ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரைபகுதி 4

நாம் இன்னும் கீழ் அஹோபிலத்தில், லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி கோயிலில்தான் இருக்கிறோம்.


மண்டபத்தின் சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. மண்டபத்தின் பீடம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போமா?



ரங்கமண்டபத்திலுள்ள சிற்பங்களைப் பார்த்து, ரசித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். 

முன் மண்டபத்தில் நுழைந்தால் எதிரே கர்பக்ரஹம். அதில் லக்ஷ்மி நரசிம்ஹர் தரிசனம் தருகிறார். அந்த இடமே அமைதியாக சாந்நித்யம் உடையதாக இருக்கிறது. பெருமாளை வணங்கி, தீர்த்தம் சடாரிப் பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு, அதன் அருகில் உள்ள தாயார் சன்னிதிக்குச் சென்றேன். அம்ருதவல்லித் தாயாரைத் தரிசனம் செய்துவிட்டு, கோயிலைப் பிரதட்சணம் செய்தேன்.


கோயிலின் வெளிப் பிராகாரம் மிகவும் பெரிதாகவும் சுத்தமாகவும் இருந்தது. இரு மூலைகளிலும் சிறிய கோவில்கள் (சன்னிதிகள்) இருந்தன. கோவிலின் சுற்றுச் சுவர்களில் தெலுங்கு எழுத்தில் கல்வெட்டுகளைப் பார்த்தேன். பிராகாரத்திலேயே அழகிய கிணறு ஒன்றும் இருந்தது


7 ½ மணிக்குத் தங்கியிருந்த இடத்திற்கு வந்து காலை உணவாக பொங்கலும் கொத்ஸும் சாப்பிட்டோம். அடுத்த வேளை என்பது 6 நரசிம்ஹர் கோவில்கள் தரிசனம் முடிந்து மாலையில், 7வது கோவிலில் திருமஞ்சனம் நடைபெற்றபிறகு கிடைக்கும் பிரசாதம்தான். அதன் பிறகு 8 மணிக்கு இரவு உணவு என்று சொல்லியிருந்தார்கள். காலை உணவுக்குப் பிறகு, குழுவாக சிலர் படங்கள் எடுத்துக்கொண்டனர். பிறகு 8 ½ மணிக்கு நவ நரசிம்ஹர் ஆலயங்களில் முதலாவதாக காரஞ்ச நரசிம்மரைச் சேவிக்கச் சென்றோம்.


(தொடரும்) 


38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். இன்னும், நீங்க பனிப் பிரதேசத்தில் சென்ற நிகழ்வு மனதில் இருக்கிறது. அது ஒரு நல்ல அனுபவம். சைவ உணவு கிடைக்குமாயின் சைபீரியா, கனடாவின் குளிர் பிரதேசங்களிலும் வாழ்ந்துவிடலாம் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
  2. படங்கள் சிறப்பு. கொத்து பணிகளை க்ளோஸ் அப் ஷாட்களில் கொடுத்தது தனி சிறப்பு. இது நாம் கண்ணால் பார்ப்பகைக் காட்டிலும் துல்லியமாக உள்ளது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெயகுமார் சார். சில சிற்பங்கள் ஒரு சாண் அளவிலும் இருந்தன. சில காரணங்களால் அவற்றை வெளியிட்டு விளக்கவில்லை. சோழ நாட்டுக் கோவில்களில் அரை சதுர அடியிலும் மிக அட்டகாசமான சிற்பங்களைக் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  3. லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி , அம்ருதவல்லி தாயார் தரிசனம் கிடைத்தது சனிக்கிழமை மாலையில்.

    ரங்கமண்டபத்திலுள்ள சிற்பங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    கல்வெட்டு, மற்றும் தூண் சிற்பங்கள் எல்லாம் அருமை.
    கோவிலின் முகப்புத்தோற்றம் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் இறை உருவங்களை இந்தப் பகுதியில் சேர்க்கிறேன்.

      பல கோவில்களில் ரங்க மண்டபம் உண்டு. அதில் மிக அழகிய சிற்பங்களும் உண்டு.

      தற்காலத்தில் கல்வெட்டுகளின் அருமை புரியாமல் அதன்மீது பெயின்ட் அடிப்பது, சிதைப்பது என நடந்துகொண்டிருக்கிறது. திருப்பதியில், கர்பக்ரஹத்தின் வெளிச் சுற்றில் சுலபமாகப் படிக்கும்படியாக தமிழ் கல்வெட்டுகள் உண்டு.

