சனி, 2 ஜூலை, 2022

அதிசய அரசு ஊழியர் மற்றும் ---- நான் படிச்ச கதை (JC)

 பிரதிபலன் எதிர்பாராமல்  அன்னதானம் செய்யும் தஞ்சாவூர் தம்பையா பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.  கொரோனா காலத்திலும் இவர் தனது தானத்தை நிறுத்தவில்லை.  [நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்]

 


============================================================================================================

பெரம்பலுார்-ஆதரவற்ற 80 வயது மூதாட்டிக்கு, பெரம்பலுார் அரசு மருத்துவமனை பெண் ஊழியர், மனித நேயத்துடன் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, 80 வயது பெண், ஆதரவற்ற நிலையில் படுத்தே கிடக்கிறார்.அழுக்கடைந்த நைட்டியுடன், போர்வையை போர்த்தியபடி எழுந்திருக்க முடியாமல் படுத்தே கிடக்கும் அவர், 'வலிக்குது, வலிக்குது' என கூக்குரலிடுகிறார்.அங்கு வரும் நோயாளிகளும், பார்வையாளர்களும், பொதுமக்களும் மூதாட்டியின் நிலையை பார்த்து, அனுதாபத்தை மட்டும் வெளிப்படுத்தி கடந்து சென்று கொண்டிருந்தனர்.பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மகாலட்சுமி, 40, என்ற பெண் ஊழியர், அந்த மூதாட்டியை துாக்கி, சாப்பிட வைத்தார். சாப்பிட்டு முடித்த மூதாட்டி, 'மலம் கழிக்க வேண்டும்' என்றார்.சற்றும் தாமதிக்காத மகாலட்சுமி ஓடோடி சென்று, சக்கர நாற்காலி வண்டியை எடுத்து வந்து, மூதாட்டியை தானே துாக்கி, வண்டியில் வைத்து, கழிப்பறைக்கு அழைத்து சென்றார்.அதன் பின், மூதாட்டியை கழுவி சுத்தம் செய்து, மீண்டும் அதே இடத்திற்கு துாக்கி வந்து படுக்க வைத்து விட்டுச் சென்றார்.மூதாட்டியிடம் விசாரித்த போது, வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி சிந்தாமணி என்பதும், உடல் நலம் குன்றியதால், பேரன் மாரிமுத்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்றதும் தெரிய வந்தது.


இது குறித்து, மகாலட்சுமி கூறியதாவது:அந்த மூதாட்டியை, கடந்த ஒரு மாதத்துக்கு முன், அவரது குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்து விட்டுச் சென்றனர். அதன் பின், அவர்கள் வரவே இல்லை. அதனால், நானே மூதாட்டியை பராமரித்து வருகிறேன். அவரை, குடும்பத்தினரிடம் சேர்க்க உதவுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு மருத்துவமனை ஊழியர்கள் என்றால், 'எதற்கெடுத்தாலும் பணம் கேட்பர்; எரிந்து எரிந்து விழுவர்' என்பது தான் பொதுவான கருத்து.ஆனால், மனித நேயம் மிக்க ஊழியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர், என்பதை மகாலட்சுமி நிரூபித்து வருகிறார்.அவரை பாராட்டவும், மூதாட்டிக்கு உதவவும் 63818-77184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

============================================================================================

நடமாடும் பள்ளிக்கூடம்! 


======================= ====================== =================

நான் படிச்ச க்தை

ஜெயக்குமார் சந்திரசேகரன்
***************

ஜானகிக்காக மாத்திரமல்ல

கதையாசிரியர்: பி.எஸ்.ராமையா

 

முன்னுரை 

ராமாயணத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில சர்ச்சைக்குரிய விஷயங்களை நாம் முன்னரே கண்டோம். தாத்தா சொன்ன கதையில் ராமாயணத்தில் அணுவைப் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்றும் அணுகுண்டு எப்படி ஏவுகணை மூலம் செலுத்தி வெடிக்க வைத்தனர் என்பது பற்றிய விவரணமும் இருக்கிறது என்று கதைத்ததைப் பார்த்தோம். 

