வியாழன், 21 ஜூலை, 2022

கொஞ்சம் சத்தமாய்ப் பேசுங்க...

 கதவு மூடி இருக்கிறது.  வெளியிலிருந்து பார்த்தால் ஹாலில் அவர் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. 

சற்றேறக்குறைய வெளியிலிருந்து பார்பபவர்களுக்கு  முதுகைக் காட்டி அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இவர்களால் அவரை ஹால் ஜன்னல் வழியே பார்க்க முடிகிறது.  அவரை அழைத்து கதவைத் திறக்கச் சொல்ல வேண்டும்.


அதுதான் சிரமம்.

ஏன்?

அவருக்கு காது கேட்காது.

கைதட்டிப் பார்த்து, கதவைத் தட்டு தட்டு என்று தட்டிப்பார்த்து, காலிங்பெல் அடித்துப் பார்த்து...  கத்திப் பார்த்து, கதறிப் பார்த்து...ஊஊஹும்!

குச்சி எடுத்து தொட முயற்சிக்கலாம் என்றால் உயரமும் கோணமும் போதாது!
அவராவது அவ்வப்போது திருப்பி வாசலையாவது பார்க்கவேண்டும்.  நமக்குதான் காது கேட்காதே..  யாராவது அழைத்தால் என்ன செய்வது என்று..  ஆனால் அவர் காது கேட்கவில்லை என்று ஒத்துக் கொள்ள மாட்டார்!

கடைசியில் ஒருவர் சரியாய் யோசித்து எறிந்த சிறு கல் வெற்றிலை பாக்கு இருக்கும் பேசினில் பட்டு நகர்த்த திரும்பிப் பார்த்தார்!

வந்து கதவைத் திறந்தவர், வெளியில் வெற்றிலைச்சாறைத் துப்பிவிட்டு, 

"கொஞ்சம் சத்தமாய் குரல் கொடுத்தால் கேட்டிருக்குமே.."

கிர்ர்ர்ர்ர்ர்...

காது கேட்காமல் இருப்பது பெரிய பிரச்னை.  சம்பந்தப்பட்டவர்களை விட சார்ந்தவர்களுக்கு அதிக பிரச்னை! பிறவியிலிருந்தே காது கேட்காமல் போவது ஒரு வகை.  அவர்கள் சமாளித்துக் கொண்டு வளர்ந்து விடுவார்கள்.  திடீரென காது கேட்காமல் போவதைதான் ஜீரணித்துக் கொள்ளவோ, தாங்கவோ முடியாமல் போகும்.

திடீரென கேட்காமல் போகும்போது, அதை நண்பர்கள், உறவுகள் சுட்டிக் காட்டும்போது ஏற்றுக்கொள்ளத்தோன்றாது.  சின்னதாகச் சொன்னீர்கள், தெளிவாகச் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லி சமாளிக்க தோன்றும். 

மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் இந்த காது கேட்காத பிரச்னையை வைத்து ஏகப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் அமைத்திருப்பார்கள்.  சிரித்து ரசிக்கலாம்.  ஆனால் நமக்கே வரும்போது சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இரண்டு மூன்று வருடங்களாக என் இடது காது அவ்வப்போது சற்றே (ஹிஹிஹி...  நிஜமா சற்றுதான்) கேட்காமல் போகும்.  குறிப்பாக பனி, குளிர்க் காலங்களில்.  காதுக்கு கீழே ஒரு விரலை வைத்து அழுத்திக் கொண்டால், அல்லது சற்று இழுத்த மாதிரிப் பிடித்துக்கொண்டால் கொஞ்சம் கேட்கும்.

அந்த சைகையிலேயே நம் காது கேட்கவில்லை என்று புரிந்து, எதிராள் சற்று உரக்க பேசும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.  சமயங்களில் திடீரென சரியாகி விடும்.  ஆனால் என் அம்மா உட்பட மூத்த உறவுகளில் சிலருக்கு காது கேட்காத பிரச்னை உண்டு.  ஏதோ இந்த வருடம் நான் அந்தப் பிரச்னையை அதிகம் சந்திக்கவில்லை!  

காதில் அழுக்கெடுத்தால் சமயங்களில் சரியாகி விடும்.  இரண்டு மூன்று நாட்கள் மூன்று நான்கு வேளை வேக்ஸ் காது மருந்து போட்டுக்கொண்டு, காது மருத்துவரை போய் பார்த்தால் சமயங்களில் அழுக்கை வலிக்க வலிக்க சுரண்டி எடுத்து விடுவார்!  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என் இளைய மகனே அப்படி சரி செய்து கொண்டான்.  அப்புறம் என் அண்ணன் மகனும்!  நான் போகவில்லை!

அதுவும் கொஞ்ச நாட்களாய் காது சரியாய்க் கேட்கும் அகம்பாவம் வேறு...

நான் கேட்ட சம்பவம் ஒன்று.  அது ஒரு அபார்ட்மெண்ட்.  வீட்டில் மாமனார் தூங்கி கொண்டிருக்க, குப்பை கொட்ட வெளியில் செல்கிறாள் மருமகள்.  வீட்டில் வேறு யாரும் இல்லை.  இவள் வெளியே கீழே இறங்கிச் சென்றதும் கதவு எதிர்பாராவிதமாக மூடிக் கொள்கிறது.  ஆட்டோமேட்டிக் கதவு.  சாவி உள்ளே.  குப்பை கொட்டப் போகும்போது கதவு மூடிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கவா முடியும்?

குப்பையை வண்டியில் சேர்த்து,  ஏறி மேலே வந்த மருமகள் மூடிக் கொண்டிருக்கும் கதவைப் பார்த்து திகைத்துப் போய்விடுகிறாள்.  காது கேட்காத, அதுவும் தூங்கிக் கொண்டிருக்கும் மாமனாரை எப்படி எழுப்ப?  

கிச்சனில் ஒரு அடுப்பில் பாலும், இன்னொரு அடுப்பில் குக்கரும்.  

டென்ஷன்   ஏறுகிறது.  அருகாமை வீடுகளும் கூடிவிட,  அன்றைய அந்தப் பிரச்னை தீர்ந்தபோது அவர்கள் எவ்வளவு பெரிய பெருமூச்சை வெளியேற்றி இருப்பார்கள்!  இது மாதிரி இனி நேர்ந்தால் என்ன செய்வது என்று ஒரு தீர்வும் கண்டிருப்பார்கள்!  குறைந்த பட்சம் எக்ஸ்ட்ரா ஒரு சாவி நகல் எடுத்து பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்திருக்கலாம்!

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது என் அம்மாவுக்கு திடீரென காது கேட்காமல் போனது.

நாங்கள் பேசுவது அம்மாவுக்கு கேட்கவில்லை என்பதே நம்ப முடியாமல் இருந்தது.  பேப்பரை ஸ்பீக்கர் போல செய்தெல்லாம் காதில் வைத்துக் கத்தி இருக்கிறோம்.    அம்மாவுக்கு வேதனை இருந்ததோ இல்லையோ, தெரியாது...  வேடிக்கையாகச் சிரிப்பார்.


கோயம்புத்தூரில் சாமிகிரி சித்தர் என்று ஒருவர் இருந்தார்.  அப்பா, அம்மாவை   அவரிடம் அழைத்துப் போனார்.  சித்த வைத்தியரா, சித்தரா என்றெல்லாம் நினைவில்லை. அங்கேயே இரண்டு நாட்களோ, ஒரு வாரமோ தங்கியிருந்து சிகிச்சை.  ஏதேதோ எண்ணெயெல்லாம் காதில் சூடாய் ஊற்றினார் என்று அம்மா சொல்வார்.  அதைவிட அம்மா மிக வருத்தப்பட்டு சொன்னது அந்த 'சித்தரி'ன் பொறுமையின்மையையும் கோபத்தையும்.  சள்சள்ளென்று விழுவதோடு மிகவும் இன்சல்டிங்காய் பேசுவாராம்.

