சனி, 11 பிப்ரவரி, 2023

சாந்தமான சாதனையும் நான் படிச்ச கதையும்

 

சாந்தம்மாவின் சாதனை! 

இவர் எங்கே போகிறார்? யூகிக்க முடிகிறதா? 

மருத்துவமனை?

இல்லை, நம் அனுமானங்கள் முற்றிலும் தவறானவை.

கைகளில் 2 வாக்கிங் ஸ்டிக்குகளுடன் ஆந்திராவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் வகுப்பறைகளுக்கு தினமும் 60 கிலோமீட்டர் தூரம் பேருந்தில் சென்று கற்பிக்கிறார்.

இவர் மருத்துவ இயற்பியல், கதிரியக்கவியல் & மயக்க மருந்து கற்பிக்கும் 95 வயதான சாந்தம்மா.

இவரது வழிகாட்டுதலின் கீழ், 17 மாணவர்கள் முனைவர் பட்டம் (பிஎச்டி) முடித்துள்ளனர்.

பகவத் கீதையை ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்; மேலும் விரிவான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மிக வயதான பேராசிரியை என்ற பெயரை பதிவு செய்வதே அவரது நோக்கம்.

இவர் நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகம்.

===================================================================================================

இனத்தோடுஊர்விட்டு ஊர் நகர்ந்து கொண்டே இருப்பவர்கள்தான் நரிக்குறவர்கள். இவர்களில் ஸ்வேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

ஆனால், இது மட்டும் அல்ல அவரது பெருமை. பொறியியல் படித்து வளாக நேர்முகத்தேர்வில் கை நிறையச் சம்பளத்துடன் கிடைத்த வேலையை, தன் சமூக மக்களின் நலனுக்கு உழைப்பதற்கு உதறித் தள்ளி, இப்போது மூன்று பள்ளிகளை நடத்திவருகிறார்

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர்தான் ஸ்வேதா.....  (From JKC)

= = = = ===================================================================================================

 

நான் படிச்ச கதை (JK)

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்

கதையாசிரியர்: ஆதவன் 


நான் அதிகம் அறிந்திராத எழுத்தாளர்களில் ஒருவர் ஆதவன். இவருடைய படைப்புகளை நான் வாசித்ததில்லை. 1987ஆம் ஆண்டு சாஹித்திய அகாடமி விருது பெற்றவர். ஆகவே இவர் எழுதிய கதைகள் ஏதாவது வாசித்து எழுத நினைத்தேன். எஸ் ரா அவருடையஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்என்ற கதையை 100 சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்திருக்கிறார். எனவே அந்தக் கதையையேநான் படிச்ச கதையில் விவரிக்கலாம் என்று தீர்மானித்தேன்.

இது ஒரு கதை இல்லாத கதை. ஓர் ஓரங்க நாடகம் என்று சொல்லலாம். ஒரு நீண்ட உரையாடல். ஒரு உளவியல் ஆராய்ச்சி என்றும் கூறலாம். மேலும் தலைப்பு பொருத்தம் இல்லை  என்பது என் கருத்து. இரண்டு நாற்காலிகள் என்பதற்குப் பதில் இரண்டு ஆசனங்கள் என்றோ, அல்லது இரண்டு ஆபீசர்கள் என்றோ இருந்தால் சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு.

கைலாசம் மத்திய (ஒன்றிய?) அரசில் ஓர் உயர் அதிகாரி. ஒரு தமிழ் எழுத்தாளரும் கூட.  தனி அறையில் கோலோச்சிய  அவர் தற்போது மேலும் ஒருவருடன் அறையைப் பங்கிட வேண்டியிருக்கிறது. அவரே அதைப்  பற்றி கூறுகிறார்.

அதையேன் கேக்கிறே, எங்க மினிஸ்ட்ரியிலே ஆபீசர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகப் பெருகிப் போச்சு. ஸோ டெபுடி செக்ரெட்டரி ராங்குக்கு உள்ளவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும்தான் தனி ரூம்னு சொல்லிட்டான். நான் ஒரு ராங்க் கீழே இருக்கிறவன் ஆனதினாலே, இந்த அகர்வாலோட ஒரு ரூமை ஷேர் பண்ணிக்கும்படி ஆயிடுத்து.’

அப்படி அறையில் சகவாசியாக அகர்வால் என்ற பி காரன் வந்து சேர்ந்தான். தொட்டதற்கும் தொடாதற்கும் எப்போதும்கைலாஷ் ஜிஎன்று தொண தொணத்துக் கொண்டிருப்பவன். அவரை கைலாசத்திற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

கைலாசம் சொல்கிறார். அகர்வால்பேசாமல் புரிந்து கொள்கிறவன் இல்லை, பேசினாலும் புரிந்து கொள்கிறவன் இல்லை.’

தொண தொணன்னா.. என்ன சொல்றது? இதெல்லாம் சப்ஜெக்டிவ்தான் இல்லையா? எனக்கு அவனுடைய கம்பெனி ரசமாக இல்லை. அவ்வளவுதான்.’

இப்படி அகர்வாலைப் பற்றி கைலாசம் கூறுகிறார்.

அறையை ஷேர் செய்யும் முறை வந்தபோதே கோஷ் என்ற கேர்டேக்கர், அறையில் ஒரு பார்டிசன் உண்டாக்கித் தருவதாகக் கூறியிருந்தார்.

ஆனால் கைலாசம் என்னைப் பொறுத்தவரையில் இன்னொருவனுடன் அறையைப் பகிர்ந்து கொள்வதில் எந்த விதமான அசௌகரியமும் இல்லை, என்றெல்லாம்?’......சொல்லி மறுத்து விட்டார்.

