வியாழன், 24 நவம்பர், 2022

ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

 தினசரி மதியம் ஒன்றரை மணி டாக் பாஸுக்கும் அவர் சித்திக்கும்.  உறவுகள் நட்புகள் விஷயத்தில் பாஸ் ஒரு திறமையான பி ஆர் ஓ.  போதிய இடைவெளியில் அனைவருடனும் பேசி, நட்பை, உறவுகளைப் பேணுபவர்.   பாஸுடன் நான் பேச வேண்டுமென்றால் மிஸ்ட் கால் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும்..!!  முன்னரே சொல்லியிருக்கிறேன்.

இன்று ஒரு வித்தியாசமான சம்பவம் இடம்பெறுகிறது.  நான் சம்பந்தப்பப்படுகிறேன் என்பதால் அதை இங்கு பகிர்கிறேன்.

பாஸின் சித்தி பற்றியும், அவர் மகன்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும்.  சித்தியும் சித்தப்பாவும் டி வி எஸ்ஸில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்கள்.  சித்தப்பா சில வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார்.  சித்தியின் மகன்கள் இருவரும் நல்ல வேலையில் இருந்து கொண்டு கோவில் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.  வைணவ புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள்.  அந்தியூரில் ஒரு வைணவக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.  சோளிங்கரில் பல வருடங்களாக கார்த்திகை மாதத்தில் அன்னதானம் செய்து வருகிறார்கள்.  புண்ணியத்தில் பங்குபெற எங்களுக்கும், மற்றும் உறவு, நணபர்களுக்கும் (நன்கொடை)  வாய்ப்பு கொடுப்பார்கள் எனினும் எங்கள்  பங்கு எல்லாம் அணில் கையளவுதான்.  இப்போது அங்கு ஒரு சத்திரமே கட்டிவிட்டார்கள்.  தினசரி அன்னதானம்தான்.  அவ்வப்போது சென்று பார்த்து வருவார்கள்.இதில் சித்தியின் தோழிகளும் அடக்கம்.  தோழிகள் என்றால், இபப்டி அப்படி இல்லை..  ஒவ்வொருவர் குடும்ப விழாவிலும் எல்லோரும் கூடும் உயிர்தோழிகள்.

அதில் ஒருவர் சமீபத்தில் மறைந்துவிட்டார்.  சித்தியை அது மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.  இந்த முறை கார்த்திகை மாத சந்திப்பில் தோழி பற்றி ஒரு சிறு கவிதை வாசிக்க பிரியப்பட்டார்.   இவர் விருப்பம் அறிந்து குழுமத்தில் இன்னொரு தோழி அவருக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுத்திருக்கிறார்.  எனினும் சித்திக்கு, என்னிடமிருந்து கவிதை ஒன்றைப் பெறவேண்டும் என்று ஆவல்.

பாஸ் என்னிடம் சொல்ல, நான் மறுத்தேன்.  ஒருவரைப்பற்றி, அதாவது மறைந்தவர் பற்றி சரியாக அறியாமல் நான் அவரைப்பற்றி எழுதுவது சரி வராது என்று சொன்னேன்.  சித்தி பிடிவாதமாக இருந்தார்.  பாஸும்!  ஒரு மாதத்துக்கு முன்னரே தோழி எழுதிய கவிதையை எனக்கு அனுப்பி வைத்து அதையும் படித்து, என்னையும் முயற்சிக்க சொல்லி இருந்தார்.

எவ்வளவு மறுத்தும் பயனில்லாமல் தோழி எழுதி அனுப்பி இருந்த கவிதையை வாங்கிப் படித்தேன்.  உணர்வுபூர்வமாக அழகாக எழுதி இருந்தார்.  பாஸிடமும் சொன்னேன்.  அப்புறம் ஒன்று செய்தேன்.  அந்தக் கவிதையை வாங்கி அதை அப்படியே வாசித்து வாய்ஸ் மெஸேஜாக சித்திக்கு அனுப்பினேன்.

அனுப்பிய பின்னர் ஏதோ தோன்ற, நானும் ஒன்றை எழுத முயற்சித்தேன்.  அதையும் சித்திக்கு அனுப்பிவிட்டு 'ஆனாலும் என்னுடைய வோட்டு அவருடைய தோழி எழுதிய கவிதைக்குதான்' என்பதையும் சொன்னேன்.

பொதுவாக கவிதைகளை நான் படிக்கும் முறை வேறு, பாஸ், என் மகன்கள் படிக்கும் முறை வேறு!  படிப்பதில் பாவம் இருக்கவேண்டும் என்று சொல்வேன்.  எனவே சித்திக்கு நான் அனுப்பிய வாய்ஸ் கவிதை - அதாவது அவர் தோழி எழுதிய கவிதையே - பிடித்துப் போனது.  நான் எழுதி அனுப்பி இருந்ததும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்.  

மூன்றாவதாக ஒன்றையும் எழுதி அனுப்பினேன்.  அதுவும் சித்திக்குப் பிடித்தாலும், தோழி கவிதையையே தெரிவு செய்ததோடு, அதை நான் எழுதி இருப்பது போல பிரித்து எழுதி அனுப்பவும் சொன்னார்.  இன்னும் சில நாட்களில் எது வாசிக்கபப்ட்டது என்று தெரிந்து விடும்.  நான் என் மற்ற இரண்டு கவிதைகளையும் கூட வாய்ஸ் மெஸேஜாக அனுப்ப இருக்கிறேன்.  

