திங்கள், 18 ஜூலை, 2022

"திங்க"க்கிழமை :  கத்திரிக்காய் ஸ்டஃப் கறி -  கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சப்பாத்தி செய்கையில் அதுக்குத் தொட்டுக்கக் கத்திரிக்காய் ஸ்டஃப் கறி செய்தேன். குஜராத்தி டைப்பாம்! அம்பேரிக்கா போயிருக்கிறச்சே மகள் செய்திருந்தாள்! அதிலிருந்து நம்ம ரங்க்ஸுக்கு இது விருப்ப உணவாகி விட்டது. மகள் கொஞ்சம் காரம் அதிகம் போட்டிருந்தாள். நான் அவ்வளவு காரம் போடவில்லை! என்றாலும் இந்தியா வந்தப்புறமா இரண்டாம் முறையாக இதைச் செய்கிறேன். முதல் முறை செய்யறச்சே படம் எடுத்துப் போடும்படியான சூழ்நிலையில் இல்லை! இந்த முறை நிதானமாகப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். முதலில் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

நான்கு பேருக்கான அளவு! கத்திரிக்காய்ப் பிரியர் எனில் முக்கால் கிலோ வேண்டும். எல்லாக் கத்திரிக்காயும் ஒரே சீராக ஒரே அளவில் இருந்தால் நல்லது. ரொம்பச் சின்னதாயும் வேண்டாம்!

நான் எங்க ரெண்டு பேருக்குத் தான் என்பதால் ஆளுக்கு ஐந்து கத்திரிக்காய் என்ற வீதாசாரப்படி பத்துக் கத்திரிக்காய் எடுத்துக் கொண்டேன்.

கத்திரிக்காய்க்குள் அடைக்கத் தேவையான பொருட்கள்

மிளகாய்ப் பொடி  இரண்டு டீஸ்பூன்

தனியா ஒன்றரை அல்லது இரண்டு டீஸ்பூன் (அவரவர் காரத்திற்கு ஏற்பக் கூட்டியோ குறைத்தோ எடுத்துக்கலாம்.)

மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்

பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்

அம்சூர் பொடி(காய வைத்த மாங்காய்ப் பவுடர்) அரை டீஸ்பூன்(இது கட்டாயம் அல்ல)

கரம் மசாலாப் பொடி அரை டீஸ்பூன்

வறுத்த ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன்

சோம்பு இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மேலே சொல்லி இருப்பனவற்றை ஒரு பேசினில் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

கலந்த பொடி மேலே பேசினில் காணலாம்.

கத்திரிக்காய்களை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கழுவிய கத்திரிக்காய்களை நான்காகப் பிளந்து கொண்டு உள்ளே கலந்து வைத்திருக்கும் பொடியை வைத்து எல்லாவற்றையும் நிரப்பவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். அதில் கத்திரிக்காய்களை மெதுவாக ஒவ்வொன்றாகப் போடவும்.

தேவையானால் அடைத்தது போக மீதம் இருக்கும் பொடியை மேலே தூவலாம்.
சிறிது நேரம் ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்து குறைந்த வெப்பத்தில் கத்திரிக்காய்களை வதக்கவும். திருப்பி விடும்போது கத்திரிக்காய் உடையாமல் கவனமாகத் திருப்பி விடவும்.
நல்ல கத்திரிக்காயாக இருந்தால் நன்கு குழைந்துவிடும். அரை மணி நேரத்துக்குள்ளாகத் தயார் செய்து விடலாம். இப்போது ஃபுல்கா, நான், சப்பாத்தி போன்றவற்றுடன் சூடாகப் பரிமாறவும்.

நம்ம ஊர்ப்பக்கம் கத்திரிக்காய்ப் பொடி அடைத்த கறி எனில் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, உபருப்பு மிளகு, தேங்காய்த் துருவல் வறுத்து மிக்சியில் அல்லது அம்மியில் பொடி செய்து அதை அடைத்துச் செய்வோம். அது சாப்பாட்டுக்கு நன்றாக இருக்கும். இது சப்பாத்தியோடு நன்றாக இருக்கும். 