கடைசியில் அம்மாவை குணப்படுத்த முடியாது என்று அவர் அனுப்பி விட்டார். 

அப்பா ஆபீஸ் செல்ல வேண்டும்.  நான் என் அண்ணன், ன் தங்கை பள்ளி கல்லூரிக்கு செல்ல வேண்டும்.  அம்மா மட்டும் தனியாய் வீட்டில் இருப்பார்.  நாங்கள் மதியமோ, மாலையோ வீடு வந்தால் அம்மாவுக்கு எப்படித் தெரிய வைப்பது?  வாசலைப் பார்த்தவாறு ஜன்னல் எதுவும் கிடையாது.  தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் முதல் தளத்தில் வீடு.  ரோடை ஒட்டி எங்கள் பிளாக்!  ஒன்றாம் பிளாக்!  பால்கனியிலிருந்து பார்த்தால் ஏழாம் நம்பர் பஸ் வாசலில் நிற்பது தெரியும். அது சுவாரஸ்யமாக இருந்தாலும் பாதுகாப்பில்லாமல் இருப்பதாகவும் மனதுக்குள் கிலேசம்!

பக்கத்து வீடோ, எதிர் வீடோ...   அம்மா யாரையும் அனாவசியமாக நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தார்.  அவர்கள் ஏதாவது பேசி விட்டால்...   உதடு அசைவதை தனது கண்கள் பார்த்து விட்டால் பதில் ஏதாவது சொல்ல வேண்டிய சங்கடம் வந்து விடுமே...  அம்மாவின் இந்த சங்கடம் எங்கள் மனதையும் வருத்தியது.   எங்களுக்குத் தெரிந்த அம்மா பக்கத்து வீடுகளின் சினேகிதி.  அம்மாவின் தனிமை நேரங்கள் கூடியது. 

நான் அப்போது அடிக்கடி ஒரு விளையாட்டு விளையாடுவேன்.  சோடா மூடியில் இரு துளைகள் செய்து அதில் நல்ல கனமான நூல் கோர்த்து இரு முனைகளையும் இணைத்து, நன்கு முறுக்கி, ஒரு நிலையில் அதை இழுத்தால் சோடா மூடி ஜிவ்... ஜிவ் என்று நூலின் நடுவே சுழலும்.  பார்க்க அழகாய் இருக்கும்.  சோடா மூடியில் கலர் டிசைன்  கொடுத்தால் இன்னும் அழகாய் இருக்கும். அந்த சத்தமும், முகத்தின் அருகே அதை வைத்துக் கொண்டால் ஜிவ் சத்தத்தோடு வரும் லேசான காற்றும் மயங்க வைக்கும்.

ஒரு நாள் இரவு பாடம் படித்துக் கொண்டே அதை இழுத்துக் கொண்டு, அருகில் உட்கார்ந்திருந்த  அம்மா கையில் படுமாறு வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அதை வைத்தே எனக்கு ஒரு ஐடியா தோன்றியது.

அதன்படி இரண்டு சோடா மூடிகளை எடுத்தேன்.  அதில் நடுவே  துளையிட்டு மிக நீண்ட நூலால் இணைத்தேன்.  இந்த முனையில் ஒரு சோடா மூடி.  அந்த முனையில் ஒரு சோடா மூடி.  ஒரு முனையை வாசலில் காலிங் பெல் வொயர் இருக்கும் சிறு துளை வழியே வெளியே இழுத்து, அங்கே ஒரு சிறிய ஸ்வாமி படம் மாட்டி இருக்கும், அதன் பின்னே அது மறைவாய்த் தொங்குமாறு அமைத்தேன்.  மறுமுனை அம்மாவின் கையில்!  வேண்டும்போது  கையில் மாட்டிக்கொள்ளுமாறு  நூல் வளையத்தில் சோடா மூடியை இணைத்து, அதன் வழுவழு பின்புறம் அம்மா கையில் படுமாறு அமைத்தேன்.  நீளமான கயிறு எதற்கென்றால் தனியாய் இருக்கும் அம்மா, ஹால், சமையலறை, பாத்ரூம், என்று எங்கு சென்றாலும், எங்கு இருந்தாலும் இறுக்காமல் தொளதொளவென்றிருக்க..  நாங்கள் வெளியே சென்றதும் அம்மா எப்போது கதவை மூடிக் கொள்கிறாரோ அப்போது இதைக் கையில் மாட்டிக் கொண்டால் போதும்.  தொளதொளவென்றிருக்கும் நூல் திடீரென இறுகி, கையில் இடிக்கும்போது யாரோ வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்!  அம்மா எழுந்து வரலாம்!

சரி, யார் வந்திருப்பது என்று எப்படி அறிய?  இந்த' நூல் சோடாமூடி' இருப்பது எனக்கு, அண்ணனுக்கு, தங்கைக்கு, அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.  வேறு யாருக்கும் தெரியாது.  தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.  அதற்காகவே விளக்கம் கொடுக்கும்போது கத்தாமல் பேப்பரில் எழுதிதான் அம்மாவிடம் விளக்கினேன்.   செயல்முறை விளக்கமும் கொடுத்தேன்.  ஒரே முறை இழுபட்டால் அப்பா.  அது பெரும்பாலும் அதிசயம்.  அப்பா வருவதற்கு முன் நாங்கள் யாராவது வந்து விடுவோம்.  பொறுப்பெடுத்துக் கொண்டு விடுவோம்.  இரண்டு முறை இழுபட்டால் அண்ணன்.  மூன்று முறை என்றால் நான், நான்கு முறை என்றால் என் தங்கை.  எங்கள் நண்பர்கள் கூட இருந்தால் கூட அந்த நூலை நாங்கள் வெளிக் கொணர மாட்டோம்.  அது எங்களுக்குள்ளேயே இருந்தது.

இது என்ன பெரிய ஏற்பாடு என்று தோன்றுகிறதா?  ஆனால் அம்மாவுக்கு இது மிகவும் ரிலீஃபாக இருந்தது.  நிம்மதியாக ஓய்வெடுக்க முடிந்தது.  மிசா கால இந்தியா போல எங்களுக்குள்ளும் ஒரு ஒழுங்கு முறை நிலவியது.  நாங்கள் வீடு திரும்பும் நேரம் நாங்கள் கிளம்பும்போதே சொல்லி வைத்திருக்கும் நேரப்படி அம்மா எதிர்பார்க்கும் நேரமாகவே இருக்கும்.  முன்னதாக வந்து குழப்பக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அப்படி முன்னதாக வந்து விட்டாலும் சற்று வெளியே காத்திருப்போம். 

அப்புறம் அம்மா காதில் மெஷின் வைத்துக் கொண்டார்.  மெஷின் வந்து அம்மா காதில் நாங்கள் பேசியது (மறுபடி) விழுந்தபோது அம்மா முகத்தில் தெரிந்த சந்தோஷம், நிம்மதியைப் பார்க்க வேண்டுமே..  அந்த மெஷின் வைத்துக் கொள்வதில் சிறு சிறு தொந்தரவுகள் எல்லாம் இருந்தன.  அதையும் பொறுத்துக்க கொண்டுதான் அம்மா அதை வைத்திருந்தார்.  ஆனாலும் ஏதோ காதில் விழுகிறதே என்கிற சந்தோஷம்..

========================================================================================================

இவரைத் தெரியுமா?  படித்திருக்கிறீர்களா?  நான் "பிரான்சிஸ் இட்டிக்கோரா" என்று ஒரே ஒரு நாவல் படித்திருக்கிறேன்.




இலக்கியவாதிகளின் மன உணர்வுகள் எப்பொழுதும் விசாலமானவை. பதிவுகளில் இருந்து வெளிவருகின்ற அனைத்து விடயங்களினதும் இன்பமானது, அவனது எழுத்துக்களின் வீரியத்திலிருந்தே உருவாகின்றன. இதுவே எழுத்தாளர்கள் கொண்டிருக்கின்ற மாய விம்பமாகும். இவ் விம்பத்திலிருந்து தங்களை விடுவிக்காமல், தங்களது எழுத்துக்களை எப்பொழுதும் மிக நேர்த்தியாக நேசிக்கின்ற, ஒரு படைப்பாளனால் மட்டுமே தரமான இலக்கியங்களைத் தர முடியும்.