அந்த மூன்று 'கவிதை'களையும் இங்கு பகிர்கிறேன்.  உங்கள் அபிப்ராயத்தையும் சொல்லுங்கள்.

முதலில் வருவது அவர்கள் தோழி எழுதியுள்ள கவிதை.  உணர்வுபூர்வமாக இருந்தது.  என் சாய்ஸ் அதுதான் என்றும் அவர்களிடம் கூறியிருந்தேன்.  இதில் இரண்டு இடங்களில் மறைந்தவர் பெயர் சேர்த்து தவிர வேறு எதுவும் நான் மாற்றவில்லை.

கடிகை மலை மீது கார்த்திகை திருநாளில் 
வீசிடும் தென்றலாய் விரைந்​தோ​டி வருபவளே 
சிரித்த முகத்துடன் சேவை பல செய்பவளே 
நரசிம்மா என்று நா மணக்க சொல்பவளே 
​பறித்துவைத்த ​ பூவை போல் மலர்ந்த ​முக​த்தவளே 
பாய்ந்து ஓடும் அருவியென அன்பினை தருபவளே 
கூடியிருந்து குளிர்ந்து மகிழ்பவளே 
அனைவருக்கும் இனியவளாய் ஆதரவு தருபவளே 
கோமதி...​  நீ 

உழைத்தது போதும் என ஓய்வெடுக்க சென்றாயோ 
பரமனின் திருவடியில் பணிந்திருக்க நினைத்தாயோ 
பிறப்பவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் பிரம்மன் விதிப்பது 
எனினும் 
வழியின்றி நிற்கின்றோம் தெய்வமாய் நின்று நீயே வழிநடத்து 
பஜனையில் உன் குரலை பாங்குடனே கேட்கின்றோம் 
ஆடி​ ​தவ​சி​யே  அத்தனையும் அறிந்தவளே 
பாடி​ ​படியே​றி​ பரமனை கண்டிடவும் 
செங்கமலம் விட்ட பணி சீராய் நடக்கு​தென்று​ 
சீக்கிரமாய் எம்மை விட்டு 
சேதி சொல்லப் போனாயோ 

​கோமதியே கோமகளே ​

தெய்வமாய் வந்து எங்கள் திருப்பணி சிறப்புறவே 
ஆசி வழங்கிடவே அன்புட​னே​ வேண்டுகிறோம் 

அடுத்து வருவது நான் முதலில் எழுதியது.  இதுவும் நன்றாய் இருக்கிறது என்று சித்தி சொன்னார்கள்.  சேர்த்து சொல்கிறேன்.  அல்லது இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் சொல்கிறேன் என்றார்கள்.  "சில வரிகளை இரண்டிரண்டு முறை சொல்ல வேண்டும் இல்லையா?" என்று கேட்டுக் கொண்டார்கள்.  எனக்கு அதில் சம்மதமில்லை என்றாலும், பாஸுக்கு சொல்லத் தெரியவில்லை.  சித்தி அவரிடம்தான் பேசினார்..  எனவே அப்படியே விட்டு விட்டார்.

கார்த்திகைதான் வந்துவிட்டால் 
புன்னகையுடன் ஓடிவந்து 
கூடிநின்று சேர்ந்திசைக்கும் 
உன் குரலை இனி நாங்கள் கேட்போமா 
நட்பில் பொலிவேறி பரவசத்தில் விகசிக்கும் 
உன் முகத்தை இனி நாங்கள் பார்ப்போமா ​

கடமைகளை கச்சிதமாய் முடித்துவிட்டாய் 
கண்மூடி நிச்சலனமாய் உறங்கிவிட்டாய் 
கடிகைமலை கடந்துவிட்டாய் 
கயிலாய மலை அடைந்துவிட்டாய் 
கண்கள்தான் கலங்குகின்றன 
நெஞ்சம்தான் விம்முகிறது 
உன்பிரிவால் நாங்கள் வாடும் 
துயர்நிலைதான் மாறிவிட 
வழியிருந்தால் சீக்கிரமே 
சிவனிடம் நீ கேட்டுச் சொல்லு 

நட்புறவில் உயர்ந்துநின்று 
நல்லதுகெட்டதில் கலந்துகொண்டு 
ஒன்றாகவே உலா வந்தோம் 
கண்டு கலந்து உண்டு மகிழ்ந்து 
பலபிறைதான் நாம் கண்டோம் 

விட்டுச் சென்றுவிட்டாய் 
வீடுபேறுதான் அடைந்துவிட்டாய் 
உடலால் மறைந்துவிட்டாய் - எங்கள் 
உள்ளங்களில் நீ நிறைந்துவிட்டாய் 
இனி பிரிவேது, துயரேது.. இப்படி 
தேற்றிக்கொள்கிறோம் எங்களை 
நீயும் எங்களை நினைத்திரு 

'ஓடும் மேகங்களே' டைப்பில், தூது விடும் பாணியில் மூன்றாவதும் எழுதி அனுப்பினேன்.  அதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை!