63 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    இன்று தங்கள் செய்முறையான கத்திரிக்காய் ஸ்டஃப் கறி நன்றாக உள்ளது. படங்கள், செய்முறை விளக்கம் அனைத்தும் அருமை. இந்த கத்திரிக்காயை பிடிக்காதவர்கள் உண்டோ? எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள முக்கால்வாசி நான் குருமா, சட்னிகள், விதவிதமான கூட்டுகள் என்றே செய்திருக்கிறேன். இதெல்லாம் அதற்கென்று செய்வதற்கு ரொம்ப முடியாவிடில், பாலில் ஊற வைத்தே சாப்பிட்டு விடுவோம்.

    கத்திரிக்காயில் எங்கேனும் உள்ளே பூச்சி புட்டு இருந்து விடுமோ என்ற ஐயம் எனக்கு அதிகம். (எனக்கென்றே என் நேரம் இந்த மாதிரி அமைந்து விடும். அதை எப்படி சொல்வது? :))) அதனால் இந்த மாதிரி செய்ய ஒரு தயக்கம். எப்போதும் நான்கைந்து துண்டுகளாக அரிந்து கொண்ட கத்திரிக்காய் கறிகள்தாம். ஆனால், அதன் மேல் போடும் பொடிகள் இப்படி விதவிதமாக செய்து போட்டுள்ளேன். இப்போது உங்கள் ரெசிபியை பார்த்ததும் இப்படியும் ஒரு நாள் முழு கத்திரிக்காய் கறி செய்ய வேண்டுமென்ற எண்ணம் வருகிறது.

    புளி ஜலம் சிறிது விடுவதற்கு பதிலாக மாங்காய் பொடியா? ஆம்.. கத்திரி கலர் மாறாமல் இருக்கும் இல்லையா? பதிவு நன்றாக உள்ளது. தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    கிச்சன் என்னை அழைக்கிறது. பிறகு மதியம் வலைத் தளத்திற்கு வாக்கில் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதியமும், வாக்கிலும் அவசரத்தில் பிரிந்து விட்டது.

      நீக்கு
    2. கத்தரிக்காயை நான்காகப் பிளக்கும்போதே உள்ளே பூச்சி இருக்கானு பார்த்துடலாமே கமலா! ஒண்ணும் பயம் இல்லை. பொதுவாக இங்கே பூச்சி கத்திரிக்காய்கள் வருவதில்லை. இருந்தாலும் பிளக்கும்போதே உள்ளே திறந்து பார்த்துடுவேன்.

      நீக்கு
    3. //பொதுவாக இங்கே பூச்சி கத்திரிக்காய்கள் வருவதில்லை.// அப்படியென்றால் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட காய். நன்றாக கழுவ வேண்டும்.

      நீக்கு
    4. நான் சொன்னது உள்ளே பூச்சி இருக்கும் கத்திரிக்காய்கள் வருவதில்லை என்பதே! இங்கே அநேகமாகக் கத்திரிக்காயைப் பிளந்தாலே உள்ளே வெண்மையாக விதைகளே இல்லாமல் இருக்கும். அதுக்காக ஹைபிரிட் கத்திரியும் இல்லை. சுவை மாறுபடுமே. பச்சை/வெள்ளை/ஊதா/ கோடு போட்டதுனு எந்தக் கத்திரியானாலும் நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
    5. //நான் சொன்னது உள்ளே பூச்சி இருக்கும் கத்திரிக்காய்கள் வருவதில்லை என்பதே// பூச்சியுள்ள கத்தரிக்காய் என்றாலே கத்தரிக்காய் க்கு உள்ளே இருக்கும் பூச்சியைத்தானே குறிக்கும்? கத்தரிக்காய்க்கு வெளியிலும் பூச்சி இருக்குமா என்ன? மேலும். இப்பொழுதெல்லாம் பூச்சி கொல்லி மருந்துகள் (pesticides) அதிகம் உபயோகிப்பதால் அந்த மருந்துகள் காய்கறிகள் மீது படிந்து கொள்ளும். அது உடலுக்கு கேடு, அதனால் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். பூச்சி இருக்கும் காய்கள் தான் உடலுக்கு தீங்கு செய்யாததை ஏனென்றால் அவற்றில் பெஸ்டிசைடின் பாதிப்பு கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

