வெள்ளி, 18 நவம்பர், 2022

வெள்ளி வீடியோ : வைத்தாட்ட பிள்ளை இல்லை விலைக்கு விற்க யாருமில்லை..

 இன்று தனிப்பாடல் லிஸ்ட்டில் கும்பகோணம் பற்றிய பாடல்..

வழக்கம்போல யார் எழுதியது, யார் இசை என்றெல்லாம் தெரியவில்லை!

துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம் 
குறவனார் உறையும் குடமூக்கிலே

குயில் பாடும் கும்பகோண கோயில்கண்டேன் 
கும்பேஸ்வரர் பெருமானின் வடிவம் கண்டேன் 
அமுதகுடம் உடைந்ததனால் அமைந்த லிங்கம் 
அமுதகுடம் உடைந்தததனால் அமைந்த லிங்கம் 
அருள்பொழியும் கும்பகோணம் அழகுலிங்கம் 

மகாமக விழாவினால் மங்கலம் பொங்கும் 
மாசிமக திருநாளில் உண்மை விளங்கும் 
மகாமக விழாவினால் மங்கலம் பொங்கும் 
மாசிமக திருநாளில் உண்மை விளங்கும் 
நவநதிகள் தூய்மை பெறும் நல்ல நாளது 
நவநதிகள் தூய்மை பெறும் நல்ல நாளது 
நன்மையெல்லாம் உலகில் பெற 
நமது வாய்ப்பது (குயில் பாடும்)


பனிரெண்டு ஆண்டிற்கொரு இனிய திருவிழா 
படுகின்ற துயர் மாற்றும் தெய்வத்திருவிழா 
தென்னாடுடைய சுவன் அருளும் திருவிழா 
தென்னாடுடைய சிவன் அருளும் திருவிழா  
தீவினைகள் தீர்வதற்கு 
நடக்கும் ஒருவிழா  (குயில் பாடும்)

====================================================================

1972 ல் வெளியான படம் 'அப்பா டாட்டா'.  மல்லியம் ராஜகோபால் இயக்கி ஒரு பாடலும் எழுதியுள்ளார்.  மற்ற பாடல்களை கண்ணதாசன் எழுத, வி குமார் இசையமைத்திருக்கிறார்.

சென்ற வாரம் 'சின்னச்சின்ன ஊரணியாம்' பாடலின் சில இடங்கள் எனக்கு நினைவு படுத்தியது இந்தப் பாடலைத்தான்.  இன்னும் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்த வாரம்...!

ஜெமினி கன்சன், பத்மினி, சௌகார் ஜானகி, மேஜர் நாகேஷ், மனோரமா, நடித்திருக்கிறார்கள்.

கதை என்ன என்று தெரியவில்லை.  விக்கியில் கிடைக்கவில்லை.  முழுப்படம் பார்க்கக் கிடைக்கிறது,  பார்க்க பொறுமை இல்லை.  படத்தில் இன்னொரு ஓரளவு தெரிந்த பாடல் பி சுசீலா குரலில் 'தமிழே பிள்ளைத்தமிழே' பாடல்.


பித்தாகி தொட்டில் ஒன்றை
விலை கொடுத்து வாங்கி வந்தேன்
வைத்தாட்ட பிள்ளை இல்லை
விலைக்கு விற்க யாருமில்லை..

இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட
எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட

இல்லாததொன்றுமில்லை இருந்தும் ஒரு பிள்ளை இல்லை
பொல்லாத தெய்வங்கள் என் புலம்பலையும் கேட்கவில்லை..

இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட

கறிகரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளையில்லை
நிறைக் குடத்து தண்ணீரை ஈன்றலைய பிள்ளையில்லை

மழை பெய்தோர் வாசலிலே மண் அலைய பிள்ளையில்லை
மாக்கோலம் தனை அழிக்க மகன் ஒன்று எனக்கில்லை..

இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட

வாழை மரம் குலைத் தள்ளி வாழ்ந்த பயன் தான் அடையும்...
கோழியினம் பெற்ற பயன் குஞ்சுகளாய்தான் திரியும்....

பாழும் மலடி என்ற பட்டம் பெற்றதன்றி ஏழை நான் என்ன பெற்றேன்
இருள் நிறைந்த வாழ்க்கை இனி

67 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..  வணக்கம்.  நேற்று எங்கே காணோம்?