வான்மதியே கொஞ்சம் நில்லு எங்கள் சோகங்களை போய்ச்சொல்லு 
கோமதி என்று பெயர், மனதால் உன் நிறத்தவள், எப்போதும் பௌர்ணமி! 
தாண்டி உனைச் சென்றிருப்பாள் தாமரையாய் மலர்ந்திருப்பாள் - சிவ
ணாண்டியை நாடியே கயிலாயம் அடைந்திருப்பாள் 

ஓடும் மேகங்களே ஒரு நிமிடம் நில்லுங்கள் 
காடுமலை தாண்டிச் சென்று மழைநீரைப் பொழிகையிலே 
கயிலாயம் அடைந்திட்ட எங்கள் கண்மணியின் 
காலடியில்
சாடிவரும் எங்கள் கண்ணீரையும் அதில் சுமந்து சென்று 
 கனிவுடனே சேருங்கள்  
விண்ணிலிருந்து பொழியும் மழை அல்ல, அது உங்கள் தோழிகளின் 
கண்ணிலிருந்து பொழியும் கண்ணீர் என்று உரைத்திடுங்கள் 

நட்சத்திரங்களே கொஞ்சம் நகர்ந்து வழிவிடுங்கள் எங்கள் 
நட்பின் சித்திரம் ஒளிவீசவே உங்களிடையே சிறு அளவு 
விலகி இடம் கொடுங்கள் 

மதியே.. முகிலே.. விண்மீனே 
உங்களிடையே நின்று எமைப் பார்க்க 
கோமதியை அனுப்பி இருக்கிறோம் 
விண்ணேகி வந்து விட்டாள் கண்ணாகக் காத்திருங்கள் 
கடிகைக்கு முந்திச் சென்று காத்திருந்தவள் -இன்று 
கயிலைக்குச் செல்லவும் முந்தி விட்டாள்.(அ)
கயிலைக்குச் சென்று பார்த்திருக்கிறாள்.

உயரே வந்துவிட்டாள் உயிராக இருந்தவள் 
துயரிலே நனைந்திருந்தாலும் எங்கள் 
துணையாய் அவள் இருப்பாள்.

==============================================================================================================  

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! சொல்லப்போனால் மூன்று மாங்காய்!  இன்றைய பதிவில் என் கட்டுரையும் கவிதையும் இடம்பெற்றுவிட்டன.  இனி மற்றவற்றைப் பார்த்தால் போதும்!!

==============================================================================================================

================================================================================================


===========================================================================================

இணையத்தில் படித்தது....