      நீக்கு
    6. பானுமதி வெங்கடேஸ்வரன்19 ஜூலை, 2022 அன்று 4:26 AM

      பூச்சியுள்ள கத்தரிக்காய் என்றாலே கத்தரிக்காய்க்குள் இருக்கும் பூச்சியைத் தானே குறிக்கும்??. பூச்சியுள்ள கத்தரிக்காய்களே ஆரோக்யமானவை ஏனெனில் அவற்றில் பெஸ்டிசைடுகளின் பாதிப்பு கிடையாது என்று பொருள். பூச்சி இல்லாத காய்களின் மேலே பூச்சி கொல்லி மருந்துகள் படிந்திருக்கும் என்பதால் அவைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும் என்பது கீதா அக்காவுக்கு தெரியாதா என்ன?

      நீக்கு
    7. பூச்சி உள்ள கத்திரி கையில் எடுக்கும்போதே தெரிஞ்சுடும். அழுத்தினாலும் தெரியும். சில காய்களில் மேலேயே ஓட்டை போட்டுக் கொண்டு குடி இருக்கும். :) அழுத்தினால் கெட்டியாக இருந்தால் உள்ளே விதை/பூச்சி என அர்த்தம்.

      நீக்கு
  3. அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன் ..

    பதிலளிநீக்கு
  4. கத்தரிக்காய் உள்ளீடு...

    இப்போதெல்லாம் கத்தரிக்காய் ஒத்துக் கொள்வதில்லை.. எனவே 95 % குறைத்து விட்டேன்..

    பிடித்தமான உணவு தான்.. ஆனாலும்!..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். இன்னிக்கும் என்னோட செய்முறையா? ஏற்கெனவே யாரும் வரதில்லை. இன்னிக்கும் யாரும் வரப் போறதில்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் அப்புல பாருங்க!

      நீக்கு
    2. அதென்னமோ நான் வரச்சே யாரும் இருக்கிறதில்லை. ஆனால் ஒரு கருத்துப் போட்டதுமே மேலே பார்த்தால் நாலு பேர்! :)

      நீக்கு
  6. கத்தரிக்காய் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஆனால் நம்மவர் கத்திரிக்காயே வாங்குவதைப் பார்த்த பின்னால். கத்திரிக்காய் இல்லாமல் சமைக்கும் நாள் எந்நாள்னு கேட்டுட்டு இருக்கேன். இந்தக் கறி இப்போத் தான் போன மாசம் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஹைஃபைவ்! எனக்கும் கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும்...

      கீதா

      நீக்கு
    2. அதுக்குனு வாரம் 3 நாள் கத்திரிக்காய் தானா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  7. இப்படி செய்து சாப்பிடுவது எஜிப்தியர்களுக்கு விருப்பமான உணவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எகிப்து, லெபனான் வகைகளில் உள்ளே வைப்பது கொஞ்சம் வித்தியசாமாக இருக்கும் இல்லையா, கில்லர்ஜி?

      கீதா

      நீக்கு
    2. ஸ்டஃப்பில் உ.கி. கூட வைப்பாங்க! எகிப்தில் எப்படியோ? மஹாராஷ்ட்ராவில் வேர்க்கடலைப் பொடி மசாலாப் பொடிகள் சேர்த்து வைப்பாங்க.

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  9. வறுத்து பொடி செய்த மசாலாப்பொருள்கள் வைத்து அடைக்காமல், புளி நீர் சேர்க்காமல் ரொம்பவும் சுலபமான குறிப்பாக இருக்கிறது. நல்ல பிஞ்சான, சுவையான நாட்டுக்கத்தரிக்காய்கள் இருந்தால் செய்து பார்க்கலாம். இப்போதெல்லாம் அந்த மாதிரி கத்தரிக்காய்கள் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளிப்புக்குத் தான் அம்சூர்ப் பொடி சேர்க்கச் சொல்லி இருக்கேனே. தேவையானால் சேர்க்கலாம். கத்திரிக்காய்ப் பிஞ்சாக இருந்தால் நன்கு குழைந்து விடும். ஜலமெல்லாம் சேர்க்கவே வேண்டாம்.

