செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

மொழிபெயர்ப்பு சிறுகதை : வயக்கரை அச்சன் மூஸ் - JKC

 

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JK

வயக்கரை அச்சன் மூஸ்

 

முன்னுரை

மூஸ் என்பது ஒரு அடைமொழி. வைத்தியர் என்பதைக் குறிக்கும். மத்திய கேரளத்தில்  இவ்வாறு வைத்தியர்களைக் குறிப்பிடுவர்.

இந்தக் கதை நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் கதைச் சுருக்கமாக என்னுடைய வாக்குகளில் எழுதுகிறேன்.

வயக்கரை அச்சன் மூஸ் என்பவர் பார்த்து குணப்படுத்திய ஆறு கேஸ்கள்  விவரிக்கப்படுகின்றன. கைராசி பாதி, சிகிச்சை பாதி, வைத்தியர் பால் நம்பிக்கை பாதி என்பது இக்கதைகளால் விளங்கும்.

கேஸ் 1.

ஒருவர் மலம் மூத்திரம் போகாமல் அடைத்துக்கொண்டு பெரும் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். வயறு வீங்கி வலியும் அதிகமாகி விட்டது. பல வைத்தியர்களும் வந்து பார்த்தனர், சிகிச்சைகளையும் செய்தனர். ஒன்றும் பலன் இல்லை. இறப்பது உறுதி என்றானபோது கடைசி முயற்சியாக அச்சன் மூஸைக் காணலாம் என்று தீர்மானித்தனர்.

அச்சன் மூஸ் ஒரு கல்யாண விருந்துக்கு காய் நறுக்கும் இடத்தில மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். சென்றவர் அவரிடம் ரோகியின் அவஸ்தைகளை விவரித்தனர். மூஸ் ஒரு பரங்கிக்காயின் காம்பை ஒடித்து அவர்களிடம் தந்துஇதை அரைத்து சூடு நீரில் கலக்கி ரோகிக்கு கொடுக்கவும்”. என்று தந்தார்.

அவர்கள் அந்தக் காம்பின் பாதிக் காம்பை அரைத்து சூடு நீரில் கலக்கி ரோகிக்கு  குடிக்கக் கொடுத்தனர்சிறிது நேரம் சென்றபின் மூத்திரம் போகத்  தொடங்கியது. கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தது. அடுத்து மலமும் வெளியேறத் தொடங்கியது. மூத்திர போக்கு சிறிது கழிந்து நின்று விட்டாலும் பேதியாவது நிற்கவில்லை. அதீத பேதி ரோகியை களைப்படையச் செய்தது.

அவர்கள் மீண்டும் அச்சன் மூஸிடம் சென்றுபேதி நிற்கவில்லை, மாற்று மருந்து வேண்டும்என்று கேட்டனர். மூஸ்நான் கொடுத்ததை முழுவதும் ரோகிக்குத் தந்தீர்களா?” என்று கேட்டார். அவர்கள்இல்லை, பாதி மீதம் உண்டுஎன்றனர். “ அப்படியானால் அதையும் அரைத்து சூடு நீரில் கரைத்து கொடுங்கள்என்று திருப்பி அனுப்பினார்.

அவர்கள் திரும்பி வந்து அப்படியே செய்தனர். ஆச்சர்யம். பேதி நின்று விட்டது. ஒரே மருந்து இரு விதம் செயல் பட்டது.

கேஸ் 2


அமித தடியான ஒரு மாப்பிள்ள (மலபார் முஸ்லீம் பெருத்த சரீரம் காரணமாக பெரும் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். நிற்க நடக்க என்று யாதொன்றும் செய்ய முடியாமல் இருந்தார். தடியைக் குறைக்க சிகிச்சை ஏதாவது மேற்கொள்ளலாம் என்று அச்சன் மூஸிடம் அவரைக் கொண்டு வந்தனர். அச்சன் மூஸ் விவரங்கள் யாவையும் கேட்டறிந்தார். தேகத்தைப் பரிசோதித்தார். “உங்களுக்கு தற்போது சிகிசிச்சை  எதுவும் தேவை இல்லை, ஏனென்றால் இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் இறந்து விடுவீர்கள். மரணத்தின் அறிகுறி தென்படுகிறது. படைத்தவன் கிருபையால் பிழைத்திருந்தால் ஒரு மாதம் சென்ற பின் திரும்ப வந்து என்னைக் காணவும்.” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.