ஒரு நாள் அவருடைய நண்பர் ராமு பம்பாயில் இருந்து வந்தவர் அவரைக் காண வருகிறார்.

மணி 12.

நீ இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சியா?’

நான் தூங்கிண்டு இருக்கலை…’

பரவாயில்லையடா, தூங்கிண்டிருந்தாலும்தான் என்ன? தட்ஸ் யுவர் ஜாப், இல்லையா?’

அரசாங்கத்திலே இனிஷியேட்டிவ் எடுத்துக் கொள்பவன் அல்ல, எடுத்துக் கொள்ளாதவன்தான் விரும்பப்படுகிறான்…’

இவ்வாறு துவங்கும் உரையாடல் தான் கதை. கதை பாதியாகச் சுருக்கித் தரப்பட்டுள்ளது.

அறைக் கதவு திறந்தது, அகர்வால் உள்ளே வந்தான்.

அகர்வால்ஜி! மீட் மை ஃபிரண்ட்.. மிஸ்டர் ராமச்சந்திரன் ஆஃப் கமானீஸ்…”

அச்சா அகர்வால், இவருக்கு ரிசர்வ் பேங்கில் இருக்கிற என்னுடைய ஒரு நண்பரைப் பார்க்கணுமாம்…. சோ இவரை அங்கே அழைத்துப் போகிறேன்எக்ஸ்க்யூஸ் மீ ஃபார் லஞ்ச்என்றார்.

அகர்வாலுடன் டிபன் சாப்பிடச் செல்வதிலிருந்து விடுதலையாகி ராமுவுடன் கேன்டீனுக்குச் செல்கிறார். அகர்வாலின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அச்சா…’ என்றான்.

இவன்கிட்டே மாட்டிண்டு அவஸ்தைப் படறேன் நான். சொன்னால்கூடப் புரியுமோ என்னவோ..’

போரா?’

ஆமாம்என்றார் கைலாசம். அவர் முகத்தில் குதூகலமும் நன்றியுணர்வும் ஏற்பட்டது. அகர்வாலுடன் அதிருப்தியும் சலிப்பும் கொள்ளும்போது, ஒருவேளை தன்னை ஓர் எழுத்தாளனாக இவன் புரிந்து கொள்ளாததுதான் தன் அதிருப்திக்குக் காரணமோ, ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்வால் ஏற்படுத்தும் சலிப்பைக் கருதி அதைக் கூடிய வரை சகித்துக் கொள்ளவும் அவர் முயன்று வந்தார். தன்னை நன்னெறிப்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சியாக அதைக் கண்டார்.

இப்போது ராமு, அவருக்குத் தன் மீதே ஏற்பட்டு வந்த சந்தேகங்களை அறவே போக்கினான்.

எனக்கு ஒரே பசிஎன்றான் ராமு.

டிபன் சாப்பிடத்தான் போகிறோம்.’

அந்த வட்டாரத்திலிருந்த இன்னொரு காரியாலயத்துக்குள் நுழைந்த அவர்கள்,  அங்கிருந்த கேண்டீனில் போய் உட்கார்ந்தார்கள்.

பேச்சு அகர்வாலைப் பற்றித் திரும்புகிறது. கைலாசம் தொடர்கிறார்.

கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளணும் என்று நம்புகிறவன் நான்ஆனால் அதை ஒரு மூட நம்பிக்கையாக இவன் நிரூபித்து விட்டான். இவனுடனிருக்கும்போது என்னை நான் இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. எவ்வளவு வார்த்தைகளைச் செலவழித்தாலும் இவன் என்னைப் புரிந்து கொள்வதில்லை. அதை விட மோசம், புரிந்து கொண்டு விட்டதாக நினைக்கிறான். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் அதிர்ச்சியுடன் உணருகிறேன்.’

அவ்வாறு நேர்வதுண்டுஎன்று ராமு அனுதாபப் புன்னகையுடன் தலையை ஆட்டினான்.

இவ்வளவுக்கும் அவன் என்னிடம் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறான், தெரியுமா?’

ஆனால் மதிப்பு நேசத்தின் ஆதரவாகிவிட முடிகிறதில்லை…. சில சமயங்களிலே காலை நேரத்தில் அவன் என்னைப் பார்த்து முதல் புன்னகை செய்யும்போது, குட் மார்னிங் சொல்லும்போது, அவற்றை அங்கீகரிக்கவும் எதிரொலிக்கவும் கூட எனக்குத் தயக்கமாக இருக்கும்.’

இது அவாவா இயல்பைப் பொறுத்த விஷயம், இல்லையா? மனப்பக்குவத்தைப் பொறுத்த விஷயம்.. இரண்டு மனிதர்கள் ஒத்துப் போகிறார்கள். வேறு இரண்டு மனிதர்கள் ஒத்துப் போவதில்லை. இதைத் தர்க்க ரீதியாக விளக்குவது ரொம்பக் கஷ்டம்…’

ஆனாலும்கூட உன் மனம் இதைப் பற்றி மிகவும் தர்க்கம் செய்தவாறே இருக்கிறது போலிருக்கிறதே!’

ஆம் சாரி…. நான் உன்னை போர் அடிக்கிறேன், ரொம்ப.’

நோ நோப்ளீஸ் ப்ரொஸீட், இட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங்.’

யார் மனசையும் புண்படுத்தக்கூடாது, எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்ளணும்,’

ராமு சிரித்தான்.