      நீக்கு
  10. சூப்பரா வந்திருக்கு கீதாக்கா. குறிப்புகளும் . செய்வதும் எளிது.

    நானும் எண்ணிதான் எடுத்துக் கொள்வேன் நம் வீட்டிற்கு மட்டும் என்றால்.
    .
    மகனுக்கு வட இந்திய உணவுகளும் பிடிக்கும் என்பதால் செய்வதுண்டு.

    இப்போது இங்கு வந்த பிறகு முன்பு இருந்த வீட்டிற்கு எதிரிலும் இந்த பகுதியிலும் நிறைய வட இந்தியர்கள் குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் மக்கள் இருக்கிறார்கள் வீட்டின் எதிரிலேயே அவர்களது கடையும். அவர்களிடமும் நான் செய்வதை சொல்லி அவர்களிடமும் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க பையருக்கு முன்னெல்லாம் கத்திரிக்காய் ரொம்பப் பிடிக்கும். இப்போத் தொடுவதே இல்லை. :(

      நீக்கு
  11. இதையே கிரேவியாகவும் செய்வதுண்டு இல்லையா? இப்படிச் செய்துவிட்டு கிரேவியில் போட்டுவிடுவது...

    வட கர்நாடகா ரெய்ச்சூர் பகுதியில், ஆந்திரா பகுதியில் எள்ளு சேர்த்த மசாலாவும் உண்டு. வறுத்த நிலக்கடலையும் பொடித்து சேர்த்து மஹாராஷ்டரா செய்முறையிலும்..அதில் கரம் மசாலா இல்லாமல். இங்கு எபிக்கு அனுப்பி வந்ததா நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரேவி எல்லாம் கத்திரிக்காய், உ.கி. பாகல் போன்றவற்றில் மருமகள் தான் செய்வாள். பூண்டெல்லாம் சேர்த்துப் பண்ணுவாள். நான் அதெல்லாம் சேர்ப்பதில்லை.

      நீக்கு
  12. கத்தரி ஸ்டஃப்டு கறி செய்முறை நன்றாக இருக்கு. அடுத்தமுறை கத்தரி வாங்கும்போது சிறிதாக வாங்கிவந்து செய்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெ.த. சின்னதாக ஒரே மாதிரி இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  13. எனக்கு அம்சூர் பொடி பிடிக்கும். அவியலில் சிறிது புளிப்புக்காகச் சேர்ப்பேன். புளியைவிட பெட்டர் என்று எனக்குத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவியல் காய் வேக விடும்போதே ஒரு சின்ன வெள்ளைத்துணியில் புளியை மூட்டையாகக் கட்டி அதில் போட்டு விடலாம். பின்னாடி காய் வெந்ததும் அந்தத் துணி மூட்டையை எடுத்துப் பிழிந்து விட்டால் சாறெல்லாம் காயில் தங்கிடும். இதுக்குக் கட்டாயமாய்த் தயிர் சேர்க்கக் கூடாது.

      நீக்கு
    2. Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      //அவியல் காய் வேக விடும்போதே ஒரு சின்ன வெள்ளைத்துணியில் புளியை மூட்டையாகக் கட்டி அதில் போட்டு விடலாம். பின்னாடி காய் வெந்ததும் அந்தத் துணி மூட்டையை எடுத்துப் பிழிந்து விட்டால் சாறெல்லாம் காயில் தங்கிடும். இதுக்குக் கட்டாயமாய்த் தயிர் சேர்க்கக் கூடாது.''
      இதைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து இங்கே சேர்த்திருக்கேன். :)

      நீக்கு
    3. நல்ல ஐடியா கீசா மேடம். நான் புளி ஜலம் திக்காக சேர்ப்பேன். அதைவிட இது பெட்டர்.... அது சரி..ஒருவேளை அந்த மூட்டை காயில் கலந்து அதை எடுக்க முடியலைனா? சாப்பிடறவங்க, தட்டுல என்ன இருக்குன்னு பார்த்துச் சாப்பிடணும். அது அவங்க பொறுப்பு. என்ன சொல்றீங்க?