அடுத்து அப்பாதுரை சார் பாரதியார் எழுதியது என்றுகுதிரைக் கொம்புஎன்ற கதையை எங்கள் பிளாகில் வெளியிட்டிருந்தார். பசுமாடு பற்றிய கட்டுரையை மனப்பாடம் செய்திருந்த மாணவன் தென்னைமரம் பற்றிய கட்டுரை எழுத கேள்வி வந்தபோது எழுதிய கட்டுரை போன்று  ராமாயணத்தை உல்டா செய்து எழுதிவிட்டு, கடைசியில் முன்பொரு காலத்தில் குதிரைகளுக்கு கொம்பு இருந்தது,  சூரியனுடைய குதிரைகள் கீழே விழுந்து அவற்றின் கொம்புகள் முறிந்தன,  அதனால் சூரியனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இனி மேல் குதிரைகளுக்கு கொம்பில்லாமல் இருக்கும்படி செய்ய பிரம்மதேவனுக்கு ராவணன் கட்டளை இட்டதாக கதைத்திருக்கிறார். இக்கதையில் ஆசிரியர் சூசகமாக ஏதோ சொல்கிறார் என்று அப்பாதுரை சார் கூறுகிறார். அது என்ன என்று தெரியவில்லை. 

தற்போது நாம் காணப்போகும் பி எஸ் ராமையாவின் கதையும்  ராமாயணத்தில் ஒரு சந்தேக கேள்வி பற்றியது தான். லட்சுமணனுக்கு ஒருபுதன் கேள்விஉதித்தது. “வெறும் வானர சேனைகளை வைத்து மாத்திரம் ராவணணை வெல்ல முடியுமா? மனித சேனை வேண்டாமா?”. இக்கேள்வியை அண்ணனிடம் கேட்க அவர் கூறும் பதிலும், அதன் பின்னர் இலங்கையை முற்றுகை இட்டதுஜானகிக்காக மாத்திரமல்லஎன்ற பதிலும் கூறுகிறார். 

ஊசிக்குறிப்பு:(இத்தகைய இராமாயண சர்ச்சைகளை ஸ்ரீராமே பதிப்பிப்பது தான் வேடிக்கை.) 

கதை சிறிது. முழுக் கதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கம் என்று தனியே இல்லை. ஆகவே சுட்டியும் இல்லை. 


ஜானகிக்காக மாத்திரமல்ல 

சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான் முதலில் அவர் முகத்தைக் கவனிக்காததால், “சாப்பிடுவோமா?” என்றேன். நான் சொன்னது அவர் காதில் விழாததுபோல, அவர் மறுபடியும் வளையம் வந்து கொண்டிருந்ததைக் கண்டவுடன்தான் அவர் முகத்தைப் பார்த்தேன்.

மறுபடியும் அவரைச் சாப்பிடக் கூப்பிட வாய் எடுத்தேன். அறையின் மறுகோடிக்குப் போனவர் வேகத்துடன் திரும்பி, “வால்மீகிதான் எழுதவில்லை; கம்பரும் ஏன் அதை விட்டு விட்டார்?” என்றார். நான் ஒன்றும் புரியாமல்,” எதை?” என்றேன்.

சுயம்பிரகாசர், “ராமாயணத்தில் ஒரு சிறு சம்பவம்; ஆனால் ரொம்ப ரொம்ப அர்த்தம் நிறைந்ததுஎன்று ஆரம்பித்தார்.

ராவணன் சீதாபிராட்டியாரைக் கவர்ந்து சென்றுவிட்டான். ஸ்ரீராமனும் லக்ஷ்மணனும் தேவியைத் தேடிக் கொண்டு கிஷ்கிந்தை வந்து சேர்ந்தார்கள். ஹநுமான் கடல் கடந்து சென்று லங்கையின் அசோக வனத்தில் பிராட்டியாரைக் கண்டு வந்து தெரிவித்தாயிற்று. வானரப் படைகளைத் திரட்டும்படி சுக்கிரீவனுக்கு ஆக்ஞையும் பிறப்பித்தாகி விட்டது.