பிரபஞ்சன் குமுத்தில் உதவி ஆசிரியராக சில காலம் பணியாற்றி, திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஒரு கூட்டத்தில் குமுத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப் பட்டது பற்றி பேசும்படி வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டார். அதன்படி பிரபஞ்சனே கூறிய சம்பவம் இது.
உதவி ஆசிரியர் பிரபஞ்சனை குமுதம் ஆசிரியர் உடனடியாக அழைத்தார். உள்ளே சென்ற உதவி ஆசிரியரை பதவி நீக்கம் செய்வதாக கூறிவிட்டார் ஆசிரியர்.
பதவி நீக்கத்திற்கு காரணம் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. ஒன்றில் குமுதம் போன்ற குப்பை பத்திரிகையில் தரமான இலக்கியவாதியான பிரபஞ்சன் போன்றவர்கள் எப்படி பணியாற்றுகிறீர்கள் என்று ஒரு வாசகர் கேட்டுள்ளார்.
அதற்கு பிரபஞ்சன்,
குமுதம் பத்திரிகையில் இரண்டு பக்கங்களுக்கு மட்டும்தான் நான் பொறுப்பு. அதில் மற்ற பக்கங்களில் வரும் படைப்புகளை உதவி ஆசிரியரான என்னால் எதுவும் செய்ய முடியாது.
குமுத்தில் நான் ஒரு ஊழியன்…எழுத்தாளர் பிரபஞ்சன் என்பவன் வேறு…
என்று பதில் தந்திருக்கிறார்.
இந்த விவரம் மெல்ல திரிக்கப்பட்டு குமுதம் ஆசிரியர் காதிற்கு போகிறது. குமுதம் குப்பை பத்திரிகை என்று ஒருவர் கூட்டத்தில் சொல்லும்போது, குமுத்தின் உதவி ஆசிரியரான பிரபஞ்சன் அதை மறுக்காமல் இருந்திருக்கிறார் என்று ஈர், பேனாகியது….
விளைவு பிரபஞ்சன் குமுத்திலிருந்து நீக்கப்பெற்று சுதந்திரம் பெற்றார்.
இவ்வாறு கூறிய பிரபஞ்சன் குமுத்தின் தினசரி அலுவல்கள் பற்றி அந்த கூட்டத்தில் சுவாரஸ்யமாக் கூறினார்.
அந்த வார இதழ் தயாரிக்கப்படும் முதல் நாளில், ஆசிரியர் கூட்டம் நடக்கும். காலையில் ஆசிரியர் அறையில் குமுதம் பத்திரிகை ஆசிரியர் குழுவின் அனைவரும் கூடியிருப்பார்கள்.
ஆசிரியர் (எஸ்ஏபி) வருவார். அவர் அருகில் அணுக்கத் தொண்டர்களாக ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கைகட்டி நிற்பார்கள்.
அனைவர் நெற்றியிலும் அவரவர் வழக்கத்துக்கு ஏற்றபடி குறுக்கும் நெடுக்குமாக விபூதியும் திருமண்ணும் பூசியிருப்பார்கள்.
அறையில் பத்தி ஏற்றப்பட்டு பக்தி மனம் கமழும்…
ஊழியர் ஒருவர் பயபக்தியுடன் ஒரு பெரிய பகவத் கீதையை கொண்டுவந்து ஆசிரியர் முன் வைப்பார். ஆசிரியர் அதை கர்ம சிரத்தையுடன் வாங்கி, ஒரு செய்யுளை வாசிப்பார்…பிறகு அதற்கு அவரே விளக்கம் சொல்வார்…அந்த விளக்கம் ஐந்து நிமிடம் வரை இருக்கும்.
அதன்பிறகு அனைவரும் கலைந்து செல்வார்கள். வெளியில் சென்றவர்களில் முதலில் ரா.கி.ரங்கராஜனும், ஜ.ரா.சுவும் மட்டும் கர்ம சிரத்தையுடன் ஒரு ஃபைலை ஆசிரியர் அறைக்குள் கொண்டு செல்வார்கள். அங்கு அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.
அந்த ஃபைலில் அந்த வாரத்தில் சினிமா புகைப்படக்கார்கள் எடுத்த நம் தமிழ் சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் பெரிதாக அச்சிடப்பட்டு ஆசிரியரின் பார்வைக்கு தரப்படும். ஆசிரியர் அதில் கவர்ச்சியான ஒன்றை அடுத்த வாரம் குமுத்தின் நடுப்பக்க படமாகத் தேர்வு செய்வார்…
இந்த படலம் முடிந்த பிறகே மற்ற படைப்புகள் பற்றி யோசிக்கப்படும்…இதுதான் குமுத்தின் வாராந்திர அலுவல் என்று பலத்த நகைச்சுவையிடையே பிரபஞ்சன் பகிர்ந்து கொண்டார்.
90களில் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் ஒரு நிகழ்வில் பிரபஞ்சன் பேசிய போது,பங்கேற்ற வாசகர்களில் அடியேனும் ஒருவன்
அது பிரசன்னா ராமசாமி, திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் அந்த காலகட்டத்தில் நடத்திய நானும் என் எழுத்தும் என்ற கூட்டத் தொடர் என்று நினைக்கிறேன்…
க.வெங்கடேசன்
21.12.2018
(பிரபஞ்சன் ஐயா மறைவு நினைவில் எழுதியது)

==========================================================================================================

இணையத்தில் பார்த்தது...

===================================================================================================

மொபைல் ஃபார்வேர்டுக்கு உதவும்...!

=========================================================================================


பொக்கிஷம்...

கடவுளைக் காணோம்....


நார்த்தை இலைப்பொடி


இந்தப் பாடகர்கள் பாடிக் கேட்டிருக்கிறீர்களா?


குமுதம் ஜோக் 1


அவ்வை ஷண்முகி பெயருக்கு காரணமானவர்!


ஜோக் என்றுதான் வெளியிட்டிருக்கிறார்கள்...



94 கருத்துகள்:

  1. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப்புழி..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. மிகவும் கனமான பதிவு..

    தனித்தனியே சொல்வதற்கு எதுவும் இல்லை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​// தனித்தனியே சொல்வதற்கு எதுவும் இல்லை.. //

      நன்றி துரை செல்வராஜூ அண்ணா.

      நீக்கு
  4. அடிக்கடி இந்த வார்த்தையை உபயோகப் படுத்துகிறீர்கள் :
    கனமான பதிவு என்றால் என்ன தம்பீ? எந்த அர்த்தத்தில் இந்த 'கனமான' வார்த்தை வந்தது?

    பதிலளிநீக்கு

  5. இதான் எழுத்தாளர்களில் சுஜாதாவுக்கும் பிரபஞ்சன் போன்றோருக்குமான வித்தியாசம்.
    முன்னவர் வியந்து பார்த்தவரை பின்னவர் கணித்த லட்சணம் இது.
    குமுதம் பற்றி அடிப்படை ஞானமில்லாமலா அந்தப் பத்திரிகையில் பணியில் சேர்ந்தார் இவர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கே புரியும்,
      ஸ்ரீராம். இப்போ வேண்டாம். நாம் சந்திக்கும் பொழுது இதை வைத்துக் கொள்ளலாம்

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. கட்டுரையில் உள்ள மூன்று கவிதைகளில் முதல் கவிதை மரபுக் கவிதை போன்று கல்லூரி மாணவர்களால் எதுகை  மோனையுடன் எழுதப்படும் வாழ்த்துப்பா போல் அமைந்த இரங்கற்பா. நன்றாக உள்ளது. 

    உங்களுடைய  இரண்டு கவிதைகளிலும் சந்தத்திற்கு ஏற்ப எழுதப்படும் திரைப்படப் பாடல்களின் சாயல் உள்ளது. ஒரு விதத்தில் கில்லெர்ஜீயின் பாதிப்பு என்று கூற வைக்கிறது.

