வியாழன், 3 நவம்பர், 2022

பிச்சைகாரனா? மன்னனா? + ராஜராஜ சோழன் சதய விழா

 எனக்கு உடல் நலமில்லை.  நான் மாஸ்க் போடுவதை நிறுத்தி ஒரு மாதமாகிறது.  அதனால் உடல் நலம் இல்லாமல் போனதா என்றால் இருக்க முடியாது.   சமீப காலமாகத்தான் அப்படி என்றும் சொல்ல முடியாது.  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக.

என்ன உடம்பு என்றால் தொடர் இருமலும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும்!  அதென்ன இருமலால் பக்க விளைவுகள்?  முதுகின் இரு பக்கங்களிலும், விலாவிலும் வயிற்றிலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருமவும் முடியாமல், மூச்சை அடக்கி, நிறுத்தி,  பிடித்துக் கொண்டிருப்பதை சரி செய்யவும் முடியாமல் வலி உயிர் போகும்.  அந்த சமயத்தில் வரும் ரயில்வண்டி போன்ற மூச்சுக்கூட விடமுடியாத தொடர் இருமலால் மரணபயம் வரும்!

அதிலும் அடிவயிற்றில் ஒரு சுழல் போல பிடித்துக் கொண்டு படும் அவஸ்தை தாங்க முடியாதது.  அடுத்து மறுபடி எப்போது வருமோ என்று மிரள வைப்பது.  இது எப்போதிலிருந்து இப்படி அதிகம் வருகிறது என்று யோசித்தால், அப்பாவிடமிருந்து பரம்பரையாய் வருவது என்றும் சொல்லலாம்.  அல்லது 2020 செப்டம்பர் மாதம் கொரோனாவிலிருந்து விடுபட்ட (?)  நாள் முதல் என்றும் இலக்கு நிர்ணயிக்கலாம்!

கொரோனா...

நினைத்துப் பாருங்கள், இரண்டு வருடங்களுக்கு முன்,  மார்ச் ஏப்ரல் மாதங்களில் தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவும் எவ்வளவு பீதியில் ஆழ்ந்தது?  எந்த அளவு சீனாக்காரனை நம்ப முடியுமோ...   ஜனவரி, பிப்ரவரியில் அவன் வெளியிட்ட விடீயோக்களைக் கண்டு மனம் பதறியது.  சாலைகளில் நடப்பவர்கள் திடீர் திடீரென மயங்கி விழுவதும்,  மூச்சுத்திணறுவதும்,  மருத்துவமனைகளில் இடமில்லை என சாலையோரங்களில் செத்து விழுவதும், காரில் வந்து இறங்கும் ஒருவரை தீவிரவாதியை மடக்குவது போல மடக்கி அடித்து தனிமை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதும் என பீதியூட்டும் காணொளி துணுக்குகள் நித்தம் வந்து கொண்டிருந்தன.

அப்போது கூட அது வூஹானின் நிலைமை மட்டும்தான் என்று எண்ணியிருந்த நேரத்தில் உலகம் முழுக்க பரவத்தொடங்குகிறது என்றதும் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்த பீதியும் பயமும்...  இந்தியாவிலும் கொத்து கொத்தாக செத்து விழுவார்கள்..  சென்னை தெருக்களில் ஆங்காங்கே உடல்கள் விழுந்து கிடக்கும் என்கிற மனக்காட்சிகள் அளவிலா பயத்தை ஊட்டின.

பின்னர் இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்தும் இதே போன்ற பயமுறுத்தும் காணொளிகள் வந்து கொண்டிருந்தன.  இந்தியாவில் ஜனவரியில் விமான நிலையத்தில் முதல் கேஸ் ரிப்போர்ட் ஆனது.  அப்புறம் மார்ச் தாண்டிதான் நடவடிக்கைகள் தொடங்கின.  அதுவரை பப்ளிக் காதரிங்ஸ் சகஜமாக இருந்தன. 

முதல் பயமுறுத்தும் சம்பவமாக மின்சார ரயில் நிலையத்தில் தொடர் தும்மல் போட்டவரை பொதுமக்களே அடித்துத் துவைத்தனர் என்ற செய்தி வந்தது.  பயம் ஏறியது.  மக்கள் எந்த அளவு பயந்திருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.

மார்ச் ஏப்ரல் மாதங்களில் தொடங்கி மக்கள் தத்தம் வீடுகளுக்குள் முடங்கினர்.  முடக்கப்பட்டன.  இதுவரை உலகம் பார்க்காத நிகழ்வது.  உலகெங்கிலும் இதே கதி.

அன்று இருந்த நிலைமையை இன்று எண்ணிப் பார்க்கும்போது கனவு போல இருக்கிறது.  முகக்கவசம், கையுறைகள், சானிடைசர்கள், வீட்டையும், தெருக்களையும் சுத்தப்படுத்தும் ப்ளீச்சிங் பௌடர்கள், விதம் விதமான மாத்திரைகளும் நம்பிக்கைகளும்..   காய்கறியை அலம்பி, கதவை அலம்பி, கைகளை அலம்பி...  தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வீடுகள், தெருக்கள்...

அந்த வருடத்தில் கொரோனா வந்தவர்களுக்கு வந்த மரணபயம்..  பின்னர் அடுத்த வருடம் அது தெளியத் துவங்கியது.  கிட்னி மற்றும் இதய பாதிப்புகள் இருப்பவர்களை மட்டும் அது அதிகம் பதம் பார்க்கிறது என்று சொன்னார்கள்.  எங்கள் வீட்டில் உட்பட நிறைய இடங்களில் கொரோனா காரணமாக சில இழப்புகள் ஏற்பட்டன.  நாம் மீண்டு வந்தாலும் உயிரானவர்களை இழந்தோம்.

தடுப்பூசி சொந்தமாகவே தயாரித்தோம்.  விலைபேச நினைத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஏமாற்றத்துக்குள்ளாக்கி சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் இலவசமாகவும் தந்தோம்.  மனிதம் விதைத்தோம்.  நாமும் போட்டுக் கொண்டோம்.  நல்ல பலன் கிடைத்தது. 

அப்புறமும் கொரோனா அடுத்தடுத்த அலைகளை சந்தித்தது.  நாம் சர்ஃப் விளையாட்டில் ஆடுபவர்கள் போல ஏறி இறங்கி மேலே வந்தோம். வந்து கொண்டிருக்கிறோம்.  முதல் அலையில் வந்த கொரோனாவால் ஏற்பட்ட பக்க விளைவுகள்தான் பலமானவை, அதிகம் என்று நினைக்கிறேன்.    சிலருக்கு இருமல், சிலருக்கு பல்வேறுவிதமான உடம்பு வலி, சிலருக்கு பசியின்மை போன்ற குறைபாடுகள்..

இன்றுவரை கொரோனா ஏன் வந்தது என்பதற்கு தெளிவான விடை இல்லை.  வந்தார்கள்; கொன்றார்கள், சென்றார்கள்!

இப்போதும் கூட இன்னொரு அலை வரப்போகிறது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லியுள்ளது.  ஆனாலும் மக்கள் இப்போது கொரோனா விஷயத்தில் 2020 ஜூலை ஆகஸ்ட்டில் இருந்த நிலைமையிலிருந்து வெகுதூரம் முன்னேறி வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறோம்.   கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதாக  தெரிவித்திருக்கும் நேற்றையசெய்தி ஆறுதல் அளிக்கிறது. 

