வெள்ளி, 29 ஜூலை, 2022

வெள்ளி வீடியோ : இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே - இதய போர்வையில் மறைத்தானே

 தென்கச்சி பாரதிசாமி என்பவர் எழுதிய பாடலை இசையமைத்து சகோதரி ஜெயலக்ஷ்மியுடன் இணைந்து பாடியிருக்கிறார் ராஜலக்ஷ்மி.

அதிகாலை எழுந்த உடனேயே தாலாட்டா?  

நாம் கேட்பது என்னவோ இந்த மாதிரி பகுதி பாடல்களை அதிகாலையில்தான்.  உடனே முருகனை தூங்க செய்துவிட்டால் எப்படி என்றெல்லாம் தோன்றாது.  பாடலின் இனிமையில் ஆழ்ந்து விடுவோம்.

தங்கத் தாமரை தொட்டிலிலே ஆடும் அழகா தாலேலோ
சரவண பொய்கை அலைகளிலே தவழும் முருகா தாலேலோ தா..லேலோ
தங்கத் தாமரை தொட்டிலிலே ஆடும் அழகா தாலேலோ

கார்திகை பெண்கள் கைகளிலே மகிழும் வேலா தாலேலோ
குடகு மலை அருவியிலே குளிரும் நிலவே தாலேலோ தாலே.லோ
தங்கத் தாமரை தொட்டிலிலே ஆடும் அழகா தாலேலோ

பொதிகை மலை சந்தனத்தில் மணக்கும் சிலையே தாலேலோ
குறிஞ்சி மலையில் தேன் தினை மாவில் மயங்கும் குமரா தாலேலோ
குமரமலைமின் தென்றல் காற்றில் சிரிக்கும் முகமே தாலேலோ.. தாலேலோ..
தங்கத் தாமரை தொட்டிலிலே ஆடும் அழகா தாலேலோ

குன்று தோறும் முழங்கி வரும் கோவில் மணியே தாலேலோ
குமரிக் கடலில் குளித்த முத்தே அருளின் வித்தே தாலேலோ
கன்னித் தமிழை பேசும் கிளியே அன்பின் மொழியே தாலேலோ தாலேலோ..
தங்கத் தாமரை தொட்டிலிலே ஆடும் அழகா தாலேலோ

https://www.youtube.com/watch?v=pONuGlOULio

=========================================================================================================

1961 தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் 'தாய் சொல்லைத்த தட்டாதே' தேவர் படம். ஒரு சிறு உரசலுக்குப் பின் தேவரும் எம் ஜி ஆரும் மீண்டும் இணைந்த படமாம் இது. என்ன மனத்தங்கலோ அவர்களுக்குள் அப்போது?! ஆனால் எம் ஜி ஆரை விட்டு சிவாஜி பக்கம் சென்றதில்லை தேவர். இயக்கம் எம் ஏ திருமுகம்.

கண்ணதாசனின் அருமையான பாடல்களுக்கு இசை திரையிசைத்திலகம் கே வி மகாதேவன்.

படத்தில் எட்டு பாடல்கள். எட்டும் நல்ல பாடல்கள். 'ஒருத்தி மகனாய் பிறந்தவராம்' என்று கண்ணதாசன் இதில் இலக்கியத்தைத் தொட்டு ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

தத்துவப் பாடல் வரிசையில் சேர்க்கக்கூடிய இன்றைய பாடல் டி எம் எஸ் குரலில் ஒலிக்கிறது. காட்சியில் வருவது எம் ஜி ஆர் என்று கண்டுபிடிப்பது கடினம். மரு ஒட்டி இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். மாறுபட்ட ஒப்பனையில் இருப்பார்!

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே-
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே -
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

44 கருத்துகள்:

 1. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
  செல்வத்துள் எல்லாம் தலை

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கங்களுடன்

  வாழ்க வையகம்
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. 6:40.. எந்த ஒரு கருத்தையும் காணாதிருப்பது என்னவோ போல் இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை நான் அலுவலகம் கிளம்பும் முன் சாதாரணமாக ஒருவராவது வந்திருப்பார்கள்.  பதில் ஒருவருக்காவது அளித்துவிட்டுக் கிளம்புவேன்.  ஆம், இன்று ஒருவரையும் காணோம்!