இந்த நிலைமையில் லக்ஷ்மணன் மனத்தில் ஒரு சிறிய சந்தேகம் பிறந்தது. ‘ராவணன் பெரிய வரப்பிரசாதி. தேவதேவர்களை எல்லாம் ஆட்டி வைத்துக் கொண்டிருப்பவன். ராட்சஸர்களுக்கே ராட்சஸன். அப்படிப்பட்டவனை எதிர்த்துப் போர் செய்ய, அண்ணா வெறும் வானரங்களை மாத்திரம் நம்பிப் புறப்பட நினைக்கிறாரே! அக்கம் பக்கத்திலிருந்து மனிதர்களையும் திரட்டி ஒரு படை சேர்ப்பது நல்லதல்லவா? என்று எண்ணினான். இந்த அபிப்பிராயத்தை ஸ்ரீராமனிடம் நேரடியாகச் சொல்ல அவனுக்குத் தைரியமில்லை. அதனால் ஜாடைமாடையாகத் தெரிவித்தான்.

ஆனால் ஸ்ரீராமன் அதற்குப் பதில் சொல்லாமல் வெறுமனே புன்னகை செய்தார். அது லஷ்மணனுக்குச் சமாதானம் அளிக்க வில்லை. அதனால் இன்னொரு சமயம் கொஞ்சம் நேரடியாகவே அதைச் சொல்லிவிட்டான், -

அதற்கும் மேலும் அந்த அபிப்பிராயத்தை வளர விடுவது உசிதமல்ல என்று ஸ்ரீராமன் முடிவு செய்தார். “அதுவும் ஒரு நல்ல யோசனை தான். அன்று அதைப் பற்றி நீ சொல்லிய போதே நானும் யோசித்தேன். நாளையே இருவரும் போய் முயற்சி செய்வோம். ஒரு சிறு படை சேர்ந்தாலும் அதுவும் பலம்தானே?” என்றார்.

மறுநாள் அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வெகு தூரம்கூடப் போகவில்லை. அரை நாழிகை தூரத்திலேயே ஒரு சிறு கிராமம் தென்பட்டது.

கிராம எல்லையை அடைந்தபோது அங்கு ஆள் நட மாட்டமே இல்லாததைக் கண்ட லக்ஷ்மணன், “அண்ணா! ராட்சஸ பயம் இந்தப் பக்கத்து ஜனங்களை எப்படி ஆட்டிக் கொண்டிருக்கிறது, பாருங்கள், சூரியோதயமாகி எட்டு நாழிகையாகியும் இன்னும் கிராமத்தின் எல்லையில்கூட ஆள் நடமாட்டம் இல்லைஎன்றான்.

ஸ்ரீராமன் பதில் சொல்லாமல் புன்னகை செய்துவிட்டு நடந்தார். இருவரும் கிராமத்தின் கோடியிலிருந்த மைதானத்தில் நுழைந்தவுடன், கிராமத்தின் மத்தியிலிருந்து வாத்தியங்களின் முழக்கம் வருவது தெளிவாயிற்று. இன்னும் கொஞ்சம் அருகில் போனவுடன், தெருவின் மத்தியில் ஒரு பந்தல் போடப் பட்டிருந்ததும், அங்கே ஜனங்கள் கூடி இருந்ததும் தெரிந்தன.

அதைக் கண்டவுடன் லக்ஷ்மணன், “ஓஹோ! கிராமத்தில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது. ஜனங்கள் எல்லாம் வந்து கூடியிருக்கிறார்கள்என்றான். ஸ்ரீராமன் அதற்கும் ஒன்றும் பதில் சொல்ல வில்லை.

இருவரும் நேரே பந்தல் போட்டிருந்த இடத்திற்கே சென்றனர். அங்கே காணப்பட்ட ஆண்களும், பெண்களும் விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு கோலாகலமாக இருந்தனர். இவர்கள் பந்தலை நெருங்கியபோது அங்கே கூடியிருந்தவர்களில் சிலர், யாரோ இரு புதியவர்கள் வில்லும் கையுமாக வந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தனர். அதற்கும் மேல் அந்தக் கூட்டத்தில் ஒருவன்கூட இவர்களைப் பற்றிக் கவலையோ அக்கறையோ கொண்டதாகத் தெரியவில்லை.

அதைக் கவனித்த லக்ஷ்மணனுக்கு. அண்ணா ஸ்ரீராமசந்திரன், சக்கரவர்த்தித் திருமகன் நேரில் வந்தும் கூட இந்த ஜனங்கள் கண்டு கொள்ளாமலும், கவனிக்காமலும் இருக்கிறார்கள், பார்த்தாயா?” என்ற வருத்தம் எழுந்தது. ஸ்ரீராமன் அவன் சிந்தனைகளைப் பேசக் கேட்டவர் போல், “லக்ஷ்மணா! அவர்களுக்கு நாம் யார் என்பது தெரியாது. தெரியாமல் இருப்பதுதான் நல்லது. பின்னால் அவசியமானால் பார்த்துக் கொள்ளலாம்என்றார். லக்ஷ்மணன் மனம் சமாதானமடையா விட்டாலும், பேசாமலிருக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.

