புதன், 6 ஜூலை, 2022

பிடித்த நடிகர்கள் யார் என்று கேட்டால் ..

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

பிடித்த நடிகர்கள் யார் என்று கேட்டால் பெரும்பாலானோர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என்று ஹீரோக்களின் பெயரைத்தான் சொல்கிறார்களே தவிர, சிறப்பாக நடிக்கும் குணசித்திர நடிகர்களை குறிப்பிடுவதில்லையே ஏன்?

# "முன்னணி நடிகர்களில் யார் ?" என்று கேட்பதாக எடுத்துக் கொண்டு பதில் சொல்கிறார்கள் போலும் . தான் மிக விரும்புகிறவரைத்தானே சொல்லியாக வேண்டும் ? அவர் பிரபல நட்சத்திரமாக இருந்துவிட்டால் என்ன செய்வது ?

& ஒரு மாற்றத்திற்காக, பிடித்த 'நடிகைகள்' யார் என்று கேட்டால் என்ன சொல்வார்கள்? 

சிறு வயதில் ஒரு மின்விசிறிக்கடியில் அடித்து புடித்துக் கொண்டு படுத்து உறங்கிய பொழுது ஏ.சி.ரூமில் தூங்க முடியாதா என்று ஆசைப்பட்டவர்கள், ஏ.சி.ரூம் கிடைத்ததும் "சின்ன வயதில் சந்தோஷமாக இருந்தோமே" என்கிறார்களே?

#  வசதிகள் வேறு, மகிழ்ச்சியான மனநிலை என்பது வேறு . வெளிப்புறத்தே உள்ள காரணங்களால் அகத்தே மகிழ்ச்சியோ நிறைவோ ஏற்படாது என்பது நமது ஆன்மீகக் கோட்பாடு .

இல்லாதது எதுவும் மனக்குறை தரும் இருப்பது எதுவும் மன நிறைவு தராது என்று இதனால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

& ஏ சி ரூம் கிடைத்ததும், 'சின்ன வயதில் சந்தோஷமாக இருந்தோமே' என்று நினைப்பது - மின்விசிறிக்கடியில் அடித்து புடித்துக்கொண்டு தூங்கியதை   நினைத்து அல்ல - 'பவர் கட்' பிரச்னையால்! 

= = = =

எங்கள் கேள்விகள் : 

1) வாழ்நாளில் மறக்க முடியாத இடம் என்று எதைச் சொல்வீர்கள் ?

2) பணமாக இல்லாமல் ஒருவருக்குச் செய்யக்கூடிய பெரிய உபகாரம் எது ?

3) தற்போதைய "குடியாட்சி" யை விட நல்ல மன்னர் ஆட்சி செய்தலே நல்லது என்று சொல்வது சரியா ?

4) இரண்டு வருஷம் சினிமாக் கொட்டகைகளை மூடி வைத்து விட்டால் ஊழியர்கள் வருவாய் இழப்பு நீங்கலாக வேறு கெடுதல் வர வாய்ப்பு உள்ளதா ?

5) கதை, கவிதை இவற்றால் விளையக்கூடிய பெரிய நன்மை எது ? (பொழுது போக்கு நீங்கலாக)

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்கள் : 

1) 


2) 


3) 

கீழே உள்ள படம் - கருத்து சொல்ல அல்ல. வாசகர் ஒருவர் அனுப்பிய படம். இதை அனுப்பிவிட்டு, இதை வெளியிட தைரியம் உண்டா என்று வேறு கேட்டுவிட்டார். (அவர் யார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்!) எனக்கு தைரியம் இருக்கு. 'அனுப்பியவர், இது தான் அனுப்பியதுதான்' என்று ஒப்புக்கொள்ள தைரியம் இருக்கிறதா !!

= = = = =


104 கருத்துகள்:

 1. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கங்களுடன்..

  வாழ்க வையகம்
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அவர் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் தன்னை நடிக்குமாறு வற்புறுத்தியவர்களை ரொம்ப வருடங்களாகவே தேடிக்கொண்டிருக்கிறார். அந்த லிஸ்டில் துரை செல்வராஜு சார் உண்டா?

   நீக்கு
  2. துரை செல்வராஜ் அவர்களை வழி மொழிகிறேன்.

