திங்கள், 11 ஜூலை, 2022

"திங்க"க்கிழமை  :  திப்பிசபாகு - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 இஃகி,இஃகி, கொஞ்ச நாட்கள் முன்னர் குலாப்ஜாமுன் பண்ணினேன். அதிலே ஜீரா மிச்சம் ஆயிடுத்து. சாதாரணமாக உடனே அதிலே மைதா பிஸ்கட்டோ அல்லது பூந்தி தேய்த்தோ போட்டுடுவேன்.

ஆனால் இம்முறை அப்படி எல்லாம் செய்ய முடியாமல் படுத்தாச்சு! அதிலும் அடுத்தடுத்து இரு முறை படுத்ததில் இது பத்தின நினைப்பே இல்லை. இரண்டு நாட்கள் முன்னர் தான் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பதை சென்சஸ் கணக்கு எடுத்தப்போ வீணாகும்படி எதுவும் இல்லை என்பதும் இந்த ஜீரா மட்டும் இருப்பதும் தெரிய வந்தது. என்ன செய்யலாம் என மண்டையை உடைத்துக் கொண்டேன். சேமியா பாயசம் வைச்சிருக்கலாம். ஆனால் அதுக்கு ஜீரா ஜாஸ்தி. ப்ரெட் வாங்கி ரோஸ்ட் மொறுமொறுவெனப் போடலாமா எனில் 2 ஸ்லைஸ் ப்ரெட் தான் போடலாம். அதோடு சீஸ் வேறே பிரிக்காமல் இருக்கு. ப்ரெட் இருந்தால் சீஸை வைத்து சான்ட்விச் செய்தால் ஒரு நாள் காலைப் பொழுதுக்கோ மாலைப் பொழுதுக்கோ மண்டை காய வேண்டாம். அதோட ப்ரெட் ஸ்லைஸ் அப்படியே ஜீராவை உறிஞ்சிக்கும். ம்கூம். போர்!  கொஞ்ச நாட்கள் வைச்சுச் சாப்பிடும்படி என்ன செய்யலாம் என மண்டையை உடைத்துக் கொண்டேன். முந்தாநாள் ஜீராவை வெளியே எடுத்து வைச்சுட்டு நேரம் இல்லாமையால் மறுபடி உள்ளே வைச்சுட்டேன்.

நேத்திக்குத் தான் திடீர்னு மைசூர்ப்பாகு பண்ணினால் என்னனு தோணித்து. சாதாரணமாகச் சர்க்கரைப் பாகு வைத்துத் தான் பின்னர் கடலை மாவைச் சேர்த்து மைசூர்ப்பாகு பண்ணுவோம். இங்கே ஜீரா இருப்பதால் கடலை மாவை அதற்கேற்றாற்போல் எடுத்துக் கொண்டு மைசூர்ப்பாகு கிண்டலாம்னு யோசனை. ஜீரா எப்படியும் ஒரு டம்பளர் அளவுக்கு இருக்கும். அதுக்கு ஏற்றாற்போல் ஒரு சின்னக் கிண்ணம் கடலைமாவு போட்டால் போதும்! நேத்திக்கே செய்திருக்கணும். என்னமோ முடியலை. இன்னிக்குக் காலம்பர சமைக்கும் முன்னே நல்ல நேரம் பார்த்துக் கொண்டு பின்னே! திப்பிசம் ஆச்சே, சரியா வர வேண்டாமா? பத்தரைக்கு எமகண்டம் ஆரம்பிக்கும் முன்னே அடுப்பில் உருளியை வைச்சு நெய்யை ஊத்திட்டேன். :)
மிகுந்திருக்கும் ஜீராஉருளியில் நெய்டப்பாவில் கடலைமாவு

ஒரு கரண்டி அளவு கடலைமாவு குவித்து எடுத்துக் கொண்டேன். ஜீரா பாகு பதத்தில் இருந்ததால் அடுப்பில் முதலில் வைக்கவில்லை. நெய்யில் கடலைமாவை நன்கு வறுத்துக் கொண்டேன். நெய்யோடு சேர்ந்து கடலைமாவு நன்கு பொங்கிக் குமிழ் விட்டுக் கொண்டு வரும் வண்ணம் வறுத்துக் கொண்டேன்.
கடலைமாவை நெய்யோடு சேர்த்து வறுக்கும்போதுபின்னர் ஜீராவைச் சேர்த்தேன்.
ஜீராவைச் சேர்த்ததும்