    மூன்றுமே சிறப்பு என்றாலும் முதல் கவிதை படிப்பவருக்கு பிடித்து போனதால் அப்படியே ஆகட்டும்.

    ப்ளூ டூத் இல்லை. உள்ளது ஒரே டூத்.  பழுப்பு டூத். 

    கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு திராவிட அரசியல்வாதி ஒரு பகுத்தறிவு மண நிகழ்ச்சியில் பேசியதைத்  தொடர்ந்து அவரைக் கண்டித்து கண்ணதாசன் பேசியதை விளக்கியிருப்பார்.. 

    பொக்கிஷம் "கடவுளைக் காணோம்"  இருந்து இரண்டு முக்கிய வரிகள் 

    இறைவன் இறந்தால் தற்கால இராவணர்கள் "சர்வ வல்லமையுள்ள டாலரை வழிபடலாமே"

    இராவண ராஜ்யத்தில் கம்பன் கண்டதை நாம் இன்று உலகில் காண்கிறோம். கடவுள் உள்ளானா அல்லது (இராவணன் கூறியது போல) ஒதுங்கி விட்டானா? 

    இவ்விரு வரிகளும் இன்றும் பொருந்தும். 

    சினிமா நாடகம் இரண்டும் போட்டி போட்ட அந்தக் காலம்; TKS போன்ற நாடக கம்பெனிகளும் நல்ல நாடகங்களைத் தந்த காலம். 

    எல்லாம் போய் இன்று இவை இரண்டும் தொலைக்காட்சியிடம் தோற்று விட்டன. சீரியல் என்ற பெயரில் அபத்தங்கள்.   
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதுகை மோனையுடன் எழுதப்படும் வாழ்த்துப்பா போல் அமைந்த இரங்கற்பா. நன்றாக உள்ளது. //

      நன்றி. அவர்களிடம் சொல்லி விடுகிறேன்.​

      //கில்லெர்ஜீயின் பாதிப்பு என்று கூற வைக்கிறது.
      //

      ஹா,ஹா... ஹா...

      அனைத்தையும் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  8. @ ஜீவி அண்ணா..

    // அடிக்கடி இந்த வார்த்தையை உபயோகப் படுத்துகிறீர்கள் :
    கனமான பதிவு என்றால் என்ன தம்பீ? எந்த அர்த்தத்தில் இந்த 'கனமான' வார்த்தை வந்தது?..//

    அபிராமி அந்தாதியில் கனம் என்ற வார்த்தை வருகின்றது.. மகாகவியின் முருகன் அழைப்பிலும் கனம் வருகின்றது.. மேலும் பழமொழி ஒன்றும் இருக்கின்றது..

    இதற்கெல்லாம் என்ன அர்த்தமோ அதே அர்த்தம் தான்!..

    பதிலளிநீக்கு
  9. @ ஜீவி அண்ணா..

    // அடிக்கடி இந்த வார்த்தையை உபயோகப் படுத்துகிறீர்கள் :
    கனமான பதிவு என்றால் என்ன தம்பீ? எந்த அர்த்தத்தில் இந்த 'கனமான' வார்த்தை வந்தது?..//

    அபிராமி அந்தாதியில் கனம் என்ற வார்த்தை வருகின்றது.. மகாகவியின் முருகன் அழைப்பிலும் கனம் வருகின்றது.. மேலும் பழமொழி ஒன்றும் இருக்கின்றது..

    இதற்கெல்லாம் என்ன அர்த்தமோ அதே அர்த்தம் தான்!..

    பதிலளிநீக்கு

  10. @ ஸ்ரீராம்..

    //அந்த மூன்று 'கவிதை'களையும் இங்கு பகிர்கிறேன்.  உங்கள் அபிப்ராயத்தையும் சொல்லுங்கள்.//

    இவற்றை கவிதையாக ரசிக்க முடியவில்லை!..

    பதிலளிநீக்கு
  11. கவிஞர் ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. அர்ச்சனை மலர்களை
    சூடிக் கொள்ளுங்கள்..
    அஞ்சலி மலர்களை
    அப்படியே விட்டுவிடுங்கள்..

    பதிலளிநீக்கு
  13. அர்ச்சனை மலர்களை
    சூடிக் கொள்ளுங்கள்..
    அஞ்சலி மலர்களை
    அப்படியே விட்டுவிடுங்கள்..

    பதிலளிநீக்கு
  14. @ ​ஸ்ரீராம்..

    // தனித்தனியே சொல்லும்படி எதுவும் இல்லை.. //

    தனித்தனியே சொல்வதற்கு வைத்து விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  15. வாழ்வில் பதினாறு படிகள் என்கின்றீர்கள்..

    இங்கே ஒருவர் ஒரே ஏற்றம் பிறகு அதுவே இறக்கம் என்கின்றார்..

    யாரந்த ஒருவர்?..

    நாந்தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடிருந்தால் பள்ளமிருக்கும், இன்பமிருந்தால் துன்பமிருக்கும், இரவிருந்தால் பகலிருக்கும்!