இவ்வாறு கேட்டவுடனே மாப்பிள்ளக்கு மரண பயம் வந்து விட்டது. வீட்டிற்கு சென்றபின், சாப்பாடு, தூக்கம் என்று எல்லாவற்றிலும் அசிரத்தையாக இருந்தார். கஞ்சி போலும் குடிக்காமல் கவலையுடன் பட்டினி கிடந்தார். இவ்வாறு 30 நாட்கள் சென்றன. ஒரு குட்டி யானையாக இருந்த அவர் வயதுக்கு ஏற்ப சாதாரண வடிவம் அடைந்தார். அச்சன் மூஸ் மீண்டும் வரச் சொல்லியிருந்தால்  அவரைச் சென்று கண்டார்.

அச்சன் மூஸ் அவரிடம்நீங்கள் உடனே ஒன்றும் இறக்க மாட்டீர்கள் சரீரம் இளைப்பதற்கு மருந்து ஒன்றும் இல்லை. மனக்கவலை ஒன்றே சிகிச்சை. ஆகவே நான் அன்று அவ்வாறு கூறினேன். மரண பயம் ஏற்பட்டதால் இளைக்க முடிந்தது. இனி மருந்து எதுவும் வேண்டியதில்லை. தேகம் வியர்க்கும் அளவு உழைக்க வேண்டும். உழைத்தால் தடி வைக்காது. உண்ணும் உணவைக் குறைத்து உழைத்து வாழ வேண்டும்.“ என்று கூறி அனுப்பினார்.

கேஸ் 3.

ஒரு பெண்ணிற்கு பிரசவ வேதனை தொடங்கி நான்கு நாட்கள் ஆகியும் பிரசவம் நடக்கவில்லை. ஐந்தாம் நாள் குழந்தையின் வலது கை மாத்திரம் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. குழந்தை வெளி வரவில்லை. குழந்தையை வெளியில் எப்படி எடுப்பது என்று தெரியவில்லை.

ஆகவே பெண்ணுடைய ஆட்கள் வயக்கர அச்சன் மூஸிடம் வந்துஎன்ன செய்வதுஎன்று கேட்டனர். அவர் சிறிது ஆலோசித்து விட்டுஒரு இரும்பு ஆணியையோ, சின்ன கத்தியையோ நன்கு சூடாக்கி குழந்தையின் வலது கையில் தொடவும். “ என்று கூறினார்.

அவர்களுக்கு மூஸ் இவ்வாறு கூறியது பிடிக்கவில்லைஆனாலும் பெரிய உயிரைக் காப்பாற்ற இதையும் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி காய்ச்சிய இரும்பாணியால் குழந்தையின் கையைத் தொட்டனர். குழந்தையின் கை உள்ளே போய்விட்டது. அதன் பின் பிரசவம் சுகமாக முடிந்தது. தாயும் சேயும் நலம். குழந்தையின்  தீக்காயத்திற்கு மருந்து இட்டபின் காயம் குணமாகியது. ஆனால்  வடு ஏற்பட்டது.

கேஸ் 4

ஒருவன் நீண்ட நாட்களாக  வாய்வு தொல்லையாலும், வயிற்று வலியாலும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். பல வைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டும் குணம் ஆகவில்லை. கடைசியாக அச்சன் மூஸைக் காண வந்தான். அச்சன் மூஸ் விவரங்கள் யாவையும் கேட்டறிந்தார். சிறிது நேரம் ஆலோசித்துஉங்கள் தேசத்தில் கொள்ளு விளைச்சல் உண்டு அல்லவா?” என்று வினவினார். அதற்கு அவர்ஆம், எனக்கும் கொள்ளு விவசாயம் உண்டு. ஒரு ஆண்டிற்கு 20 மூடை கொள்ளு கிடைக்கும்.“ என்று கூறினார். “அப்படியானால் ஒன்று செய்யவும். கொஞ்சம் கொள் எடுத்து வறுத்து, குத்தி, பருப்பாக்கி, வேக வைத்து கஞ்சியுடன் தினமும் சாப்பிடவும்.” என்று கூறி அனுப்பி வைத்தார்.