பின்னர் சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டி இருந்ததால் படம் எடுக்க முடியலை. சுமார் 20 நிமிடங்கள் கிளறி இருப்பேன். பின்னர் பதம் வந்தது எனத்தெரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே சிறிது நேரம் கிளறினேன். சுமார் 2 வருடங்கள் முன்னர் வரை மைசூர்ப்பாகு பொரபொரவென கூடு விட்டுக் கொண்டு வரும்படி தான் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போக் கொஞ்சம் மாற்றி விட்டேன். மைசூர்ப்பாகு மிருதுவாக இருக்கணும்னு பொங்கி வரும் சமயம் அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே கிளறிக் கொட்டினால் துண்டங்களும் ஒழுங்காக வருகிறது. மிருதுவாகவும் இருக்கு. ஆகவே இன்னிக்கும் அப்படியே செய்தேன்.

தட்டில் கொட்டியதும்


துண்டங்கள் போட்டு வைத்திருக்கிறேன்.
துண்டங்கள் போட்ட மைசூர்ப்பாகு வில்லைகள்

இந்தத் திப்பிச வேலையை இங்கே பகிரலாமா, இல்லைனா சாப்பிடலாம் வாங்க பக்கம் போகலாமா இல்லாட்டி ஶ்ரீராமுக்கு அனுப்பவானு பூக்கட்டிப் பார்த்தப்போ  ஶ்ரீராமுக்கு அனுப்பலாம்னு தோணித்து. வேணும்ங்கறவங்க எடுத்துக்கோங்க! நல்லாவே இருக்கு. ஏலக்காய் போட்டிருப்பதால் இது என்ன மைசூர்ப்பாகுக்குப் போட மாட்டாங்களேனு தோணும்! இந்தத் திப்பிசம் தெரியதவங்க கிட்டே நாங்க போடுவோமுல்லனு சொல்லிடுவோமுல்ல! 

57 கருத்துகள்:

 1. ஙே!!!!!!!!!!!!!!!!!!! இம்புட்டு நேரம் ஆகியும் யாரையும் காணோமே! என் பெயரை 3 ஆவது வாரமாத் தொடர்ந்து பார்த்ததும் ஓடிட்டாங்களோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்வீட் சாப்பிடக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருப்பாரோ ? அதனால் ஓடிட்டாங்களோ ?

   நீக்கு
  2. ஒரிஜனல் ஸ்வீட் மட்டும்தான் சாப்பிடணும். திப்பிச பிசினெஸ் உடம்புக்கு அலர்ஜியாயிடும்னு டாக்டர் சொல்லியிருப்பாரோ?

   நீக்கு
  3. அதெல்லாம் இல்லை. அடுத்த வாரம் நிச்சயமா நான் இல்லை. ஏன்னா எடுத்து வைச்சது இரண்டையும் இனிமேத்தான் அனுப்பணும். அநேகமா நெல்லை/தி/கீ. இருவரில் யாரேனும் ஒருத்தர்.

   நீக்கு
 2. ம்ம்ம்ம்ம், திப்பிசம்ங்கறதாலே வரலையோ? மைசூர்ப்பாகு வேணும்னா வாங்க, இல்லாட்டிப் போங்க! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   நேற்று நெருங்கிய உறவின் பிறந்த நாளுக்காக கோவில் விஜயம் செய்ய வேண்டுமென சொல்லியிருந்தேன் அந்த அலுப்பில் இப்போதுதான் கண் திறந்தேன். நானும் ஒரு இதே போல் நேற்று மை. .பா (ஆனால் திப்பிசம் இல்லாதது) செய்து கொண்டு போய் அவர்களுக்கு தந்தேன். நமக்குள் என்ன ஒற்றுமை.... இன்று தங்களது மை. பாவும் அருமையான செய்முறையோடு அழகான படங்களோடு வெளி வந்துள்ளது. ஜீராவில் கலந்திருக்கும் ஏலக்காய் வாசனை வந்தாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.. இனி ஏலம் பொடித்து கூட இப்படி ஒரு நாள் செய்யலாமா என்ற எண்ணம் வருகிறது.