      நீக்கு
    2. ஆனால் நாம், பள்ளம் இருக்கிறது. நிச்சயம் மேடிருக்கும். இப்போது இரவு. நிச்சயம் விடியும் என்று மனதைத் தேத்திக்கொள்ளவேண்டியதுதான்

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் நன்றாக உள்ளது. ஆனால், தங்கள் பாஸினுடைய சித்தியின் தோழியின் பிரிவுத்துயர் மனதை வருத்துகிறது. பிறந்த எந்த உயிரும் பிரிவது இயற்கையென்றாலும், அது மனத்தை வருத்துபவைதானே..! அவர்களுக்கு என் அஞ்சலிகளும்.

    அவர்களுக்காக பிறந்து வந்த கவிதைகள் அனைத்துமே நன்றாக உள்ளது. அன்று பாடும் போதும், அனைவரின் விழிகளும் கண்டிப்பாக கசியும்.

    /ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! சொல்லப்போனால் மூன்று மாங்காய்! /

    ஆம் உண்மை.. வியாழனாகிய இன்று தங்கள் கட்டுரையும், கவிதைகளும், சனிக்கிழமைகளுக்கே சொந்தமான நேர்மறை செய்திகளும் இடம் பெற்று விட்டன. ஆன்மிகத்தில் தவறாது ஈடுபட்டு வரும் தங்கள் பாஸின் சித்தி குடும்பத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..   அதில் நேர்மறைச் செய்தியையும் கண்டு பிடித்து விட்டீர்கள்.  நான் கவனிக்கவில்லை அக்கா.  நன்றி.

      நீக்கு
  17. இரங்கஸ் பாக்கள் நன்றாக இருந்தாலும் மனதைத் தொடவில்லை. மூன்று மாங்காய்களும் வெவ்வேறு ரகம் என்றாலும் சுவையும் மாறுபடுகிறது.தோழியின் மேல் உயிரையே வைத்திருக்கும் உங்கள் பாசின் சித்திக்கு எங்கள் நமஸ்காரங்கள். அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் பாஸின் திறமை பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா..   அதென்னவோ உங்கள் கமெண்ட்ஸ் மட்டும் தினம் சென்று ஸ்பாமில் விழுந்து விடுகின்றன!

      நீக்கு
  18. பிரபஞ்சன் ஓர் அறிவு ஜீவி ரக எழுத்தாளர். எஸ்.ஏ.பி அவர்கள் சாமானியர்களுக்கான எழுத்தாளர். சாதாரண மனிதனின் நாடியைப் பிடித்துப் பார்த்து அதற்கேற்ற கதை/கட்டுரைகள்/கவிதைகள் எனப் பகிர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் எஸ்.ஏ.பி. பிரபஞ்சனோ அதற்கு நேர்மாறானவர். இறை நம்பிக்கை என்பது அவருக்குக் கேலிக்குரிய விஷயம். கீதையை ரசிக்கவா செய்வார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பிரபஞ்சன் மஹாபாரத மனிதர்கள் பற்றி அற்புதமாக ஒரு தொடர் கல்கியில் எழுதினர்.

      நீக்கு
  19. ஹெஹெஹெ! அதுக்குள்ளே ஒரு கருத்துக் காணாமல் போச்சே! க்ர்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற் கோபத்தில் அழுத்தமாய்ப் பல்லைக் கடிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன்.

      நீக்கு
  20. பின் தொடரும் பெட்டியை க்ளிக் செய்யாததால் அந்தக் கருத்துப் போனது போனது தான் கிடைக்கலை/கிடைக்காது.

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராமின் கவிதைகள் மனதை ஈர்க்கவில்லை என்று சொல்லி இருந்தது மட்டும் நினைவில் இருக்கு. மற்றபடி என்ன எழுதி இருந்தேன் எனத் தெரியலை. :(

    பதிலளிநீக்கு
  22. மூன்று மாங்காய்களும் வெவ்வேறு ரகம். சுவை. ஆனாலும் ஊறுகாய் ருசிக்கலைனு என எழுதி இருந்தேனோ?

    பதிலளிநீக்கு
  23. எல்லாக் கவிதைகளுமே சிறப்பான இரங்கல்"பா"

    ஒரு கவிதையை பார்த்து எழுதும்போது வேறொரு கோணம் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  24. இரங்கல் பா சிறப்பு
    எழுத்தாளர் பிரபஞ்சன் செய்தியினை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  25. ..ஆசிரியர் (எஸ்ஏபி) வருவார். அவர் அருகில் அணுக்கத் தொண்டர்களாக ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கைகட்டி நிற்பார்கள்//

    அடடா.. Godfather 4 ஆரம்பிக்கலாம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... நேற்று சிரஞ்சீவி நடித்த காட்ஃபாதர் படம் பார்த்தேன் நான்!

      நீக்கு
    2. சிரஞ்சீவியையும் விட்டுவைக்கவில்லையா!

      நீக்கு
    3. நானா, அவர்களா?  படம் முழுவதும் சிரஞ்சீவி ஸ்லோ மோஷனிலேயே நடந்தார்!

      நீக்கு
    4. இன்று காந்தார் இன்னொரு முறை, ப்ரைமில் பார்த்தேன். நிறைய உணர்வுகளை எழுப்பக்கூடிய படம் அது.