சகோதரர்கள் இருவரும் பந்தலை நெருங்கி வெளியிலிருந்த படியே உள்ளே கவனித்தனர். உள்ளே ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வந்து சேர்ந்த சமயமும், மாங்கல்யதாரண முகூர்த்தமும் ஒன்று கூடின.

புரோகிதர் மாங்கல்யத்தைக் கையிலெடுத்து ஆசீர்வதித்து, மண மேடையைச் சுற்றியிருந்த பெரியோர்களிடம் நீட்டினார். அவர்களும் ஆசீர்வதித்துக் கொடுத்தவுடன் மணமகனிடம் கொடுத்தார். வாத்தியங்கள் வேகமாக முழங்கத் தொடங்கின. புரோகிதர் சொன்ன மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே மணமகன் மாங்கல்யத்தைப் பெண்ணின் கழுத்தில் கட்டினான்,

அதே சமயம் வாத்திய முழக்கங்களுக்கு மேல், “ஐயையோ! ராட்சஸன் வந்துவிட்டானே!” என்று ஓர் அலறல் கேட்டது! அவ்வளவுதான்! பந்தலுக்குள் ஒரே களேபரமும் குளறுபடியுமாகி விட்டன. ஆண்களும் பெண்களும் உயிருக்குக் கூவிக் கொண்டு அலங்கோலமாக மூலைக்கு மூலை ஓடினர். வாத்தியங்கள் சடக்கென்று நின்றன. அதற்குப் பதில் அலறலும் கதறலுமாகக் கூச்சல் நிறைந்தது.

ராட்சஸன் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் லக்ஷ்மணன் தோளில் இருந்த வில்லைக் கழற்றி, நாணைப் பூட்டிவிட்டான்.

ஸ்ரீ ராமன் அவன் தோளைத் தொட்டுத் தணிந்த குரலில், “லக்ஷ்மணா! அவசரப்படாதே!” என்றார். தம்பியும் கையில் வில்லுடன் அப்படியே நின்றான்.

பந்தலின் இன்னொரு வாசல் வழியாக ஒரு ராட்சஸன் கையில் ஒரு பெரிய மரக் கிளையுடன் உறுமிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் வந்த வேகத்தில் அவன் கையிலிருந்த கிளை அடித்து, அந்தப் பக்கம் பந்தல் முழுவதும் கந்தல் கந்தலாகிவிட்டது.

ராட்சஸன் பந்தலுக்குள் நுழைந்தவுடன், ஓட முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்ட சிலர் கடைசி அலறலாக ஒரு தரம் அலறிவிட்டு அப்படி அப்படியே தரையில் சாய்ந்தனர். அதை ஒரு வேடிக்கையாக அநுபவித்துக் கொண்டு ராட்சஸன் திரும்பினான்.

மண மேடையிலிருந்த தம்பதிகள் இருவரும் புரோகிதரும் என்ன செய்வதென்று தோன்றாமல் அப்படியே இருந்து விட்டனர். ராட்சஸன் அவர்களைக் கண்டான். கோரமான குரலில் கடகட வென்று சிரித்து அந்த மண மேடையை நோக்கிப் பாய்ந்தான்.

அதைக்கண்ட புரோகிதர் எதிரிலிருந்த ஹோம குண்டத்திலிருந்து கொஞ்சம் சாம்பலை எடுத்துப் பூசிக் கொண்டு உரத்த குரலில், ‘சிவசிவஎன்று ஜபிக்கத்தொடங்கினார். மணமகன் நின்ற நிலையிலே கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு விட்டான். மணப்பெண் பயத்தால் அவள் புருஷனிடம் நெருங்கி அவனுடன் ஒண்டிக் கொள்ள முயன்றாள்.