      நீக்கு
  4. தகவல்கள் நன்று
    படங்கள் வழக்கம் போல அருமை தமிழரே...

    பதிலளிநீக்கு
  5. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. ஞாயிறு தோறும் இனியதோர் தரிசனம் /அனுபவம் என்று சொல்லும்படியாக இருக்கின்றது...

    வழக்கம் போலவே கலைநயங் கூட்டும் சிற்பங்கள்..

    ஆக்கியோர் வாழ்க..
    அவற்றை- நாமும் காணும்படிக்கு
    அணுகியோரும் வாழ்க..

    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார். இந்தத் தொடர் இன்னும் பல வாரங்களுக்கு வரும் அஹோபிலம் செல்வது என்றால் இந்தத் தொடரைப் பார்த்துவிட்டு, படித்துவிட்டுச் சென்றால், இன்னும் நல்ல அனுபவமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

      புராணக் கதைகளுக்குச் செல்லாத்தன் காரணம் அவற்றை நாமே தேடிப் படித்துக்கொள்ளலாம் என்பதால்.

      நீக்கு
  7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.
    இன்றைய பதிவு அருமை. முதலில் பல கோவில்களுக்கும் சென்று இறைவனை தரிசனம் பெறும் வாய்ப்பை தங்களுக்கு தந்த அந்த இறைவனுக்கு நன்றி. தங்களால் நாங்களும் அனேக கோவில்களின் சிறப்பையும் அங்குள்ள சிற்பங்களின் நேர்த்தியையும் ஒவ்வொரு வாரமும் கண்டு களிக்கிறோம். இன்றும் நரசிம்ம மூர்த்தியான நாராயணனையும், லக்ஷ்மி பிராட்டியையும் மனமுருக வீட்டிலிருந்தபடியே தரிசித்து கொண்டேன். அதற்கும் தங்களுக்கு மிக்க நன்றி.

    இன்று இங்கு இடம் பெற்ற அஹோபிலம் நரசிம்ஹர் கோவில் பதிவையும், அங்குள்ள சிற்பங்களின் அழகையும் கண்டு மிகவும் ரசித்தேன். தூண்களின் சிற்பங்களை சரியான கோணத்தில் படங்கள் எடுத்து அதை பற்றி விளக்கி கூறிய முறைக்கும் பாராட்டுக்கள். இதன் தொடர்ச்சியான என்னால் படிக்க முடியாத விட்டுப்போன சென்ற பதிவுகளையும் கண்டிப்பாக படிக்கிறேன்.

    ஞாயறுதோறும் இப்படி அழகான கோவில் பதிவுகளை பொறுமையாக படங்கள் எடுத்து சேகரித்து தரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... பல வாரங்கள் பிஸியாக இருந்ததால், அந்த அனுபவங்களையெல்லாம் பதிவாக எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?

      நான் சென்றிருந்த கோவில், அதன் சிற்பங்களின் நேர்த்தி போன்றவற்றை பகிர்வதற்காக எங்கள் பிளாக் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், பதிவை எழுதியிருக்கமுடியாது. அதற்காக விட்டுக்கொடுத்த கேஜிஎஸ் அவர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

      எனக்குமே மிகுந்த திருப்தி கொடுத்த பயணம் இது. பதிவுக்காக மற்ற விஷயங்களையும் படித்து அந்த விஷயங்களை பதிவுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

      நீக்கு
  8. வழக்கம் போல படங்கள் செம அழகு, நெல்லை...

    நாட்டியத் தாரகை - மிருதங்கக்காரர் - அதி நுண்ணியமாகச் செதுக்கி இருக்காங்க....அந்தக் கோடுகள் முதல்...நெல்லை, மாடல் அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு சிலருக்கு மனதில் அவை ஆழமாகப் பதிந்து மனக்கண்ணிலேயே அதைக் கண்டு அப்படியே வரையவோ செதுக்கவே செய்வாங்க. நுண்ணிய வேலைப்பாடுகள் முதல்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாடல் அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு சிலருக்கு மனதில் அவை ஆழமாகப் பதிந்து// - ஒரே வரியில் contradict செய்ய கீதா ரங்கன்(க்கா)வால்தான் முடியும். எப்போதாவது ஒரு ஓரமாக நின்று நாட்டியத் தாரகையை, நடன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார். அல்லது போஸ் கொடுக்கச் சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.