வெல்வோம்!

================================================================================================================


புதுடில்லி-கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நாளுக்கு நாள் குறைந்து வருவதை...அடுத்து, தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்....

நாடு முழுதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, கடந்த 27 நாட்களாக, நாள் ஒன்றுக்கு 3,000க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. உயிரிழப்புகளும் 10க்கும் குறைவாகவே உள்ளது. கொரோனா பரவலின் தற்போதைய நிலை குறித்து புதுடில்லி மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:...:

வழக்கமான, 'ப்ளூ' காய்ச்சலின் அறிகுறியும் கொரோனா அறிகுறியை போல தான் உள்ளது. ப்ளூ காய்ச்சலுக்காக மருத்துவமனை வருபவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா எண்ணிக்கை குறைவாகவே உள்ளது....

கொரேனாவால் பாதிக்கப்படுவோருக்கு மிக லேசான அறிகுறிகளே உள்ளன.

முன் இருந்ததை போல, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாவது இல்லை. அதே நேரம முதியோர் மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.  கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட துவங்கிவிட்டோம். தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டது.  ஆனால், வைரஸ் உருமாற்றம் அடைவது தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அச்சப்பட தேவையில்லை. அதன் தீவிர ததன்மை குறித்த ஆராய்ச்சிகள் மட்டும் தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்....

=============================================================================================================


அஷ்ட வக்ர கீதை பிறந்த கதை பற்றி இரண்டு கதைகள் உள்ளன.  முதலாவது :

ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.  அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு துன்பப்பட்டார்.  அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.  கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.  பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.  "நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?  அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

"நான் பிச்சைக்காரனா, மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்

.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.

அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை.

." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.

அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.

குள்ளமாக,கறுப்பாக, எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.

"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.

"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.

"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.  இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது.

"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.

"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.  "கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.  ஏன் சிரித்தார்கள்?  என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?  நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா?இல்லை.  இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.  என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?  தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.  இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.  பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?

"தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.  உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.  ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.  தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.  பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.  முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.  எந்த நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க இந்த வாழ்க்கை நிலையில்லாதது" என்றார்...

இரண்டாவது வெர்ஷன் கொஞ்சம் பழசு...   அது.... விக்கியிலிருந்து...

ஜனகன் தனது அரசவையின் தலைமை வித்வான் வேதாந்த நூல் ஒன்றில் சொல்லப்பட்ட தகவல் குறித்து உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த நூலில் பிரம ஞானம் பெறுவது குதிரை ஏறும் ஒரு மனிதன் குதிரையின் சேணத்தில், ஒரு காலை வைத்து மற்றொரு காலை எடுத்து வைக்கும் நேரத்திற்குள் பிரம்ம ஞானம் பெறலாம் என்றிருந்தது. ஜனகன் உரையாடலை நிறுத்தி "இந்த வாக்கியத்தின் உண்மையை இறுதி செய்யும் பொருட்டு ஒரு குதிரையைக் கொண்டுவரச் சொல்லவா?" எனக் கேட்டான். "ஞான அனுபவத்தை நிரூபிப்பது என்னால் இயலாது" என்று பின்வாங்கினார். இந்த வாக்கியத்தில் உள்ளதை நிரூபிப்பது என்னால் இயலவில்லை என்பதால், பொய்யென்று சொல்ல முடியாது" என்று கூறிய வித்வான்களை சிறையில் அடைத்தார் அரசன்.

அரசனி சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, உடல் எட்டு கோணலாக இருந்த அஷ்டவக்கிரன் எனும் இளைய முனிவரை, மக்கள் ஜனகனின் அரச சபைக்கு கூட்டிச்சென்றனர். அஷ்டாவக்ரரை நோக்கி "முனிவரே குதிரை கொண்டு வரச் சொல்லவா?" எனக் கேட்டார். அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே அவசரப்பட வேண்டாம் தாங்கள் கேட்ட சந்தேகத்தை போக்க தனி இடத்திற்கு செல்ல வேண்டும்" அதற்கு ஏற்பாடு செய்க என்றார்.

அரசன் கட்டளைப்படி அஷ்டாவகரர் பல்லக்கிலும் அரசன் படை பரிவாரங்களுடனும் அஷ்டாவக்ரரை தொடர்ந்து காட்டிற்கு சென்றனர். காடு நெறுங்கியதும் அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே உங்கள் படை பரிவாரங்கள் திரும்பிப் போகட்டும் நாம் இருவர் மட்டும் தனித்து இருப்பது" நல்லது என்று கூறினார். அரசனும் தனது படை பரிவாரங்களை திருப்பி அனுப்பியவுடன், குதிரை மீது இருந்த அரசன் முனிவரே நான் கீழே இறங்க உதவுங்கள் என வேண்டினான், அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே தங்கள் கூறும் நூலில் ஞானம் குருவினால் சீடனுக்கு அருளப்படுவது என உள்ளதே அந்த நிலையில் நாம் இருப்பது உண்மைதானா?" எனக் கேட்டார். அரசனும் அஷ்டாவகரரை வணங்கி "நான் தங்களுக்கு சீடனானேன் அருள் புரிக" என்றான், அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா உண்மையான சீடன் தன்னையும், தன்னுடையதையும் குருவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்" எனறார். அரசனும் "அவ்வாறே அர்பணம் செய்கிறேன்" என்றான். அஷ்டாவகரர் அரசனிடம் "அவ்வாறே" எனக்கூறி மறைந்து போனார். அரசனும் அந்த இடத்திலேயே சிலையைப் போல ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். பொழுது சாய்ந்து நீண்ட நேரமாகியும் மன்னன் திரும்பாததால் அமைச்சர் மற்றும் ஏனையோரும் மன்னனைத் தேடி காட்டிற்கு வந்தனர். மன்னன் சிலையென நிற்பதையும் அஷ்டாவகரர் அங்கு இல்லாத்தும் கண்டு அதிர்ச்சியுற்றனர். மன்னன் இவர்கள் அனைவரும் அங்கு இருப்பதையே உணராமல் மயக்க நிலையிலேயே இருந்தான். அமைச்சரும் மற்றவர்களும் அரசனை ஒரு பல்லக்கில் படுக்க வைத்து அரண்மனைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் காலை வரை அரசனிடம் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு அஷ்டாவகரரை கண்டுபிடித்து வர படைகளை அனுப்பி வைத்தனர். மாலை நேரத்தில் சில படைவீர்ர்கள் அஷ்டாவக்ரரை கொண்டுவந்தனர், முதன் மந்திரிக்கு மிகுந்த கோபம் இருந்தாலும் அரசனின் நலனைக் கருதி அரசனை பழைய நிலைக்கு கொண்டுவரக் கேட்டுக்கொண்டார். அரசனின் இந்த நிலைக்கு அஷ்டாவகரரே காரணமென குற்றம் சுமத்தினர், அதற்கு அஷ்டாவகரர் அரசனிடம் இதை கேட்டுவிடலாம் என்று கூறி "ஜனகா "என அழைத்தார், அரசனும் "சுவாமி" என வணங்கினான். அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா நான் உன்னை மிகவும் பரிதாபகரமான நிலைக்கு கொண்டு வந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்" என்றார். அரசன் கோபமுற்று "யார் அப்படிச் சொன்னது" என கேட்டான். மந்திரிகளும் மற்றவரும் பயந்து மன்னரை நல்ல நிலைக்குக் கொண்டுவர முனிவரை வேண்டினர். அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய், உலக நடைமுறைக்கு மாறாக இருப்பதேன் எல்லோரையும் போல் இருப்பது தானே?" என்றார். "முனிவரே நான் உமது சீடன் உமது ஆணைப்படியே நடப்பேன்" என்றான், "உனக்கு ஞானத்தை போதிக்கவே உன்னை இவ்வாறு சோதித்தேன், உடை களைந்து உணவு உண்டுவா பின்னர் நாம் பேசலாம்" என்று அஷ்டாவகரர் அரசனிடம் கூறினார். அதன் பிறகு அஷ்டாவகரர் அரசனிடம் உபதேசித்த பிரம்ம ஞானமும் ஜனகர், அஷ்டாவகரரிடம் கேட்ட கேள்விகளுமே அஷ்டாவக்ர கீதை ஆகும்.[2]