ராட்சஸன் மண மேடையை நெருங்கி, புருஷனுடன் ஒட்டிய மணப் பெண்ணை ஒரு கையால் இழுத்து வாரி எடுத்துக்கொண்டு திரும்பினான். அவன் அருகில் வந்தவுடன் புரோகிதர் முன்னிலும் அதிக வேகமாகவும் உரத்த குரலிலும்சிவசிவாஎன்று ஜபித்துத் தள்ளினார்.

ராட்சஸன் மணப்பெண்ணைத் தொட்டவுடன், லக்ஷ்மணன் அண்ணாவின் கட்டளையையும் மறந்து அம்பறாத் தூணியில் கை வைத்து ஓர் அம்பை எடுத்தான். அங்கே நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டு நின்ற ஸ்ரீராமன் கொஞ்சம் அதட்டிய குரலில், “லக்ஷ்மணா!” என்றார். லக்ஷ்மணன் கை அப்படியே நின்றுவிட்டது.

ராட்சஸன் பெண்ணுடன் சாவகாசமாகப் பந்தலைவிட்டு வெளியேறி நடந்தான். அவன் அந்தத் தெருக் கோடிக்குப் போய் மைதானத்தில் நுழைந்தவுடன், புரோகிதர் ஜபத்தை நிறுத்தி மணமகன் பக்கம் திரும்பினார். அவன் அப்பொழுதும் கண்ணை இறுக மூடியபடியே நின்றான்.

புரோகிதர், “ராட்சஸன் மைதானத்துப் பக்கம் போய் விட்டான். கண்ணைத் திறவுங்கள். அதென்ன, உங்கள் மனைவியை அவன் தூக்கிக் கொண்டு போகிறான்; கண்ணை மூடிக்கொண்டு விட்டீர்களே!” என்றார்.

மணமகன் கண்ணைத் திறந்து ராட்சஸன் போய்விட்டது உண்மைதானா என்பதை நிச்சயம் செய்து கொண்டு திரும்பி, அந்தப் பாவத்தை நம்ம கண்ணாலே பார்ப்பானேன்? பகவான் இருக்கிறார், பார்த்துக் கொள்கிறார் என்றுதான் கண்ணை மூடிவிட்டேன்என்றான்.

அவன் அதைச் சொல்லியவுடன் ஸ்ரீராமன், “லக்ஷ்மணா! அதோ போகிறான் ராட்சஸன்என்றார். லக்ஷ்மணன் அம்பு விர்ரென்று பாய்ந்தது. மைதானத்தின் நடுவில் ராட்சஸன் கோரமாக அலறிக்கொண்டு கீழே சாய்ந்தான்.

ஸ்ரீராமன் லக்ஷ்மணன் தோளைத் தொட்டுவிட்டுப் புறப்பட்டார். லக்ஷ்மணன் வில்லின் நாணைக் கழற்றிப் பழையபடி தோளில் மாட்டிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தான். இருவரும் கிராம எல்லையைத் தாண்டும் வரை மௌனமாகவே சென்றனர். அதற்கு மேலும் தன் மனக் கொந்தளிப்பை அடக்க முடியாமல் லக்ஷ்மணன், “அண்ணா ! என்ன பரிதாபம் இது! மனிதர்கள் புழுக்களைப் போலாகிவிட்டார்களே!” என்றான்.

ஸ்ரீராமன் புன்னகையுடன் அவனைப் பார்த்துஅவர்களை மறுபடியும் மனிதர்களாக்கத்தான் இப்போது நாம் லங்கைக்குப் போகிறோம். ஜானகிக்காக மாத்திரமல்லஎன்றார்.

இவ்வாறு கதையை முடித்து நிறுத்தினார் சுயம்பிரகாசர். இந்தக் கதையை அவர் மனத்தில் தூண்டிய சம்பவத்தைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டும் என்று இதுவரை நாலைந்து தடவை முயன்றேன். ஆனால் இது வரை கேட்கவில்லை.

கதை பற்றிய ஆய்வு.

இக்கதை நவீனத்துவ முறையில் முடிவுகளை வாசகர்கள் ஊகிக்கட்டும் என்று விட்டு விடுகிறது. கதை எழுதப்பட்ட காலமோ, வெளி வந்த காலமோ அறியாமல் கதையில் உள்ள உருவகங்கள் எதைக் குறிக்கின்றன என்பது தெ(ரி)ளியவில்லை.