இது சிரிக்கும் விஷயமல்லஎன்று கைலாசம் ஒரு கணம் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு தானும் சிரித்தார்.’

டிபன் வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

உனக்கு இந்த மாதிரியான அனுபவம் ஒன்றும் ஏற்பட்டதில்லையா?’ என்றார் கைலாசம்

ராமு தோள்களைக் குலுக்கியவாறு, ‘நாமெல்லாம் ரொம்பச் சாதாரணமான ஆசாமிஎன்றான். ‘நீ ஒரு கிரேட் ரைட்டர்எனவே பலதரப்பட்டவர்கள் உன்பால் ஈர்க்கப்படுகிறார்கள்கைலாசம் ராமுவைக் குத்தப் போவது போலப் பாசாங்கு செய்தார். ‘எனவே, எனக்கு மனித சகோதரத்துவத்தைப் பற்றிய இல்யூஷன்கள் எதுவும் கிடையாது. ஸோ எனக்கு எப்போதும் ஏமாற்றம் உண்டாவதில்லைஎன்றான் ராமு தொடர்ந்து

இல்யூஷன்கள் எனக்கும்தான் இல்லை. ஆனால்..’ என்று கைலாசம் கூறி நிறுத்தினார். தன் மனத்தில் குமிழிட்ட உணர்வுகளுக்கு எவ்வாறு சரியாக வடிவம் கொடுப்பதென்று யோசித்தவராக, அவர் மனத்தில் அகர்வாலின் உருவம் தோன்றியது. அவன் தனக்கு நகைச்சுவையாகப்படும் ஏதாவது ஒன்றைக் கூறி சிரிப்பை யாசித்தவாறு அவர் பக்கம் பார்ப்பது. குதுப் மினார், இந்தியா கேட் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் பாணியில்கைலாசம்கிரேட் டாமில் ரைட்டர்என்று தன் நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துதல், ஏதாவது ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ சொல்லி அதற்குத் தமிழில் என்னவென்று கேட்பது, தமிழ்நாட்டு அரசியல் நிலை, அங்கு நடைபெறும் ஏதாவது நிகழ்ச்சி அல்லது அதிகமாக அடிபடும் பிரபலமான பெயர் பற்றி அவரை விசாரிப்பது. அவனுடைய இத்தகைய சிரத்தைப் பிரதியாகத் தானும் அவனுடைய மாநிலத்தின் அரசியல், பிரமுகர்கள், மொழி ஆகியவற்றில் சிரத்தை கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது, தன் குடும்ப சமாசாரங்களை அனாவசியமாக அவரிடம் சொல்வது, அவருக்கு அந்தக் காரியாலயத்தில் நெருக்கமாக இருந்த வேறு சிலர் பற்றி அனாவசியக் கேள்விகளைக் கேட்பது, அபிப்ராயங்கள் சொல்வது (ஒரு பொறாமைமிக்க மனைவி போல)…. பலவிதமான நிலைகளிலும் காட்சிகளிலும் அவர் அவனைக் கண்டார். வழக்கமான சோர்வும் குழப்பமும்தான் உண்டாயிற்று. எத்தகைய தெளிவும் ஏற்படவில்லை.

உன்னிடம் என்ன சிரமமென்றால், நீ ஒரு வழவழா கொழகொழாஎன்றான் ராமு. சர்வர் கொண்டு வந்து வைத்த காப்பியை ஒரு வாய் உறிஞ்சியவாறு, ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நீ இருப்பதில்லை.’

வாஸ்தவம்.’

ஒருத்தனுடன் ஒத்துப்போக முடியவில்லையென்றால் நிர்த்தாட்சண்யமாக அவனை ஒதுக்கிவிட வேண்டியதுதான். இட்ஸ் வெரி சிம்பிள். அவன் உன்னுடைய நட்புக்காக ஏங்குவதாக உனக்குத் தோன்றியது. நீ அவனுடைய முயற்சிகளுக்கு வளைந்து கொடுத்தாய், .கே. ஆனால் சீக்கிரமே அத்தகைய ஒரு நட்பு ஏற்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் இல்லையென்று தெரிந்து போயிற்று. ஸோ, அப்படித் தெரிந்த உடனேயே அவனை அவாய்ட் பண்ண வேண்டியதுதானே, இதிலே என்ன பிரச்னைன்னு எனக்குப் புரியலை.’

அப்படி அவனை நான் அவாய்ட் பண்ணிண்டுதான் இருக்கேன். ஆனால் இது ஒரு குற்ற உணர்ச்சியைத் தருகிறது…’

குற்ற உணர்ச்சி எதற்காக?’

என் முடிவுகள் தவறாயிருக்குமோன்னு எனக்கே என் மேலே எப்பவும் ஒரு சந்தேகம்.’

நான் ஓர் எழுத்தாளன் என்கிற கவர்ச்சியினாலே அவன் என்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்னு சொன்னேன்ஆனால், உண்மையில், நான் ஒரு எழுத்தாளனாக இல்லாமல் சாதாரண மனிதனாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் ஏங்குவதாக எனக்குப் படுகிறது.’

ராமு ஓர் அடம்பிடிக்கும் குழந்தையைப் பார்ப்பது போல அவரை ஆயாசத்துடன் பார்த்தான்.

நீ ஒரு தமிழனாக இல்லாமல் வடக்கத்தியானாக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குவது போலப் படவில்லையா?’

ஆமாம், அப்படியும்தான் தோன்றுகிறதுஎன்றார் கைலாசம் ஆச்சரியத்துடன்.

