புதன், 2 நவம்பர், 2022

அழகிய படங்கள் நீங்கள் தேடும்போது ஏன் கிடைக்கமாட்டேன் என்கிறது?

 

 ஜெயக்குமார் சந்திரசேகரன் : 

எ பி ஆசிரியர்களுடைய இணைய சேவையாளர் எவர் (Service provider)?

இணைய இணைப்பு எத்தகையது (coaxial cable/FTTH/4G dongle/ DTH?)

சேவையின் plan என்ன? 

வாசகர்களும் பதில் சொல்லலாம்.

 # என் வலை வழி மேய்தல் ஏர்டெல் மூலம் கைபேசியில். 

Wi Fi ACT Fibre. Coaxial probably. 

Prepaid Airtel ஆண்டுக்கு 3000 ஒரு நாளைக்கு  இரண்டு gb data , வரையற்ற உள்நாட்டு அழைப்புகள்.

Same.

$ நானும் ACT wi-fi + airtelதான்!

& Airtel Fibernet 5 GHz net connection WiFi - Unlimited (2 TB per month) Rs 1179 per month.

    For phone it is Airtel Truly(!) unlimited Rs 1999/ year. (I think there will be hike from 2023 Jan) 

நெல்லைத்தமிழன் : 

1. அன்றாட வாழ்வில் பழமொழிகள் உபயோகப்படுதா? 

$ அன்றாட வாழ்வில் அடுத்தவரை இடித்துரைக்க மட்டுமே பழமொழிகள் உபயோகப் படுத்தப் படுகின்றன.

# பழமொழிகள் எக்காலத்திலும் பயன்படுவதால் தான் இன்று வரை பேசப் படுகின்றன அல்லவா ?

& அன்றாட வாழ்வில் இப்போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றே தெரியாமல் வாழ்கிறோம். பழமொழிகள் பேச எங்கே வாய்ப்பு கிடைக்கப்போகிறது! வீட்டில் உள்ளவர்களிடம் பழமொழியோடு பேசினால் " கிழம் கட்டை " என்கிற விமரிசனம்தான் கிடைக்கும். 

2.  50 ரூபாய்க்கு என்ன ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்னு பல வருடங்களுக்கு முன்னால போட்டில்லாம் வச்சீங்க. இப்போ அது மாதிரிச் செய்யாததற்கு என்ன காரணம்?  

$ 50 என்பது 200 ஆக மாறுவது தவிர மாற்றம் எதும் வருமோ ?

# ஒரு விஷயத்தை மீண்டும் சொல்ல, சூழ்நிலையில்  பெரிய மாற்றம் வந்திருக்க வேண்டும்.  மற்றபடி விலைகளை தற்கால நிலவரப்படி சரி செய்வது தவிர வேறு அனைத்தும் அப்படியே தொடரும்தானே.

3. பயணம் என்று வந்துவிட்டால் வெளியில் சாப்பிட்டுக்கலாம்னு இருந்துடுவீங்களா இல்லை, இட்லி, புளியோதரை என்று கட்டுசாதம் கட்ட ஆரம்பிச்சுடுவீங்களா?

$ 3. முன்பு என்றால் ஒரு வருடம் முன், கட்டு சாதத்துடன் தான் கார் பிரயாணம்

இப்போது ஹோட்டல்களில் கார் மேயும் நேரத்தில் நாமும்.

# கட்டு சாதம் கட்டுவது முற்றும் மறக்கப் பட்டுவிட்ட காலம் இது.

& ஒரு காலத்தில் மியூசிக் அகாடெமி மத்திய நேர கச்சேரி கேட்பதற்கு போகும்போது கூட வீட்டில் சப்பாத்தி செய்து அதற்குத் தொட்டுக்கொள்ள சீனி அல்லது மிளகாய்ப் பொடி எடுத்துச் சென்றது உண்டு. (அகாடெமி கேண்டீன் பொருட்களின் 'ஆகாச விலை'யும்  ஒரு காரணம் !) ஆனால் இப்போ எல்லாம் எல்லா உணவும் போகும் வழியில் உள்ள ஹோட்டல்களில் மட்டுமே! 