வந்தவன் மூஸ் இப்படிச் சொல்கிறாரே, குதிரை போல கொள்ளு சாப்பிடு என்று, என்று நினைத்தான். ஆனாலும் ஒன்றும் பாதகம் இல்லை அதையும் செய்து பார்க்கலாம் என்று மூஸ் சொன்னபடி செய்தான் பத்து நாளில் கொஞ்சம் குணம் தெரிந்தது. 50 நாளில் வயிற்று வலி பூர்ணமாக நின்றது. வாயு தொல்லையும் இல்லை.

கேஸ் 5

ஒரு ஸ்திரீ பரணில் இருந்து ஏதோ எடுக்க வலது கையை தூக்கி எடுக்கும் போது கை அப்படியே பூட்டிக்கொண்டது. கையை அசைக்க முடியவில்லை. இறக்க முடியவில்லை. பல வைத்தியர்களும் தைலம் தடவியும் மற்றும் சிகிச்சை செய்தும் பலன் இல்லை. கடைசி முயற்சியாக அவளை அச்சன் மூஸிடம் கொண்டு வந்தனர்.

மூஸ் அவளை மேலே ஏற்றி நிற்க வைத்து அவளுடைய இடதுகையை கழுக்கோலுடன் சேர்த்து நன்றாகக் கட்டச்  சொன்னார். அப்போதும் வேடிக்கை பார்க்க ஆட்கள் கூடிவிட்டனர். மூஸ் அவளது கணவனிடம் அந்த ஸ்திரீயின் முண்டைப் பிடித்து இழுத்து அவிழ்க்கச் சொன்னார். இத்தனை பேர் பார்க்கும்போது எப்படி இதைச் செய்வது என்று கணவன் மௌனமாக இருந்தான். அப்போது மூஸ்சரி நானே அக்காரியத்தைச் செய்கிறேன்என்று கூறி ஸ்திரீயின் அடுத்து சென்று முண்டைப் பிடிக்கவும், அந்த ஸ்த்ரீ  “அவுக்காதீங்க”  என்று அலறிக் கொண்டே வலது கையால் முண்டைப் பிடித்துக் கொண்டாள். அப்படி அவளது கை சரியானது. சிகிச்சையும் முடிந்தது.

 கேஸ் 6

ஒரு ஆள் கொட்டாவி விட வாய் திறந்து கொட்டாவி விட்டு முடிந்தபின் வாய் மூட முடியவில்லை. என்ன  செய்தும் வாய் திறந்தபடியே இருந்தது. கடைசியில் அவரை மூஸிடம் கொண்டு வந்தார்கள். மூஸ் வலது கையால் தாடைக்குக் கீழ் ஒரு அடியும் கொடுத்து, இடது கையால் இடது கன்னத்தில் ஒரு தட்டும் தட்டினார். வாய் மூடிக்கொண்டது.

மருந்து உணவு அல்ல. அனால் உணவே மருந்து. உணவால் நோயைக் குணப்படுத்தலாம் என்று இக்கதையின் நீதி என்றும் அறியலாம்.

27 கருத்துகள்:

  1. வைத்தியத்தின் திறமை ஆச்சர்யப்படுத்தியது.

    குழந்தை விரலில் சூடு வைத்த விசயம் பழையது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு கீழக்கரையில் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு விரல் வெளியே நீட்டியிருக்க நீண்ட நேரம் சிகரெட் பிடித்துக் கொண்டு யோசித்த மருத்துவர் விரலின் நுனியில் நெருப்பை கொண்டு செல்ல, குழந்தை விரலை உள்ளே இழுத்துக் கொண்டது.

    நான் சிறு வயதில் கேட்ட நிகழ்வு.

    - கில்லர்ஜி தேவகோட்டை

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. உடலின் தடிமன் குறைவதற்கு மேற்கொண்ட வைத்திய முறை

    ஆகா!..

    ஒருவனுக்கு அச்சத்தை ஊட்டி அவனை நேர்வழிப்படுத்துவது..

    அருமை இன்றைய பதிவு..