   எனக்கு இனிபென்றால் ஒரளவு பிடிக்கும். இப்போது இனிப்பு முற்றிலும் சாப்பிட கூடாது என்ற தடை வந்து விட்டதே... ஆனாலும் ஆர்வம் காரணமாக உங்கள் செய்முறையான திப்பிச இனிப்பிலிருந்தும் ஒன்றை எடுத்து சாப்பிட்டு விட்டேன். காஃபியே இனிதான்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. வாங்க கமலா. விரிவான கருத்துக்கு மிக்க நன்றி. ஜீராவில் தேவையான அளவுக்குத் தித்திப்பு இருந்ததால் மைசூர்ப்பாகு நன்றாகவே இருந்தது. ஒண்ணே ஒண்ணு ஆசைக்கு எடுத்துக்கலாம். நூறு தரம் மாடிப்படி ஏறி இறங்கிக் கலோரிகளைக் குறைச்சுடணும். :)

   நீக்கு
  3. நூறு தடவைக்கும் ஒன்னொன்னா இல்லாட்டாலும், ஒரு நாலைந்து முறைக்கு (வேண்டாம்.....ஒரு பத்து முறைக்கு ஒரு தடவை) ஒரு தடவை ஒரு விள்ளல் மை. பாவோ வேறு ஏதாவது ஸ்வீட்டோ வாயில் போட்டுக்கலாமா?ஹா.ஹா.ஹா.

   நீக்கு
  4. ஹாஹாஹா ஒரு விள்ளல் சாப்பிட்டதுக்கே நூறு தரம். :)

   நீக்கு
 3. ஸ்வீட்டுன்னா தூர ஓடிருன்னு நாட்ல சொல்லிவைச்சிருக்காங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! உங்களுக்குமா? :(

   நீக்கு
  2. தூக்கிண்டு தூர ஓடிடுன்னு சின்ன வயசுல சொல்லிக்கொடுத்ததை அரைகுறையாக நினைவில் வச்சிருக்காரோ?

   நீக்கு
  3. நான் சொன்னது வராதவர்களைப்பற்றி! எனக்கு ஸ்வீட் சாப்பிட எந்தத் தடையுமில்லை.

   நீக்கு
  4. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். வரலை. :(

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் ஆசையை தூண்டுகிறது என்ன செய்வது ? எடுத்து சாப்பிட முடியாதே...

  பதிலளிநீக்கு
 6. சுவைக்கத் தூண்டுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பெயரில்லா நான் (பானுமதி) இல்லை.
   என் பிறந்த நாளன்று என் மகள் அருமையான மைசூர் பாக் செய்து கொடுத்தாள். அதனால் உங்கள் மைசூர் பாகை ஃப்ரிட்ஜில் வையுங்கள். பிறகு எடுத்துக் கொள்கிறேன்.

   நீக்கு
 7. அன்பின் வணக்கங்களுடன்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 8. இனிப்பு, காஃபி , டீ எல்லாவற்றில் இருந்தும் விலகி ஒன்றரை மாதம் ஆகின்றது..

  வந்தோமா.. வணக்கம் வைத்தோமா... என்று போய் இருக்கலாம்..

  அக்கா செய்ததாயிற்றே.. படித்துக்கொண்டு வரும் போதே அதன் நேர்த்தி தெரிந்தது..

  சுவையும் புரிந்தது..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹிஹி, நன்னியோ நன்னி! இதுக்குனு எதிர்பாராம விருந்தாளிங்க எல்லாம் வந்தாங்களாக்கும்! :)))

   நீக்கு
 9. மிஞ்சின மைசூர்பாக்கைப் பொடித்து போளிக்குப் பூரணமாக உபயோகித்தேன் என்ற திப்பிச போளி எந்த வாரம் வரும்?

  பதிலளிநீக்கு
 10. திப்பிச மைசூர் பாகு மிக அருமையாக வந்திருக்கிறது.

  வெங்கட் ப்ளாக் திறக்குதில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நானும் மூன்று தினங்களாக முயற்சி செய்து பார்த்தேன்.

   நீக்கு
  2. ஒரு தரம் கருத்து எழுதி போகவில்லை திப்பிசமும் எதுவோ நல்ல பொருள்களாக உருவெடுத்து விடுகிறது ஏன் திப்பிசம் என்று சொல்கிறீர்கள் பொருள்கள் வேஸ்ட் ஆகாமல் நல்லபடி உருவெடுத்து விடுகிறது சபாஷ் நல்ல உபயோகம் அன்புடன்

   நீக்கு
  3. நன்றி அம்மா. கூடியவரை பொருளை வீணாக்காமல் வீட்டில் உள்ளவர்களே சாப்பிடும்படி ஏதேனும் செய்துடுவேன். இல்லைனாக் குற்ற உணர்வில் குறுகுறுக்கும். ரொம்ப நன்றி நமஸ்காரங்கள்.

   நீக்கு
 11. This blog is open to invited readers only
  http://venkatnagaraj.blogspot.com/
  It doesn't look like you have been invited to read this blog. If you think this is a mistake, you might want to contact the blog author and request an invitation.