      நீக்கு
    2. நேற்று பதிவை வாசித்து விட்டேன்.
      நிறைய நிறைய நிறைவாகச் சொல்ல வேண்டியிருந்தது. உணர்வுகளை அதிக பட்சம் தனியொரு ஆளாக வெளிப்படுத்த வேண்டாமென்று இருந்து விட்டேன்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. கும்பகோணம் சிறப்பு பற்றியும் அருள்மிகு கும்பேஸ்வரரின் அருள் ஆட்சி பற்றியும் பாடல் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அடுத்த பாடலில் 'மாக்கோலம் தனை அழிக்க..' வரி பிடித்திருந்தது. குழந்தைகள் விளையாடுத் தனமாய் போட்ட கோலங்களோடு விளையாடும் பொழுது திட்டி விரட்டும் பெற்றோர்களே அதிகம்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல் பகிர்வு இரண்டுமே அருமையாக உள்ளது.

    முதல் பாடல் கேட்டதில்லை. இப்போதும் வரிகளை படித்துப்பார்த்தேன். நன்றாக உள்ளது. நினைவுக்கு வரவில்லை. பிறகு கேட்கிறேன்.

    இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். பாடல் நன்றாக இருக்கும். சௌக்கார் ஜானகியின் இயல்பான நடிப்புக்கு இந்த மாதிரி பாடல்கள் பெயர் வாங்கித் தரும். ஆனால் வரிகள் மனதில் வலி ஏற்படுத்தும்.

    அடுத்த வாரப்பாடல்களில் ஒன்று " அன்னை" படப் பாடலா? அதிலும் இப்படி ஒரு பாட்டு வரும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. உங்கள் கேள்விக்கு பதில் இல்லை என்பதே!

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    வளமுடன் வாழ இறைவன் அருள வேண்டும்.

    கும்ப கோணம் பாடல் அருமை. இது வரை கேட்டதில்லை மா.
    மிக மிக நன்றி ஸ்ரீராம்.


    இரண்டாவது பாடல் அம்மாடி எவ்வளவு வருடங்கள் ஆகிறது கேட்டு.
    சௌக்காருக்குப் பின்னர் குழந்தை கிடைக்கும் என்று நினைவு.

    சூலமங்கலம் சகோதரியின் குரல் உணர்வுகள்
    பொங்க ஒலிக்கும்.

    நடிப்பும் நலம் .பழைய படங்களைப் பார்க்கும் பொறுமை
    குறைந்து வருகிறது என்னிடம். இன்றுதான்
    இருகோடுகள் பார்த்து முடித்தேன்.
    ஏன் இத்தனை சோகம் வைக்கிறார்கள் தெரியவில்லை.

    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வல்லி! வீட்டில் எல்லோருடைய உடல்நலனும் இப்போப் பரவாயில்லையா? உங்களைக் குழுமத்தில் பார்க்க முடிவதால் நலம் என நினைச்சுப்பேன்.

      நீக்கு
    2. //Geetha Sambasivam "வெள்ளி வீடியோ : வைத்தாட்ட பிள்ளை இல்லை விலைக்கு விற்க யாருமில்லை..” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      @வல்லி! வீட்டில் எல்லோருடைய உடல்நலனும் இப்போப் பரவாயில்லையா? உங்களைக் குழுமத்தில் பார்க்க முடிவதால் நலம் என நினைச்சுப்பேன்.// ஒளிஞ்சிருந்ததைக் கொண்டு வந்திருக்கேன். :)))))))

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா..  நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகை தொரட்டும்!  பல்லெடுத்தபின் எல்லாம்ச சரியா?

      நீக்கு
    4. ஒளிந்து கொண்டிருந்த உங்கள் ஒரிஜினல் கமெண்ட்டை தரதரவென இழுத்துக் கொண்டுவந்து விட்டேன் கீதா அக்கா...!

      நீக்கு
    5. Dear Geetha ma. Tooth is one of the problems:) Thank you. shall try to
      read more. Thank you Sriram.

      நீக்கு
    6. அன்பின் ஸ்ரீராம்,
      நன்றி மா.
      பல் எடுத்த பிறகும் பிரச்சினை தீரவில்லை.
      வயதும் , இரத்தசர்க்கரையும் காரணம்
      என்று நம்புகிறேன்.