//இந்தக் கதையை அவர் மனத்தில் தூண்டிய சம்பவத்தைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டும்//

சுயம்பிரகாசர் என்பது ஜெயப்ரகாஷ் நாராயண் பெயரோடு ஒத்துப் போவதால் இது 1975 எமெர்ஜென்ஸி காலத்தில் எழுதியதாக இருக்கலாம் என்று தோன்றியது. வானர சேனை மாணவர்கள் எனவும் ராவணன் இந்திரா எனவும் உருவகப் படுத்தலாம் என்றாலும் கதையின் படி உள்ள ராம லக்ஷ்மணர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை (அக்கால தலைவர்கள் நிதிஷ் குமாரையும், லாலுவையும் ராம லக்ஷ்மணர்களாக உருவகம் செய்வது ஒப்புக் கொள்ளும் வகையில் இல்லை).

இலங்கை ஆகியதால் ஈழப்போர் பற்றிய கதையாக இருக்கலாம் என்றால், ஆசிரியர் போர் துவங்கும் முன்பே 1983இல் மறைந்து விட்டார் என்பதால் சரியாகவில்லை.

பங்களா தேச விடுதலைப் போர் என்றால், கொஞ்சம் ஒத்துப் போகும் என்றாலும் பிரதமர் இந்திராவை ராமனுடைய உருவாகக் கற்பனை செய்ய முடியவில்லை.

சுதந்திர போராட்டம் என்பது கொஞ்சம் ஒத்துப்போகிறது. சுபாஷ் சந்திர போஸை ராமனாகவும், பாரத மாதாவை சீதையாகவும், ஆங்கிலேய  அரசை ராவணன் ஆகவும் இந்திய தேசிய சேனை (INA) வானர சேனையாகவும் உருவகப்படுத்த முடிகிறது என்றாலும் போஸ் படையெடுக்காமலேயே இறந்ததால் அவரை ராமனாக சித்தரிக்க இயலவில்லை.

ஆக கதையின் முடிச்சு புதிராக இருந்தாலும், சிந்தனைகளுக்கு உயிரூட்டம் கொடுப்பதால்தான் சிறக்கிறது. சிறுகதை சிறந்த கதை என்று மாறுகிறது.

வாசகர்கள் சரியான உருவகத்தை கண்டுபிடிக்க முடிந்தால் மிக்க மகிழ்ச்சி. மற்றவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.   பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

ஆசிரியர் பற்றிய குறிப்பு

ஆசிரியர் : பி எஸ் ராமையா (1905 - 1983)வத்தலகுண்டு என்ற ஊரை சார்ந்தவர். சுமார் 300 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய இரண்டு நாடகங்கள், ப்ரெசிடெண்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள் ஆகியவை மிகப்பெரிய வெற்றி பெற்று, திரைப்படமாகவும்  தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன. 1935 முதல் 1938 வரை மணிக்கொடி இதழின் ஆசிரியராக பணியாற்றினார். மணிக்கொடிக்  காலம் என்ற நூலுக்காக சாஹித்திய அகாடமி பரிசு பெற்றவர்.

 புதுமைப் பித்தனும், செல்லப்பா வும் இவருடைய உற்ற நண்பர்கள்.

இவர் செய்யாத வேலை இல்லை எனலாம். ஜவுளிக்கடையில் விற்பனையாளர், ஆர்ய பவன் ஹோட்டல் சர்வர், காங்கிரஸ் தொண்டர் படை வீரர், கதர் விற்பனையாளர்சுதந்திர இலக்கிய புத்தக விற்பனையாளர், சிறுகதை, நாடக எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், சினிமா இயக்குனர், சினிமா தயாரிப்பாளர் என்று பல வேலைகள் செய்தவர்.  மணிக்கொடி இதழ் (டிசம்பர் 3, 1934) முதல் பக்கம்


42 கருத்துகள்:

 1. பாசிடிவ் செய்திகள் மனதைக் கவர்ந்தன

  பதிலளிநீக்கு
 2. // அவரது குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்து விட்டுச் சென்றனர். //

  // பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, 80 வயது பெண், ஆதரவற்ற நிலையில் படுத்தே கிடக்கிறார்.. //

  மருத்துவ மனையில் சேர்ப்பது என்பது தண்ணீர் தொட்டிக்குப் பக்கத்திலா?..

  ஒன்னும் புரியலையே..