  You're signed in as sivamgss@gmail.com - Sign in with a different account

  இப்போவும் இதே செய்தி தான் வருது வெங்கட் தளத்திற்கு! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்கிறீர்களே என்று நானும் திறக்க முயற்சித்தேன். மேற்சொன்ன கதைதான் !

   நீக்கு
  2. மூன்று நாட்களாக இதே கதைதான். ஏதோ பிரச்னை!

   நீக்கு
  3. பணிச்சுமை காரணமாக இருக்கலாம். விரைவில் வந்துடுவார்னு எதிர்பார்ப்போம்.

   நீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 13. மைசூர் பாக் அருமை. பொருளை வீணாக்காமல் செய்வதும் ஒரு கலைதான். உங்களுக்கு அந்த கலை கை வந்து இருக்கிறது.
  படங்கள் நன்றாக வந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. // பொருளை வீணாக்காமல் செய்வதும் ஒரு கலை தான். உங்களுக்கு அந்த கலை கை வந்து இருக்கிறது..//

  எபி க்கும் வாராந்திர பதிவுகள் கிடைக்கின்றன..

  நமக்கும் பல்வகைச் சுவைகள் அறிமுகம் ஆகின்றன..


  ஆகையால் போட்டுத் தாக்குங்கள்.

  பதிலளிநீக்கு
 15. கேசவன் ஓசூர்11 ஜூலை, 2022 அன்று PM 3:13

  நல்ல முயற்சி. Innovative.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹோசூரில் எங்கே இருக்கீங்க? நான் சுமார் ஐம்பது வருடங்கள் முன்னர் ஹோசூர் கிராமமாக இருந்தப்போப் பார்த்தது ஒவ்வொரு அரசமரத்தடியிலும் நாகப்பிரதிஷ்டை. சும்மா பல்லி, கரப்புப் போவதைப் போல சுப்புக்குட்டிகள் அங்கும் இங்குமாக ஓடும்.. இப்போ எப்படி இருக்கோ!

   நீக்கு
 16. @ கீதாக்கா..

  // இதே செய்தி தான் வருது வெங்கட் தளத்திற்கு! :(. //

  மூன்று நாட்களாக இப்படி.. எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது - ஊர் பஞ்சாயத்தில் ஒதுக்கி வைத்த மாதிரி..

  இப்போது தான் கொஞ்சம் நிம்மதி..

  இதில் ஏதோ வேற்றுக் கிரக வாசிகளின் சதி இருக்குது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்ம், என்னனு புரியலை. வெங்கட்டைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.

   நீக்கு
  2. வலைத்தளத்தை தற்காலிகமாக மூடி பூட்டு போட்டிருக்கிறார்.

   நீக்கு
  3. ஆமாம். நேற்றுத் தொடர்பு கொள்ள நினைச்சு முடியலை. ஆனாலும் பணிச்சுமை அதிகம்னு சொல்லிக் கொண்டிருந்தார். அதனாலும் இருக்கலாம்.

   நீக்கு
 17. திப்பிச மைசூர்ப்பாகு மிக அருமை! திப்பிசம் என்ற பெயரில் மிக அருமையான புது வகை குறிப்புகளைக்கொடுத்து அசத்தி வருகிறீர்கள்!
  இந்த மைசூர்ப்பாகு செய்முறையில் எல்லாவற்றையுமே கிண்ணம் அளவில் சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ. நான் எல்லாமே கண் திட்டம் தான். அளவெல்லாம் எடுத்துச் செய்து பழக்கமே இல்லை. ஆகவே கூடியவரைக்கும் சொல்லி இருக்கேன். மற்றபடி சமையலில் நன்கு பழகிய நீங்களும் கண்ணளவில் செய்துடுவீர்கள்.

   நீக்கு
 18. சூப்பர் திப்பிசம். மைசூர்பாகு நன்றாக வந்திருக்கிறது கீதாக்கா. பார்க்கவே மிருதுவாக இருப்பது தெரிகிறது

  நானும் இந்த மாதிரி தில்லு முல்லு செய்வதுண்டு. ஹிஹிஹி

  முன்பு நானும் பொர பொர என்று மைசூர்பாகு செய்வேன் அதன் பின் ரொம்ப மிருதுவானதாகத்தான் செய்கிறேன் சமீபத்தில் செய்து ரொம்ப நாளாகிவிட்டது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தி/கீதா. நானும் இனிப்புப் பண்டங்கள் செய்து ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் வந்திருந்த எங்க மகளின் சிநேகிதிக்காகக் கேசரி கொஞ்சம் போல் பண்ணினேன். அம்புடுதேன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!