      நீக்கு
  26. பாஸ் பத்தின முதல் பாரா வாசித்து சிரித்துவிட்டேன்.,

    நானும் பாஸ் போலத்தான் இருந்தேன்....இடையிடையே உறவுகள் நட்புகளை அழைத்துப் பேசிவிடும் பழக்கம். தற்போது வெகு சமீபகாலமாக அது குறைந்துவிட்டது. பணிகள், நேரப்பளு காரணம்...மகன் மற்றும் மிக நெருங்கிய உறவு/நட்புகளிடம் ஒரு இடைவெளியில் கண்டிப்பாகப் பேசும் பழக்கம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. மூன்று கவிதைகளும் நல்லாவே இருக்கு ஸ்ரீராம். உங்கள் கவிதைகள் இரண்டுமே சூப்ப்பர். இதுவரை நீங்க எழுதிப் பகிர்ந்த கவிதைகளில் இருந்து வித்தியாசமாக இருக்கு.

    நீங்களாக எழுதுவதற்கும் ஒருவர் கேட்டு அதுவும் தெரியாத ஒருவரைப் பற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஆமாம் ஸ்ரீராம், கவிதைகளை ஏற்ற இறக்கத்தோடு Bபாவத்தோடு வாசிப்பதுதான் எனக்கும் பிடிக்கும். எனக்கும் சில வரிகளை இரு முறை சொல்வது ஏனோ பிடிப்பதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முஷாயரா எனப்படும் உருது கவிதை வாசித்தலில் (வட நாட்டில், குறிப்பாக டெல்லி, உ.பி.யில்), மேடையில் சில வரிகளை இரண்டு தடவை வாசித்துக் காண்பிப்பார்கள், கவிஞர்கள். தான் சொல்லவந்ததை emphasise பண்ணுகிறார்களாம். அசடுகள். பொதுவாக என்னைப்போன்றோருக்கு எரிச்சல் மூட்டுவதில் அது முடியும்!

      நீக்கு
    2. கவிதையோ, சிறுகதையோ (யூட்யூப் போன்றவற்றில்) பாவத்தோடு, குரலின் ஏற்ற இறக்கங்களோடு வாசித்தலே கேட்பவரைக் கதையோட்டத்தில் இருக்கவைக்கும்.

      நீக்கு
    3. ஆனாலும் எனக்கென்னவோ இப்போதைக்கு படிக்கத்தான் பிடிக்கிறது.

      நீக்கு
    4. உருதா...   தமிழிலேயே நிறைய கவிஞர்கள் இப்படி இரண்டிரண்டு முறை வாசித்து வெறுப்பேற்றுவார்கள்!!!

      நீக்கு
    5. வாசிக்க முடிந்தால், ரசனை வளர்ந்தால் பாக்கியம்தான்.
      ’படிக்கிறதெல்லாம் கஷ்டம்சார். யாராவது சொன்னா கொஞ்சம் கேட்கலாம்’ என்போருக்கு வேறு யாராவது வாசித்துக்காட்டவேண்டுமே. புத்தகம் என்பது தப்பித்தவறிக்கூடக் கையில் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். நெட்டிலும் கனமான விஷயங்களையா தேடிப்படிப்பார்கள்? சான்ஸே இல்லை. இத்தகையோர்களால்தானே நாடே நிரம்பிவழிகிறது இப்போது!

      நீக்கு
    6. //தான் சொல்லவந்ததை emphasise பண்ணுகிறார்களாம். அசடுகள். பொதுவாக என்னைப்போன்றோருக்கு எரிச்சல் மூட்டுவதில் அது முடியும்!// - தமிழில் பொழுதுபோகாத கவிகள் இந்த மாதிரி இரண்டு வரிகளை இரண்டுதடவை வாசிப்பார்கள்.

      நல்லவேளை..இந்தப் பொழுதுபோகாத பொக்கிகள், நாவல் சிறுகதைகளை வாசித்துக் காண்பிப்பதில்லை. அப்புறம் சிறுகதை, குறுநாவல் போல நமக்கு அயர்ச்சியை உண்டாக்கிவிடும்.

      இதுபோலவே ஈமெயில், வாட்சப்பில் capital lettersல் எழுதி நம்மை எரிச்சல்படுத்துவார்கள்

      நீக்கு
  29. ப்ளூ டூத்!// ஹாஹாஹா.

    இங்க நிறையப் பேர் தானாகத்தான் பேசிட்டுப் போறாங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பகிர்ந்திருந்த வருடத்தைப் பாருங்க...!

      நீக்கு
    2. 2013 - அப்பவே ப்ளூ டூத் ஜோக்!! ப்ளூ டூத் இங்குப் பரவலாகப் பேசப்பட்ட சமயமோ...அட இதே நாள்!!! நவம்பர் 24!!!!!

      கீதா

      நீக்கு
  30. மொரிசன் ஷெல்டர்....அட போட வைத்தது. இது பழசோ?

    ஆனால் அது ஏதோ கூண்டு போலவும் வேறு ஒன்றையும் நினைவுபடுத்துது....

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கடவுளைக் காணோம் இன்றைக்கும் பொருந்திப் போகிறது.