   நீக்கு
 4. முக்கியமாக கர்ப்பிணிகள் இதயம் பலஹீனமானவர்கள் மிக மிகக் கவனமாக இருக்கவும்..

  பதிலளிநீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  மூன்று படங்களுக்கான ஒத்த கருத்து.

  "நீ என்னதான் என் மேலிருக்கும் அன்போடு வேண்டாமென காலை கட்டிக் கொண்டு தடுத்தாலும், காலை கட்டியபடி அமர்ந்து கொண்டு அதிகாரமாக கடினமான வேலைகளை செய்யச் சொல்லும் பின் வரும் தருணங்களுக்காக நான்தான் இள வயதிலேயே நிறைய பயிற்சிகள் எடுத்துக் கொண்டு விட்டேனே.... அதனால், எப்படி இந்த வேலைகளை செய்யப் போகிறேன் என கவலை கொள்ளாதே என் செல்லமே...

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. நடிகர்களுக்கு ரசிகனாக இல்லாமல் வாழவே முடியாது என்று முன்பு என்னிடம் வாதாடியவன் நினைவுக்கு வந்தான்.

  ரஜினியை திட்டிய போது நீ நிச்சயமாக கமலுடைய ஆள்தான் என்றான், அடுத்த நொடி கமலை திட்டிய போது அவன் வாய் பிளந்து ஆச்சர்யப்பட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. 1) வாழ்நாளில் மறக்க முடியாத இடம் என்று எதைச் சொல்வீர்கள் ?

  பிறந்த ஊர்.

  2) பணமாக இல்லாமல் ஒருவருக்குச் செய்யக்கூடிய பெரிய உபகாரம் எது ?

  உபகாரம் என்பது அவரவர் தேவையைப் பொருத்தது. பணம்  என்பதைக் கொண்டு பல தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பதால் அது பொது உபகாரம் ஆகிறது.

  3) தற்போதைய "குடியாட்சி" யை விட நல்ல மன்னர் ஆட்சி செய்தலே நல்லது என்று சொல்வது சரியா ?

  இல்லை. எல்லா ஆட்சிகளிலும் நன்மை தீமை உண்டு. நன்மை தீமை பாகுபாடும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பீட்டில் வித்தியாசப்படும். ஒருவர் நன்மை என்று நினைப்பது மற்றவருக்கு தீங்காகலாம்.

  4) இரண்டு வருஷம் சினிமாக் கொட்டகைகளை மூடி வைத்து விட்டால் ஊழியர்கள் வருவாய் இழப்பு நீங்கலாக வேறு கெடுதல் வர வாய்ப்பு உள்ளதா ?

  உண்டு. அங்கு வசித்த எலி மூட்டைப்பூச்சி  கரப்பான் போன்ற உயிரினங்களுக்கு போக்கிடம் வேறு வேண்டும்.

  எந்த ஒரு கட்டிடமோ, அரங்கோ புழக்கத்தில் இல்லாவிட்டால் நசித்துப் போகும்.
  சிறிது காலம் சென்றபின் அடிமுடி புதிப்பிக்க வேண்டி வரும்.

  5) கதை, கவிதை இவற்றால் விளையக்கூடிய பெரிய நன்மை எது ? (பொழுது போக்கு நீங்கலாக)குழந்தைகள் (பெரியோர்களும் கூட) சாப்பிடுவார்கள்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 9. ஶ்ரீராம் ரொம்ப அப்செட் ஆகிவிட்டாரோ? இன்று இன்னும் வரவில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளைய பதிவுக்காக 'த' படம் தேடிக்கொண்டிருப்பாரோ?

   நீக்கு
 10. சின்ன வயதில் சந்தோஷமாக இருந்தோமே - இது வெறும் நினைப்புதான். இப்போது எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் அப்போதும் இருந்திருப்போம். என்ன ஒண்ணு... பெரும்பாலும் கொறுப்பற்ற வாழ்வு. அதனால் மனசஞ்சலங்கள் இல்லாத நிலை.

  பதிலளிநீக்கு
 11. கருப்பு ஜாக்கெட்டில் ஆண்ட்டி ஆரு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அதே கேட்டுக்கறேன். யார் வந்து பதில் சொல்லப் போறாங்களோ?