அவ்வகையில் மலையகத்தின் கவனயீர்ப்பிற்குரிய மிக முக்கியமான படைப்பாளிதான் ட்டி.டி.ராமகிருஷ்ணன். தற்கால தமிழ் படைப்பிலக்கியத்தின் வாசகக் குழுமம் அனைவராலும் அறியப்பட்ட ஆளுமையாவார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் குன்னம் குளத்திற்கு அருகிலுள்ள ஏய்யால் கிராமத்தில் பிறந்து, அற்புதமான கதை சொல்லல் மூலமாக எம் மனதினில் நீங்காத இடம் பிடித்தவர்.

புனைவின் மூலதனப் படைப்பாளி. ரயில்வேயின் கண்ட்ரோலராக பணியாற்றும் இவர், 2003ம் ஆண்டு சிறந்த சேவைக்காக ரயில்வே துறையின் தேசிய விருது பெற்றவராவார்.

ஆல்ஃபா, ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா போன்ற நாவல்களை எழுதி, ஷேபா சக்தியின் ஷம் நாவலினை மொழியாக்கமும் செய்துள்ளார்.

இதற்காக பல விருதுகளையும் பெற்ற ட்டி.டி.ராமகிருஷ்ணன் மொழியின் அரசியலினை எழுத்துக்களில் புகுத்திக் கொண்ட லாவகப் படைப்பாளி. 

ஒரு வாசகனுடைய அடையாளம் பற்றி ட்டி.டி.ராமகிருஷ்ணன் குறிப்பிடும் வாக்கு மிக அற்புதமானது.  

எழுதுவதும் வாசிப்பதும் இயல்பான விவாதங்கள் தான் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.

என் முன்னே நேர்மையான கற்பனைத் தன்மையுள்ள ஒரு வாசகன் உண்டு.

அவன் என் கதையை கேட்பதற்கு ஆர்வத்துடன் அமர்ந்திருக்கும் கூட்டாளி, ஒரு கூட்டுக்காரி, ராபர்ட்டோபொலானோவைப் போல் வாசிப்பை நேசிப்பவன், விமர்சிப்பவன், கேள்வி கேட்பவன் ஆனால் புரிந்து கொள்ளக் கூடியவன். அவனிடம் நான் கதை சொல்வதுதான் என் எழுத்து.

இந்த கதை சொல்லல் வெறும் கதை சொல்லல் இல்லை, காரணம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல, கதை சொல்லலின் மூலம் இயல்பான விவாதத்தின் அநேக சாத்தியங்களை ஆராய்வதற்கான தேடல். இதுவே வாசக மனம் கண்டு கொள்ளக் கூடிய பிரதி பற்றிய அரசியல் உரையாடலின் வழி முறையாகும்... 

இவரின் மிகவும் பிரபல்யமான பிரான்ஸிஸ் இட்டிகோரா நாவல் மனோரமா விருது, வைக்கம் முகம்மது பஷீர் விருது, கிருஷ்ணன் குட்டி நினைவு விருது, கோவிலன் விருது, துளுநாடு நாவல் விருது என ஏராளமான விருதினை வென்ற படைப்பாகும். ஒரு படைப்பாளி காலத்தின் விதி அறிந்து தனக்கான பாதையினை செப்பனிட்டுக் கொள்வான். அவனது படைப்புக்களும் காலத்தினை சுவீகரிக்கும் நவீனத்தின் மீது படரக் கூடியவை.

புனைவிலிருந்து மறுதலிக்கக் கூடிய கற்பனை உலகினை மிக நுணுக்கமாக வடித்த படைப்பாளிகள் மலையாள உலகிலே அதிகம் இருக்கின்றனர்.

அதன் வரிசைக் கிரமத்தில் மாயைகளின் விம்பத்தினை நாவல்களின் கதைகளில் ஊடறுத்த ட்டி.டி.ராமகிருஷ்ணன் ஒர் அற்புதமான படைப்பாளியாவார்.

=============================================================================================



ரசனையான புகைப்படம் பகுதியில் 'அன்புடன் சதீஷ்' பக்கத்தில் பார்த்த படம்.
==============================================================================================


இரண்டு மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது...!

ஞாபகம் வருதே....

மேலே படத்தில் பார்த்தீர்களா?  அதில் அஞ்சு பைசா  தெரியுதா?  குமுதத்தில் வந்த தொடர்த் துணுக்கு  அஞ்சு பைசா அம்முவுக்கு உதவும்!  13 பைசா இருந்த பஸ் கட்டணம் 18 பைசாவாக உயர்ந்தபோது ஒரு பத்து பைசா, ஒரு ஐந்து பாஸா, ஒரு இரண்டு பைசா, ஒரு ஒரு பைசா தருவோம்.  கையில் இருபது காசு இருந்தாலும் தரமாட்டோமே...   அவர் இரண்டு பைசா சுலபமாக மிச்சம் தந்து விடுவார்ஹான்.  ஆனால்,

தங்க நிற இருபது பைசா கைக்கு கிடைத்து விட்டால் நம்மை விட்டு வெளியே போகாதே....   சேமிப்பில் சேர்ந்து விடும்.விடும்.  சென்ற இடங்களில் தேங்கி நின்று பொருளாதாரத்தையே கலக்கி விடும்!  கேட்டால் ஆயிரம் தங்க நிற காசு கொண்டு பூஜை செய்கிறோம் என்பார்கள்! 

அப்புறம் எடை குறைந்த 20 பைசாவை வெளியிட்டு பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்தார்கள்!!   இப்போது தாமரைப்பூ பதித்து காசு வெளியிட்டால் கலவரம் ஆகி விடும்!

இரண்டு பைசா, ஒரு பைசா எல்லாம் பஸ்ஸுக்கு மட்டும் இல்லை, யாசகம் செய்யவும் வசதி!  மூன்று பைசா கிடையாது என்பதால் இரண்டு பைசாவையும் ஒரு பைசாவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்!  இரண்டு பைசாவுக்கு ஒரு மிட்டாய் கிடைக்கும்.  மூன்று பைசாவுக்கு தேங்காய் மிட்டாய் கிடைக்கும்.  அஞ்சு பைசாவுக்கு ஐஸே கிடைக்கும்.  சேமியா ஐஸ்.

ஐஸ் என்றதும் நினைவுக்கு வருகிறது.  பத்து பைசாவுக்கு ஒரு பால் ஐஸ் கிடைக்கும் பாருங்கள்..  தள்ளுவண்டியில் விற்று வருபவரிடம்தான் கிடைக்கும்.  என்ன ருசி..  என்ன ருசி..   அது போல அதற்கப்புறம் சாப்பிட்டதே இல்லை.  எத்தனை பேர் அந்த பால் ஐஸை சாப்பிட்டிருக்கிறீர்கள்? அதைத் தாங்கி நிற்கும் குச்சியும் மற்ற குச்சி ஐஸ்களிடமிருந்து வித்தியாசமாக பட்டையாக இருக்கும்.

பத்து பைசாவிலேயே கனமான பத்து பைசா வந்து கொண்டிருந்தது.  பின்னர் அதிலும் எடை குறைந்த இலேசான பத்து பைசா வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.  நன்றாய்ப் பார்த்தீர்கள் என்றால் இரண்டு பைசாவில் கூட கனமான பத்து பைசா போன்ற எடை அதிகமான காசு கண்ணில் படும். 

சதுரமாக சின்னதாக இருந்தால் ஒரு பைசா.  அதே சதுரம் சற்றே பெரியதாக இருந்தால் 5 பைசா.