      நாச்சியார் கோவில் கல்கருடன் சேவையின்போது, வெளி மண்டபத்தில், புறப்பாட்டிற்குச் சில நேரம் முன்பு, 7 நாதஸ்வரம் மற்றும் 4-5 தவில்களுடன் இசைக்கச்சேரி.. அதில் தவில் வாசித்தவர்களில் ஒருவர் அட்டஹாசமாக வாசித்தார். சிறிய காணொளி எடுத்திருக்கிறேன் என்று நினைவு. இசையுடன் ஒன்றியிராவிட்டால் இந்த மாதிரி இசைக்கலைஞர்கள் வாசிப்பதும் கடினம், அந்தத் தொழிலைத் தொடர்வதும் கடினம்.

      நீக்கு
    2. ஒரே வரியில் contradict செய்ய கீதா ரங்கன்(க்கா)வால்தான் முடியும்.//

      இது எப்படியான கருத்தோ!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹாஹா பாசிட்டிவா நெகட்டிவா? ஓகே அதை விடுங்க....எனிவே நான் பாசிட்டிவா எடுத்து நன்னி சொல்லிடறேன்.!!!!

      இப்பத்தான் கீழ ஒரு கருத்து கொடுத்து வந்தேன்....அதைச் சொல்லும் முன் இப்ப ஒண்ணு சொல்லிவிட்டு அதுக்குப் போறேன்

      நெல்லை, எந்த மாடலும் இல்லாமல் தத்ரூபமாக வரையறவங்கள் ஒரு சிலரை எங்கள் குடும்பத்தில் பார்த்திருக்கிறேன். இறைவன் திரு உரு கூட. அது மனதில் ஆழமாகப் பதியாமல் எப்படி வரும்? ஆனால் யாரும் நாலு சுவற்றிற்கு வெளியே வரவில்லை. கோயில் சிற்பங்களைக் கூட வீட்டில் அப்படியே அந்த நுணுக்கமான இடைவெளிகளைக் கூட வரைவாங்க. அவர்களில் இருவர் மேலே.... மத்தவங்க யாரும் சொல்லிக் கொள்வதில்லை நான் எவ்வளவு சொல்லியும்...நான் கேமரா செல்ஃபோன் வரும் முன் பார்த்தவை இப்ப பார்க்கக் கிடைத்தால் கண்டிப்பாகப் படம் எடுத்து வைத்துக்கொள்ளனும். அவர்கள் வரைவதையும்.......

      உறவு ஆனால் பழக்கமில்லை ஒரே ஒரு முறை மட்டும் பார்த்திருக்கிறேன். திருப்பாவை 30ம் ஓவியங்களில் தத்ரூபமாக வரைந்திருந்தார் அது ப்ராஜெக்ட்டாகவே....எந்த ஒன்றும் பார்க்காமல்...கோயில் சிலைகளில் உள்ளது போலவே அப்படி ஒரு அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.....

      சரி இப்ப... பண்டையகாலங்களில் உடை என்பது இப்போது போன்று இல்லையே....மேலாடை இல்லாமல் அல்லது கச்சை (இதுக்கு வாலி அந்த நேர்காணலில் ஒன்று சொல்லியிருந்தார். அவர் சொன்னதைக் கேட்ட போது தோன்றியது ஓ அதனால்தான் கோயில் சிற்பங்களில் பெண் சிற்பங்களில் அங்கங்கள் அப்படி செதுக்கியிருக்காங்க என்று கூடவே சங்ககாலப் பாடல் வரி ஒன்றைச் சொல்கிறார் அதாவது இப்படியானவை அப்போது தவறாகப் பார்க்கப்படவில்லை என்பதை) இப்படித்தானே அது போல மற்ற உடைகளும்...சர்வ சாதாரணமாக....அதுவும் அப்பல்லாம் நாட்டியத் தாரகைகள் என்று ஒருகல்சரே இருந்ததே...இயல்பாக அப்படி வழக்கமாகப் பார்த்து பார்த்தே...மனதில் பதிந்திருக்கும்....

