிடம் விட வேண்டும் என்று நம் முன்னோர் மிக எளிதாக சொல்லி சென்று விட்டார்கள்.
கடைபிடித்தால் மகிழ்ச்சிதான்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமாடி வீடாகவே இருக்கிறது , இப்போது என் வாழ்க்கை. பாலகனியில் நிறைய செடிகள் வைத்து இருந்தேன். ஊருக்கு போகும் போது தம்பி, தங்கைகளிடம் கொடுத்து விட்டேன்.
பதிலளிநீக்குமுன்பு கீழ் வீட்டில் இருந்த போது தோட்டத்தில் எனக்கு பிடித்த செடி, கொடிகள் வளர்த்தேன்.
இப்போது கற்பூரவல்லி, துளசி, அருகம்புல்,மணிபிளான்ட் , கற்றாழை இருக்கிறது. ஆசை படும் செடிகள் வளர்க்க ஆசை தான். வித விதமான செம்பருத்தி. வித விதமான ரோஜாக்கள் வைக்க ஆசைதான்.நம் தோட்டத்தில் பூத்த பூக்களை கடவுளுக்கு வைத்து வணங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி சொல்லி முடியாது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//நம் தோட்டத்தில் பூத்த பூக்களை கடவுளுக்கு வைத்து வணங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி சொல்லி முடியாது.// Yes100%
நீக்கு