அப்போ நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா)  எல்லாம் காஸ்ட்லிங்க....

அப்போ ஒரு ரூபாய்?  அது பெரிய இடமுங்க...  அப்போது ஒரு ரூபாயில் என்னென்ன பண்ணலாம் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போடலாம்!
=============================================================================================================== 

சாவி பத்திரிகை ஜோக்ஸ்...

நம்பிக்கையில்லையா?  நக்கலா?


இதில் இடிக்கும் லாஜிக்?

உண்மை விளம்பி!


அவனேதான் இவனா?


122 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    செவிப்புலன் குறைந்தால் எவ்வளவு பிரச்சனைகள் வருமென்பதை நன்றாக சொல்லியுள்ளீர்கள். காது கேட்காத பிரச்சனைகளை குறித்து நானும் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். (ஏனென்றால் எனக்கும் இதே பிரச்சனை கொஞ்ச வருடங்களாக.. )

    மணல்கயிறு நானும் பார்த்து ரசித்த படம். சாமிகிரி சித்தரை சென்று பார்க்கச் சொல்லி எனக்கும் சில உறவினர்கள் அறிவுறுத்தினார்கள். நல்லவேளை அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை.

    தாங்கள் தங்கள் அம்மாவுக்கு செய்த உதவிகளை பற்றி தெரிந்து கொண்டேன். அருமையான முயற்சிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு பாதுகாப்பாக உதவி செய்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  சாமிகிரி சித்தர் இன்னமும் சேவை செய்கிறாரா என்று தெரியவில்லை!  உங்கள் அனுபவங்களை நீங்களும் எழுதுங்கள்.

      நீக்கு
  3. "கொஞ்சம் சத்தமாய் குரல் கொடுத்தால் கேட்டிருக்குமே.."//

    ஆமாம்... இது பொதுவாக காது கேட்காதவர் பலரும் சொல்வதுதான்னு நினைக்கிறேன்......என் அப்பா உட்பட!!!

    தன் இயலாமையை வெளிப்படுத்தமாட்டார்கள்.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுநடுவே நான் இந்தப் பிரச்னைக்கு ஆளாகும்போது அப்படிச் சொல்லக் கூட எனக்கு வாய் வராது!

      நீக்கு
  4. காது கேட்காமல் இருப்பது பெரிய பிரச்னை. சம்பந்தப்பட்டவர்களை விட சார்ந்தவர்களுக்கு அதிக பிரச்னை! //

    உண்மை....இது வரை நான் மூன்றாவது காதுடன் சமாளித்துச் செல்கிறேன். ஆனால் அதுவும் பயன்படாத நிலை வந்தால்? என்று யோசனை எழுவதுண்டு. என்னைச் சுற்றி உள்ளவர்களுக்குக் கஷ்டமே என்று. ஆனால் அதற்கும் மனதை இப்போதே பக்குவப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டேன் ஸ்ரீராம். ஏனென்றால் எழுதிக் காட்ட எல்லோருக்கும் முடியுமா? நேரம் இருக்குமா? பொறுமை இருக்குமா....

    // திடீரென காது கேட்காமல் போவதைதான் ஜீரணித்துக் கொள்ளவோ, தாங்கவோ முடியாமல் போகும்.//

    ஆமாம் ஆமாம். நான் ரொம்ப சிரமப்பட்டேன். ஆனால் சமாளிக்கும் தைரியம் உண்டு அதுதான் நடத்திச் செல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே போலதான் கண்பார்வை மங்கும் பிரச்னைகளும் என்று தோன்றும்.  அது இன்னும் கொஞ்சம் சீரியஸ்.  என் மாமியாரைப் பொறுத்தவரை மூன்றாவது காதுக்கு எதிர்ப்பு காட்டி வருகிறார்.

      நீக்கு
    2. என் மாமியாரும் அப்படித்தான். அதில் பிரச்சனைகள் அதிகம் எனத் தோன்றுகிறது. அல்லது கேட்காத்தே சுகம் என நினைக்கிறார்களோ என்னவோ. இதில் பிரச்சனை, நாம் ஏதோ சொல்கிறோம் எனத் தவறாக நினைக்கக்கூடாது

      நீக்கு
  5. திடீரென கேட்காமல் போகும்போது, அதை நண்பர்கள், உறவுகள் சுட்டிக் காட்டும்போது ஏற்றுக்கொள்ளத்தோன்றாது. சின்னதாகச் சொன்னீர்கள், தெளிவாகச் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லி சமாளிக்க தோன்றும். //

    ஆமாம் ஸ்ரீராம். முதலில் எனக்கும் உரைக்கவில்லை. ஆனால் அதன் பின் நானே உணர்ந்து அதன் பின் பரிசோதனை செய்து கொண்டு மூன்றாவது காதின் அவசியம் என்பதை உணர்ந்துகொண்டேன் அம்மாவுக்கு இருந்தது வந்திருக்கிறது என்பதும் தெரிந்தது. ஹெரிடிட்டரி!

    ஆனால் நான் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். எந்தத் தயக்கமும் இல்லை. மன்னிப்பும் கேட்டுவிடுவேன் சொல்லியும் விடுவேன். தவறாக நினைக்காதீர்கள் எனக்குச் செவி கேட்காது என்று...

    மூன்றாவது காதும் கூட பல பிரச்சனைகளை எழுப்பும் நாளாகும் போது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிப்படையாகச் சொல்வது ஓர் குறிப்பிட்ட ஸ்டேஜ் வந்ததும்தான். என் அம்மாவுக்கு கேட்காத காது என்பதால் எனக்கும் அந்தப் பிரச்னை வரலாம் என்கிற எண்ணம் எனக்கு பல நாட்களாய் உண்டு.

      நீக்கு
    2. மூன்றாவது காது என்ன என்ன பிரச்சனைகளை எழுப்பக்கூடும்? எதிர்பாராத சத்தங்கள் கணீர் என்று காதுக்குள் அதிக டெசிபலில் விழுவதைத் தவிர? ஒருவேளை அடுத்தவர் மனதில் நினைப்பதும் கேட்டுவிடுமோ?

      நீக்கு
    3. பானுமதி வெங்கடேஸ்வரன்21 ஜூலை, 2022 அன்று AM 8:13

      @நெ.த.: மின் விசிறி சுழலும் சத்தம் இரைச்சலாக கேட்குமாம்.

      நீக்கு
    4. பேச்சை நேரடியாகக் கேட்பதற்கும் மைக்கில் பேசி ஒலிபெருக்கியில் கேட்பதற்கும் இருக்கும் வித்தியாசம்!  சமயங்களில் இரையும்.  சமாயபெண்களில் ஒன்றுமே கேட்காது.  கையால் கொஞ்சம் காதில் சரியாய்ப் ப்ரொத்தினால், அல்லது புது பேட்டரி போட்டால் கீச் என்று அலறும்.  சத்தமாகப் பேசினால் எதிராளி பேசுவது தெளிவில்லாமல் இரைச்சலாய் இருக்கும்.  மெதுவாய் தெளிவாய்ப் பேசவேண்டும்.  வெளிச்ச சத்தங்கள் பீய்ச்சலாய் இருக்கும்.  பஸ் கார் சத்தங்கள் மட்டுமல்ல, பானு அக்கா சொல்லி இருபிப்பது போல Fan சுற்றுவது கூட

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    ஆகா... ஐந்து பைசா... பத்து பைசா... பைசாக்களை பார்க்கும் போது அதை பயன்படுத்திய பழைய நினைவுகள் வருகின்றன.