அஷ்ட வக்ர கீதையிலிருந்து ஒரு பாடல் அல்லது அறிவுரை :

எங்கு மெக்காலுந் தியானத்தை யொழி.  சித்தத்தொன்றுங் கொள்ளற்க.  நீ விடுபட்டவனாக, ஆத்மாவாகவேயிருக்கிறாய்.  நினைப்பாலாவதென்?

===========================================================================================================================

சென்ற வாரம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று.  யாரென்று கேட்டிருந்தேன்.  

===============================================================================================================================








ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்!
இருமல் குறித்து கூறும், நுரையீரல் சிறப்பு மருத்துவர் சதீஷ்குமார்:
"இயல்பாக நுரையீரல் செயல்பட்டு கொண்டிருக்கும்போது, ஒரு அசாதாரண செயல் நடந்தால், அதற்கு எதிர்வினையாக இருமல் ஏற்படுகிறது.
இந்த அசாதாரண நிகழ்வு துாசியால் ஏற்படலாம்.ஆஸ்துமா தொந்தரவு, இதயம், சம்பந்தமான நோய், நெஞ்செரிச்சல், அல்சர் பாதிப்பு இருந்தாலும் இருமல் வர வாய்ப்பு உள்ளது.
ஆஸ்துமா, காசநோய் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக இருமல் இருக்கும். வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், எரிச்சலுாட்டும் இருமல் என, நிறைய வகை உள்ளது.
வாயுத் தொல்லை, சுற்றுச்சூழல் மாசுபாடு, அலர்ஜியால் வறட்டு இருமல் ஏற்படும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வறட்டு இருமல் இருக்கும்.
வைரஸ், பாக்டீரியா தொற்றுகளால் அதிகமாக பாதிக்கப்படும்போது, சளியுடன் கூடிய இருமல் உண்டாகும். காலை உறக்கம் கலைந்து கண் விழிக்கும்போதும், இரவு துாங்கும்போதும், தொண்டை வறண்டு போகும்போதும், எரிச்சலுாட்டும் இருமல் ஏற்படும்.
இதுவும் ஏறக்குறைய வறட்டு இருமலாகத்தான் இருக்கும்.
இருமல் மருந்தில், இரண்டு வகை உள்ளது. ஒன்று, இருமலுடன் சளியை வெளியேற்றக்கூடிய மருந்து; மற்றொன்று, இருமல் ஏற்படுவதையே தடுத்து நிறுத்தக் கூடிய மருந்து.
வறட்டு இருமலுக்கு, இருமலையே தடுத்து நிறுத்தும், மருந்துகளை சாப்பிடலாம்.சளியுடன் ரத்தம் வந்தால், இருமலை கட்டுப்படுத்தும் மருந்துகளை சாப்பிடலாம்.
ரத்தம் இல்லாமல் சளி மட்டும் வெளியேறும்போது, இருமலை கட்டுப்படுத்தும் மருந்துகளை எடுக்க கூடாது. அது, சளி வெளியேறுவதை தடுத்துவிடும். இதனால், சளி அதிகரிக்கவே செய்யும்.
சளி இல்லாத வறட்டு இருமலுக்கு, நுரையீரலின் செயல்பாட்டை பரிசோதனை செய்து, நுரையீரல் சுவாசத்தை விரிய செய்யும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல், இருமல் மருந்தை திறந்துவிட்டால், அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும். காலாவதி தேதி இருந்தாலும் கூட, அதிக நாட்கள் பயன்படுத்தக் கூடாது. இதனால், பக்க விளைவு இல்லையெனினும், அந்த மருந்தால் எந்த பயனும் இல்லை.
நன்றாக துாக்கம் வர சிலர், இருமல் இல்லாதபோதே மருந்து குடிப்பர். தேவையற்ற நேரங்களில் இருமல் மருந்துகளை குடிக்கும்போது, அது சாதாரணமாக உடலில் இருந்து வெளியேறும் சளியைக் கூட வெளியேற விடாமல், உடலில் அளவுக்கு அதிகமாக சளி தங்கி, எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்.
இருமலின் போது, ஐஸ் வாட்டர், ஐஸ் கிரீமை தவிர்க்க வேண்டும். லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உண்ணக் கூடாது; அது இருமலை அதிகப்படுத்தும். நேரடியாக ப்ரிஜ்ஜில் இருந்து எடுத்து எதையும் உண்ணக் கூடாது. பழைய தயிரை உணவில் சேர்க்கக் கூடாது.
தினமலரிலிருந்து...
========================================================================================================

இந்த வாரம் பிரதாப பிரதாபம்...

Oh My Goddess, what a story!
கதைகள் என்னுடையதாகத்தான்  இருக்கவேண்டுமா?  13-10-22/20:20  - ஜெ.பிரதாபன்.

மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது.
பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.
''மனதில் பெரிய கேள்வியை வைத்துக் கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?'' திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
பக்கத்து இருக்கைக்காரி பச்சைப் புடவைக்காரியாக மாறியிருந்தாள்.  ''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''
''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''

''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''

''தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''

''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''
''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதை விட்டு விட்டு..''
''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''
இடம் மும்பை. ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.
''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''
''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''
''சொல்லும்மா.''
''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்கஇல்லையா?''

''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''
'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''
திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக் கொண்டார்.
மறுநாள் அதிகாலை. அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்று
விட்டது.
இனி மேல் அந்தச் சிறுமி பிழைக்க மாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்த பின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!
அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!
கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார்.  பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.
''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.'' அவர் கண்களில் நீர்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.

''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.'' அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன் பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்து விட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.
'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.
''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''
''ஆம் தாயே. உங்கள் அன்பில் நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள்.  என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள்.
யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.  இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''
விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப் புடவைக்காரி மறைந்து விட்டாள்.