4. சமீபத்துல ஜான்ஸன் & ஜான்ஸன், குழந்தைகளுக்கான பவுடரை விலக்கிக்கொள்வதாகவும், இனி மக்காச்சோள மாவிலிருந்து பவுடர் தயாரிக்கப் போவதாகவும் சொன்னபோது உங்களுக்கு என்ன தோன்றியது? 

$  அது அமெரிக்கா செய்தி..

# இப்போதாவது பொறுப்பாக சொல்லிவிட்டார் களே என்ற நிம்மதி.  ஆனாலும் பெரும் அளவில் உபயோகம் பரவலாகச் செய்த போதும் பெரிய கெடுதல் வந்ததாகத் தெரியவில்லையே என்ற ஐயமும்...

& அப்படியா! ஆஹா - இனிமேல் நான் 'காய்கறி சூப்' தயாரிக்க corn flour வாங்காமல் ஜான்சன் & ஜான்சன் பவுடர் வாங்கலாமா! 

5. எனக்குப் பழகிய உணவை மாற்றி புதிய உணவை முயற்சி செய்யப் பிடிக்காது. - தமிழக உணவு vs கர்நாடக உணவு..   எங்க வீட்டில் எல்லோரும் பழகிட்டாங்க. உங்களுக்கு எப்படி?  

$ உணவில் மாற்றம் அவ்வப்பொழுது நேர்வது.

# உணவில் புதுப் பழக்கம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாதவரை நம் விருப்பங்கள் மாற மாட்டா. 

6 ஷிஃப்டில் வேலை செய்பவர்களுக்கு தொழிற்சாலை ஏன் சலுகை விலையில் உணவு வழங்கவேண்டும்?

$ தொழிலாளர் நல திட்டங்களில் இதுவும் உண்டு.

# தொழிலாளர்கள் வேலையில் நீடிக்க அவர்களுக்கு சில  வசதிகள் ஊக்கங்கள் தருவது ஒரு பயன் தரும் யுக்தி.

இந்த மாதிரி அழகிய படங்கள் நீங்கள் தேடும்போது ஏன் கிடைக்கமாட்டேன் என்கிறது?












& நான் தேடும்போது கூகிளில் ஒரு செய்தி flash ஆனது - " நீங்கள் தேடும் படங்களை சற்றுமுன் பெங்களூரிலிருந்து ஒருவர் கூகிள் பக்கங்களிலிருந்து எடுத்துக் கொண்டுவிட்டார் '" - அது நீங்கள்தானா! நல்லவேளை அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளாமல் எங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டீர்கள். (ஆனால் கூகிள் நீங்கள் 36 படங்களை எடுத்துக் கொண்டதாகக் கூறியது. மற்றவை எங்கே? ) 

= = = =

எங்கள் கேள்விகள் :

1) மேலே ஜெயக்குமார் கேட்டிருக்கிறார். வாசகர்கள்  விவரம் எழுதுங்கள். 

2) மின்னிலா 128 ஆவது வார இதழ் - சென்ற ஞாயிறு வெளியானது - பின் அட்டைப் படத்தை கவனித்தீர்களா? விவரம் தெரிந்தவர்கள் அது பற்றி engalblog மின்னஞ்சல் முகவரிக்கு உடனே எழுதுங்கள். 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்கள் : 

1)  

2) 


3) 

எரியும் தீயில் என்னென்ன உருவங்கள் தெரிகின்றன? 

= = = = =

46 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமெனவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இறுதி படத்தில் எரியும் தீயில் ஒரு நாகம், இறைவன் கிருஷ்ணன், அருகிலேயே தன் முன்னங்காலை தூக்கி அவரை வழிபடும் குதிரை போன்ற உருவங்கள் தெரிகின்றன. இறைவன் சீரடி சாய்பாபா மாதிரியும் உள்ளது.