    ஆம். பத்து பைசாவுக்கு கிடைக்கும் பால் ஐஸ் ருசி மறக்க முடியாதது. அதிலும், இரண்டு பைசாவுக்கு ஒரு இடிபர்பி (வேர்கடலை மிட்டாய் மாதிரிதான்) என கிடைக்கும். நான் சின்னவளாக இருந்த போது பாட்டியுடன் சாமான்கள் வாங்க பலசரக்கு கடைகளுக்கு போகும் போது, ஐந்து பைசாவுக்கு அதில் இரண்டு வாங்கி வந்து அதில் ஒன்றை எங்கள் அண்ணாவிடம் தரும் போது, ஏதோ உலக அதிசயமான பொருளை அவருக்கு பரிசளிக்கும் எண்ணம் வந்த அனுபவத்தை மறக்க முடியாது. அந்த மீதம் இருக்கும் ஒரு பைசாவுக்கு த்தான் எத்தனை மதிப்பு. இப்போது நூறு ரூபாய் நோட்டுக்கு கூட அந்த மதிப்பில்லை.

    நானும் இம்மாதிரியான பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கிறேன். தங்க நிற இருபது பைசா இல்லை. நடுவில் பத்து ரூபாய் அது போல் வந்தது. அப்போது அதில் ஆர்வம் குறைந்து விட்டது. இன்னமும் இந்த பைசாக்களைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் பதிவுக்கு ஒரு பதில் பதிவாக ஆகி விடும் என்பதினால், பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பைசா மூன்று பைசா நாணயங்கள் உங்கள் நினைவுகளையும் தூண்டி விட்டிருப்பதில் மகிழ்ச்சி கமலா அக்கா.

      நீக்கு
  7. நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு சம்பவம் போன்று பானுக்காவும் எழுதியிருந்தாங்க அவங்க அனுபவமாகவே...அப்ப நீங்க இதையும் அங்கு லைட்டாகச் சொல்லியிருந்த நினைவு.

    ஜெகே அண்ணாவும் மற்றொரு சாவியை பக்கத்துவீட்டில் கொடுத்து வைத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்.

    நாங்கள் ஆளுக்கொரு சாவியை வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நல்ல காலம் இதுவரை தானாகப் பூட்டிக் கொள்ளும் கதவு உள்ள வீடுகளில் இருக்கவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபேன்ற சமயங்களில் தானாய்ப் பூட்டிக்கொள்ளும் அஃதவு இலலாமல் இருப்பது உத்தமம்.  பானு அக்கா எழுதி இருந்ததைத்தான் எங்கோ கேட்டது போல மறந்துபோய் சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  8. சோடாபுட்டி விளையாட்டு நானும் விளையாடியிருக்கிறேன் பிடித்த விளையாட்டு

    ஆனால் நீங்க அதிய சமயோஜிதமாகப் பயன்படுத்தியிருக்கீங்க பாருங்க ஸ்ரீராம் வாவ்!! பாராட்டுகள்! உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்!
    செம Lateral Thinking!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மெஷின் வந்து அம்மா காதில் நாங்கள் பேசியது (மறுபடி) விழுந்தபோது அம்மா முகத்தில் தெரிந்த சந்தோஷம், நிம்மதியைப் பார்க்க வேண்டுமே.. அந்த மெஷின் வைத்துக் கொள்வதில் சிறு சிறு தொந்தரவுகள் எல்லாம் இருந்தன. அதையும் பொறுத்துக்க கொண்டுதான் அம்மா அதை வைத்திருந்தார். ஆனாலும் ஏதோ காதில் வித்துகிறதே என்கிற சந்தோஷம்..//

    டிட்டோ டிட்டோ. எனக்கும் அத்தனை சந்தோஷம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது ஸ்ரீராம் ஆனாலும் கேட்கிறதே என்ற சமாதானம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மூன்றாவது காது பொருத்தும் வரை இருந்த தன்னம்பிக்கையும் தைரியமும், பொருத்திப் பழகிவிட்டதால் அது பிரச்சனை ஆனால் ரொம்ப தவிப்பு வருகிறது. அதுவும் காதில் ஹெட் செட் பொருத்திக் கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் வந்தால்.

    ஆனால் கடைக்கு எல்லாம் போய் சமாளித்துவிடும் தைரியம் இதுவரை இருக்கிறது! தெருவில் நடக்கும் போது ரொம்ப சுய உணர்வோடு நடக்க வேண்டும்! இதுவரை வண்டிச் சத்தம் ஓரளவு கேட்கிறது மூன்றாவது காது இல்லை என்றாலும்...ஆனால் பேச்சுக் குரல்த்கள் கேட்பதில்லை. பக்கத்தில் பேசினால் கொஞ்சமே கொஞ்சம் தெளிவில்லாமல் கேட்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டம்தான் கீதா.  கேட்பதற்கே சங்கடமாயும் வருத்தமாயும் இருக்கிறது.

      நீக்கு
  11. ட்டி. டி ராமகிருஷ்ணன் பற்றி இப்பத்தான் உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது ஸ்ரீராம். இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு மூன்று கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாய் நினைவு.  நான் பிரான்சிஸ் இட்டிகோரா படித்தேன்.

      நீக்கு
  12. அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  14. மீண்டும் வியாழன் மிளிர ஆரம்பித்துவிட்டது. கவிதை எழுத நேரமில்லையா இல்லை பதிவு நீளமாகிவிடும் என்று நினைத்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று மாலை ஒரு கவிதை முயற்சித்தேன். யதேச்சையாக அதுவும் காது கேட்காதது சம்பந்தமாகவே அமைந்து விட்டது. எனவே சேர்க்கவில்லை!

      நீக்கு
  15. காது கேட்கவில்லை, பிரச்சனை இருக்கிறது என்று சொல்லுவதில் தற்காலத்தில் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். Interestingly பக்கத்து மெட்ரோ சூப்பர்மார்க்கெட்டில் இந்த மாதிரி குறைகள் உடையவர்கள் மிக அதிகமாக வேலைபார்க்கிறார்கள். மெட்ரோ நிறுவனத்தைப் காராட்டத் தோன்றியது (எல்லோரும் சிறிய வயதினரே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது இந்தக் குறைபாட்டிற்கு நிறைய வசதிகள் வந்து விட்டன.  அப்போது அப்படி இல்லை.

      நீக்கு
  16. அம்மாவுக்கான சோடா மூடி மெதட் மனதைக் கவர்ந்தது. இளைய தலைமுறைக்கு நிச்சயம் காதுப் பிரச்சனை இருக்கும். அவங்க பெரும்பாலும் இயர் போன் உபயோகித்து, இல்லையென்றால் ஹை டெசிபலில் பாடல்கள் வைத்துக் கேட்பதால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தலைமுறை தங்கள் காதுகளை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.  நான் என் மகன்களிடமும் சொல்வேன்.  

      இந்த வருட என் பிறந்த நாளுக்கு கிப்ட் என்று சொல்லி என் மகன்கள் ஒரு சவுண்ட் பார் வாங்கி இருக்கிறார்கள்.  வீடு இரைச்சலில் கிழிகிறது.

      நீக்கு
  17. என் பையன், நாங்கள் பேசுவதே ஹை டெசிபல், சப்தம் குறையுங்கள் என்று சொல்லுவான். என்னிடமும், காலையில் சஹஸ்ரநாம்ம் சப்தம் குறைவாகச் சொல்லுங்கள் என்பான்.

    பதிலளிநீக்கு
  18. பைசா - ஹையோ சேர்த்த நினைவு. நானும் தேடித் தேடிச் சேர்த்த நினைவுகள் வருகிறது. என் மகனும் சேர்த்து வைத்திருந்தான். எங்கு எந்த பெட்டியில் பரணில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் அவன் சேர்த்தவை என்று எல்லாம் தனியாக ஒரு பெட்டியில் இருக்கின்றன.

    ஆமாம் தங்கநிற பைசா...தாமரை போட்ட பைசா எல்லாம் நான் சேர்த்தவை மகன் சேர்த்ததோடு இருக்கு ஆனால் எங்கு என்றுதான் தேட வேண்டும் ஒரு பைசா மட்டும் இல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைசா நினைவுகள் எல்லோரிடமும் இருக்கும் என்று தெரியும். ரசித்திருப்பப்பதற்கு நன்றி.