   நீக்கு
  2. யார் சொல்லப் போகிறார்களோ!

   நீக்கு
  3. ஆண்டியோ, பாட்டியோட சிலர் எல்லா பருவத்திலும் அழகாகத்தான் இருப்பார்கள். அவர்களில் அனுவும் ஒருவர்.

   நீக்கு
 12. எனக்குப் பிடித்த நடிகர்கள் பலர் உண்டு. அதில் ஹீரோக்கள் என்ற கேட்டகரி இல்லை. சிங்க முத்து, தியாகு போன்ற பலர் எனக்குப் பிடிக்கும். சாதாரண பாத்திரங்களில் நடிக்கும் பலர் மிகத் திறமை பெற்றவர்கள்.

  பதிலளிநீக்கு
 13. பிடித்த நடிகைகள் - உண்மையில் மனதைக் கவர்ந்தவர்கள் என்று நடிகைகளைச் சொல்லும்போது அவர்களின் அழகு நம் மனதின்மீது தாக்கம் செலுத்துவதுதான் காரணம். சில பாத்திரங்களில் சில நடிகைகள் ஜொலிப்கார்கள். அந்தப் படத்தில் அவர் என்னைக் கவர்வார்.

  எனக்கு ரம்யா கிருஷ்ணனைப் பிடிக்கவே பிடிக்காது. அவர் என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் படையப்பா, பாஹிபலியில் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார்.

  சென்ற வாரம் இரவு பாஹுபலி பார்ட் 2 முழுவதும் பார்த்தேன். க்ளைமேக்ஸ் நகைச்சுவைக் காட்சியாக இருந்தாலும், பல இடங்களில் இன்னும் ஒன்றிப் பார்க்க முடிந்தது. என்ன ஒரு நடிப்பு... ர.கி, ப்ரபாஸ், நாசர், சத்யராஜ்...... சில காட்சியமைப்புகள் இப்போதும் சிலிர்க்க வைத்தன

  பதிலளிநீக்கு
 14. மறக்கமுடியாத இடம் - எல்லோருக்கும் வாழ்க்கையின் கடந்துபோன இடங்கள் அனைத்துமே மறக்க முடியாது. அந்த இடத்துக்கு மீண்டும் போகும்போது நாம் சிலிர்த்து அந்தக் காலகட்டத்துக்கே சென்றுவிடுவோம். இடங்கள் சின்னதாக்க் காட்சியளிக்கும். காலத்தால் பொலிவிழந்திருக்கும். இருந்தாலும் நம் மனத்தைவிட்டு உணர்வுகள் நீங்காது

  பதிலளிநீக்கு
 15. புதன் கேள்விகள்.1. நீங்கள் இளமையில் வாழ்ந்த இடங்களுள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு? 2. கோபத்தினால் நீங்கள் இழந்ததில் மறக்க முடியாத்து எது? 3. எதனால் நண்பனிடம் எல்லாம் பேச முடிகிறது, துணைவி/துணைவனை விட? 4. வாழ்க்கையின் இந்த இடத்தை அடைந்தது என்னுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சியால்தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா அல்லது பூர்வ ஜென்ம வினைப்பயன் என்று மோன்றுமா? 5. இன்றைக்குப் போய்விட்டாலும் கவலையில்லை என்ற மனநிலை இருக்கிறதா? இல்லை பந்தங்களினால் நிறைய பணிகள் இருப்பதாகவே எண்ணுகிறீர்களா?

  பதிலளிநீக்கு
 16. என,ன... கீசா மேடம் இன்னும் வரலையே... மதியச் சாப்பாட்டையும் பண்ண ஆரம்பித்துவிட்டாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடம்பு சரியில்லை. நேற்றுத் தலைக்குத் தேய்த்துக் குளித்ததால் என்று மாமாவும், மாமாவிடமிருந்து எனக்கு ஜலதோஷம் வந்துவிட்டது என்று நானும் குற்றப்பத்திரிகை படித்துக் கொண்டிருக்கோம். நேற்று இரவு சரியான தூக்கமில்லை. காலை காஃபி, கஞ்சி வேலை முடிஞ்சதும் போய்ப் படுத்தவள் வேலை செய்யும் பெண் வந்தப்போ எட்டரைக்குத் தான் எழுந்திருந்தேன். :( இங்கே காற்று வேறே மிக மிக அதிகமாக இருக்கிறது இரண்டு நாட்களாக. அது வேறே உடம்பு வலி! :(

   நீக்கு
  2. விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கிறோம்.

