வெள்ளி, 15 ஜூலை, 2022

வெள்ளி வீடியோ : பருவம் அடைந்த கனவு இவள் சலங்கை அணிந்த நிலவு...

 எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்கள் பல அன்று ரேடியோவில் கேட்டுவிட்டு, அவற்றை மறுபடி இன்று கேட்க நினைத்து தேடும்போது கிடைக்காமல் போயிருக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து கிடைத்தும் இருக்கின்றன.  நான் தேடியபோது அவற்றை யாரும் வலையேற்றிருக்கவில்லை. 

அப்புறம் கொஞ்ச நாட்கள் கழித்துத் தேடியபோது சட்டெனக் கிடைத்தது!  அந்த வகையில் ஒரு பாடல். 

வேளாங்கண்ணி அன்னையைப் பற்றிய ஒரு பாடல்.  எஸ் பி பி  குரலும்,இசையும், வரிகளும் அழகாய் அமைந்த பாடல் ஒன்று.

வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன் 
வானவர் தாய் என நான் அடுத்தேன் 
தங்கத் தமிழ்நாட்டில்  வேளைநகர் தன்னில் 
தாயாக வந்த எங்கள் ஆரோக்கிய மாதாவே  . 

எங்கெணும் உன் புகழ் திருகீதமே 
மக்கள் இதயம் கசிந்து கண்ணீர் கதை கூறுமே 
மங்கள பண்பாடும் எந்தன் நெஞ்சம் 
திகழ்பிறை சூடும் உந்தன் திருப்பாதமே   

பல கோடி மக்களுக்குப் பார்வை தந்தாய் 
நடமாடும் முடவர்க்கும் அருள் புரிந்தாய் 
நலம் காண ஊமையைப் பேச வைத்தாய் 
மரக்கலம் போலத் தவித்தோரை வாழவைத்தாய்  

காணிக்கைப் பொருள் கோடி காவியம் கூறும் 
கழல் பணிந்தோர்க்குப் பசி நோயெல்லாம் தீரும் 
மாணிக்க மேடை உந்தன் திருக்கோவில் 
மலர்ப்பதம் பாராமல் தீராதென் ஆவல்&&&&&&&&&&&&&&&&&&&&


1986 ல் வெளியான திரைப்படம் 'சலங்கையில் ஒரு சங்கீதம்'.    மோகன்-பானுப்ரியா நடித்த  இந்தப் படத்தை இயக்கிய வம்சி  ஒரிஜினலாக இதைத் தந்தது - தெலுங்கில் ஆலாபனா என்கிற பெயரில்.  

தெலுங்கில்    சிதாரா படம் மூலம் பானுப்ரியாவை முதலில் அறிமுகம் செய்தவர் இவர்.

இவரும் இளையராஜாவும் இணைந்த கூட்டணி அந்நேரங்களில் தெலுங்கில் ஆட்சி செய்தது.  சிதாரா படப்பாடல்களும் அருமையாக இருக்கும்.   வம்சி சங்கராபரணம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.  இவர்  .எழுத்தாளரும் கூட.  இவர் தான் எழுதிய கதைகளையேயும் படமாக எடுத்திருக்கிறார்.

இந்தப் பாடலில் இளையாராஜா- எஸ் பி பி ராஜாங்கம்தான்.  இதே படத்தில் வரும் இன்னும் இரண்டு பாடல்கள்  கூட நன்றாய் இருக்கும்.  ஆனால் இந்தப் பாடல்   முதலிடத்தில். 

காட்சியோடு பாடலைக் கேட்க இங்கு சுட்டலாம்காட்சி சுவையாக இல்லை.  நான் பாடல் மட்டும் கேட்கும் இணைப்பு கீழே தந்துள்ளேன்.  பாடலைக் கேட்க நான் சிபாரிசு செய்வது காட்சி இல்லா காணொளிதான்!

வைரமுத்து பாடலுக்கு இளையராஜா இசை.