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான மருத்துவ முறைகள்! இது புனையப்பட்ட சிறுகதையா? அல்லது உண்மையான சம்பவங்களா?
    கொள்ளு வயிற்றுப்பிரச்சினைகளை தீர்க்கக்கூடியது என்று இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஐதீகம் என்பது உண்மையும் புனைவும் கலந்ததாக இருக்கும். கதை ஐதீகம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. அந்தக் காலத்து கை வைத்தியங்கள். அனுபவங்கள். சில ரொம்ப சுவாரசியமாக இருக்கின்றன. குறிப்பாக கேஸ் 5, 6. பிரசவ கேஸ் இந்த முறை கேள்விப்பட்டதுண்டு. இதுவும் 5 ம் மன ரீதியாக ஷாக் கொடுத்து செய்யும் ட்ரீட்மென்ட் போல... வித்தியாசமாக இருக்கு 5, 6

    பூஷணிக்காய் காம்பு இப்படி எல்லாம் வினை புரியும் என்பது இப்போதுதான் தெரிகிறது. கொள்ளு வைத்தியம் பரவாயில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பூஷணிக்காய் காம்பு இப்படி எல்லாம் வினை புரியும் என்பது// ஹல்லோ...இதை என்னிடம் டெஸ்ட் பண்ணிடாதீங்க. உங்களை நம்பித்தான் சாப்பிட வருவேன்.

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை.....

      ம்ஹூக்கும் இப்படி சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லை!!!!!
      ஆனா சாப்பிட வர ரொம்ப பயம் உங்களுக்கு!!!

      கீதா

      நீக்கு
  7. கருத்துக்கள் மட்டறுத்தல் செய்வதால், நாம் கருத்து எழுவிட்டோமா என்ற சந்தேகம் எனக்கு வரும். அப்புறம் என்ன கருத்துகள் இதற்கு முன்பு எழுதினோம் என்பதும் நினைவிருக்காது. ஆனால் பாருங்க... மட்டறுத்தல் வைக்கவேண்டிய நிலை வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மட்டறுத்தல் என்றால் என்ன? புரியவில்லை.
      Jayakumar

      நீக்கு
    2. comment moderation என்பதை "கருத்து சீராக்கல்" என்று மொழி பெயர்த்திருக்கலாம். மட்டறுத்தல் என்பது என்னமோ ஆடு, கோழி அறுப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

      Jayakumar

      நீக்கு
    3. அது blogger தளத்தின் மொழிபெயர்ப்பு. நாம் மாற்ற இயலாது!

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. // மட்டறுத்தல் வைக்க வேண்டிய நிலை வந்து விட்டது.. //

    முகம் அற்ற முகவரி அற்ற ஈனர்களால்
    இந்த நிலை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈனனுக்கு இதிலொரு மகிழ்ச்சி! எதை சாதித்தோம் என்று நினைத்தானோ..

      நீக்கு
  10. //கைராசி பாதி, சிகிச்சை பாதி, வைத்தியர் பால் நம்பிக்கை பாதி என்பது இக்கதைகளால் விளங்கும்.//

    உண்மை. அருமையான கதைகள். உடம்பை குறைக்க சொன்ன வைத்தியம் கொஞ்சம் பயம் தருகிறது. பயத்தில் இதயம் நின்று விட்டால் என்ன செய்வது! கவலை உடலை மெலிய செய்துவிடும்.பல நோய்களை கொண்டு வரும் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பயத்தில் இதயம் நின்று விட்டால் என்ன செய்வது!.. //

      இப்படியும் ஆகி விடலாம் தான்..

      நீக்கு
    2. சிலர் பாரதி சொன்னது போல அஞ்சி அஞ்சி சாவார், சிலர் நாம் சாகபோகிறோம் நம்மிடம் உள்ளதை எல்லோருக்கும் கொடுத்து விடுவோம் என்று கொடுத்து விடலாம்.
      சிலர் இன்னும் சில நாளில் சாகபோகிறோம் அதுவரை மனம் போன போக்கில் வாழ்ந்து மடியலாம் என்று நினைக்கவும் வாய்ப்பு இருக்கிறது

      நீக்கு
  11. காலத்துக்கு ஏற்ப வைத்தியங்கள்.

    கேட்கவே திகில்தான் குழந்தையின் கை.

    பதிலளிநீக்கு
  12. அந்தக்காலத்தில் மருத்துவர் மீது மனிதர்க்கு நம்பிக்கை இருந்தது..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!