      நீக்கு
  7. வல்லிம்மா. நேற்று கூட நினைத்துக் கொண்டேன்
    நீங்கள் சமீப காலங்களில் ஏன் இந்தப் பக்கம் வருவதில்லை என்று.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. கமெண்ட்டே இடாமல் பெட்டியில் டிக் மார்க் போட்டால் கூட கமெண்ட்ஸ் உங்கள் மெயில் பாக்ஸுக்கு வரும் அக்கா.

      நீக்கு
    2. நாலைந்து கருத்துப் போட்டும் டிக் செய்யாமல் இருந்திருக்கேன். ஆனால் கருத்தே போடாமல் டிக் செய்ததே இல்லை. தோணினதும் இல்லை. :)))))

      நீக்கு
    3. நான் சோதித்துப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  10. இரண்டு பாடல்களுமே எனக்குப் புதியவை. இத்தனைக்கும் 72 ஆம் வருஷமெல்லாம் சென்னை வாழ்க்கை தான். ஆனாலும் இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை. தேடித்தேடி எடுத்துப் பகிரும் ஸ்ரீராமின் பொறுமை வியக்கத்தக்கது. இத்தனை வேலைகளுக்கு இடையே இதற்கும் நேரம் ஒதுக்கிப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துச் சுவையான அறிமுகங்கள் செய்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'அப்பா டாட்டா' படம், இந்தியாவில் திரையிடப்படவில்லை எனவும் , இலங்கையில் திரையிடப்பட்டது எனவும் அறிகிறேன்.

      நீக்கு
    2. ஊரணியாம் பாட்டு நினைவு படுத்திய பாடல் இது கீதா அக்கா.  மேலும் நான் தேடி எல்லாம் எடுப்பதில்லை.  என் மனம் பாடல்களால் நிறைந்தது.  அதிலிருந்து அவ்வப்போது சில பாடல்மீன்களை எடுத்து வெளியில் நீந்த விடுகின்றேன்.

      நீக்கு
    3. இது எனக்கு புதிய செய்தி நண்பர் பால் ஜெயசீலன்.

      நீக்கு
  11. முதல் பாடல் மிகவும் இனிமை முன்பு கேட்ட ஞாபகம் இல்லை.

    இரண்டாவது பாடல் கேட்டதுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தேவகோட்டைஜி...    ஒரு கட்டத்தில் ரேடியோவில் அடிக்கடி ஒலித்தவை இந்த மூன்று பாடல்களும்.

      நீக்கு
  12. இரண்டாவது பாடல் என்றைக்கோ காதில் ஒலித்த நினைவு வருகிறது. முதல் பாடல் கேட்டதேயில்லை.

    ரொம்ப மெனெக்கடறீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கீதா அக்காவுக்கு சொல்லி இருக்கறபடி ரொம்ப மெனக்கெடுவதெல்லாம் இல்லை.  நான் பாடல்களின் அதி தீவிர ரசிகன்.  என் நண்பர் வேலாயுதம் அலைபேசினால் "மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்" என்று பாடல்வரி மனதில் ஓடும்.  சுந்தரி என்று கண்ணில் பட்டால் "சுந்தரி ஹாய் ஹாய் சுந்தரி" என்று கிஷோர் குரல் மனதில் ஓடும்.  (சுந்தரி கண்ணால் ஒரு சேத்தி எல்லாம் பின்னால் வந்தது.  எனக்கு கிஷோர் குரல்தான் மனதில்)  அப்படி சம்பந்தப் பட்ட வார்த்தைகளின் பாடல்வரியை ஒட்டி பாடல் மனதில் ஓடும்! உதாரணமாக மாமல்லபுரம் பற்றி முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
    2. இது மாதிரி எனக்கும் சில சமயம் தோணும் தான். ஆனால் உங்களைப் போல் தீவிரமாகவெல்லாம் தேடியதில்லை. சோம்பேறி. அதிலும் திரைப்படங்கள்/திரைப்படப் பாடல்கள் விஷயத்தில். :(

      நீக்கு
    3. தேடவே வேண்டாம் கீதா அக்கா.  மனதில் உடனே நினைவுக்கு வந்துவிடும்.  எழுத்தில் கொண்டுவரவேண்டியதுதான்!!