   நீக்கு
 17. இரண்டாம் படம் - என்ன...வீட்டை மொழுகறதுனா சும்மாவா? இன்னைக்குப் பண்ணிப்பார். தெரியும்... என்று சொல்கிறாரா... இல்லை.. இந்தச் சல்லி வேலைக்காக இத்தனை அலட்டலா... உட்கார்ந்து பார்த்துக்கொண்டிரு.. எவ்வளவு வேகமாக, சுத்தமாக இதைச் செய்கிறேன் என்று... எனச் சவால் விட்டிருக்கானா?

  பதிலளிநீக்கு
 18. சில நாட்களுக்கு முன் பில்லா படம் பார்த்தேன். நயன் இப்போதுதான் அழகு, அப்போ நல்லாவே இல்லை என்று பெண் சொன்னாள். ஏய்.. நான் நயனுக்காகத்தான் இந்தப் படத்தை மீண்டும் பார்க்கிறேன் என்று நான் சொன்னேன். நடிகை நமக்குப் பிடிக்கும் காரணமே, ஆண் பெண் மனத்தைப் பொறுத்தா?

  பதிலளிநீக்கு
 19. நாளையிலிருந்து பத்து நாட்கள்... இணையம் வருவது நிச்சயமில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பயணமா நெல்லை? எஞ்சாய் மாடி!!

   கீதா

   நீக்கு
  2. இதுக்குப் போட்ட கருத்தும் காணவில்லை என்று எங்கு புகார் கொடுக்க வேண்டும்?!!!!!!

   நெல்லை..... மீண்டும் பயணமா? எஞ்சாய் மாடி!

   கீதா

   நீக்கு
 20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 21. தைரியம் பற்றி அறிந்தேன்... அடேங்கப்பா...!

  பதிலளிநீக்கு
 22. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 23. கதாநாயகர்கள் நாயகிகளை விட, நன்றாக நடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்குப் பிடித்தவர்கள் எம் எஸ் பாஸ்கர், நடிப்பும் voice modulation லும் பின்னுவார். பொன் வண்ணன், இன்னொருவர் பெயர் டக்கென்று நினைவுக்கு வரவில்லை....அவரும் வட்டார வழக்கில் கலக்குவார்...

  நடிகைகளில் மறைந்த ஆச்சி.
  சரண்யா பொன்வண்ணன் இன்னும் இருக்கிறார்கள் டக்கென்று பெயர்கள் நினைவுக்கு வரவில்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதையவர்களில் - சரண்யா பொன்வண்ணன் இன்னும் இருக்கிறார்கள் டக்கென்று பெயர்கள் நினைவுக்கு வரவில்லை

   கீதா

   நீக்கு
  2. ச.பொ -மிகச்சிறந்த நடிகை. எந்தப் பாத்திரத்திலும் மிக இயல்பாக நடிப்பார். நேற்று 'கொடி' படம் மீண்டும் பார்த்தேன். எம்.எஸ்.பாஸ்கரும் நல்ல நடிகர், ஆனால் இயல்பா இல்லையோ என்று சில வேடங்களில் தோன்றும். திருநெவேலி வட்டார வழக்கோடு நகைச்சுவை நடிகராக இருந்த 'கிணத்தைக் காணோம்' போலீசும் எனக்குப் பிடித்தவர்

   நீக்கு
  3. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 24. சிறு வயதில் ஒரு மின்விசிறிக்கடியில் அடித்து புடித்துக் கொண்டு படுத்து உறங்கிய பொழுது ஏ.சி.ரூமில் தூங்க முடியாதா என்று ஆசைப்பட்டவர்கள், ஏ.சி.ரூம் கிடைத்ததும் "சின்ன வயதில் சந்தோஷமாக இருந்தோமே" என்கிறார்களே?//

  மின் விசிறி கூட இல்லாமல் இருந்ததுண்டு. இப்போது வயதாகிப் பொறுப்புகள் கவலைகள் என்றிருப்பதால் அப்போதைய வாழ்க்கை சுகமாக இருப்பது போல் ஒரு ஒப்பீட்டளவில் தோன்றுமே அல்லாமல் அப்போதும் அப்போதைய வயதிற்கான கவலைகள் - படிப்பு, வேலை எதிர்காலம் என்று இருந்ததுதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. 1. மறக்க முடியாத இடம் என்று குறிப்பிட்டு எதுவும் இல்லை. இதுவரை இருந்த பார்த்த இடங்கள் எல்லாமே பிடித்த இடங்கள்.