    16 படிகள் எங்கோ ஏதோ ஒரு அலுவலகத்தில் பார்த்த நினைவு...

    நார்த்தை இலைப்பொடி முன்னமே இங்கு பகிர்ந்திருக்கீங்க ஸ்ரீராம்...

    பழம் பெரும் வித்வத்ரத்னங்களில் கேபிஎஸ் தவிர வேறு யார் பாடியும் கேட்டதில்லை...இல்லை வேறு சிலரது கேட்டிருக்கலாம் ஆனால் பெயரை நோட் செய்த நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  நார்த்தை முன்னர் பகிர்ந்து விட்டேனா?  நினைவில்லை கீதா.

      நீக்கு
  32. முதல் ஜோக் ஓகே.

    நாடகம் என்றால் நினைவுக்கு வருபவர்....நாடக உலகே தனி....இப்போது எங்கே மேடை நாடகம்?

    கீதா

    பதிலளிநீக்கு
  33. //தினசரி மதியம் ஒன்றரை மணி டாக் பாஸுக்கும் அவர் சித்திக்கும். உறவுகள் நட்புகள் விஷயத்தில் பாஸ் ஒரு திறமையான பி ஆர் ஓ. போதிய இடைவெளியில் அனைவருடனும் பேசி, நட்பை, உறவுகளைப் பேணுபவர்.//

    உறவுகளுடன், நட்புகளுடன் பேசி , உறவை பேணுவது மிகவும் நல்ல விஷயம்.
    உங்கள் துணைவிக்கு வாழ்த்துகள். முதன் முதலில் சந்திந்த போதே வெகு காலம் பழகியது போன்ற உணர்வை தந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதன் முதலில் சந்திந்த போதே வெகு காலம் பழகியது போன்ற உணர்வை தந்தவர்.//

      பாஸிடம் சொன்னேன்.  சந்தோஷப்பட்டார்.

      நீக்கு
  34. சித்தியின் தோழி மறைவுக்கு வருத்தங்கள், இன்னொரு தோழி எழுதி கொடுத்த கவிதை உள்ளத்தை உருக்கும் கவிதை.நீங்கள் எழுதிய கவிதைகளும் அவர்களின் மேன்மையை சொல்கிறது.
    இறைவனிடம் சித்திக்கும், சித்தியின் தோழிகளுக்கும் ஆறுதலை தர வேண்டுகிறேன்.

    திருப்பணி சிறப்பாக நடக்க இறைவன் அருள்வார்.


    பதிலளிநீக்கு
  35. மற்ற எல்லா பகிர்வுகளும் நன்றாக இருக்கிறது. மூடி சூடா மன்னன் சிரிப்பு சிரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. குமுதத்தைப் பற்றி பிரபஞ்சன் சொன்னது ரசனைக்குறைவு. இது சரவணபவனுக்குப் (1987.. கடந்த 10-20 வருடங்களாக இருப்பது அல்ல) போய் பீட்சா சரியில்லை, பர்கர் சரியாகச் செய்யவில்லை என்று சொல்வதைப் போன்றது. பிரபஞ்சனுடைய கருத்து தேவையில்லாதது. குமுதம் போல ஒரு சூப்பர் ரசனையான பத்திரிகையை நான் படித்ததில்லை (70-80). அதைப்போன்றே சாவியும், குங்குமமும்-அரசியல் சாயம் இருப்பது தவிர. பிறகு விகடன்.

    இந்த மாதிரி, தன்னைத்தானே மிகப் பெரிதாக நினைத்துக்கொள்வதால்தான் இந்த இலக்கியவியாதிகளைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  காலையில் வரவில்லையோ....   சமயங்களில் பிரபஞ்சன் உண்மையில் என்ன சொன்னார், என்ன நடந்தது என்பது பிரபபஜனுக்கும்,இப்படி மாற்றி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கும்தான் தெரியும்.  உண்மையிலும் இப்படி நடந்திருக்கலாம்தான்.

      நீக்கு
  37. இணையத்தில் பார்த்ததாகப் போட்டிருக்கும் மோரிஸ்ஸன் ஷெல்டர் எனக்கு ஹாங்காங்கில் மிடில் அதற்குக் கீழான க்ளாஸ் மக்கள் குடியிருப்பதாகப் பார்த்த, படித்த, கண்ட காணொளிகள் ஷெல்டர்கள் நினைவுக்கு வந்தது.

    ஆமாம்..நமக்கு 4 அடிக்கு 8 அடி அறையில் கட்டில், இன்னொரு 4க்கு 5ல் சேர், 8க்கு 4 கிச்சன், ஐந்து குடியிருப்புகளுக்கு ஒரு குளியலறை, இரண்டு டாய்லெட்டுகளுக்கு மேல் தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அந்தந்த நேரம், அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்தது.

      நீக்கு
  38. இந்தக் கவிதை நன்று, அது சரியில்லை என்று எழுதுவது படைத்தவரின் உணர்வைக் காயப்படுத்தலாம்.

    இரண்டாம் கவிதை என்னைக் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  39. சித்தியின் தோழிக்காக எழுதிய கவிதை இரங்கல். அவர்களுக்கு அனுதாபங்கள்.

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!