    காஸ் அடுப்பு இப்படியும் கொழுந்து விட்டு எரியுமா? இப்போதுதான் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைத்தவைகளையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்! கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  4. இணைய சேவையாளர்களைப் பற்றிக் கேட்பதைவிட, உங்கள் இணையசேவையாளர் மீது உங்களுக்குத் திருப்தியா எனக் கேள்வி கேட்டிருந்தால் வித்தியாசமான பதில்கள் வந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
  5. தொழிலாளர் நலத் திட்டங்கள், வேலையில் நீடிக்க.... இதெல்லாம் பொருத்தமான பதிலாகத் தெரியவில்லை.

    தொழிற்சாலை மிகப் பெரியது. வெளியில் போய்ச் சாப்பிடுவது என்றால் அதிக நேரம், களைப்பு, செக்யூரிட்டி செக் என ஏகப்பட்ட பாதிப்பு. டப்பா உணவு என்றாலும் தொழிற்சாலைச் சுத்தம் பாதுகாப்புக்கான பிரச்சனைகள். அதனால் குறைந்த விலையில் உணவு

    பதிலளிநீக்கு
  6. //காய்கறி சூப் தயாரிக்க// - ஹாஹாஹா... இணையத்தில் டாய்லட் கம்மோடைச் சுத்தமாக்க, டைல்ஸைச் சுத்தமாக்க கோல்கேட் பேஸ்ட்டை, கோகோகோலாவை உபயோகிக்கும் காட்சியும் மனதில் வந்துபோனது

    பதிலளிநீக்கு
  7. //பழமொழி...// - என் பெண் சமீபத்தில் சொன்னாள்.. நம் நண்பர்கள் நம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருக்கணும். 45-50 ஆகிவிட்டால் அடுத்த ஜெனரேஷனுடன் நட்பாக இருக்கணுமே தவிர நம்மைவிட வயதானவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் நம் சிந்தனைக்கு வயதாகிவிடும் என்றாள். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியில்லை தாத்தா பேரன் நட்பு அளவு கடந்தது. அது போலத்தான் பாட்டியும் பேரப்பிள்ளைகளும். ஆனால் பேரப்பிள்ளைகளின் சிந்தனை அதே குழந்தை சிந்தனைகளாகவே இருக்கும். 

      Jayakumar

      நீக்கு
    2. சாரி. நான் 45-50 என்பதைக் கவனிக்கவில்லை. கருத்தை வாபஸ் வாங்குகிறேன். 
      Jayakumar

      நீக்கு
  8. சில படங்களில் உள்ளவர், யார் என்றே தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  9. என்ன தான் இருந்தாலும் மஹாலஷ்மியின் அழகு வேறு எந்த நடிகைக்கும் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாலக்ஷ்மி ? அந்தப் பெயரில் ஒரு நடிகை இருக்கிறாரா ?

      நீக்கு
    2. // மஹாலக்ஷ்மி ? அந்தப் பெயரில் ஒரு நடிகை இருக்கிறாரா ?..//

      80 களில் இருந்தார்.. AVM ராஜன் - புஷ்பலதா தம்பதியரின் மகள்..

      நடித்த படம் ராணித் தேனீ..

      நீக்கு
    3. நான்நினைக்கிறேன்.... ஒரு பெண்ணின் அழகை எல்லோரும் ரசிக்கணும், ideal அழகு என்று நினைக்கணும் என்ற அவசியமில்லை. அப்படி இருந்தால் 30 வருடங்களுக்கு முன்னால் (ஏன்னா.... நந்தினியைப் பார்த்து நொந்துபோன லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்) ஐஸ்வர்யா ராய் என்ற ஒரே நடிகை இருந்திருக்கவேண்டும்

      ராணித்தேனீ மஹாலக்ஷ்மி படத்தை இப்போது பார்த்தேன். ஓகேதான். எ.பிலயே பாருங்களேன்... நான் தமன்னா (15 வருடங்களுக்கு முந்தைய), ஸ்ரீராம் அனுஷ்கா (அதே 15 வருடங்களுக்கு முந்தைய), கௌதமன் சார் பாவனா என்று நினைக்கிறேன்... ரசிகர்கள்.