   நீக்கு
 4. முதல் பாட்டு கவித்துவம்.. இப்படியொரு தாலாட்டுக்காகவே இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் போல் இருக்கின்றது..

  இன்பத் தமிழ் இனிமை.. இனிமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் நான் பகிர நினைத்த ஒரிஜினல் பாடல் அது இல்லை என்று கோமதி அக்கா எனக்கு வாட்ஸாப்பில் சொன்னபிறகு தெரியாதது.  என் கணினி ஸ்பீக்கர் ரிப்பர் என்பதால் சோதிக்காமல் பகிர்ந்திருக்கிறேன்.

   நீக்கு
  2. //தெரியாதது. // தெரிந்தது. ஒரே அவசரம். :(

   நீக்கு
 5. அட? என்ன! யாருமே வரலை இன்னிக்கு? ஆடி வெள்ளியின் வேலைகளில் அனைவரும் மும்முரமா?

  பதிலளிநீக்கு
 6. ஆஹா! துரை வந்து எட்டிப் பார்த்துட்டாரே! முதல் பாடல் கேட்டதே இல்லை. இரண்டாம் பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடல் வரியைப் பார்த்துவிட்டுச் சொல்கிறீர்களா, கேட்டு விட்டுச் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை.  சூலமங்கலம் சகோதரிகள் பாடல் பகிர்வதற்கு எண்ணி, யாரோ பாடியதை பகிர்ந்திருந்திருக்கிறேன்.

   நீக்கு
  2. பாடலைக் கேட்பதற்கு முன்னரே அதைப் படித்துப் பார்த்தேன் கேட்டறியாதவை. போட்டாலும் வித்தியாசமாகவே இருந்தது.

   நீக்கு
 7. முதல் பாடல் என்றும் இனிமை.
  இரண்டாவதும் கேட்ட அருமையான பாடலே...

  பதிலளிநீக்கு
 8. கவியரசரின் பாடல் என்றால் சும்மாவா!..

  // பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே -. //

  பூமியைக் கெடுத்தது இருக்கட்டும்..ஊரைத் தெருவை வீட்டைக் கெடுத்தவன் இன்றைய தமிழன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊர், தெரு, வீடு எல்லாம் பூமியில்தானே இருக்கிறது...

   நீக்கு
 9. 1. அழகான பாடல்...
  2. கருத்துள்ள அருமையான பாடல்...

  பதிலளிநீக்கு
 10. இறைவன் அளித்த கொடை, கண்ணதாசன் எழுதிய பாடல்கள். எப்படிப்பட்ட தத்துவப் பாடல்கள்.... அவர் புகழ் என்றைக்குமே மறையாது. கூகுள் செய்யும் வேலைகளில் ஒன்று அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுத்துவது. அதனால் வாரம் இரண்டு கண்ணதாசன் பாடல்களை வெளியிடுங்கள். அப்போதுதான் பல பாடல்களை இங்கு பகிர முடியும். ப்ளாக்ஸ்பாட்டே வரும் காலங்களில் மறைந்துவிடலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ அன்பின் நெல்லை.. //கூகுள் செய்யும் வேலைகளில் ஒன்று அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுத்துவது..//

   உண்மை தான்.. யூ டியூப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இருந்த பழைய பக்திப் பாடல்கள் இப்போது கிடைப்பதில்லை.. உதாரணத்துக்கு திரு. வீரமணி அவர்களது ஐயப்பன் பாடல்கள் பலவும் கர்ண கடூரமான சத்தங்களுடன் உருமாற்றம் ஆகி விட்டன.. உச்சரிப்புப் பிழைகளுடன் கூடிய அவற்றுக்கு ஆயிரக் கணக்கில் களேபரம்..

   நீக்கு
  2. ஆம்.  நானும் முன்னர் கேட்டிருந்த பாடல்களை இப்போது காண முடிவதில்லை.  என்ன காரணமோ..

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. இந்த தங்கத்தாமரை பாட்டு இசைதட்டில் உள்ளது போல இல்லையே !
  என்னிடம் கேஸட் இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கும் இந்த பாடல். பிடித்த பாடல். நீங்கள் பகிர்ந்த பாடல் கச்சேரியில் வயதான பின் பாடியது போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் 80 களில் இந்தப் பாடலைக் கேட்டிருக்கின்றேன்..