      நீக்கு
  13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.

      நீக்கு
  14. முதல் பாடல் அதிகம் ஒலிபரப்பு ஆகியதில்லை..

    ஆனால் என்னிடம் இசைநாடா இருந்தது..

    அவ்வப்போது கேட்டுக் கொள்வேன்..

    இப்போது இசைநாடா இல்லாமல் போனது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் ஒலிநாடாவில் பல அருமையான- கிடைக்காத - பாடல்களை மதுரையில் வைத்து பதிந்து வைத்திருந்தேன்.  எல்லாம் போச்!  மதுரை பாடல் ரசிகர்களின் சொர்க்கம்.

      நீக்கு
  15. இந்த இரண்டாவது பாடல் மிகவும் பிடித்தது..

    ஆனால் நான்கு வரிகளுக்கு மேல் தெரியாது..

    சூலமங்கலம் அவர்களது தாய்மை மிகுந்த குரல் பாடலின் உயிர்நாடி..

    அன்றைக்கு பதிவில் புதிர் வந்தபோது
    இந்தப் படத்தின் பெயர் எதுவும் நினைவுக்கு வரவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு படத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை.  நடுவில் வந்த இன்டர்லூட் இந்தப் பாடலுக்கு என்னை அழைத்துச் சென்றது!

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. முதல் பாடல் காலை நேரம் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
    அடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன், படமும் பார்த்து இருக்கிறேன்.
    நீங்கள் சொல்வது போல பொறுமை வேண்டும். கதை அப்படி பட்டது.

    சல் சலோனு சவாரி விட்டான் ராஜா தேசிங்கு என்று கதை சொல்லும் பாடல் இதில் வரும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் சல் சல் சல் சவாரி செய்யும் பாடல் தேவதாஸ் என்று ஞாபகம் கோமதி அக்கா.

      நீக்கு
    2. அதில் வரும் பாடலில் தேசிங்கு ராஜா வராது

      நீக்கு
  18. இரண்டு பாடல் வரிகளும் அருமை...

    // சுவன் ---> சிவன்

    பதிலளிநீக்கு
  19. //மாக்கோலம் தனை அழிக்க மகன் ஒன்று எனக்கில்லை..// குழந்தை பிறக்கணும்னு வேண்டிக்கிறவங்க போட்ட கோலத்தை அழிக்கவும் வைச்ச பொட்டை அழிக்கவும் தாலியைப் பிடித்து இழுக்கவும் ஒரு பிள்ளை வேண்டும் என்றே சுமார் ஐம்பது வருஷங்கள் முன் வரை வேண்டிப்பாங்க. முக்கியமாய்ப் பிள்ளைக்குழந்தை கோலத்தை அழிப்பதும் தாயின் பொட்டை அழிப்பதும் சிறப்பாகக் கருதும் பெரியோர் இருந்த காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யம்தான்.  எனக்கு அந்த வரி -------------------   ஆகப் பட்டது!

      நீக்கு
    2. காலம் மாறி எல்லா நல்லனவற்றையும் மாற்றி விட்டது. குட்டன் மலையாளத்துக்குப் போய்விட்டாப்போல்.

      நீக்கு
  20. @ கீதாக்கா

    // பிள்ளைக்
    குழந்தை கோலத்தை அழிப்பதும் தாயின் பொட்டை அழிப்பதும் சிறப்பாகக் கருதும் பெரியோர் இருந்த காலம்..//

    அது தானே மனை மங்கலம் எனப்பட்டது..

    கூடலில் கண்ணாடி வளையல்கள் உடைவதும் முதுகில் கன்னத்தில் கீறல்கள் விழுவதும் பெண்ணைப் பெற்றவளுக்குப் பேரானந்தம்
    மகள் வாழ்ந்தாள் என்று!..

    அப்படியான மகள்கள் இன்று ரயிலின் முன் தள்ளி விடப் படுகின்றனர்..

    முப்பத்தைந்து துண்டுகளாகி புதருக்குள் வீசப்படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் !
    இதுவரை நான் கேட்டிராத பாடல்கள் அருமை தொடர்கிறேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  22. இரண்டு பாடல்களுமே இன்றுதான் தெரியும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!