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ 
இனியவளே
உன் மௌனம் கூட ராகங்கள் தானா
தேவி என் தேவி சொல்வாயோ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சி தானே
நான் மீட்டும் வீணை உன் மேனி மானே
உனக்காகத் தானே ஆலாபனை
என் பாடல் உந்தன் ஆராதனை
மலர்கள் திறந்த போது அதில் பிறந்து வளர்ந்த மாது
பருவம் அடைந்த கனவு இவள் சலங்கை அணிந்த நிலவு
இதய வீட்டின் தீபம் இவளன்றோ

மயில் ஆடக் கண்டு மழை வந்ததென்ன
ரயில் பாதை எல்லாம் ரதம் வந்ததென்ன
பூக் காடு எல்லாம் உந்தன் நிழல்
மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்
உறங்கிக் கிடந்த ராகம் இன்று உன்னை நினைந்து பாடும்
கலைந்து போன மேகம் இன்று வானில் வந்து கூடும்
பழகும் இதயம் உன்னை பிரியுமோ

25 கருத்துகள்:

 1. இரண்டும் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை.

  இரண்டுமே நான் இதுவரை கேட்டதில்லை. இப்போது எஸ். பி. பியின் அருமையான குரல் என்றதும் உடனே ரசித்து கேட்டேன். பொதுவாகவே நடிகர் மோகன் படப்பாடல்கள் அனைத்துமே எப்போதுமே ஹிட்தான். அதிலும் எஸ். பி அவர்களும் இணைந்து விட்டால் நல்ல ஹிட்டாகத்தான் அமையும். நானும் அந்த மாதிரி பாடல்களை நிறைய கேட்டுள்ளேன். இன்று பகிர்ந்த பாடலும் இசையும் அருமையாக உள்ளது. இரு பாடல்களையும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடல் கேட்டிருக்கக் கூடிய சாத்தியம் குறைவுதான். அதேபோல இரண்டாவது பாடலும் டப்பிங் படம் என்பதால் பெரும்பாலானோர் கவனத்தைப் பெற்றிருக்காது! இரண்டையும் கேட்டு கருத்மு சொன்னதற்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. முதல் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
  வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
  அடுத்த பாடல் சில முறை கேட்டு இருக்கிறேன்.
  இனிமையான குரலில் பாடல் அருமை.
  இரண்டு பாடல்களும் கேட்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு பாடல்களும் கேட்டிருப்பது சிறப்பு. நன்றி அக்கா.

   நீக்கு
 6. முதல் பாடல் ஒருதடவை கேட்ட நினைவு. இரண்டாவது இப்பொழுதுதான் கேட்டேன். அருமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வணக்கம்..

  வாழ்க வளமுடன்
  வாழ்க வையகம்..

  பதிலளிநீக்கு
 8. காலையில் வந்தும் இணைய பிரச்னை..

  பதிலளிநீக்கு
 9. இன்றைய தேர்வுகளில் மனம் பதியவில்லை..

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீராம்முதல் பாடல் கேட்டிருக்கிறேன். எஸ்பிபி குரல் அருமை.

  இரண்டாவது பாடலும் நிறைய கேட்டதில்லை. ஆனால் கேட்டிருக்கிறேன். இர்ண்டாவது பாடல் ஆரம்பம் கேட்டதும் பாடல் இப்படித் தொண்டங்குமோ என்று முதலில் ஏமாந்தேன்...ஹாஹாஹா...

  இதை ஒட்டிய என் சின்ன வயது நினைவு...பாடலுக்கு முன் ஹம்மிங்க் அல்லது ஏதேனும் வந்தால் ரேடியோ வால்யூமைக் குறைத்துவிட்டு என்னை தள்ளிக் கூட்டிக் கொண்டு சென்று பாட்டு எப்படித் தொடங்கும் என்று என்னைக் கேட்பார்கள் எங்கள் வீட்டு என் வயதை ஒத்த அப்போதைய வாண்டுகள். நாங்கள் 8 பேராச்சே!!...பாட்டு வரிகள் இல்லை...ட்யூன்...
  சரியாகத் தனனனானா என்று பாடிக் காட்டவில்லை என்றால் அதாவது ட்யூன் / மெட்டு...எனக்குக் கூடுதல் ரெக்கார்ட் வரையும் வேலை அதாவது அவர்களுக்கு வரைந்து கொடுக்க வேண்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் சிறுவயது அனுபவங்கள் சுவாராஸ்யம் கீதா.

   நீக்கு
 11. இரண்டாவது பாடல் கேட்ட நினைவு இருக்கிறது ஆனால் அதிகம் இல்லை ஆனால் முதல் பாடல் கேட்டதில்லை.

  இப்போதுதான் கேட்கிறேன், ஸ்ரீராம்ஜி. நன்றாக இருக்கின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!