வரலொட்டி ரெங்கசாமியின் இந்தச் சிறு கதை படித்த கணந்தொட்டு என் நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்கிறது.

==============================================================================================================

பழசுக்கு பழசும் ஆச்சு..  கவிதைக்கு கவிதையும் ஆச்சு!



============================================================================================================

பொக்கிஷம் பொக்கிஷம்  பொக்கிஷம் 

"முகம் சிவக்கத் தலை குனிந்தான்...!"  வருடம் 1944


படிக்க முடிந்தால் நீங்கள் பிஸ்தா!!


பாருங்க..  அப்போ எவ்வளவு காலியிடம் இருந்திருக்கும்....  ஆனாலும்....

மேலே ஒரு ஜோக்...   கீழே ஒரு ஜோக்...


"ஹே ராம்...."


யாரென்று சொல்லவும் வேண்டுமோ...

= = = = = = = = = = =

ராஜராஜ சோழன் சதய விழா :: நெல்லைத்தமிழன் 

தஞ்சைப் பகுதியே சோழ மண்டலம், சோழ இராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய இடம். ஒரு அரசன் எதனால் நினைவுகூரப்படுகிறான்? அவன் காலத்தில் அவன் கலைகளை ஆதரித்து, அதன் சுவடினை விட்டுவிட்டுச் செல்வதால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தாலும், அந்த அரசாட்சி விட்டுச்சென்ற கலைப்பொக்கிஷங்கள் அந்த ஆட்சியின் பெருமையைக் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும்.

அப்படி, சோழ இராஜ்யம் விட்டுச்சென்ற பல கலை பொக்கிஷங்களில் தலையானது ஸ்ரீராஜ ராஜேச்வரம் என்று ராஜராஜ சோழனால் முத்திரை குத்தப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில்.  சோழர்களின் பெருமையை அறிய வேண்டுமானால், தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பெற்ற கோவில், மற்றும் அவனது வழித்தோன்றலால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்.  இதைத் தவிர, நிறைய கோவில்கள், கொஞ்சம் சிறிய அளவில், தஞ்சைப் பகுதி எங்கும் விரவிக்கிடக்கின்றன. சக்கரவர்த்திகள் கோவிலை மாத்திரம் கட்டிச்செல்லவில்லை. அந்தக் கோவில்களில் கல்வெட்டுகள் மூலம், எப்போது கட்டப்பட்டது, கோவில் பெயர், யார் எழுப்பியது, யார் யார் உதவினர் என்றெல்லா வரலாற்று விளக்கங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.  

ராஜராஜ சோழனின் முன்னோர்களும் கோவில்கள் எழுப்பியுள்ளனர். பின்னோர்களும் கோவில்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் ராஜ ராஜ சோழன் ஏன், பெரும் மன்னனாக நினைவுகூரப்படுகிறான்? சோழர்களின் ராச்சியம் கடல் கடந்து பரவ அவனே முதற்காரணம். அதுவும் தவிர, தனக்கு தெய்வாதீனமாக வந்த சோழ சாம்ராஜ்ய மணிமுடியை, தான் அதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தபோதும், தன் சிற்றப்பன், ராஜ்ஜியத்தை ஆள ஆசைப்பட்டதால், பதினைந்து வருடங்கள் விட்டுத் தந்தவன். மக்களின் அபரிமிதமான அன்பைப் பெற்றிருந்தும், சிற்றப்பனை சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைவனாக அரசுக் கட்டிலில் அமர வைத்த தால், எல்லோர் மனதிலும் உயர்ந்தவன் அவன்.

அருள்மொழி வர்மன், 947ல் பிறந்தவன். தன் 23வது வயதிலேயே இலங்கையில் போரில் வெற்றி பெற்றவன், தஞ்சை மக்களின் ஆதரவைப் பெற்றவன். இருந்தாலும், தன் சிற்றப்பனான உத்தமச் சோழனை அரியணையில் அமரவைத்து பதினைந்து வருடங்கள் இளவரசனாக இருந்தவன். தன் 38ம் வயதில் அரியணை ஏறி, 27 வருடங்கள் ஆண்டவன்.  தான் அரியணை ஏறியபோதே தன் மகன் இராஜேந்திரனை இளவரசனாகப் பட்டம் சூட்டினான். தான் ஆட்சிக்கட்டிலில் ஏறி 25 வருடங்கள் ஆனபிறகு இராஜேந்திரனையே முன்னிலைப்படுத்தினான். 1014ல் அரசுக்கட்டிலில் ஏறிய ராஜேந்திர சோழன், 30 வருடங்கள் சோழ சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்டான்.

சோழ ராஜ்ஜியத்தின் மஹோன்னதத்தை, ஸ்ரீராஜ ராஜேச்வரத்தைக் கட்டியதன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் சோழசாம்ராஜ்யத்தைப் பேசும்படி வைத்தான். அவனுடைய பிறந்த நாளில், அவனுடைய நினைவைப் போற்றும் விதமாக சில படங்கள் இன்று. 







இவ்வளவு இடத்தை, வியாழனில் எடுத்துக்கொண்டதே அதிகம்.  ஸ்ரீராம் எழுத்து மிளிரும் தினம் வியாழன். அதை ரசிக்க வந்தவர்களுக்கு, ராஜராஜ சோழனின் சதய விழா இந்த வியாழன், என்று துரை செல்வராஜு சார் சொன்னதற்காக, தஞ்சைப் பெரியகோவிலின் சில படங்களை, ராஜராஜன் நினைவாக வெளியிடச் சொல்லாம் என்று நினைத்து அனுப்பினேன்

= = = = = = =

85 கருத்துகள்:

  1. நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்..

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  3. // ராஜராஜ சோழனின் சதய விழா இந்த வியாழன், என்று சொன்னதற்காக.//

    அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..

    அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே /ருமே
    மிருகங்கள் தான்..
    பொய்யென்றும்
    மெய்யென்றும்
    ஏதும் இல்லை..

    பதிலளிநீக்கு
  5. //இப்போதும் கூட இன்னொரு அலை வரப் போகிறது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லியுள்ளது//

    உசு நிறுவனம் கூட்டுக் களவாணி..

    சீனத்தை எதிர்ப்பதற்கு நெஞ்சுரம் இல்லாத ஒன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.   அதன் மருத்துவர்கள்தான் அப்புறம் கொரோனா முடிஞ்சு போச்சுடா முத்துசாமின்னும் சொல்லியிருக்காக...

      நீக்கு
  6. ஸ்ரீராம்! தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் தேறி வரும். கவலைப்பட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடிவாதத்தை விட்டு மருத்துவரைப் போய்ப் பார்த்திருக்கிறேன்தான்..   சரியாகி வருகிறது.  பார்ப்போம்.  நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  7. நெல்லை. இனி அந்தக் கோயிலைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால் ஈஸ்வரன் பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்து பிரகதீஸ்வரர் கோயில் என்று குறிப்பிடுங்கள்.
    புண்ணியமாகிப் போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜராஜேஸ்வரமுடையார், தட்சிண மேரு விடங்கர் என்பவை கல்வெட்டுகளில் காணப்படுபவை..

      ஆட வல்லான்.. தனித்துவமான பெயர்..