  2. பணத்தால் உதவிகள் செய்ய முடியாத போது உடலுழைப்பால் உதவிகள் செய்யலாம் அது இன்னும் சிறப்பு என்று தோன்றும். ஏனென்றால் அதுதான் பலருக்கும் கிடைக்காத ஒன்று. உதாரணத்திற்கு - நம் வீட்டிலுள்ள பெரியவர்களைப் பார்த்துக் கொள்வதில், சிலர் பணம் கொடுத்துவிட்டு வேறு எதுவும் செய்யாமல் எப்படி இருக்கிறார்கள் என்றும் கூடப் பார்க்காமல் இருப்பதுண்டு. ஆனால் பெரியவர்களை வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்பவர்கள் இங்கு பேசப்படுவார்கள், சமூகமும் அதைத்தான் சொல்லும்.....பணத்தைக் கொடுத்துவிட்டால் எல்லாம் நடந்துவிடும் என்பது சரியல்ல, அருகில் இருந்து ஆதரவாகப் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று நான் நினைபப்துண்டு. ஒரு வேளை என்னால் பணத்தால் செய்ய இயலாது உடலுழைப்பால்தான் செய்ய முடியும் என்பதால் இப்படி எனக்குத் தோன்றுவதாக இருக்கலாம்.
  சிலர் பணத்தாலும், உடலுழைப்பாலும் செய்யலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 26. 2. வெளியாட்கள் என்றால் அவர்களுக்கு என்ன தேவையோ அதை எவ்வகையிலேனும் ஏற்படுத்திக் கொடுப்பது அல்லது வழிகாட்டுவது, வழி அமைத்துக் கொடுப்பது போன்றும் செய்யலாம். வயதானவர்கள் என்றால் அவர்களுக்கு வெளியில் செல்ல முடியவில்லை என்றால் நாம் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம்...மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்...இப்படிப் பல வகைகள் இருக்கின்றன. பெரிய உபகாரம் என்பது அவரவர் தேவையை, அந்தச் சூழலைப் பொருத்து

  கீதா


  பதிலளிநீக்கு
 27. 3. எல்லா ஆட்சியும் ஒன்றுதான்....எல்லாவற்றிலும் குறையும் உண்டு நிறையும் உண்டு...

  4. வருவாய் இழந்தாலே எல்லாமே இழந்ததுதானே. அந்தக் குடும்பங்களே தள்ளாடுமே...

  5. நம் படைப்புகள் நமக்கு ஒரு மகிழ்ச்சியைத் தரும்

  ஒரு சிலருக்குப் புத்தகமாகப் போட்டால் வரும்படி கிடைக்குமாக இருக்கலாம். அதற்கும் ஒரு ராசி வேண்டுமாக்கும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 28. முதல் படம் - ப்ளீஸ் என்னை விட்டுப் போகாதே..

  2 வது படம் - அவர்களைப் பார்த்தால் வீட்டில் வேலை செய்பவர்கள் போலத் தெரியவில்லை. உதவியாளர் வரவில்லை போலும்!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 29. வாசகர் ஒருவர் அனுப்பிய படம். இதை அனுப்பிவிட்டு, இதை வெளியிட தைரியம் உண்டா என்று வேறு கேட்டுவிட்டார்.//

  ஹாஹாஹாஹா அனுஷ் படத்தை அனுப்பியவர் யாரென்று ஊகிக்க முடியாதாகும் எல்லாம் நம்ம நெல்லைதான்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 30. நகைச்சுவை நடிகர்கள் கவர்ந்த அளவுக்கு எந்தக் கதாநாயக/நாயகி நடிக, நடிகையர் கவர்ந்தது இல்லை. நகைச்சுவை நடிகர்களிலும் தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ ஆகியோருக்குப் பின்னர் தான் மற்றவர்கள். தங்கவேலு+அங்கமுத்து, "அதான் எனக்குத் தெரியுமே!" தங்கவேலு+எம்.சரோஜா, மன்னார் & கம்பெனி, மறக்க முடியுமா? சந்திரபாபு "சபாஷ் மீனா!"வில் கலக்கி இருப்பார். நாகேஷ் கேட்கவே வேண்டாம். "மகளிர் மட்டும்" படத்தில் இறந்தவராக நடிப்பாரே! அதல்லவோ நடிப்பு!