      நீக்கு
    4. மூட்டை கட்டிப் போட்டால் எப்படிக் கலக்கும்? தக்காளி சாஸ் வீட்டில் பண்ணும்போது கூடத் தக்காளிச் சாற்றில் வெங்காயம், பூண்டுச்சாறைக் கலந்து மி.பொ.சர்க்கரை உப்புச் சேர்த்துவிட்டு மற்ற மசாலா சாமான்களை இப்படித் தான் மூட்டை கட்டிப் போடுவோம்/போட்டிருக்கேன். இப்போ சாஸெல்லாம் பண்ணுவதில்லை. பிஸாசு தான்! :))))))

      நீக்கு
    5. பொதுவாத் தென் திருநெல்வேலி (நாகர்கோயில் எல்லை) மற்றும் நாகர்கோயில்காரங்க தான் அவியலில் புளி ஜலம் சேர்ப்பார்கள். நாகர்கோயில்காரங்க அநேகமாப் புளி ஜலம் தான் சேர்ப்பாங்க. மறைந்த பாரதி மணி கூட இதைப் பற்றி ஒரு தரம் எழுதி இருந்தார். மதுரைப்பக்கம் கெட்டித் தயிர். ஆனால் அவியலைக் காய்களோடு பண்ணி வைச்சுட்டுத் தயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பரிமாறும் காய்களோடு கலந்துப்போம். மொத்தமாக் கலந்து வைக்க மாட்டோம். அவியல் மிஞ்சினால் மொத்தமாத் தயிர் கலந்திருந்தால் புளிப்பு வந்து ருசி மாறும். என் மாமியார் வீட்டில் அவியலுக்குக் காய்களைத் துண்டங்களாக நறுக்கிட்டுப் பச்சை மிளகாய், ஜீரகம், ஊற வைச்ச கடலைப்பருப்பு, தேங்காயோடு அரைச்சு விடுவாங்க. மேலும் மாவும் கரைச்சு ஊத்திட்டுத் தேங்காய் எண்ணெயில் கடுகு தாளிப்பாங்க. என் பெரிய நாத்தனார் தயிர் கலந்தால் புளிச்சுடும்னு தயிரோடு பாலும் சேர்த்துக் கலப்பாங்க. அவியலுக்குப் பறங்கிக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்குனு எல்லாமும் போடுவாங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம். எனக்குத் தெரிந்த ஒரு நாயர் குடும்பத்தில் அவியலில் பாகற்காய் கூடச் சேர்ப்பாங்க.

      நீக்கு
  14. ஐந்து ப்ளஸ் ஐந்து கத்தரி எனச் செய்முறையில் எழுதிவிட்டு, பன்னிரண்டு கத்தரி உபயோகித்திருக்கிறீர்களே... எப்படியும் மிஞ்சப்போகிறது, கூடுதலாக இரண்டு கத்தரி போட்டால், மறுநாள் திப்பிச வேலை செய்து கத்தரி புதுவித புளிக்குழம்பு ரெசிப்பி முயற்சிக்கலாம்னு நினைத்தீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எடுத்தது போக மிச்சம் இரண்டு தான் இருந்திருக்கும். அதனால் போட்டிருப்பேன். :)

      நீக்கு
  15. மோர் சாத்த்திற்குத் தொட்டுக்கொள்ள இது நன்றாக இருக்கும், கரம் மசாலாவைக் குறைத்தால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊர் டைப் ஸ்டஃப்ட் கத்திரிக்காய் கூட மோர் சாதத்திற்குத் தொட்டுக்கலாம்.

      நீக்கு
    2. //Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      நம்ம ஊர் டைப் ஸ்டஃப்ட் கத்திரிக்காய் கூட மோர் சாதத்திற்குத் தொட்டுக்கலாம்.// இதுவும் தேடிக் கண்டு கொண்டது தான்.