      நீக்கு
    2. இறைவன் பெயர்:

      ப்ருஹத்தீஸ்வரர்

      அம்பாள் பெயர்:

      ப்ருஹந்நாயகி

      கோயில் பெயர்:

      ப்ருஹத்தீஸ்வரம்

      நீக்கு
    3. ஜீவி சார்... நான் தவறாக்க் குறிப்பிட்டுவிட்டதாக எண்ணல் வேண்டா.

      ராஜராஜ சோழன் சதய தினத்தில் அப்போதிருந்த பெயரைக் குறிப்பிடுவதே சரி என்று தோன்றியது. பிருஹந்நாயகி கோவிலை எடுப்பித்தது 14ம் நூற்றாண்டு (அல்லது 13) பாண்டிய மன்னர். அது தனிக் கோவில். அப்போது அந்தப் பெயரை வைத்தாரா என்பதும் சந்தேகம். பாண்டியன் மீனாட்சி ஆளுகைக்கு உட்பட்ட இடத்திலிருந்து வந்தவன்.

      நீக்கு
  8. இனிமேல் எபி யும் வருடம் தவறாமல் மாமன்னர் ராஜராஜ சோழரின் சதய விழாவினை நினைவு கூர்தல் வேண்டும்..

    பதிலளிநீக்கு
  9. இன்றைய வியாழன் பதிவு நீளம் அதிகம். 

    எதற்கும் வயிறை ஒரு USS ஸ்கான் செய்து கொள்ளலாம். ஹெர்னியா ஆகவும் இருக்கலாம். 600 ரூபாய் தான். 

    //வந்தார்கள்; கொன்றார்கள், சென்றார்கள்!//  மதன்? 

    புகைப்படத்தில் உள்ளவர் MGR என்பதை நம்ப முடியவில்லை.

    இருமல் புராணம் பல செய்திகளை தருகிறது என்றாலும் இருமல் மருந்துகள் மதுவிலக்கு இருந்த காலத்தில் மதுவுக்கு பதிலாக குடிக்கப்பட்டன என்பது தெரியுமா 

    வரலொட்டி ரங்காச்சாரியின் சிறுகதை, கதை என்றாலும் ஒரு படிப்பினை தருகிறது. பகிர்ந்ததற்க்கு நன்றி. இக்கதையை செவ்வாய் அன்று பிரசுரித்திருக்கலாம். 

    பாட்டுக்கு பாட்டு.

    காடுகள் வீடுகளாகியபின் 
    மிருகங்கள் நாட்டில் தான்.
    மனிதனுக்கும் மிருகத்திற்கும் 
    வேற்றுமை தெரியவில்லை. 
    நிஜமும் போலி. 

    பொக்கிஷம் நன்று. 

    நெல்லையின் கட்டுரையும் படங்களும்  நன்றாக உள்ளன. 

    கும்மோணத்து மாநகராட்சி வழிகாட்டும் பலகை எழுதியது ஹிந்தி தொழிலாளர்கள் ஆக இருக்கும். அதுதான் அப்படி. 



    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பதிவாக்கலாம் என்றால் அதற்கு நீளம் கம்மி!!

      வயிறு ஸ்கான் யோசிக்க வேண்டும்.  நன்றி.

      நெற்றிக்குமேல் கையை வைத்த்து மறைத்துப் பாருங்கள்..  எம் ஜி ஆர் தெரிவார்.

      இருமல் மருந்து போதை தரும் என்பது தெரியும்.  அவை மட்டுமல்ல, ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளை டாக்டரிடம் பொய்ச்சொல்லி வாங்கி சாப்பிடுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்!

      செவ்வாய் அன்று நண்பர்கள் கதையே வரிசை கட்டி நிற்கிறது.  எனவே அங்கு இடமில்லை!

      பாட்டுக்குப் பாட்டு நன்று!

      நீக்கு
  10. இன்றைய ஆனா வானாக்களுக்கு மாமன்னர் பெயரைச் சொல்லக் கூட தகுதி கிடையாது..

    பதிலளிநீக்கு
  11. இப்படியும் வைத்துக் கொள்ளலாம்..

    திருக்கோயில்:
    ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்

    இறைவன்:
    ஸ்ரீ ராஜராஜேஸ்வரன்

    அம்பிகை:
    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜராஜேஸ்வரம் என்பது மன்னனை முன்னிருத்திய பெயர்.

      இத்தனை வெற்றிகளுக்குப் பின் அந்த வெற்றிகளுக்குப் பின்புல ஆசியாக இருந்து ஈட்டித்தந்த ஈஸ்வரனுக்கு அந்த வெற்றிகளை சமர்ப்பிக்கும் வகையாக இராஜராஜன் கண்டோர் வியக்கும் வண்ணமாக இக்கோயிலைக் கட்டி
      தன் பக்தியை சமர்ப்பிக்கிறான்.
      இதுவே வரலாறு.

      கோயில் என்று வரும் பொழுது இறைவனை
      முன்னிருத்துதலே நம் மரபு.

      நீக்கு
  12. இன்றைய பதிவை வெகு நீளமாக்கிவிட்டேன் எனத் தோன்றுகிறது.

    வியாழன் பதிவுகள் முன்பே தயாராகிவிடும் எனத் தெரியும். Sorry.

    பதிலளிநீக்கு
  13. கோவிட்.... அது நம் உள்ளத்தில் தீராத பயத்தை ஏற்படுத்தி, உறவினர்களையே தவிர்க்க நினைத்த, தவிர்த்த காலம். அதன் தாக்கம் இப்போதும் இருக்கிறது.

    எப்போது ஊர்களுக்குச் சென்று திரும்பினாலும், ஜாக்கிரதையாக இருப்பதும், மாமியாரை நான்கு நாட்கள் கழித்தே பார்க்கச் செல்வதும் வழக்கமாகிவிட்டது.

    யாரேனும் இருமல் தும்மல் போட்டால் இடத்தை விட்டு அகலுவதும் வழக்கமாகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவுகளை ஒதுக்கி வைத்தது கோவிட! தான் தன் சுகம்!

      நீக்கு
  14. கோவிட் காலத்தில் பயத்தில் பொருள்களை வாங்கி வைக்கும் வழக்கம் வந்தது. விலை பற்றி அவ்வளவாக்க் கவலைப்படாமல் காய்கறி வாங்குவது, ஏகப்பட்ட காய்கறி வியாபாரிகள் முளைத்தது (வேற என்ன சார் செய்யறது? வேலை இல்லை. கம்பெனிலாம் மூடிட்டான்.), வளாகத்தில் வரும் காய்கறிகாரனிடம் காய் வாங்க, ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் பெரும் வரிசை, ஒரு சமயத்தில் இருவர்தான் காய்கறி பொறுக்கலாம், ஒருவர் காய் வாங்க ஒன்றரை மணிக்கு மேலாவது சகஜம் என்றிருந்தது. அதனால் அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி துவங்கும்போதே, பையும் அதன் மீது கல்லும் வைத்து இடம் பிடிப்பது என்றெல்லாம் வாழ்க்கை ஓடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நானும் அரிசியும் பருப்பும் ஸ்டாக் வைத்தேன்! காய்கறி மலிந்து கிடைத்தது!