  பதிலளிநீக்கு
 31. இப்போதைய படங்கள் குறித்தோ நடிகர்கள் குறித்தோ எதுவும் தெரியாது. ஶ்ரீராம் வந்து உங்களுக்குக் காளிதாஸ், அந்தக்கால பி.யூ.சின்னப்பா, கேபிஎஸ் ஆகியோர் நடிச்ச படங்கள் தான்பிடிக்கும்னு சொல்லிக் கிண்டல் செய்வார். செய்யட்டுமே! :)))))

  பதிலளிநீக்கு
 32. குழந்தை டிக்கியைத் திறந்து உள்ளே போய்ச் சார்த்திக்கப் போறது. பெற்றோர் கவனம்.
  அந்தப் பையர் தான் வீட்டுச் சொந்தக்காரர், இந்தப் பெண் விருந்தாளி போல் இருக்கு. அவர் வீடு துடைப்பதை இவர் வேடிக்கை பார்க்கிறார் கொஞ்சம் தீவிரமாகவே. இப்போல்லாம் மாப் வைத்துத் துடைக்கிறாங்க. இவர் அதை விட்டுட்டுத் துணியை நனைத்துப் பிழிந்துப் பழைய முறைப்படி துடைப்பது ஆச்சரியமா இருக்கோ?
  செல்லத்தை விட்டுட்டு வெளியே போகப் போறார் அல்லது போயிட்டு வந்திருக்கார். அதான் காலைக்கட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறது.

  பதிலளிநீக்கு
 33. கல்யாணத்துக்கு முன்னும் கல்யாணம் ஆனப்புறமும் சில வருடங்கள் மதுரை தான் பிடித்தது. தொண்ணூறுகளில் இருந்து மதுரையின் முகம் மெல்ல மெல்ல மாற புதிய மேக்கப் போட்ட மதுரை பிடிக்காமல் போனது. என்றாலும் நாங்க இருந்த இடம் என்றால் ஜாம்நகரில் குடி இருந்த பங்களா, நசிராபாதில் குடி இருந்த பங்களா (மயிலும், குயிலும் நிஜமாவே ஆடிப்பாடும்) ஊட்டியில் அரவங்காட்டில் எங்க குடியிருப்பு, அங்கிருந்து கீழே பார்த்தால் தெரியும் அரவங்காடு ரயில் நிலையம், கயிலை யாத்திரையில் இரவு நேரத்தில் விண்ணில் தெரிந்த நக்ஷத்திரங்கள்! கைகளால் பறிக்கலாம் போல அவ்வளவு கிட்டே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடம்... உங்களுக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லை. மறதியும் அதிகமாயிடுச்சோ? இல்லைனா, நல்ல வாய்ப்பு கிடைத்தும் அம்பத்தூர் புராணம், வேப்பமரம் எல்லாம் எழுத மறந்துட்டீங்களே