நீ இந்தியில் ஏதாவது பேச முயன்றால் அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்திப்படம் ஏதாவதொன்றைப் பார்த்து அதைப் பற்றி அவனிடம் சர்ச்சை செய்தாலோ, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்றாலோ, அவன் ஜன்ம சாபல்யமடைந்தது போலப் பரவசமடைந்து போகிறான்

ஆமாம், ஆமாம்.’

இந்திப் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் உனக்கு சப்ளை பண்ணவும், உன்னுடைய இந்தி அறிவை விருத்தி செய்யத் தன்னாலான உதவிகளைச் செய்யவும் கூடத் தயாராக இருப்பானே

கைலாசம் சந்தேகத்துடன் ராமுவை உற்றுப் பார்த்தார். ‘ஏண்டா, கேலி பண்றயோ?’ என்றார்.

கேலியோ, நிஜமோ, எனக்கு இந்த மாதிரி ஆளெல்லாம் ரொம்பப் பரிச்சயமானவர்கள், அப்படின்னு   சொல்ல வந்தேன்.’

சொல்லு, சொல்லு.’

நான் மாசத்திலே இருபது நாள் இந்தியா முழுவதிலும் சுற்றியபடி இருக்கிறவன். எனக்கு இங்குள்ள எல்லாவிதமான டைப்பும் அத்துப்படி.’

விஷயத்துக்கு வா

இதுவெல்லாம் ரொம்ப அடிப்படையான எலிமெண்டரி டைப். கொச்சையான மாயைகளிலே தஞ்சமடைகிற ரகம். தனக்கென்று ஒரு ஹோதாவில்லாததினாலே, ஒரு தனித்த ஐடென்டிடி இல்லாததினாலோ, எதன் மீதாவது சாய்ந்து கொள்வதன் மூலமாகத்தான் அவன் தன்னை உணர முடிகிறது. நிரூபித்துக் கொள்ள முடிகிறது. பலம் வாய்ந்த, மகத்துவம் வாய்ந்த ஏதாவது ஒன்றுடன் தன்னை ஐடென்டிஃபை பண்ணிக் கொள்வதன் மூலம், அதன் ஒரு பகுதியாக ஆவதன் மூலம்.’

யூ மீன்…’

‘’ஆமாம், நீ அவன் போன்றவர்கள் இகழ்ச்சியாகக் கருதும் ஒரு சராசரி மதராஸி இல்லை. நல்ல அறிவும் பண்பும் உடையவனாயிருக்கிறாய். கதை வேறு எழுதுகிறாய். சப்பாத்தியோ சமோசாவோ சாப்பிடுவதில் உனக்கு ஆட்சேபணையில்லை. இதெல்லாம் அவனை மிகவும் பாதுகாப்பற்றவனாக உணரச் செய்திறது போலும். மதராஸிகளை ரசனையற்ற மூடர்களாக, பணிவற்ற காட்டுமிராண்டிகளாக, குறுகிய நோக்கும் அசட்டுக் கர்வமும் உள்ளவர்களாக, சண்டைக்காரர்களாகஎப்படி எல்லாமோ அவன் கற்பனை செய்து கொண்டிருக்கலாம், உன்னைச் சந்திப்பதற்கு முன்பு. அவன் ஒரு உயர்ந்த இனத்தவனென்ற மாயையின் பகுதி இதெல்லாம். னால் நீ இந்த மாயையைச் சிதைத்து விட்டாய். அவனைச் சிறுமைப்படுத்தும் உத்தேசம் இல்லாமலிருந்தும்கூட நீ அவனை தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்து விடுகிறாய். சரி, எப்படியிருந்தால் என்ன? என் மொழிதான் ஆட்சிமொழி, என் சகோதரர்களே ஆட்சி புரிபவர்கள் என்பன போன்ற எண்ணங்களில் தஞ்சமடைந்து அவன் ஆசுவாசம் பெற வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் இந்த எண்ணங்கள் அவனைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கின்றன. இவரும் என்னைப் போன்ற ஒரு யு.பி.வாலாவாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வடக்கத்தியானாக இருந்தால் தேவலையே என்று அவனுக்குத் தோன்றுகிறது…’

பலே, பேஷ்.’

இருவரும் சிரித்தவாறே மேஜையை விட்டு எழுந்தனர்.

கேண்டீனுக்கு வெளியே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை இருந்தது. ஆளுக்கொரு பீடா வாங்கி ராமு வாயில் போட்டுக் கொண்டு, சற்று நேரம் சுற்றுப்புற உலகை வேடிக்கை பார்த்த அமைதி.

அகர்வாலுடன் இப்படி ஒரு நிமிஷமாவது அமைதியாக உணர்ந்திருக்கிறாரா? சதா அனாவசியச் சர்ச்சைகள், தனக்காக அவன் அணியும் வேஷங்களை உணராதது போன்ற பாசாங்கு, அவனுக்காகத் தானும் வேஷமணிய வேண்டிய பரிதாபம்.

ராமு புகையை ஊதினான். ‘ஒரு சந்தேகம்என்றான்.

என்ன?’

அகர்வாலுடன் பெண்களைப் பற்றியும் பேசுவியா?’

கைலாசம் அசந்து போனார். ‘நீ நான் நினைத்ததை விடவும் ஆழமானவன்என்றார்.

