ஞாயிறு, 10 ஜூலை, 2022

லால் பாக் உலா 07 :: K G கௌதமன்

 

ஏரிக் கரை ஓரத்திலே மரங்களின் அணிவகுப்பு பூக்களின் சிரிப்பு கர்நாடகா அல்லவா ! தாமரைக் குளம் !! பொது இடத்தை ஆக்கிரமித்து சன் பாத் எடுக்கும் பைரவர்கள்! 


(தொடரும்) 

= = = = =   = = = =  

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரீராம் அவர்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துகள். = = = = = = = = = =

50 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

  இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள். எந்நாளும் சீரும் சிறப்புமாக நல் ஆரோக்கியத்தோடு நீடுழி வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  லால் பாக் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.
  அணி வகுக்கும் மரங்களும், அழகாய் சிரிக்கும் மலர்களும், அருமை.

  பூத்ததோடு மட்டுமின்றி, பூரிப்போடு இருக்கும் மலர் கூட்ட படங்களும், குளிரில் தன் நடுக்கத்தை வெளிக்காட்டாமல் தன்னடகமாய் புன்னகைக்கும் தாமரை மலர்கள் படங்களும் அருமை.

  கிடைக்கிற வெய்யிலில் நமக்கும் சம பங்குண்டு என நினைக்கும் பைரவர்களின் தைரியம் என்றுமே வியக்க வைப்பது. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நாங்களும் ஒரு நெருங்கிய உறவின் பிறந்த நாளுக்காக அவர்களின் விருப்பப்படி அவர்களுடன் கோவிலுக்கு செல்ல தயாராக வேண்டும். இந்த மழையில் எப்படி சென்று வரப்போகிறோமா... ஆண்டவனே துணை. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பார்வை, உங்கள் மனவோட்டம், உங்கள் ரசனை உங்கள் எழுத்துகளே தனிதான் கமலா அக்கா.. ரசனை!

   நீக்கு
  2. இங்கேயும் கொஞ்சம் கொஞ்சம் தூற்றல் தூறிப் பார்க்கிறார் வருணன். வாயுவோ முழு வேகத்தில். யார் ஜெயிப்பாங்களோ?

   நீக்கு
  3. சென்னையிலும் பூந்தூறலாய் ...

   நீக்கு
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம். விரைவில் மாமனார் ஆகி மருமகள்கள் மூலம் பேரன், பேத்திகள் பெற்றுத்தாத்தாவும் ஆகப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. அல்லியோனு சந்தேகமா இருந்ததா? பெரிசு பண்ணிப் பார்த்துக் கொண்டேன். இங்கே நாங்களும் தாமரை பூத்த தடாகம் போட்டிருக்கோமாக்கும். நேரம் இருந்தால் போய்ப் பாருங்க.
  http://gsambasivam.blogspot.com/2011/05/blog-post_11.html பத்து வருஷம் முன்னாடியே போட்டாச்சு. :)))) வெண் தாமரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்லி சந்தேகத்தை விட குட்டியானை கவனத்தைக் கவர்கிறது!

   நீக்கு
  2. ஹிஹிஹி, மார்க்குக்கு எப்படித் தெரியுமோ! குட்டியானை படம்/வீடியோ எனில் உடனே எனக்கு வந்துடுது! :)))))

   நீக்கு

 6. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 7. ஶ்ரீராம் இன்னிக்கு எந்தக் கோயிலில் இருப்பார்? இங்கே ஒரே இருட்டு. சூரியனார் ஏற்கெனவே ஒரு பத்துநாட்களாக முழு ஓய்வு. இன்னிக்குச் சுத்தம். இந்த அழகில் எங்கே போறது? இல்லாட்டி மட்டும் போயிடப் போறேனா என்ன? காற்று வேறே ஒரே வேகம், சப்தம், கதவுகள் படார்/படார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லம் எனும் கோவிலில் இருக்கிறேன். இன்னும் எதுவும் பிளான் செய்யவில்லை. வல்லிம்மாவை பார்க்கப் போகலாம் என்று நினைத்தேன். அவர்களுக்கு உடம்பு சரியில்லை. எனக்கும் கொஞ்சம் சளி, ஜுரம் போல இருப்பதால் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன்!!

   நீக்கு
  2. இங்கேயும் ஒரு வாரமாக இந்தக் கூத்துத்தான். மாமா வெளியே போனப்போ தூற்றலில் நனைஞ்சுட்டாரோ என்னமோ! ஜலதோஷம் பிடித்துக்கொண்டு தும்மின ராக்ஷஸத்தும்மல்களில் நான் அம்பேல்! ஒரு வாரமாக எழுந்து நடமாடக் கூட சிரமமாகப் போய்விட்டது. இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை. அப்படியும் ராத்திரியெல்லாம் இருமல். மருந்து சாப்பிட்டும் அவ்வப்போது தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தது.

   நீக்கு
  3. வல்லியைப் பார்க்க நேர்ந்தால் விசாரித்ததாகச் சொல்லுங்க.

   நீக்கு
  4. ரேவதியோட பேசியாச்சு! :)))))

   நீக்கு
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி

  படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

  சமீபத்தில் உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடியதாக புலனத்தில் செய்தி வந்ததாக ஞாபகம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜி.


   //சமீபத்தில் உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடியதாக புலனத்தில் செய்தி வந்ததாக ஞாபகம்...//


   ஆமாம். சமீபத்தில் சென்ற வருடம் இதே நாளில்..

   நீக்கு
 9. காணொளியின் மூலமாக ஸ்ரீ ராமுக்குத் தாங்கள் சொல்லுவதென்ன? பார்வை குழப்புகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராமுக்குப் புரிந்திருக்கும். நமக்கெல்லாம் புரியாது.

   நீக்கு
  2. கடைக்கண் பார்வை வீசாதோ என்கிற பாடல் வரி நினைவுக்கு வருகிறது!

   நீக்கு
 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் ஸ்ரீ ராமிற்கு அன்புடன்

  பதிலளிநீக்கு
 11. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் வாழ்க சிறப்புடன் நலமுடன்.

  படங்களின் அணிவகுப்புகள் அருமை. குளத்தில் இருப்பதுதாமரை அல்ல அல்லி குமுத மலர்கள் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம். ஆனால் அங்கு வைத்திருக்கும் அறிவிப்புப் பலகையில் 'தாமரைக் குட்டை' (Lotus pond) என்றுதான் எழுதியுள்ளார்கள்!

   நீக்கு
 12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்!

  Vaishnavi

  பதிலளிநீக்கு
 13. பழசைத் தோண்டித்துருவியதில் இந்தப் பதிவு கிடைச்சது. அநேகமாக அம்பத்தூர் வீட்டுப் படங்கள் எல்லாமும் போட்டிருக்கேன். அதே போல் எல்லாரும் வந்து கருத்தும் சொல்லி இருக்கீங்க. ஆகவே விரும்பினால் போய்ப் பார்க்கவும். :) https://sivamgss.blogspot.com/2019/02/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 14. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 15. வழக்கம் போல படங்கள் எல்லாம் அழகு..

  பதிலளிநீக்கு
 16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஶ்ரீராம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 17. படங்கள் எல்லாம் அழகு. அல்லி மலர்கள் மலர்ந்து இருக்கும் தடாகம் அருமை.

  பதிலளிநீக்கு
 18. படங்கள் அழகு
  நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!