      முழு உடம்பை மறைக்கும் விதமாக ஆடை உடுத்தும் கல்சர்/நாகரீகம் வந்த பிறகு நவீன ஓவியர்....பெண்ணை போஸ் கொடுத்துத்தானே வரையச் சொல்ல முடியும்!!!!!!!!!!!!!!!!! நீங்களே பார்த்திருப்பீங்க பல ஓவியர்கள் இப்போதைய இளம் பெண்களின் உடையணிவதை ஓவியத்தில் கொண்டு வருவதை....ஏன் ஜெ கூட அப்படித்தானே....காமேரா கண்கள் இருந்தால் போதும்னு எனக்குத் தோன்றும்.

      என்றாலும் போஸ் கொடுத்து வித விதமான ஆங்கிளில் ஃபோட்டோ ஷூட் (அதையே அப்புறம் ஒவியமாக வரைதல்) அல்லது வரைதல் உண்டுதான்.... அதுவும் ஒரு புறம் நடக்கிறதுதான்...

      கீதா

      நீக்கு
    3. கல்கருடன் அழகான கோயில்...பார்த்திருக்கிறேன்.

      இசையுடன் ஒன்றியிராவிட்டால் இந்த மாதிரி இசைக்கலைஞர்கள் வாசிப்பதும் கடினம், அந்தத் தொழிலைத் தொடர்வதும் கடினம்.//

      கண்டிப்பாக, இது எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும் சிற்பம் ஓவியம், புகைபப்டக்கலை, நாட்டியம் எல்லாத்துக்குமே

      கீதா

      நீக்கு
    4. //எந்த மாடலும் இல்லாமல் தத்ரூபமாக// - தத்ரூபம் என்று ஒன்று கிடையாது. நம் மனசில் உள்ள பிம்பத்துக்கு வெகு அருகில் ஒரு ஓவியமோ இல்லை கலையோ இருந்தால் அதனைத் தத்ரூபம் என்று சொல்வோம். உதாரணமா, லக்ஷ்மி படம் (தெய்வம்), திருப்பாவை ஓவியங்கள்... ஒரு பாடலை நாம் எப்படி உள்வாங்குகிறோமோ (பாசுரத்தை) அதனை ஓவியத்தில் கொண்டுவந்திருந்தால் தத்ரூபம். 5 ஓவியர்களைக் கூப்பிட்டு, அவங்க மனசில் கற்பனை செய்து ஊர்வசி, ரம்பா (நடிகைகள் அல்ல... தேவலோகக் கன்னிகள்) இருவரையும் வரையுங்கள் என்று சொன்னால், அவை ஒரே மாதிரி இருக்குமா?

      நீக்கு
    5. //மேலாடை இல்லாமல் அல்லது கச்சை // - இதற்கு நீளமாக, என் மனதில் இருப்பதை எழுத நினைக்கிறேன். பொதுவா, குறுகுறு என்ற பதின்ம வயதில் இருந்த பார்வை தவிர, நாம கோவில் கற்சிலைகளை காமக் கண் கொண்டு பார்ப்பதில்லை. கடந்துசென்றுவிடுகிறோம். காரணம், பொதுவா கோயில் என்றதும் நம் மனது அதற்குரிய சூழ்நிலைக்கு டியூன் ஆகிவிடும்.

      அதைப்போன்றுதான் பக்தி இலக்கியங்களில் உள்ள வரிகளும். நம் மனதில் பக்தி இருப்பதால், அதன் அர்த்தத்துக்குள் செல்லாது.

      இந்தக் கால கட்டத்துல (30+ வருடங்களாக), அதீத எக்ஸ்போஷர் காரணமாக, இளைஞர்களின் பார்வையில் கல்மிஷம் வந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால், உடலை வெளிப்படுத்தும் ஆடையை அணிவதற்கு தடை சொல்கிறார்கள் (சொன்னார்கள்). தனியாக பெண் செல்வதும், பல இடங்களுக்கு தனியாக பிரயாணம் செய்யும் நிலை வருவதும் இந்தக் காலகட்டங்களில் சகஜம் என்பதால், உடை, மற்றவரை வசீகரித்துவிடக்கூடாது என்று அட்வைஸ் பண்ணறாங்க. வெளிநாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு உண்டு, அது இங்கு கிடையாது.