  கண்டும் காணாமல் போகின்ற மருத்துவப் பணியாளர்களின்
  கண்களோடு
  இதயங்களும் இயங்காமல் போய் விட்டனவோ!..

  பாவம் அந்த மூதாட்டி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருத்துவமனையில் வார்டுகள், படுக்கைகள் நிரம்பி இருக்கும்.  எனவே ஆங்காங்கு இருக்கும் திங்களில் படுத்துக்க காத்திருப்பார்கள்!  சோகமான நிலைதான்.

   நீக்கு
  2. //திங்களில் படுத்துக்க// திண்ணையில்?

   நீக்கு
 3. செவிலியர் மகாலட்சுமியை வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்து நற்செய்திகளுக்கும் நன்றி. பெரம்பலூர் மூதாட்டி பற்றி தினமலரிலும் படித்த நினைவு. இப்போ இருக்காரோ இல்லையோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  செய்தித்தாளில் வருவதைத்தானே எடுத்துக் போடுகிறோம்..!!! :))

   நீக்கு
 5. இப்போச் சில நாட்களாக இணையம் சரிவர வருவதில்லை. நேற்று கணினியைத் திறக்கும்போதெல்லாம் இணையம் போய்க் கொண்டிருந்தது. மொபைல் டாடாவை ஆன் செய்து ஓரிரு முகநூல் பக்கங்கள், வாட்சப் குழுமச் செய்திகள் என்று தான் பார்க்க முடிந்தது. இன்றும் காலையிலிருந்து இணையம் இல்லாமல் இப்போத் தான் ஒன்பது மணிக்கு வந்தது. நம்மவர் தான் பாவம்! ஐபாடைக் கையில் வைத்துக் கொண்டு முழிச்சுண்டு இருந்தார். பேப்பரும் எட்டரைக்குத் தான் வந்தது! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன்?  உங்கள் இணைய இணைப்பாளரைத் தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள்.

   நீக்கு
  2. அவருக்கே அலுத்துப் போயிருக்கும் வந்து வந்து பார்த்துட்டுத் திரும்பிப் போவதற்கு! :))))) கடைசியில் தானாகவே சரியாகி இருக்கு. எத்தனை நாளோ தெரியலை.

   நீக்கு
 6. போயிட்டு அப்புறமா வரேன். வாழைத்தண்டு சாலட் பண்ண நினைச்சு மறந்துட்டேன். சாப்பிடறதுக்குள்ளே வேணும். பண்ணிச் சாப்பிட்டுவிட்டு வரேன். இணையம் இருக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேசிக்காய் பிழிஞ்சீங்களா?  வெந்தயப்பொடி?  பெருங்காயம்?!!

   நீக்கு
  2. வெந்தயப் பொடி போடலை. மத்தது இரண்டும் போட்டுக் கடுகு, ப.மி. தாளிச்சேன். சும்மாவே சாப்பிட்டதில் தீர்ந்தும் போச்சு! :)

   நீக்கு
 7. மனித நேயம் மகாலஷ்மிகள் வாழவேண்டும் பல்லாண்டுகள்.

  'அவர்களை மறுபடியும் மனிதர்களாக்கத்தான் இப்போது நாம் லங்கைக்குப் போகிறோம். ஜானகிக்காக மாத்திரமல்ல” என்றார்.நல்லதோர் புதுக்கருத்தை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன் இலங்காபுரி இராட்சதர் வாழும் பூமி அவர்கள் இதயங்களை மாற்ற ராமர் எண்ணங் கொண்டார் என்ற கருத்து சரியாக இருந்திருக்கும் என தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நன்றி மாதேவி. படிச்ச கதை பற்றிய முதல் கமெண்ட்!

   நீக்கு
 8. மனிதநேயம் மிக்க செவிலியரின் செயல் பாராட்டத்தக்கது. பாசிட்டிவ் செய்திகள் சிறப்பு. கதை குறித்த தகவல்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 9. வல்லிம்மா இணையம் பக்கம் வரமுடியாததாலும்,

  கீதா ரெங்கனை இன்னும் காணாததாலும்,

  அனைத்தையும் படித்து விரிவான கருத்துரைக்கும் கமலா அக்காவையு இன்னும் காணாததாலும்,

  ஜீவி ஸார் சமீபத்தில் இந்தப் பக்கம் வருவதே இல்லை என்பதாலும்...