   நீக்கு
  2. எனக்குச் சென்னை வாழ்க்கை ஒண்ணும் அவ்வளவு ரசிப்பாய் இருந்ததில்லை. முதல் முதல் சென்னைக் குடித்தனத்தில் இருந்த நான்கு வருடங்கள், அதன் பின்னர் இருந்த எட்டு வருடங்கள், கடைசியில் இருந்தவை என அனைத்துமே நான் மறக்க நினைப்பவை! என்ன ஒரு சந்தோஷம்னா பெண் கல்யாணம், பையர் கல்யாணம் எல்லாம் அந்த வீட்டில் இருக்கும்போது தான் நடந்தன. வேப்ப மரம் தனி! அதைப் பெண் மாதிரி வளர்த்தோம். கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் கூட பில்டர் அதை வெட்டி விட்டார். மற்றபடி நான் மறக்க நினைக்கும் அளவுக்குச் சங்கடமான நினைவுகள் சென்னை வாழ்க்கையில் தான்! :( இன்னும் சொல்லப் போனால் சிகந்திராபாதில் இருந்த இரு வருடங்கள் கூட அருமையான நாட்கள். வாசலிலேயே பேருந்து, மத்தியானம் வேலைகளை முடித்துக்கொண்டு அந்தப் பேருந்தில் போய்க் காய்கள் பழங்கள், காஃபிப் பொடினு வாங்கி வருவேன். தெரு முனையில் நல்ல குடி நீர்க்குழாய். அரிசி அப்போ இரண்டு ரூபாய் ஒரு கிலோ! பால் இரண்டரை ரூபாய், மூன்று ரூபாய் லிட்டர். வெண்ணெய் நிறைய வரும்.

   நீக்கு
  3. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 34. முன்னெல்லாம் பணமாகக் கொடுக்கும் வசதி அவ்வளவாக இருந்ததில்லை. ஆனால் சரீரத்தால் நிறையப் பாடுபட்டு உதவி செய்திருக்கேன். இன்னும் சொல்லப் போனால் கணவர், குழந்தைகள் கோவிக்கும் அளவுக்குப் பிறருக்காகப் பாடுபட்டிருக்கேன். இன்னிக்கு அவங்க யாரும் திரும்பிக் கூடப் பார்க்கிறதில்லை என்பது தனி. என்னால் அப்படிச் சரீர உதவி இப்போதெல்லாம் செய்ய முடியலை.

  பதிலளிநீக்கு
 35. இப்போதைய குடி ஆட்சியே தேவலைனு நினைக்கிறேன். மன்னர் ஆட்சி எனில் அண்டை நாட்டுடன் போர், உறவு சீர்கெடுவதுனு ஏற்படும். வெளி உறவுத் துறை சாமர்த்தியமாகக் கையாளும் இப்போதைய குடி ஆட்சியே மேல்.
  திரைப்பட அரங்குகளை மூடினால் ஒண்ணும் ஆகாது. கொரோனா காலத்தில் மூடி வைக்கலையா? மக்கள் ஒரு திரைப்படத்துக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் டிக்கெட்டுக்கு மட்டும் செலவு செய்வது குறையும். மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழாது.
  கதை கவிதைகள் பொழுதுபோக்குக்குனு சொன்னாலும் நமக்குப் பொது அறிவு வளருகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. சின்ன வயசில் இருந்தே இதை உணர்ந்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 36. பிடித்த நடிகைகள்னு பார்த்தால் வைஜயந்தி மாலா, கமலா லக்ஷ்மணன் (இவரோட நாட்டியத்துக்கு ஈடு இணை இல்லை) பின்னாட்களில் ரேவதி ரோஹிணி, ஊர்வசி(நகைச்சுவையில் கலக்குவார்) இன்னும் இருக்காங்க. ஒருத்தர் பேரும் நினைவில் வரலை. இப்போதைய நடிகைகள் குறித்த அறிவு இல்லை.

  பதிலளிநீக்கு
 37. 1) மறக்க முடியாத இடம் என்று ஒன்றை மட்டும் சொல்ல முடியாது.

  2) அவரவருக்கு வேண்டிய பொருட்கள் உணவுகளை கொடுத்து உதவலாம்.
  3) எவ்வகை ஆட்சியாக இருந்தாலும் பணம் கையாடல், கொடூரம் வேண்டாம்.
  4) சினிமாக் கொட்டகைகள் மூடுவதால் தற்காலம் ஒன் லைன் டவுன்லோடு என போகும் .

  .5) வரும் கால மக்கள் இக்கால இலக்கியம் எப்படி இருந்தது என்பதை அறியக் கூடியதாக.இருக்கும்.

  பதிலளிநீக்கு
 38. மறக்க முடியாத இடம் என்றான் நான் பிறந்து வளர்ந்த ராசிங்கபுரம், மதுரை, நாகர்கோவிலும் தமிழ்நாட்டு வாழ்க்கையும்.