இது சாதாரணப் பொது அறிவுஎன்றான் ராமு. ‘பெரும்பாலும் இந்த டாபிக்கைப் பற்றி ஃப்ரீயாகப் பேச முடியாத ஒரு நிர்ப்பந்தமே உறவுகளை இறுக்கமானதாகச் செய்கிறது. ஏன், ஒரு அப்பாவுக்கும் பிள்ளைக்குமிடையே கூட…’

நாங்கள் பெண்களைப் பற்றியும் பேசாமலில்லை.’ கைலாசம். உதட்டைப் பிதுக்கினார்.

ஒரு பயனுமில்லை.’

வேடிக்கைதான்.’

வேடிக்கையென்ன இதிலே? செக்ஸ் எல்லோருக்கும் பொதுவான, அடிப்படையான விஷயம். எனவே எந்த இரு மனிதர்களும் இதைப் பற்றிப் பேசுவதன் மூலம் நெருக்கமாக உணரலாம் என்று நினைக்கிறாயா? இல்லை. அது அப்படியல்ல. நெருக்கம் முதலில் வருகிறது. இந்தப் பேச்செல்லாம் பின்பு வருகிறது. அந்த நெருக்கம் எப்படி உண்டாகிறதென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அது சிலருக்கிடையில் ஏற்படுகிறது. சிலருக்கிடையில் ஏற்படுவதில்லை. அவ்வளவுதான்.’

எத்தகைய ஒரு வீழ்ச்சி! உன் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி, சமத்துவவாதி…!’

எல்லா மனிதர்களும் சமமானவர்களாயிருக்கலாம், சகோதரர்களாயிருக்கலாம். ஆனால் எல்லா மனிதர்களுடனும் ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ளவோ, சேர்ந்து அமர்ந்து டிபன் சாப்பிடவோ என்னால் முடியாதுஎன்று கூறிய கைலாசம், ஒரு கணம் யோசித்து, ‘சமத்துவத்தையும் தனி மனித உரிமைகளையும் குழப்பாதேஎன்றார்.

நீதான் குழப்புகிறாய்.’

சரி, நீங்கள் செக்ஸைப் பற்றிப் பேச முயன்றால் என்ன ஆகிறது?’

என்னத்தைச் சொல்ல, நானாக அவனிடம் இந்த டாபிக்கை எடுத்தாலும் அவன் சந்தேகப்படுகிறான். இத்தகைய டாபிக்குகளைப் பேசத்தான் லாயக்கானவனென்ற ஒரு மூன்றாம் தரப் பிரஜை உரிமையை அவனுக்கு என் உலகத்தில் வழங்குகிறேனோ, என்று.’

ஆனால் எனக்கு எப்போதும் நான் ஒரு வித்தியாசமானவென்ற உணர்வு இருந்தது. யார்கூட வேண்டுமானாலும் ஒத்துப்போக முடியுமென்ற கர்வம்ஆமாம், கர்வம் இருந்தது. கடைசியில் இப்போது நானும் எல்லோரையும் போல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவன், என் நட்பு எல்லோரையுமே அரவணைக்கக் கூடியதல்ல என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நான் என்னுடைய சில ஆழ்ந்த நம்பிக்கைகள் வெறும் லட்சியக் கனவுகளாக நிரூபணமாகி, ஒரு முட்டாளைப் போல உணருகிறேன்.’

ராமு கைலாசத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளாதேஎன்றான்.

இது சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ராமு. சில மனிதர்கள் என்னதான் முயன்றாலும் ஒருவரோடொருவர் ஒத்துப்போக முடியாதென்ற உண்மையைத் திடீரென்று ஒரு ஞானோதயம் போல நான் உணர்ந்திருக்கிறேன். ‘

ராமு ஒரு கணம் பேசாமலிருந்தான். பிறகுஉனக்கு உன்னைப் பத்தி என்னென்னவோ இல்யூஷன், தட்ஸ் தி டிரபிள்என்றான். ‘யூ ஆல்வேஸ் வான்ட் டு பிளே ஸம் கிரேட்ரோல்…. ஒரு கம்யூனிடியின் அம்பாசிடராக.. காட்! நீ நீயாகவே ஏன் இருக்க மாட்டேங்கிறே?’

நான் நானாகவே தாம்பா இருக்கப் பார்க்கிறேன்…. அதுக்கு இவன் விடமாட்டேனென்கிறான்னு தான் சொல்ல வரேன்..’

விடலைன்னா விட்டுடு…’

நீ சுலபமா சொல்லிடறேஹவ் இஸ் இட் பாஸிபிள்? என்கூடப் பேசாதேன்னு சொல்ல முடியுமா?’

வானிலையும் விலைவாசியையும் மட்டும் பேசு.’ ‘அதுவும்இல்லை, உனக்கு இந்தப் பிரச்னை புரியவில்லை.’

சில சமயங்களில் நான் அவனிடம் பேசாமலே இருப்பதுண்டு. அப்போது அவன் மூஞ்சி பரிதாபமாக இருக்கும். எனக்கு அவன் மேல் ஏதோ கோபமென்றோ, அவன் என் மனத்தைப் புண்படுத்தி விட்டானென்றோ அவன் உணர்வது போலத் தோன்றும். எனக்கு அவன் மீது அனுதாபம் ஏற்படத் தொடங்கிவிடும். நான் பேசத் தொடங்கி விடுவேன்….’

ஆனா, பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போலவே பேசுவது ஸ்ட்ரெயினாகத்தான் இருக்கிறது. அழும் குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அதற்கு உற்சாகமூட்டும் சேட்டைகள் காட்டுவது போல, அவனுடன் பேசும்போது என்னையுமறியாமல் நான் ஏதேதோ வேஷமணிய நேருகிறது. ‘

ராமு சொல்லத் தொடங்கினான்.