      இப்போ உள்ளவர்கள், அது உங்க பார்வைக் கோளாறு, எங்கெளுக்கெல்லாம் பார்வை வித்தியாசம் இல்லை என்று சொல்றாங்க (நம்பிக்கிறாங்க). இருந்தாலும் I think dressing has to be proper in line with society.

      நீக்கு
    6. //எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும் சிற்பம் ஓவியம், புகைபப்டக்கலை, நாட்டியம்// - நான் சொல்லவந்தது, அதற்கான ஊதியம் குறைவாக இருந்தாலும், அவர்களது ஆர்வம், கலையின் மீதான பிடிமானம், அவங்களை அப்படித் தங்கள் கலைகளை வெளியிட வைக்கிறது. நான் காணொளி வெளியிட முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  9. நரசிம்ஹர் கோவில் அழகாக இருக்கிறது.
    சிற்பங்கள் மிகவும் அழகு. மிருதங்கம் வாசிப் போர் மிகுந்த அற்புதமான சிருஷ்டி. அதேபோல்நாட்டிய தாரகையும்.
    தூண்களும் அடிச்சிற்பங்களும் நேர்த்தி.

    'அஹோபிலம் செல்வது என்றால் இந்தத் தொடரை படித்து விட்டு செல்பவர்களுக்கு இன்னும் நல்ல அனுபவமாக இருக்கும்' நிச்சயமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிருதங்கள் வாசிப்பது, நாட்டிய தாரகையின் உடை - இவற்றை தத்ரூபமாகக் கல்லிவி வடித்திருப்பது என்னை மிகவும் கவர்ந்தது.

      நன்றி மாதேவி உங்கள் கருத்திற்கு.

      நீக்கு
    2. எனக்குப் பல வருடங்களாக எழும் கேள்வி. இப்ப பெண்கள் போடும் உடையை இறுக்கமா அசிங்கமா போடறாங்கன்னு சொல்றாங்க....ஆனா சிற்பங்கள் ல இருப்பது மட்டும்?

      கவிஞர் வாலி, மதனுடனான ஒரு பேட்டியில் மதன் சங்கப்பாடல்களில் சொல்லப்படும் ஒரு உவமையைச் சொல்லிக் அப்போது அது இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம் இப்பல்லாம் தவறாகப் பார்க்கப்படுகிறதேன்னு....வாலி சொல்கிறார், அப்பல்லாம் மார்பகம், முலை எனும் சொற்கள் தவறாகக் கருதப்படவில்லை. இப்பக் கூட கேரளத்தில் முலைன்னுதான் சொல்றாங்க குழந்தைக்குப் பால் கொடுக்க....ஆனால் இப்ப அவை எல்லாம் தவறாகப் பார்க்கப் படுது...

      எனக்குத் தோன்றியது, ரவிக்கை அணிதல் மேல் சட்டை அணிதல் என்ற கலாச்சாரம் வந்த பிறகாக இருக்கும் என்று. ஒரு காலத்தில் மேல் துணி அணியாமல் அல்லது கச்சை கட்டித்தானே அதனால் சிற்பங்களிலும் அது பிரதிபலிக்கலாம்...

      (இப்ப ஃபோட்டோ ஷூட்டே நடத்துறாங்க!!!!!!!!!!!!!!!!!!!!)

      கீதா

      நீக்கு
    3. //இப்ப பெண்கள் போடும் உடையை இறுக்கமா அசிங்கமா போடறாங்கன்னு சொல்றாங்க....ஆனா சிற்பங்கள் ல இருப்பது மட்டும்?// - நீங்களே இதற்கு பதில் சொல்லிடலாம். சிற்பத்தை மாதிரியே உடை அணிந்துகொண்டு ஒரு பெண் வெளியில் சென்றால் எத்தனை பேர் பார்க்கிறாங்க (எக்ஸ்ரே கண் கொண்டு), அதே நேரத்தில் கோயிலில் எத்தனை பேர் அத்தகைய சிலையை வெறித்துப் பார்க்கிறார்கள் என்று யோசிங்க. விடை கிடைத்துவிடும்.

      நீக்கு
  10. தூண்களின் அடிப்பாகம். யாளி வீரன், ஆடல் மகள் எல்லாமே அற்புதம்.அதன் கீழே உள்ள தூண்களின் வடிவங்கள் நெருக்கமாக நுணுக்கமாக...வாவ் போட வைக்கிறது...