      நீக்கு
    2. பைசா பெறாத நினைவுகள் என்று சொல்லிவிடுவீர்களோ என நினைத்தேன்.

      நீக்கு
  19. மாட்டிக்கிட்டா டிக்கெட் வாங்கிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள் அந்த ஜூனியர் நடிகை. ஃபைன் இல்லை என்று நினைத்துவிட்டாளோ?

    பதிலளிநீக்கு
  20. அலுமினிய பெரிய பத்துப் பைசா, நான் 3ம் வகுப்பு படித்தபோது (2ம்?) பரமக்குடியில் இருந்தபோது வெளியிட்டார்கள் 72 என்று நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  எனக்கு வருடமெல்லாம் நினைவில்லை.  ஆனால் பழைய பத்து பைசா  இருக்கும்.

      நீக்கு
  21. எங்கப்பா தினமும் கணக்கு எழுதி வார இறுதியில் சரிபார்ப்பார். ஐந்து பைசா பத்துப் பைசா வித்தியாசங்களுக்கு அவர் தலையைப் பிச்சிக்கிட்டு எங்களை டென்ஷனாக்கியது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கப்பாவுக்கும் கணக்கு எழுதும் வழக்கம் உண்டு.  ரொம்ப விவரமாக எழுதுவார்.  என்னையும் எழுதச் சொல்லி,  அம்மா காலமாகும்வரை நானும் ஒழுங்காய் எழுதிக் கொண்டிருந்தேன்.

      நீக்கு
    2. கொஞ்ச காலம் நாங்களும் எழுதினோம். அந்த நோட்டெல்லாம் இன்னமும் இருக்கு. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கெல்லாம் உ.கி.வெங்காயம். பட்டாணினு வாங்கி இருக்கேன்.

      நீக்கு
    3. தேடிப் பார்த்தால் அப்பா எழுதியதும் கிடைக்கும், என் நோட்டும் கிடைக்கும்!

      நீக்கு
  22. அலுமினிய 20 பைசா பார்த்த நினைவு இல்லை

    பதிலளிநீக்கு
  23. ஆமா அப்போ 1 ரூபாய் என்பது பெரிய விஷயம். இப்போது நினைத்தால்..

    இப்ப பாருங்க நம் ரூபாயின் மதிப்பு இன்னும் குறைந்து போய்க்கொண்டிருக்கிறது. விலைவாசி ரொம்பவே கூடியிருக்கிறது தடால்னு. என்னவோ போங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வேலைக்கு வந்த புதிதில் முன்னூறு நானூறு ரூபாய் என்பது கௌரவமான மாத சம்பளம்!

      நீக்கு
    2. நான் வாங்கின சம்பளம் 271 அப்புறம் பைசா ஏதோ. அதில் பிடித்தம் போக 250 வீட்டுக்குக் கொண்டு போவேன். அப்போ போனஸே 200 ரூ கிடைச்சது. தீபாவளிக்கு அட்வான்ஸ் 200 ரூபாய்.

      நீக்கு
    3. எதெது என்னென்ன விலை விற்றது என்பதுதான் இன்னும் சுவாரஸ்யம்!

      நீக்கு
  24. பானுமதி வெங்கடேஸ்வரன்21 ஜூலை, 2022 அன்று AM 8:21

    காது கேட்காத எங்கள் அத்திம்பேர் உள்ளே இருக்க, அடுப்பில் குக்கரை வைத்து விட்டு குழந்தையோடு நான் வெளியே சென்றதும் ஆட்டோமேட்டிக் லாக் பூட்டிக்கொண்டுவிட, அத்திம்பேரை கதவை திறக்க வைக்க நாங்கள் பட்ட பாட்டை 'திக் திக் நிமிடங்கள் ' என்று நான் பதிலாக போட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நான்தான் மறந்து யாரென்று தெரியாமல் யாரோ போல எழுதி இருக்கிறேன்! மன்னிக்கவும்.

      நீக்கு
  25. மருமகள் நிலையை நினைத்தாலே காது "க்யீங்" ஆகிறது...

    சேமியா ஐஸ் ஆகா...!

    பதிலளிநீக்கு
  26. ட்டி.டி.ராமகிருஷ்ணன் அவர்களின் தகவல்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  27. பானுமதி வெங்கடேஸ்வரன்21 ஜூலை, 2022 அன்று AM 8:28

    அம்மாவுக்கு யாரோ அழைக்கிறார்கள் என்பதை உணர வைக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பு!
    எங்கள் அப்பா, மாமா இருவருக்கும் கடைசி காலத்தில் கேட்கும் திறன் மிகவும் குறைந்து போனது. நேரில் பேசுவதை விட செல்ஃபோனில் பேசுவது நன்றாக கேட்கும்.
    ஆசிரியர்கள், டெலிபோன் ஆபரேட்டர்கள் போன்றவர்களுக்கு கேட்கும் திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. விமான நிலையங்கள் அருகில் குடியிருப்போர் பாடு...?!!

      நீக்கு
  28. காது கேட்காத பிரச்சினைகள் நிறைய பேருக்கு இருக்கின்றன. அதுவும் வயது ஆக ஆக செவித்திறன் குறைவது இயல்பு. 40 வருடங்களுக்கு முன்பேயே என் கணவருக்கு சின்னம்மையால் செவித்திறன் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அதுவும் சென்னையில் பிரபல மருத்துவரால் தவறாக செய்யப்பட்டு இன்றளவும் காது கேட்கும் கருவியையை உபயோகப்படுத்தி வருகிறார்கள்.
    காது கேட்கும் கருவிகள் கூட வயது அதிகம் ஆகும்போது ஒத்துழைக்காது என்று மிகச் சிறந்த மருத்துவர்களே சொல்கிறார்கள்.

    சாமிகிரி சித்தரை நானும் சின்ன வயதில் காது பிரச்சினைக்கு சந்தித்திருக்கிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் அனுபவம் தான் எனக்கும் ஏற்பட்டது. ஒரே நாளிலேயே அங்கேயிருந்து வெளியேறி விட்டேன். பின்னாளில் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்கொலை செய்துகொண்டார் என்பது நான் அறியாத தகவல்.  ஆச்சர்யம்.  

      செவித்திறன் பாதிக்கப்படுவோர் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால் 70% மேல் திரும்பக் கிடைக்கும் சாத்தியம் உண்டு என்று ஒரு மருத்துவ நிபுணர் கூறுவார்.

      நீக்கு
  29. ஜோக்குகள் ஷோ! ஷோ! இதில் ஒரு ஜோக் உ.ராஜாஜி எழுதியது அப்போது உ.ராஜாஜி, சீதாராமன், ரேவதி பிரியன் போன்றவர்கள் நிறைய நகைச்சுவை துணுக்குகள் எழுதுவார்கள்.

    செல்லாத பத்து பைசா, ஐந்து பைசா, இரண்டு பைசா போன்றவைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பா நிறைய வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. எனக்கும் காது காது லேது லேது கேஸ் தான். 

    எங்கள் குடும்பத்தில் நான், அப்பா, ஒரு தங்கை கேள்விக் குறைவு உள்ளவர்கள். மற்ற 3 தங்கைகள், அம்மா, தம்பி குறை இல்லாதவர்கள். பிறவியிலேயே குறை உள்ளதால் வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் சத்தமாக  பேசுவோம்.  பள்ளி கல்லூரியில் அவ்வளவாக குறை தெரியவில்லை. கரும்பலகை காரணமாக இருக்கலாம். 

    ஒரு சின்ன நகைச்சுவை. காது கேளாத எனக்கு பிசிக்ஸ் லேப் பரீட்சையில் கிடைத்தது சோனோமீட்டர் எக்ஸ்பெரிமெண்ட். சமாளித்து விட்டேன். 

    வேலையில் சேர்ந்த பிறகு கொஞ்சம் கஷ்டப்பட்டேன். மீட்டிங், செமினார், கான்பரன்ஸ் போன்றவைகளை தவிர்ப்பேன். அல்லது வாயை திறக்க மாட்டேன். முக்கியமாக டூர் போகமாட்டேன். 