இந்த மாதிரியானவர்களை எல்லாம் ரொம்ப நெருங்க விடாமல் முதலிலிருந்தே ஒரு டிஸ்டன்ஸ்லே வச்சிருக்கணும். நீ மற்றவர்களை ஏன் இவ்வளவு சுலபமாக உன்னிடம் உரிமைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கணும்னு எனக்குப் புரியலை.’

என்ன பண்றது, என்னுடைய இயல்பே அப்படி. டோன்ட் வான்ட் டு பி அனப்ரோச்சபிள். பிறரை ஆசுவாசம் கொள்ளச் செய்வதற்காக, எனக்கு அவர்கள் மேல் விரோதமில்லை. நான் கர்வமுள்ளவன் இல்லை என்றெல்லாம் உணர்த்துவதற்காக, மெனக்கெட்டு அவர்களுக்கு இணக்கமான ஒரு வேஷத்தை அணிவது என் வழக்கம். கடைசியில் இதுவே ஆபத்தில் கொண்டு விடுகிறது. ‘

கடிகாரத்தைப் பார்த்த ராமு, ‘மை காட்! மணி ரண்டாகிவிட்டதே!’ என்று கூவினான். ‘உன் ராமாயணத்தைக் கேட்டு நேரம் போனதே தெரியவில்லை. உத்தியோகபவன்லே ஒரு ஆளைப் பார்க்கணும் எனக்குஎன்று சாலையில் வந்த ஓர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தினான்.

சரி, அப்புறம் எப்ப வீட்டுக்கு வரே? சொல்லு!’ நாளைக்கு ராத்திரி சாப்பிட வந்திடு.’

ஒரு கண்டிஷன்.’

என்ன?’

நாளைக்கும் அகர்வாலைப் பற்றியே பேசி போர் அடிக்கக் கூடாது.’

மாட்டேன், பிராமிஸ்.’

கைலாசம் தன் தலைவிதியை நொந்தவாறு மறுபடி ஆபிசுக்குள் நுழைந்தார். தன் அறைக்குச் செல்வதற்கு முன்பாககேர்டேக்கர்அறையினுள் எட்டிப் பார்த்தார். ‘கம் இன், கம் இன்என்ற கோஷ் அவரை வரவேற்றார்.

கைலாசம் அவனெதிரில் போய் உட்கார்ந்தார்.

சொல்லுங்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்றான் கோஷ்.

நானும் அகர்வாலும் உட்காரும் அறையில் நடுவே ஒரு பார்ட்டிஷன் போடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே, என்ன ஆயிற்று?’

என்னுரை.

இந்தப்  பதிவை எழுதும்போது இருவர் வந்து எட்டிப்பார்த்து  அவர்களையும் பற்றி எழுதத் தூண்டினர். அந்த இருவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் ஜீவி அய்யா அவர்கள். அவர் தான்றெக்கை கட்டிப் பறக்குதய்யாஎன்று கதை என்பது இல்லாமல் ஒரு கதையை எழுதியிருந்தார். அதே போன்றது தான் இந்தஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’. இந்தக் கதையை சிறப்புக் கதையாக எஸ்ரா தேர்ந்தெடுத்தது எனக்கு வியப்பாக இருக்கிறது.

இரண்டாவதாக வந்தவர் நமதுசந்தித்ததும் சிந்தித்ததும்பதிவாசிரியர் வெங்கட்ஜி அவர்கள். கைலாசம் போன்றே அவர் மத்திய அரசில் உயர் பதவி வகிப்பவர். அலுவலகத்தில் பல மாநில மக்களுடன்  பழகுபவர். யாரையும் விரோதித்துக் கொள்ளாதவர். சக அலுவலர்கள் பற்றி அவர் பல பதிவுகளும் எழுதியிருக்கிறார். சிறந்த எழுத்தாளர். பல நூல்களும் வெளியிட்டிருக்கிறார். இந்த ஒற்றுமை வியக்க வைக்கிறது.

பதிவு கொஞ்சம் நீளம் கூடி விட்டது. இத்தனைக்கும் பாதியாகச் சுருக்கப்பட்ட கதையே பதிவில் இடம் பெற்றிருக்கிறது. பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி.

கதையின் சுட்டி.

இரண்டு நாற்காலிகள்-

ஏகாந்தன் அய்யா ஆதவனைப் அறிமுகப்படுத்தி எழுதியபுகைச்சல்கள்விமரிசனப் பதிவின் சுட்டி

ஆதவன்

ஆதவன் (1942 -1987) (கே.எஸ்.சுந்தரம்) கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர்.

இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை செய்தார். 1975 முதல் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும், 1984-க்கு பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.

1987ல் ஆதவனுக்கு தூரதர்சனில் செய்தி ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. பணிக்குச் சேர்வதற்குள் மறைந்தார். (சிருங்கேரியில் துங்கா நதியின் சுழலில் சிக்கி இறந்தார் என்று செய்தி)

ஆதவனுக்கு இந்திரா பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் இருவரும் அணுக்கமான மூத்த எழுத்தாளர்கள். டெல்லியில் பணியாற்றும்போது தி.ஜானகிராமன் நெருக்கமானவராக இருந்தார்.

என் பெயர் ராமசேஷன் (1980) என்ற படைப்பு, வித்தாலி பூர்ணிகாவினால் உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.