  சமீபத்தில் என்றால் மலேசியா. 4 நாள் பயணமாகக் குடும்பத்துடன் சென்று வந்த நினைவுகள். பதிவும் எழுதுவதாக உள்ளேன். (கிளம்புவதற்கு முன்னான ஏற்பாடுகள், வந்த பின் உடல்நலம் சரியில்லாமல் போனது என்று பதிவுகள் வாசிக்க முடியவில்லை. இன்றுதான் மீண்டும் வலைப்பக்கம் வருகிறேன்)

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 39. இதுக்கு காலைல போட்ட கருத்து எங்கே போச்சு!!!? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  //கருத்து சொல்ல அல்ல. வாசகர் ஒருவர் அனுப்பிய படம். இதை அனுப்பிவிட்டு, இதை வெளியிட தைரியம் உண்டா என்று வேறு கேட்டுவிட்டார்.//

  ஹாஹாஹாஹா அனுஷின் இந்தப் படத்தை அனுப்பியவர் யாரென்பது என்ன பெரிய ரகசியமா என்ன? எல்லாம் இந்த நெல்லைதான்!!!

  இப்ப எசப்பாட்டுக்கு நம்ம ஸ்ரீராம் த படம் இன்னும் இதைவிட ஹிஹிஹிஹி ஒன்னு எடுத்து நாளை போட்டாலும் போடலாம்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதன் கேள்வி: இப்போதைய த எனக்குப் பிடிக்கவில்லை. அச்சம் என்பது மடமையடா பட நாயகி மஞ்சிமாவை ஆஹா ஓஹோ என்று நினைத்தேன்........ FIR பார்க்கும்வரை. அப்போ நாம ரசித்தது யாரை? நடிகையையா?

   நீக்கு
 40. //'அனுப்பியவர், இது தான் அனுப்பியதுதான்' என்று ஒப்புக்கொள்ள தைரியம் இருக்கிறதா !!// - எனக்கு நேரமிருந்திருந்தால், இத்துடன் இணைத்துப் போட 'த' படத்தையும் அனுப்பியிருப்பேன். அவரும் பார்க்கச் சகிக்கலை.

  பதிலளிநீக்கு

 41. 1. என்னை தூக்கு என்று காலை கட்டிக் கொள்கிறது குட்டிச் செல்லம்.
  2. அந்த பெண்ணின் கால்வலிக்கு வெந்நீர் ஒத்தடம் தருகிறேன் என்று சொல்கிறார் , சூடுபதமா இருக்கா என்று தொட்டுப்பார்க்கிறார்.
  3. குழந்தை டிக்கியில் தொங்கி விளையாடுகிறது.

  பதிலளிநீக்கு
 42. மஸ்கட். வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் தந்ததால் மறக்க முடியாத இடம். பிறந்து வளர்ந்த தால் திருச்சி மீது ஒரு தனி பாசம். முதல் முறையாக சென்ற பொழுதே "இந்த இடம் எனக்குத் தெரியுமே, நான் இங்கு இருந்திருக்கிறேன் என்று தோன்றியதால் மைசூர்.

  பதிலளிநீக்கு
 43. A. பார்த்தசாரதி நாம் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளை நான்கு வகையாக பிரிக்கலாம், கடைசி பட்சம் பணத்தால் உதவுவது.
  மூன்றாவது நிலையில் சரீரத்தால் உதவுவது வரும்.
  இரண்டாம் நிலையில் அறிவார்ந்த மாக் உதவுவது வரும். முதன்மையானது உணர்வு பூர்வமாக உதவுவது(emotional help) என்பார்.

  பதிலளிநீக்கு
 44. 3. குடியாட்சி மே சிறந்தது.

  4. சினிமா கொட்டைகளை மூடினால் வேறு ஏதாவது அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும்.

  பதிலளிநீக்கு
 45. *குடியாட்சியே சிறந்தது.

  5. கதை, கட்டுரைகள் உணர்வு பூர்வமாக மக்களைசந்தோஷப்படுத்துகின்றன. தவிர மற்றவர்களின் அனுபவங்களும் நமக்கு ஒரு பாடமாகும்.

  பதிலளிநீக்கு
 46. மேலே கண்ட இரு கருத்துக்களையும் எழுதியது பானுமதியாகிய நா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!