      நீக்கு
  15. பையை எதுக்கு கிச்சன் மேடையில் வைக்கறீங்எ? காயை அலம்பாமல், சிங்கில் போடாமல் பாத்திரத்தில் இடித்துக்கொண்டிருக்கும்படியாக வைக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு சகஜம்.

    பெண் அமேசான் போன்ற டெலிவரிகளை வீட்டின் உள்ளே கதவருகில் வைத்துவிட்டு மூன்று நாலு நாட்களுக்குப்பின் எடுத்துப் பிரிப்பது, அல்லது கையுறையோடு பிரித்துப் பார்த்துவிட்டு அப்படியே வைப்பது என்ற பழக்கமெல்லாம் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோலோ 650 மாத்திரைக்கு வந்த வாழ்வைத் சொல்ல வேண்டும்!  வேறு சில மாத்திரைகளும் பட்டியலில் அவ்வப்போது மட்டும் இடம்பெற்றுச் சென்றன!

      நீக்கு
  16. இன்னும் என்னன்னவோ மனக் கஷ்டங்கள், பயங்கள் (இறந்த மாமனாரைத் தூரத்திலிருந்தே... ஒரு மீட்டர் தொலைவிலிருந்து, பார்த்தது, விடப்பட்ட நடைமுறைகள் என ஏராளம்)... எனக்கு ஒருமுறை வந்தது கோவிட் என நன்றாகத் தெரிந்தது, எங்கும் செல்லாமல் அடைந்துகிடந்தது, மச்சின்ன் சொன்னானே என ஒரு மருத்துவரிடம் மருந்து வாங்கச் சென்னபோது, அவர் மாநகராட்சிக்குத் தகவல் கொடுத்தது, மாநகராட்சி போன் அழைப்புகளை உதாசீனம் செய்தது, பொய் சொல்லியது.... என்று ஏகப்பட்ட நிகழ்வுகள்.

    பையன் அவ்வப்போது டெஸ்ட் எடுக்கிறேன் என்று பணம் செலவானது (கல்லூரியிலும் டெஸ்ட் ரிசல்ட் இருந்தால்தான் லேப் எக்சாமுக்கு வரணும் என்றெல்லாம் சொன்னது).. எழுத எழுத நீளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் மறைந்த என் மாமாவை தூரத்திலிருந்தே பார்த்ததும், அவர் எரியூட்டல் யாராலோ நிகழ்ந்ததும் ஆறாத வடு.

      நீக்கு
  17. உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்...

    சிறுகதை சிறப்பு...

    பதிலளிநீக்கு
  18. எல்லாவற்றையும் கண்ட சந்ததி நாம் கொரோனாவையும் கண்டு விட்டோம்.

    கும்பகோணம் மாநகராட்சிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  உலக சரித்திரத்தில் கொரோனா காலங்கள் கறுப்புப் பக்கங்கள்.  நன்றி ஜி.

      நீக்கு
  19. கொரோனாவால் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம். முன்பிருந்த வேகம் என் செயல்பாடுகளில் குறைந்திருப்பதை உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதுபோல சில மாற்றங்களை உணர்கிறேன்தான்.

      நீக்கு
  20. 'மேக்கப்'புடன் இருக்கும் எம்ஜியாரைப் பார்த்திருந்த பலருக்கும் 'ஜேக்கப்'புடன் இருக்கும் எம்ஜியாரை அடையாளம் தெரியவில்லைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. எம்ஜியாரின் முகம் நன்றாகவே தெரிந்தது. ஆனால் அதனைக் குறிப்பிடவில்லை. அது சரி... எம்ஜிஆரை நேரில் பார்த்திருக்கிறீர்களா? சும்மா தக தகவென மின்னுவார்

      நீக்கு
    2. ஜேக்கப் மேக்கப் --- ஹா.. ஹா... ஹா...

      நீக்கு
    3. நெல்லை.. சென்ற வாரம் நீங்கள் உட்பட யாருமே தமன்னாவை கண்டுகொள்ளவில்லை!

      நீக்கு
  21. உடல் நலனில் அதிக கவனம் செலுத்துங்கள்

    பதிலளிநீக்கு
  22. அஷ்டாவக்கிரர் இரண்டாவது கதை டுபாக்கூர்

    பதிலளிநீக்கு
  23. கொரோனாவின்போது நிறைய மாஸ்குகள் வாங்குவோம் (அது ஒரு செலவுதான்). பிறகு ஸ்டாண்டர்டாக 20 ரூ மாஸ்க் நிறைய வாங்கிவைத்தேன். சமீபத்தில் எதுக்கும் இருக்கட்டும் என்று அதே மாஸ்க் 10 ரூ விலையில் 30 ஸ்டாக்கில் வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு 30 வாங்கிவைத்துக்கொள்வோம் என்று ஹோல் சேல் மார்க்கெட் முழுவதும் தேடினாலும் சர்ஜரி மாஸ்க் தவிர (அதுவும் ஒரு 200 வைத்திருக்கிறேன்) கோவிட் என் 95 மாஸ்க் கிடைக்கவில்லை. அதெல்லாம் போயாச்சு சார்..யார் வாங்குவாங்க என்பதால், மார்க்கெட்டுக்கு வருவதில்லை என்றார்கள் கடைக்காரர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடமும் ஏராளமாக மாஸ்க்குகள் கைவசம் இருக்கின்றன. நான்தான் போடுவதை நிறுத்தி விட்டேன்!

      நீக்கு
  24. விரிவான வியாழன் செய்திகள்.

    பிரசித்தமான தஞ்சை பெரிய கோவில் படங்கள் கட்டுரை அருமை . நானும் நேரடியாக பல மணிநேரம் தரிசித்து இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்..

    பதிலளிநீக்கு
  25. தொடர் இருமல் பற்றி அறிய வருத்தமாக உள்ளது. சில சமயங்களில் வேறு ஏதேனும் அலர்ஜி இருந்தாலும் கூட அதற்கு சம்பந்தமே இல்லாமல் வேறு பிரச்சினைகள் வரும். சமீபத்தில்கூட மறைந்த இந்திரா காந்தியின் தாங்க முடியாத தலைவலி அவர் அணிந்து கொண்டிருந்த ஹீல்ஸ் ஷூவை நீக்கியதும் சரியாகப்போயிற்று என்று படித்தேன்..
    ' ஆடாதோடை மணப்பாகு' என்ற சிரப் காதி கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இருமலுக்கு ம்க நல்ல மருந்து அது. உபயோகப்படுத்த்தி பாருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் சிரப் உபயோகித்துப் பார்த்து விட்டேன். பலனில்லை. நன்றி மனோ அக்கா.