      நீக்கு
  10. 'இந்த மாதிரி அழகிய படங்கள் ' ;) ரசனை.
    நீண்ட இடைவெளிக்குப் பின் வருகிறேன். விடுபட்டவை படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  11. ரசனையான கேள்வி-பதில்கள்.

    கடைசி படம் இயற்கையான புகைப்படமாக தெரியவில்லையே....

    மற்ற படங்கள் அழகு நெல்லைத்தமிழர் சார்பாக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலைல குளிச்சுட்டு, முகத்தைத் தொடைச்சுக்கிட்டு நடிகைகள் வந்தாங்கன்னா, அவங்க வீட்டுக் கண்ணாடிலயே, அவங்களுக்கு அவங்களை அடையாளம் தெரியாது. இதுல இயற்கை என்ன செயற்கை என்ன?

      நீக்கு
  12. இணைய இணைப்பு

    Railtel, FTTH via LCO, WIFI modem. unlimited, 449+GST=529 per month. no IP-Tv or OTT. No smart TV but flat screen TV can be used as a screen for computer HDMI output/VGA output.
    (LCO=Local cable operator)

    புகைப்படங்களில் உள்ளவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது.

    //அப்படியா! ஆஹா - இனிமேல் நான் 'காய்கறி சூப்' தயாரிக்க corn flour வாங்காமல் ஜான்சன் & ஜான்சன் பவுடர் வாங்கலாமா! //

    உப்பு போடாமல் பற்பசையை உப்பாக உபயோகிக்கும் போது சரி.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  13. அடுத்த பதிவுகளுக்கு என்று சில படங்களை
    மிச்சம் மீதி வைத்துக் (!) கொள்ளும் பழக்கம் உண்டா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கும். கவலை வேண்டாம். உடனே கதை எழுத ஆரம்பியுங்கள்.

      நீக்கு
  14. படிச்சேன் முகநூல் வழியாக் காலம்பரவே! ஆனால் தமிழில் பதில் சொல்லும் ஆப்ஷன் வைச்சுக்கலை என்பதால் பதில் சொல்லலை. அந்தக் குழந்தைகள் ஒண்ணு ஆண்/மறைந்து எட்டிப் பார்ப்பது பெண் குழந்தை/ இரண்டுமே எ.பி. ஆசிரியர் குழுவினருக்குச் சொந்தக்காரங்களாய் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  15. பிஎஸ் என் எல் தான் வைச்சிருந்தேன். ஏனோ தெரியலை. என்னோட ஆன்ட்ராய்ட் செல்லில் அதை இணைக்கவே முடியலை. வீட்டுக்கு வந்த கணினி தொ.நு.காரங்க எல்லோரும் முயற்சித்தும் வரலை. அவங்களோட செல்லையும் இணைக்க முடியலை. ஆனால் சாம்சங் அலுவலகம் போனால் அங்கே ஜம்மென்று இணைக்க வந்தது. சரினு இந்த வம்பே வேண்டாம்னு தனியார் இணைய இணைப்புக்கு மாறிட்டோம். ஒரு வருஷத்துக்கு மொத்தமாப் பணம் கட்டிடுவோம். மாசம் 900 ரூபாய்னு நினைக்கிறேன் சேவை எனில் கூப்பிட்ட உடனே வந்துடுவாங்க. வெளியூருக்கு அதிக நாட்கள் போனாலோ/வெளிநாடு சென்றாலோ இணைப்பைத் துண்டித்து விடுவோம். கேபிளும் இவங்களே கொடுப்பதால் ஒண்ணும் பிரச்னை இல்லை.

    பதிலளிநீக்கு
  16. இத்தனை பெண்களும் தமிழ்த் திரைப்பட நடிகைகளா? பொறுமையாகச் சேர்த்திருக்கீங்க போல! ஒவ்வொரு படத்துக்கும் கீழே அவங்க அவங்க பெயரைப் போடக் கூடாதோ? யாருனே புரியலை. ஒண்ணு கூடத் தெரிஞ்ச முகமாயும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவைகளை எடுக்க எனக்கு 2 நிமிடங்களுக்குள்தான் ஆனது.
      பாவனா, தமன்னா, மஞ்சுமோகனன், அனுஷ்கா, ஆண்ட்ரியா, அனுபமா பரமேச்வரன் (கொடி படம்). எல்லோருமே தமிழில் நடித்திருக்கிறார்கள்.