    இதே போன்று நம்ம அனு பிரேம் பகிர்ந்திருந்த நந்தி கோயில் சிற்பங்கள் தூண் சிற்பங்கள் அசத்தலா இருந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜயநகரப் பேரரசு, நாயக்கர் சிற்பக்கலை போன்றவை மிகச் சிறப்பாக இருக்கும். இன்றைய படங்களில் ஒன்றை நான் ஆர்வத்துடன் close-up படங்கள் எடுத்திருந்தேன். அதைப் பகிர்ந்து அதைப்பற்றி எழுத இந்தத் தளம் உகந்ததல்ல.

      அனுபிரேம் இந்த முறை பகிர்ந்திருந்த சிற்பங்கள் படங்கள் அழகாக இருந்தன.

      வாய்ப்பு வரும்போது வைரமுடி யாத்திரையின்போது நான் சென்றிருந்த ஒரு கோவில் படத்தைப் பகிர்கிறேன். சிற்பங்கள் ஆஹா ஓஹோ என்று இருந்தன. அவற்றையெல்லாம் தவறவிட்டிருப்பேன், கோவிலை ஒரு முறை பிரதட்சணம் செய்துவிட்டு வருகிறேன் என்று கடைசி நேரத்தில் அனுமதி பெறாமலிருந்திருந்தால்.

      நீக்கு
  11. மண்டபத்தின் பீடம் கலைப்பொக்கிஷம்!!!!

    யானை குதிரை...கோபுரம் எல்லாமே செம அழகு...சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

    நான் போனா தனியாகத்தான் போகணும் இங்கன்னு இல்ல எந்த இடத்திற்குமே...கூட வரவங்களுக்குப் பொறுமை இருக்கணுமே...

    நான் இங்கு சென்று 16/17 வருஷங்கள் ஆகிறது...

    எல்லாப் படங்களையும் ரசித்துப் பார்த்தேன், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா ரங்கன். அந்த மண்டபத்தின் சிற்பங்கள் அழகு, ஆனால் ரொம்ப நன்றாக பராமரிக்கப்படவில்லைனு தோன்றுகிறது.

      நான் இரண்டாவது முறையாக ஜனவரியில் சென்றேன். முதல் முறை, இரு வருடங்களுக்கு முன்பு. நீங்க 16/17 வருடங்களுக்கு முன்பே போயிருக்கீங்க என்பதால் என்னைவிட நீங்கள் 14 வருடம் சீனியர். அக்கான்னே கூப்பிடுவது சரின்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?

      நீக்கு
    2. என்பதால் என்னைவிட நீங்கள் 14 வருடம் சீனியர். அக்கான்னே கூப்பிடுவது சரின்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?//

      நீங்க அந்த வருஷத்துல வெளிநாட்டில் வேலையில்...நானோ அந்த வருஷத்துலதான் குட்டிப் பாப்பான்னு கணக்குப் போடுங்க!!!

      கீதா

      நீக்கு
    3. //அந்த வருஷத்துலதான் குட்டிப் பாப்பான்னு // - இப்படிச் சொல்லாதீங்க. கீசா மேடம் தன்னை குழந்தைனு சொல்லிக்கறாங்க. நீங்க குட்டிப் பாப்பான்னா, அவங்களைவிட வயது அதிகமா இருக்குமோன்னு நாங்க நினைக்க வாய்ப்பு இருக்கு. ஹாஹா

      நீக்கு
  12. அழகான சிற்பங்கள்...... இன்னும் இவ்விடங்களுக்கு பயணிக்க வாய்ப்பு அமையவில்லை. படங்கள் அனைத்தும் அழகு. தொடரட்டும் கோவில் உலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமான இடம் அஹோபிலம். நிறைய நடக்கவும், தரிசனம் செய்யவும் படங்கள் எடுக்கவும் நல்ல வாய்ப்பு. கண்டிப்பாகத் திட்டமிடுங்கள்

      நீக்கு
  13. அஹோபிலம் லஷ்மி நரசிம்ஹர் ஸ்வாமி கோயில் எந்த மன்னனால் கட்டப்பட்டது?
    எந்த காலத்து சிற்பங்கள் இவை, நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்கள் 16ம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். இது ஆயிரம் வருடங்களுக்கு மேலான கோவில். அடுத்தவாரம் இது பற்றிப் பேசுவோம்.

      நீக்கு
  14. படங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!