37 கருத்துகள்:

  1. முதல் இரு செய்திகளும் அருமையான செய்திகள். சாந்தம்மாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! நான் அடிக்கடி சொல்வது....வருமானம் என்றில்லை, வயதானாலும் நம்மல் முடிந்தவரை உடல் மற்றும் மூளையின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் வரை நாம் அறிந்த நல்ல விஷயங்களைக் கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனினும் ஏதேனும் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டு நம்மை engaged ஆக வைத்துக் கொள்ளல் நலம்.

    சாந்தம்மாவுக்கு மீண்டும் வணக்கங்கல் வாழ்த்துகள். என்னை மிகவும் ஈர்த்த விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சாந்தம்மா நம் எல்லோருக்குமே நல்ல உதாரணம். உத்வேகத்துடன் செயல்பட...

    ஸ்வேதா பற்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இதுவும் என்னை மகிழச் செய்த விஷயம். ஏதோ ஒரு பதிவில் எங்கள் தளத்தில் குறிப்பிட்ட நினைவு. ஆனால் எந்தப் பதிவு என்று நினைவில்லை. அவர் பொறியியல் முடித்த சமயம்.

    பள்ளிகள் நடத்துவது மிக மிகச் சிறப்பான விஷயம்.

    ஸ்வேதாவும் ஆகச் சிறந்த உதாரணம். மனமார்ந்த பாராட்டுகள் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆதவன் அவர்களின் இக்கதை வழக்கமான கதைகள் என்ற இலக்கணத்திலிருந்து மாறியிருக்கலாம்...(ஜெகே அண்ணா சொல்லியிருப்பது போல்) ஆனால் ஒரு நிகழ்வை விவரிக்கும் கோணத்தில் உரையாடல்களின் மூலம் கதாபாத்திரங்களின் இயல்புகளை அழகாக வெளிப்படுத்தும் விதத்தில் எழுதியிருக்கிறார்.

    இன்னும் வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆதவனின் படைப்பு ஒன்றே ஒன்றுதான் வாசித்திருக்கிறேன்.  என் பெயர் ராமசேஷன்..  அதுவும் எப்போதோ வாசித்தது!

      நீக்கு
  4. உளவியல் ரீதியாக என்று ஜெகே அண்ணா சொன்னது போல் நானும் ..ஆனால் கூடவே வடக்கு, தெற்கு மனிதர்களின் எண்ண ஒட்டங்களையும் வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள வேறுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சாந்தம்மாவின் சாதனையும், ஸ்வேதாவின் முயற்சியும் வியக்க வைக்கிறது.

    எழுத்தின்மூலம் நம்மைப் புரிந்துகொள்ள வைக்கும் உரையாடல் கதையைச் சுருக்கி எழுத இயலாது. சுருக்கம் நன்றாக இல்லை.

    உருசிய மொழியில் மொழிபெயர்த்தது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை - தபிழக எழுத்தாளர்களின் புதினங்கள் ஆயிரம் பிரதிகள் விற்பதே சாதனை என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. கைலாசம், அகர்வாலைப் பற்றிய தன் சலிப்பை ராமுவிடம் சொல்லிக் கொண்டே வருகிறார்...ராமு

    //‘உனக்கு உன்னைப் பத்தி என்னென்னவோ இல்யூஷன், தட்ஸ் தி டிரபிள்’ என்றான். ‘யூ ஆல்வேஸ் வான்ட் டு பிளே ஸம் கிரேட்ரோல்…. ஒரு கம்யூனிடியின் அம்பாசிடராக.. ஓ காட்! நீ நீயாகவே ஏன் இருக்க மாட்டேங்கிறே?’//

    இதில் பல விஷயங்கள் வெளிப்படுகிறது...

    //‘இந்த மாதிரியானவர்களை எல்லாம் ரொம்ப நெருங்க விடாமல் முதலிலிருந்தே ஒரு டிஸ்டன்ஸ்லே வச்சிருக்கணும். நீ மற்றவர்களை ஏன் இவ்வளவு சுலபமாக உன்னிடம் உரிமைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கணும்னு எனக்குப் புரியலை.’// - ராமு

    //‘நான் நானாகவே தாம்பா இருக்கப் பார்க்கிறேன்…. அதுக்கு இவன் விடமாட்டேனென்கிறான்னு தான் சொல்ல வரேன்..’//

    இந்த இரு உரையாடல்களிலும் மிக அழகான ஆழமான விஷயம் வெளிப்படுகிறது...

    ராமு ஸ்மார்ட்!

    //‘ஒரு கண்டிஷன்.’

    ‘என்ன?’

    ‘நாளைக்கும் அகர்வாலைப் பற்றியே பேசி போர் அடிக்கக் கூடாது.’//

    இந்த வரியே சொல்கிறது....என்னதான் கைலாசம் ப்ராமிஸ் என்று சொன்னாலும், ராமு செல்வாரா மாட்டாரா என்றே...

    கைலாசம் அகர்வாலைப் பற்றிய சலிப்பை நேரடியாக வெளிக்காட்டுகிறார் .....ராமு கைலாசத்தின் புலம்பலை இப்படி சொல்லி முடிக்கிறார். கூடவே

    ராமுவின் இந்த வரிகள் - //நீ மற்றவர்களை ஏன் இவ்வளவு சுலபமாக உன்னிடம் உரிமைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கணும்னு எனக்குப் புரியலை//

    இது இப்படியான குறைகள் புலம்பல்களுக்கும் பொருந்தும். அதாவது ராமு கைலாசத்தை இனி தன்னிடம் புலம்ப இடம் கொடுக்காமல் ஸ்மார்ட்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஜெகே அண்ணா இரண்டு நாற்காலிகள் என்ற தலைப்பில் குறையில்லை. அது அவர்களின் பதவியில் இருக்கும் இரு நபர்களின் விதத்தில்....அருகருகே இருக்கும் இரு மனிதர்களின் இயல்புகள்...இங்கு அந்த இரு நாற்காலிகள் மறைமுகமாக பதவி...

