12.5.25

"திங்க"க்கிழமை : அவல்+ரவை இட்லி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

 

 அவல்+ரவை இட்லி


தேவையான பொருள்கள்: 

அவல்.  - 2 கப் 

ரவை.    - 1/2 கப்

புளித்த தயிர்  - 1 கப் 

பச்சை மிளகாய்  - 4

வெங்காயம்  -  1 அல்லது 2

காரப்பொடி    -  11/2 டீ ஸ்பூன்

உப்பு.         -    2 டீ ஸ்பூன்

தாளிக்க எண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன் 

கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தலா ஒரு டீ ஸ்பூன் 

செய்முறை:



கெட்டி அவலாக இருந்தால் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில்  அவலை  கழுவிக்  கொண்டால்  போதும். ஊறியதும் அவலை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஊறிய அவலோடு ரவையை சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தயிர், உப்பு  சேர்த்து கலக்கவும்.

அந்த கலவையை மினி இட்லியாக வார்த்துக் கொள்ளவும்.


அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு அவை சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி விட்டு பின்னர் வெந்த இட்லிகளை போட்டு, அதில் சிறிது காரப் பொடி போட்டு கலந்து இறக்கி விடலாம். சுவையான மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம். அவல் இருப்பதால் மிருதுவாக இருக்கும். தொட்டுக் கொள்ள தனியாக எதுவும் தேவை இல்லை. 

பி.கு.: மினி இட்லி ஸ்டாண்ட் இல்லையென்றால் நார்மல் இட்லியாக வார்த்து, பின்னர் அதை கட் செய்து சேர்க்கலாம்.

18 கருத்துகள்:

  1. இந்த அவல் ரவை இட்லி இதுவரை சாப்பிட்டதில்லை. இதற்கு கொத்தமல்லி துவையல் அட்டஹாசமான காம்பினேஷனாக இருக்கும்.

    ரவை இட்லிக்கும் எனக்கு கொத்தமல்லி துவையல்தான் (புளி சேர்த்து அரைப்பது) பிடிக்கும்.

    உடல் எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் ஒழுங்கான பிடித்தமான உணவு உண்டு பல மாதங்களாகிவிட்டன. சிறுதீனிகளைச் சாப்பிட்டுவிடுவதால் எடையும் குறைந்தபாடில்லை. நேற்றுதான் மனைவி சொன்னா, நாளையிலிருந்து ரெகுலராக, பிடித்த உணவைச் சமைத்துச் சாப்பிடுவோம், எடை தன்னால் கன்ட்ரோலில் இருக்கும், மிக்சர், இனிப்பு போன்றவற்றின் பக்கம் போகவேண்டாம் என்றாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனைவி கூறியது போல் சிறுதீனிகளை விடுத்து காய்கறிகள் நிறைய சேர்த்த உணவுகளை உண்பது நல்லது.

      உங்களுக்கு தெரிந்திருக்கும் மூன்று வேளையும் உணவில் மரக்கறிகள் இருக்கவேண்டும் .ஒரு தடவைக்கு அரைப் பிளேட் காய்கறி உணவுகள் உண்பது பசியை குறைக்கும் டயபட்டீஸ்,கொலஸ்ரோல் என்பவற்றிற்கும் நல்லது என்கிறார்கள்.

      நீக்கு
    2. வாங்க நெல்லை, ஆமாம், இதற்கு கொத்துமல்லி சட்னி நல்ல காம்பினேஷன். வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    3. மாதேவி கூறியிருப்பது போல சிறு தீனிகளை தவிர்த்து, காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொண்டால் எடை ஏறாது.

      நீக்கு
  2. ​அவசர திடீர் இட்லி அவல்-ரவை இட்லி. செய்முறை எளிது. படங்கள் அழகாக உள்ளன. சாம்பாரில் முக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி JKCSir. சாம்பாரை விட சட்னி நன்றாக இருக்கும் என்பது என் யூகம்.

      நீக்கு
  3. பானுக்கா நல்ல செய்முறைக் குறிப்பு. சூப்பரா வந்திருக்கு. படங்களும் நன்றாக இருக்கின்றன

    இது ரொம்ப நன்றாகவும் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. உண்மைய சொல்லணும்னா நான் இந்தச் செய்முறைய ஒரு இக்கட்டான தருணத்தில் சும்மா செய்தேன். நன்றாக வந்ததும் உடனே அதை ஒரு டிஃபனாகவே மாற்றியதுண்டு அதுவும் டக்குனு செய்ய.