    தற்போது இரண்டு காதும் அவுட். ஒரு காது மட்டும் கொஞ்சம் கேட்கும். எயிட் உபயோகித்து சமாளிக்கிறேன். திடீரென்று எயிட் வேலை செய்யாமல் போகும். அப்போது கொஞ்சம் கஷ்டம். பேங்க், போஸ்ட் ஆபீஸ் போன்ற இடங்களுக்கு செல்லும்போது பாஸையும் கூட்டிக்கொண்டு செல்வேன். தொலைக்காட்சி பார்ப்பேன். கேட்க மாட்டேன். செய்திகள் மட்டும் பார்ப்பேன். 

    T D ராமகிருஷ்ணன் பற்றி தெரியாது. நீங்கள் எழுதியபின் தெரிந்து கொண்டேன். அவருடைய நாவல்களைப் படித்ததில்லை.

    பைசா சேகரம் இருந்தது. அதையும் ஒரு திருடன் கொண்டு போனான். நான் அணா பைசா காலத்திலேயே பிறந்தவன், சேகரித்தவன். அப்போது ரூபாய் என்பது நிஜ வெள்ளி காசு. 

    ஜோக் மதன் ஜோக் போல வராது. என்றாலும் ரசிக்க முடிகிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களெல்லாம் ஆரம்பத்திலிருந்தே கேள்விக்குறை உள்ளவர்கள் என்பது வருத்தப்பட வைக்கிறது.  ஆரம்பத்திலிருந்தே  இப்படி இருந்ததால் சமாளிக்கும் வழிகளும் கற்றிருப்பீர்கள்தான்.  ஆம் சுமாரான ஜோக்ஸ், ஆனாலும் ரசிக்கலாம்!

      நீக்கு
  31. மனிதாபிமானம் மிக்க பதிவு.. செவித்திறன் குறைவின் பிரச்னைகளை இரு புறமும் இருந்து பேசுகின்றது பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  32. எனது அம்மாவுக்கும் வயதான காலத்தில் செவித்திறன் குறைவு ஏற்பட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​எனக்கு இப்போது சிறுவயதிலேயே விட்டு விட்டு இருக்கிறது.

      நீக்கு
  33. சாமிகிரி டுபாக்கூர் சிகிச்சையில் எனது சின்னம்மாவுக்கு ஒரு காதின் திறன் மேலும் பாதிக்கப்பட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரால் சொஸ்தமாக்கப்பட்டவர்கள் யாருமே கிடையாது போல...

      நீக்கு
  34. உடல் திறன் குறைபாடு உள்ளவர்களை ஏளனம் செய்வது தமிழ்த் திரையுனரின் குறிப்பிடத்தக்க அடையாளம்.. கவுண்டமணி யும் விவேக்கும் அதில் முனைப்பாக இருந்தனர் - எல்லாம் பணத்துக்காக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் தங்கவேலு போன்றவர்கள் இப்படி நடிக்க சம்மதிக்கவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  35. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  36. //பிறவியிலிருந்தே காது கேட்காமல் போவது ஒரு வகை. அவர்கள் சமாளித்துக் கொண்டு வளர்ந்து விடுவார்கள். திடீரென காது கேட்காமல் போவதைதான் ஜீரணித்துக் கொள்ளவோ, தாங்கவோ முடியாமல் போகும்.//

    ஆமாம், அவர்கள் உதடு அசைவதை வைத்து என்ன பேசுகிறார்கள் என்று கண்டுபிடித்து பதில் சொல்லி விடுவார்கள், ஆனால் அவர்களுக்கு நேரே இருந்து பேச வேண்டும்.

    உங்கள் அம்மாவை பற்றி சொன்னது , அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் உதவியது படிக்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது.

    என் அம்மாவுக்கு 40 வயதில் காது கேட்காமல் போய் விட்டது. என் அப்பாவின் திடீர் மரணம் கொடுத்த அதிர்ச்சியில் அப்படி ஆகி விட்டது அம்மாவுக்கு.
    கடிதம் எழுது என்பார்கள், போன் செய்தால் அவர்கள் பேசுவார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தம்பியிடம் சொல் கேட்டுக் கொள்கிறேன் , என்று சொல்வார்கள்.

    சத்தமாக பேசுவதை விட இயல்பாக பேசினால் கேட்கும் அம்மாவுக்கு. சத்தமாக பேசினால் அவர்கள் முகத்தில் சிரிப்பு வரும் ., "ஏன் இப்படி கத்துகிறாய் " என்பது போல.

    சாமிகிரி சித்தரை விளம்பரங்களில் படித்து கேள்வி பட்டு இருக்கிறேன்.
    மனோ அவர்கள் பதில் மூலம் அவர் மரணம் தெரிந்து கொண்டேன்.
    மருத்துவருக்கு கனிவு வேண்டும் அது இல்லை அவரிடம் எனும் போது மருத்துவம் எப்படி பலிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சிறிதாக முணுமுணுப்பாகப் பேசுவது கூட சிலசமயம் அவர்களுக்கு கேட்கும்.  நிறுத்தித் தெளிவாய்ப் பேசவேண்டும்.

      நீக்கு
  37. மாமியார் வீட்டில் நாண்ய சேமிப்புகள் இருந்தது இப்போது அது என்னிடம். முன்பு ஒரு பதிவில் போட்டு இருப்பேன்.
    10 பைசா பால் ஐஸ் சாப்பிட்டு இருக்கிறேன். ரோஸ்மில்க் முக்கோணமாக இருக்கும் பட்டை குச்சியில் இருக்கும். 5 பைசா அதுவும் சாப்பிட்டு இருக்கிறேன்.
    ஐசை துருவி குச்சியில் வைத்து பாட்டில்களில் இருக்கும் கலர் கலரான சுவை மிகுந்த நீரை அதன் மேல் அடித்து தருவார்கள் நன்றாக இருக்கும்.
    10 பைசாவிற்கு பெரிய கோழி முட்டை வடிவத்தில் இருக்கும் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  38. நகைச்சுவை பகிர்வு, ரசனையான புகைப்படம் பகிர்வு எனறு அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  39. வராதராஜனையும் ரசித்தேன்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  40. //கொஞ்சம் சத்தமாய் குரல் கொடுத்தால் கேட்டிருக்குமே//
    ஹா.. ஹா.. ஹா...

    நூல் விளையாட்டு நல்ல முயற்சி. நகைச்சுவைகள் சிறப்பு
    -கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  41. புகைப்படம் ரசனை....ஹாஹா தண்ணி பாயும் இடத்தில் ஓட்டை போட்டு...!!

    கீதா

    பதிலளிநீக்கு
  42. முதன் முதலில் வெளிநாடு போனபோது விமானநிலையத்தில் மொத்தம் 140 நபர்கள் போனோம். எஜிப்தியன் பெயர் வாசித்து கூப்பிடும்போது ''வராதேராஜான்'' என்று அழைக்க எங்களோடு வந்த வரதராஜன் பேசாமல் இருந்தான். பிறகு பாஸ்போர்ட் எண்ணை வைத்து அழைத்தார்கள். - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊர் பெயர்களை வெளிநாட்டினர் கொலை செய்யும் அழகே அழகு!