    //ஸோ டெபுடி செக்ரெட்டரி ராங்குக்கு உள்ளவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும்தான் தனி ரூம்னு சொல்லிட்டான். நான் ஒரு ராங்க் கீழே இருக்கிறவன் ஆனதினாலே, இந்த அகர்வாலோட ஒரு ரூமை ஷேர் பண்ணிக்கும்படி ஆயிடுத்து.’//

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சாந்தம்மா, ஸ்வேதா சாதனையாளர்கள் இருவரும் மங்களகரமான உடையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா! இன்று ஆதவனை இங்கு இறக்கிவிட்டமைக்கு நன்றி.

    நவீன தமிழ் இலக்கியத்தின் மிக நேர்த்தியான படைப்பாளிகளில் ஒருவர். மென்மையான மனிதர். கணையாழி சிற்றிதழ் ஒரு காலத்தில் இவரது படைப்புக் களமாக இருந்தது. இளம் வயதில் இவர் மறைந்தது தமிழின் சோகம்.
    டெல்லியில் இருமுறை இவரைப் பார்த்திருக்கிறேன் - அதில் ’பாரதி 200’ என்கிற தலைப்பிலான 80-களில் நடந்த தமிழ் விழாவும் ஒன்று

    பதிலளிநீக்கு
  10. ஓ.. நீங்கள் என் பதிவின் சுட்டியையும் தந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். நன்றி.

    ’ஏகாந்தன்’ எனக் குறிப்பிடுவதே போதுமானது. சரியானதும்.
    ‘அய்யா’ அதிகம்.. வேண்டாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ மூத்த பதிவர்களைக் குறிப்பிடும்போது "அய்யா" தானே வந்து விடுகிறது. நன்றி.
        கூகிள் ஆண்டவர் எப்போதும் கேட்டதற்கு மேலேயே தருபவர். அப்படித் தான்  தங்களது விமரிசனங்களையும்  எடுத்துக் காட்டுகிறார்.

       Jayakumar

      நீக்கு
  11. ஆதவன் மிகச் சிறந்த உளவியல் எழுத்தாளர் அவரைப் பற்றி இதே பகுதியில் எழுதுகிறேன்.
    அப்பொழுது அவர் எழுத்தின் சிறப்புகள் பற்றி நிறைய சொல்கிறேன். அவை எஸ்.ரா. போன்றவர்கள் குறிப்பிடாத என் பார்வையில் ஆதவனை அணுகிய விதமாக இருக்கும்.

    உங்களின் இந்தப் பதிவு
    வழக்கமான முறைக்கு சிற்சில மாற்றம் கண்டிருப்பது சிறப்பு.
    நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. சாந்தம்மா அவர்களுக்கு வணக்கங்களும் பாராட்டுகளும். வயதாகிவிட்டது என சோர்ந்துவிடாது திடகாத்திரமாக தன் பணியை தொடர்ந்து செய்து அசத்தி வருகிறார்.

    பாடசாலைகள் நடாத்தும் ஸ்வேதா சமூகத்துக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் வாழ்த்துகள்.

    இரு நாற்காலிகள் அவரவரின் உணர்வுகளை எடுத்துக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  13. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. சாந்தம்மா, ஸ்வேதா சாதனையாளர்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க..

    பதிலளிநீக்கு
  15. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  16. ஏகாந்தன் அண்ணாவின் மூலம்தான் ஆதவனைத் தெரிந்து கொண்டேன், ஜெகே அண்ணா. அவர் பகிர்ந்திருந்த கதை கணவன் மனைவிக்குள் எழும் கருத்து வேறுபாடுகள்..பற்றியது சூப்பரா இருக்கும்...அதுவும் ரொம்ப யதார்த்தம் ஆழமாகவும் இருக்கும் அதற்கு நான் கருத்து அங்கு போட்ட நினைவும் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. இன்று விரிவாக பல தடவை கருத்துக்கள் கூறியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சாந்தம்மாவின் சாதனையை கண்டு அவர்களை வணங்குகிறேன்.
    ஸ்வேதா தானும் உயர்ந்து தன் இன மக்களையும் உயர்த்த கல்வி பணி செய்து வருவது அறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. ‘//ஆனா, பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போலவே பேசுவது ஸ்ட்ரெயினாகத்தான் இருக்கிறது. அழும் குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அதற்கு உற்சாகமூட்டும் சேட்டைகள் காட்டுவது போல, அவனுடன் பேசும்போது என்னையுமறியாமல் நான் ஏதேதோ வேஷமணிய நேருகிறது. ‘//

    உண்மை.

    நண்பரிடம் புலம்பல் இயல்பு, அவர் சொல்வதும் சரிதான் அடுத்தாநாள் சந்திப்பும் அகர்வாலை பற்றியே போய் விட கூடாது என்று ராமு சொன்னதும் அருமை.
    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கமலா அக்காவின் மகன் - வெளிநாட்டில் இருக்கும் மகன் வந்திருப்பதால் அக்கா பிஸி. அதனால்தான் தளத்திற்கு வர முடியவில்லை என்றும் நட்புகள் எல்லோரையும் ரொம்பக் கேட்டதாகவும் சொல்லச் சொன்னார். மற்றபடி அக்கா நலம்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!