    சென்னையில் இருந்தப்ப ஒரு முறை வீட்டில் ரவா இட்லி செய்து நாளாச்சுன்னு சொல்லப்பட்டது. சரி செஞ்சுடுவோம்னு பார்த்தா அரை கப்புக்கும் சற்றுக் குறைவாகவே இருந்தது. போய் வாங்க நேரம் இல்லை. சரி வேற என்ன இருக்கு வீட்டில்னு பார்த்தப்ப சிவப்பு கெட்டி அவல் இருந்தது. உடனே ஒரு ஐடியா. சிவப்பு கெட்டி அவலை ரவை போன்று பொடித்துக் கொண்டு வெள்ளை ரவையோடு சேர்த்துச் செய்து பார்ப்போமேன்னு....அவலைப் பொடித்துக் கொண்டு நார்மலாக ரவா இட்லி செய்வது போல் தாளித்து எல்லாம் செய்தது சூப்பராக வந்தது.

    அது போல சமீபத்தில் நெருங்கிய உறவினர் வந்தப்ப குட்டீஸ் வீட்டில் இருந்த மாவைப் பார்த்ததும், ஃப்ரைட் இட்லி வேணும்னு சொல்லிட, மாவு இருந்தது ஆனால் அது இட்லிக்குச் சரிப்படாது தோசைக்கு நன்றாக இருக்கும்..., அவல் ரவையைச் சேர்த்து இப்படித்தான் இட்லி செய்து அதைக் கொஞ்சம் கூடுதலாக வறுத்துக் கொண்டு கூடவே வெங்காயம் எல்லாம் போட்டுத் தாளித்துச் செய்தேந்.

    குட்டீஸ் அடுத்து இட்லி மஞ்சூரியன் கேட்க, அது செய்தும் ரொம்ப நாளாகிடுச்சே என்றும் எனக்குத் தோன்றியது!!!! ஆனால் செய்யும் அவகாசம் இல்லை. அதுங்க வீட்டில் செய்த ஆப்பிள் டார்ட் அதையே தொடர்ந்து சாப்பிட்டதால் அவர்களின் அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஸோ இட்லி மஞ்சூரியன் செய்யவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அக்கா இந்த மினி அவக் ரவை இட்லிய சாம்பாரில் மிதக்க விட்டு வெள்ளை இட்லிய சாப்பிடுவோமே அப்படிச் சாப்பிட்டால் வெள்லை இட்லிய விட ரொம்ப மென்மையாக சாம்பாரில் நன்றாக ஊறி சூப்பரா இருக்கும். அது போல தயிர் இட்லியும் செய்து பாருங்க இதே காம்பினேஷனை. ரொம்ப நல்லாருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் வீட்டிற்குச் செல்லும்போது எதைச் செய்யச் சொல்வது என்ற கவலை தீர்ந்தது

      நீக்கு
  6. அவல் ரவை இட்லி நன்றாக வந்திருக்கிறது.

    எங்கள் பேரனுக்கும் இட்லி,தோசை ,இடியாப்பம் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடித்தமானது என்பதை முதலில் பிடிக்காது என்று வாசித்து விட்டேன் :)) நன்றி. செய்து பாருங்கள்.

      நீக்கு
  7. அவல் ,ரவை கலந்த இட்லி நானும் செய்தேன் பானு நன்றாக வந்தது. அதையே சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்தும் தாளித்தேன் மணி கொழிகட்டை போல நன்றாக வந்தது.
    நான் இன்ஸ்ட்டாகிராமில் பார்த்து தான் செய்தேன்.
    அவல் ரவை இட்லி படங்களும், செய்முறையும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. நன்றி கோமதி அக்கா. நீங்கள் சொல்லியிருக்கும் விதத்திலும் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வந்து கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. மூன்று நாட்கள் வெளியே சென்று விட்டதால் உடனே பதிலளிக்க இயலவில்லை, மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  10. ஈசியான ரெசிப்பி, பார்க்கவும் சாப்பிடோணும்போல வருது, புளிக்க வைத்துக் கஸ்டப்பட வேண்டியதில்லை, நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!