      நீக்கு
  26. ஏன் என் பெயர் 'மனோ சாமிநாதன்' என்று வராமல் ' பெயரில்லா' என்று வந்தது என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  27. பெருவுடையார் கோவில் பற்றியும் ராஜராஜ சோழன் பற்றியுமான தகவல்கள் அருமை! ராஜராஜ சோழன் தன் பெரிய தந்தை கண்டராதித்த சோழரின் மகன் உத்தம சோழனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய மணிமுடியைத்தான் தர்மப்படியும் அவர் சிரத்தில் சூட்டினார் என்பது வரலாறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உத்தமச் சோழனுக்கு மணிமுடி சூட்டும்போது, அருள்மொழி இளவரசனாகப் பட்டம் சூட்டப்பட்டான், சோழ சிம்மாசனத்தின் அடுத்த அரசனாக அறிவிக்கப்பட்டான். இதில் முக்கியமான விஷயம், ஆதித்தனைக் கொன்றவர்களை, அவன் அரசனாகப் பதவியேற்ற பிறகுதான் தண்டித்தான். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஔரங்கசீப் மாதிரி இன்னும் ஒரு 20 வருடங்கள் உத்தமச்சோழனே அரசனாக இருந்திருந்தால் (ஆயுள் நெடியதாக இருந்திருந்தால்), ராஜராஜ சோழன் பட்டத்துக்கு வரும்போதே 60 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். Effective அரசனாக இருந்திருக்க முடியாது. வரலாற்றுப் புகழும் கிட்டியிருந்திருக்காது.

      நீக்கு
    2. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!!!!

      நீக்கு
  28. வரலொட்டி ரெங்கசாமியின் சிறுகதை மிக அருமை! ' நல்ல மனங்களில் என்றுமே இறைவன் உறைந்திருக்கிறார்' என்பதை அழகிய சிறுகதையாக உருவாக்கம் செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  29. அந்தப்ப்படம் எம்ஜார் என்பது தெரிஞ்சிருந்தும் பதில் சொல்லாமல் விட்டிருக்கேன். கவனக்குறைவு! :( கொரோனா பற்றிய உங்கள் கட்டுரை அருமை. எங்க குடும்பத்திலும் சிலபல இழப்புகள், வருத்தங்கள். தப்பிப் பிழைத்தவர்களும் உண்டு. நீங்கள் உங்கள் உடல் நலத்தைப் பூரணமாகக் கவனிச்சுக்கணும் ஸ்ரீராம். போதாது கவனித்துக் கொண்டது. எனக்கும் இடைவிடா இருமல் என்னமோ இருக்கு. வறட்டு இருமல் தான். தொண்டையைக் குத்திக்கொண்டு கிளம்பும். எப்போ வரும்னு சொல்ல முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே நிலைதான் எனக்கும்.  இப்போது இரண்டு மூன்று நாட்களாக ஒரு வார்த்தை பேச முடியாமல் கணைத்துக் கொண்டு இருமல்..  அதற்கு முன் மூன்று நான்கு நாட்கள் இருமல் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது!

      நீக்கு
  30. தஞ்சைக்கோயில் பற்றிய நெல்லையின் தொகுப்பு அருமை. தஞ்சையில் முதலில் பெருவுடையார் மட்டுமே இருந்திருக்கார். அம்பிகை பின்னாட்களில் வந்திருக்கலாம். சரித்திர பூர்வமாக அவர் பெருவுடையார் என்றே குறிப்பிடப் பட்டிருக்கார். ப்ரகதீஸ்வரர் எல்லாம் பிற்காலச் சேர்க்கை. அநேகமாக நாயக்கர் காலத்தில் வந்திருக்கலாம். கருவறை மகுடாகம முறைப்படி கட்டியதாகச் சிலர் சொன்னாலும் இன்னும் சிலர் ஆவுடையாரப் பிரிக்கலாம் எனவும் அவரைப் பிரித்தே உள்ளே எடுத்துச் சென்றார்கள் எனவும் சொல்கின்றனர் யாருக்காவது பொறுமை இருந்து கல்வெட்டுச் செய்திகளைப் படிச்சுச் சொன்னால் உண்மை தெரிய வரலாம். மகுடாகம முறை எனில் முதலில் லிங்கம் அமைக்கப்பட்டுப் பின்னர் கருவறையை எழுப்புவாங்க எனப் படிச்சிருக்கேன். லிங்க பாணத்தின் உச்சிக்கு நேர்மேலே கோபுரத்தில் திறந்த வெளி அமைப்பு என்கின்றனர். இதனாலும் மகுடாகம முறை என்று சொல்லுபவர்கள் உண்டு. யோக முறைப்படி , இம்மாதிரி லிங்க பாணத்துக்கு நேர் மேலே திறந்த வெளியாக இருப்பதன் தத்துவம் தனியானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பழைய நண்பர் (இப்போவும் நண்பர் தான் என்றாலும் முன்னைப் போல் இல்லை!) திரு திவாகர் எழுதி இருக்கும் எம்டனில் இது குறித்த பல விபரங்கள் உள்ளன. படிக்க எடுத்திருக்கேன். படிச்சுட்டுச் சொல்றேன் இதிலே தான் ராஜராஜ சோழனுக்கு "சிவபாத சேகரன்" என்னும் பெயர் கிட்டியதும் அவன் யோக முறையில் தன் உயிரை நீக்கிக் கொண்டது குறித்தும் வரும்.

      நீக்கு
    2. ​நிறைய விவரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. இது மாதிரி விஷயங்களில் நீங்கள் ஒரு தகவல் சுரங்கம்.

      நீக்கு
  31. உலக புருஷர் உண்ணாவிரதம் ஒரு நாடகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே! அதான் அந்த மஹாத்மா என்னும் உலக புருஷர் உண்ணாவிரதம். அது தான் அப்போது அவர் நடத்திய நாடகம் என்றேன்.

      நீக்கு
  32. உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் ஸ்ரீராம்.
    2020 நவம்பர் மாதம் எத்தனை இழப்புகள் ! மனம் அஞ்சுகிறது.

    நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது ஒரு வரம்.
    உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.

    காய்ச்சல் வந்த பின் இருமல் தொடரும். அது இன்னும் நீடிப்பது நல்லது அல்ல. நல்ல மருத்துவரை பாருங்கள்.

    மனோ அவர்கள் சொல்லும் ஆடா தோடை மணப்பாகு நல்ல மருந்து பக்க விளைவு இல்லாத மருந்து.
    துளசி, மிளகு போட்டு கொதிக்க வைத்து கசாயம் குடிக்கலாம்.
    பனகற்கண்டு, மஞ்சள்த்தூள் போட்டு பால் குடிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடாதோடை மணப்பாகு குடித்துப் பார்த்து விட்டேன். கேட்கவில்லை. தொடர் இருமல் என்றால் என்னென்ன பயமுண்டோ அதெல்லாம் சோதித்துப் பார்த்து விட்டேன். பயமில்லை. நன்றி கோமதி அக்கா.

      நீக்கு

  33. கோவிட் முடிவுக்கு வந்துவிட்டது மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை.//

    நல்லது.

    அஷ்ட வக்ர கீதை பிறந்த கதை இரண்டு கதைகளும் நன்றாக இருக்கிறது.

    வரலொட்டி ரங்காச்சாரியின் சிறுகதை மிக அருமை.

    கவிதை நன்றாக இருக்கிறது.
    நகைச்சுவை, மற்றும் அனைத்து பகிர்வும் அருமை. எம் ஜி.ஆர் நன்றாக தெரிகிறார்.

    பதிலளிநீக்கு
  34. நெல்லைத்தமிழன் அவர்களின் தஞ்சை கோயில் படங்கள், மற்றும்
    ராஜராஜ சோழன் – சதய விழா கட்டுரை அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    இன்று என் மகனுக்கு பிறந்த நாள். ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்தான். என் பிறந்த நாள் யாருக்கும் மறக்காது என்பான்.