  கோமதி அக்காவையும் காணாததாலும்...


  ................................................................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே! நாங்கல்லாம் கணக்கிலேயே வரமாட்டோமுல்ல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வல்லி ரொம்ப பிசி. காலம்பரத்தான் பேசினேன். ஶ்ரீரங்கம் வருகை நிச்சயமில்லை என்கிறார். என்னவோ போங்க!

   நீக்கு
  2. வந்துட்டீங்கங்கறதால சொல்லலை! கோச்சுக்காதீங்க.. வராதவங்க அட்டெண்டன்ஸ் மட்டும் எடுத்தேன்.

   நீக்கு
  3. நேற்று வீட்டு வேலைகள் வெளியில் செல்லல்...கணவருக்கு பவர் பாயின்ட் செய்தல் என்று....அதான் வந்தும் வராததும் போல போயிற்று..கீதாக்கா. வருகிறேன் இப்போது ஆனால் இந்த நேரம் என்றில்லாமல் எப்போது முடிகிறதோ அப்போது வந்து பிட் பிட்டாகக் கருத்துகளைப் போட்டு விட்டுப் போகிறேன். இடையில் கருத்துகள் போவதுமில்லை. காத்திருக்க நேரமின்றி பின்னர் வந்து போடுகிறேன்.

   ...இன்றும் வெளியில் செல்ல வேண்டும். மல்லேஸ்வரம். மைத்துனரின் சம்பந்தி வீட்டிற்கு. மைத்துனரின் மகள், மகன் இருவரும் 5 ஆம் தேதி அமெரிக்கா செல்வதால்,

   அதான் இப்போதே கருத்து எல்லாம் போட்டு விட்டு ஓடுகிறேன். அடுத்த பதிவு தொடர் பதிவின் பகுதியான ராமகிரி கோயில் பற்றி வேறு எழுத நினைத்து நேரம் இல்லாமல் போகிறது. வந்துதான் எழுத வேண்டும்..

   கீதா

   நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

   நேற்று என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும். என்னை அனைவரும் தேடியதற்கு நன்றி. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தேர்ந்தெடுத்த கதையும் வித்தியாசமாக இருந்தது.

   கதையை தெய்வீக வழியில் மட்டும் பார்த்தோமானால் இறைவன் மனிதனாக அவதரிப்பதின் நோக்கம் மனிதர்களை நல்வழிப்படுத்த மட்டுந்தான் என்ற ரீதியில் சிந்திக்கத் தோன்றியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. விருந்தினர் வருகையால் வலை பக்கம் வர முடியவில்லை.
   என்னை தேடியதற்கு நன்றி.
   காலை நேரமும் இப்போது வர முடிவது இல்லை. உறவுகள், நட்புகள் காலையில் போன் செய்து பேசுகிறார்கள்.

   நீக்கு
 10. கமலாவுக்கு உடம்பு சரியில்லையோ என்னமோ! கோமதி சில நாட்களாக மாலையில் தான் வரார். தி/கீ. எப்போவானும் கண்ணில் படறார்.

  பதிலளிநீக்கு
 11. மகா லஷ்மி மனதை நெகிழ வைத்துவிட்டார். மனித நேயம் இன்னும் உயிர் வாழ்கிறது. வாழ்த்துகள் மகாலஷ்மிக்கு

  அனைத்துச் செய்திகளும் அருமை

  கீதா

  பதிலளிநீக்கு
 12. கதையைப் பற்றி நேற்று போட்ட கருத்து வரவே இல்லை போல...

  இந்தக் கதை வேறு ஒரு வகையைல் சிறு வயதில் கேட்ட நினைவு.

  ஜெ கே அண்ணாவின் கதை ஆராய்ச்சி அருமை... இலங்கைக்கு ஒத்து வருகிறதோ என்று தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 13. முதல் இரண்டு செய்திகள்: பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி. நடமாடும் பள்ளி நல்லதொரு முயற்சி. பகிர்ந்த கதை சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 14. பாசிடிவ் செய்திகள் இரண்டும் அருமை, மனிதநேயம் உள்ள இருவருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. கதை பகிர்வு இப்போதுதான் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 16. மருத்துவர் தம்பையா அவர்களை நன்கு அறிவேன். போற்றுதலுக்கு உரிய மனிதர்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!