      நீக்கு
  43. செவி கேட்காதவர்களின் கஷ்டம் தெரியும். என்னோடே இருக்கும் என் அக்கா பிறவியிலிருந்தே செவி கேட்கும் திறன் இல்லாதவர் அதனால் பேச்சும் இல்லை. சப்தம் தான் எழுப்புவார். ஆனால் சைகை மொழியை நன்றாகப் புரிந்து கொள்வார். முகம் பார்த்துதான் பேச வேண்டும். வீட்டில் நாங்கள் எல்லோருமே அவரிடம் சைகை மொழியில்தான் பேசுகிறோம். வாய் அசைவையும் கை மொழியையும் வைத்து புரிந்து கொள்வார். திருமணம் செட் ஆகவில்லை என்பதால் அதன் பின் திருமணம் வேண்டாம் என்று எங்களுடனேயே தான் இருக்கிறார். வீட்டு வேலைகள் எல்லாம் செய்வார். நாங்கள் வெளியில் சென்றாலும் தனியாக இது வரை சமாளித்துவருகிறார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. சோடா மூடியால் அம்மாவுக்கு நீங்கள் எல்லோரும் வருவதை உணர்த்திய விஷயம் அருமை. உங்களின் சமயோஜித செய்கைக்குப் பாராட்டுகள். கூடவே ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் என்று நன்றாக யோசித்து செயல்பட்டிருக்கிறீர்கள். அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. T D இராமகிருஷ்ணன் பெயர் கேட்டதுண்டு. அல்லாமல் அவர் எழுத்து எதுவும் வாசித்ததில்லை.

    இப்போது தெரிந்து கொண்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  46. பைசாக்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் பல வருகின்றன. அந்தப் பைசாக்களின் மகத்துவத்தை ஏனோ இப்போதைய சில்லறைகளிலோ நோட்டுகளிலோ உணர முடிவதில்லை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  எதுவுமே கிடைத்தற்கரியதாக இருந்தால்தான் மதிப்பு!

      நீக்கு
  47. கவிதை இல்லையோ?

    நகைச்சுவை ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை ஒன்று எழுதினேன் நேற்று மாலை.  ஆனால் அதுவும் இதுச சம்பந்தமாகவே அமைய, வெளியிடவில்லை!

      நீக்கு
  48. எங்க வீட்டில் எல்லோருக்குமே காது கூர்மை. பாம்புச் செவி என்பார்கள். ஆனால் என் பெரியப்பா பிள்ளை ஒருத்தருக்குப் பிறவிக் குறைபாடு/ காது கேட்காமல் இத்தனை வருஷங்கள் எப்படியோ சமாளித்து/இத்தனைக்கும் வேலை அலைந்து திரிந்து செய்வது. இப்போத்தான் காதுக் கருவி வைத்துக் கொண்டிருக்கார். வல்லி இன்னமும் வரலையா? நானும் இரண்டு, மூன்று நாட்களாக வேலை மும்முரம். இன்னிக்கு மாமனார் ஸ்ராத்தம். அதனால் 3 நாட்களாக வேலை. அதோடு நேற்று விருந்தினர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் எல்லோருக்குமே காது கொஞ்சம்...   

      ஆனால் பாஸின் காது கூர்மை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும்.

      நீக்கு
  49. சேமியா ஐஸ்/பால் ஐஸெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் வாங்கிச் சாப்பிடுவோம். அதிலும் அப்போ ஸ்டேட் என்னும் ஒரு ப்ராண்ட் பால் ஐஸ் வரும். அதன் சுவை! சொல்லி முடியாது.

    பதிலளிநீக்கு
  50. தங்கத்தாமரைக்காசுகள் 108 சேர்க்கையிலேயே திடீரென்று வரத்துக் குறையப் பின்னர் கிடைக்கவே இல்லை. 90 காசுகள் வரை இருக்கு. இன்னமும் வைச்சிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களிடம் அவ்வளவு சேர்க்க முடியாது போனது.  ஆண்டுவிலேயே செலவாகிவிடும்!  இப்போது அதெல்லாம் எங்கே போச்சோ...!

      நீக்கு
  51. எனக்கு இந்தப் பைசாக்கள் எல்லாம் நான் நான்காம் வகுப்புப் படிக்கையில் தான் ஆரம்பிச்சது. அதற்கு முன்னால் காலணா, அரையணா, இரண்டணாவோடு பழக்கம் ஜாஸ்தி. இரண்டணாவுக்கு வடக்காவணி மூலவீதி ஸுமுக விலாஸில் ஒரு தோசை சட்னி, சாம்பாரோடு சாப்பிடலாம். தோசைன்னா தோசை, பெரிசாக இருக்கும். இப்போ அந்த இடத்தில் மீனாக்ஷி மெஸ் என ஒன்று இருந்தது சிலவருடங்கள் முன்னர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்ததில்லை. உங்கள் காலத்தியதுதானா காலணா, அரையணா, ஓட்டை காலணா எல்லாம்?

      நீக்கு
    2. ஆமாம். அப்போதெல்லாம் வெள்ளியை ரூபாய் எடையில் தான் நிறுப்பார்கள். ஒரு ரூபாய் எடை வெள்ளி எனச் சொல்லுவார்கள். வெள்ளி நாலணா, வெள்ளி எட்டணா, வெள்ளி ஒரு ரூபாய் உண்டு. ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் பத்து கிராம் சுத்த வெள்ளி. புரோகிதர்களுக்கு அப்போதெல்லாம் ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் வைச்சுக் கொடுப்பதை மிகவும் பெருமையாகவும் சொல்லுவார்கள். எனக்குத் தெரிந்து இந்த அளவு முறை எனக்குப் பதினைந்து வயசு வரையிலும் புழக்கத்தில்/பழக்கத்தில் இருந்தது. அப்பா ரூபாய் எடைக்கணக்கில் தான் வெள்ளிச் சாமான்கள் வாங்கினார். அதனால் இதைக் குறித்து நன்கு தெரியும்.

      நீக்கு
  52. ட்டி டி. ராமகிருஷ்ணன் பற்றி இன்னிக்குத் தான் தெரியும். எதுவும் கேள்விப் பட்டது இல்லை. ஜோக்ஸ் எல்லாம் பரவாயில்லை ரகம். உ.ராஜாஜி மிகப் பிரபலமான ஜோக் எழுத்தாளர் இல்லையோ!

    பதிலளிநீக்கு
  53. உங்கள் அம்மாவுக்குத் திறன் அதிகம் என்பதால் புரிந்து கொள்ள முடிஞ்சிருக்கிறது. உங்க காதையும் இப்போவே பார்த்துக்குங்க. தள்ளிப் போடாதீங்க. உங்கள் கண், காது, பல் எல்லாமும் விரைவில் சிகிச்சைக்குக் காத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி உங்களுக்குத் தெரியும்?  நான் யாரிடமும் சொல்லவே இல்லையே...! ​காது கூட பரவாயில்லை... பல்!

      நீக்கு
    2. எனக்குத் தகவல் வந்தது உங்களிடமிருந்தே தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உடனடியாகக் கவனிச்சுக்கோங்க. :(

      நீக்கு
  54. சோடா மூடியால் நாங்கள் தொலைபேசி போல் வைத்து விளையாடி இருக்கோம். காலி டப்பாக்களும் அதற்காக ஓட்டை போட்டுப் பயன்பாட்டில் இருக்கும். அட்டைப் பெட்டிகள்! எல்லாத்தையும் விட முக்கியம் என்னன்னா நான் என் தம்பிக்காக அவன் நண்பர்களுடன் கல்லாட்டம், பம்பரம் சுற்றி "அபீட்" எடுப்பது போன்றவையும் விளையாடி இருக்கேன். தெரியாமத் தான்! தெரிஞ்சால் முதுகுத் தோலும் பிஞ்சுடும், சாப்பாடும் கிடைக்காது. சோறு முக்கியம் இல்லையோ? :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... கீதாக்கா அபீட் விளையாட்டு விளையாடுவது போல கற்பனை செய்து பார்த்தாலே சிரிப்பு வருகிறது!

      நீக்கு
  55. ஐந்து பைசா பத்து பைசா இவற்றின் அன்றைய பெறுமதிகள் பல . தோசை,இடியப்பம், இட்லி, வடை ,கச்சான் தட்டு, ஐந்து பைசா.
    ஐஸ் பத்து பைசா.

    அன்றைய ஜோக்ஸ் மிகுந்த ரசனை இப்போதெல்லாம் எங்கே இதுபோல ரசனை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!