      அது சரி..உங்களுக்குத் தெரிஞ்ச முகமாகப் போகணும்னா பத்மினிக்கு முந்தைய ஜெனெரேஷன் நடிகைகளைத்தான் தேடணும். அவங்களைத்தான் பொதிகைல போடுவாங்க

      நீக்கு
  17. தொழிற்சாலை சலுகை விலையில் உணவு கொடுப்பதற்குப் பல காரணங்கள். தொழிலாளர் உடல் நலனும் ஒரு காரணம் என்றாலும் லாபத்தில் ஒரு பகுதியை இப்படித் தொழிலாளர்களுக்காகச் செலவு செய்யலாம். இந்தக் கணக்கைக் காட்டுவதன் மூலம் வருமான வரியைக் குறைச்சுக் கட்ட முடியும். இதைத் தவிரவும் தொழிலாளர்களுக்குப் பல சலுகைகள் தருவதன் மூலம் அவங்க சம்பளத்தைக் கூட்டாமல் தேவைகளை மட்டும் நிறைவேற்றித் தரலாம். சுற்றுலா போனால் கம்பெனியின் விருந்தினர் விடுதியில் தங்கச் சொல்லலாம். இதில் தொழிலாளர்களுக்கு மட்டும் வாடகையில் சலுகை காட்டலாம். மற்ற உயர்ந்த வேலையில் இருப்பவங்களுக்குக் குறைந்த விலையில் வாடகை வசூலிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  18. இந்த விஷயத்தில் நான் அறிந்தவரை டாட்டா குழுமமும் டிவிஎஸ் குழுமமும் தொழிலாளர்கள் மட்டுமின்றி அவங்களிடம் வேலை செய்பவர்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு பல சலுகைகளைத் தருகிறது. பெண்கள் வேலை செய்ய டாடா கன்சல்டன்ட் சர்வீஸ் மிகவும் நல்ல அலுவலகம். பெண்களின் வசதிக்கேற்ப வேலை நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். குழந்தை பிறந்தாலும் சலுகைகள், விடுமுறைகள் என அவங்க வசதிக்குக் கிடைக்கிறது. பொதுவாக டாடா குழுமத்தில் வேலை செய்வோர் தாஜ் ஓட்டல், தனிஷ்க் போன்ற இடங்களில் அவங்க டாடாவின் குழுமத்தைச் சேர்ந்தோர் என்னும் முறையில் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும்/கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் சலுகைகள் இருக்கு எனச் சொல்கின்றனர். சம்பளம் குறைவாக இருந்தாலும் இம்மாதிரிச் சில வசதிகளால் பெரிய பெரிய கம்பெனிகள் தொழிலாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதோடு அவர்களின் நலனையும் பாதுகாக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளும் , பதில்களும், பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது.
    அனைத்தையும் படித்தேன்.

    அழகியர் படங்கள் எல்லாம் அழகு.
    நாயும் , பூனையும் பார்க்கவே அழகு. இயற்கையை ரசித்து கொண்டு கார் பயணம் அருமை.
    தோழியர் காத்து இருப்பார்கள், சீக்கீரம் விளையாட போக வேண்டும் (என்று மாடியிலிருந்து குதியல்.)

    நெருப்பில் குதிரை, காளிங்க நர்த்தன் கண்ணன், பக்கவாட்டில் ஒரு பாம்பு தெரிகிறது, அதன் பக்கத்தில் கிரீபிள்ளை முகம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  20. //இந்த மாதிரி அழகிய படங்கள் நீங்கள் தேடும்போது ஏன் கிடைக்கமாட்டேன் என்கிறது?//

    அழகிகள் "அழகர்களுக்கே" அகப்படுவார்கள். 

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!