    என் மகனும் சாக்பீஸ் கொண்டு கோயில் கட்டினான்.முன்பு பதிவு போட்டு இருக்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் கோமதி அரசு மேடம்.

      நீக்கு
    2. வாழ்த்துகளுக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    3. எங்கள் வாழ்த்துகளையும் சொல்லுங்கள் கோமதி அக்கா.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      தங்கள் மகனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறி விடுங்கள். தங்கள் மகன் சகல சௌபாக்கியங்களோடு நீடூழி வாழ இறைவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  35. சொல்கிறேன் ஸ்ரீராம்.உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    தங்கள் உடல்நிலை பற்றிய செய்தி கவலையை தருகிறது. அலோபதி இருமல் மருந்து எப்போதுமே அதிகமாக்கி விட்டுத்தான் குணமாக முயற்சி செய்யும். (அதுவும் சிலருக்கு) இருமல் வந்தால், அதுவும் குணமாக தாமதமானால் எப்படி இருக்குமென எங்கள் வீட்டில் நாங்களும் எத்தனையோ தடவைகள் உணர்ந்திருக்கிறோம். எனக்கும் பல தடவைகள் இந்த தொடர் இருமல் வந்துள்ளன. என் மகளுக்கும் ஒரு தடவை இப்படி தொடர் இருமல் வந்து மாதக்கணக்கில் அவஸ்தைப்பட்டாள். அலோபதி மருந்துகள் தோற்ற நிலைகளில் ஆயுர் வேத மருந்துகள்தான் அப்போது பலனளித்துள்ளது.

    இருமலுக்கு இரவு நேரந்தான் சுகமாக இருக்கும் போல.. எல்லோரும் உறங்கும் நேரம் நம்மை பாடாய் பாடு படுத்தி எடுக்கும். இதற்கு ஆடா தொடை கஷாயம் சிறந்த மருந்து. அதைத் தொடர்ந்து எடுத்து வந்தால் கொஞ்ச நாட்களில் நல்ல குணம் தெரியும். முன்பு எங்கள் அம்மா வீட்டில் இருந்த போது அந்தச் செடியே வீட்டு வாசலில் பெரிதளவில் இருந்தது. இப்போது அந்த செடியின் இலைகள் தங்களுக்கு எங்கேனும் கிடைக்குமா? கிடைத்தால் மிளகுடன் அதை சேர்த்து கஷாயம் போட்டு குடிக்கலாம். இல்லையெனில் ஆயுர்வேத மருந்தாக "கனகாஷவ" என்ற அரிஷ்டம் "இம்ப்காப்ஸ்" தயாரிப்பாக , கிடைக்கும். அதை வாங்கி தொடர்ந்து அருந்தி வாருங்கள். அது ஆடா தொடை கஷாயந்தான். அதுதான் எனக்கும், எங்கள் வீட்டில் மகளுக்கும், மற்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்கு எப்போதுமே "இம்ப்காப்ஸ்" மருந்துகள்தான் கை கொடுத்துள்ளது.

    முதல் பகுதி கொரோனா பற்றிய செய்திகள் படிக்கவே பயமூட்டுகின்றன. இரண்டு வருடங்கள் வீட்டுக் கதவைகூடத் தாண்டாத நினைவுகள் வருகின்றன. நல்லவேளையாக அதற்கு முற்றுப்புள்ளியாக எத்தனை செய்திகள் வந்தாலும், நாங்கள் இன்னமும் மாஸ்க் போட்டுக் கொண்டுதான் வெளியில் செல்கிறோம். இப்போது எங்களை ரோடில் நடமாடும் அனைவரும் விசித்திரமாக பார்க்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் நான் இன்னமும் ஒரு ஊசிகூட போட்டுக் கொள்ளவில்லை. சளி தொந்தரவுகள் வரும் போது தன்னையறியாமல் பயம் தொற்றிக் கொள்கிறது. கடவுள்தான் அவனுக்கு விருப்பமிருந்தால் காக்க வேண்டும். வேறு என்ன சொல்வது.? தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். இன்று தாமதம் மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருமல்..   அது ஒரு தொடர்கதை.  கவலை வேண்டாம்! அது பாட்டுக்கு நம் கூட வரும்!  இன்னொன்று தெரியுமா?  என் இன்னொரு கோளாறான உடலில் ஆங்காங்கே பிடித்துக் கொள்ளும் வியாதிக்கு (!) நான் தினசரி இளநீர், ஓ ஆர் எஸ் குடிக்க வேண்டுமாம்...  இந்த இருமலுக்கு அவற்றை எடுத்துக் கொள்வதும் சிரமம், டுத்துக் கொள்ளாமலும் இருக்க முடியாது.  வெயில் வரும் நாளில் இளநீர் எடுக்கிறேன்!

      நீக்கு
    2. நீங்களும் இன்னமும் ஊசி போட்டுக் கொள்ளவில்லையா?  எங்கள் அலுவலகத்தில் இரண்டு பெண் அதிகாரிகள் கூட போட்டுக் கொள்ளவில்லை.

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    அஷ்ட வக்ர கீதைப்பற்றிய இரண்டு கதைகளை படித்து தெரிந்து கொண்டேன். உடம்பை வளைத்து சோம்பல் விடுகிறவர்களை வீட்டின் பெரியவர்கள் "உடம்பை ஏன் இப்படி அஷ்ட கோணலாக வளைக்கிறாய்?" என்பார்கள். அதன் பொருள் இப்போது புரிகிறது.

    அந்தப் படத்திலிருப்பவர் மக்கள் திலகம் என நான் அன்றே நினைத்தேன். ஆனால் வழக்கப்படி சொல்லவில்லை.

    கவிதை அருமையாக உள்ளது. ரசித்தேன்.

    இருமலைப்பற்றிய செய்திகள் தெரிந்தவை. இருந்தாலும் இப்போதும் படித்து தெரிந்து கொண்டேன்.

    இதய அறுவை சிகிச்சை பற்றிய கதையும், மனதை உருக்கியது.

    சகோதரர் நெல்லைத் தமிழர் பகிர்ந்த பதிவும், படங்களும்நன்றாக உள்ளது. படித்து, படங்களை ரசித்துப் மகிழ்ந்தேன். இன்றைய நாளில் இதை இங்கு நினைவாகப் பகிர்ந்த அவருக்கு மிக்க நன்றி.

    ஜோக்ஸ் அனைத்தும் அருமை. "படிக்க முடிந்தால் பிஸ்தா. " உண்மையில் படிக்கவே இயலவில்லை. என் கண்களே கொஞ்ச நாட்களாக மங்கலாக உள்ளது. கைப்பேசியில் புழங்குவதாலா? இல்லை சுகர் அதிகமாகி உள்ளதா எனத் தெரியவில்லை. அதனால் நான் மேலும் சிரமப்பட்டும் இயலவில்லை. அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமாக எல்லாவற்றையும் சொல்லி பதில் சொல்லியுள்ள பாங்கு உங்களுக்கே உரியது. நன்றி கமலா அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!