   நீக்கு
  2. நீங்கள்தான் பாடலை முதலாவதாக ஒலிக்கவிட்டுக் கேட்டிருக்கிறீர்கள்!  நீங்கள் சொல்லிதான் யாரோ பாடியதை பகிர்ந்திருக்கிறேன் என்று தெரிந்தது.  நீங்கள் அனுப்பி இருக்கும் லிங்க் பாகிர்ந்தாள் இங்கு காணமுடியாத வீடியோ அனவைலபில் லிங்க்!  பார்க்கிறேன்.  வீட்டின் ப்ளூ டூத் ஸ்பீக்கர் பிசியாக இருக்கிறது.  ஸ்லாட் கிடைத்ததும் சோதித்து பகிர்கிறேன்.

   நீக்கு
 13. அடுத்த பாடலும் மிக அருமையான பாடல்.
  பாடல் வரிகளும் இசை அமைப்பும், டி.எம்.எஸ் குரலும் அருமை.
  இரு பாடல் பகிர்வுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 14. முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ரசித்த பாடல். ஆனால் இங்கு ஏன் இப்படி இருக்கிறது? ஏதோ மாதிரி இருக்கிறதே. ஒரு வேளை எனக்கு மட்டும்தான் அப்படிக் கேட்கிறதா?

  கீதா

  பதிலளிநீக்கு
 15. இரண்டாவதும் கேட்டிருக்கிறேன். ஆனால் அதிகம் கேட்டதாக நினைவில்லை ஸ்ரீராம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. முதலாவது பாடல் நீண்ட இடைவெளிக்குப் பின் நினைக்க வைத்துள்ளீர்கள். .அருமையான பாடல்.
  இரண்டாவதும் பழைய பாடல் கேட்டிருக்கிறேன்.வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ ஸ்ரீராம்..

   // ஊர், தெரு, வீடு எல்லாம் பூமியில் தானே இருக்கின்றன... //

   உண்மை தான்..

   ஆனாலும் தனி மனித ஒழுக்கத்தில் இருந்து தான் பூமி என்று நினைக்கின்றேன்...

   நீக்கு
 17. // தங்கத் தாமரைத் தொட்டிலிலே //

  சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் இது அல்ல..

  சுருதிப் பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு வேறு யாரோ பாடிய பாடல் இது.. பழைய பாடலை உருமாற்றம் செய்து விட்டார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். கவனிக்காமல் பகிர்ந்து விட்டேன். ஒரிஜினல் பாடலை எம்பெட் செய்ய முடியாது இங்கே. லிங்க் தருகிறேன்.

   நீக்கு
 18. நம்பி வந்தது ஒரு குத்தமா ஐயா!..

  தேவ கானக் குயில்களின் பாட்டு - என்று ஏமாந்து விட்டேனே..

  உண்மையில் தங்களது பாடல் வரிகளைக் கேட்டு விட்டு கருத்து எழுதினேன்..

  யாரைத் தான் நம்புவதோ பேதை உள்ளம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணினி ஸ்பீக்கர் இல்லாததால் அதைவிட ஏமாந்த உள்ளம் எனது....  உங்களை எல்லாம் ஏமாற்றியவனும் ஆனேன்!

   நீக்கு
 19. முதல் பாடல் சரியாகக் கேட்கவில்லை ஸ்ரீராம்ஜி. பாடல் வரிகள் கேட்ட நினைவிருக்கிறது.

  இரண்டாவது பாடல் அருமையான பாடல். படமும் பார்த்திருக்கிறேன். எம் ஜி ஆர் படங்கள் எதையும் பார்க்காமல் விட்டிருக்கமாட்டேன் ஒரு காலகட்டத்தில். ஆம் இப்படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை.
  ஒருத்தி மகனாய் பாடலும் அருமையான பாடல். ஆன்ட்ராய்ட் மொபைல் கையில் வந்ததிலிருந்து பல பழைய பாடல்களை அவ்வப்போது கேட்டுவருகிறேன். நீங்களும் பகிர்வது இன்னும் பல பாடல்களை நினைவுபடுத்துவதால் எனக்கு வசதியாகப் போயிற்று.

  மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடல் லிங்க் தந்திருக்கிறேன் அது சரியாய் இல்லையா?  வேறு லிங்க் தரட்டுமா?

   அவ்வப்போது பாடல்களை மொபைலில் கேட்பது மகிழ்ச்சி துளஸிஜி.  கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!