      நீக்கு
  16. நானும் ஆம்சூர் பொடி பயன்படுத்துவதுண்டு...நன்றாக இருக்கும் சுவை. இங்கு சின்ன கத்தரி பார்த்துவிட்டால் அவ்வளவுதான் ஏதேனும் ஒரு ஸ்டஃப்ட் செய்முறை இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளிப்புத் தேவைன்னா மட்டும் அம்சூர் பொடி சேர்ப்பேன்.

      நீக்கு
  17. எங்கள் பிளாக்கின் சமையலறையில் மீண்டும் கீதா அக்காவின் ருசியான குறிப்பு! Good!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா என்றாலே பானுமதி வெங்கடேச்வரன் மேடம் என்று assume செய்துகொள்ளலாமா?

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா, பானுமதி, உள்ளே நுழையும்போதே கருத்துப் பெட்டியில் கூகிள் கணக்கில் இணையச் சொல்லிக் கேட்கும். அப்போ அதை க்ளிக் செய்தால் போதும் பெயரில்லாமல் அலைய வேண்டாம்! :)))))

      நீக்கு
    3. //Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      ஹாஹாஹாஹா, பானுமதி, உள்ளே நுழையும்போதே கருத்துப் பெட்டியில் கூகிள் கணக்கில் இணையச் சொல்லிக் கேட்கும். அப்போ அதை க்ளிக் செய்தால் போதும் பெயரில்லாமல் அலைய வேண்டாம்! :)))))// இதுவும்.

      நீக்கு
  18. படிப்படியான செய்முறை குறிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்திரிக்காய் ஸ்டஃப் கறி செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது. இந்த முறையில் செய்து பார்க்க வேண்டும். நம் ஊர் முறையில் செய்து இருக்கிறேன்.

      நீக்கு
    2. நன்றி திரு தனபாலன். நன்றி கோமதி.

      நீக்கு
    3. கோமதிக்குக் கொடுத்த பதிலை ப்ளாகர் ஒளிச்சு வைச்சிருக்கு போல! என்னனு நினைவில் இல்லை. ஆனால் நன்றி கோமதினு சொல்லிக்கிறேன்.

      நீக்கு
  19. ஶ்ரீராம் என்ன காணோம்? கத்திரிக்காய் செய்து கொடுக்கலைனு பாஸ் கிட்டே கோவிச்சுண்டு போயிட்டாரா?

    பதிலளிநீக்கு
  20. என்ன இன்னும் கீசா மேடத்தைக் காணோம்? ஒருவேளை காவிரியில் வெள்ளம் வந்திருப்பதால் மெதுவாக மொட்டை மாடிக்குச் சென்று படங்கள் பிடிப்பதில் இறங்கியிருப்பாரோ? இருக்கும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட பல கருத்துக்களையும் ப்ளாகர் முழுங்கி இருக்கு. மெயில் பாக்ஸில் இருக்கானு பார்க்கணும். மேலதிகத் தகவலுக்கு! மொட்டை மாடியில் வேலை நடக்குது. இன்னும் 15 நாட்களுக்குப் போவது கஷ்டம்! பார்ப்போம்.

      நீக்கு
  21. நன்றாக உள்ளது.

    பொடி அடைத்த கறி நாங்களும் செய்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குக் கொடுத்த பதிலும் காணோம். நன்றி.

      நீக்கு
  22. //Geetha Sambasivam ""திங்க"க்கிழமை : கத்திரிக்காய் ஸ்டஃப் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    ஶ்ரீராம் என்ன காணோம்? கத்திரிக்காய் செய்து கொடுக்கலைனு பாஸ் கிட்டே கோவிச்சுண்டு போயிட்டாரா?// இதுவும் அங்கேருந்து கொண்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இந்த மாதிரி தான் செய்வேன் பிஞ்சு கத்தரிக்காயாக இருக்க வேண்டும் ருசியான குறிப்பு அன்புடன்

      நீக்கு
    2. ஆமாம். பிஞ்சுக்கத்தரிக்காயாக இருந்தால் சுவை கூடும். நமஸ்காரங்கள் அம்மா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!